Tuesday, April 21, 2009

மானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்




இரத்த பந்தத்தைத் தவிர வேறு பிணைப்புக்களும் இடம் பெற்றன. ஒரே இரத்தத்தில் தோன்றிய பிள்ளை குட்டிகளின் அலகாக அன்றித் தமக்குள் சண்டையிடுவதில்லை என்ற வாக்குறுதியுடன் நேச ஒப்பந்தங்கள் (ஊழகெநனநசயவழைn) பல உருவாகின. இதன் மூலம் தனி நபர், குடும்பம் அல்லது குலங்கள் இணைவது சாத்தியமாயிற்று. இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்னர் நடைபெற்ற “முத்தையாபின்’’, “புலூல்’’ (குரனரடட) ஆகியவை இவ்வாறு ஏற்பட்ட ஒப்பந்தங்களில் புகழ்பெற்றவையாகும். சிறிதும் தொடர்பற்ற தூரத்துக் குலங்களையும் இவை பிணைத்தன. (1987 : 09) இதில் பிணைப்புற்ற அங்கத்தவர் எவராயினும் பழங்குடியின் உண்மையான அங்கத்தவராகவே கணிக்கப்பட்டனர்.

ஒப்பந்த அடிப்படையில் ஏற்பட்ட உறவாயினும் அறேபியன் அதில் இரத்த பந்தத்துக்குரிய கடப்பாடுகளை நிறைவேற்றினான். பழங்குடியினுள் இணைந்தோருக்கு உரிய பாதுகாப்பு முழு அளவில் வழங்கப்பட்டது. அறேபியரிடையே வழங்கிய “சகோதரர்’’ என்ற பட்டம் இரத்த உறவினரை மட்டும் குறிக்கவில்லை. இரத்த உறவற்ற சகோதரத்துவத்திற்கு, ஒத்த கருத்து இருந்தால் அதுவே போதுமானதாக இருந்தது. (1969 : 21)

ஏழைகளும், கைதிகளும் பலவீனங்களும் இவ்வகை நேசஒப்பந்தகளினால் பாதுகாப்புப் பெற்றனர். சக்தியற்ற குலங்களுக்;கு இது பெரு வாய்ப்பாக அமைந்தது. அரசோ, சமாதானத்தை திணிக்கும் வேறு சக்தி மிக்க இயந்திரமோ இல்லாத நிலையில் மக்களில் அப்போது ஏற்பட்ட புதிய நெருக்கடிகளுக்கு இதுவே இயலக்கூடிய அதிகபட்சத் தீர்வாக அமைந்தது. கடும் வரட்சி, உணவுத் தட்டுபாடு, வழிப்பறி, குலச்சண்டைகள் போன்ற பிரச்சிளைகளின் தாக்கத்திலிருந்து தனிநபரை அல்லது பலவீனமான குலத்தைப் பாதுகாக்கவும் இப்பிணைப்பு உதவியது.

தொன்மைஅறபு சமூகத்தில் உருவான இக்குல இணைவினை செயற்கைக் குல ஒருமைப்பாடு’’ என பேராசிரியர் வொட் குறிப்பிடுகிறார். நேச ஒப்பந்தங்களினால் இவ்வாறு உருவான குல ஐக்கிய எழுச்சி நபிகள் காலத்தில் பரவலாகக் காணப்ட்ட அம்சமாகும். இக்குல ஐக்கியங்கள் ஒரு அரசியல் இணைப்பினை அடையாளப்படுத்துவதாக அமைந்தது. (ஐபயௌ புழடனணihநசஇ 1967 :14)

