Tuesday, April 21, 2009

மானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்

அத்தியாயம் 5

சந்திரக் கடவுள்



மெஸெபொட்டேமியாவில் கலாசாரக் கலப்புக் காணப்பட்டதை சூரிய, சந்திர கடவுள்களுக்கிடையிலான குழப்பம் காணப்படுகிறது. சூரியன் அதிக சந்தர்ப்பங்களில் ஆண் கடவுளாகக் கொள்ளப்பட்டுள்ளது. அதே வேளை குறைந்த அளவில் பெண் கடவுளாகவும் கொள்ளப்பட்டுள்ளது. சூரியக் கடவுள் ஒரு தட்டு வடிவமாகவோ அல்லது பல முனைகள் கொண்ட நட்சத்திர வடிவமாகவோ குறியீடாக்கப்பட்டிருந்தது. சந்திரன் வழமையாகப் பெண் கடவுளாகக் கொள்ளப்பட்டத அதே வேளை குறைந்த அளவில் ஆணாகவும் கொள்ளப்பட்டுள்ளது. சந்திரனின் பொதுவான அடையாளம் “இளம்பிறை’’ யாகும் சில சந்தர்ப்பங்களில் அது முழு வட்டமாகவும் குறியீடாக்கப்பட்டிருந்தது. இவ்விரு விண்பொருட்களைப் பற்றிய வேறுபட்ட கருத்துகளுக்கு புதிய கற்கால உழவனின் கருத்தும் செமித்திய மந்தை மேய்ப்போரின் கருத்தும் இவற்றில் கலந்திருந்தமையே காரணமென்பது கெரோல் குவிக்லேயின் கொள்கையாகும்.

தொண்மை வேட்டைக்கார மக்கள் தந்தைத் தலைமையைப் போற்றினர். சூரியனை விடச் சந்திரனை அவர்கள் பிரதானமாகக் கருதினர். வேட்டையாடுபவன் தனது வாழ்வுக்குச் சந்திரன் மிகுந்த பயனை அளிப்பதாகக் கருதினான். அநேக வேட்டையாடும் மக்கள் சந்திரனை ஆணாகவோ, தெய்வமாகவோ கருதினர். இது சூரியனைப் பெண்ணாக்கியதோடு சந்திரனின் மனைவியுமாக்கியது. செமித்திய மந்தை மேய்ப்போர் சந்திரனை ஆண்கடவுளாகக் கொண்டனர். மெஸெபொட்டேமியா இக் கருத்தை செமித்தியரிடமிருந்தே பெற்றது (1979 : 215) விவசாய வாழ்க்கையிலிருந்த மக்களிடையே ஆண்களைவிடப் பெண்கள் முதன்மை இடத்திலிருந்தனர். சூரியனைவிடப் ப+மி அதிக கௌரவத்தைப் பெற்றுக் கொண்டது. புதிய கற்கால உழவர்கள் மழைச் செழுமைமிக்க மெஸெபொட்டேமிய ஆற்றங்கரைச் சமவெளிகளில் நாகரிக அபிவிருத்தியில் பங்கு கொண்டிருந்தபோது சமூக பொருளாதார வாழ்வில் ஆண்கள் பிரதான இடத்தைப் பெற்றனர். இது ப+மித்தாய்க் கடவுளை இரண்டாம் நிலைக்குக் கொண்டு வந்தது. செமித்தியச் செல்வாக்கு அங்கு அதிகரித்தபோது சந்திரன் ஆணாகக் கருதப்பட்டதுடன் சந்திரனின் முக்கியத்துவமும் அதிகரித்தது.

தென் அறேபியா

தேசிய மரபுகள், நாகரிகம், மொழியியல், வாழ்நிலை, புவியியல் வேறுபாடு என்பவற்றின் அடிப்படையில் அறேபியாவை தென் அறேபியா, வட அறேபியாவென இரு பெரு நிலப்பாகங்களாகப் பிரிக்கலாம். அறபுத் தீபகற்பத்தின் முதற் பெரும் நாகரிகத்தை தென் அறேபியாவே பெற்றிருந்தது. தென் அறேபியா போதிய மழைவீழ்ச்சியும் நீர்வளமும் மேய்ச்சல் நிலங்களும் கொண்ட செழிப்பான பிரதேசமாகும். அறேபியாவின் வடபாகமும், வடமேற்குப் பாகமும் பாலை நிலமாகும். மலைப்பாங்கான இவ்வரண்ட நிலப்பரப்பு விவசாயத்திற்கு ஏற்றதன்று. இஸ்லாம் தோன்றிய ஹிஜாஸ் மாநிலமும் பிறந்தகமான மக்கா, மற்றும் யத்ரிப் என்பனவும் இந் நிலப்பரப்பிலேயே அடங்குகின்றன.

