Tuesday, October 24, 2017

சுதாகரனின் 7.83 ஹெர்ட்ஸ் நாவல்

சுதாகரனின் 7.83 ஹெர்ட்ஸ் நாவல்
********
அட்டைப்படத்தை பார்த்து விட்டு எதுவுமே கணிக்க முடியாத நாவல் இது ! வெகு நாளாய்க் காத்து இருந்து ஓர் அற்புதமான வரலாற்றுத் தளத்தில் அறிவியல் தன்மையுடன் ஒரு கதையை வாசிப்பவர்களுக்குத் திரு சுதாகரனின்7.83 ஹெர்ட்ஸ் மிகப்பெரிய வரவேற்பைத்தரும் நாவல் . மிகப்பிரபலமான அறிவியல் கதைப் புனைவாளார்கள் கூட எழுதத் தயங்கும் மிக நுட்பமானமனதைக் கட்டுப்படுத்தும் அதிர்வலைகளைப் பற்றிய கட்டுரை வேசமில்லாத கதையுணர்வுடன் வெகு நேர்த்தியான அற்புதமான நடையில் தமிழுக்குப்படைத்து இருக்கிறார். தமிழில் அறிவியல் கதை என்பது தனியாகவும் அறிவியல் கட்டுரைத் தனியாகவும் வளர்ந்து வரும் நேரத்தில் இரண்டையும் சமீபவருடங்களில் இணைத்துத் தரும் இன்னொரு சிறந்த முயற்சி இது.

நாவலின் பெயர்.

”7.83 ஹெர்ட்ஸ்”மிகத் துணிவானப் பெயர்த் தேர்ந்தெடுப்பு . நாவலுக்குத் தமிழில் பெயர்த் தர முடியாவிட்டாலும் நாவலின் அறிவியல் புனைவுகள்அனைத்தையும் மிகச் சுலபாமாகப் புரிந்துகொள்ளும் வகையில் மெனெக்கெட்டுத் தமிழ் படுத்தித் தந்து இருக்கிறார் ஆசிரியர்.
ஆனால் எனக்குச் சிறு வருத்தம் மனதுள் நிழலாடுவதைத் தவிர்க்க முடியவில்லை .எல்லா நாவல்களும் படிக்கப்பட வேண்டும் என்பதற்காக மட்டுமேஎழுதப்படுகிறது.இரண்டாவது, எழுதிய ஆசிரியர், வெளியீட்டாளர் உட்பட அனைவரின் உழைப்பின் பயனை, அதன் அதிக விற்பனையின்விளைவில்தான் அனுபவிக்க முடியும் . அப்படி அது வாசிக்கப்பட வேண்டுமென்றால் அது 1. மிகப்பிரபலமாக, நாவலின் தன்மைக் குறித்துவிளம்பரப்படுத்தவேண்டும்.2.நாவலின் பெயர்த் தவறி விழப்போகும் காதலியைத் தாங்கிப் பிடிக்கும் கைப் போலச் சிக்கெனெப் பற்றிக்கொள்ளவேண்டும்.(பெயர் வைக்கும் விசயத்தில் எழுத்துலக ஜாம்பாவான்கள் கூடக் கவனமாக இருந்தை நாம் மறக்கக் கூடாது ) 3.மிகப்பெரிய விமர்சனத் தாக்கத்தைவலைதளங்களில், பத்திரிக்கைகளில் எழுப்ப வேண்டும் .4.புத்தக விழாக்களில் ஃப்ளக்ஸ் பேனர் வைத்துப் பேசப்படவேண்டும் .என்பது என் தாழ்மையானகருத்து !

கதைக்கரு .

