Saturday, February 07, 2009

மஸ்ஸர்ரியலிசம்(MASSURREALISM)இலக்கியத்தில்



மஸ்ஸர்ரியலிசம்(MASSURREALISM)இலக்கியத்தில்

கனவுக்கும்,எதார்த்துக்கும் இடையிலான உறவை ஒரு மனோநிலையாக ஸர்ரியலிசம் கருதுகிறது.கட்டுப்பாடற்ற மனநிலையிலிருந்தே உன்னதமான படைப்புகள் உருவாக சாத்தியமுள்ளது.மனித மனம் சர்ரியலிச தன்மையில் புகைமூட்டத்துடன் இருக்கும் போது உருவாகும் உணர்வுகளை,எண்ணங்களாக மாற்றுவது கடினம்.இப்படி மனதில் புதைந்து கிடக்கும் மங்கலான நினைவுகளை நனவு நிலை சிந்தனைகளாக மாற்றும் போது குறியீட்டியல் குறியீடுகளும்,படிமங்களும் உருமாற்றம் பெற்று விகாரமாகவும்,விசித்திரமானதுமான நிலையை மஸ்ஸர்ரியலிசம் என்றழைக்கலாம்.நிஜத்துக்கும்,கனவுக்கும் வித்தியாசமில்லாத மனபோக்கு,புற உலகிலுள்ள குறியீடுகள்/படிமங்கள் மூலமாக வெளிப்படும் படைப்பை மஸ்ஸர்ரியலிசத்தில் அடக்கலாம்.பகுத்தறிவுக்கு புறம்பான கட்டுப்பாடற்ற நிலையில் தன்னிச்சையான எண்ண ஒட்டத்தை மனித குறியீடியல் வாயிலாக கூட்டு படிமங்களாக மஸ்ஸரியலிசம் வெளிப்படுத்துகிறது.படைப்பனுபவத்தை அது மனிதனுடைய அறிவை புற உலகிலிருந்து தட்டி எழுப்பி அதற்கு விரிவான உணர்ச்சியை தரவல்லாதாக அமையவேண்டும் என்கிறது.
பிராய்டின் பாதிப்பு சர்ரியலிசத்திலிருந்தது.ஆனால் மஸ்ஸர்ரியலியத்தை பொறுத்தவரையில் தொழிநுட்ப வளர்சியை மையமாக கொண்ட பண்பாட்டு,கலை மாற்றமாகும்.மஸ்ஸர்ரியலித்தை“Relative Reality” என்று அழைப்பதை காணலாம்.சார்பியல் எதார்த்தத்தை வெகுஜன பண்பாடு மாறுவதை வைத்து கணிக்கமுடியும். சார்பியல் எதார்த்தம் பற்றிய தெளிவிலிருந்தே மஸ்ஸர்ரியலிசத்தை புரிந்துகொள்ளமுடியும்.உதாரணமாக, வீடு இருப்பது தெருவின் எந்தப் பக்கத்தில்-வலபக்கத்திலா,இடபக்கத்திலா இந்த கேள்விக்கு எடுத்த எடுப்பிலே பதிலளித்துவிட முடியாது.பாலத்திலிருந்து தோப்பை நோக்கி நடந்தீர்களானால்,வீடு உங்களுக்கு இடப்பக்கத்திலிருக்கிறது. இப்படியில்லாமல் எதிர் திசையில் நடந்தீர்களேயானால்,வீடு உங்களுக்கு வலப்பக்கத்திலிருக்கிறது.தெருவின் இடப்பக்கம் அல்லது வலப்பக்கம் என்பதாய்ச் சொல்லும் போது சார்பான திசையையும் நீங்கள் குறிப்பிட்டாக வேண்டும்.ஆற்றின்வலக்கரை என்பதாய் சொல்வதில் பொருள் இருக்கிறது.ஏனெனில் ஆற்றின் நீரோட்டமானது திசையை நமக்குச் சொல்லி விடுகிறது.வாகனங்கள் சாலையில் வலப்பக்கத்தில் செல்வதாய் நாம் சொல்லலாம்.ஏனெனில் வாகனத்தின் ஓட்டமானது திசையை நமக்கு தெரிவிக்கிறது.