தென் அறேபியாவின் யெமன், ஹழறமவுத் போன்ற மாநிலங்கள் செழிப்பான பகுதிகளாகும். செமித்திய இனத்தவர் தமது வாழிடமான தென் ய+ப்ரடீஸ் நதியிலிருந்து குடிபெயர்ந்து குடியமர்ந்த பிரதேசங்களில் அறேபியாவின் இவ்வளமுள்ள பகுதியும் ஒன்றாகும். தென் அறேரியாவைப் பற்றிய வரலாற்று உண்மைகள் 19ஆம் நூற்றாண்டிலிருந்;து தான் வெளி உலகை எட்டத் தொடங்கின. இங்கு நடைபெற்ற அகழ்வாய்வுகள் தென் அறேபியா முன்னேற்றமான நாகரிகத்தைப் பெற்றிருந்ததை உறுதி செய்தன. தென் அறேபியா பற்றிய அறிவு முற்றுப் பெறுவதற்கு இன்னும் வெகுதூரத்தில் உள்ள போதிலும், இஸ்லாம் உதயமாவதற்கு ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே அறேபியாவில் இருந்த பழைமையான நாகரிகத்தை பற்றிய தகவல்கள் இன்று கிடைக்கின்றன.

சபாயின்கள்

தென் அறேபிய நாகரிகம் எவ்வளவு பழைமையானதென்பதைக் காலரீதியில் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. கி. பி. 15 ஆம் நூற்றாண்;டுகளில் தென் ஆறேபியாவை ஆண்ட மன்னர்களைப் பற்றிச் சில வரலாற்றாசிரியர் குறிப்பிட்டுள்ளனர். இக் கருத்து போதுமான நிரூபத்தைப் பெறவில்லை. எனினும், கி.மு. 10ம் நூற்றாண்டளவில் தென் அறேபியாவில் காணப்பட்டன. அரசுகள் பற்றிய உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளன.

தென் அறேபிய மாநிலங்களில் காணப்படும் தூர்ந்து போன நிலையில் உள்ள மாளிகைகளும் அரன்மனைகளும் பாரிய கற்றூண்களைக் கொண்ட கட்டிடத் தொகுதிகளும் அழிபாட்டிலிருந்து தப்பி நிற்கும் பல்வேறு கட்டிடங்களும் இந் நாகரிகத்தின் சான்றுகளாக உள்ளன. இதைத் தவிர நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்களும் வரலாற்று ஆவணங்களும், நாணயங்களும், உலோக உருவங்களும் இங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. மறைந்துபோன இந்நாகரிகத்தைப் பற்றி எங்கெல்ஸ் பின்வருமாறு கூறுகிறார்.

எகிப்தியர்கள், அஸீரியர்கள், ஏனையோர்கள் வரிசையில், ஓரிடத்தில்
நிலையான வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த தென்மேற்கு அறேரியர் ஒரு
நாகரிகத்தைப் பெற்றிருந்தனர் என்பதற்கு அவர்களது
கட்டிடக்கலைச் சாதனைகள் சான்றாக உள்ளன. (எங்கெல்ஸ், 1976 : 105)

கிடைத்துள்ள பழைமையான பதிவுகளின் படி தென் அறேபியாவின் புராதன அரசாக “சபா (ளுயடிய) குறிப்பிடப்படுகிறது. கி. மு. முதல் ஆயிரமாண்டுகளில் தென் மேற்கு அறேபியாவில் பல அரசுகள் தோன்றின. அவற்றுள் மைனியன் (ஆiயெநயளெ) சபாயின் (ளுயடியநயளெ) கத்தாபான் (முயவயடியn) ஹழறவுத் (ர்யனயசயஅயரவ) ஆகியவை தலைசிறந்த ராஜ்யங்களாகும். (ளு. ஆழளஉயவi 1957 : 184) “சபா’’ பைபிள் குறிப்பிடும் ஷீபா இராணியுடன் (அறபியில் பல்கீஸ்) தொடர்புபடுத்தப்படுகிறது. சபஃ (சபா) சமுதாயம் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

மெய்யாகவே அத்தேசங்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான்
கண்டேன். சகல சம்பத்தும் அவள் பெற்றிருக்கிறாள் மகத்தானதொரு
சிம்மாசனமும் அவளுக்கு இருக்கிறது. (அத். 27 : 24)

