Monday, December 14, 2009

பாலியலின் அரசியல்


நமது சமகால பெண் விடுதலை இயக்கங்களில் நிலவுகின்ற பாலியல் வகை மாதிரிப் பாத்திரங்கள் பாலியல் வன்முறை, தொல்லைகள், நிறுவனமயமாக்கப்பட்ட தாய்மை, வீட்டு வேலைமுறையிலும் உழைப்புச் சந்தையிலும் பெண்களின் நிலை இன்னும் பல விடயங்கள் குறித்தும் அக்கறையோடு அலசுகின்ற ஏராளமான எழுத்துக்களைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தப் பிரச்சனைகள் பலவும் ஒரு வரலாற்றுக் கட்டத்திற்குள் வைத்து ஆராயப்பட்டிருக்கிறது. பெண்ணிய ஆய்வுகள் இத்தகைய பிரச்சனைகளை நோக்கும் முறையையே மாற்றியமைத்திருக்கிறது.


இந்தக் கட்டுரை தற்போது நடைமுறையில் உள்ள பாலியல் வழக்கங்கள், அவற்றின் சமூகப் புலம் குறித்து அலசி ஆராய்ந்து விளக்கிறது. கார்ல்மார்க்சின் மதிப்பு விதி குறித்த கோட்பாட்டை ஒத்தமுறையில் ஓரினச் சேர்க்கை மற்றும் ஆண்-பெண் சேர்க்கை பால் உறவுகள் ஆராயப்படுகிறது. ஆண்-பெண் சேர்க்கை உறவுகள் பெண்களின் பாலியல் இன்ப நுகர்வு நிறைவெய்வதைப் பொருட்படுத்தாது, ஆண்களின் இன்ப நுகர்ச்சியை திருப்தி செய்யும் வகையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன என்ற முடிவுக்கு கட்டுரை வருகின்றது. இதற்கு மாறாக, ஓரினச் சேர்க்கையாளரின் பாலுறவு இயக்கங்கள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் இருவருக்குமே நிறைவு தருவதாக இருப்பது தெரிய வருகிறது. ஆதிக்கம், அதிகாரம், ஏற்றத் தாழ்வுகள் அற்ற ஒரு பாலியல் அமைப்பைக் கட்டமைக்க வேண்டுமென்றால் நிலவுகின்ற ஆண்-பெண் சேர்க்கை உறவுகளின் கட்டமைப்புகளிலிருந்து விலகி புணர்ச்சியை பாலியல் நடவடிக்கையின் மையமாக வரையறுக்காத ஒரு பாலியல் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும், கட்டமைக்கப்பட வேண்டும்.


இன்னும் சொல்லப் போனால் Ann Kodrs (1971) “The myth of the viginal orgasm” மற்றும் Shese hires the hires report (1976) குறித்த தவறிய நம்பிக்கை என்ற புத்தகமும் அறிக்கையும் பெண்பாலுறவு பற்றிய முக்கிய இரண்டு ஆய்வேடுகளாய் நாம் கருத்தில் கொள்ளலாம். ஏனெனில் இவ்விரண்டுமே பெண்பாலுறவு என்ற ஒன்றை அரசியலோடு பின்னிப் பிணைத்த மனித உயிரியல் தொடர்பான ஒரு கூட்டுக் கலவையாக பாவிக்கின்றன.


சொந்த ”அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல்” நிலையில் இருந்து முன்னேறி ஆண்கள் எப்படி பாலுறவு என்ற அமைப்பை தங்களுக்குச் சாதகமாக உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள். குறிப்பாக சொல்லப் போனால் ஷெய்ட் பல உதாரணங்கள் மூலம் அதிகமாக புழக்கத்தில் இருக்கும் பாலுறவு முறையில் ஆணுடைய திருப்தியே மேலானதாக கருதப்படுகிறது என்பதை ஹெய்ட் தன்னுடைய அறிக்கையில் விளக்குகிறார். பாலுறவு முறைகளே சமுதாயத்தில் உருவாக்கப்படும் கட்சியமைப்புகள் என்று கூறும் ஹெய்ட்டினுடைய தெளிவான பார்வையே அவருடைய ஆய்விற்கு ஒரு இன்றியமையாத சிறப்பை வழங்குகிறது.


அவருடைய புத்தக தரவானது நன்முறையிலான பாலியல் செயற்பாடுகளை தெளிவாக விவாதிப்பதோடு திருமணம் ஆக்கப்படாத பாலுறவு முறையே அமைவதையே நோக்கமாக கொண்டு பிரயோகித்த போல ஆண்வழி சார்ந்த சமூகத்தின் பாதிப்போடு கூடிய நாம் பாலுறவு முறையே விரும்புவதற்கு முறையான ஒரு பாலுறவு தொடர்பான மேலும் ஒரு ஆய்வை வழங்குவதும் மறைக்கப்படும். அல்லது வெளியில் பேசப்படாத சில பாலியல் நுனுக்கங்களை வெளியே கொண்டு வருவதும் என்னுடைய நோக்கமாகும். என்னுடய இந்த முறையை இருபாலுறவின் 'சரிசம இன்பம்” என்று கருதப்படும் ஒன்றைப்பற்றி நன்றாக ஆராய்வதன் மூலம் இருபாலினரிடையே இருக்கும் சமத்துவமற்ற தன்மையை திரைவிலக்கி காட்ட விரும்புகிறேன். சல்லாபமுறை ஆண்-பெண் உறவை மட்டுமே பிரத்தியகப்படுத்தி சாட்டுப் போக்கையும் ஆண்-பெண் சேர்க்கையில் பெண் அடையும் இன்பம் இரண்டாம் தரமாக கருதப்படும் நிலையையும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்ற கோட்பாடாக பரப்பி பழக்கப்படுத்தி வந்திருக்கிறது.


அதாவது ஆண்-பெண் சேர்க்கைதான் பாலுறவு முறை என்பது போலவும் அதில் மிகுதியான அன்பு இன்பம் தயக்கப்­படுவதாலும் அதுவும் ஈடுபாட்டின் இருபாலருக்குமே சமபங்கு திருப்தி கிடைப்பதாகவும் சல்லாபக் கோட்பாட்டின் படி நம்பப்படுகிறது. எனினும் இப்படிப்பட்ட பிரகடனங்கள் இருந்தாலும் உண்மையில் ஆண்-பெண் உறவென்பது சமத்துவமற்ற ஆற்றலுடன் கூடிய உறவாகவும் ஆண்களுக்கு மட்டுமே பாலுறவில் பெருமளவு இன்பம் வழங்கக் கூடிய முறையாகவும் திகழ்கிற அரங்கத்தை ஒத்ததாக இருக்கிறது.


உறவு பிணைப்பின் மூலம் ஆண்களுக்கு மட்டுமே பெருமளவு பாலின்ப பங்கை ஒதுக்கின்ற சூழலோடு பாலுறவில் பெண்கள் பொருளாதார ரிதியில் ஆண்களை சார்ந்த நிலையின் தாக்கம், ஆண்களின் வன்முறை, காழ்புணர்ச்சியோடு ஓரினச்சேர்க்கையா­ளரை பழிவாங்கும் சமூகப் போக்கு, இப்படிப் பழிவாங்குவதன் மூலம் சமமற்ற அண்-பெண் சேர்க்கை முறையை சமூகம் பாதுகாத்து வளர்க்கும் விதம் என்ன விற்றை எல்லாம் வியக்க இருக்கிறேன். இந்த சூழ்நிலையில் பின்னணியில் ஓரினச் சேர்க்கை பற்றியும் பார்க்கலாம். அவ்வுறவு முறைகளைப் பற்றி ஆராயலாம்.


ஓரின சேர்க்கை உறவு முறையின் படி இப்பாலுறவு முறையில் ஈடுபடும் அடுத்தவரை தங்களுடைய சக சமுதாய உறுப்பினராகவே பார்க்கும் மனோபாவத்­தோடு பாலுறவு இன்பம் சம அளவில் நுகரப்படுவதாக தெரிகிறது. இதுவே இக் கட்டுரையின் மையக் கருத்தாகும். இருப்பினும் இத்தகைய ஓரின உறவு பழக்கத்தை தடுக்கும் அல்லது கட்டுப்படுத்­தும் நோக்கத்தில் அப்படிப்பட்ட உறவில் ஈடுபடுவோர் பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் மூலமாக ஒடுக்கப்படுகிறார்கள். எனவே தான் ஓரினச் சேர்க்கையாளர்களின் சுதந்திரத்தைப் பரப்பும் இயக்கத்தின் இன்றியமையாமையையும் இந்த இயக்கத்தின் செயற்பாடுகள் எந்த அளவிற்கு எல்லா பெண்களுக்குமே (ஓரின அல்லது ”நேரான” உறவுப்பழக்கமுள்ள­வராக இருந்தாலும்) தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை தெரிவாக்க விரும்புகின்றேன். இறுதியாக பாலுறவு முறை சீர்திருத்தப்பட்டு ஒரு புதிய உறவு முறை மலர வழிவகுக்கும். சமூக அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை முன்மொழிய இருக்கின்றேன். இந்தக் கட்டுரை எப்படி ஆண் சார்ந்த சமூக உறவுமுறையை உருவாக்கியிருக்ககூடும் என்ற கேள்வியைப் பற்றி ஆராய்ந்து எடுக்கும் நோக்கம் அல்ல. இந்த ஆண் ஆதிக்க உறவுமுறைக்கு வழிவகுத்திடும் கருத்துக்களை நம்மால் யூகிக்கத்தான் முடியும்.


பெண்களை ஒடுக்கும் சூழலின் போக்கை குறித்தும் சமத்துவமற்ற நிலை என்பது ஆண்களின் அதிகார மிரட்டலா அல்லது பெண்களின் பொருளாதாரப் பலவீனத்தாலா என்பவற்றைக் குறித்தெல்லாம் அடிக்கடி பெண்ணிய வாதிகளுக்கு இடையே விவாதங்கள் நடந்து வந்திருக்கின்றன. இப்படிப்பட்ட ஆய்வுகள் பாலியல் இயல்பையும் பெண்ணிய வாதிகளையும் பற்றி நன்கு விளங்கிக் கொள்ள உதவுகிற அதேவேளையும் தற்கால சமூக யதார்த்த நிலையை மையமாகக் கொண்ட ஒரு அலசல் தேவைப்படுகிறது. இந்த கட்டுரையின் முக்கிய நோக்கமே அப்படிப்பட்ட தற்கால பாலியல் நடைமுறை மற்றும் அதனுடைய சமுதாய பின்னணி போன்றவற்றைக் குறித்து விவாதிப்பதுதான். எப்படி ஆணை மையப்படுத்துகிற ஈரினச் சேர்க்கை ஆணுக்கு எந்த முக்கியத்துவம் கொடுக்கிறது அதை சமுதாயம் எந்த அளவிற்கு பின்பற்றுகிறது என்பதை எல்லாம் வெறுப்புதன் தோன்றுகிறது. இந்நிலைமையின் அடிப்படையை அலசுவது இக்கட்டுரைக்கு அப்பாற்பட்டதாகும்.



ஈரின உறவு முறைகள்:-

Shere hite (1976) சியர் ஹெய்ட்டின் அறிக்கையில் பெண் பாலுறவு குறித்த தேசிய அளவிலான கருத்தாய்வின்படி கணக்கில் எடுக்கப்பட்ட பெண்களில் 82 சத வீதத்தினர் தாம் சுய இன்பம் அனுபவிப்பதாகவும் அவர்களே 95 சதவீதம் பாலுறவு பரவச நிலையை சுலபமாக அடிக்கடி அனுபவிக்க முடிந்ததாகவும் தெரிவித்தார்கள். இன்னும் சொல்லப் போனால் ஹெய்ட்டின் கண்டுபிடிப்பின்படி பாலுறவு பரவச நிலையையும் சுய இன்பத்தையும் ஒன்றாகவே பெண்கள் கருதுகிறார்கள். சுய இன்பத்தின் பொழுது பெண்கள் பரவச நிலையை அடைகிறார்கள் என்ற உண்மை பெண்கள் பாலுறவில் உணர்ச்சிகளை சரியாக வெளிப்படுத்­தாதவர்கள் என்றும் பெண்கள் பரவச நிலையை ஆற்றல் அற்றவர்கள் என்றும் நம்பப்படும் தவறான வாதத்தை இருக்கிறது. இந்த நம்பிக்கை கூற்றோடும், யூகத்தோடும் தொடங்கி மேலும் ஹெய்ட் இருபால் உறவுமுறை கூறுகளான


( Fore play Peneteration )


செயல்பாடுகள் பெண்களுக்கு எதிராகவே இருந்து வருகின்றது என்று விளக்குகிறார்.

ஹெய்ட்டின் அய்வின்படி 30 சாவீதப் பெண்கள் மட்டும் தான் பாலுறவு பரவச நிலையை ஆண், பெண் புணர்ச்சியின் பொழுது அடைவதாக கூறியுள்ளார்கள். அத்தோடு அப்பரவச நிலை என்பது வழக்கமாக பெரும்பாலும் பெண்ணின் கணக்கின் முயற்சிகளின் மகளிர்சத்தை தூண்ட எடுத்துக் கொள்ளப்படும் பெண்ணின் கணக்கிட்ட ஒரு துல்லியமான முயற்சியின் விளைவாகத்தான் பெண்கள் பரவச நிலை எட்ட முடிகிறது. அதிலும் குறிப்பாக இந்த தூண்டல் ஆணினுடைய பொது உறுப்பால் தூண்டப்படுவதால் மட்டுமே வழக்கமாக அடைய முடிகிறது. புணர்ச்சியின் போது ஆண் பிறப்பு உறுப்பு உள்ளே செலுத்தப்படுவதால் மட்டுமே மறைமுகமாக ஏற்படுத்தப்படும் தூண்டல் பெண்களுக்கு பரவச நிலையை உண்டாக்குவதற்கு போதுமானதாக இல்லை. (ர்வைந 1976 - 168) அதே சமயம் புணர்ச்சி ஆண்களின் பால் இன்பத்தை நல்ல முறையில் அணுகுகிறது. புணர்ச்சியின் போது ஆண் உறுப்பு பெண் மர்ம உறுப்பு சுவர்களின் உராயச் செய்வதன் மூலம் சுய இன்பத்தின் போது பெறப்படும் தூண்டல் உறுதி செய்யப்படுகிறது. எனவே வழக்கமாக ஆண்கள் புணர்ச்சியின் போது பரவச நிலையை அடைவார்கள். இது ஆண்களின் உடல் சார்ந்த உயிரியல் அமைப்பிற்கு உகந்ததாய் இருக்கிறது. இப்படி செய்வதால் எல்லா ஆண்களும் எப்பொழுதும் புணர்ச்சியின் பொழுது பரவச நிலையை அடைகிறார்கள் என்று பொருளாகாது. எடுத்துக் காட்டாக ஆண்கள் தம்முடைய விரைப்புத் தன்மையை புணர்ச்சியின் போது இழக்கலாம். இருந்தாலும் ஆண்களிடையே இந்த பாலுறவில் செயலாற்றும் திறனில் ஏற்படும் கோளாறும் சமுதாயத்தில் அதிகரிக்கப்பட்டு நிறுவனமாக்கப்பட்டுள்ள காலம் காலமாய் பின்பற்றப்பட்டு வருகின்ற பாலியல் முறையின் ஏற்றத் தாழ்வான நிலையால் ஏற்படுவதில்லை. அண்களுடைய பாலியல் பிரச்சனைகள் பேசிய (ஆண்மைத் தன்மையின் மேல் மலட்டுத் தன்மை, போதை மருந்து பழக்கம், மது அருந்தும் பழக்கம், பெருஞ்சோர்வு, தளர்வு நிலை) பூதாகமான பிரச்சனைகளின் விளைவாக தோன்றுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. (hite- 1981-402)


மற்ற பல்வேறு வகையான பாலுறவு வெளிப்பாடுகளை விட ஆண், பெண் புணர்ச்சி வடிவம் செலுத்துகிற ஆதிக்க நிலையும் புணர்தல் ஒன்றுதான் பாலுறவு இன்பத்தின் அடிப்படை இலக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையும் பெண்களை ஒடுக்குகிற கோட்பாட்டையும் பாலியல் அல்லது சமுக உறவு முறைகளையும் தான் கொண்டு இருக்கிறது. ஈரினச் சேர்க்கை உறவு முறை வகுக்கப்பட்ட விதத்தின் படி ஆண்கள் விந்து வெளியேற்றலுக்கான வழியை வரையறையைச் செய்யப்பட்ட பாலுறவு முறைகளால் ஆண்கள் பாலுறுவு பரவச நிலையை பெருமளவு அடைகிறார்கள். ஆனால் அதே சமயம் மகளிர் கந்து தூண்டல் என்ற ஒன்று வெறும் பாலுறவு சல்லாப நிளையாட்டாகவே கருதப்படுகிறது. அதாவது வெறும் சாதாரண நேரம் கடத்தும் இன்ப விளையாட்டாகவே கருதப்படுகிறது. 'சல்லாப கோரிக்கை விளையாட்டு” என்ற இந்த வார்த்தையே (Fore play) பாலுறவில் அது அவ்வளவாக முக்கியம் இல்லை. உண்மையில் ஆணுறுப்பின் ஊடுதலை சுலபமாக்குவதற்காக நடத்தப்படும் ஒரு முன்கூட்டிய விளையாட்டு என்றுதான் குறிக்கிறது. இந்த இன்ப கேளிக்கை விளையாட்டைக் குறிக்கும் இந்த விளக்கம் மகளிர் கந்து தூண்டப்படும் விதத்தை மற்றும் அதன் முக்கியத்துவத்தையே பாதிக்கிறது. உதாரணமாக ஷெய்ட் கூறுவது போல புணருதல் ஒன்றுதான் பாலுறவில் முக்கிய செயலாக கருதப்படுவதில் ஆண்கள் பொதுவாக தங்கள் விறைப்புத் தன்மையை பாதுகாத்துக் கொள்ளவே பெரிதும் பதட்டமடைகிறார்கள். எனவே அவர்கள் புனர்வதற்கு முன்பாக நடக்க வேண்டிய மற்ற நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ள எத்தனிக்கிறார்கள். அச்செயல்களுக்காக சிறிதளவு கால அளவை செலவிடுகிறார்கள்.


ஆய்விற்காக கணக்கில் எடுக்கப்பட்­டவர்களில் 45 சத வீதத்தினர் மட்டுமே சம்பந்தப்பட்ட மற்றவாpன் செய்கையின் மூலம் காமப்பரவச நிலையை உணர்ந்திருப்பதாகவும் அனால் 95 சத வீதத்தினர் இக்காமப் பரவச நிலையை சுயஇன்பத் தூண்டல் மூலமே அடைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. (hite – 1972-209) மேலும் பெருமளவு எண்ணிக்கையிலான ஆண்கள் சம்பந்தப்பட்ட பெண் கூட்டாளிகளுக்கு எந்தவிதமான மகளிர் கந்து தூண்டல் 'இன்பத்தையும் (Clitorolstrimutation) வழங்கவே இல்லையாம். (1976 - 212) இப்பிரச்­சனையின் அடிப்படையே பிரத்தியேகமாக அண்,பெண் சேர்க்கை மட்டும் தான். பாலுறவு முறை என்று வரையறுக்கப்பட்ட நிலைமைதான் இந்த ஆண் சமூக மூடநம்பிக்கையின் விளைவாக ஆண் காம பரவச நிலைக்கு முழு உத்திரவாதம் கொடுக்கும் ஒரு பாலுறவு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. மகளிர் பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும் கந்து தூண்டல் ஆண்களின் விருப்பத்திற்கு ஏற்ப எப்போதாவது நடத்தப்படுகின்ற அல்லது எப்போதுமே நடத்தப்படாத செயலாகவும் தான் கருதப்படுகிறது.


தற்போது நடைமுறையில் உள்ள ஆண், பெண் பாலுறவு முறைக்கு இருபாலருக்குமே ஒருவருக்கொருவர் 'சம அளவில் முழு இன்பம்” வழங்கக் கூடியது என்ற நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளச் செய்ய சமூக அங்கீகாரம் பெற்ற குடும்ப முறை புணர்ச்சியை உணர்த்திக காட்டுகின்ற வக்கிரமான கலாச்சார சூழலில் போன்றவற்றின் மூலம் பெரும்பாலான மககள் காலம் காலமாக பழக்கப்பட்­டிருக்கிறார்கள். ஆனால் இந்த பாலுறவு சூழ்நிலை தலைகீழாய் மாறுவதாய் கற்பனை செய்தால் அதாவது ஆண்களில் ஒரு சிலருக்கு மட்டுமே எப்போதாவது ஆணுறுப்புத் தூண்டப்பட்டு அதன் மூலம் பரவசநிலை அடைந்ததாகவோ அல்லது இப்பரவச நிலையை ஆண்கள் எட்டாத நிலைமை இருப்பதாகவும் அதேசமயம் பெண்கள் எப்போதுமே மகளிர் கந்து தூண்டப்பட்டு பரவசநிலையை பெரும்பாலும் அல்லது எப்போதும் அடைவதாகவும் இருந்தால், அடையும் பரவச நிலையில் இருக்கும் விகிதாசார ஏற்றத்தாழ்வு அனைவருக்கும் மிகவும் தெளிவாக புலப்படும் அல்லவா? ஆனால் பாலுறவில் அண்களை மேலானதாய் மதித்து பெண்களை இரண்டாம் தர அல்லது முக்கியத்துவமற்ற நிலைக்கு தள்ளுகின்ற போக்கு நம் சமுதாயத்தில் நிலவுவதால் மிகச் சிலர் மட்டுமே தற்போது நடமுறையில் உள்ள பாலுறவு பரவசநிலை ஏற்றத்தாழ்வு குறித்து அதிர்ந்து போகிறார்கள். துரதிஸ்டவசமாக பாலுறவு நனடைமுறையில் இருக்கும் இந்த ஏற்றத் தாழ்வான நிலைமை குறித்த பெரும்பாலான விவாதங்கள் வெறும் விவரித்தல் நிலைமையோடு நின்று விடுகின்றன. இத்தனை விவாதங்கள் பிரச்சனைகளை விபாpத்து பேசும் நிலையை கடந்து போவதில்லை. இந் நிலைமைக்கு காரணமே மாக்ஸின் மூலதன கொள்கைக்கு நிகரான ஒரு பரந்த ஆற்றல் வாய்ந்த பாலுறவு முறையில் சுரண்டல் நிலையை நன்கு விளக்கும் ஒரு கோட்பாட்டு வரையறை உருவாக்கப்படாததுதான். மதிப்பு ரிதியான மாக்ஸின் தொழில் கொள்கை பொருளாதாரச் சுரண்டலை மிகவும் தெளிவான வகையில் விவாதிக்க வழிவகை செய்திருக்கிறது. தொழில் ஆற்றல் என்பது அத்தகைய மதிப்பிற்கு ஏற்ற வாங்கவோ அல்லது விற்றகவோ படுகிறது. அதன் மதப்பு மற்ற விற்பனைப் பொருள்களைப் போலவே அதன் உற்பத்திக்குத் தேவையான வேலை நேரத்தைப் பொறுத்தே நிர்ணயம் செயயப்படுகிறது. ஒரு தொழிலாளியின் சராசரி தின வருமானம் ஈட்டப்படுவதற்கு ஆறுமணி நேரமானால் சராசாயாக அவன் ஆறு மணி நேரம் நிச்சயம் வேலை செய்து ஆகவேண்டும். அவனுடைய உழைப்பத்­திறனை வெளிப்படுத்துவதற்கு ஒரு நாளில் சராசரியாக ஆறு மணி நேரம் உழைக்க வேண்டும். அவனுடைய தொழிலாற்றல் என்ற விற்பனை விளைவாகத்தான் அடைந்து நன்மையை வேறு வகையில் ஈடு கட்டி விடுகிறான். எனவே அவனுடைய வேலை நாளுக்குத் தேவையான நேரம் அறு மணிநேரம் என்று கணக்காகிறது.