இந்த நாவல் வாசிக்கும் முன் வரை எனக்கு ஒநாய்கள் பற்றி எனக்கு ஒரு துளியும் தெரியாது .சில சேனல்களில் அவை கூட்டமாக ஓட,ஓடவிலங்குகளைப் பிய்த்துத் தின்னுவதையும்.சிங்கத்தின் இரையைக் கூட வெறுப்பேத்திப் பிடுங்கிக் கொள்வது மட்டுமே தெரியும். அவ்வளவுதான் !ஆனால் அவை 800 ஆயிரம் வருடங்களுக்கு முன் இதே பூமியை ஆண்ட ஓர் இனமாக ஓநாய் எனும் ஊனுண்ணிப் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒருகாட்டு விலங்கு என்பதுவும் அதன் ஆரம்பப் பிறப்பான பழுப்பு நிற ஓநாயிற்குத் தாயகம் இந்தியா என்பதும் எனக்கு மிகப்புதிய விசயம். அதை விடவும்புதிய விசயம் ஓநாயைத் தனது மூதாதையராக நம்பி, புனிதச் சின்னமாக வழிபட்டுக் கொண்டாடும் உலகில் பல்வேறு இனமக்களை அறிந்து கொள்ளும்போது ஆச்சர்யமாக இருக்கிறது .

கதையாக்கத்தின் நோக்கம் !

அந்த ஓநாய்களைக் காக்கும் முயற்சிதான் இந்தக் கதைக்கரு.இந்த நாவலை உருவாக்கிய ஆசிரியரின் உண்மையான நோக்கமாகவும் அதுவேஇருக்கிறது ! நம் தமிழ் திரைப்படக் கதைக்கரு போலப் பழிவாங்கும் படலம் போலத் தன்மைதான் நாவல் . ஆனால் இயற்கையின் உயிர் சூழலில் உணவுச்சங்கிலியின் அக்கறை கொண்ட நாவல்.இந்த நாவலில் எது கற்பனை எது கோட்டைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மிகச்சாதுர்யமாகப் புனையப்பட்ட நாவல் .

இந்தியாவுக்குள் நுழைந்த செச்சன்யப் போராளிகள் !.

சீனாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள (சின்சியாங்கு) (Xinjiang) மாகாணத்தில், உய்கூர் (Uyghur) என்ற பகுதி மணிக்கெயிசம் என்ற மதத்தைச் சார்ந்தமக்களுக்கு இந்த இனமக்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்கிறார்கள் .அப்படி வாழ்பவர்களில் செச்சன்யாவை (Chechnya ) சேர்ந்த போர்ஜ் மக்கள்குழு உலகில் உள்ள ஓநாயை அழிக்கத்திட்டமிடும் அரசுகளை மற்றும் அமைப்புகளைக் கொடுங்கோளர்களார்களாக நினைத்து அழிக்க நினைக்கிறது.இந்தியாவில் இரண்டு செச்சன்யர்கள் தலைமையில் ஒரு செயல் திட்டத்துடன் இந்தியாவுக்குள் நுழைகிறார்கள்.
அதில் ஒருவன் ரசாயன ஆயுதங்களைத் தயாரிப்பில் முக்கியமாக ’தெர்மடைட்’ என்கிற ஒரு விதமான கந்தகக் கலவையில் ஆயுதம் தயாரிக்கும்மூளைக்காரன் .அவன் கொஞ்சம் நல்லவன் கூட ! என்னது ? தீவிரவாதியில் நல்லவன் எப்படி இருக்க முடியும் ? என்ற கேள்விக்கு – அவன் தனது ஆசனவாயில் தான் இறந்துப் போன பிறகும் நமது ராணுவ அதிகாரி விக்ரம் பத்ராவுக்குக் கிடைக்குமாறு விட்டுப்போன ஓர் எச்சரிக்கைச் செய்தி. இந்தநாவலின் முக்கியமான திருப்பத்திற்கும் மிகப்பெரிய அழிவிலிருந்து தப்பிக்க உதவியது .

அது, ஒரு மண்டை ஓட்டுப்படம் ,ஒரு ஃபோர்ஜ் துப்பாக்கி (Forge Gun) ஒரு பெர்சியன் ஸ்வார்ட் (Persian sword) அதோடு ’அந்திம ஆயுதம் அமைதி ‘என்றவாசகம் கொண்ட ஒரு துண்டுச்சீட்டு அந்தத் தாக்குதலில் முடிவில் அதை நடத்திய ஒரு ராணுவ அதிகாரிக்கு விட்டுச் செல்கிறான் . நாவலின் இந்தமுடிச்சு , 31 ஆம் பக்கம் துவங்கிய இந்த ரகசிய முடிச்சிற்கான தேடல் 194 ஆம் பக்கம் வரை வாசிப்பவர்களை, வியர்க்க வைக்கும் அளவுக்குத் துரத்துகிறது.