வரலாற்றுக் கால ஒழுங்கு பற்றிய பிரச்சினையில் மைனியன் அரசே அதிகம் பேசப்பட்டு வந்துள்ளது. மைனியன் அரசு சபாயின் அரசிற்கும் முந்தியதாக அல்லது சமகாலத்து அரசாகக் கருதப்படுகிறது. கி. மு. 400 ம் நூற்றாண்டில் மைனியன் ஆட்சி நிலவியதைக் காட்டும் சான்றுகள் உள. எனினும் கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவில் இவ்வரசு சபாயின் அரசின் அதிகாரத்திற்குள் வந்து விட்டது. கத்தாபீன் உட்பட ஏனைய அரசுகளும் படிப்படியாக சபாயின் அதிகாரத்திற்குள் வந்து சேர்ந்தன.

அனைத்துத் தென் அறேபிய சமுதாயங்களிலும் சாபாயின் சாயின்களே செல்வாக்கும் அதிகாரமுமிக்க சமுதாயமாக வந்துள்ளனர். இவர்களின் ராஜ்யம் தென் யெமனில் அமைந்திருந்தது. இங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் கி. மு 8 ம் நூற்றாண்டிற்கு முன்னரே இவ்வரசு நிலைபெற்றிருந்தமையை உறுதி செய்கின்றன. மேலும் பல கல்வெட்டுக்கள் சபாயின்களின் தொன்மையை நாகரிகச் சிறப்பையும் வளர்ச்சியையும் எடுத்துகக்காட்டுகின்றன. (1957 :185)

சாயிகள் நிர்பணித்த நகரங்களையும் அவர்களின் செல்வவளத்தையும் அல்குர்ஆனின் சபஃ என்ற அத்தியாயம் குறிப்பிடுகிறது. சபாவை மட்டுமன்றி பாரிய வர்த்தகப் பாதையில் அமைந்திருந்த வேறு பல நகரங்களையும் குர்ஆன் குறிப்பிடுகிறது. சபாயின் பொருளாதார நடவடிக்கைகளையும் செல்வாக்கையும் பற்றிக் குர்ஆன் கூறுகையில் இவ்வுலகின் வளமிக்க நகர் என அதை வர்ணிக்கிறது.

மெய்யாகவே “ஸபா’’ (எனும் ஊர்) வாசிகள் வசித்திருந்த இடத்தில்
அவர்களுக்கு ஒரு (நல்ல) அத்தாட்சி இருந்தது. (அதன் வழியாக செல்வோருக்கு) வலப்புறமாகவும் இடப்புறமாகவும் இரு சோலைகளிருந்தன. (இவைகளின் மூலம்) உங்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரிந்தனவைகளைப் புசித்துக் கொண்டு அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள் (இம்மையில்) வளமாள நகரமும் மிக்க மன்னிப்புடைய இறைவனும்
(உங்களுக்கு) உண்டு (அத், 34 : 15)

பொருளாதாரம்

தென் அறேபியா நீர்வளமுள்ள பகுதி, விவசாயம் இதன் பிரதான தொழிலாக விளங்கியது. தென் அறேபியர் அணைக் கட்டுக்களையும் கால்வாய்களையும் உருவாக்கி விவசாயத்தில் உயர்ந்த அபிவிருத்தி ஏற்படுத்தினர். கடமை நோக்கிச் செல்லும் நீரைத் தேக்கி வைப்பதிலும் நீர்ப்பாசனத் திட்டங்களின் மூலம் நீரைப் பயிர்ச் செய்கைக்;கு பயன்படுத்துவதிலும் சபாயின்கள் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தனர். நீர்வள இயலில் அவர்களின் திறமை சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது.

சபாயின் மன்னர்களில் ஒருவர் கி. மு. 750ல் மஆரிபில் நிர்மாணித்த அரிம் அணை தென் அறேபியாவின் பரந்த நிலப்பரப்பிற்கு நீர் வழங்கிய பாரிய அணையாக விளங்கியது. எமன் தேசத்தின் செல்வச் செழிப்பிற்கு இவ்வணையே ஒரு முக்கிய ஆதாரமாக இருந்தது. இதனை அல்குர் ஆன் “மகத்தான அணை’’ என்று வர்ணித்துள்ளது.