எனவே வாங்கிய அளவிற்கு கொடுக்கிற சமஅளவு கொள்கையாக (Caeteris parivus) இது ஆகிறது. இந்த யுகத்தை அனுபவமாக கொண்டுதான் நாம் கிரகித்துக் கொண்டு இருந்தோம். ஆனால் ஆனால் இதில் வேலை நாளில் அளவு அல்லது எந்த அளவு வேலை நாள் நீடிக்கப்பட வேண்டும் என்பது குறித்த தெளிவான வரையறை இல்லை. (1967 : 231) முதலாளித்து சமுகத்தில் தொழிலாளிகளின் உழைப்புத்திறனுக்கு பதிலாக இந்த வேலை நாளின் கால அளவு 'அடைந்து லாபம் அல்லது மதிப்பை ஈடுகட்ட தேவையான” நேரத்திற்கு மேலாக நீடிக்கப்படுகிறது. இதைத்தான் மிகுதியான இலாபத்தை முதலாளிகளுக்கு விளைவிக்கிற, உழைப்பை சுரண்டுகிற போக்காகும் என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார். மார்க்சின் இந்த மதிப்பு ரிதியான தொழில் கொள்கையைப் போன்று ஒரு கோட்பாட்டை பாலுறவு நடைமுறையில் இருக்கும் ஏற்றத்தாழ்வை அலச உதவும் வகையில் உருவாக்க முடியுமா என்று நாம் இப்போழது பார்க்கலாம். உதாரணமாக ஊதியத்திற்கு தக்க வேலை என்று ஏற்படுத்துகின்ற உறவு முறையை வாங்கி வேலைத்திறனை விற்பதால் திணிக்கப்டும் சமத்துவமற்ற சமூக உறவு முறைகள் 'சுதந்திரம் மற்றும் சமத்துவம்” போன்றவற்றில் புதைக்கப்­பட்டிருப்பதை நாம் நன்கு காண முடியும். பாலுறவு பிரச்சனைகளை இந்தக் கோணத்தில் இருந்து நாம் அனுகினால் ஆண்களும் பெண்களும் கூட சுதந்திரமான சமத்துவமான உறவில் நுழைவதாக அளிக்கும்மாயத் தோற்றத்தை நம்மால் உணர முடியும். இருப்பினும் இருபால் கூடலில் கையாளப்படும் முக்கிய முறையே பெண் காம இச்சசைக்கு எதிராக அல்லது அதைப் பொருட்படுத்தாது ஆண் இச்சையத் திருப்திப்படுத்தும் வண்ணமே அமைந்திருக்கிறது. பாலுறவு என்பதே ஆண், பெண் புணர்ச்சியின் மூலமே வெளிப்படுத்தப்பட்டு வந்திருப்பதால் பெண்களை விட ஆண்களே பெருமளவு காம இன்பத் தூண்டலை பெறுகின்றனர். உண்மையில் ஆண், பெண் பாலுறவு முறையின் படி பெரும்பாலும் அண் காமபரவச நிலையை எட்டியபின் பெண்ணின் பரவச நிலையும் முடிவுக்கு வந்தாக வேண்டும்.



எனவே ஆண், பெண் உறவு முறை ஒரே அளவு இன்பத்தை இருவரும் நுகரச் செய்யும் தன்மை உடையதாக தோன்றினாலும் உண்மையில இது ஒருவர் இன்பத்தின் அப்பாற்பட்டதேயாகும். ஆண், பெண்ணிடம் இருந்து பெற்ற காமத் தூண்டலை மிகச் சிறிய அளவில் தான் திரும்பத் தருகிறான். இதனால் பெண் பரவச நிலையை அடைவது என்பது மிகவும் அரிதாகவே இருக்கிறது. பெண்ணின் பாலுறவுச் செயல்கள் யாவுமே ஒரு குறிப்பிட்ட சமூக உறவுமுறையின் பின்னணியில் நிர்ப்பந்திக்கப்பட்ட சில குறிப்பிட்ட சூழ்நிலைகளோடு மட்டுமே இழையோக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தனித்துவத்தோடு தானாக நிகளும் வெளிப்பாடு என்ற நிலையில் இருந்து விலகி ஆண், பெண் உறவு முறையானது முன்கூட்டியே சமுதாயத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகவும் மிகவும் வரையறுக்கப்ட்ட கட்டுமானங்களோடு கூடிய ஒரு கட்பாயமாகவும் தான் இருக்கிறது.


இப்படிப்பட்ட ஈரினச்சேர்க்கையின் கூறுகளும் நிகழ்த்தப்படும் விதமும் ஆண் ஆதிக்க சமூக உறவு முறையின் பிரதிபலிப்பகளாகவே இருக்கினறன. தேனிவாகப் பார்த்தால் பாலுறவு நடைமுறையில் சமத்துவமின்மை என்பது அடிப்படையில் பெறப்படும் இன்பத்தின் சமத்துவமின்மையோடுதான் தொடர்புடைய­தாய் காணப்படுகிறது. துரதிஷ்டவசமாக காம இன்ப அளவை தனிமனிதர்களுக்கிடையே ஒப்பிட்டு வரையறை செய்வதோ அல்லது ஒவ்வொரு தடவையும் எந்த அளவு ஆத்மதிருப்தியோடு ஒரு தனிமனிதன் காம பரவச நிலையை அடைகிறான் என்பதை அளப்பதோ மிகவும் அரிதான செயலாகும். இருப்பினும் காம பரவச நிலை (விந்து, மற்றும் மதனநீர்) ஒன்றுதான் பாலுறவில் இன்பத்தை நன்கு பார்க்க மற்றும் கணக்கிட முடியும் ஒரே வெளிப்பாடாகும். காமத்தில் இப்பரவசநிலையை இருபாலருமே எட்டமுடியும். மேலும் இப்பரவச நிலைதான் காமத்தில் அடையப்பட வேண்டிய மற்றும் விருப்ப படுகின்ற விளைவாக கருதப்படுகி­றது.


இந்தப் பின்னணியில் என்னுடைய ஆதங்கம் என்னவெனில் ஆண், பெண் கூடலில் காமப்பரவசநிலையை அடையும் திறனில் ஆண்கள் மற்றும் பெண்களுக்­கிடையே இருக்கும் குறிப்பிடத்தகுந்த வேறுபாடு ஆற்றலில் சமத்துவமற்ற உறவு முறையைத்தான் தெளிவாக காட்டுகிறது என்பதுதான், தரம், தன்மை போன்ற அடிப்படைகளில் பெண்கள் அண்களைவிட சிறந்த உயர்ந்த நிலையில் பரவச நிலையில் பரவசநிலை அடைகிறார்கள். இது அவர்கள் அண்களைவிட காலஅளவு விகிதாசாரத்தில் குறைந்து இருப்பதை ஈடுகட்டிவிடுகிறது என்று ஒருவர் விவாதித்தால் அன்றி மற்றப்படி உறுதியாக அண், பெண் கூடல் முறையில் அண்களின் சுரண்டல் மற்றும் அண்கள் பெண்கள் இன்பத்தை புறக்கணித்து அளவில் அதிகமாக பரவச நிலையை அடையும் நிலை போன்றவற்றை குறித்து ஒரு பெரிய முறையீடு பதிவு செய்யும் அளவற்கு இப் பிரச்சனை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஈரினச் சேர்க்கை உறவு முறையில் பெண்கள் ஒட்டகப்படுகின்ற கோட்பாட்டை வேறு எந்த கோட்பாட்டை பயன்படுத்தி பெண்களை விட அண்கள் ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகளவு காம இன்ப பரவசநிலையை அடைகிறார்கள் என்ற எதார்த்த நிலையை கருத்தளவில் விலகிக் காட்ட முடியும்? சூழ்நிலையை பாலுறவுச் சுரண்டல் என்று கூறுவதால் மாக்சின் மதிப்புக் கொள்கையை படுக்கையறையில் பயன்படுத்த வேண்டும் என்று பொருளாகாது. மதிப்பு ரிதியான மார்க்சின் தொழில் கொள்கையை வியாபாரத்தை உறவுகளுக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும். இருந்தாலும் பெண் அடையும் இன்பத்தை புறக்கணித்து அதிக அளவு விகிதாசாரத்தில் அடையும் அண்பரவசநிலை என்ற ஒப்பீடு மிகவும் பயனுள்ளதாகிறது. ஏனெனில் இதன் மூலம் ஆண்களை பால் ஆதிக்க உணர்வு கொண்டவர்கள் என்று பொருட்படுத்தி காட்ட முடியும்.


ஈரினச் சேர்க்கையின் பெரும்பாலான அமைப்பு முறையினால் ஆண்கள் அடையும் ஆதாயத்தால்தான் இவர்களுக்கு இந்த ஆதிக்க போக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். இப்படி அவர்கள் அடயும் ஒரு முக்கியமான இலாபம் அவர்கள் பாலுறவின் போது ஈரினச் சேர்க்கையில் பெருமளவு உடல் தூண்டல் இன்பம் பெண்களை விட அதிக அளவு அடைவதுதான். அதன் விளைவாக முன்பு சொன்னது போலவே ஆண்கள் மட்டுமே பெருமளவு காம பரவச நிலையை பெண்களை விட அடைகிறார்கள்.


பெண் அடையும் இன்பத்தை புறகணித்து சுரண்டி ஆண் அனுபவிக்கும் இந்த பரவச நிலையை காரணமாக கொண்டு அபூர்வமாக சில பெண்கள் பாலியல் மருத்துவர்களை அணுகியும் இருக்கிறார்கள். (Ress:1978 - 2) அவ்வேளைகளில் அப்பெண்கள் மனரீதியான உளைச்சலையும், எhpச்சலையும் அதன் விளைவால் ஏற்பட்ட உடல் சார்ந்த அறிகுறிகளையும் எடுத்துக் காட்டி திருமணத்தை குறித்த தங்கள் அறிகுறியை தெரிவித்திருக்கிறார்கள். (Bornar-1971 :148 to 152) இங்கே இருண்டு முக்கிய கருத்துக்கள் கவனத்திற்குரியவை முதளில் ஈரினச்சேர்க்கை நடைமுறையில் அண் இன்று திருப்தியை அதிகப்படுத்துவதற்கான வழிவகைகள் கூட இல்லை. ஏனெனில் நடைமுறையில் சமூதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பாலியல் உறவு முறைகள் அண்களின் விருப்பத்­திற்கேற்ப பாலின்பம் அனுபவிக்கும் சுதந்திரத்தைக் கூட ஊக்குவிப்பதில்லை. ஆண்கள் ஒரு சீரான கால அளவில் அல்லது அடிக்கடி வாய் நுகர் இன்பம் (Fellotio) தாங்கள் பெறுவதில்லை. அதிலும் குறிப்பாக பரவசநிலையை அடையும் வகையில் தங்களுக்கு அந்த இன்பம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி தெரிவிப்பதாக ஹெய்ட் கண்டறிந்தார் (1981 : 538)


இதிலிருந்து ஆண்கள் வேறுபட்ட பாலின்ப வழிகளின் மூலம் இன்பம் நுகர்ந்து திருப்தி அடைகிறார்கள் என்று நன்றாக புலப்படுகிறது. மேலும் பல்வேறு அல்லது வேறுபட்ட வழிகளில் காம பரவச நிலையை அடைய பாலின்ப செயலை மாற்றுவதற்கே ஆண்கள் அடிப்படையில் விரும்புகிறார்கள். ஆண்கள் மட்டும் ஆண் குறியை மையமாக வைத்து பல்வேறு வழிகளில் உடலுறவு இன்பத்தை நுகரலாம்! ஆனால் பெண் இன்ப நெகிழ்வு அல்லது தூண்டலுக்கு பாதகமான ஆண் உடலின்ப தூண்டலை முக்கியத்துவ படுத்துகிற பாலுறவு நடைமுறைகளின் வெளிப்பாடாக உடலுறவில் பெண்ணின் இன்பத்தை இரண்டாந்தரப்படுத்தலாம் அல்லது புறக்கணிக்கலாம் என்பதைத்தான் அண்களின் உடலுறவு முறையை பெண்களுக்கு இன்பமளிக்கும் வகையில் மாற்ற விரும்பாத பிடிவாதமான விருப்பமின்மை உணர்த்துகிறது. இது தான் ஆண், பெண் பாலுறவு அமைப்பிலிருந்து ஆண்கள் அடையும் இலாபமாகும்.


இரண்டாவதாக காமப்பரவச நிலையும், பாலுறவில் முழு திருப்தி நிலையும் ஒன்றென்று நான் கூறவரவில்லை. ஐயமின்றி முழுமையான பாலுறவு திருப்திய­டைய மற்ற பல்வேறு கூறுகளும் பங்கு வகிக்கின்றன. இருப்பினும் பெண்கள் மிகச்சிறிய அளவில் எப்போதாவது பாலுறவு பரவசத்தை அடைகின்ற நிலைமை அவர்களது பாலுறவு அனுபவம் போதுமான அளவு மகிழ்ச்சி தருவதாய் இல்லை என்பதையும் உணர்த்துகிறது.


எனவே அதிகளவு புழக்கத்திலுள்ள ஆண், பெண் கூடலில் பெண்களுக்கும், அண்களுக்கும் அடைய வேண்டிய இலக்குகள் வெவ்வேறாய் இருக்கின்றன. இருவரும் ஒரே நேரத்தில் திருப்தியை அடைந்துவிடுவதில்லை. அண்களுக்கு தங்கள் பாலின்ப வெளிப்பாட்டை அதிகப்படுத்த வேணடுமென்ற அங்கலாய்பு இருக்கலாம்! அனால் பெண்களோடு அவர்களை ஒப்பிடுகையில் அண்கள் பெருமளவில் பாலின்ப திருப்தி அடையத்தான் செய்கிறார்கள். ஆண்கள் உயிரியல் அல்லது அண் விந்து வெளியேற்றல் தேவை என்ற யதார்த்த நிலை நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்ப உடல் இன்ப தூண்டல் வழங்கும் விதத்தில் தான் பாலுறவு என்ற ஒன்றே வரையறை செய்யப்பட்டிருக்கிறது. அனால் பெண்களில் பெண்களின் பாலின்பத்தை பொறுத்தவரையில் (Female Sexuality ) அது கட்டுப்படுத்தப்படுகின்ற ஒன்றாகலாம். ஆண் பாலின்பத்திற்கு சுகம் சேர்க்கும் ஒர் இரண்டாந்தரம் போலதான் வரையறை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அத்தோடு கூட அதிக அளவிலான ஆண் பரவசநிலை சமூகத்தில் பெருமளவு பரவியிருக்கும் ஆணை பிரத்தியகப்படுத்தும் போக்கின் பிரதிபலிப்பே அகும். உடலுறவு நடைமுறையில் இருக்கும் பாலின்ப செயல் பங்கீடு பெண்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை பொறுத்தவரையில் தொழில் நிறுவனங்களில் பால் ரிதியான வேலை பங்கீட்டு முறையோடு ஒத்ததுதான் இவ்விரண்டிற்கும் அதிக வேறுபாடு இல்லை. இரண்டுமே ஆணின் பாலுறவு அல்லது பொருளாதார நிலைமையில் எவ்வளவு குறை இருந்தாலும் அல்லது அதிருப்திக­ரமான நிலையிலிருந்தாலும் பெண்களில் வாழ்நிலை அதைவிட கீழாக தாழ்ந்துதான் இருக்க வேண்டும் என்பதை உறதி செய்கின்றன.


இத்தோடு கட்டுரையின் இப்பிரிவின் இறுதியான மற்றொரு முக்கிய கருத்தைக் காணலாம். ஆண்கள் பெருமளவில் காமப்பரவச நிலையை எட்டுவதற்கு காரணமே அண்கள் ஈரினச் சேர்க்கையில் ஆண்சார்ந்த பாலுறவு முறையில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படும் நிலைதான். இக்கருத்தை நிரூபிக்க ஆதாரம் இருப்து போல் தெரிகிறது. ஹய்ட்டின் ஆண் பாலுறவு ஆய்வில் ஆண்கள் தாங்கள் அடிக்கடி புணர்ச்சியில் இடுபட வேண்டும் என்ற சமூக கட்டாயத்தை உணர்ந்ததாக கூறினர்.


எனினும் புணர்ச்சி பாலுறவில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பாலுறவில் ஆண்களின் முக்கிய செயலாக அடையாளம் காணப்படுகிறது. உடலுறவில் புணர்ச்­சியே விருப்பமாக நிகழ்த்தக்கூடியதொன்றாக வைத்துக் கொள்ளும் படி ஹய்ட் தெரிவித்த யோசனை ஆய்விற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்களில் பலரை திடுக்கிட வைத்ததாம். எனினும் ஆய்விற்கு எடுக்கப்பட்ட மிகப் பெரும்பான்மையானோர் ஈரினச் சேர்க்கையில் புணர்ச்சியை விலக்கி வைப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று உணர்ந்து இந்த யோசனையைப் புறக்கணித்து விட்டார். (hite– 1981 : 461 to 468). மேலும் வரையறுக்கப்பட்ட சமூக சட்டங்களால் தம்முடைய வாழ்க்கை பெரிதும் கட்டுப்படுத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் பெரும்பாலான ஆண்கள் பாலுறவில் ஆண், பெண் பங்கு குறித்து பேசக்கூடிய பெண்ணிய சிந்தனையாளர்களின் பெண்ணிய இணக்கத்தையும் அங்கீகரிக்க மறுத்தனர். அர்த்தமற்ற வகையில் அவர்கள் இவற்றை தங்களுக்கு பாதகமாக பாலுறவில் சமத்துவ நிலையை அடைய எத்தனிக்கும் பெண்ணின் முயற்சியை பெரிதும் வெகுண்டு கண்டித்தனர். (hite : 303 to 328).


இதிலிருந்து ஈரினச்சேர்க்கையில் அண்களின் இந்தச் சார்பு நிலை புழக்கத்தில் உள்ள ஈரினச் சேர்க்கை உறவு அமைப்பு முறையை பாதுகாத்துக் கொள்வதால் அவர்கள் இலாபம் அடைகிறார்கள் என்பதால்தான் தெரிகிறது.

Saturday, November 28, 2009

சோசலிசத்தின் அழகியற் கூறுகள்


கலை பற்றிய பண்டைய மார்க்சிச பார்வை

ஒரு புரட்சிகர பத்திரிகையாளனாக கார்ல் மார்க்ஸ் தனது 23 வது வயதில் வெளியிட்ட ஆரம்ப கால புரூசியன் அரசின் தடைகளுக்கெதிரான கருத்துக்களில் இருந்து சிறு குறிப்பை எடுத்துக் காட்டுவதுடன் நான் தொடங்க விரும்புகிறேன்.

அந்த குறிப்புக்களில் இருந்த முக்கியமான அவதானம், ``இந்த தடைகள் உண்மை பற்றிய தீவிர விசாரணைக்கு தடையாக-இடைஞ்சலாக-இருக்கக் கூடாது.`` மேலும் மார்க்ஸ் தன் நயமான பாணியில் பின்வருமாறு வினவுகிறார், ``இடம் வலம் என்று பார்க்காது உண்மையை நோக்கிச் செல்வதல்லவா உண்மையைத் தேடுபவனின் பணி? வரையறுக்கப்பட்ட வடிவத்துக்குள் விசயத்தை சொல்வதை கட்டாயமாக மறக்காமல் இருப்பதென்றால் நான் சொல்லவரும் விசயத்தின் முக்கியத்துவத்தை மறந்துவிட மாட்டேனா?``

அவர் தொடர்ந்தார்...``அது என்னை உடைமையாகச் கொண்டிருக்கிறதேயன்றி நான் அதை உடைமையாகக் கொண்டிருக்க வில்லை. என் சொத்துதான் வடிவம் அதுதான் என் ஆன்மாவின் தனித்துவம். லிமீ stஹ்றீமீ நீ'மீst றீ'லீஷீனீனீமீ [பாணிதான் மனிதன்] [ஷிtஹ்றீமீ வீs tலீமீ னீணீஸீ] ஆம் உண்மைதான். சட்டம் என்னை எழுத அனுமதிக்கிறது, என்னுடையதல்லாத பாணியில் மட்டுமே கட்டாயமாக எழுதவேண்டுமாம். எனது ஆன்ம தோற்றத்தைக் காட்டலாம், ஆனால் நான் முதலில் அதை வரையறுக்கப்பட்டவற்றுக்குள் நிர்மாணித்துக் கொள்ள வேண்டுமாம்! இந்த தற்கால துணிபுக்கு எந்த கௌரவமுள்ள மனிதன் தான் வெட்கப்படமாட்டான்...?

``உவப்பூட்டும் சலித்துப் போகாத இயற்கையின் வற்றாத வளங்களை வியந்து போற்றுவாய். ரோசும் வயலற்றைப் போல் மணக்க வேண்டும் என்று நீ கேட்டுக் கொள்ளமாட்டாய் என்றால், எல்லாவற்றையும் விட மிகப்பெரும் வளம் கொண்ட ஆன்மா மட்டும் ஒரே வகையாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? நான் நகைச்சுவையாக எழுதவிரும்பினால் சட்டம் என்னை காரியமனப் பான்மையுடன் எழுதச் சொல்கிறது. நான் துடுக்காக எழுதவிரும்பினால் சட்டம் என்னை அடக்க ஒடுக்கமாக எழுத ஆணையிடுகிறது. வெளிறல், எல்லாம் வெளிறல்தான், அதுதான் சுதந்திரத்தின் தனி ஒன்றான சட்டப்பூர்வ நிறம். ஒவ்வொரு பனித்துளிகளிலும் சூரியக்கதிர்கள் பட்டுத் தெறித்து வற்றா வர்ணஜால வித்தைகள் காட்டும், ஆனால் இந்த ஆன்மச் சூரியன் மட்டும் அவர்கள் எத்தனை பேர்களாயினும் எத்தனை பொருட்களில் பட்டுத்தெறிப்பினும் ஒரேயரு உத்தியோகப் பூர்வமான நிறத்தை மட்டும் தரவேண்டுமாம்!``

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை எழுதுவதற்கு 5 வருடங்களுக்கு முன்பே 1842ல் மார்க்ஸ் இவ்வாறு எழுதினார். ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன் எமது இயக்கத்தை ஸ்தாபித்தவர்கள், அவர்களுடைய உலகப்பார்வையிலும், கலாச்சாரம் பற்றிய குறிப்பிட்ட கருத்துக்களிலும், கலைபற்றிய வெளிப்பாடுகளிலும், புத்திஜீவித சுதந்திரம் பற்றிய கருத்துக்களிலும், மார்க்சின் இக்கருத்துக்களை தம்மகத்தே கொண்டிருந்தார்கள், இக்கருத்துக்களுடன் உடன்பட்டே இயங்கினார்கள் என்பதைக் குறிப்பிடவும் தேவை என்றால் ஆதாரபூர்வமாக விவாதிக்கவும் விரும்புகிறேன். இந்தப் பண்பே மார்க்சிச பார்வையின் பிரிக்கமுடியாத கூறுகளாகவும் புறநிலையான முக்கியத்துவம் உடையதாகவும் இருந்து வருகிறது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ``சோசலிச நனவின்`` அழகியற் கூறுகளை, அப்படி அழைக்க முடியும் பட்சத்தில் ஒருவர் உருவாக்குவது என்ன என்பதன் ஆரம்ப கட்டத்தையாவது விரிவாக விளக்க முயற்சிப்பதுதான் இங்கு இன்று எமது பிரதான நோக்கமாக இருக்கிறது.

கலைத்துவத்தினதும் புத்திஜீவிதத்தினதும் சுதந்திரத்தை பாதுகாத்தல் மார்க்சியத்துக்கு இன்றியமையாததாக இருப்பின் இன்று நாம் விவாதிக்க கூடியிருப்பது இயல்பற்றதாக எதிர்பாராத நிகழ்வாக ஏன் இருக்கிறது என்று ஒவர் கேட்கலாம். நான் இங்கு முழுமையாக ஆழமாக சொல்லி முடித்துவிட முடியாத வகையில் அக்கேள்விக்கான பதில் ஏராளமான பாகங்களைக் கொண்டது. இருப்பினும் இக்கேள்வி கவனத்திற்குரியது. குறிப்பாக நாம் இன்று கலந்துரையாட இருக்கும் பிரச்சனைகளில் சில தெளிவுகளை உண்டாக்க உதவக் கூடியது.



சோசலிசத்திற்கான போராட்டத்தில் கலைக்கும் அரசியலுக்குமான உறவுகள் மிகத்தெளிவான புறநிலைத் தாக்கங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. 1922க்கும் 1923க்கும் இடையில் லியோன் ட்ரொட்ஸ்கியால் எழுதப்பட்ட இலக்கியமும் புரட்சியும் என்ற நூலில், சோவியத் ஒன்றியத்தில் கலைக்கான இடத்தை பின்வரும் பொதுகூற்றால் வரையறுக்க முடியும் என்று அவர் எழுதினார்.

அக்கூற்றானது:- ``சோவியத் உள்நாட்டு யுத்தத்தில் எதிர்ப்புரட்சியாளர்களை சோவியத் தொழிலாளர்கள் தோற்கடித்திருக்காவிட்டால் சோவியத் அரசு நீடித்து நிலைத்திருக்க முடியாது. ரஷ்ய மார்க்சிஸ்டுகள் பொருளாதார பிரச்சனை பற்றியோ குறைந்த பட்சம் புத்திஜீவி கலாச்சார பிரச்சனைகளைப் பற்றியோ சிந்தித்து கொண்டிருக்க மாட்டார்கள். குறிப்பாக கலைத்தன்மை மலரும் ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டுமாயின் கலைத்தன்மையற்ற முறைகளும் உபயோகப்படுத்தப்படல் வேண்டும்.

முதலாளித்துவத்தின் யதார்த்தமும் இதற்குள் அடங்கும். இலக்கியமும் புரட்சியும் என்ற நூலில் முதலாளித்துவ வர்க்கத்தினதும் பாட்டாளிகளினதும் வரலாற்றுக் குறிக்கோளினை விமர்சனமற்ற முறையில் இனம் காணுதலுக்கு எதிராக ட்ரொட்ஸ்கி எச்சரித்தார். முதலாளித்துவ வர்க்கம் தன் சொந்த கலாச்சாரத்தை அபிவிருத்தி செய்யத் தொடங்கி நூற்றாண்டுகள் கழிந்த பின்புதான் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியது. முதலாளித்துவ வர்க்கம் சமூகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது அதை செல்வமயப்படுத்தலிலும் கல்விமயப்படுத்தலிலும் தான் இருக்கிறது என்று கற்பனை செய்து கொண்டுள்ளது. ஆனால் தொழிலாள வர்க்கத்தினுடைய பிரச்சனைகள் முற்றிலும் மாறுபட்டது.