ஆகவே வலம்,இடது,இடம் என்னும் கருத்துக்கள் சார்பானவை.இவற்றுக்கு சார்பான திசை குறிக்கபடும் போது தான் இவற்றுக்கு பொருளுடையதாகிறது.அதுபோல இரவு,பகல் போன்றவையும்,காட்சிப்பொருளின் கோணப்பரிணாமங்களால் தெரியும் பட வேறுபாடுகளும் சார்பியல் எதார்த்தமானவை.ஆக,நமது அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் கருத்துகளில் பலவும் சார்பானவை என்பதையும்,பார்வையிடும் நிலைமைகளைன் குறிப்பிட்டு சொல்லும் போது மட்டுமே அவை பொருளுடையதாகிறது.காலமும்,திசைவேகமும் கூட சார்பான எதார்த்தமே.இவ்வகையான புரிதல்களில் இருந்து தான் சார்பியல் எதார்த்தத்தை
புரியமுடியும். பின்நவீனத்துவ கவிஞர்களான சில்வியா பிளாத்,ஆனி ஸ்டாவன்சன்,எலிசபத் பிஷப் போன்றோர்களின் கவிதைகளில் மஸ்ஸர்ரியலிச கூறுகளை காணமுடிகிறது.மஸ்ஸர்ரியலிசம் படைப்புகளில் செயல்படும் விதம் பற்றி விமர்சன பூர்வமாக பார்ப்போம்.விமர்சன ஆய்வு என்ற முறையில் மஸ்ஸர்ரியலிசம் விவாதிக்கப்படுவது இதுவே முதல் முறை.மஸ்ஸர்ரியலிச விமர்சன முறை உண்மையை நிறுவதில் மிகச்சரியாக இருத்தல்,தற்சார்பின்மை ஆகியவற்றை கடந்து செல்ல எத்தனிக்கிறது.
குற்றப்பழிக்கனவு
அந்த கனவில் நீ என்னைக் கண்டிக்கையில்
நான் குற்றப்பழியில்லமொன்றில் அலைந்து திரிகிறேன்
அதற்க்கொரு கதவிருக்கிறது - மன்னிப்பு கோரல் மற்றும்
ஜன்னல்கள்,தழும்புகள்,எனது நான்கள்
இந்த நீண்டகண்ற,அரைகுறையாய் அன்பு
செலுத்தப்பட்ட,புறக்கணிக்கப்பட்ட இடத்தைக்
கட்டியெழுப்பினேன்.
உன் முகத்தின் வரைச்சட்டங்களைக்கொண்டு.
இன்னமும் நான் உன்னை காயப்படுத்துகிறேன்
இன்னமும் நான் - நாம்
தெளிவற்ற வருத்தத்தில் இடம் பிடிக்கிறோம்
உன்னுடைய வெண்ணிற மாளிகை
கள்ளப்பணத்தைப்போல
என் மேல் பாரமாய் அழுத்துகிறது.
என்னால் மறக்க இயலவில்லை.
என்னால் மறக்க இயலவில்லை.
அம்மாக்களாலான நீண்ட தாழ்வாரங்கள்
அழிக்கவியலாத படி அத்தனை சன்னமாகியிருக்கும்
இந்த வீட்டை அலங்கரிக்கின்றன.
-ஆனி ஸ்டாவென்ஸன்
மஸ்ஸர்ரியலிசத்தின் இயல்பையும் தன்மையையும் தற்கால அபெளதிகம் சர்ச்சை
செய்யப்படும் முறையிலிருந்து தத்துவ நோக்கில் பார்க்கவேண்டியிருக்கிறது.இது அடிப்படையில் பல விஷயங்களோடு தொடர்புடையதாக இருக்கிரது.எனவே ஒழுக்கவியல்,அழகியல்,மாதிரிகள்,சொற்பொருளியல்,கணிதம்,விஞ்ஞானம் போன்ற துறைகளுடன் பொருத்திபார்பதிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும்.