நபிகள் காலத்தில் நடைபெற்ற இக்குல ஐக்கியச் செயற்பாட்டில் வணிக நலன்கள் முக்கிய இடத்தைப் பெற்று வந்தன. வணிகப் போட்டியில் தனி ஆதிக்கத்தைச் செலுத்த முனைந்த குலங்களுக்கு அல்லது வர்த்தகக் குபேரர்களுக்கு எதிராகவும் இவை உருவாகின. பலவீனமான வணிகர்கள் ஒப்பந்தங்;ள் செய்து தமக்குள் ஐக்கியத்தை ஏற்படுத்திக் கொண்டனர். சக்திமிக்க குபேரர்கள் தமக்குள் குலக் கூட்டுறவை உருவாக்கிக் கொண்டது போல் பலவீனர்களும் தமது குல எல்லைகளைத்தாண்டி வேறு குலத்தவர்களுடன் அல்லது தனி நபர்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டனர். ஹில்ப் - அல் - புலூல் இவற்றுள் குறிப்பிடத்தக்க அமைப்பாகும். குல ஐக்கியத்தின் இடத்திற்கு வர்க்க ஒருமைப்பாடு வந்து சேர்வதை இதுவும் இதுபோன்ற ஒப்பந்தங்களும் உணர்த்தின.

“ஹில்ப் அல் புலூல்’’ அமைப்பை உருவாக்குவதில் நபி (ஸல்) அவர்களின் ஹாஷீம் குலத்தினரே முன்னணியில் நின்றனர். சுதந்திரமாக வர்த்தகக் காரவன்;களை அனுப்பமுடியாத வர்த்தகர்களின் பாதுகாப்பு இதில் முக்கியத்துவம் பெற்றது. குபேர வணிகர்களினால் அல்லது வர்த்தகப் போட்டியில் தன்னாதிக்கம் செலுத்தியவர்களினால் நபிகளின் ஹாஷீம் குலமும் பாதிக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட வர்த்தகர்களின் ஒருங்கிணைப்பை இதிற்காண முடிவது முக்கிய அம்சமாகும்.

மக்கா நகரில் ஒடுக்கப்படும் அமைப்பின் அங்கத்தவர்களுக்கு உதவி வழங்குவதென்று புலூல் உடன்படிக்கையின் போது பிரதிக்ஞை எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் ஒருங்கிணைப்பாக மட்டுமன்றி பலவீனர்களுக்கு ஆதரவளிப்பதும் அவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தருவதும் இதன் நோக்கங்களில் ஒன்றாக இருந்ததும் கவனத்திற் கொள்ளத் தக்கதாகும். (யுளபாநச யுடi நுபெநெநசஇ 1980 : 17) நபிகளின் இளமைப் பருவத்தில் நடைபெற்ற இவ்வுடன்படிக்கையின் போது நபிகளும் அங்கு பிரசன்னமாகி இருந்தனர். பிற்காலத்தில் இவ்வுடன் படிக்கையை நபிகள் நினைவு பிரச்சன்னமாகி இருந்தனர். யார் இந்த உடன்படிக்கையின் பேரில் உதவி கோரினாலும் உதவத் தயாராக உள்ளேன்’’ எனக் கூறினார்கள்.

போர்ச்சூழல்

அறேபியரின் வாழ்வில் இரத்தஞ்சிந்துதலும் கொள்ளையிடுவதிலும் பொதுவழக்காகும். விடுதலையளிக்கப்பட்ட மூன்று புனித மாதங்களைத்தவிர வருடம்ப+ராகவும் அவர்கள் போர்புரிந்தனர். ஒரு நாதாரணச் சச்சரவோ ஒரு தனிநபர்கொலையோ பல தசாப்தங்கள் நீடிக்கக்கூடிய போருக்குப் போதிய காரணங்களாயிந்தன. அவர்களது போர்முறைகள் மிகக்குரூரமானவையாகவும் மனிதத்தன்மையற்ற வையாகவுமிருந்தன. நபிகள் காலத்திலும் அதற்கு முன்னரும் மனித நேயத்திற்குப் புறம்பான பல கொடூரங்களைப் போர்களில் அவர்கள் நிகழ்ந்தனர். பண்டைய போர்களின் குரூபரங்கள் பற்றிய பைபிளின் பதிவுகள் இவ்வாறு காணப்படுகின்றன.