சோசலிச நோக்குள்ள தொழிலாளர்கள் ``தமது வாழ்வின் அடிப்படைத் தேவைகளின் நிவர்த்திக்குப் பிறகு`` அவர்கள் தம் முழுச்சக்தியையும் அரசியல், வரலாறு சம்பந்தமான படிப்பிலும் முழுத்தொழிலாளர் வர்க்கத்தையும் மார்க்சிச அடிப்படையில் பயிற்றுவிப்பதிலும் செலுத்தப்படுகிறது. இக்கடமை பெரிய அளவிலும் அவசரத்தேவையாகவும் இருப்பதால் இது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. எமது கட்சி காரியாளர்களுக்கும் சேர்த்து பரந்த அளவில் இது உண்மையாகும்.

இன்னொரு வகையிற் சொல்வதானால், சமூக வாழ்வின் எல்லா உறவுகளிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் எழுச்சி ஒப்பீட்டளவில் சமமானதாக நிகழ்ந்த பொழுது, பொருளாதார, தத்துவ, கலாச்சார ரீதியாக தொழிலாள வர்க்கத்தின் சுய நிர்ணயத் தன்மையின் போக்கு ட்ரொட்ஸ்கியின் வார்த்தையிற் சொல்வதானால் ``பொருளாதார ரீதியாக துர்அதிர்ஷ்டமான வர்க்கமாக`` புரட்சிகர அரசியல் பண்பு கொண்ட வர்க்கமாக ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. அவ்வர்க்கத்தின் உச்சகட்ட வெளிப்பாடு ஒரு புரட்சிகர சோசலிச கட்சியில் மட்டுமே காணக்கிடைக்கிறது. நாங்கள் ஒருபக்கம் ஒதுக்குதலை எதிர்த்துப் போராடும் அதேவேளை, அதன் புறநிலை மூலங்களையும் எங்களால் விளங்கிக் கொள்ள முடிகிறது. மனித சமூகம் முதலாளித்துவத்தின் கீழ் எல்லாவகையிலும் தானாகவே அபிவிருத்தியடைய முடியும் என்றால் ஒரு சோசலிச புரட்சிக்கான தேவையே இருக்காது. தொழிலாள வர்க்கம் கட்டாயமாக அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் ஏனெனில் அது கலாச்சாரரீதியாக ஒடுக்கப்படுகிறது (இச்சொல்லின் முழு அர்த்தத்தில்).

சில பொது உண்மைகளுக்கு எதிராக யாருமே தங்கள் கண்களை மூடிக் கொள்ளத் தேவையில்லை அல்லது முடியாது என நான் நினைக்கின்றேன். இருப்பினும் இந்த `கல்விக் கூடலில்` கலாச்சாரப் பிரச்சனை சம்பந்தமாக ஒரு சிறப்புப் பகுதியை ஒதுக்க வேண்டியிருப்பது ஏன் என்பதற்கும் அதையரு முக்கியமான ஒன்றாக ஏன் நாம் நினைக்கின்றோம் என்பதற்கும் சில வரலாற்று பிரச்சனைகளை நேரடியாக சுட்டிக்காட்டுவதே அநேகமாக பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.


இத்தகைய விவாதங்களில் நாம் கருத்திற் கொள்ளவேண்டிய விசேஷமான விஷயமொன்று உள்ளது. `சோசலிசத்துக்கான போராட்டமும் கலைப்படைப்பாற்றலின் சுதந்திரத்தைப் பேணுவதற்கான போராட்டமும் பிரிக்க முடியாதது` என்பதை 1847 ல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வெளியிட்டபின், இந்நூற்றாண்டின் முதற்கால் பகுதியில் தோன்றிய மிகச்சிறந்த மார்க்சிய போதனையாளர்கள் இயல்பாகவே விளங்கிக் கொண்டிருந்தனர்.

எப்படியிருந்தபோதும் விஞ்ஞான சோசலிசத்தை ஸ்தாபித்ததுடன் சம்பந்தப்படும் `மார்க்ஸ்` என்றொரு தனிமனிதனின் பெயரைத்தான் மீண்டும் நாம் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது. தனது தன்னிகரற்ற எத்தனையோ பண்புகளுடன் ஒரு சிறந்த பண்பாடுள்ள மனிதராகவும் விளங்கினார் மார்க்ஸ். பிரெஞ்சு சோசலிச தலைவரும் மார்க்சின் மருமகனுமான போல் லாபார்க்(றிணீuறீ லிணீயீணீக்ஷீரீuமீ) தனது நினைவுக் குறிப்புகளில் இவ்வாறு எழுதுகிறார். ``அவர் (மார்க்ஸ்) கெயின் (பிமீவீஸீமீ) கோதே ஆகியோரை மிக ஆழமாக-இதய பூர்வமாக அறிந்து வைத்திருந்தார், பேச்சில் அவர் அடிக்கடி அவர்கள் பற்றி குறிப்பிடுவார். ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும் சிறந்த கவிஞர்களின் படைப்புக்களை அவர் தொடர்ந்து வாசித்து வந்தார். ஒவ்வொரு வருடமும் அசிலசை (கிமீsநீலீஹ்றீus) கிரேக்க மூலத்தில் அவர் படித்தார். அவர் அசிலசையும் சேக்ஸ்பியரையும் மனித இனம் கண்ட மிகப்பெரிய வியக்கத்ததக்க மேதகளாக எண்ணினார். அவர் சேக்ஸ்பியர் மேல் வைத்திருந்த மரியாதை அளப்பரியது. அவர் சேக்ஸ்பியரை மிகவிரிவாக ஆழ்ந்து படித்தார். முக்கியமில்லாத கதாபாத்திரங்களைக் கூட அவர் நுணுக்கமாக அறிந்திருந்தார். நாவலாசிரியர்களில் செர்வான்ட்ஸ் (சிமீக்ஷீஸ்ணீஸீtமீs) பால்சாக் (ஙிணீறீக்ஷ்ணீநீ) ஆகியோரை அவர், முதலிடத்தில் வைத்திருந்தார். அவர் ஒப்பற்ற கற்பனா சக்திவாய்ந்தவராக விளங்கினார். கவிதையே அவரது முதல் இலக்கிய வெளிப்பாடாக இருந்தது. திருமதி மார்க்ஸ் தனது கணவன் இளமைக்காலத்தில் எழுதிய கவிதைகளை மிகக் கவனமாக பாதுகாத்து வைத்திருந்தார். ஆனால் யாருக்கும் அதைக் காட்டியதில்லை. அவரை ஒரு சிறந்த மொழியாளராகவும், பேராசிரியராகவும் கனவு கண்டிருந்த அவரின் குடும்பத்தவர்கள், அக்காலத்தில் ஜேர்மனியில் வெறுக்கப்பட்ட சோலிச கிளர்ச்சியிலும் அரசியற் பொருளாதாரத்திலும் அவர் ஈடுபட்டு தன்னைத்தானே குறைத்துக் கொள்வதாக எண்ணினர்.``
Enormous Modern tree Painting Pictures, Images and Photos
1895ல் கார்ல் காவுத்ஸ்கியின் வேண்டு கோளுக்கிணங்க எலியனார் மார்க்ஸ், மார்க்ஸ் ஹெய்ன் நட்பு பற்றிக் குறிப்பிட்டார். அதில் பகுதி வருமாறு : ``நான் எனது பெற்றோர் இருவரையும் நினைவுக்குக் கொண்டுவருகிறேன். ஹெய்னைப் பற்றி அதிகம் பேசுவோம். (நாற்பதுகளின் தொடக்கத்தில்) அவர்கள் அவரை தொடர்ச்சியாய் நெருக்கமாகப் பார்த்தனர். மோர்(மார்க்சின் புனைப்பெயர்) ஹெய்னை ஒரு கவிஞராக மட்டும் போற்றவில்லை, அவருடன் மிக அன்பு கொண்டிருந்தார். ஹெய்னின் எல்லாவித அரசியல் கோளாறுகளுக்காக அவர் வக்காலத்தும் வாங்கினார். கவிஞர்கள் ஒரு தனிவிதமான பழகுவதற்கு கூச்சமானவர்கள் அவர்களை சாதாரணமாக அல்லது அசாதாரணமான நடத்தைத் தரங்களால் எடைபோடக் கூடாது என்று மோர் கூறினார்.

``ஹெய்ன் வழக்கம்போல் ஒருமுறை அவர்களது அறைக்குள் அடிக்கடி ஓடிச்சென்று அவரது கவிதை ``வரிகளை`` படித்துக்காட்டுவார். அப்போது அவர்களது கருத்துக்களையும் கேட்பார். மீண்டும் மீண்டும் மோர் எட்டு வரிகள் கொண்ட `சிறிய விடயம்` பற்றியதையும் விவாதிப்பார், ஆய்வு செய்வார்..

``நான் புரிந்து கொண்டவரையில், அரசியல் ரீதியாக அவர்கள் அபூர்வமாகவே விவாதிப்பார்கள். ஆனால் மோர் நிச்சமாக ஹெய்னை குழந்தையாக நினைத்தார். அவர் அம்மனிதரின் படைப்பை மட்டும் நேசிக்கவில்லை அவரையே நேசித்தார்.``

ஏன் ட்ரொட்ஸ்கியின் விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் கூட ஒருவர் செய்ய வேண்டியது அவரின் சுயசரிதையில் `புத்தகங்களும் ஆரம்பகால முரண்களும்` என்ற பகுதியை படிப்பது. அதில் அவர், எப்படி தான் ஒரு சிறுவனாக இருந்த காலத்தில் புஸ்கின் (றிusலீவீஸீ) நெக்கிரசோவ் (ழிமீளீக்ஷீணீsஷீஸ்) டிக்கன்ஸ் (ஞிவீநீளீமீஸீs) டால்ஸ்டாய் (ஜிஷீறீstஷீஹ்) ஆகியோரின் எழுத்துக்களில் தீராதகாதல் கொண்டிருந்தார் என்பதை விளக்கியிருக்கிறார். முதலாவது முறையாக தியேட்டருக்குப்(நாடக அரங்கத்திற்கு) போனபோது தனக்கு ஏற்பட்ட ஆழமான தாக்கத்தையும் ரஷ்யாவின் தென் பகுதியைச் சேர்ந்த, சேக்ஸ்பியரை முறைபோக கற்றவராக அறியப்பட்டிருந்த ஒரு குடும்ப நண்பரின் வரவு அவரை எவ்வளவு பாதித்தது என்பதையும் கூட அவர் விளக்கியுள்ளார்.

19ம் நூற்றாண்டின் பாதி தொடக்கம் மார்க்சிய பாரம்பரியத்தின் உன்னத நபர்களான மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ட்ரொட்ஸ்கி, ரோசா லுக்சம்பேர்க், பிரான்ஸ் மெகரிங், ஜியோர்ஜி பிளெகனோவ், லாபார்க், அன்டோனியோ லாபிரியோலோ மற்றும் சிறு சாதனைகள் செய்த கணக்கற்ற நபர்களும் ஒரு அரசியல் செயற்திட்டம் என்பதற்கும் மேலாக ஏராளமான விசயங்களை எமக்கு வழங்கிப் போயுள்ளனர். வேறு வகையில் பார்ப்பது ஒரு குறுகிய பார்வையாக மட்டுமே இருக்க முடியும்.

பெரிய அளவில் பரந்த ஆழமான புத்திஜீவிதத்தை மார்க்சியமே பிரதிபலித்தது. தத்துவம், அரசியற் பொருளாதாரம் வரலாறு, மற்றும் கலைத்துறையிலும் முதலாளித்துவ சமூகத்தின் மிகப்பெரிய சாதனைகளையும் மார்க்சியம் தன்னகத்தே கொண்டுள்ளது என்று நான் முழுமையாக ஒப்புக் கொள்கிறேன். முதுலாளித்துவ முரண்பாடுகளுக்கும் வளரும் சிக்கல்களுக்கும் மிக இசைவான விளக்கத்தை மார்க்சியம் தந்தது மட்டுமன்றி, அந்த சிக்கலில் இருந்து வெளியேற ஒரு முன்னேற்றப் பாதையையும் காட்டியது. சோசலிசம் என்ற கருத்து உருவாக்கிய அலையானது சுரண்டலில் இருந்தும், கொடும் துன்பத்தில் இருந்தும், முற்றிலும் விடுபட்ட உலகத்தைப் பற்றிய அதன் ஆழ்ந்த நோக்குடன் அது அனுதாபம் சார்ந்தோ இன்றியோ- புத்திஜீவித வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எதிரொலித்தது.

அத்துடன் பௌதீக, சமூக, உளவியல்-அமைப்புகளில் பரந்தளவில் ஆளுமை செலுத்திய ஒவ்வொரு தனிமனிதனதும் செல்வாக்குக்கு ஏதோவொரு வகையில் மார்க்சியமும் உட்பட்டது. இயற்பியல் ஆய்வாகவோ, மனிதவியலாய்வு ஆகவோ அல்லது உளவியல் ஆய்வு துறையாகவோ எத்துறையாயினும் இது பொருந்தும். 1880க்கும் 1914க்கும் இடையில் ஏற்பட்ட சோசலிச இயக்கத்தின் அந்த நாட்களில் மக்களின் புரட்சிகர சுயநனவானது மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டது என்பதில் கேள்விக்கிடமில்லை. இவ்வியக்கமே தனது உயர்வெளிப்பாட்டை 1917 அக்டோபர் புரட்சியில் கண்டு கொண்டது.
Enormous Modern tree Painting Pictures, Images and Photos
இக்காலப்பகுதியின் வரலாற்றைப் பற்றி ஒருவர் மேலெழுந்தவாரியாக ஆய்வு செய்தால்கூட அவர் நிறைய விஷயங்களை கவனத்திற்கொள்ள வேண்டியிருக்கும். பிரி வால்க்ஸ்வுன் (திக்ஷீமீவீமீ க்ஷிஷீறீளீsதீuலீஸீமீ) என்ற முக்கிய அரங்கை நிறுவிய 1890 ஒன்று கூடலை ஒருவர் எடுத்துக் காட்டலாம். ஒரு வரலாற்றாசிரியனின் வார்த்தைகளில் அதைப்பற்றி சொல்வதானால், `இது பேர்லின் அவான்-கார்டே (கிஸ்ணீஸீt - நிணீக்ஷீபீமீ) தலைவர்களையும் சமூக ஜனநாயக தலைவர்களையும் ஒரு பொதுமுயற்சியில் இணைத்தது. அது தொழிலாளர்கள் இலக்கிய விவாதங்களில் இணைந்து கொள்ளும் தொடர் கூட்டங்களை ஏற்படுத்தியது .``

அல்லது பெல்ஜிய தொழிலாளர் கட்சியின் கலைத்துறையை இன்னொரு உதாரணமாக எடுத்துக் கொள்வோம். 1890-92ல் தொழிலாளர்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத்திட்டங்களில், நவீன ரஷ்ய இலக்கியத்தைக் கற்றல் மற்றும், இப்சன், வானர், போல்க் இசை, சேக்ஸ்பியர், பிளமிஷ் வர்ண ஓவியம், வில்லியம் மோரிஸ் மற்றம் போல் வேர்லெயின் கவிதைகள் ஆகியவற்றைக் கற்றல் முதலியன ஒரு பகுதியாக இருந்தது.

ஜேர்மனியிலும் கூட எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கான மாறுபட்ட கேள்விகளைச் சுற்றி கலாச்சாரம் சம்பந்தப்பட்டது உட்பட - தொழிலாளர் ஒன்று கூடலை சமூக ஜனநாயக கட்சி ஒழுங்கமைத்தது. நான் முன்பும் ஒருமுறை குறிப்பிட்டிருந்த அவதானத்திற்கு கொண்டு வந்த விசயமான 10-20 ஆயிரம் பேர்கள் கொண்ட ஒரு சிறிய ஜேர்மன் நகரத்தை எடுத்துக் கொள்வோம். அங்கு சுற்றுச் சங்கங்கள் முதல் குழுக்கள் வரையிலான கவிதை, நாடக அரங்கு ஆகியவற்றுக்கு தம்மை அர்ப்பணித்த 100 இற்கு மேலான தொழிலாளர் அமைப்புகள் இருந்தன. தொழிலாள வர்க்கத்தை அதனுடைய வரலாற்றுக் கடமைக்கு நகர்த்திச் செல்வதில் கலை கலாச்சாரம் சம்பந்தப்பட்ட கேள்விகள் மிகவும் முக்கியத்துவம் உடையதாக இருந்ததாக சோசலிஸ்ட்டுகள் கருதினர்.

பிரான்சில் வெளிவந்த (லிணீ க்ஷீமீஸ்ஷீறீtமீ) லா ரிவோல்ட் என்ற அராஜக வாதிகளின் பத்திரிக்கை பல இணைப்புக்களை -டால்ஸ்டாயின் எழுத்துக்கள், பிளாபர், மாப்பாசன், சொன்வர் சகோதரர்கள், அனாதோல் பிரான்ஸ் மற்றும் சோலா முதலானோரினதும் எழுத்துக்களை - வெளியிட்டு வந்தது. 1894ல் கைப்பற்றப்பட்ட இவ்வெளியீட்டின் சந்தாதாரர்பட்டியல் பிரெஞ்சு புத்தி ஜீவிகளில் பெரும்பான்மையானவர்களைக் கொண்டிருந்தது. காமில் பிசாரோ போல் சினாக் போன்ற ஓவியர்கள் உட்பட, மற்றும் அனாதோல் பிரான்ஸ், ஸ்ரீபன் மலார்மே உட்பட பல்வேறு சிறந்த கலைஞர்களையும் `பின்தங்கிய` கலைஞர்களையும் பிரதிபலிப்பதாக அப்பட்டியல் இருந்தது. அது அக்கால பிரெஞ்சு புத்திஜீவிகள் பற்றிய ஒரு `குறுக்குவெட்டு`பார்வையைத் தந்தது.

19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பிரெஞ்சு, பெல்ஜிய சமூக கலாச்சார நிலைமைகள் பற்றிய ஒரு உபயோகமான ஆய்வான `கலைஞர்களும் சமூக சீர்திருத்தமும்` பின்வருமாறு குறிப்பிடுகிறது. `` குஸ்டாவ்கான் (பிரபலமான இலக்கிய வாதியும் பின்னால் ஞிக்ஷீமீஹ்யீusணீக்ஷீபீ ஆனா) 1886ல் தேக்கமான சமகால பிரெஞ்சு சமூகம் பற்றி குறிப்பிடுகையில், `பெருமை கொண்டுள்ள முதலாளித்துவ வாதிகள் கலையிலும், கருத்துக்களிலும், புதிதான எல்லாவற்றையும் தடுத்து வைத்துள்ளார்கள்`. என்றார். இதில் அவர் மிகப் பழைய குற்றச்சாட்டையே எதிரொலித்தார். அக்குற்றச்சாட்டு மற்றவர்களைப் போலவே அவருக்கும் சமூக, கலைகாரணங்களை இணைத்தாக இருந்தது. தற்பொழுது முதலாளித்துவ வாதிகள் மீதான தாக்குதலானது எப்போதும் இல்லாத வகையில் சமூக அக்கறையுடையதாக மாறியுள்ளது. இச்சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒரு குறிப்பிட்ட காலத்தில் உணர்ந்து இருந்தது மட்டுமின்றி கலைஞர்கள், தங்களைப் போலவே அநீதிக்கு உட்படுத்தப்பட்ட தொழிலாளர் வர்க்கத்துடன் தம்மை அடையாளப்படுத்தத் தொடங்கினார்கள்.``

அரைகுறை உரிமைகள் வழங்கப்பட்டிருந்த சாரிஸ ரஷ்யாவில் கூட இக்காலப்பகுதியில் `பின்தங்கிய` கலைஞர்களுடன் மார்க்சிஸ்ட்டுகள் உறவு கொண்டிருந்தனர். ``இளமையான துன்புறுத்தப்பட்ட (இலக்கிய ரீதியாக) புது இளம் அலை (ட்ரொட்ஸ்கி) ஒன்று அவர்களைப் பேண வந்தது.

சோசலிசஸ்ட்டுகளுக்கும் கலைஞர்களுக்கும் இடையிலான உறவானது அதன் மிகச்சிறந்த உதாரணங்களின் போது கூட ஒரு ஒழுங்கமைவுடையதாக முரண்பாடற்றதாக இருந்தது என்று கருதுவது மிகவும் முட்டாள்தனமானது. எப்படி அது சாத்தியமாயிருக்க முடியும்? மரபு ஒழுங்கின்மை வாதம், தனிநபர் வாதம் மற்றும் தன்முனைப்பு வாதம்- திடமான சமூக இருத்தலுடன் சம்பந்தப்பட்ட வகையில்-அவை கலைஞர்கள் வட்டத்தில் தெரியாத-அறியப்படாத ஒரு விடயமாக இருக்கவில்லை. அதேபோல் பிலிஸ்டினிசம் மார்க்சிய இயக்கத்திற்கு தெரியாத ஒன்றாக இருக்கவில்லை. அரசியல், வர்க்க வேறுபாடுகளுக்கும் அப்பால், முழுமையாக இல்லாவிட்டாலும் கூட, விஞ்ஞானம், கலை, அறிதல் முறைகளுக்கிடையிலான வேறுபாடுகள் முக்கியமானவை.

ரஷ்ய (அவான்ட்கார்டே) கலைஞர்கள் பற்றிய விவாதத்தில் சில வருடங்களுக்கு முன்பு இது பற்றி ஏற்கனவே நான் விவாதித்திருக்கிறேன். ``பிம்பங்கள் மூலம் கலைஞன் உலகை அறிந்து கொள்ளும் முறை-உணர்வு நிலை, உடனடி பாதிப்புக்கள் உணர்ச்சிவசம் ஆகியவற்றுடனான கலைஞனின் நெருங்கிய தொடர்பு-உள்ளுணர்வு, நனவுபூர்வமற்ற நிலை என்பன கலைவெளிப்பாட்டில் முக்கியத்துவம் செலுத்துவது-என்பன எல்லாம் கலைஞன் தனது ``சமகாலத்தில் பின்தங்கி`` நிற்கின்றான் என்பதை ஏறத்தாழ உறுதிசெய்கின்றது. அன்றைய அரசியலுக்கு `பின்தங்கி` கலைத்துவ நனவுநிலை காலத்தால் பின்தங்கியுள்ளதாக அல்லது முன்னோக்கியுள்ளதாக எவ்வாறிப்பினும், இது புரட்சி அரசியல் நனவுடன் எந்த நிகழ்ச்சியாலும் மிக அரிதாகவே இணைந்து நிகழ்கிறது.

இவை அனைத்தையும் கவனத்திற் கொண்டு பார்த்தால் நான் நினைக்கிறேன் ரஷ்யப் புரட்சி நகர்ந்து கொண்டிருந்த ஒரு காலக்கட்டத்தில் சோசலிச இயக்கம் - அதேநேரம் அதன் குறிக்கோளின் அக்கைறையுள்ள கலைஞர்களாலும் புத்திஜீவிகளாலும் கூட ``கலைப்படைப்பாற்றலுக்கு`` ஒரு கூட்டாளியாகவும் பாதுகாப்பாளராகவும் மேலும் பொதுவில் புத்திஜீவித விடுதலையின் பரிவான ஆதரவாளராக வரலாற்றில் வெளிப்படுத்தியிருக்கின்றனது.

மார்க்சியம் பற்றிய பரவலான இன்றைய பொதுவான புரிதல் இப்படியா இருக்கிறது? அப்படி நம்புவதற்கு ஒருவன் தன்னை மிக முட்டாளாகக் கருதிக் கொள்ளவேண்டும். குலாக்களை விரட்டி அடித்ததுடன் சுதந்திர சிந்தனையாளர்கள் தண்டிக்கப்படுவதாக இருந்ததுடனும் விமர்சன ரீதியான சிந்தனையும் கலைத்துவமும் மிதித்தழிக்கப்பட்டது என்பதனுடன் சேர்த்து அடையாளம் காணாவிடில் `சுதந்திரமான சிந்தனை` என்ற முட்டாள் தனமான வக்கிரமான அதிகாரத்துவத்தின் முத்திரை குத்தலுடன் தற்கால 'மார்க்சியம்' தன்னை வெளிப்படையாக அடையாளப்படுத்திக் கொள்ளாவிட்டால், அது பெரும்பாலும் பின்நவீனத்துவம், அடையாள அரசியல் மற்றும் குழப்பமான இடதுசாரிக் குட்டி பூர்சுவாக்கள் முன்வைக்கும் கலைத்துவத்திற்கு எதிரான அனைத்துடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு நிலைமையில் இருக்கிறது.

மார்க்சியத்தின் அடையாளம் மற்றும் கருத்தின் மீதான சர்வாதிகார ஒடுக்குமுறை பற்றி வலதுசாரி கருத்தாளர்கள் பின்வருமாறு கூறக்கூடும், ``சுதந்திரத்தைப் பேணுவதான சோசலிஸ்ட்டுகளின் வார்த்தைகள் வெறும் வேஷம்-ஏமாற்று. இவர்கள்தான் அதிகார வெறிகொண்ட தனிமனிதர்கள். தங்களது நோக்கத்தை அடைய எதைவேண்டுமானலும் அவர்கள் வாக்களிப்பர்.`` அவர்கள் அதிகாரத்தின் உச்சத்தில் வந்ததும் தங்களது உண்மை நிறத்தை வெளிக்காட்டினர்.