நறுமணப் பொருட்களின் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் தென் அறேபியாவே முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. தென் அறேபியச் செடிவகைளில் சாம்பிராணி உற்பத்திக்;குப் பயன்பட்ட மரம் தென் அறேபியாவிற்குச் செல்வத்தையும் கீர்த்தியையும் பெற்றுத் தந்தது. கஸ்தூரி முதலிய ஆடம்பர வாசனைத் திரவியங்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. “சபாயின் மஆரிப் நகர் பண்டைக்காலத்துப் பாரிஸ்’’ என அழைக்கத் தகுதிவாய்ந்தது என்று வரலாற்றாசிரியர் வர்ணித்தனர். இதனை “நறுமண அறேபியா’’ (யுசயடியை ழுனழசகைநசய) எனவும் குறிப்பிட்டனர். (1970 : 10)

விவசாயத்தோடு வர்த்தக நடவடிக்கையிலும் தென் அறேபியர் ஈடுபட்டனர். நறுமண ஏற்றுமதியோடு பாரசீகக் குடாவிலிருந்து முத்துக்களையும் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் பட்டையும் எதியோப்பியாவிலிருந்தும் அடிமைகளையும் மற்றும், யானைத் தந்தம், தங்கம், தீக்கோழி இறகு முதலியவற்றையும் கொள்வனவு செய்து மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். விலைமதிப்புள்ள கற்களுக்கும், தங்கத்திற்கும், வேறு கனிப் பொருள் வகைகளுக்கும் அன்று தென் அறேபியா மிகப் பிரசித்தி பெற்ற நாடாக விளங்கியது.

தென் அறேபியர் வர்த்தகத்திற்கான கடல் மார்க்கத்தையும் தரைமார்க்கத்தையும் பயன்படுத்தினர். செங்கடலைக் கடந்து உலகின் பல பாகங்களுக்கும் நாவாய்கள் சென்றன. இந்து சமுத்திரத்திலும் அவர்களது நாவாய்கள் பிரவேசித்தன. மிகத் தொன்மைக் காலந்தொட்டே யெமன் நாட்டவர் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கடற்பாதைகளை நன்கறிந்திருந்தனர். இந்தியாவின் மலபார் பகுதியிலும், இலங்கையின் குதிரைமலை போன்ற கரையோரத் துறைமுகங்களிலும் அவர்களின் நாவாய்கள் தரித்து நின்றன. கடற் பயணம் ஆபத்து நிறைந்ததாக இருந்தமையால் கடலைவிடக் குறைந்த ஆபத்துள்ள தரைமார்க்கங்களை அபிவிருத்தி செய்வதிலும் இவர்கள் முன்னோடிகளாக விளங்கினர்.

தென் அறேபிய, வட மேற்கு அறேபிய நாகரிகங்களை உருவாக்கியதில் சர்வதேச வர்த்தக நடவடிக்கையும் பாலைவன தரைவர்த்தகப் பாதையும் பிரதான இடத்தை வகித்தன. அறேபியப் பாலைவனம் முழுக்கப் பரந்து கிடந்த வர்த்தகப் பாதைகளில் தைகிரிஸ் ஊடாகப் பலஸ்தீனத்தை நோக்கிச் சென்ற பாதையும் யெமனிலிருந்து செங்கடலோரமாக மத்திய தரைக் கடற் துறைமுகங்;கள் வரை சென்ற பாதையும் இரு முக்கிய பாதைகளாகும். இப்பாரிய வர்த்தகப் பாதைகளிற் பல மக்காவையும் ஏனைய பல நகரங்களையும் ஊடறுத்துச் சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வீழ்ச்சி

கி. பி. 5ம் நூற்றாண்டில் இந்நாகரிகம் முற்றாக வீழ்ச்சியுற்றது. இந்நாகரிகத்தின் வீழ்ச்சிக்;கு எத்தியோப்பியாவினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியாக படையெடுப்புக்கள் ஒரு முக்கிய காரணமாகும். யுத்தத்தினால் வர்த்தகமும் விவசாயமும் பாதிப்படைந்தன. யெமன் வாசிகள் நிர்மாணித்திருந்த பாரிய செயற்கை நீர்ப்பாசனத் திட்டங்கள் யுத்தத்தினால் சீரழிந்தன. யெமன் மட்டுமன்றி முன்னேறிய நாகரிகங்களைப் பெற்றிருந்த வேறு நாடுகளும் யுத்தத்தினால் நிர்மூலமாக்கியுள்ளன. எங்கெல்சின் வார்த்தைகள் இதனைப் பின்வருமாறு கூறுகின்றன.