சமூவேல் பவுலை நோக்கி இப்போது நீ போய் அமலேக்கைக்
கொன்று அவன் உடைமைகள் அனைத்தையும் அழித்துவிடு.
அவன்மேல் இரக்கங் கொள்ளாதே. அவனது சொத்துக்களில்
ஒன்றையும் விரும்பாதே. ஆனால் ஆண்பிள்ளைகள் முதல், பெண்
பிள்ளைகள் வரை, சிறுவர், பால் குடிக்கிற பிள்ளைகள், மாடுகள்,
ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள், முதலியவற்றைக்கொன்றுவிடு.
(15:13)

அவர்கள் கொள்ளைப்பொருட்களின் மேல் பாய்ந்து
ஆடுமாடுகளையும் கன்றுகளையும் கொணர்ந்து தரையில் போட்டு
அடித்து இரத்தத்துடன் சாப்பிட்டனர். (14 : 32 : 33)

அறேபியப் போர்களிலும் இதற்குச் சமமான செய்திகள் உள்ளன. குழந்தைகளையும், பெண்களையும் அவர்கள் எரிய+ட்டிக் கொலை செய்தனர். கர்ப்பிணிகளின் வயிற்றை வெட்டிப்பிளந்தனர். அம்பெய்யும் பயிற்சிக்கு சிறுவர்கள் பலியாக்கப்பட்டனர். போரில் பிடிக்கப்பட்ட கைதிகள் கொலை செய்யப்பட்டனர். இறந்தவர்களின் சடலங்கள் குரூபமாகச் சிதைக்கப்பட்டன. அங்கங்கள் அறுக்கப்பட்டு அகற்றப்பட்டன. தாயும் பிள்ளைகளும் பிடிக்கப்பட்டால் அவர்களைப் பிரித்துவைத்தனர். யுத்தத்தின் போது மரங்களையும் கட்டிடங்களையும் பாழ்படுத்தினர்.

போர்க்கொள்ளை கிட்டத்தட்ட அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக இருந்தது. கொள்ளைப் பொருள்களுக்காகவே அவர்கள் போர்களில் இறங்கினர். போர்க்கொள்ளையும் வழிப்பறியும் கண்டிக்கப்படவில்லை. இவை அவர்களது ஜீவனோபாயமாக இருந்தமையால் அவர்களது ஒழுக்க நியமங்கள் இவற்றை ஆதரித்தன. போர்க்கொள்ளைக்குரிய அறபுப்பதம் “கனீமத்’’ ஆகும். அறபு மக்களின் வாழ்வில் கனீமத் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது.

தார்விதி

பாலைவன அறேபியர் யுத்தத்தை நேசித்தனர். ஓரளவுக்கு யுத்தம், அவர்களது வாழ்க்கையுமாகும். “தார்’’ (வுhயச) முறை யுத்த ஆவலை அவனுக்கு மேலும் தூண்டியது. இது “தார்விதி’’ (டுயற ழக வுhயச) எனப்பட்டது. ஏதாவதொரு வழியில் ஒரு பழங்குடிநபர் கொலைசெய்யப்பட்டால் அக்கொலைக்காக முழுக்குல அங்கத்தவர்களும் கூட்டுமுறையில் பழிவாங்குவதை தார்விதி கட்டாயப்படுத்தியது. இம் முறையில் எழும் போர்கள் பல நூற்றாண்டுகள் வரையும் நீடிக்கும். இந்த யுத்தங்களிலிருந்து கிளை யுத்தங்களும் தொடர்வதுண்டு. தார் அறேபியரின் குணப்பண்புகளில் ஊறியிருந்த ஒன்று என அல்லாமாஷிப்லி நூஃமானி குறிப்பிடுகிறார்கள் (பார்க்க : 1981 : 245, ஏழட ஐஐ)