வரலாற்று உண்மைகளுடன் முழுவதும் முரண்படாத பட்சத்தில் இது ஒரு வசீகரமான வாதம்தான். அக்டோபர் புரட்சி கலைப்படைப் பாற்றலின் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக காட்சிக் கலைகள், கவிதை மற்றும் திரைப்படத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பெயர்களைச் சொன்னால்.... மலேவிச, மாயாகோவ்ஸ்கி, டாட்லின், ஐசன்ஸ்டெய்ன், புடோவ்கின், வெர்டோவ், ஷோன்டாக்கோவிச், ரோட்சென்கோ, போபோவா, ஸ்டெபானோவா, எல் லிசிட்ஸ்கி, மெயர்ஹோல்ட், பேபெல், மெண்டெல் ஸ்டாம் மற்றும் பல்வேறு நபர்களும் - கலைப் பிரபஞ்சத்தைக் கட்டி எழுப்பினார்கள். அதன் நேர்மையான அரசியல் எதிரிகளால் கூட இது மனமின்றி ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று. போல்ஷிவிக் கட்சியின் முன்னணி நபர்களான லெனின், ட்ரொட்ஸ்கி, லுனார்சார்ஸ்கி ஆகியோர் கலைப்பணியை ஊக்குவித்ததுடன் ``பாட்டாளிகள் உலகம் மற்றும் செயற்கையான ``புரட்சிகரமான`` தன்மைகளை சோவியத் கலைஞர்கள் மேல் திணிப்பதையும் அவர்கள் எதிர்த்து வந்தனர். ``காட்டிகொடுக்கப்பட்ட புரட்சி`` என்ற புத்தகத்தில் ட்ரொட்ஸ்கி எழுதினார்: ``தொழிலாளர் அரசானது, கூட்டாக எழுச்சி கொள்ளும் போதும் உலகப் புரட்சிக்கான முன்னோக்கை வைத்திருக்கும்போதும் கல்வித்துறை பிரச்சனைகள், தேடல்கள், மற்றும் எவ்வித பரிசோதனைகள் பற்றியும் அது அச்சம் கொள்வதில்லை. இவ்வகையில் மட்டுமே ஒரு புதுக் கலாச்சார ஆர்வத்தை தயார்செய்ய முடியும் என்று அது விளங்கிக்கொண்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகால வரலாற்றில் முதல்தடவையாக பரந்த மக்கள் கூட்டம் உரத்து சிந்திக்கிறது. அதன் ஒவ்வொரு நிலையிலும் பெருத்த அலை வீசுகிறது. கலைத்துறையின் மிகச்சிறந்த இளம் சக்திகள் மிகவிரைவில் பாதிப்புக்குள்ளாகின்றன`.

ஸ்ராலினிசத்தின் பண்பையும் தோற்றத்தையும் முக்கியத்துவமும் பற்றி ஆய்வதல்ல இங்கு எமது நோக்கம் இருப்பினும் அது, 1920 மத்திய பகுதியில் இருந்து வளர்ந்து வந்த சோவியத் கலாச்சார வாழ்முறையினை ஒடுக்கியதும்-அழித்ததும் இந்நூற்றாண்டின் ஒரு மிகப்பெரிய புத்திஜீவித குற்றம். இந்த அதிகாரத்துவத்தின் உச்சம் ட்ரொட்ஸ்கி அழைத்ததுபோல் ``இலக்கியப் படைப்பாளிகளுக்கான ஒரு வதைமுகாமினை`` உருவாக்கியது. மிகச்சிறந்த கலைஞர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். மௌனமானார்கள் அல்லது அழிக்கப்பட்டார்கள்.

இவ் அதிகாரத்துவம் கொலை, ஊழல் மற்றும் சோவியத் யூனியனிலும் வெளியிலும் இருந்து முழுக்கலைஞர்களது சந்ததியையும் பலவீனப்படுத்தல் என்பவற்றை செய்தது மட்டுமின்றி, கலைக்கு மேலான இதன் கொடுங்கோலாட்சியை நியாயப்படுத்த, கொள்கைகளை அது கடன்வாங்கியது மற்றும் கண்டுபிடித்தது. அது ஸ்ராலினது நாட்களில் ``பாட்டாளி வர்க்க கலாச்சாரம்`` ``சோசலிச யதார்த்தவாதம்`` என்பதன் பேரிலிருந்தது. ஸ்ராலினிசத்தின் இக்காலாச்சார தாக்கமானது ரஷ்யாவில் மட்டும் அழிவை ஏற்படுத்தியதென்பதல்ல கிழக்கு ஐரோப்பா, சைனா, எங்கும் அது தன் தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்துடன் 1953ம் ஆண்டு அக்கொடுங்கோலனின் இறப்புடனும் அது முடிந்துவிடவில்லை. பல்வேறு கல்விநிலையங்களில் ``மக்கள் கலை`` என்பதன் மூலத்தில் இதன் கொடிய தாக்கம் இருந்ததை ஒருவர் கண்டுணர முடியும். ஸ்ராலினிசம் மட்டும்தான் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திய சக்தி என்பதும் உண்மையில்லைதான். வெவ்வேறு உள்நாட்டு ஜனரஞ்சக பூர்சுவா தேசிய வாதிகளின் கருத்துக்களும் கூட செல்வாக்குச் செலுத்தின. இருப்பினும் அவை ஒரு சிக்கலான கருத்து நிலையில் அல்லது அமைப்பு சம்பந்தப்பட்டவகையில் ஸ்ராலினிசத்தை பூசி மெழுகும் வகையிலேயே அவை இயங்கின.

இலக்கியமும் புரட்சியும்` என்ற புத்தகத்தை ட்ரொட்ஸ்கி எழுதி 75 ஆண்டுகாலம் முடிவதற்குள் புத்திஜீவித படைப்பாற்றலுக்கும் கலைக்கும் எதிரான அனேக கருத்துக்கள் ஏராளமானவை ``மார்க்சியம்`` என்ற பெயரில் மக்களின் பார்வைக்கு வந்துள்ளன. இவைபற்றி எல்லாம் இங்கு நாம் விவாதிப்பதன் முக்கியத்துவம், இவ்வகை சீரழிவுகள் ஏமாற்றுத்தனம் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டன என்பதிலேயே இருக்கிறது என்பதையும் இங்கு நாம் குறிப்பிட்டுக்காட்ட வேண்டும்.

அனைத்துலக குழுவில் கடந்த பல வருடங்களாக கலையின் உண்மையான மார்க்சிய நோக்கை புதுப்பித்து வருகிறோம். 1980ம் ஆண்டு மத்தியில் தொழிலாளர் புரட்சிகக் கட்சியின் வடிவத்தில் சந்தர்ப்பவாதத்துடன் ஏற்பட்ட பிளவிற்கு பின்பு ஏற்பட்ட மார்க்சிய மறுமலர்ச்சியின் ஒரு கூறாகவே இதை நான் கருதுகிறேன். மார்க்சியத்தின் நவீன வடிவம் - எம் ட்ரொட்ஸ்கிய இயக்கம் - ஏராளமான வெளிப்பாதிப்புக்களில் இருந்து விடுபட்டுள்ளது. இன்னொரு வகையிற் சொல்வதானால் ``மார்க்சியம்`` தன்னை மீள்கண்டு பிடிப்புச் செய்துள்ளது.

சந்தர்ப்பவாதிகளுடனான உடைவு எவ்வளவு முக்கியத்துவமுடையதாக இருந்தாலும் இவ் மறுமலர்ச்சியானது அதனுடன் மட்டும் சம்பந்தப்பட்டதன்று. மிகவும் சக்திவாய்ந்த வரலாற்று நிகழ்வுகளுடனும் சம்பந்தப்பட்டுள்ளது. இதுவரைகால வரலாற்றில் புரட்சிகர சோசலிச இயக்கத்திற்கு சாத்தியமில்லாதிருந்த தொழிலாளர் வர்க்கத்திற்கும் அதிகாரத்துவத்துக்கும் மற்றும் மார்க்சியத்துக்கும் சந்தர்ப்பவாதத்துக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பவற்றுடன் இம்மறுமலர்ச்சி இணைந்துள்ளது. மார்க்சிய முகமூடியிட்ட கலை வடிவத்துடன் தொழிலாளர் வர்க்கத்தின் ஆதிக்கம், ஸ்ராலினிச மற்றும் சீர்திருத்த அதிகாரத்துவத்தினால் எங்கும் பரவியிருந்ததானது, கடந்த அரைநூற்றாண்டு காலமாக மிகவும் நேர்மையான உண்மையான சோசலிஸ்ட்டுகளால் நல்ல வகையானதாக எடுக்கப்படும் அல்லது குறைந்தபட்சம் கேள்விக்குள்ளாக்கப்படாமலும் இருந்து வந்தது என்று நம்புகிறேன்.

நாம் இன்று இப்பொய்யான நாசகர கருத்துகளில் இருந்து விடுவித்துக் கொள்ளக் கூடிய தாயிருப்பதும் மிக புறநிலை முக்கியத்துவமுடைதாயிருக்கிறது. அதிகாரத்துவ இயந்திரங்களுக்கு எதிராக நிற்கும் மற்றும் சுதந்திரமான வரலாற்று தேவைகளின் அடிப்படையில் இயங்கும் வர்க்கமான தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியை குறிக்கும் ஒரு மாற்றமுடியாத போக்காக நாம் பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதை இது குறிப்பிட்டுக்காட்டுகிறது. இவ்விஷயம் பற்றிய மேலதிக விளக்கங்களுக்கு நான் பின்பு வருகிறேன்.

சில கருத்து வேறுபாடுகள்

கலை சம்பந்தமான எமது எழுத்துக்களின் தரத்தை உயர்த்தவும், சமகால கலாச்சாரம் மற்றும் வரலாற்று கேள்விகள் முதலியவற்றை மார்க்சிச பாரம்பரிய வெளிச்சத்தில் அணுகவும், கடந்த பல வருடங்களாக நனவு பூர்வமாக முயற்சி செய்து வந்துள்ளோம் என நான் சொன்னால் அது சுருக்கமான விபரணை மட்டுமே. இன்னும் இன்னும் நாம் செய்யவேண்டியது நிறையவே இருக்கின்றது, இருப்பினும் நாம் செல்லவேண்டிய பாதையின் பெரும்பான்மையான தடைகள் அகற்றப்பட்டுவிட்டன.

நாம் கலை உற்பத்தியின் புறநிலை முக்கியத்துவத்தை அழுத்திக் கூறியதும் கலை அபிவிருத்தி பற்றிய விதிகள் பற்றி கவனம் செலுத்தச் சொன்னதும் அண்மைக்காலத்தில் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கின்றது. இங்கு அவுஸ்திரேலியாவில் வேர்க்கஸ் நியூஸ் என்ற பத்திரிகையை படித்தவர்கள்- உங்களில் பெரும்பாலானோருக்கு இதுபற்றி தெரிந்திருக்கும். ஒஸ்கார் வைல்டின் உழைப்பினதும் வாழ்க்கையினதும் முக்கியத்துவம் பற்றிய எமது சுருக்கமான கணிப்பீடுகள் கடந்த கோடையில் வெளிவந்தது. இதுபற்றிய தனது கருத்துவேறுபாடுகளை கடந்த ஆகஸ்ட்டில் திரு பிராட் எவான்ஸ் எமது பத்திரிகைக்கு எழுதியிருந்தார்.

நாம் இன்னொரு கடிதத்தில் இதற்கு பதிலளித்தோம். அதற்கு அவர் இன்னுமொரு கடிதத்தில் பதிலளித்திருந்தார். அக் கடிதமானது எமக்கு இடையேயான வேறுபாடுகளின் வெளித்தோற்றத்தை கூர்மையாக வெளிக்காட்டுவதாக உள்ளது என நான் நினைக்கின்றேன்.

நான் இதுபற்றி இன்று பேசவேண்டியிருக்கிறது. ஏனெனில், திரு பிராட் எவான்ஸ் இன் கருத்துக்கள் முழுச் சமூகத்தினது கருத்துக்களினதும் அடையாளமாக இருப்பதாலேயேயாகும். அவருக்கு தனது கருத்துக்களை சொல்ல சகல உரிமையும் இருக்கின்றது. அதேபோல எமக்கும் அந்த உரிமை இருக்கின்றது. எமது கருத்துக்களுக்காக வாதிடுவதில் எமக்கு எந்தவிதமான கூச்சமும் இல்லை. அதேபோல் நாம் பிழையானதும் பிற்போக்கானதும் என நினைக்கும் கருத்துக்களில் இருந்து எமது கருத்துக்களை விலக்கிக் கொள்வதிலும் நாம் பின் நிற்கமாட்டோம்.

வைல்ட் பற்றிய மூலக் கட்டுரையையும், நவம்பரில் நடந்த கடிதப் பரிமாற்றங்களையும் இங்கிருக்கும் பெரும்பான்மையானோர்கள் தெரிந்திருப்பார்கள் என நான் நினைக்கிறேன். இருப்பினும் எனது பார்வையில் அவை பற்றி இங்கு சுருக்கமாக விபரிப்பது உபயோகமாக இருக்கும்.

வைல்ட் பற்றிய கட்டுரைக்கு ஏற்கனவே ஒரு வரலாறு இருந்தது. ஏற்கனவே கோடையில் வெளியாகியிருந்த மிகையதார்த்த வாதமும் ஆன்டிரே பிரெட்டனும் என்ற கட்டுரையின் பாதிப்புக்களுடனேயே இக்கட்டுரை எழுதப்பட்டது. இன்றும் பிரெட்டன் ஒரு முக்கியமான மனிதர் என கருதுகிறேன். அரசியல் பிரச்சினைகள் அவரது நிலைப்பாடு - அவரது ஸ்ராலினிச எதிர்ப்பும் ட்ரொஸ்கிக்கும் நான்காம் அகிலத்திற்குமான அவரது ஆதரவும் - அவர் கலை வரலாறு பற்றி அகவய நனவின் முக்கியத்துவத்திற்கு கொடுத்த அழுத்தத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது என நான் நம்புகின்றேன். கட்டுக்குள் வராத படைப்பியல் கற்பனை என்பது புரட்சியின் வெற்றிக்கு மிக முக்கியமானது என மிக உண்மையாகவும் நேர்மையாகவும் நம்பிய ஒரு சிலரை மட்டுமே வரலாற்றில் எனக்குத் தெரியும்.

நான் வைல்ட்டை நெருங்கிப் பார்த்தபோது இதே கருத்துக்களை அவரிடத்திலும் கண்டு ஆச்சரியப்பட்டுக் கொண்டேன். வைல்ட் மிக மோசமான பகட்டாளனாக இருந்தார். அடிக்கடி அவர் ஒருவனை பிழையான வழியில் எரிச்சல்பட வைக்கிறார். பெரும்பான்மையான அவரது கவிதைகள் பொய்த் தோற்றம் கொண்டவையாக இருக்கின்றன. அவரது பெரும்பான்மையான நாடகங்கள் ஒரு ஆரம்ப கட்ட தீங்கற்ற மலிவான நையாண்டித்தனத்துக்கு மேலேகூடப் போகவில்லை. இருப்பினும், ஒருவர் அவரில் ஏதோ ஒன்று எம்மில் ஆழமான தாக்கத்தை உண்டு பண்ணுவதை சிலநேரங்களில் உணரமுடியும். குறிப்பாக சோசலிசத்தின் கீழ் மனிதனின் ஆன்மா (ஜிலீமீ ஷிஷீuறீ ஷீயீ விணீஸீ ஹிஸீபீமீக்ஷீ ஷிஷீநீவீணீறீவீsனீ) கலைஞனின் பார்வையில் விமர்சனம் (சிக்ஷீவீtவீநீ ணீs கிக்ஷீtவீst), ஜிலீமீ றிவீநீtuக்ஷீமீ ஷீயீ ஞிஷீக்ஷீவீணீஸீ நிக்ஷீணீஹ், ஷிணீறீஷீனீமீ, ஞிமீ றிக்ஷீஷீயீuஸீபீவீs ஒரு வேளை ஏர்னஸ்டாக இருப்பதன் முக்கியத்துவம் (ஜிலீமீ மினீஜீஷீக்ஷீtணீஸீநீமீ ஷீயீ தீமீவீஸீரீ ணிணீக்ஷீஸீமீst) முதலான எழுத்துக்களில் இவற்றைக் காண முடியும்.

கலை வாழ்வையும் இயற்கையையும் பிரதிபலிக்கவில்லை, மாறாக வாழ்வும் இயற்கையும் கலையை பிரதிபலிக்கின்றன என எரிச்சலூட்டும் வகையில் வலியுறுத்தியபோது அதாவது மனிதச் செயலின் பதிவுகளை அவை துளைத்தெடுத்தன எனும்போது அவர் இயங்கியலை நிரூபிக்க முயன்றிருக்கிறார். இது அக்காலப் பகுதியில் வைத்து எண்ணிப் பார்க்கும் பொழுது ஒரு மிக அரிதான செயல். அவரின் இக்கூற்று ஜெர்மன் தத்துவஞானத்தில் மார்க்சும் எங்செல்சும் சுட்டிக்காட்டும் பாயர்பார்க்கின் பொருள் முதல்வாத கருத்தையே எனக்கு ஞாபகத்திற்கு கொண்டு வருகிறது. அதாவது ``இயற்கையில் ... மனித வரலாற்றுக்க முன்பே இருக்கும் இயற்கையில் தான் பயர்பாக் வாழ்கிறார்``. இன்னொரு வகையிற் சொல்வதானால் சிந்தனை, உற்பத்திகளை மனிதன் எதிர்கொள்கையில் சமூக, அல்லது இயற்கை என்ற அவ்வகை உற்பத்தியில் மனிதன் ஈடுபட்டிருப்பினும், அவன் தனது சொந்த செயல்களின் விளைவுகளுடன் அல்லது தனக்கு முற்பட்ட தலைமுறையின் செயல்களின் விளைவுகளுடன் பொதுவாக முரண்பட்டு இயங்குகிறான்.

மீண்டும் வைல்ட் பற்றி எனக்கு பட்ட முக்கிய தன்மை என்னவென்றால் மனிதனின் அகவயச் செயல்பாட்டிற்கு அவர் கொடுத்த அழுத்தமும் மற்றும் மந்தமான பிரதிபலிப்பு என்பதன் ஒரு ஊடகமாக ம்ட்டுமே கலை இருக்கிறது என்பதை அவர் ஆழமாக எதிர்த்தது என்பதுமே. 2ம் அகிலத்தின் சோசலிசத்துக்குள்ளேயே சாத்வீக அல்லது மந்தமான பொருள்முதல்வாத தன்மைகள் இருந்த அக்காலகட்டத்தில் இது ஒரு மிக அரிதான நிகழ்வே. ``வனாந்திரத்தில் ஒருவனின் அழுகைக்குரலின் மூலமாக மட்டுமே கடவுளின் வழிகளைக் கண்டுபிடிக்க முடியும்``. என்று பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கத்தில் வாய்களில் (பொது சனக் கருத்தில் ) திருப்தியுடன் பகிரங்கப் படுத்தப்பட்ட இந்த மனிதன் என்னை மிகவும் பாதிப்பவனாகவும் என் உணர்வைக் கிளறுவனாகவும் இருக்கிறான்.

மேலும் இவ்வகை வெளித்தோற்றங்கள் அனைத்தும் `` கலை கலைக்காகவே `` என்ற வாதத்துடன் இணைத்துப் பார்க்கப்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒரு கலைஞன் தனது ``சமகாலத்துக்கான பேச்சாளனாக`` அதன் மதிப்பின் பணிவான ஊடகமாக இருக்க முடியாது என்று அவர் குறிப்பிடுவதானது வெளிப்படையாகவே முதலாளித்துவ ஒழுங்கமைவில் இருந்து கலைக்கான விடுதலை, உடனடி அரசியல் யதார்த்தம், மற்றும் அதுபோன்ற வற்றில் இருந்து விடுபட்டது என்பதுடன் நேரடியாகவே தொடர்பு கொண்டுள்ளது. அழகியல் மற்றும் கலை என்பது உபயோகமற்றது என்ற கருத்துக்கள், சமூக விதிகளை அதன் தேவைகளை மறுக்கின்ற ஒன்றாகவே வைல்டுக்கு பட்டிருக்கிறது. அவருடைய பார்வையின் எல்லைகள் பற்றி ஒருவர் புரிந்து கொள்ள முடியுமாயினும் அவரது இந்த ஆழமான அலட்சியமற்ற மறுப்பை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது என்றே நான் நினைக்கிறேன்.

ஆகையால் இவை பற்றி நான் எழுதினேன். கூடவே பிராட் எவான்ஸ் பல அம்சங்களில் தனது கருத்து வேறுபாடுகளை எழுதியிருந்தார். நான் புரிந்து கொண்டளவில் அவர் கலை கலைக்காகவே என்ற கருத்தின் உடன்பாட்டாளனாக இருக்க முடியாது. ஏனென்றால் அப்படிப்பட்ட ``குட்டி முதலாளித்துவ`` பார்வை சோசலிஸ்ட்டாக இருத்தல் என்பதுடன் சாத்தியமற்றது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் சொல்கிறார், அவரின் வார்த்தைகளில் சொல்வதானால், கலையானது ``ஒழுக்க நீதிக்கு உட்பட்டவையாக அல்ல சமூக அரசியல் செயலுக்கு`` உட்பட்டவையாக இருத்தல் வேண்டும் என்று.

எனது பார்வையில் மனிதச் செயல்கள் என்ற வட்டத்துக்குள் கலை ஒப்பீட்டளவில் அதன் தன்னிச்சையான விதிகளால் மட்டுமே உருவாக்கமுடியும் என்றே மார்க்சிய விளக்கம் இருக்கிறது என்று திரு பிராட் எவான்ஸ்க்கு எனது பதிலில் அழுத்திக் குறிப்பிட்டிருந்தேன். கலை சமூக மனிதனின் உற்பத்தி, அவனது சமூக நனவின் ஒரு வடிவம் என்பது உண்மைதான். ஆனால் அது வேறு எந்த வடிவத்துக்குள்ளும் குறுக்கி கொள்ளப்பட முடியாதது. ``விஞ்ஞானம், அரசியல், தத்துவம், ஒழுக்கவியல் முதலானவை எடுத்துக்கொள்ளும் விஷயங்களில் பிரச்சனைகளில் இருந்து ஒரு வித்தியாசமான விஷயங்களை பிரச்சனைகளை கலை அணைத்துக் கொள்ளவில்லையா? இல்லை என்றால், சமூக நனவின் பிறவடிவங்களுடன் கலையின் பங்கையும் ஒன்று சேர்ந்ததாக (அதேபோன்றதா) பார்க்க முடியுமென்றால், அல்லது சமூக நனவின் ஏனைய வடிவங்களால் அது பதிலீடுசெய்யப்பட முடியும் என்றால், கலை என்ற ஒன்று ஏன் இருக்க வேண்டும்? என நான் அவரைக் கேட்டேன்.

நான் இன்னொரு பந்தியில் எழுதியிருந்தேன் ``நான் நினைக்கிறேன் கலை உள்வெளி உலகங்களுக்கிடையில், துன்பங்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகுக்கும், ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளில் சொல்வதானால், இசைவான முழுமையான வாழ்வுக்கும் உடனடி யாதார்த்த உலகுக்கும் இடையில் சுதந்திரமாக உலாவுகிறது``. மனித வாழ்வின் இருக்கவேண்டிய முறையான இருப்புக்கு ஏற்ப, சுதந்திரத் தேவைகளின் அழகியலின் துணையுடன் மனித உறவுகளை மற்றும் உலகை மாற்றும் போராட்டமானது, மனித நனவின் தோற்றக்காலத்தில் இருந்தே கலையுடன் பின்னிப் பிணைந்துள்ளது என நான் நினைக்கிறேன்.

என் பார்வையில் கலைவடிவம் சுதந்திரமானதாக புறநிலை முக்கியத்துவமுடைய சக்திவாய்ந்ததாக, ஆன்ம அனுபவங்களை சீரான உணர்வுகளை வளம்பெற செய்யும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கிறது என நான் நினைக்கிறேன்.

சமீபத்தில் எழுதிய திரு எவான்சின் கடிதத்தில் அவர் தான் ஏற்கனவே எழுதியிருந்த அம்சங்களை திரும்பவும் அழுத்திக் கூறியிருந்தார். ``பல்வேறு சமூகங்கள் கலைக் கர்த்தாக்களின் அழகியல் கண்களை மகிழ்ச்சிப்படுத்துவதைத் தவிர கலைக்கு வேறு எவ்வித நோக்கமும் இல்லை`` என நான் கருதுவதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார். இதே அர்த்தத்தில் பல்வேறு குறிப்புகளை அவர் எழுதியிருந்தார். உண்மைக்கு சம்பந்தமல்லாத இதுபோன்ற குறிப்புகளின் நோக்கம் பற்றி என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. மாசுபட்ட வடிவத்தில் மட்டும் விருப்புக் கொண்ட ``மாசுபடா கலை``பற்றி ஒருபோதும் நான் ஆர்வம் காட்டியதோ வரவேற்றதோ இல்லை. ஆகவே இந்த அனாவசிய கருத்துக்கு பதிலளிக்க நான் என் நேரத்தைச் செலவிடப் போவதில்லை.

கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படக் கூடியதாக நான் கருதும் இரண்டு பந்திகளை மட்டும் இங்கு எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

திரு எவான்ஸ் தனது கடிதத்தில் ஓரிடத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: ``நீங்கள் எனக்கெழுதிய பதிலில் 5ம் பக்கத்தில் ``கலை தனக்கு உண்மையாக தனது குறிப்பிட்ட தேவைக்கு உண்மையாக இருக்கும்பொழுது ஒரு சமூகப் புரட்சிக்கு நெருங்கிய பாதைக்கு இயல்பாகவே சமீபித்து வருகிறது`` என நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். இக்குறிப்பு ஒரு ஆர்வமூட்டும் கருத்துருவை முன் வைக்கிறது. விடயம் ஒரு கூட்டாக வர்க்கத்திற்கெதிரான ஒடுக்குமுறைக்கெதிரான ஆர்வத்தை வலியுறுத்தாத பட்சத்தில், எப்படி பாட்டாளிகள் தங்கள் சுதந்திரத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்? அழகியற் கலையின் தனிமனித ரசனையை நீங்கள் ஆதரிப்பதன் நோக்கம் என்ன? கலை வர்க்கப்போரட்டத்தின் யதார்த்த முன்னோக்கை பிரதிநிதித்துவப் படுத்தாவிட்டால், எப்படி பெரும்பான்மையான மக்கள் தம் குறிக்கோளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்? தற்கால அரசு கொடுக்கும் கல்வி கற்றல் மூலமாக பெரும்பான்மையான மக்கள் வர்க்கம் பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையை காத்துக்கொள்வதிலேயே நேரமின்றி இயங்கிக் கொண்டிருக்கும் இம்மக்களுக்கு வர்க்கம் பற்றித் தெரிந்து கொள்ள நேரமற்ற நிலையில், கலை மட்டுமே பல்வேறு தொடர்பு சாதனங்கள் மூலம் அதுபற்றி தெரிந்து கொள்ள வழியேற்படுத்தும், கல்வியூட்டும் கருவியாக இருக்க முடியும்``.

அதன் பிறகு அவர் தன் கடிதத்தில் எழுதுகிறார் ``கலைத்துவ வடிவம்`` பற்றி நீங்கள் குறிப்பிடும்பொழுது, சுதந்திரமான சக்திவாய்த புறவய முக்கியத்துவமானது ஆன்ம அனுபவத்தையும் சீரான உணர்வுகளையும் வளம் பெறச் செய்கிறது`` என்கிறீர்கள். உங்களது ``ஆன்ம அனுபவம் `` என்ற சொற்களை மார்க்ஸ் கேள்விப்பட்டால் அவர் உங்களைப் பார்த்து சிரித்திருப்பார்.

``எந்த வகை ஆன்ம அனுபவம் இந்த பொருளாயத (அரசியல் பொருளாதார) அரசை மாற்றியமைக்கப் போகிறது? ஆன்ம அனுபவங்களை புதிய காலத்திற்கு விட்டுவிட்டு பொருளாயத சக்திகள் தான் பொருளாயத உலகை மாற்ற முடியும்``

நான் இந்த இரண்டு பிரச்சனைகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். நவீன வர்க்கப்போராட்டத்தின் யதார்த்த சித்திரத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டும்தானா கலையின் நோக்கம்? அத்துடன் நகைப்பிற்கிடமாக திரு எவான்ஸ் சொல்லும் ``ஆன்ம அனுபவம்`` சோசலிச போராட்டத்தில் என்ன பங்கு வகிக்கிறது, அப்படி ஏதும் பங்கிருக்கும் பட்சத்தில்?

இவைபற்றி நேரடியாக இன்றி 1920 களில் ட்ரொட்ஸ்கியின் கலை கலாச்சாரம் சம்பந்தமான, முக்கியமாக கலையும் புரட்சியும் பற்றி சுட்டிக்காட்டுவதன் மூலமாக கவனம் செலுத்த விரும்புகிறேன்.

1920களில் எழுதப்பட்ட ட்ரொஸ்கியின் ஆக்கங்களின் முக்கியத்துவம்.

என்னை பொறுத்த வரையில் ``இலக்கியமும் புரட்சியும்`` தான் இதுவரை காலமும் கலைபற்றிய மார்க்சிய அணுகல் முறையில் தலைசிறந்ததாகும். அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றில் கிடைத்தற்கரிதாய் இருக்கிறது அல்லது அச்சடித்தது அனைத்தும் முடிந்துபோய் விட்டிருக்கிறது. எதிர்காலத்தில் அதை நாமே பிரசுரிப்போம் பெரும்பாலும் புதிய மொழிபெயர்ப்புடன்-என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. தற்போதிருப்பதும் மிகவும் விரும்பபப்படுவதாக இருக்கிறது.

அது ஒரு தலைசிறந்த படைப்பு. ஆனால் ``இடது`` சாரி எழுத்தாளர்கள் என்று சொல்லப்படுகின்றவர்களால் - ஒருவருக்கு இது எதிர்பாராத ஒன்றாக இருக்கலாம் - நிச்சயமாக இது ஒதுக்கப்பட்டே வந்திருக்கிறது. அழகியல் பிரச்சனைகள் பற்றி மார்க்சிய விமர்சகர்கள் என்று தாங்களே அறிவித்துக் கொள்பவர்கள் அல்லது துறைசார்ந்தோர் ஆகியோரால் எழுதிக் குவிக்கப்பட்டிருப்பதை ஒருவர் பார்த்தாரானால்-இலக்கியமும் புரட்சியும் பற்றியோ அல்லது ட்ரொஸ்கியின் வேறு எழுத்துக்கள் பற்றியோ அங்கு மிக குறைவான எடுத்துக்காட்டுகளை மட்டுமே பார்க்க முடியும்.

ஸ்ராலினிச பேய்த்தனத்துடன் ஒப்பந்தம் கொண்டிருந்த ஜார்ஜ் லூகாக்ஸ் எதிர்ப்பான சில குறிப்புகள் தவிர ட்ரொட்ஸ்கி பற்றிய எந்த குறிப்புகளையும் அவர் எழுதவில்லை. தனது உயிர் பற்றி ஆபத்து என்ற பிரச்சனையே இல்லா ஹெர்பர்ட் மார்க்சிஸ் தனது கலை பற்றிய மார்க்சிய நோக்கு பற்றிய விமர்சனப் பார்வையான ` அழகியல் பரிமாணம் ` என்ற புத்தகத்தில் ட்ரொஸ்கியை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டிருந்தார். அல்லது முதலானவர்கள் கூட ட்ரொட்ஸ்கிய அடோர்னோ அல்லது ஹோர்க்கெய்மர் ஆக்கங்கள் பற்றி ஏதும் குறிப்பிட்டிருந்ததாக எனக்குத் தெரியவில்லை. அமெரிக்க கல்வித்துறையைச் சேர்ந்த பிரடெரிக் ஜேம்சன் தனது ``மார்க்சியமும் வடிவமும் : இலக்கியம் பற்றிய 20 நூற்றாண்டு இயங்கியற் கோட்பாடுகள்`` என்ற புத்தகத்தில் போகிறபோக்கில் ஒரேயரு இடத்தில் மட்டும் குறிப்பிட்டுச் சென்றிருக்கிறார். காலஞ்சென்ற ரேமண்ட் வில்லியம்ஸ் தனது ``மார்க்சியமும் இலக்கியமும் `` என்ற நூலில் ஒரேயரு இடத்தில் மட்டுமே ``இலக்கியமும் புரட்சியும்` பற்றி தவறான குறிப்பை தந்துள்ளார். இந்த வரிசையில் ஒருவர் கிளிப் ஸ்லாட்டரையும் சேர்க்கலாம். 1980ல் பிரசுரிக்கப்பட்ட அவரது ``மார்க்சியமும் கருத்தியலும் இலக்கியமும்"` என்ற புத்தகத்தில் அவர் ஒரு அத்தியாயத்தையே ``இலக்கியமும் புரட்சியும்`` புத்தகத்திற்கு ஒதுக்கியிருந்தார். ஆனால் ஒரு ஆழமான முக்கியத்துவம் எதுவும் இன்றி அது சிரத்தையற்ற ஒரு பாசாங்கான தன்மையுடையதாகவே இருந்தது.

இந்த முழுமையான ஒதுக்கல் மௌனம் பொதுவாக விஷயத்தை விளக்கினாலும், நாம் மேலே குறிப்பிட்ட பிரச்சனையை புரிந்து கொள்ள இது மேலும் உதவும். இந்த புத்தி ஜீவிகள் ஸ்ராலினிசத்தை அல்லது ஸ்ராலினிச கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, அல்லது அவற்றுக்கிசைவாக வேறுபலவற்றுக்குள் இயங்கினர்.

சோவியத் யூனியனில் அதிகாரத்துவத்தின் எழுச்சிக்கு எதிரான மார்க்சிய போராட்டத்தில் எய்யப்பட்ட முதல் கணையாக ``இலக்கியமும் புரட்சியும் `` இருந்தது என்பதை ஒருவர் கவனத்திற் கொள்பவராக இருந்தால், இதன் மேலான விரோதம் வளர்க்கப்பட்டதை இன்றவர் புரிந்துகொள்ளமுடியும். ஸ்ராலினிசத்தால் உருவாக்கப்பட்ட தேசியவாத குட்டி முதலாளித்துவ தட்டுக்கள் மற்றும் சமகால குட்டி முதலாளித்துவ இடதுசாரி தட்டுக்களின் கருத்துக்களில் இருந்தும் இது கலை, சமூகம் மற்றும் இலக்கிய விமர்சனம் பற்றிய உண்மையான வாழ்க்கை சார்பான முற்றிலும் மாறுபட்ட கருத்தை வைக்கிறது. உயர் மார்க்சிய மரபின் இலக்கிய விமர்சனத்தை முன்னெடுத்து அன்று சமகால கலாச்சாரப் பிரச்சனைகள் என்பவற்றுக்கு பாவித்ததன் மூலம், ஆளும் குழுக்களால் முன்வைக்கப்பட்டிருந்த சூழ்நிலைக்கு ட்ரொட்ஸ்கி ஒரு மாற்றத்தை வைத்தார்.
Modern oil painting in canvas art Pictures, Images and Photos
இந்தப் புத்தகம் எழுதப்பட்ட சூழ்நிலையும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது. 1920 கோடையில் அவர் விடுப்பில் இருந்தபோது, சோவியத் அரசின் வெளியீட்டாளர்கள் பிரசுரிக்க இருந்த புரட்சிக்கு முந்திய அவரது இலக்கிய கட்டுரைகளில் தொகுப்பிற்கு அவர் முன்னுரை எழுதுவதில் ஈடுபட்டிருந்தார். 1917ல் இருந்து சோவியத் இலக்கிய வாழ்வு சம்பந்தமாக பரிணமித்த அம்முன்னுரை, அளவில் பெருத்தும் 1922ல் கூட முடிக்கப்படாமலும் இருந்தது. அடுத்த கோடையில் அவர் அந்த வேலையை திரும்ப எடுத்துக் கொண்டு, ``இலக்கியமும் புரட்சியும்`` என்ற தலைப்பில் முடித்தார்.

சோவியத் யூனியனின் அதிகாரத்துவத்திற்கு எதிராக பகிரங்கமான சண்டைப் பிரகடனத்தோடு- 1922 அக்டோபரில் உருவாக்கப்பட்ட இடதுசாரி எதிர்ப்பு என்பவற்றுக்கு முதல் அல்லது அந்த நிகழ்வுகளின் சூழ்நிலையில் இதை ட்ரொட்ஸ்கி எழுதினார். ஏராளமான விபத்துக்களும் கொடும் செயல்களும் நிகழ்ந்த காலப்பகுதி இது. லெனினது அரசியல் வாழ்வின் இறுதிக் காலப்பகுதி: ஸ்ராலின், சினோவியோவ், காமினோவ் ஆகிய மும்மூர்த்திகள் ட்ரொட்ஸ்கி மேல் அவதூற்றுப் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்ட காலப்பகுதி: இத்தாலியில் முசோலினியின் பாசிசக் கட்சி பலப்பட்ட காலப்பகுதி: கம்யூனிஸ்ட் கட்சியின் அமைதிவாத போக்கின் உதவியால் புல்கேரியாவில் ஏற்பட்ட எதிர்ப்புரட்சி நிகழ்ந்த காலப்பகுதி/ரூர் பிரெஞ்சு ஆக்கிரமிப்பால் ஜெர்மனியில் ஏற்பட்ட புரட்சி கர நெருக்கடியின் காலப்பகுதி மற்றும் 1923 இறுதிப்பகுதியில் நிகழ்ந்த ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியினதும் ஸ்ராலின் சினோவியேவினதும் அரசியல் பதட்டநிலை படுமோசமான தோல்வி அடைந்த காலப்பகுதி.

ட்ரொட்ஸ்கி இப்படிப்பட்ட ஒரு முக்கியமான காலப்பகுதியில் கலை சம்பந்தமான வேலைக்கு தன்னை அர்ப்பணிக்குமாறு ஒரு தவறான கணிப்பீட்டைச் செய்தார் என்று சிலர் நம்பக்கூடும் என எனக்குத் தெரியும். அது ஒரு மிகக் குறுகிய பார்வை என நான் நினைக்கிறேன். என் தனிப்பட்ட கருத்தையும் இங்கு சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் ``இலக்கியமும் புரட்சியும்`` வேறு ஒரு மாற்றீடு இல்லாத தன்னிகரற்ற ஆக்கம். இது வழிகாட்டி நூலாகவும் ஆழமான அறிவிற்கு மூலநூலாகவும் இல்லாமல் இருப்பதை என்னால் கற்பனை கூட செய்யமுடியவில்லை. இருப்பினும் இதுபற்றி சரியென்ற உறுதிப்படுத்தலை கணிசமான அளவு என்னால் தரமுடியும் என்று நான் நினைக்கிறேன்.

முதலாம் உலகயுத்தத்தின் முடிவிற்கு பிறகு ஏற்பட்ட புரட்சி எழுச்சி போராட்ட அலையின் குறைவு ஒரு தனிமைப்பட்ட தொழிலாளர்களின் அரசாக போல்ஷிவிக் ஆட்சி நீண்ட காலப்பகுதிக்கு முகம் கொடுத்தது. உடல்நலமின்மை தன் செயல்களை முடக்குவதற்கு முதல் லெனின் ரஷ்ய பொருளாதார கலாச்சார பின்தங்கிய தன்மையின் செல்வாக்குக்கு உட்பட்டிருக்கக் கூடிய புரட்சிகர ஆட்சியின் ஆபத்து பற்றியும் போல்ஷிவிக் கட்சியில் அதன் பிரதிபலிப்புக்கள் பற்றியும் கூட கடுமையாக எச்சரித்தார். இந்தப் பழமைவாத, அதிகாரத்துவ கூறுகளுக்கு எதிரான முதல் போராட்டத்தில், லெனினுடன் ஒரு பங்காளன் என்ற வகையில் லெனினது இறப்புக்குப் பிறகு ட்ரொட்ஸ்கி, கட்சியும் ஆட்சியும் எதிர்கொண்டிருந்த புதிய பிரச்சனைகளை மார்க்சிய வழியில் தீர்க்கும் சவாலை எடுத்துக்கொண்டார்.

சரியான அரசியல் திட்டங்களின் பெருக்கத்தாலோ, அன்றி சில சுலோகங்களை உயர்த்துவதாலோ அல்லது புத்திசாலித்தனமான சில தந்திரோபாயங்களைக் கடைப்பிடிப்பதாலோ மட்டும் சோவியத் யூனியனின் தலைவிதி நிர்ணயிக்கப் படுவதில்லை என்பதை உணர்த்திய ட்ரொட்ஸ்கி கலாச்சாரப் பிரச்சனைகளிலும் ஒரு பகுதி கவனம் செலுத்தினார். 1923 யூலையில் பிரசுரிக்கப்பட்ட ``அன்றாட பிரச்சனைகள்`` என்று பின்பு அழைக்கப்பட்ட முதல் கட்டுரையில், இம்மாதிரியான அணுகுமுறையின் பாலான தன் எரிச்சலை வெளிக்காட்டியிருந்தார். இது இடது எதிர்ப்பை ஒழுங்குபடுத்துவதற்கு முதல் என்பது உண்மைதான், ஆயினும் கூடவே ஆட்சிக்காரர்களின் மேலான ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பை பற்றி நேரடியாக இதுபேசவில்லை. இருப்பினும் இது அவரது அக்காலப்பகுதி சிந்தனையை தெளிவாக பிரதிபலிக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

இப்பகுதி ``அரசியலால் மட்டுமல்ல`` என்ற தலையங்கமிடப்பட்டிருந்தது. ட்ரொட்ஸ்கி இச் சொற்றொடரின் முக்கியத்துவத்தை விளக்குவதுடன் தொடங்குகிறார். ''பிரச்சார நோக்கம் கொண்டு எழுதுபவர்கள் பேசுபவர்கள் அனைவராலும் இந்தச் சிறு சிந்தனையானது எடுத்துக் கொள்ளப்பட்டு கவனமாக மனதில் இருத்தப்பட வேண்டியது. காலமாற்றம் மாறிய குரலையும் கொண்டுவருகிறது. எமது கட்சியின் புரட்சிக்கு முந்தைய வரலாறு என்பது புரட்சிகர அரசியலின் வரலாறும் கூட. கட்சி இலக்கியம் கட்சி அமைப்புக்கள் எல்லாமே நேரடி குறுகிய அர்த்தங்களில் அரசியலின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. தற்போது தொழிலாளர் வர்க்கம் புரட்சியின் அடிப்படை விளைவுகள் பற்றி மிகத் தெளிவாக விளங்கி உள்ளது. அந்த விளைவுகளின் கதையை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பது தேவையில்லாத ஒன்று. தொழிலாளர்களின் மனதை இனிமேல் அவை கிளர்ச்சியடையச் செய்யப் போவதில்லை மாறாக அவர்கள் மனதில் இருந்து கடந்தகாலப் படிப்பினையை அழிப்பதற்கே சாத்தியமுள்ளது. எமது முக்கிய பிரச்சனைகள் கலாச்சார, பொருளாதார மீள்கட்டுமானம் பற்றித் திரும்பியுள்ளன.'' (எனது அழுத்தம்)

தங்களுக்கு எந்த நன்மையும் செய்திராத ரஷ்ய முதலாளிகளுடன் ரஷ்ய தொழிலாளர்கள் மிக இலகுவில் முறித்துக் கொண்டார்கள் என ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் மேலும் சொன்னார் ``ஒரு விலையும் செலுத்தாமல் வரலாறு எதையும் இலவசமாய் கொடுத்துவிடுவதில்லை. ஒரு விஷயத்தில் அது குறைத்துக் கேட்டாலும்-அதாவது அரசியலில்-மற்றொரு விஷயத்தில் அது எங்கஆளை கூடுதலாக செலுத்த வைக்கிறது-அதாவது கலாச்சாரத்தில்``. சோவியத் யூனியனில் சோசலிச அடித்தளத்தை இடுவதற்கு முக்கிய தடையாக ``அரக்கத்தனம்`` (அவர் மீண்டும் மீண்டும் இப்பெயரடையை உபயோகப்படுத்தினார்) ஆன ஆன்மீக, கலாச்சாரப் பிற்போக்கு வாதம் இருக்கிறது மற்றும் மிகமுக்கியமான இந்த சமூக யதார்த்தங்களில் ஒன்றுதான் வக்கிரமான சுயநலமான விசயஞானமற்ற ஒரு அதிகாரத்துவத் தட்டின் தோற்றத்திற்கு வழிவகுத்தது என இக்காலப்பகுதியில் தான் எழுதிய எல்லாவற்றிலும் ட்ரொட்ஸ்கி தெளிவாக அடையாளம் கண்டிருந்தார்.

கலாச்சாரம், சமூக வாழ்க்கை சம்பந்தமாக 1920 களின் நடுப்பகுதியில் அவரது முக்கிய எழுத்துக்களான ``இலக்கியமும் புரட்சியும்``, ``அன்றாடப்பிரச்சனைகள்``, ``இளம் தலைமுறையினர், அரசியல் படியுங்கள்!``, ''சோசலிசமும் கலாச்சாரமும்'', ''விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வானொலியும்'' மேலும் பல ஆக்கங்கள் எல்லாமாக மனித உறவுகளை சோசலிச ரீதியில் ஒழுங்கமைப்பதற்கு சாதகமாக மிக ஆழமான தாக்கம் நிறைந்த விவாதங்களை, அசாதாரணமான புற நிலை அறிவை அவை வைத்திருக்கின்றன.

சோவியத் ஒன்றியத்தில் நிலவிய சூழ்நிலையை ட்ரொட்ஸ்கி அணுகியவிதம் மிகவும் பாரதூரமானது அல்லது ஸ்ராலினிஸ்ட்டுக்களின் வெற்றிக்கு அவர் விட்டுக்கொடுத்து விட்டார் என்று கருதுவது முற்றிலும் தவறானது. ஆனால் சோவியத் மக்களின் கலாச்சார மட்டத்தின் ஆழமான மாற்றம் என்ற ஒன்று மட்டுமே மார்க்சியப் பண்பின் வெற்றியின் சாத்தியத்திற்கு அடித்தளமாக இருக்கமுடியும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருந்தது மட்டுமின்றி, அவர் அந்த மாற்றத்தை உருவாக்கவும் போராடினார். வளர்ந்து வந்த அதிகாரத்துவ புற்றுநோயை மார்க்சிஸ்டுகளால் தவிர்க்க முடியாமற் போனது எமக்குத்தெரியும். ஆனால் அதுவே ட்ரொட்ஸ்கியின் முயற்சிகளுக்கு எதிரான ஒரு வாதமாக இருக்கமுடியாது. சோசலிச கருத்துக்களின் வளர்ச்சிக்கான ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கு ஒரு மிகச்சிறந்த கருவியாக இருப்பதை இன்று அவருடைய ஆக்கங்கள் நிரூபிக்கின்றன.

மார்க்சியம் எதிர் "பாட்டாளிகள் "கலாச்சாரம்

மதிப்புமிக்க ஒரு சமர்த்தியமான விவாதிக்கப்பட்ட ஆக்கங்களாக ``இலக்கியமும் புரட்சியும்`` ``வர்க்கமும் கலையும்`` ஆகியன இருக்கின்றன. அவை தொட்டிருக்கின்ற அனைத்து கேள்விகளையும் கவனத்திற் கொள்வது-அப்படிச் செய்யக்கூடிய ஒரு சூழ்நிலையில் நானிருந்தாலும் கூட-பொருத்தமற்ற ஒன்றாகவே இருக்கும். தற்போதைய எமது வேலையின் நோக்கிற்கு இவ்வரலாற்றுடன் பொருத்தப்பாடு பற்றியும் நான் ஏற்கனவே திரு எவான்சின் கடிதம் சம்பந்தமாக எழுப்பியிருந்த கருத்துக்களுக்கு பதில்களை அளிக்கும் முகமாகவும் நான் பின்வரும் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதானது உபயோகமாக இருக்கும் : ஒரு வரலாற்று மற்றும் விஞ்ஞான நிலைப்பாட்டில் ஆன்மீக கலாச்சாரம் உட்பட கலாச்சாரம் என்றால் என்ன? கலாச்சாரம், கலை முதலியவற்றிற்கு வர்க்க அளவீட்டை பயன்டுத்துவதன் எல்லைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன? மனித விடுதலைக்கு கலையும், அழகியல் அனுபவமும் தாமே என்னென்ன பங்களிப்புக்களைச் செய்கின்றன.

எனது இப்பகுதி விரிவுரையை கீழ்வரும் விதத்தில் அளிக்க விரும்புகிறேன். கலையின் ``பங்களிப்பை`` ஏற்றுக் கொள்ளுதல் பற்றி இங்கு நாம் பேசும் போது, அதை ஒரு குறுகிய அர்த்தத்தில் ஒரு நிர்ணயிக்கப்பட்ட கருத்தாக அல்லது வெளிப்படையாக சொல்வதனால் கலைஞர்கள் தங்கள் ஆக்கங்களைச் செய்வதற்கு எமது முத்திரைகுத்திய அங்கீகாரம் தேவை என்ற வகையில் தவறாக புரிந்து கொள்ளப்படக்கூடாது. கலைகள் மனிதகுலத்தை நீண்ட காலமாக ஆழமாக பாதிப்புக்குளாக்கியே வந்துள்ளன. எங்களுடைய மதிப்பீடுகளை நாம் நிறுத்திக் கொண்டாலும்கூட அவை தொடர்ந்தும் பாதிப்பு செலுத்தியே வரும். இதிலோ அதிலோ கலைஞர்களோ அல்லது அவர்களது பாணியிலேயோ மார்க்சிய ஆசீர்வாதத்தை வழங்குவதே எமது நோக்கு என்ற பணி எனக்கு மிக மோசமான எரிச்சலை உண்டுபண்ணியிருக்கிறது. எமது வெளியீட்டில் வரும் பல கட்டுரைகளில் இப்போதும் கூட இந்தத் தன்மைகளின் கூறுகள் சிலவற்றைப் பார்க்க முடிகிறது.

