Friday, February 06, 2009

ரிகர்சனிசம்:பின்நவீனத்தின் இன்னொரு முகம்



ரிகர்சனிசம்:பின்நவீனத்தின் இன்னொரு முகம்

ரிகர்சனிசம்(recursionism) என்பது பல்வேறு மக்களால் பல்விதங்களில் செய்யப்படும் பொருள்களை குறிக்கிறது.அண்மைகாலமாக திரிகோணமுறையின் திருப்பிவரல் புகழ்பெற துவங்கியதும் திரும்பிவரல் கருத்து வெகுஜன சொல்லாடலாகியது.திரிகோணமுறை அமைப்பு பொறியியலிலும்,பொருளாதாரத்திலும் இயல்பான அமைப்பாக இருக்கிறது.நவீன ஒவியத்தில் திரும்பிவரும் வடிவங்கள் புழக்கத்திலிருக்கிறது.சல்வடார் டாலி மற்றும் எம்.சி.எஸ்சர் போன்றோர்களிடம் இதை பார்க்கலாம்.அமெரிக்கன் இந்திய களிமண் கலையும் பழைய உலகின் பாறை ஒவியங்களும் ரிகர்சனிசத்தின் மாதிரிகளாகும்.நிறைய எழுத்தாளர்கள் திரும்பிவரல் விதங்களை தங்களது புனைக்கதைகளில் பயன்படுத்தியுள்ளனர்.ஜான் பார்த்,டேவிட் பாஸ்டர் வாலஸ் போன்றோர்களை குறிப்பிடலாம்.தத்துவத்தை பொறுத்தவரையில் இது ஒரு பழைய கருத்தாகும்.இதன் நிலைபாடு காலம்,வெளியில் அமைப்பு சார்ந்து திருப்பிவரல் என்பது எதார்த்தம் அல்லது உண்மையை புரிந்து கொள்ளும் பழைய முறையின் அளவாகும்.இது மூளை எப்படி இவ்வுலகை புரிந்து கொள்கிறது என்று விளக்குகிறது.திரும்பிவரல் ஒழுங்காக நடைபெறுவது வரை இவ்வுலகை புரிந்து கொள்ளுவது சுலபம் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.திரும்பிவரல் பலவிதமான வடிவங்களை அடிப்படை அமைப்பு சார்ந்து பல கலவைகளில் செய்வதை ஊக்க படுத்துகிறது.திரும்பிவரலியல் ஏனெனில் ஒரேமாதிரிகள் பலவித துறைகளில் இருந்து வரும்போது அதுவே ஒரு அளவாக மாறுகிறது.மேலும் இது அமைப்பியலுடன் உறவு கொண்டதல்ல.இது இயல்பாக எல்லாவற்றையும் உள்ளடக்குவதல்ல மாறாக தற்காலிகமாக பருண்மைபடுத்துகிறது.கீழைநாடுகளில் உபநிஷத்துக்கள் மற்றும் அரபிந்தோ,காக் போன்றவர்களின் தத்துவநிலைபாடுகள் முதலியவை திரும்பிவரலியல் தத்துவமாகும்.மேற்கில் பிச்றே,சொபனேகர்,நீட்சே போன்றோர்களிடம் இதன் நிலைபாடுகள் இருப்பதை காணலாம்.அனேக விஞ்ஞான கோட்பாடுகளின் மாதிரிகள் மாறும்போது விகிதாசாரமும்,திரிபுகளும் மாற்றத்தை விளைவிக்கும்.உதாரணமாக செவ்வியல் இயந்திரவியலே குவாண்டம் மெக்கானிக்ஸ் ஆக மாறியது.இதை தான் திரும்பிவரல் என்கிறார்கள்.திரும்பிவரலில் பழைய வடிவம் வேறுவகையில் வருவதும் முக்கியமாகும். இந்த புதிய கோட்பாடை புரிந்துகொள்ள பின்வரும் நூல்களை வாசிக்கலாம்.
Recursive Art - M.C.Escher
Recursionism in Art - Colonna
Recursionism in Philosophy - Kak
பின்நவீனத்துவம் என்பது ஒரு கோட்பாட்டியக்கமாக மாறி அது மினிமலிசம்,மாக்ஸிமலிசம்.மஸ்ஸர்ரியலிசம்,மாஜிகல் ரியலிசம்,மெட்டா ரியலிசம்,ஹிஸ்டிரிகல் ரியலிசம் என்று பல்வேறு கலை இலக்கிய கோட்பாட்டுகளை உருவாக்கியவாறு இருக்கிறது.அதில் ரிகர்சனிசமும் ஒன்று. தமிழில் சமகாலத்தின் கண்ணாடியாக திகழும் ஜெயமோகன் படைப்புகள் பின்நவீன கோட்பாடுகளை காட்டிதருகின்றன,அந்த வகையில் தற்போது வெளிவந்திருக்கும் கொற்றவை ரிகர்சனிசத்தின் வகைப்பட்டதாக கருதுகிறேன்.தொன்மங்களை/காப்பியங்களை திருப்பி முயற்சிப்பது இக்கோட்பாட்டின் தன்மையை சார்ந்ததாகும்.பின்நவீன கட்டிடக்கலையில் தற்போது செவ்வியல் கட்டிடகலையை மறு உருவாக்கம் செய்வது நடைபெற்று வருகிறது.கேரளகட்டிடக்கலை சார்ந்து வணிகவளாகங்களும்,வீடுகளும் திரும்பி வந்து கொண்டிருக்கிறது.அண்மையில் சிங்கப்பூரில் ஒரு வணிக வளாகம் தமிழக கோவில் கட்டடகலையை மெய்படுத்தியிருக்கிறது.