ஒரு காலத்தில் அற்புதமாகப் பண்படுத்தப்பட்டிருந்த இப்போது வெறும்
நிலமாகவும் தரிசாகவும் கிடக்கும் பல்மைரா, பெட்ரா, எமன் முதலிய
நகங்களிலுள்ள இடிபாடுகள் படுநாசமான யுத்தத்தினால் எவ்வளவு
பெரிய நாகரிகத்தையும் முடியும் என்பதற்கு சான்றாக உள்ளன.
(1926 :126)

முக்கியமாக கி.பி. 200 – கி. பி. 600 நூற்றாண்டுகளுக்கிடையே நடைபெற்ற எத்தியோப்பியாவின் தொடர்ச்சியான யுத்தங்கள் யெமனின் பெருவீழ்ச்சியை நிர்ணயித்தன. ஆயிரமாண்டுகளாகச் செல்வாக்குடன் விளங்கிய இந்நாகரிய நகரம் இஸ்லாத்தின் தோற்றத்தின் போது முற்றாகக் கைவிடப்பட்ட பாழடைந்த வெறும் சின்னமாகக் கிடந்தது. “ரோமானியர் காலத்திலிருந்து செழிப்புற்று விளங்;;கிய தென் அறேபிய நாகரிக நகரங்கள் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் கைவிடப்பட்டுப் போன துர்ந்த இடிபாடுகளாகக் கிடந்தன’ என்ற எங்கெல்சின் கூற்:று இதனை நன்கு பிரதிபலிப்பதாகக் கருதலாம்.

யுத்த அழிவுகள் ஒரு புறம் நிகழ, மறுபுறம் இந்நாகரிகத்தின் வீழ்ச்சியை உள்ளார்ந்த காரணிகளும் நிர்ணயித்தன. இங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள், பயிர்ச் செய்கை நடைபெற்ற மலைச் சரிவுகளிலும் சமவெளிகளிலும் காணப்படும் அடையாளங்கள் என்பன சில உண்மைகளை உணர்த்துகின்றன. மக்கள் தொகை பெருகி வந்ததோடு உணவுப் பற்றாக்குறை எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளும் உருவாகின. உற்பத்தி ஒரே நிலத்தில் நடைபெற்று வந்தாலும் மாற்றீடின்றி ஒரே நிலப்பகுதி மேய்ச்சலுக்காகத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதாலும் உற்பத்தியிலும் விவசாய நடவடிக்கைகளிலும் பெரும் பின்னடைவு ஏற்படலாயிற்று. (1986 : 28)

இவற்றோடு, யுத்தங்களும் மஆரிப் அணை உடைப்பும் யெமன் தேசத்தை மக்கள் வாழ முடியாத நிலப்பலப்பாக்கின. பெரு வெள்ளத்தினால் மஆரிப் அணை இருமுறை உடைந்ததாக வரலாறு கூறுகிறது. இரண்டாவதாக ஏற்பட்ட அணை உடைப்பினால் எஞ்சியிருந்த வளங்களும் நிர்மூலமாகின. நபிகள் பிறப்பதற்கு முப்பது வருடங்களுக்கு முன்னர் இரண்டாவது அணை உடைப்பு நிகழ்ந்தது. இது யெமனின் முழுப் பொருளாதாரத்தையும் சீர் குலைத்தது. மஆரிப் அணை உடைப்பை குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது.

ஆகவே அவர்கள் மஆரிபில் கட்டியிருந்த மகத்தான அரிம்
அணையை உடைக்கக் கூடிய பெரும் வெள்ளத்தை அவர்கள் மீது
அனுப்பி வைத்தோம். (அத், 34 : 16)

யெமன் தேசத்தவர் செய்த பாவத்தின் காரணமாக அவர்கள் இவ்வாறு
அழிக்கப்பட்டதாகவும் சிதறடிக்கப்பட்டதாகவும் மற்றொரு திரு வசனம்
கூறுகிறது. (பார்க்க, குறிப்பு : 2)

ஆகவே (அவர்களையும் அவர்களுடைய நகரங்களையும் அழித்து)
அவர்களைப் பல இடங்களுக்குச் சிதறடித்து (ப் பலரும் இழிவாகப்
பேசக்கூடிய) கதைகளாக்கி விட்;டோம். (அத், 34 : 16)

தென் அறேபிய ராஜ்யங்களில் அரசியல் அமைப்பும் பற்றி ஓரளவு தகவல்களே கிடைத்துள்ளன. அங்கு மன்னராட்சி நடைபெற்றது. மன்னனும் அவனுடன் உயர்குடிகளின் சபையும் இருந்தது. மன்னன் தனக்குப் பின்னர் தனது மைந்தனிடமே ஆட்சியை ஒப்படைத்தான். உயர்குடிகளின் சபை அரசின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தியது. பெரும்பாலும் அரசு நில வடிவத்தைப் பிரதிபலித்தது.

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...