மார்க்சிய அழகியலை நாம் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை. இன்னொரு வகையிற் கூறுவதானால் எலிசபெத் நாடகங்களை அல்லது 14ம் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தாலிய ஓவியங்களை தொழிலாளர்களுக்கு சிபாரிசு செய்ய வேண்டாமா என்ற கேள்வியுடன் நாம் தொடங்கவில்லை. குறைந்த பட்சம் கலைப்படைப்பில் நாமும் பங்கு கொள்ள விரும்பும் ஓர் ஆர்வமும் தடையின்றி அதனது ஆக்கங்கள் எமக்கு கிடைப்பதற்கு உரிமையுடையதாய் விஞ்ஞானிகளுக்கே உரியதான உரிமை-பொறுப்பாகிய இந்த இயற்கைப் பிரபஞ்சத்தை நுணுகி ஆராய்ந்து அவர்களின் கண்டு பிடிப்புகளை சாத்தியமான அளவு பெரும்பான்மை மக்களுக்கு கொண்டு செல்ல வைக்க வேண்டுமென்ற அடிப்படையிலேயே இந்த விரிவுரை எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் மனித மனத்தால் செய்யப்பட்ட புறவய முன்னேற்றங்கள் பற்றி பேசுகிறோம் அவை விவாதத்திற்கு அப்பாற்பட்டவை. இந்த கலாச்சார வரலாற்றுப் பிரச்சனைகளை நாங்கள் கவனிக்கும் விதத்தில் இவை நிறைய பாத்திப்புகளைக் கொண்டுள்ளன. திடமான கருத்துக்களுடனும் நோக்கத்துடனுமே நாம் இவைபற்றிய மதிப்புரைகளைச் செய்கிறோம்.

கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கறாரான ஆய்வுகளுக்கு மார்க்சியத்தை ஒரு இழிவான மாற்றிக் கொண்டிருந்த பதிலீட்டுத் திட்டமாக ஸ்ராலின் தலைமையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த மத்தியதர வர்க்க தட்டுக்களின் கோட்பாட்டு மற்றும் அரசியல் சவால்களுக்கு ஒரு பகுதியாகவாயினும் பதிலளிப்பதாகவே 1922-26 காலகட்டத்தில் கலாச்சாரம் பற்றி ட்ரொட்ஸ்கி எழுதிய அனைத்தும் இருந்தன. நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த இந்த இரகசிய திட்டமிடுதலின் ஒரு வடிவமாக முதலாளித்துவ மற்றும் பாட்டாளி வர்க்க புரட்சிகளை விமர்சன பூர்வமற்ற முறையில் அடையாளப்படுத்திக் கொள்ளுதல் இருந்தது. சோவியத் தொழிலாள வர்க்கத்தின் பணி பழைய கலாச்சார சாதனைகள் அனைத்தையும் துறந்து ஒரு புதிய ``பாட்டாளிகள்`` கலாச்சாரத்தை அமைப்பதே என்பது போன்ற கோட்பாட்டு விரிவாக்கங்களுடன் கையோடு கைகோர்த்தே இவை பெரும்பாலும் நிகழ்ந்தன.

மனிதகுலத்தின் கடந்தகால கலாச்சார சாதனைகள் நிவர்த்தி செய்ய முடியாத வகையில் (சம்பந்தமில்லாத) வர்க்கத் தொடர்புகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது போன்ற மார்க்சியத்துக்கு எதிரான கருத்துக்கள், `புரொலிட்கல்ட்` -பாட்டாளிகள் கலாச்சாரம்-இயக்கத்தினரின் புத்திஜீவித சொத்தாக இருந்தது மட்டுமின்றி, கட்சிச் சூழலிலும் குறிப்பிட்டளவில் ஆட்சி செலுத்தத் தொடங்கியது. உதாரணத்துக்கு ரஷ்ய முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ புத்திஜீவித சொத்தாக இருந்தது, கட்சிச் சூழலிலும் குறிப்பிட்டளவில் ஆட்சி செலுத்தத் தொடங்கியது. உதாரணத்துக்கு ரஷ்ய முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ புத்திஜீவித பிரதிநிதிகள் புதிய தொழிலாளர் அரசின் குடிமக்களுக்கு என்ன சொல்ல வேண்டும்?

Modern oil painting in canvas art Pictures, Images and Photosமரபான மார்க்சியத்தை விட 19ம் நூற்றாண்டு ஜனரஞ்சகவாதத்தையே இவ்வகையான விவாதங்கள் எதிரொலித்தன. தனது ``ஆன்மீக மறுபிறப்``புக்கு பிறகு 1896ல் டால்ஸ்டாய் எழுதிய ``கலை என்றால் என்ன?`` என்பதை ஒருவர் படிப்பாரானால் அவர் இதேமாதிரியான தன்மைகளை அவதானிக்கலாம். அவர் சமகாலக்கதையை ``தொழில் செய்யும் மனிதனின்`` ஒரு மேல் வர்க்க கலாச்சார தன்மையுடையது என்று அழுத்தமான சொற்களில் கண்டனம் செய்கிறார். அவர் இரண்டு வகை கலையை மட்டுமே அனுமதிக்கிறார், ஒன்று கிரிஸ்டியன் கலை மற்றையது சாதாரண உணர்வுகளையும் பொதுவாழ்க்கையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கலை... மக்களின் கலை--பிரபஞ்சக் கலை. மிகுதிக்கலைகள் அனைத்தையும் பற்றி, அவை ``இல்லாமற் செய்யப்படவேண்டும் மறுக்கப்பட்டு இழிவானதாக்கப்பட வேண்டும்`` என்கிறார். டால்ஸ்டாய் என்ற நாவலாசியரை ஸ்ராலினின் அதிகாரத்துவத்துடன் இணைத்துப் பார்ப்பதல்ல நோக்கம். நாம் சில வர்க்க, மற்றும் கருத்தியல் போக்குகள் பற்றியே பேசுகிறோம்.

ட்ரொட்ஸ்கியின் பாங்கு கொஞ்சம் வித்தியாசமானது.

ஒருவேளை லெனினதும் கூடத்தான். 1920 அக்டோபரில் பாட்டாளிவர்க்க கலாச்சாரம் தொடர்பாக லுனாசார்ஸ்கியால் வழங்கப்பட்ட சாதகமாக எடுத்துக்கொண்ட விமர்சனத்திற்கு பதிலளிக்கையில் லெனின் எழுதிய வரைவு தீர்மானத்தினை ஒருவர் குறிப்பாகக் கருதமுடியும். அவரது முன் மொழியப்பட்ட தீர்மானம் பகுதி கூறுவதாவது: ``மார்க்சியம் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் தத்துவம் என்றவகையில் அதன் வரலாற்று முக்கியத்துவத்தை வென்றிருக்கிறது. ஏனென்றால், முதலாளித்துவ சகாப்தத்தின் மிகவும் மதிப்புள்ள சாதனைகளை நிராகரிப்பதற்கு அப்பால், மாறாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மனித சிந்தனை மற்றும் கலாச்சார அபிவிருத்தியின் மதிப்பின் அனைத்தையும் உட்கிரகித்து மற்றும் மறுபாணியாக்கியுள்ளது.``

``இயற்கை அளித்த வளத்தில் இருந்து இதுவரைகால மனித வரலாற்றுத் தொடர்ச்சியில் அவனால் உருவாக்கப்பட்ட கைப்பற்றப்பட்ட கற்றுக்கொள்ளப்பட்ட, நிர்மாணிக்கப்பட்ட அனைத்தும்`` கலாச்சாரத்துக்கான வரைவிலக்கணம் என தனது ``கலாச்சாரமும் சோசலிசமும்`` என்ற புத்தகத்தில் ட்ரொட்ஸ்கி எழுதுகிறார்.

அதன்பிறகு மனிதனின் கலாச்சாரச் சாதனையின் இதயத்தில் இருக்கும் முரண்பாட்டைச் சுட்டிக்காட்டுகிறார். ``கலாச்சாரம் மனிதனது இருத்தலுக்கான இயற்கையுடனான போராட்டத்தாலும் வாழ்நிலையின் அபிவிருத்திக்காகவும் ஆதிக்கத்தை அதிகரிப்பதற்காகவுமாக வளர்ச்சியடைந்தது என்பதை நாங்கள் இப்பொழுது உறுதியாக நிர்மாணிக்கலாம்-கூறலாம். ஆனால் இதே அடிப்படையில் தான் வர்க்கமும் தோன்றியது. அதாவது வரலாற்றுரீதியான கலாச்சாரம் வர்க்கத்தன்மையுடையதாக இருந்தது. ஆனால் இதன் அர்த்தம் நாம் கடந்தகால கலாச்சாரங்கள் அனைத்திற்கும் எதிரானவர்கள் என்பதா?

``உண்மையில் இங்கு ஒரு ஆழமான முரண்பாடு உள்ளது. மனித ஆதிக்கத்துக்காக, மனித முயற்சியால் உருவாக்கப்பட்ட கைப்பற்றப்பட்ட நிர்மாணிக்கப்பட்ட அனைத்துமே கலாச்சாரம். ஆனால் இது ஒரு தனிமனிதன் சம்பந்தப்படாமல் ஒரு சமூக மனிதன் சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதால், கலாச்சாரம் வர்க்க ஒடுக்குமுறையின் அடிப்படைக்கருவியாக இருக்கிறது.``

மேலும் நாம் தொழிலாளர்களை இக்கலாச்சாரத்தை படிக்கவும் துறைபோக உணரும்படியும் தூண்டுவோம் என்று ட்ரொட்ஸ்கி குறிப்பிடுகிறார். இது எப்படிச் சாத்தியம்? அடிப்படையில் வர்க்கச் சமுதாயம் என்பது உற்பத்தியை ஒழுங்கமைப்பது என்பதை மறந்து பலர் இந்த முரண்பாடுகளில் தடுமாறுவதை அவர் கவனத்திற்குக் கொண்டுவருகிறார்.

அவர்மேலும் தொடர்கிறார். ``இவ்வடிப்படையின் அடிப்படை என்ன?- சமூகத்தின் வர்க்க ஒழுங்கமைப்பா அல்லது உற்பத்திச் சக்திகளா? எந்தச் சந்தேகமும் இன்றி உற்பத்திச் சக்திகள்தான். இந்த உற்பத்திச் சக்திகளில் மனித குலத்தின் பொருள்வகைப்பட்ட பொருளாதார நுட்பத்திறனும் தனது இருத்தலை உறுதிப்படுத்த அவனது வரலாற்று திறனும் தெளிவாகின்றன'' (அழுத்தம் எனது)

நமது தற்போதைய விவாதத்திற்கு இது மிகவும் இன்றியமையாதது என நான் நினைக்கின்றேன். கலாச்சாரத்தின் முதன்மைச் சிறப்பு, மனிதகுலத்தின் புறநிலை சாதனை என்றவகையில், வரலாற்று ரீதியாக முயன்று பெற்ற அதனுடைய தேர்ச்சி மற்றும் திறமைகளின் சடரீதியான வடிவம் என்றவகையில், அதன் வர்க்கத்தன்மைக்கு மேலாக தீர்மானகரமானது , அதன் மாறும் தன்மை மற்றும் சார்புரீதிக் களஞ்சியம் என்று டிராட்ஸ்கி வலியுறுத்துவதாக எனக்குப்படுகிறது. இந்த அம்சத்திற்கு பின்னர் வர விரும்புகிறேன்.

ட்ரொட்ஸ்கியின் பார்வையில், ஒரு ஆன்மீக கலாச்சாரத்தின் வடிவத்தைப்போல் கலையும் இவ்வகையான புறநிலைத் தன்மையை கொண்டிருந்தது.`` தனது சுமைகளை மனிதன் கண்டு கொள்வதற்கான வழிகளில் ஒன்றாக இது இருக்கிறது. இக்கருத்துப்படி விஞ்ஞான தொழில்நுட்ப பாரம்பரியத்தில் இருந்து கலையின் பாரம்பரியம் வேறுபாடுகள் கொண்டதல்ல. அல்லது (இதேபோல்) அவை குறைந்தபட்ச முரண்பாடுகளையும் கொண்டவையும் அல்ல. எப்படியிருப்பினும் விஞ்ஞானம் போலன்றி கலையானது விதிகள் அமைப்புகள் மூலமாக அன்றி குழு பிம்பங்கள் மூலமாக உலகை ``அறிதல்`` வடிவமாக இருக்கிறது.

இதுசம்பந்தமான கேள்வியை அலெக்சாண்டர் வொரொன்ஸ்கியின் ``வாழ்வின் அறிதலாக கலை`` என்பது மிக விரிவாக ஆராய்ந்துள்ளது. சோவியத் இலக்கிய உலகின் ஒரு முக்கிய நபராக இருந்த வொரொன்ஸ்கி, இடது எதிர்ப்பின் அங்கத்தவராகவும் இருந்து பின்பு ஸ்ராலின் 1937 சோசலிச எதிர்ப்பு கொலைகளில் பலியானது பலருக்கு தெரிந்திருக்கும். நாங்கள் விரைவில் அவரது முக்கியமான கட்டுரைகள் பரவற்றை பிரசுரிக்க இருக்கிறோம். வொரொன்ஸ்கி எழுதினார். ``விஞ்ஞானத்தைப் போலவே கலையும் வாழ்வை அறிந்துணர்கிறது. கலையும் விஞ்ஞானமும் ஒரே விஷயத்தையே: வாழ்க்கை, யதார்த்தம் இவற்றைக் கொண்டிருக்கின்றன. ஆனால் விஞ்ஞானம் ஆய்வுசெய்கிறது. கலை தொகுக்கிறது. விஞ்ஞானம் அருவமானது, கலை ஸ்தூலமானது. விஞ்ஞானம் மனித மனத்தை நோக்கித்திரும்புகிறது கலை, அவனது புலன் சார்ந்த இயல்பை நோக்கித் திரும்புகிறது. கருத்துக்களின் அடிப்படையில் விஞ்ஞானம் வாழ்வை அறிகிறது. கலை ஆழ்ந்த சிந்தனை உணர்வுகளால் வாழும் பிம்பங்களின் உதவியுடன் வாழ்வை, அறிகிறது. உண்மையான கவிஞன், உண்மையான கலைஞன் என்பவன் கருத்துக்களை பார்ப்பவனே``.

``பாட்டளிகள் கலாச்சாரம்`` என்ற சாதாரண சூத்திரம் உருவாக்கியதில் இருந்து இந்த அணுகல் முறை மிக ஆரோக்கியமான வரவேற்கத்தக்க பலாபலன்களைக் கொண்டிருந்தது என்பது மிக இலகுவில் விளங்கும். ``இலக்கியமும் புரட்சியும்`` என்ற புத்தகத்தில், ட்ரொஸ்கி அசாதாரணமான தீர்வுவிடையாக மார்க்சியக் கருத்துக்களை சோவியத் இலக்கிய வாழ்விற்கும் கலைப் படைப்பின் பொதுவான பிரச்சனைகளுக்கும் பயன்படுத்துகிறார்.

கலையாக்க முறைபற்றிய எந்தவித ஆழமான கருத்துக்களோ அல்லது படைப்பாளிக்கு எதுவித உதவிகளோ செய்யாத சமகால ``விமர்சனக் கோட்பாடுகள்`` மாதிரியின்றி, ட்ரொட்ஸ்கி சமகால ருஷ்ய சோவியத் இலக்கியம் பற்றிய வெவ்வேறு போக்குகள், வேலைகள் மற்றும் தனிநபர்கள் பற்றிய ஸ்தூலமான விவாதங்கள், ஓரளவு முழுமையான பார்வைக்கு தன்னை உட்படுத்தியுள்ளார். அவரது தொடர்ந்த ஆய்வுகள் உதாரணத்திற்கு அலெக்சாண்டர் புளக், போரிஸ் பில்நியாக், மற்றும் விளாமிடிர் மயாகோவ்ஸ்கி பற்றிய எழுத்துக்கள், ஒருவர் அவர்களின் கலைமுயற்சிகளில் பழக்கம் உடையவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு இவை மார்க்சிய விமர்சனத்துக்கான சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும்.

புத்தகம் முழுவதும் ட்ரொட்ஸ்கியின் எழுத்துப்பணி அராஜகத்தன்மை கொண்டதாகவோ அல்லது சுயம்மழிப்பாகவோ தாழ்விரக்கம் கொண்டதாகவோ இல்லை. தான் நினைப்பதை அவர் எந்த சுத்துமாத்துக்களும் இன்றி அழுத்தமாக, ஆழமாக எடுத்துக் கூறுகிறார். அவர் நிறைய வேலைகளை ஒரே நேரத்தில் கவனித்து வந்தார். கட்சியங்கத்தவர்களுக்கும் சோவியத் தொழிலாளர்களுக்கும் கலாச்சார மட்டத்தை உயர்த்துவதற்கு முயன்றுவந்தார். கலாச்சாரம் பற்றி பிழையான குறுகிய கருத்துக்கள் என்றுதான் நினைத்ததற்கு எதிராக வாதிட்டு வந்ததுடன், கலைத்துவ சமூக முன்னோக்கு பற்றிய உரையாடலில் கலைஞர்களையும் அவர்கள் தாமாகவே விரும்பி வந்து பங்குபற்றும் வண்ணம் ஊக்குவித்தும் வந்தார்.

தனதும் மார்க்சியக் கட்சியினதும் கடமையாக தான் என்ன நினைக்கிறார் என்பதை அவர் பின்வருமாறு கூறினார். ``கட்டாயமாகவும் நேரடியாகவும் கட்சி வழிகாட்டும் சில செயற்களங்கள் உண்டு. அது ஒத்துழைத்தல் மட்டும் செய்கின்ற வேறு சில செயற்களங்களும் உண்டு. இறுதியாக கட்சி தன்னையே திசை முகப்படுத்த மட்டும் செய்யும் செயற்களங்களும் உண்டு. கட்சியின் உத்தரவு தேவைப்படாத ஒன்றாக கலைபற்றிய செயற்களம் இருக்கிறது. கட்சி அதை பாதுகாக்கவோ அதற்கு உதவவோ முடியும், முடிய வேண்டும். ஆனால் அதை நேரடியாக இன்றி மட்டுமே வழிநடத்த முடியும்`` மார்க்சிய வழிமுறை என்ன செய்யலாம் என்பது பற்றி அவர் குறிப்பிடுகையில், ``விமர்சன விளக்கங்களின் பாதை வழியாகவே பெரும்பான்மையான முற்போக்கு தன்மைகளுக்கு உதவமுடியும். `` என்கிறார். எனது கருத்துப்படி இந்த ``விமர்சன விவாதங்களை`` உள்ளடக்கியதாக இருக்கிறது அவரது ``இலக்கியமும் புரட்சியும் ``.

இன்று நாம் எடுத்துக்கொண்ட விஷயத்துக்கும் திரு எவான்சின் உடனான எமது முரண்பாடுகளுக்கும் எம்மை அழைத்துவரும் மார்க்சிய அழகியலுக்கும் ``பாட்டாளிகள் கலாச்சாரம்`` என்ற பல்வேறு கோட்பாடுகளுக்கும் இடையிலான முரணுக்கு நான் திரும்பிவர விரும்புகிறேன்.

இங்கு முக்கிய பிரச்சனையாக இருப்பது என்ன? அநேகமாக இத்தருணத்தில் கொஞ்சம் முறைமையான தன்மையில் இருந்து இலகுவான முறையில் பேச விரும்புகிறேன்.

கலையில் நாங்கள் மதிப்பது என்ன? வர்க்கப்போராட்டத்துக்கு ஒரு யதார்த்த முன்னோக்கை வழங்குவது மட்டுமே கலையின் பங்காக இருப்பதாக திரு எவான்சும் பலரும் குறிப்பிடுகிறார்கள். அது ஒரு மார்க்சிய கட்சியின் சரியான பணியே அன்றி கலைஞனுடையதல்ல என்பதை முதலில் கவனிக்க வேண்டும். எனது பார்வையில் அவர் கலையில் அதிகமாகவும் குறைவாகவும் என்ற இரண்டையுமே எதிர்பார்க்கிறார். மேலும் நவீன வர்க்கப் போராட்டத்துக்கு விளக்கமாக இருப்பதே கலையின் நோக்கமென்றால், பழைய கலாச்சாரம் என்ற ஒன்று என்னாவது? அது பற்றிக் கேட்கவே எனக்கு பயமாக இருப்பதை நான் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். 1848 அல்லது 1871 அல்லது 1917-அந்த எல்லைத் திகதியாக நீங்கள் முடிவெடுத்தது எதுவாக இருப்பினும்- அதற்கு முதல் எழுதப்பட்டனவெல்லாம் குப்பைக் குவியலுக்குள் போடப்படக் கூடியதாக வெளிப்படையாய் ஒப்படைக்கப்பட வேண்டுமா? அருவமாகவோ அல்லது வேறுவிதமாகவோ இருக்கும், பூச்சோவியம் என்னாவது? அல்லது கருவி இசை, அல்லது கட்டிடக்கலை மற்றும் இவைபோன்ற பல்வேறு கலை வடிவங்கள் பாட்டாளிகள் போராட்டத்தில் எவ்வித பயன்பாட்டு மதிப்பும் அற்றவையா? அவையும் ஓட்டை உடசல்களுடன் போடப்பட வேண்டுமா? இம்மாதிரியான சிந்தனை ஒருவரை எங்கே இட்டுச்செல்லும் என்பது எமக்கு நன்றாகவே தெரியும் அதனால் நாம் அதை மறுதலிக்கிறோம்.
Modern oil painting in canvas art Pictures, Images and Photos
கடந்த கலாச்சாரம் பற்றிய பிரச்சினைக்கு மீண்டும் வருவோம், கோமர் தான்தே அல்லது சேக்ஸ்பியரை மக்கள் ஏன் தொடர்ந்து வாசிக்க வேண்டும்? 1990ல் வெளிவந்த இலியாட்டின் புதிய ஆங்கில மொழி பெயர்ப்பானது ஒரு முக்கியமான புத்தி ஜீவித நிகழ்வாக கருதப்பட்டது. கோமரது இவ்வாக்கம் ஏறத்தாழ இரண்டாயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முந்தியது என்று அதுபற்றிய கல்வியாளர்கள் கணிப்பிட்டிருக்கிறார்கள். ஆசிரியர் நிகழ்ந்ததாகக் குறிப்பிடும் சில பகுதிகளான இறுதியான பத்தாவது ஆண்டு ட்ரொஜன் சண்டை இலியாட்டின் கதாநாயகன் அகிலசின் மூர்க்கத்தை மையப்படுத்தியிருக்கிறது. அது கிரேக்க படைகளுக்கு ஒரு மோசமான விளைவை எற்படுத்துவதாதக இருந்தது. ஒருவருக்கெதிரான இன்னொருவருடைய சதியிலும் ஒரு இராணுவத்தின் கதாநாயகர்களுக்கு எதிராகவோ சார்ந்தோ கிரேக்கக் கடவுள்கள் தலையிட்டன. அசாத்தியமான அனைத்து நிகழ்வுகளும் நடந்தேறின. ஆயிரக்கணக்கான அதன் புதிய பிரதிகள் விற்றுத்தள்ளப்பட்டன. இப்புத்தகங்களை வாங்கும் மக்கள் சார்பில் இது அவர்களின் ஒரு சாதாரண பற்றாக மட்டும் விளக்கப்படுகிறதா? அல்லது பழைய கிரேக்க வரலாற்றிலும் அதன் பகுதிகள் மீதான புராணக்கட்டுக்கதையிலும் கொண்ட விளக்க முடியா ஆர்வத்தின் விளைவுகள் மட்டும்தானா? நான் அப்படி நம்பவில்லை. அழகியல் மீதான இவ் அதி தீவிர பயன்பாட்டுவாத, அணுகுமுறையானது கலையின் நிரந்தரமான மதிப்பு பற்றியோ அதன் சக்தி பற்றியோ எதையுமே எமக்கு சொல்லவில்லை என்பதை உணர்த்தவே இவ்வுதாரணத்தை இங்கு நான் தந்தேன்.

ஏற்கெனவே 1924 மேயில் நிகழ்ந்த கட்சி விவாதத்தில் இது ஒரு முக்கிய விஷயமாக எடுக்கப்பட்டிருந்தது. மிக திறமையாக ட்ரொட்ஸ்கி அதில் தலையிட்டிருந்தார். அதுவே வர்க்கமும் கலையும் என்ற ஆக்கம். அன்று ட்ரொட்ஸ்கியின் குறிப்புகளுக்கு முன்பு அன்றைய போல்ஷேவிக் தவைரான லியோடர் ராஸ்கோல்னிகோவும் பேசியிருந்தார். அவர் தனது குறிப்புகளில் தான்தேயின் தூய இன்பியல் (ஞிவீஸ்வீஸீமீ சிஷீனீமீபீஹ்) நவீன வாசகனுக்கு மதிப்புடையது ஏனென்றால் அது ஒரு குறிப்பிட்ட காலத்து ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் மனோவியல் பற்றி அவன் புரிந்து கொள்ள உதவுகிறது என்ற விஷயத்தையும் சேர்த்திருந்தார்.