கொலைக்குரிய வாங்கப்படாத வரை கொலையுண்டவனின் ஆன்மா ஒரு பறவையாக ஓலமிட்டு அலையுமென்றும், பழி வாங்கப்படாதவரை கொலையுண்டவனின் சவக்கிடங்கு தீராத இருளில் மூழ்கிக்கிடக்கும் என்றும் அவர்களிடம் புராண நம்பிக்கைகள் நிலவின. இத்தகைய நம்பிக்கைகள் தார்விதியை மேலும் தீவிரப்படுத்தின. அறபுகளைப் பொறுத்தவரை காயப்பட்டு யுத்தகளத்தில் இறப்பதுதான் கௌரவமான மரணம். ஆன்மா மூக்கின் வழியாக அன்றி காயத்தின் வழியாக வெளியேறியது என்ற இறப்புச் செய்திக்கே அவர்கள் மதிப்பளித்தனர். நோயுற்று இயற்கையாய் மரணிப்பதை தொன்மை அறேபியர் இழிவுச்சாவெனக்கருதினார் - இதனை அவர்கள், “மூக்கு மரணம்’’ என்றனர். அவர்களது பாடல் ஒன்று இவ்வாறு கூறுகிறது.

எமது எந்தத்தலைவனும்
மூக்கினால் மரணிக்கவுமில்லை
பழிவாங்கப்படாத நிலையில்
எங்களில் ஒருவன் கொலை செய்யப்படவில்லை

இஸ்லாம் பழைய போர் முறைகளிலும் போர்க்கொள்ளையிலும் (கனீமத்) மாற்றங்களை ஏற்படுத்தியது. போர் ஒழுக்கக் கோவை என்று கூறுவதற்குச் சமமான கருத்துக்களை இஸ்லாம் போர் சம்பந்தமாக முன்வைத்தது. “நீதியான வழியிலன்றிப் போரில்லை’’ என்ற அடிப்படைக்கருத்தை இஸ்லாம் பிரகடனப்படுத்தியது. “போரில் வரம்பு மீறவேண்டாம்’’ அல்லாஹ்வின் வழியில் போர்புரியுங்கள் அநீதியிழைப்போருடன் மட்டுமே போர்’’ என்ற குர் ஆனின் கட்டளைகள் பழைய போர்முறைகளையும் அதற்கான காரணிகளையும் குர்ஆன் முற்றாக நிராகரிக்கிறது என்பதற்காக சான்றுகளாகக் கொள்ளலாம்.

அப+தாவ+தின் பதிவின்படி நபித்தோழர் அனஸ் (ரலி) அவர்களுக்கு நபிகள் வழங்கிய போர் அறிவுரைகளிலொன்று பலவீனப்பட்ட முதியோர் சிறார்கள், மகளிர் எவரையும் நீங்கள் கொலை செய்துவிட வேண்டாம்’’ என்பதாகும். கலீபா அப+பக்கர் தமது தளபதிகளுக்குப் போர் அறிவுரை வழங்கியபோது பாதிரிமார்கள், வணக்கவாளர்கள், தொழிலாளர்கள் போன்றவர்களை அவர்கள் போரில் பங்கெடுத்துக் கொள்ளாத வரையில் தாக்க வேண்டாம் எனக் கூறினார்.

பிணைக்கப்பட்ட நிலையில் இருப்பவர்களையோ கைதிகளையோ கொலை செய்வதை நபிகள் தடுத்து விட்டன்ர். எதிரிகளின் சடலங்களைச் சிதைப்பதையும் சடலங்களிலிருந்து மூக்கு, காது, ஈரல் போன்ற உறுப்புக்களை அறுத்தெடுப்பதையும் நபிகள் தடுத்தனர். எதிரி நாட்டிற்குள் நுழைகையில் நாசவேலைகளில் ஈடுபடவேண்டாம் என்றும் பள்ளிவாசல்களை கண்டால் அல்லது பாங்கோசையைக் கேட்டால் யாரையும் கொல்லவேண்டாம் என்றும் நபிகள் கூறினார். போர்த்தளபதிகளை நியமிக்கும்போது இறையச்சத்துடன் அல்லாஹ்வின் பாதையில் போர்புரியுமாறு பணித்தனர். ஒப்பந்தங்களுக்கு மாறு செய்யவேண்டாம் என்றும் யாரையும் கோரப்படுத்தவேண்டாம் என்றும் சிறுவர்களைக் கொலை செய்யவேண்டாம் என்றும் தமது தளபதிகளுக்கு அறிவுரை கூறினர்.