நடப்பியலையும்,அநடப்பியலையும் தொடர்ச்சியான தத்துவ பின்புலங்களோடு
புரிய எடுத்துக்கொண்ட முயற்சி சாதாரணமானதல்ல.ஆனி ஸ்டாவென்சனது கவிதையை பார்க்கிறபோது வீடு,வெள்ளை மாளிகை,கள்ளப்பணம்,ஜன்னல்கள் போன்ற வெகுஜன குறியீடுகள் அல்லது படிமங்களை ஆழ்மனதின் புகைமூட்டமிக்க கனவு குறியீடுகளை உருமாற்றம் செய்கிறது.இதனால் கவிதை அர்த்த தளத்தில் நகர்ந்துக்கொண்டிருக்கிறது.சர்ரியலிச படைப்புகளில் கட்டுகளற்ற மனம் காட்சிப்படுவது போல மஸ்ஸர்ரியலிச கவிதையில் இருக்காது.இங்கே புறவயமான பொருட்கள் பற்றிய படிமம் அல்லது குறியீடு மனத்தை புலனுணர்ச்சிக்கு அடிமையாகி தவிப்பதையும்,அதனால் கனவுகளும்,கற்பனைகளும் ஒரு வளையத்தில் சில ஞாபக பதிவுகளாக மட்டும் செயல்படுவதை குறிக்கிறது. எனவே சார்புநிலையில் தான் எதார்த்தம் உண்மைகளாக மாற்றப்படுகிறது என்று மஸ்ஸர்ரியலிசம் கூறுகிறது.
தமிழ் சூழலில் மஸ்ஸர்ரியலிசத்தின் கூறுகள் ஓரளவேனுக்கேனும் தேவதேவனின் லேடாஸ் அன்ட் ஜெண்டில்மென் என்ற கவிதையை பார்க்கிறபோது புரியமுடிகிறது.
இதோ உங்கள் கனவு நனவாகிறது
உங்கள் அடிமனதின் ஆவலை நிறைவேற்றும்
அந்தப் பிரதேசம் உருவாகிவிட்டது
ஓடோடிவந்து நீங்கள் பிரஜையாகிக் கொள்ளவேண்டியதுதான் பாக்கி.
(எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளதால்
உங்கள் இடத்திற்கு இப்போதே முந்திக் கொள்ளுங்கள்)
சுற்றி அய்ம்பது கிலோமீட்டர் தொலைவிற்கு
மாசு உண்டாக்கும் எவ்வித ஆலைகளும்
எக்காலத்திற்கும் உருவாகாதபடித் திட்டமிடப்பட்டுள்ளது.
(எங்கள் தொலைநோக்குப் பார்வைக்கு
மிகப்பெரிய சாட்சியம் இது)
பிரதேசத்தின் ஒவ்வொரு இடுக்கின் தூய்மையும் அழகும்
நலவிஞ்ஞானிகள் மற்றும் கட்டடக் கலை வல்லுநர்களால்
ஒவ்வொரு கணமும் கண்காணிக்கப்படுகின்றன.
மீத்தேனை வெளியேற்றாத புதுவகைச் சாதனங்களால்
எல்லா இல்லங்களும் ஏசி செய்யப்பட்டுள்ளன.
பிரஜைகள் பேட்டரியால் இயங்கும் கார் மட்டுமே
வைத்திருக்க அனுமதியுண்டு.
உங்கள் பொன்னுடலுக்கேற்ற தட்பவெப்பநிலையை
கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் வான்மிதவைக் கலங்கள்
(உலகிலேயே முதன்முதலாய் அறிமுகப்படுத்தப்படுகிறது
இங்கே தான்)
உங்கள் மனதைத் தொல்லைப்படுத்தும்
ஏழைஎளியவர் எவருமே கிடையாது.
எல்லாப் பணிகளுமே கணினிப்படுத்தப்பட்ட
கருவிகள்மூலமே செய்யப்படுகின்றன.
நல்லூதியம் பெறும் விஞ்ஞானிகள் மற்றும் இன்ஜினீர்கள்
இலவச சேவைக்காய் எப்போதும் தயார்நிலையில்.
உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான பூங்காக்கள்.
ஆனால் அங்கே-
நறுமணமூட்டப்பெற்ற தென்றல்காற்று எமது புதுமைப்படைப்பு.
(ஒவ்வாமைக் கவனத்துடன் வடிவமைக்கப்பட்டது)
மற்றும் மினரல் வாட்டர் டேங்க்.