ட்ரொட்ஸ்கி தனது குறிப்பில், கலையின் வேலைப்பாடுகள் பற்றிய இந்த அணுகுமுறை கலையின் வேலைப்பாடுகளை எவை ஆக்கின என்பதை கவனிக்காமல் விடுகிறது என்று குறிப்பிட்டார். ராஸ்கோலினிகோவ் தூய இன்பியலை (ஞிவீஸ்வீஸீமீ சிஷீனீமீபீஹ்) ஒரு வரலாற்று ஆவணமாக மட்டுமே ஆக்கினார். ஒருவனுக்கோ ஒருத்திக்கோ பாதிப்பை எற்படுத்துவதாக அல்லது தாக்கத்தை விளைவிப்பதாக அல்லது தாழ்வுபடுத்துவதாகவோ தான் வாசகருடன் அல்லது பார்வையாளருடன் ஒரு கலைஆக்கம் நேரடியாக பேசியாக வேண்டும் என்பதை ட்ரொட்ஸ்கி அவதானித்திருந்தார். வரலாற்று அணுகுமுறை உபயோகமானதாக இருந்தாலும் அது அழகியல் முறையுடன் குழப்பிக்கொள்ளப்படக் கூடாது. 14ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்திற்கும் ஒரு நவீன வாசகனுக்கும் எப்படி நேரடியாக ஒரு அழகியல் உறவு இருக்க முடியும்? என்று ட்ரொட்ஸ்கி கேட்டார். அதற்கவர் பின்வருமாறு பதிலளித்தார். ஏனெனில் ஒரு சமூகத்தில் உடனடிச் சமூக நிலைமைகளில் பாரிய மாறுபாடுகள் இருப்பினும், சில பொதுத் தன்மைகளும், இருக்கின்றன. கலைத்திறமை என்பது இவ்வகை பொதுத்தன்மைகளையும், அவை தூண்டும் சிந்தனைகள் மற்றும் உணர்வுகளையும் பதிவு செய்யக் கூடியதாகவும் அவற்றை நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அக்கலை தோற்றக் காலத்துக்கு நாம் பிந்தியிருப்பினும் அவை எம்முடன் நேரடியாக பேசுவது போன்று நாம் காணக் கூடியவாறு அழிக்க முடியாத பிம்பங்களாக மாற்றுகின்றன.

மரணம் பற்றிய பயம் என்ற உதாரணம் வழியாக ட்ரொட்ஸ்கி பேசினார். கலை சகாப்தம் மற்றம் சமுதாயச் சூழல்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இப்பயத்தின் தோற்றங்களும் மாறிக் கொண்டே வந்துள்ளன என்பது உண்மைதான். இருப்பினும் இது பற்றி சேக்ஸ்பியர், பைரன், கோதே, ஏன் பழைய ஏற்பாட்டு தோத்திரப் பாடல்களில் சொல்லியவை இன்று கூட எம்மை பாதிக்கின்றன. தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

நாங்கள் ஏன் புஸ்கினை தொழிலாளர்களுக்குச் சிபாரிசு செய்கிறோம்? என்று அவர் கேட்டார். காலநிலை மாற்றத்திற்கு எதிராக எவ்வாறு ஒரு பிரபுவும் அடிமை உடைமையாளனும் எவ்வாறு போராடினான் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவா? நிச்சயமாக இல்லை. இச்சமூகக் காரணியும் இருக்கிறது என்பது உண்மைதான். ''ஆனால் புஸ்கின் தன் உணர்வுகளுக்கு கொடுக்கும் வெளிப்பாடு-கலைத்துவத்தில் ஊறிய தன்மை பொதுவாக மனோவியலுடனும் பல நூற்றாண்டு அனுபவங்களுடனும் பின்னி இறுகிய தன்மை அதை சமகாலத்திலும் நிலைத்து நிற்க வைக்கிறது.... ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழ்க்கையை வெளிப்படுத்தும் முறையிலேயே தான்தேயின் கலைத்துவ முக்கியத்துவம் இருக்கிறது என்று எனக்கு யாரும் சொல்லும் பொழுது அது அவர்களது இயலாமையைப் பரப்புவதாகவே இருக்கிறது.''

இங்கு அனைத்தும் முக்கிய புள்ளியாகவே இருக்கிறது. 13ம் 14ம் நூற்றாண்டு புளோரன்ரன் குட்டி முதலாளி என்பதற்காக நாம் தான்தேயை ரசிப்பதில்லை. அன்றைய சூழ்நிலைமைக்கு மத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் அவர் முற்போக்காக இருந்தார் என்பதற்காகத்தான் நாம் அவரை இரசிக்கிறோம். கலையின் வரலாற்று ரீதியான வர்க்கத் தீர்மானமுடைய காரணிகளுடன் சேர்த்து கலையில் பாரிய முறையில் காலமாற்றத் தன்மையான புறநிலை உண்மையுடைய ஒரு சார்பியல் பிரபஞ்சக் கூறும் உண்டு. கலை தன்கூறுகளில் ஒரு முழு உண்மையின் விதைகளையும் கொண்டிருக்கிறது என்பது ஒரு அடிப்படையான விஷயம். இது எமக்கு மிக முக்கியத்துவம் உடையதாகவும் மிக்க ஆர்வம் உடையதாகவும் உள்ள ஒன்று. ஏன் இதுதான் பாரிய ஆக்கத்தின் குணாம்சம் என்று கூட ஒருவர் வரையறுக்கலாம் . அதாவது இது எம்மை பாதிப்பதை மட்டும் செய்யவில்லை. அதற்கும்மேலாக அது தன் வர்க்க சார்புடன் தன் உடனடித்தன்மையுடன் உடனடியாக வேகமாக விசயங்களையும் இவை உள்வாங்கினாலும் கூட, தன் காலத்தின் அனுபவத்தை ஒரு மிகப்பெரிய கலை உச்சிக்கு இட்டுச்செல்கிறது. கோமரின் கதாபாத்திரமான கிலஸ் - அவனது தாய் கடல்தேவதை என்று நம்புவதாக எடுத்துக் கொள்கிறோமோ இல்லையோ- இன்றும் எம்மை பாதிக்கின்றான். அவனது மூர்க்கம், அவனது கர்வம், அவனது பொறாமை ஆகியவற்றின் கலைத்துவமான வர்ணணைகள் மனிதகுலத்தில் ஏதோ உண்மையான ஒன்றை பிரதிபலிப்பதாக இன்றும் தொடர்ந்து எம்மை பாதிப்புக்குள்ளாக்கி வருகின்றது.

இவையெல்லாம் சேர்ந்து வர்க்க ஆய்வின் வர்க்க விமர்சனத்தின் பிரயோகமானது எந்த மதிப்புமற்றது என்பதையா சொல்லவருகின்றது? நிச்சயமாக இல்லை. எந்தக் கலை பற்றிய விமர்சனத்திலும் இது முக்கிய பகுதியாக இருக்கிறது. ஏனெனில் அது அந்த படைப்புக்கு பிறப்புக் கொடுத்த ஒரு சமூக யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. ஒரு குறிப்பிட்ட தருணத்தில் கலைத்துறையில் ஒரு குறிப்பிட்ட போக்கு ஏன் எப்படி தோன்றியது -என்ன சமூகச்சக்தி அல்லது யதார்த்தம் அதற்கான மனோவியல் தாக்குதலை ஒரு கலைஞனுக்கு தன் கலையை தோற்றுவிக்கத் தூண்டியது என்பதை மார்க்சியம் மட்டும் தான் விளக்க முடியும். கலைப்படைப்பு என்பது எப்பொழுதும் மிகவும் சிக்கலான ஒன்றாகும் என்றும் மேலும் ட்ரொட்ஸ்கி விளக்குகிறார். கலைக்கு வெளியில் தோன்றும் புதிய ஒரு தூண்டுதலின் ஆதிக்கத்தில் கலைப்படைப்பு என்பது பழைய வடிவங்களை உள் வெளியாகத் திருப்பும் மிகவும் சிக்கலான ஒன்று. கலையானது தனக்குத்தானே இரைதரும் ஒரு விலக்கப்பட்ட கூறல்ல மாறாக அது சமூக மனிதனின் செயல்-விஞ்ஞானம் மனோதத்துவம் அல்லது எவ்விதமானதுமான வேறு சமூக நனவின் வடிவத்தைப்போலவே.
Modern oil painting in canvas art Pictures, Images and Photos
ஆனால் ஒரு குறிப்பிட்ட ஆக்கம் எந்தச் சமூக வரலாற்றுச் சூழ்நிலையில் உருவாகியது என்பதை தெளிவாக்கும் வேலையை ஒரு அழகியல் நோக்கில் அதனைக் கணிப்பிடுவதுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது -இதுதான் அடிக்கடி எமக்கு நடக்கிறது. ஒரு படத்தயாரிப்பாளருடைய, ஒரு நாவலாசிரியருடைய வர்க்க வெளித்தோற்றத்தை தெளிவாக்கிக் கொள்வதுடன் வேலை முடிந்து போய்விடுவதில்லை. வெளிப்படையாக சொல்வதானால் அது ஒரு பாதி வேலை கூட இல்லை. இந்த வகையான அணுகுமுறையை தூண்டுவதென்பது இலகுவான விஷயமில்லை என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது. இது ஒரு அனுபவமற்ற, முதிர்ச்சியற்ற ஒருவரின் உற்பத்தியே அன்றி தீய நோக்கம் உடையவரது அல்ல. ஆனாலும் நாம் கட்டாயமாக, இது இன்னும் மார்க்சிய அழகியல் ஆகிவிடவில்லை என்ற விஷயத்தை கூறியேதான் ஆகவேண்டும்.

ஒரு படைப்பு எழுப்பிய புதிய சிந்தனைகளையும் உணர்வுகளையும் ஒரு உண்மையான அழகியல் அனுபவத்தின் உள்ளடக்கத்தையும் ஒரு முரண் நிலைஆயில் எடுத்துக் கொள்ளும் முயற்சியும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இங்கு நான் ப்ரெக்டனின் குறிப்புடன் உடன்படுகிறேன். ``ஒரு ஆக்கத்தின் மீதான கவர்ச்சியின் இரகசியம் பற்றிய விசயத்தின் ஆழத்தையும் அதன் இதயத்தையும் வெளியிடாத கலைபற்றிய எவ்விதமான ஊகங்களுமே பயனற்றவை.`` ஆக்கத்தின் எவ்வகையான மனோவியல் இயக்கம் எமக்குள் தூண்டப்பட்டது அல்லது தூண்டப்படாமல் விடப்பட்டது?

1923 பலராலும் மார்க்சியத்திற்கு இணையாக ஒரு இராணுவ முழக்கமாக ஒரு பிரதான முழக்கமாக இருந்த ``பாட்டாளிகள் கலாச்சாரம்`` என்ற முழக்கத்திற்கு மீண்டும் வருவோம். இதன் திடீர் புகழுக்கு பின்னால் என்ன சமூக இயக்கம் இருந்தது? யாருடைய விருப்பத்துடன் அவை-அதேவகையாக இன்று முன்னெடுக்கப்படும் தத்துவங்களுடன்- தொடர்புகொண்டுள்ளன? ட்ரொட்ஸ்கி பின்வரும் முறையில் இந்த பாட்டாளிகள் கலாச்சார செயல் திட்டத்திற்கு எதிராக இருந்து பெறப்பட்டதான இழிவான ஆய்வுகளிலேயே இந்த வாதங்களின் அடிப்படை அமைந்திருக்கிறது. சூத்திரம் மிக இலகுவானதாக இருந்தது. அதாவது முதலாளிகள் அதிகாரத்தை கைப்பற்றிய பொழுது அவர்கள் ஒரு கலாச்சாரத்தை உருவாக்கினார்கள். ஆகவே பாட்டாளிகள் புரட்சி ஒரு பாட்டாளிகள் கலாச்சாரத்திற்கு வழி அமைக்கும். இந்த வகை வாதத்தில் ஒரேயரு பிரச்சனை மட்டுமே இருந்தது. தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவது என்பதை முழுவரலாற்றுக் காலப்பகுதிக்குமான பாட்டாளிகளின் ஆட்சி கலாச்சாரம் என்ற வகையில் போல்ஷேவிக்குகள் உட்பட எந்த மார்க்சிஸ்ட்டுகளும் பார்க்கவில்லை. ஆனால் அதை ஒரு வர்க்கமற்ற சமூகத்திற்கு கலாச்சாரத்திற்கு மாறும் ஒரு நிலையாகவே அவர்கள் கண்டனர். பாட்டாளிகள் கலாச்சாரம் என்ற ஒன்று `இருக்கவே முடியாது எனெனில் பாட்டாளிகள் ஆட்சியென்பது தற்காலிகமானது ஒரு இடைமருவக்கூடியது` என ட்ரொட்ஸ்கி கூறினார்.

இரண்டு முற்றிலும் மாறுபட்ட முன்னோக்குகளுக்கு இடையிலான வேறுபாட்டின் முக்கிய புள்ளி இங்குதான் இருக்கிறது. 1917ஐ போல்ஷேவிக்குகள் முன்னறிவித்ததை ஆதரிப்பவரான ட்ரொட்ஸ்கி உலக சோசலிச புரட்சியின் செயற்திட்டத்தில் இருந்து தொடங்கினார். ஆகவே சோவியத் யூனியனின் அரசியல் கலாச்சாரம் பற்றிய அவரது பார்வையானது: ‘‘முன்புபோலவே நாங்கள் செயற்திட்ட பிரச்சாரத்தில் சாதாரண சிப்பாய்கள் தான். எங்களுடைய சட்டைகள் துவைக்கப்பட்டிருக்க வேண்டும், தலைமயிர்கள் வெட்டப்பட்டு வாரி இழுக்கப்பட்டிருக்க வேண்டும், எல்லாவற்றையும் விட முக்கியமாக எமது துப்பாக்கி எண்ணைவிடப்பட்டு சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். எமது இன்றைய பொருளாதார கலாச்சார வேலையென்பது இரண்டுவகை சண்டைகளுக்கும் இரண்டுவகை வினை ஆள் முறைகளுக்கும் இடையில் எம்மைக் கொண்டுவருவதைவிட அதிகப்பட்சமானதாக இல்லை. எமது காலம் இன்னும் ஒரு புதிய கலாச்சாரத்தின் காலமல்ல அதன் வாயிலில் மட்டுமே நாம் இருக்கிறோம்.’’

உலகப் புரட்சியின் தேவை பற்றிய அக்கறையில் சரியான இடத்தை இருத்திக் கொள்வதையே எல்லாவற்றையும் விடப் பெரியதாக நினைக்கும் சுயதிருப்தியுடைய ஒரு நெப்மேன் (ழி.ணி.றி னீணீஸீ) அல்லது அரச அதிகாரியிடம் இருந்து இவ்வகை விவாதங்கள் எப்படிப்பட்ட கோபமூட்டுதலை விளைவித்திருக்கும் என்பதை ஒருவர் கற்பனை பண்ணிப் பார்க்க முடியும்.

மோசமான குட்டி முதலாளித்துவ அதிகாரத்துவமும் அதன் பற்றாளர்களும் தலையெடுத்த பொழுதில், சோவியத் அரசு தனிமைப்பட்ட அபிவிருத்திக்காலத்தின் நீட்சியில் இருந்த காலப் பகுதியில் ‘‘பாட்டாளிகள் கலாச்சாரம்’’ என்ற முழக்கம் எழுச்சியடைந்தது அத்தோடு சேர்ந்து, சோவியத் ஒன்றியத்துக்கு வெளியேயான முதலாளித்துவத்தின் இருத்தலை ஏற்றுக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டது.
Modern oil painting in canvas art Pictures, Images and Photos
``பாட்டாளிகள் கலை`` என்பதை ஏற்றுக் கொள்வதானது கலாச்சாரத்துறையில் ஏற்படுத்திய பிரதிபலிப்புகளைப் போலவே, அரசியலில் `தனிநாட்டில் சோசலிசம்` என்பதற்கூடாக சர்வதேசரீதியில் முதலாளித்துவத்தை தூக்கி வீசக் கூடிய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சக்தி மற்றும் உள்ளுறை ஆற்றல் பற்றிய ஆழமான ஐயுறவாதத்தை எதிரொலித்தது. `இடதுசாரி`க் குரலுக்கும் அப்பால் பாட்டாளிகள் கலாச்சாரம் எப்பொழுதும் அரசியலில் தேசியவாதம், சந்தர்ப்பவாதம், திரிபுவாதம் என்பவற்றுடன் இணைந்தே இருந்து வந்தது.

பாட்டாளிகள் கலாச்சாரத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் அழகியல் மதிப்புகளுக்கான அக்கறையையும் பொதுவாக கலை பற்றிய அக்கறையையும் சுவை நேர்த்தியையும் கண்டனம் செய்தனர். ட்ரொட்ஸ்கி சொன்னார் `அவர்கள் சொல்கிறார்கள் தரம் அற்றதான கீழான ஒன்றாயினும் எங்களுடைய சொந்தச் சரக்கான ஒன்றை கொடுங்கள் என்று`` ஆனால் அது பிழையானதும் உண்மையற்றதும் ஆகும். தரமற்றதான கலையென்பது கலையே அல்ல, அதனால் அது தொழிலாள மக்களுக்கு தேவையற்ற ஒன்று. தரமற்றதான இக்கலையை நம்புவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மக்களை அவமதிப்புச் செய்வதில் ஊறிப்போயுள்ளார்கள்.

உடனடியாக சமூகப் புரட்சிக்குப் பின் ட்ரொட்ஸ்கியைப் பொறுத்தவரையில் அல்லது அதற்கு முன் எம்மைப் பொறுத்தவரை, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கையை, ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வை பொறுமையுடன் புகழ்ந்து தள்ளுதல் அல்லது உயர்கொள்கையாக்குதல் புரட்சியாளர்களின் வேலை அல்ல. நிதானமான முறையிலேயே இவைபற்றி நாம் தீர்மானிக்கிறோம். எப்படியிருப்பினும் தற்போது இருக்கின்றவாறு தொழிலாள வர்க்க கலாச்சாரத்தை புகழ்ந்து தள்ளுவதில் ஆர்வம் கொண்டுள்ள ஒரு சமூக குழுவும் இருக்கவே செய்கிறது. அது பொதுவான புத்திஜீவித மட்டத்தை உயர்த்துவதற்கு இடைஞ்சல் உண்டுபண்ணுவதாகவும், தொழிலாள வர்க்கத்தின் கவனத்தை மிக உடனடி சாதாரண விஷயங்களை நோக்கி திருப்புவதாகவும், தொழிலாளர்கள் எதைப் பார்க்க வேண்டும் எதை பார்க்கக் கூடாது என்பதை நிர்ணயிக்கும் உரிமையை தாங்களே சுவீகரித்துக் கொண்டதாகவும், தன்னால் புரிந்துகொள்ள முடியாத எதையும் ``சீரழிந்த`` தாகவும் ``இரகசியமான``தாகவும் மறுதலிப்பதாக இருக்கிறது. இவ்வகை மனநிலையை எவ்வகை சமூக அமைப்பு ஏராளமாய்ப் பெற்றிருக்கிறது? பாட்டாளிகளின் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து சுரண்டி வாழும் மத்தியதர வர்க்கத் தட்டுக்கள் தான் அதைச் செய்கின்றன. அது தொழிலாள அதிகாரத்துவமாகும். அது ஸ்ராலினிச வாதியாகவோ சமூக ஜனநாயக சீர்திருத்த வாதியாகவோ அல்லது ``தூய`` அமெரிக்க தொழிற்சங்க வாதியாகவோ இருக்கலாம்.

``அடிப்படையற்ற வாதம்`` என்று சுதந்திரமான பாட்டாளிகள் கலாச்சாரத்தின் சாத்தியம் பற்றி ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டது உட்பட, இவ்வகை அழகியல் மதிப்புக்கு விரோதமான, மார்க்சியத்திற்கு எதிரான கருத்துக்கள் முழுவரலாற்றுக் கட்டத்திலும் இருத்தலானது, சோசலிச இயக்கத்தின் இழப்பில் தொழிலாள வர்க்கத்தின் மேலாக அதிகாரத்துவத்தின் ஆதிக்கத்தோடு தொடர்புடையதாக இருந்தது என்பதை நான் மேலும் நிலைநாட்ட விரும்புகிறேன். கலையில் பாட்டாளிகள் கலாச்சாரமும் சமூகப் பயன்பாடும் தான் தனித்த பிரமாண அளவீடாக முன்மொழிபவர்கள் குட்டி முதலாளித்துவ, புத்தி ஜீவிகளுக்குள்ளே அதிகாரத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். நான் இவ்வறிக்கையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் மீண்டும் சொல்ல விரும்புவது இதைத்தான் - ஒரு புறநிலை அடிப்படையின் நோக்கில் இருந்து நாம் இந்த விவாதத்தை நடத்தக் கூடியதாக இருப்பது தங்களது உபயோகமற்ற அழுகிப்போன தன்மையால் இவ்வதிகாரத்துவங்கள் தாமாகவே உடைபடுகின்றன என்ற காரணத்தால் மற்றும் அதனால் நாங்கள் இவ்வகை அழகியல் கருத்தாக்கங்களில் இருந்து எம்மை நாம் விடுவித்துக்கொள்ளக் கூடிய நல்ல நிலையில் இருக்கிறோம். அதேபோல் இவ்வகை அரசியல் உபகரணங்களில் இருந்து தொழிலாளர்களை விடுதலைசெய்யக் கூடிய மிகவும் ஒரு சாதகமான நிலையில் இருக்கிறோம்.

இங்கு நான் தனிப்பட்ட கருத்து ஒன்றையும் குறிப்பிட வேண்டும். எப்பொழுதும் வர்க்க வாழ்க்கையையும், நவீன வர்க்கப் போராட்டம் பற்றியதுமான படங்கள், நாடகங்கள் பார்ப்பதையும் அல்லது அது பற்றிய புத்தகங்களை படிப்பதையும் மட்டுமே விரும்பும் சோசலிச எண்ணமுள்ள தொழிலாளியை, சிந்திக்கும் தொழிலாளியை நான் இன்னும் எதிர்கொள்ளவில்லை. உண்மையான புரட்சிகரத் தொழிலாளர்கள் வாழ்வில் ஒவ்வொரு கோணத்தையும், வரலாற்றையும், கலாச்சாரத்தையும் கற்றுக் கொள்ளவே விரும்புவர். கலைப் பரிசோதனைகளாலும் கஷ்டங்களாலும் அச்சுறுத்தப்பட்ட எந்தத் தொழிலாளியையும் இதுவரை நான் சந்தித்தது இல்லை. அப்படி அவர் தன் தலைக்குள் உணர்ந்தாலும் அது நேர்மையாக இருக்கும் பட்சத்தில் அது சிறுவிளைவுகளால் ஆனது மட்டும் தான். எமக்கு தொழிலாள வர்க்கத்தின் மேல் நம்பிக்கையிருப்பதால் என்ன விவாதிக்கப்பட வேண்டும், எது கூடாது என்று முன்னறிக்கைகளை வழங்க வேண்டிய தேவையிருப்பதாக நாம் நினைப்பதில்லை. `என்ன செய்ய வேண்டும்?` என்பதனதும் `இலக்கியமும் புரட்சியும் `` என்பதனதும் உயிர்நாடியாக இதுதான் இருக்கின்றது.

நாம் தொடக்கூடாத புனிதப்பொருட்கள் பற்றிய விஷயத்தில் இருக்கையில், சிலநேரங்களில் இன்றும் நாம் பாதிக்கப்படும் போலி நாணத்தின் மிச்ச சொச்சங்களைப் பற்றிக் குறிப்பதற்கு என்னை அனுமதிக்கவும். 1883ல் சோசியல் டெமாக்ரட்டுக்காக ஏங்கல்ஸ் எழுதிய கட்டுரையிலிருந்து மேற்கோள்காட்டுதலை நான் தடுக்க முடியாது. அந்தக் கருத்தைச் சொல்ல ஏங்கல்சை மேற்கோள் காட்டுதல் தேவையில்லை. ஆனால் கட்டுரை பெருமகிழ்வூட்டுகிறது.
Modern oil painting in canvas art Pictures, Images and Photos
அந்தப் பகுதியானது ஜேர்மன் கவிஞரும் புரட்சியாளருமான ஜோர்ஜ் வீர்த்துக்கு (நிமீஷீக்ஷீரீ கீமீமீக்ஷீtலீ) படையல் ஆகும். அவர் நொயூ றைன்னீச பத்திரிகையின் (ழிமீuமீ ஸிலீமீவீஸீவீsநீலீமீ ஞீமீவீtuஸீரீ) கலாச்சார ஆசிரியர் ஆவார். இப்பத்திரிகை மார்க்ஸ் எங்கெல்சால் 1848-49ல் நடாத்தப்பட்டது.

எங்கெல்ஸ் எழுதுகிறார். ``வீர்த் மிதமிஞ்சி நிற்கக் கூடிய ஒரு விஷயம் இருந்தது, இங்கு அவர் ஹெய்னை விட வீறார்ந்த நடைகொண்டவர் (ஏனெனில் அவர் ஆரோக்கியமான மற்றும் குறைந்த அளவு செயற்கைத் தன்மை கொண்டிருந்தார்). ஜேர்மன் மொழியில் கோதே மட்டுமே அவரை விஞ்சுவார்: அது இயற்கையான சூதுவாதுகளற்ற உணர்வாகவும் மெய்சிலிர்க்க வைக்கக் கூடியதாகவும் வெளிப்படும். நொயூ றைன்னீச பத்திரிகையின் தனிப்பட்ட கதை-கட்டுரைப்பகுதியில் நான் திரும்ப பிரசுரிக்க இருப்பது, சோசியல் டெமாக்கிரட்டின் பெரும்பாலான வாசகர்களைத் திருக்கிடச் செய்யலாம். ஆனால் அப்படிச் செய்வதற்கு எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. இருப்பினும், ஜெர்மன் சோசலிஸ்டுகளும் கூட, ஜெர்மன் பிளின்ஸ்டைன் தப்பெண்ணங்களின் பைத்தியக்கார ஒழுக்க போலி நாணங்களின் கடைசித் தடங்களை வெற்றிகரமாக கைவிடும் நேரம் வரும் என்று சுட்டிக்காட்டுவதை என்னால் தவிர்க்க முடியாது. -எப்படியோ அவை கள்ளத்தனமான நாற்றத்திற்கு மூடுதிரையாக மட்டுமே சேவைசெய்யும்.