நபிகள் காலத்தில் யுத்தங்கள் நடைபெற்றபோதும் அதில் மாற்றங்கள் தென்பட்டன. இரத்தவெறி இல்லாதொழிக்கப்பட்டது. யுத்தங்களுக்கு வரையறைகளும் விதிகளும் வகுக்கப்பட்டன. உண்மையில் ஆயுதப்பயன்பாடும் இரத்தஞ் சிந்துதலும் அதன் இறுதி எல்லைவரை கட்டுப்படுத்தப்பட்டது’’ (ர்யஅனைரடடாயஇ 1979 :87). மேலும் இதுகாலம்வரை பெரும் கௌரவத்துக்குரியதாகக் கருதப்பட்ட கொலைக்குரிய இரத்தக் கோரிக்கையை நபிகள் தமது இறுதி ஹஜ்ஜின் போது நிராகரித்தனர். அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யுமாறும் உலகியல் எதிர்பார்ப்புக்களைக் கைவிடுமாறும் நபிகள் கோரிக்கை விடுத்தனர். யுத்தத்தில் பொருள்ளைக் கவர்வதைவிட மறுமையின் பலன்களே மேலானதென்று கூறியது புதியகருத்தாகும். இதன்மூலம் போர்க்கொள்ளையின் மீது அவர்கள் பாராட்டிவந்த மாபுரிமையை நபிகள் கேள்விக்;குரியதாக்கினர்.

பழிக்குப் பழி

அறபுப் பழங்குடியில் பழிக்குப் பழி ஒரு உயிர்பாதுகாப்பு முறையாக விளங்கியது. குலத்தினது பொதுப் பாதுகாப்பும் இதில் அடங்கியிருந்தது. குலத்தின் அல்லது குடும்பத்தின் அங்கத்தவர் தாக்கப்பட்டால், பொது எதிர்ப்பு உருவானால் காரணகாரிய ஆராய்ச்சியின்றி பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. பதில் தாக்குதலைப் பழங்குடி புனிதக் கடமையாகக் கருதியது. இது பழங்குடி சமுதாய அமைப்பு அனைத்திற்கும் பொதுவான முறையெனக் கருதலாம்.

அமெரிக்க இந்திய இரொகுவாய் (ஐசழஙரழளை) பழங்குடியிடம் காணப்பட்ட இதே வகைப் பண்பாட்டம்சத்தை எங்கெல்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “ஒவ்வொரு பழங்குடியினுள்ளும் ஒருவருக்கொருவர் உதவுவதும் பாதுகாப்பளிப்பதும் குறிப்பாக அந்நியரின் கெடுதிகளிலிருந்து பாதுகாப்பளிப்பதும் கட்டாயச் செயலாகும். ஒவ்வொரு பழங்குடி அங்கத்தவனும் பாதுகாப்பிற்குத் தனது பழங்குடியை நம்பியிருந்தான், அவ்வாறு நம்பியிருக்க வேண்டியிருந்தது. ஒருவனுக்குச் செய்த அநியாயம் முழுப் பழங்குடிக்கும் செய்ததாகக் கருதப்பட்டது. பழங்குடியின் இரத்த இணைப்பிலிருந்தே இரத்தப்பழி வாங்கும் கடப்பாடு தோன்றுகிறது.’ (1972 : 86)

நிறுவனப்படுத்தப்பட்ட சமாதான, பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் உருவாகாத தொன்மைச் சமூக அமைப்பில் பழிக்குப்பழி அவற்றின் இடத்தை நிரப்பியது. எதிரிகளை மன்னிப்பதும் சமரஸம் செய்து கொள்வதும் ஒழுக்கமென அறபுப் பழங்குடியினன் கருதவில்லை. நாடோடி அறபியரிடம் மாத்திரமல்ல உயர்ந்த நாகரிகத்திற்குரியவரெனக் கருதப்படும் பண்டைய எகிப்தியரிடமும் கிரேக்கரிடமும் இக்கருத்தே நிலவியது.