இவையெல்லாம் சமூக நிகழ்வுகளாக பின்நவீன உலகை காட்டிக்கொண்டிருக்கிறது.பின் நவீனத்துவ கருத்துக்களில் ஒன்றான பழமையின் பூரிப்பு பலவிதங்களில் செயல் படுகிறது.அண்மையில் தமிழகத்தின் முக்கிய சூபி ஞானியான தக்கலை பிர்முகமதப்பா அவுலியாவின் (அதாவது பதினாறாம் நூற்றாண்டு) ஞானபுகழ்ச்சி நூலின் இசைவடிவம் மஜ்லிஸ் என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது.இந்நிகழ்வு ரிகர்சனிச செயல்பாடாகவே இருக்கிறது.இந்த இசைவடிவில் பன்னிரெண்டு பாடல்கள் இருக்கிறது.இசை வடிவிலும் கூட நாட்டார் மரபுகளும்,செவ்வியல் இசைமரபுகளும் கலந்த புது வகையினமாக இருக்கிறது.ந.மம்மது,ராஜா முகம்மது,செல்ல முத்தையா,ஹாமிம் முஸ்தபா போன்றோர்களின் முயற்சியில் இது வெளிவந்திருக்கிறது.அது போல இளையராஜாவின் திருவாசகம் நவீன இசைவடிவாக ரிகர்சனிச செயல்பாடை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.கலையிலக்கியத்தில் ஜெயமோகனைப் போல எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம் ரிகர்சனிச வகைப்பட்டதாகவே இருக்கிறது.
தமிழகத்தில் பழங்குடி கவிதை வடிவங்கள் வழக்கிலிருந்தாலும் என்.டி.ராஜ்குமாரின் மாந்திரீக கவிதைகள் புராதன குணங்களை கொண்டிருக்கிறது.தலித் கவிதைகள் எதிர் நவீனத்துவ கவிதைகளாக இருக்கையில் என்.டி.ஆரின் பழங்குடிக்கவிதை ரிகர்சனிச கவிதையாக/பின்நவீன கவிதையாக என்னால் அடையாளப்படுத்த முடியும்.அதற்க்கான காரணங்கள்,ஒன்று இது பழங்குடி கவிதை( ரிகர்சனிசம் என்பது பல்வேறு மக்களால் பல்விதங்களில் செய்யப்படும் பொருள்களை குறிக்கிறது)இரண்டு இதில் பழங்குடிகளின் கலைவடிவமுறை திரும்பி முயற்சிக்கப்படுகிறது.மூன்று இதன் மொழி பழங்குடி இனத்தின் வழக்கு மொழியாகும் ஜந்து இது ஒரு வாழ்க்கை/சமூக விமர்சனத்தை சொல்லிக்கொள்கிறது.எனவே இந்த கவிதை ரிகர்சனிச கவிதையாக இருக்கிறது.கவிதை வருமாறு:
கறும்பிக் கணியாத்தி
கணக்கா குறிபாத்தொரு பரிகாரம் சொல்லுங்கோ
குழிமாடத்து வெளக்கப் பொருத்துனா
நல்லதுக்கும் கெட்டதுக்கும் பதிலுசொல்லும் காவிலம்ம
கண்டும் காணாதது போல போவுது
சொமதாங்கிக்கல்லுல தலயமுட்டி
அவிடத்துலேயே மரிச்சுரலாம் போலிருக்கு
வேண்டாம் மோளே வேண்டாம்
சொல்லிதாறத கேட்டு நடந்துக்கோ
கையில ரெண்டு காயி கிட்டியப்போ
வலிய வீடு வச்சது நல்லது மோளே பின்னே
ஏதோ ஒரு குருக்கள விளிச்சோண்டு வந்து
நடு வீட்டுல வச்சு கோமம்வளக்கவச்சே
மனசுலாவாத்தபாசையில என்னஎளவச்சொன்னானோ
ஆரெங்கிலும் வல்லதும் சொல்லி ரசிக்கலேண்ணா
சண்ட பிடிச்சுக்கிட்டு ஊரச்சுத்தபோற
செத்துப்போன ஒனக்க மூத்தமோனப்போல
அகத்தே முறியில நீவச்சுதொழுதோண்டிருந்த
காட்டுப்பேயும் கன்னியும் தேவதையும்ஒக்க
எவனக்கண்டும் பேடிச்சுட்டுஇல்ல
ஒனக்கமேல கோவிச்சுட்டு போயிட்டுது
அதுதான் பிள்ளே
கூறு போனவீட்டுல மனசெல்லாம் மூளியாக்கெடக்குது
இதுக்கு ஒரேயொரு பரிகாரம் தானுண்டு
எவனோ சொன்னத கேட்டுட்டு நீமூலயில வச்சுருக்கக்கூடிய
கணபதிசெல ராமன் அம்பாளு கும்பாளு
எல்லாத்தையும் எடுத்து ஒருபீத்தச்சாக்குலகெட்டி
தூக்கிட்டுபோய் தலயச்சுத்தி
தெக்கநிண்ணுகிட்டு வடக்கநோக்கி வீசிஎறிஞ்சுட்டுவா
ஒன்னயும் நம்மளையும் பிடிச்சிருந்த பீட ஒழியும்
போன பேய்கள் திரும்பிவரும் வீடு கலகலக்கும்
கொண்டாட்டம் பெருகும் அகம் குளிரும்
குடும்பம் சேரும் புதிய வெலிச்சம் விழும்
கன்னிக்குவச்சுகொடு காட்டாளனுக்கு படையல்வை
கும்பளைங்கா வெட்டியிட்டு நல்ல நாட்டுக்கோழிகறியாக்கு
ராத்திரி ஒருமணிக்கு எல்லாரும்கூடுவோம்.
----

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...