``இதுதான் உச்ச நேரம், ஜேர்மன் தொழிலாளர்கள், ரோமானிய தேசத்தின் மக்கள், ஹோமரின், பிளேட்டோவின், ஹொராசின் மற்றும் ஜூவெனலின், பழைய ஏற்பாட்டின் மக்கள் மற்றும் நொயூ றைன்னீச பத்திரிகையின் மக்கள் செய்வதுபோல், குறைந்தப் பட்சம் இயல்பாய் மற்றும் எளிதான வகையில் பேசுவதற்கு பழக்கப்படுத்திக் கொள்வார்கள், தினந்தோறும் இரவில் அல்லது பகலில் அவர்கள் தாமே செய்யும் இந்த இயற்கையான, இன்றியமையாத மற்றும் மிக இன்பகரமான விஷயங்களை செய்யப் பழக்கப்படுத்திக் கொள்வார்கள்.

கலையும் சமூகப் புரட்சியும்

ட்ரொட்ஸ்கி தனது `வர்க்கமும் கலையும்` என்பதில், ஏன் மார்க்சியர்கள் புஷ்கினை- அடிமைகளை உடைமையாகக் கொண்ட வர்க்கக் கவிஞனை தொழிலாளர்களுக்கு முன்மொழிய வேண்டும்? என்று கேட்டிருந்தது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கும் என்று நினைக்கிறேன். இது கலைக்கும் சமூகப் புரட்சிக்கும் இடையிலான உறவுகள் பற்றி அழுத்தமாக குறிப்பதால் நான் இப்புள்ளிக்கு மீண்டும் வர நினைக்கிறேன்.

`ஆன்ம அனுபவம்` என்ற சொற்றொடருக்கு திரு எவான்ஸ் ஆட்சேபனை எழுப்புகிறார். அவரது கருத்து வேறுபாடுடன் ஒத்துப் போகும்வகையில் பெரும் மக்கள் தட்டுக்கள் ஆன்ம வளம் குன்றலானது, இன்று சோசலிச இயக்கத்தின் வளர்ச்சிக்கு எதிரான யதார்த்தமான பொருளாக, ஒரு தடைக்கல்லாக தொடர்ந்து இருந்து வருகிறது. தங்கள் அரசியல் திட்டங்களுக்கும் முன்னோக்குகளுக்கும் கவனமளிக்கக் கூடிய ஆதரவாளர்களை திரட்டுவதென்பது மார்க்சியர்களுக்கு குறிப்பிட்ட அளவு சவாலாக இருந்து வருகிறது. தற்போதிருக்கும் நிலையில் பொது நனவை வளப்படுத்தலின் தேவையை குறைத்து மதிப்பிடல் மிகவும் பொறுப்பற்ற தன்மையே.

எப்படி ஒரு புரட்சி நடந்தேறுகிறது? புறச் சூழ்நிலைக்குச் சாத்தியமான சோசலிச பிரச்சாரத்தாலும் கிளர்ச்சியாலும் மட்டுமா? அப்படித்தான் அக்டோபர் புரட்சி நடந்தேறியதா? கடந்த சில வருடங்களாக ஒரு கட்சியாக இது பற்றிய சிந்தனையில் கணிசமான நேரத்தை செலவிட்டிருக்கிறோம். நாமெடுத்த முக்கியமான முடிவுகளில் ஒன்றாக 1917 புரட்சி ஒரு தேசிய அல்லது சர்வதேசிய அரசியல் சமூக நிகழ்ச்சிப் போக்குகளால் மட்டும் விளைந்ததல்ல, மாறாக இது சர்வதேச சோசலிச முதலாளித்துவ - கலாச்சாரத்தை அரசியல் சமூகச் சிந்தனைகளை, அதன் சாதனைகளான கலையையும் விஞ்ஞானத்தையும் தன்மயமாக்கி விட்ட மற்றும் தனது இயங்கு பாதைக்கு கொண்டுவந்த சோசலிச கலாச்சாரத்தை-கட்டி எழுப்புவதற்கான பல ஆண்டுகால முயற்சிகளின் விளைவாகவும் இது இருக்கிறது. தமது முக்கிய குறிக்கோளான முதலாளித்துவத்துக்கு நனவு பூர்வமாக ஒரு முடிவுகட்டிய புரட்சியாளர்களாலும் அவர்களது அரசியற் கொள்கைகளாலும் 1917 புரட்சிக்கான புத்தி ஜீவித அடிப்படை அமைந்திருந்தது என்பது உண்மைதான். ஆனால் ஒரு புரட்சிகர பிரவாகத்தை சாத்தியப் படுத்துவதற்கான தேவையை உண்டுபண்ணும் ஓடைகள் மற்றும் கிளைநதிகள் என்பன அளவு கணக்கில்லாதவை, ஒன்றுக்கொன்று முரண்பட்டும் இணைந்தும் தொடர்புபட்டிருக்கும் மிக சிக்கலான அமைப்புக்களால் பாதிப்புக்குள்ளாகுபவை.

பழைய சமூகத்தின் தப்பெண்ணங்கள் பழக்க வழக்கங்கள் மற்றும் கற்றுக்கொண்ட நடைமுறைகள் இவற்றில் இருந்து பாகுபட்டு ஒரு பெருந்தொகை மக்களின் திடீர் எழுச்சிக்கான சூழ்நிலையின் உருவாக்கம் என்பது பல ஆண்டுகளாக, ஏன் நூற்றாண்டுகளாக கட்டியெழுப்பட்டு வந்திருக்கிறது. தப்பெண்ணங்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகள் என்பன வெளிப்படையான சுதந்திரமான தமது சொந்த எதிர்ப்பு சக்தியாலேயே தமது வாழ்க்கைக் காலத்தை முடித்துக் கொள்ளவல்ல-இந்த வரலாற்று அழுத்தத்தை ஏற்படுத்தல் மற்றும் ஒரு புரட்சிகரச் சூழ்நிலையை உருவாக்குதல் என்பது ஒரு அரசியல் செய்கை மூலமாக மட்டும் திட்டமிடக்கூடியதல்ல.
Modern oil painting in canvas art Pictures, Images and Photos
எல்லாம்வல்ல சோசலிச மனித குலம் என்பதை ஒரு எதிர்காலப் படைப்பாக -அது அதிதூரமான எதிர்காலமல்ல, நாம் நம்புகிறோம். சமூகப் புரட்சி ஒரு யதார்த்தமாகும் ஆனால் மனிதரின் இதயத்திலும் மனத்திலும் எவ்வித மாற்றமும் தேவையில்லை என்று சொல்வதோடு அது ஒத்ததாகாது. மக்கள் குழுக்களை அழகியலற்று மரக்கச் செய்து, அவர்களை மிகவும் பிற்பட்ட கருத்துக்களாலும் மனநிலையாலும் பாதிக்கச் செய்யும் முயற்சியில் முன்னிற்கும் தொழில் நுட்ப பிரமிப்புக்கள் கொண்ட கலாச்சார பின்தங்கலும் தேக்கமும் நிறைந்த ஒரு காலப் பகுதியில் நாம் வாழ்கிறோம்.

மக்கள் திரளின் முக்கிய பகுதியினரை கூர்மையடையச் செய்வது -அதாவது பொய்யில் இருந்து உண்மையை வேறுபடுத்தியறியவும் முக்கியமில்லாததையும் முக்கியமானதையும் மற்றும் தனது சொந்த அடிப்படை நலன்களில் இருந்து தனது மிகமோசமான எதிரிகளின் நலன்களை வேறுபடுத்தி அறியவும் உதவும் கூட்டுத்திறமை, பெரும்பான்மை மக்களை உதாரண குணமுள்ளவர்களாகவும் தங்களது சக மனிதர்களை மட்டும் நினைக்கக்கூடிய பெரும் தியாகங்களைச் செய்பவர்களாகவும் உள்ள அளவுக்கு அவர்களது ஆன்ம இயல் மட்டத்தை உயர்த்தல் என்பன போன்ற புத்திஜீவிதத்தை, ஒழுக்கத்தை உயர்த்துதல் என்பது மனிதக் கலாச்சாரத்தின் முன்னேற்றத்தின் உற்பத்தியாக மட்டுமே முடியும்.

அரசியல் மற்றும் விஞ்ஞான சிந்தனைகளில் வெளிப்படாத வாழ்க்கை பற்றிய மக்களைப் பற்றிய, மற்றும் ஒருவரைப் பற்றிய விஷயங்களை கலை வெளிப்படுத்துகிறது. ஒரு ஆழமான மட்டத்தில் மனிதகுலம் முழுவதையும் ஒரு கண்ணுக்கு தெரியாத இழையால் இணைக்கும் வல்லமை கலையின் பெரும் சக்திக்கு மட்டுமே உண்டு. மனித குலம் ஒரு முழுமையை அடைய தம்மைப் பற்றியதும் உலகைப் பற்றியதுமான உண்மை அதற்குத் தேவைப்படுகிறது. கலை அதைக் கொடுக்கிறது.

கடந்த நூற்றாண்டுகளின் கலை மனிதனை மிக சிக்கலாயும் நெகிழ்ச்சியுடையவனாகவும் ஆக்கியது, ``கலாச்சாரமும் சோசலிசமும்`` இல் ட்ரொட்ஸ்கி குறிப்பிடுவது போல், துல்லியமாக சாதாரண ஒரு தொழிலாளிக்கு உண்மையான தனித்துவம் இல்லாமல் இருக்கிறது என்பதை `இலக்கியமும் புரட்சியும்` ல் அவதானித்திருந்த ட்ரொட்ஸ்கி, தனித்துவத்தின் புறவயத் தரத்தையும் அகநிலை நனவையும் உயர்வடையச் செய்வதில் கலை பங்களிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவர் சொல்கிறார்: சேக்ஸ்பியர், புஷ்கின், டோவ்ஸ்கி முதலியோரிடமிருந்து தொழிலாளி எடுத்துக்கொள்ளக் கூடியது மனிதரின் தனிப்பட்ட சிறப்புப் பண்பின் சிக்கலான கருத்தியல் அதன் பேரார்வம் மற்றும் உணர்வுகள் மற்றும் ஆழமான மிக நுணுக்கமான மனோவியற் சக்திகள் பற்றிய புரிதல்கள் மற்றும் அவற்றின் நனவிலியின் பங்கு ஆகியனவே இருக்கும். இறுதி ஆய்வில் தொழிலாளி வளம் பெற்றவராக இருப்பார்.``

கலை கொண்டிருக்கும் பாதிக்கின்ற அல்லது நிலைகுலைவிக்கின்ற பண்புதான் என்ன? அந்தப் பண்பு முழுமையாக தானே வெளிக்காட்டிக் கொள்கிறதா அல்லது கலையில் வெளிப்படையான சமூக அரசியல் உள்ளடக்கத்தை வழங்குவதன் மூலமாக வெளிக்காட்டிக் கொள்கிறதா? வேறுவிதத்தில் பார்த்தால், இசைக்கருவியாளர்களின் இசை, அருவமான பூச்சு ஓவியங்கள், காதல்கவிதை, புகழ்பெற்ற திரைப்படம் முதலியவற்றில் இதேபோன்று நிலைகுலைவிக்கும் பண்பு பற்றி ஒருவர் பேசமுடியுமா? நிச்சயமாக முடியும், ஒவ்வொருவராலும் முடியவேண்டும் என்றே நான் நம்புகிறேன்.

பொறுத்துக்கொள்ள முடியாத யதார்த்தத்துக்கு எதிராக, மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் முழுமையான நிறைவான இருத்தலின் முயற்சி, சுதந்திரத்துக்கான தூண்டல் விசை என்பது முற்று முழுதானது. எழுத்தியக்கம் எதிர்ப்பின் தொடக்கம் என்று பிரெட்டன் சொல்கிறார். நனவுபூர் வமானதோ நனவுபூர்வமற்றதோ இந்த எதிர்ப்பே ஒவ்வொரு கலை ஆக்கத்திலும் உள்ளது.

உண்மையான ஒரு கலைப்படைப்பு அதை வைத்திருப்பவரிடம் (வாசகசனிடம்) தாக்கமுண்டு பண்ணுவதோடன்றி, அவருள்ளே சக்திமிக்க ஆற்றல்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றது மற்றும் அவற்றைக் கட்டவிழ்த்து விடுகின்றது. அது அவரிடம் இதுவரை கனவில் மட்டுமே இருந்த வாழ்க்கைக்கும் அப்படியாகவே இருக்கின்ற வாழ்க்கைக்கும் இடையிலான முரண்களை, பிராய்ட் சொன்னதைப் போன்ற `மனோவிய இயங்கு முறையின், ஆழமான தட்டுக்களில் இருந்தால் மட்டும் ``புள்ளிக்கு உயர்ந்த விசை நிலையின் புள்ளிக்கு கலை கொண்டு வருகிறது. கலைப்படைப்பானது சிற்றின்ப மற்றும் அழிவுகரமான சக்திகளைக் கட்டவிழ்த்துவிடுகின்றது, ஒரு தனிமனிதனின் உடனடிச் சூழ்நிலையிலும் -தற்போதைய ஒடுக்கு முறைச் சமூக அமைப்பிலும் நிறைவு செய்ய முடியாத ஆசைகளையும் தேவைகளையும் தூண்டுவிக்கின்றது. ஆசைகளால் உருவான தேவைகள் ஒரு பதிலை எதிர்பார்க்கின்றது. அது இறுதியில் சமூகப் புரட்சியில் மட்டுமே அதற்கான பதில் கிடைக்கக் கூடியதாய் கண்டுகொள்கின்றது. அழகியல் உணர்வுக் காட்சிகள் பற்றி பிரெட்டன் குறிப்பிடுகையில் ``அவற்றின் தன்மை திகைப்பை உண்டாக்குவதாயும் புரட்சிகரமானதாயும் இருக்கிறது. ஏனெனில் அவை வெளி யதார்த்தத்தில் தமக்கென பதிலை உடனடியாக எதிர்பார்க்கின்றன``



இவ்வகை விஷயத்தில் அர்த்தம் தரக்கூடிய அரசியல் தன்மை இன்றும் அவிழ்க்கப்படாத நிலையிலும் மார்க்சின் ஆரம்பகால எழுத்துக்கள் சிலவற்றை நான் நம்புகிறேன். அவர் மிகத்திறமையாக பழமையான சளைக்காத விடுதலைக்கான முயற்சியை, மனிதனின் கலைத்துவ முயற்சிகளில் இருந்து எப்பேர்ப்பட்ட சமூக நிலையிலும் அது விடுபட்டுப் போய்விடுவதில்லை என்பதை அவர் கவனித்திருந்தார்.

1843 ல் அவர் எழுதினார்: ``ஆகவே எமது குறிக்கோள்களாக இருக்க வேண்டியது, கொள்கைகளுக் கூடாக நனவைப் புதுப்பித்தலன்றி, `மதம் மூலமாகவோ அரசியல் வடிவம் மூலமாகவோ வெளிப்படும் மறைவான (மாயமான) நனவை ஆய்வுசெய்தல் மூலமாகவோ நனவை புதுப்பிக்க முடியும். உலகம் அடைவதற்காக கனவுகண்டு கொண்டிருந்த சில விஷயங்களை, யதார்த்தத்தில் பெற்றுக் கொள்ள அதுபற்றி அது நனவுபூர்வமாக மட்டும் இருக்க வேண்டும் என்பதற்கு இனி அது ஆதாரமாக அமையும். இறந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையில் ஒரு மனக்கோட்டை போட்டு பிரித்தல் என்ற கோள்விக்கிடமின்றி, கடந்த காலத்தைய சிந்தனைகளை உணர்தல் என்பதற்கு ஆதாரமாக இது அமையும். இறுதியாக மனித குலம் புதிய வேலையை தொடங்கவில்லை, மாறாக நனவு பூர்வமாக பழைய வேலையை சக்தி மிக்கதாக்குகிறது என்பது தெளிவாகும்.`` (அழுத்தம் எனது)

மனிதகுலத்தின் நனவுபூர்வமான மற்றும் நனவுபூர்வமற்ற வாழ்க்கையில் ` சில விஷயங்களை பற்றிய கனவை `` கொண்டு வருதல் கலையின் என்றென்றைக்குமான பணியாகும்.

முடிவுரை

இவ்வறிக்கையை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக எமது சொந்தக் குறிக்கோள் பற்றி இங்கு சுருக்கமாக குறிப்பிட விரும்புகிறேன். கலைவட்டத்திற்கு பொதுவாக கலாச்சாரத்தைப் பற்றி மிகுந்த பொறுப்புடையதாக இன்று ஒரு புரட்சிகரக் கட்சி இருக்க வேண்டியிருக்கிறது. அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னால் சோலிஸ்ட்டுக்கள் தாமாகவே கிடைக்கப் பெற்றதாக எடுத்துக்கொண்ட நிறைய விஷயங்கள் உதாரணத்திற்கு முதலாளித்துவ ஒழுக்கவியல், தேசப்பற்று, சட்டம் ஒழுங்குக்கான சக்திகள், மத மூடநம்பிக்கைகள் முதலியவற்றின் மீதான அடிப்படை எதிர்ப்பு-இன்றைய புத்திஜீவித வட்டங்களில் காணக்கிடைக்காத ஒன்றாகவே இருக்கிறது என்பதை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். கலாச்சாரத்தை மீள்கட்டமைப்புச் செய்தல் அல்லது ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குதல் என்பது ஒரு சாதாரண விஷயமோ அல்லது ஒரு இரவில் சாதித்துவிடக்கூடிய விஷயமோ அல்ல.

மனித குலத்தின் மேதமை அழிந்து விடவில்லை, மாறாக ஸ்ராலினிசத்தின் மோசமான தாக்குதலால் அது தடைப்பட்டுள்ளதுடன், கடந்த அரைநூற்றாண்டாக கலாச்சார வாழ்க்கையின் விஞ்ஞான தொழில்நுட்ப பக்கமாக மேதமை ஒருபக்கமாய் ஒதுக்கப்பட்டு வந்துள்ளது என்பதையும் முன்பே சுட்டிக்காட்டியுள்ளோம். கலைத்துவ சமூக புத்துயிர்ப்பு என்பது தவிர்க்கப்பட முடியாதது. அனேகமாக இந்தக் கூட்டம் அது ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பதை நிரூபிக்கின்றது எனலாம்.

நான் எதிர்பார்த்ததுக்கும் அதிகமாக இன்று இந்த `ஒரு பக்கம் ஒதுக்குதல் `` என்ற சொல்லை பல தடவை உபயோகித்துள்ளேன். நான் இது பற்றிய அவதானத்துடன் இந்த ஒருபக்கமாக்குதலுக்கு எதிரான போரை நாம் அறிவிக்கலாம் என்பேன். வரவிருக்கும் சமூக கொந்தளிப்புக்கள் மார்க்சியர்களிடம் முன் என்றும் இல்லாதபடி எல்லாப்பக்க அவதானங்களையும் கேட்கும்.

`புரட்சிகரமும் அரசியலும்`` என்ற ஒரு பக்கச் சார்பில் புறவய சாயங்கள் இருக்கும் - இலக்கியமும் புரட்சியும் என்ற புத்தகத்தில் ஒருவித வருத்தத்துடனும் கவலையுடனுமே இதுபற்றி கூறியதை - இன்று நாம் கூறுவது இங்கிருக்கும் யாரையும் அவமானப்படுத்தாது என நான் நம்புகிறேன். 1930 களின் தொடக்கத்தில் ஸ்ராலினிச மயமாகிக் கொண்டேயிருந்த பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பாக வெளிப்பட்டதாக இருந்தாலும் அன்திரே பிரட்டனின் எச்சரிக்கை இன்னும் மனத்தில் இருத்தப்பட வேண்டியது பயனுள்ளது. `` ஒருவர் தன் குறிக்கோளை அடைவதற்கு தொடங்கிய தருணத்தில் இருந்து முற்றிலும் தடைசெய்யப்பட்ட கயிற்றின் மீது நடந்து கொண்டு மேலேயோ கீழேயோ மட்டுமே பார்க்க கவனம் கொள்ளக்கூடியதாயிருப்பதானது ஒரு புரட்சியாளன் எடுத்துக் கொள்ளும்- சிரத்தையாக இருக்கிறது.!"

பிரிட்டிஷ் சோசலிஸ்ட் லேபர் லீக்கினதும் பின்னால் தொழிலாளர் புரட்சி கட்சியினதும் தலைவரான ஜெர்ரி ஹீலி, கலாச்சாரப் பிரச்சனைகள் பற்றிய தனது அறிவு போதாமையை ஒத்துக் கொண்டதோடு, `எமக்கு நேரமில்லை, அது பற்றி எல்லாம் படிப்பதற்கு எனக்கு நேரமில்லை ` என்று 60 களின் இறுதியிலும் 70 பதுகளின் தொடக்கத்திலும் சொல்லி வந்தார். போருக்குப் பிந்திய காலப்பகுதியில் ட்ரொட்ஸ்கிய இயக்கம் சந்தித்த பாரிய கஷ்டங்களுக்கு இடையில் இதுபற்றிய ஒரு ஆழமான ஆய்வு புறநிலைச் சாத்தியமான ஒன்று என்று விவாதிக்கவோ அல்லது கருத்துத் தெரிவிக்கவோ கூடிய நிலையில் நான் இல்லை. சில புறநிலை உண்மைகள் பற்றி மட்டுமே நான் பேசுகிறேன். இருப்பினும் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் எமது கட்சியின் `ஒரு பக்கத்` தன்மையானது, ஒரு பக்கம் கலாச்சாரம் பற்றிய, பண்பாடற்ற, பிற்போக்கு மற்றும் கம்யூனிச எதிர்ப்பு தொழிலாளர் அதிகாரத்துவ மேலான்மையினது தொழிற்பாட்டின் பகுதியாகவும் மார்க்சிய போக்கின் தனிமைப் படலாலும் என்று நான் நினைக்கிறேன்.


ஹீலியின் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமை சீரழிவுக்கும் அதன் தோல்விக்கும் காரணம் கலாச்சார விஷயங்களின் முக்கியத்துவத்தை கவனமெடுக்காததே என்று நான் கூறவில்லை. குறிப்பிட்ட அளவு மத்தியதர வர்க்க புத்தி ஜீவிகளால் வைக்கப்பட்ட சவால் உட்படி 1970 களில் புது அரசியல் பிரச்சனைகள் உருவாக்கியபோது பல கேள்விகளுக்கு இத்தலைமை தன்னை தயார்படுத்திக் கொள்ளாதது, அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் பாதிக்கப்பட்டது என்று என்னால் வாதிட முடியும். இந்த தயார்படுத்திக் கொள்ளாத நிலை அதன் சீர் குலைவுக்கான காரணியாகவிருந்தது.

முதலாளித்துவம் சம்மந்தமான எல்லாவகை சிந்தனைகளும் மார்க்சியத்தை நோக்கியே உந்தப்படுகின்றன என்பதை நவீன வரலாறு நிரூபித்திருக்கிறது. தலைக்குள் நல்ல பார்வை இருப்பவர்களும் ஏதாவது விஷயத்தைச் சொல்ல விரும்புவர்களுமான கலைஞர்களும் புத்திஜீவிகளும் தவிர்க்க முடியாமல் இக்கட்சியை நோக்கி கவர்ந்திழுக்கப்படுவர். நாம் இணைந்து செல்கிறோமென்ற பதிலை வழங்குவதற்கும் முயற்சியின்றி திடீரென்று ஏற்பாடு செய்வதற்கான சலுகைக்கும் நாம் அனுமதியளிக்கப்படக் கூடாது.

இக் கல்விகூடலும் கடந்த கால எம்கட்சியின் அபிவிருத்திகளும் பெரும் நம்பிக்கைக்கு காரணமாக இருக்கின்றன என நான் நினைக்கிறேன். எமது கட்சி தெளிவான பதாகையை உடையது. நாங்கள் தான் முதலாளித்துவத்தினதும் அதிகாரத்துவத்தினதும் பிரகடனம் செய்து கொண்ட எதிரிகள். இந்த அடிப்படையில் வேறு எந்த இயக்கமும் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்க முடியாது. வேறு எந்த இயக்கமும் கலைஞர்களுக்கு நமது வேண்டுகோளை விடுக்க முடியாது. 1838ம் ஆண்டு அறிக்கையை ட்ரொட்ஸ்கியும் பிரேட்டனும் முடித்திருந்ததில் எந்த சொற்களையும் மாற்றிவிட எனக்கு எக்காரணமும் இல்லை.

எழுத்தாளர் ரஹ்மத் ராஜகுமாரனின் எழுத்தியல் அற்புதங்கள்

எழுத்தாளர் ரஹ்மத் ராஜகுமாரனின் எழுத்தியல் அற்புதங்கள் பேரா.எச்.முஜீப் ரஹ்மான் ரஹ்மத் ராஜகுமாரன், இவரின் இயற்பெயர் ஏ.பி.எம். அப்த...