பிரதேசத்தைச் சுற்றி வானுயர்ந்த சுற்றுமதில்போல்
பிரதேசத்திற்குள் நுழையும் காற்றை வடிகட்டித்
தூய்மைப்படுத்தும் மாபெரும்
'மேக்யரோபியூர் ' சல்லடை இயந்திரம்.
(நமது பிரதேசத்தில்தான் முதன்முதலாய் அமலுக்கு வந்திருக்கும்
விஞ்ஞானச் சாதனை எண்-2)
அதிநவீன மனிதர்களான உங்களுக்காக உருவாக்கப்பட்ட
இந்த அதிநவீன பிரதேசத்தின்
அதிநவீனப் பாதுகாப்புப்படை
எங்களது சிகரப் படைப்பாகும்.
மேலும் எமது சகோதர நிறுவனத்தின்
'காண்ட வனத் ' திற்கு
(எல்லாவித வேடிக்கை விநோத கேளிக்கைகளும்
உங்களுக்காகவே ஒருங்கமைக்கப்பட்ட
விடுமுறை நாள் சொர்க்கம்.ஆசியாவின்
நம்பர் ஒன் வாட்டர் தீம் பார்க்)
இங்கிருந்தே செல்ல சுரங்கப் பாதையுண்டு.
(பிரதேசவாசிகளுக்கு மட்டும் இலவச அனுமதி)
காண்டவ வனத்தின்,விரைவில் துவங்க இருக்கும்
விரிவாக்கத் திட்டத்தின்கீழ்
நீங்கள் கனவுக்கூடக் கண்டிராத வியத்தகு
கலை இலக்கிய நுகர்வுக் களஞ்சியங்கள்:
மயிலாப்பூர் வனத்தில் திருவள்ளுவர் உலவுவார்.
ஒரு பொத்தானைத் தட்டிக் கேட்டால்
1330 குறளையும் அப்படியே ஒப்பிப்பார்.
கம்பனையும்,ஷேக்ஸ்பியரையும்,தாந்தேயையும்
அப்படியே உலவவிட்டுள்ளோம்.
இன்னும் மகா காவியங்களின் மகத்தான
கதாபாத்திரங்களுடன்( ராமன் முதல் அன்னா வரை)
நீங்கள் இஷ்டபட்டவர்களுடன் இஷ்டப்பட்ட நேரத்தில்
உரையாடி மகிழலாம்.
ஒரு பொத்தான் உதவியுடன்
ஊர்வசியும் ரம்பையும் உங்கள் மடியில் விழ
நீங்கள் கொஞ்சலாம்
சில இடங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியது.
சில இடங்கள் பெண்களுக்கு.
குழந்தைகள் இலக்கியத்தின் முக்கிய பாத்திரங்கள் எல்லோருடனும்
இனி குழந்தைகள் நேரிலேயே பழகலாம்.
இனி கலைஞர்களே தேவையில்லை.
கலையை நுகர்பவர்களே தேவை.
இன்னும்
எல்லாவற்றையும் அறிய ஆள அனுபவிக்க
உங்கள் கனவுகின் கனவுலகப் பிரஜையாக
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம்
கீழ்க்கண்ட பாரத்தைப் பூர்த்தி செய்து
உடனே நீங்கள் எங்களைத் தொடர்புகொள்ள
வேண்டிய முகவரி.. ..
இன்டர்நெட்டிலும் எங்களை நீங்கள் அடையலாம்.
எங்கள் இ மெயில் விலாசம்.. .. ..
மேற்ச்சொன்ன தேவதேவனின் கவிதை மஸ்ஸர்ரியலிசம் செய்ல்படும் விதமும்,அதன் குணமும் விளக்காமலே தெரிகிறது.கவிதையில் எப்போதும் பேச்சே பிரதானமாக இருக்கிறது.எனினும் பேச்சு மரபுகள் தனித்தன்மை வாய்ந்தவை.அவை என்னவென்று பார்ப்போம்.