பழங்குடிச் சமூகத்திற்கும் நாகரிகச் சமூகத்திற்குமுள்ள வேறுபாடு போருக்;கு சமாதானத்திற்குமான வேறுபாடாகும். நாகரிகச் சமூகத்தில் சட்டத்தையும் ஒழுக்கத்தையும் நிலைநிறுத்துவதற்கென நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்களைப் பெற்றிராத பழங்குடிச் சமூக அமைப்பு யுத்த சூழலிலேயே தங்கிருக்க வேண்டியிருந்தது. பலாத்காரத்திற்குக் கட்டற்ற உரிமை வழங்கப்பட்டது ஹொப்ஸ் (ர்ழடிடிநள) இதனை “றுயசசந’’ எனக்குறிப்பிட்டார். இது நேரடியான யுத்தத்தைவிட பலாத்காரத்தைப் பிரயோகிப்பதற்கு அன்றிருந்த சுதந்திரத்தையே குறித்தது. நிறுவனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சமாதானத்தையும் மனிதன் தேடுவதில் உள்ள நியாயம் இந்த யுத்த சூழலிலிருந்தே (றுயசசந) தோன்றுவதாக ஹொப்ஸ் கருதுகிறார். (யுளாடநல ஆழவெயபர, 1968 :201)

இஸ்லாத்தின் தோற்றத்தின் பின்னரும் பழங்குடியின் யுத்த சூழல் இருந்தது. இது பண்டைய “முர்ருஆ’’ வின் பழிக்குப் பழி, பதிலுக்குப் பதில் என்ற நிலை நீடித்திருந்ததையே காட்டுவதாகும் (1967 : 24) சமூகத்தில் இரத்தக் களரியை கட்டுப்படுத்தும் அரணாகப் பழிக்குப் பழி இயங்கியதை இஸ்லாம் அறிந்திருந்தது. “விசுவாசிகளே கொலைக்குப் பழிவாங்குவது உங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கிறது’’ (அத் 2 : 178). எனக் குர்ஆன் குறிப்பிட்டது. “அறிவாளிகளே கொலைக்குப் பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை உண்டு’’ என்று மற்றோர் இடத்தில் குர்ஆன் போதும் சமாதானத்தை ஏற்படுத்த உதவும் நிறுவனங்;களற்றநிலையில் பழிக்குப்பழியின் சமுதாயப் பங்கினை அது உணர்த்துகிறது, எனக் கொள்ள வேண்டும்.

எனினும் பழிக்குப் பழி தொடர்ந்தும் அதன் பழைய நிலையில் இருந்து வருவதை புதிய சூழ்நிலை அங்கீகரிக்கவில்லை. பழிக்குப்பழியில் மாற்றம் நிகழ முன்னுரிமை அளிக்கப்பட்டது. பழிக்குப் பழி என்பதிலும் அல்லது பதிலுக்குப்பதில் என்பதிலும் ஏற்பட்ட இம் மாற்றத்தை நபிகள் தமது நீர்திருத்தங்களில் முக்கியப்படுத்தினர். பழிக்குப் பழியே கௌரவமானது என்ற மனோபாவத்தை மாற்றவும் மன்னிப்பும் கௌரவமானதே என்பதை நிலை நிறுத்தவும் நபிகள் பெரிதும் முயன்றனர். இது பழங்குக்கே உரித்தான அடிப்படை ஒழுக்க அமைப்பில்;;;;;;; ஏற்பட்ட மாற்றமாகும். “பண்டைய முர்ருஆவில் நபிகளின் புதிய தீன் ஏற்படுத்திய மாற்றமென இங்னஸ் கோல்ட்ஷியர் இதனைக் குறிப்பிடுவார்.

பழிக்குபழி அதன் பாத்திர முக்கியத்துவத்தை இழந்து கொண்டிருந்தது என்பதே உண்மை. பழிக்குப்பழிக்கு அனுமதி இருந்தபோதும் அதன் கொடூர நடைமுறைகளை குர்ஆனின் கட்டளைகள் தடுத்தன. “பழிக்குப்பழியில் வரம்பு மீற வேண்டாம்’’ (அத், 2 : 278) எனக் குர்ஆன் எச்சரிக்கை செய்ததுடன் மன்னித்தலை வீர செயல் எனவும் வர்ணித்தது.