சிமிலி-simili
சிமிலி என்பது ஏதாவது இரண்டு பொருள்களுக்கு இடையேயுள்ள,ஏதாயினும் சில ஒற்றுமைப்பகுதிகளைக் குறிப்பிட்டு வாக்கியத்தைச் சொல்லுவதாகும்.பொதுவாக like,as,so என்பவைகளுள் ஒன்று வரும்
மெட்டபர்-metaphor
மெட்டபர் என்பதும் சிமிலியைப் போன்றதுதான்.ஒன்று இன்னொன்றைப் போன்றது, அல்லது இன்னொன்றைப் போலச் செயல் படுவது என்று தெளிவாகச் சொல்லாமல் அதை புரியும் படியாகவே குறிப்பாக சொல்வதாகும்.
He fought like a lion
என்று சொன்னால் சிமிலி என்று சொல்லலாம்.இதே கருத்தை
He was a lion in the battlefield.
என்று சொன்னால் இதை மெட்டபர் எனலாம்.
Life is a dream
The camel is the ship of desert
Revevge is animal Justice
என்றார் போல் மெட்டபர் அமைந்து வரும்.
பெர்சானிஃபிகேஷன்-Personification
உயிரில்லாத பொருள்களை உயிருள்ளவைகளைப் போல பாவித்துச் சொல்லும் பேச்சு மரபு இது.
Fate lays her hands without fail.
Pride rides with glamour in these days.
Sun gives his light to all.
அப்பாஸ்ட்ரபி-Apostrophe
அப்பாஸ்ட்ரபி என்பது,கடந்த காலத்தில் இருந்தவர்களுக்கோ அல்லது எண்ணங்கள் குறிக்கோளுக்கோ நேரடியாகச் சொல்வது போல பேச்சை அமைத்தல் ஆகும்.இப்படி பேசும் போது வலியுறுத்தும் கருத்துகளுக்கு ஒரு தனியான வேகம் உண்டாகிறது.கேட்பவர் மனத்திலும் பேச்சு,உணர்வுகளை மிகுதியாக்குகிறது.
Bhaghvan! See what your followers are doing these days ?
என்று சொல்லும் போது,”பகவானே! உன் வழிவந்தவர்கள் இந்நாட்களில் என்ன செய்கிறார்கள் பார்த்தாயா ?”என்று பேச்சு அமைந்திருக்கிறது.மகான்களின் வழி வந்தவர்கள் கோட்பாடுகளை மறந்து விட்டு விலகிப் போகிறார்கள் என்பதை குறிப்பாக புரியவைக்க இந்த பேச்சுமுறை நன்றாக பயன்படும்,இப்படியே,
Oh! Judgement! Thou art fled to brutish beasts
O death! Where is thy string ?
Mother Earth! Is this your benevolence ?
என்றார் போல இந்த பேச்சு மரபு பலவாறு நிலவும்.தமிழில் இந்த மரபு நெடுநாளாகவே இருந்து வருவது.
'கடவுளே! உமக்குமா கண்ணில்லை. '
'வள்ளுவரே! தமிழர் சமுதாயம் எப்படிப் போகிறது பார்த்தீரா ? '
என்று வருவதாகும்.
ஹைப்பர் போல்-Hyperpole
இது ஒன்றை மிகைப்படுத்திச் சொல்வதன் மூலம்,செய்தியை மக்கள் கவனமாக மனங்கொள்ளச் செய்வதற்கான ஒரு பேச்சு முறையாகும்.
All the perfumes of the world
Will not sweeten his dirty hand.
He cannot clean his sin,even if he
Take his bath in all the sacred rivers.
என்பது போல இந்த மரபு பேச்சு காணப்படும்.
'கறைபடிந்த கை ' என்பதை முதல் சென்டன்ஸும்,
'பாவத்திலே மிகுந்தவன் ' எனபதை இரண்டாவது செண்டன்சும் மிகைப்பட சொல்கின்றன.
யூபிமிசம்-Euphemisom
சொல்ல விரும்பாத ஒன்றை வேறொன்றாகச் சொல்வது இது.தமிழில் அமங்கலத்தை மங்கலமாக சொல்வதைப் போன்றது இந்த மரபாகும்.
He has fallen asleep
என்றால், 'அவன் இறந்து விட்டான் ' என்றுதான் பொருள்.அதற்கு பதிலாக 'தூக்கத்தில் ஆழ்ந்து விட்டான் ' என்றுச் சொல்லப் படுகிறது. 'சிவனடி சேர்ந்தார் ', 'திருநாடு அலங்கரித்தார் ' என்று நாமும் இப்படியே சொல்வோம்.
ஆண்டிதீஸிஸ்-Antithesis
எதிமறைக் கருத்தையும் அதே செண்டன்சில் சொல்வதன் மூலம் ஒரு கருத்தை வற்புறுத்தும் பேச்சு இது.
Man proposes,God disposes
என்பது ஆறுதல் பேச்சாகும். 'நாமொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கிறது ' என்று நாமும் சொல்வோம்.இப்படி எதிரும் புதிருமான கருத்தை அமைத்துச் சொல்வது தான் இந்த பேச்சு மரபின் பொது மரபாகும்.
Not that I loved my mother less,but that I loved my country more.
இப்படி க்ஸிமொரான்,எபிகிறாம்,இர்ரனி,பன்,மெட்டொனமி,சினக்டோக்,லிட்டோட்ஸ்,அலிட்டரேசன்,எக்ஸ்கிளமேசன்,ஓனமாடோபோபியா,பேதடிக் ஃபாலசி,கிளைமாக்ஸ்,ஆண்டிகிளைமாக்ஸ் போன்ற பேச்சுமரபுகள் கவிதையில் பயன்படுத்தப்படுகிறது.இந்த பேச்சு மரபுகள் பற்றிய ஆய்வை மஸ்ஸர்ரியலிசம் முக்கிய படுத்துவதன் வாயிலாக மறு வாசிப்பின் சாத்தியங்கள் உருவாகின்றன.கவிதை மொழி குறிப்பினால் உணர்த்தபடுகையால் குறிகள் தொடர்ந்து தளமாற்றம் செய்து கொண்டு மாறிக்கொண்டிருப்பதால் கவிதையின் வாசிப்பு சாத்தியங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.இந்த வாசிப்புகள் தொடர்ந்து அர்த்தங்களை ஒத்திபோடுகின்றன.கவிதையில் குறிப்பு பொருள் இடப்பெயர்ச்சி,திரிபு,புது அர்த்த படைப்பு என்றிருக்கிறது.பின்நவீன காலத்தில் உருவாகும் இந்த மஸ்ஸர்ரியலிச கவிதைகளை Alex Philipchenko போன்ற ரஷ்ய கலைஞர் இப்படி கூறுகிறார்
All this makes me believe that James Seehafer 's term 'massurrealism ' as the definition of the tendencies reflected in the contemporary pictorial art is well-grounded and quite well-timed. Of course, also in order is the reservation that massurrealism does not mean any unification of artistic styles. Just the opposite, it allows quite a variety of creative forms in art. The artists who belong to this trend are united in that they all aspire to leave the realm of realistic images and discover or model a new reality with the use of the possibilities afforded to them by contemporary technology. As an example demonstrating one of the possible styles within this trend I will name what I call 'meta-realism '.
ஆனால் ரஷ்யாவில் மெட்டாரியலிச கவிதைகள் ரொம்பவும் புகழ்மிக்கதாக இருக்கிறது.சமீபத்தில் வெளிவந்த நூல் ஒன்றில் இது விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது
THESES ON METAREALISM AND CONCEPTUALISM
Mikhail Epstein
In the book: Russian Postmodernism: New Perspectives on Post-Soviet Culture. New York, Oxford: Berghahn Books, 1999, pp. 105-112.
Metarealism is a new poetic form which, freed from conventionality, opens up onto the 'other ' side of metaphor, not preceding it like a literal, lifelike image, but embracing and transcending its figurative meaning. 'Meta, ' the common prefix for words such as 'metaphor, ' 'metamorphosis, ' 'metaphysics, ' conjures up a reality that opens up beyond the metaphor, to a region where metaphor carries over or transfers its sense, beyond that empirical dimension from whence it took off. While Metaphorism plays with the reality of the actual world, Metarealism earnestly tries to capture an alternative reality. Metarealism represents the realism of metaphor, the entire scope of metamorphosis, which embraces reality in the whole range of its actual and possible transformations. Metaphor is but a fragment or remnant of myth, whereas a metarealistic image (a unit of metareal poetry) attempts to re-establish mythic unity; it is an individual image that tries to converge with myth to the extent possible in contemporary poetry.

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...