எவரேனும் பொறுத்துக்கொண்டு மன்னித்து விட்டால் இது
மிக்க வீரம் பொருந்திய காரியங்களில் உள்ளதாகும். (அத், 42:43)

குல அரசியல்

குலம் அல்லது பழங்குடி தனக்கெனச் சில எளிமையான அதிகார அமைப்புக்களைப் பெற்றிருந்தது. ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு தலைவனிருந்தான். அவனைச் “செய்யித்’’ அல்லது “ஷெய்க்’’ என அழைத்தனர். செய்யித் தலைவனாக இருந்தபோதும் அவனது தலைமைத்துவம் மட்டுப்படுத்தப்பட்டதாகும். ஷெய்க்கிடம் சில அதிகாரங்கள் இருந்த போதிலும் தீhப்புக்களை அவன் தனது சுய பொறுப்பில் எடுப்பதில்லை. மற்றவர்களின் ஆலோசனைகளை அவன் பெற வேண்டியிருந்தது.
சமாதான காலத்தில் தமது குலத்தவர் மேய்ச்சல் நிலங்களுக்குச் செல்வதைக் கண்காணிப்பதும், முகாமமைப்பதற்கு பொருத்தமான இடத்தைத் தெரிவு செய்வதும் ஷெய்க்கின் பணியாகும். குலத்திற்குள் ஏற்படும் பிணக்குகளைத் தீர்த்து வைப்பதும் குலங்களுக்கிடையிலான பேச்சு வார்த்தைகளில் குலத்தின் சார்பாகப் பங்குகொள்வதும் செய்யிதைச் சார்ந்ததாகும். எனினும் யுத்த காலத்திற்குரிய தலைமையைக் குலம் வேறொருவருக்கே வழங்கியது. நீதிப் பிரச்சினைகளில் தீர்ப்பளிப்பதற்கு மூதாதையினரின் மரபுகளை நன்கறிந்த போதிய அறிவுள்ள (ஹக்கீம்) ஒருவரே தேர்ந்தெடுக்கப்பட்டார். கொலைகளுக்கான இழப்பீட்டை அல்லது குருதி நிதியைப் (டிடழழன – அழநெல) பெற்றுத்தரும் பொறுப்பு செய்யிதுடையதாகும்.

பதவிகளின் தலைவர்களுக்கு மெய்ப்பாதுகாவலர்கள் இருக்கவில்லை. தலைவனை விளிக்கும் கௌரவச் சொற்களும் கிடையாது. தலைவனுக்கும் குலத்தின் சாதாரண அங்கத்தவர்களுக்குமிடையே “அந்தஸ்து’’ பேதம் இருக்கவில்லை. பாலைவனப் பழங்குடி சமூகத்தின் ஒருமைப்பாட்டை வளர்க்கும் முக்கிய சமூக அலகாக செய்யிமத் செயல்பட்டார்.

இரொகுவாய்ப் பழங்குடிகளின் “சாகெமிற்கும்’’ “செய்யிதிற்கும்;;;;’’ ஒற்றுமைகள் அதிகமுள்ளன. குல ஐக்கியம் சாகெமின் கைகளிலிருந்தது சாகெமிடமோ, செய்யிதிடமோ அவர்களின் ஆணைகளை நிறைவேற்றும் பலாத்காரச் சாதனங்;;;கள் எதுவுமே இருக்கவில்லை. இரொகுவாய்த் தலைவனின் அதிகாரம் தந்தையின் இடத்தையும் தார்மீகத் தன்மையையும் கொண்டிருந்தது என்ற கருத்து செய்யிதிற்கும் பொருந்துவதாகும். அறபுப் பழங்குடிகள் உட்படப் பொதுவாகப் பழங்குடிகள், குல ஒருமைப்பாட்டைக் கட்டிக் காப்பதற்கு பலாத்காரமற்ற ஜனநாயக ரீதியில் முறைகளிலேயே பெரிதும் தங்கியிருந்தனார்.

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...