இதில் இன்னொரு தீவிரவாதியை ’சாவுக்களி ஆடும் பிசாசு ‘என்று வர்ணிக்கும் அளவுக்குக் கொடுரமானவன் ஆனால் அவன் மரபியல் மற்றும்தொலைத்தொடர்பியலில் கில்லாடி.இவர்களுக்கு வெளியிலிருந்து உலகி பல இடங்களில் துறைகளில் பரவி வசிக்கும் மக்களின் துணையோடுமிகப்பெரிய ’நெட்வொர்க்’போலச் செயல்படுகிறார்கள் .இவர்களுடன் நம் நாட்டு அரசின் மேலும் அறிவியல் துறையினால் பாதிப்பட்ட ஓநாய் அறிவியல்விஞ்ஞானி எதிரிக்கு எதிரி நண்பன் போலத் துரதிருஷ்ட வசமாகக் கைகோர்த்துக் கொள்கிறார்.அவர்களின் விஞ்ஞானப் பூர்வமான சதி வலையைஅறுத்து எறிவதே நம் சுதாகர் அவர்களின் 7.83 ஹெர்ட்ஸ் நாவல் பேசுகிறது .

ஓநாய்பற்றிய வரலாற்றுத் தகவல்கள்.

ஓநாய்களைப் பற்றி நாம் கேள்விப்பட்ட விசயங்கள் மிகச் சொற்பமே என்பது இந்தக்கதையின் பல இடங்கள் வலியுறுத்துகின்றன. அதிலும் வேத நாயகம்என்ற ஒரு பாத்திரம் மூலம் ஆசிரியர் சுதாகரின் ஓநாய்கள் பற்றிய ஆராய்ச்சி நம்மை வியக்க வைக்கிறது.(அந்த மனிதன் நம்மைப் பொறுத்தவரை நம்வீட்டு நாய்கள் ஓநாய் வம்சத்தின் உப பிரிவாக ( Subspecies of Canis lupus familiaris or Canis familiaris ) அறிகிறோம் . ஆனால் ஆதி ஓநாயான பழுப்பு நிற ஓநாய்(lupus familiaris) இந்தியாவில் பிறந்து உலகெங்கும் பரவி வளர்ந்து இருப்பது தொடங்கிக் கிழக்கே சிக்கிம் தொடங்கி மேற்கே பாமிர் முடிச்சு வரை பூமியைஆண்ட இனம் (பக் -172) என்பதாகவும் ,
இன்றைய செர்பியா(Canis lupus lupus) துருக்கி (Canis lupus lupus ) ஆகிய நாடுகளின் தேசிய விலங்குகள் பட்டியலில் ஓநாய்கள் இருக்கிறது. துருக்கியில்சுமார் 10,000 வருடத்திற்கு முன் Anatolia - Gobekli Tepe இடத்தில் கட்டப்பட்ட உலகின் முதல் கோவிலாகத் தொல்லியல் துறை (http://archive.archaeology.org/0811/abstracts/turkey.html ) சொல்லும் கோவில் கற்படிவங்களில் ஓநாய்த் தலை வடிவம் செதுக்கப்பட்டு இருப்பதை ஆய்வு செய்துஉலகின் பார்வைக்குத் தந்தவர் ஜெர்மானியத் தொல்லியல் துறைப் பேராசிரியர் Professor Klaus Schmidt ( இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம்நாள்தான் நீச்சல் செய்துகொண்டு இருக்கும் போது மாரடைப்பில் காலமானார் ) நீல நிற ஓநாய் தெய்வத்தின் வழித்தோன்றலாக அவர்கள் தங்களைக்கருதிக்கொள்கிறார்கள் !
இதற்கும் ஒரு படி மேலாய்ச் செச்சன்யார்கள் தங்களுடைய மூதாதையர்கள் ஓநாய் முகம் இருக்குமாம் ! போராளிகளின் புரட்சிக் கொடி அதை இன்றும்பிரதிபலிக்கிறது !

ஓநாய்கள் இன அழிப்பு !

ஓநாய்கள் இனம் அழிக்கப்பட முதல் காரணமாய் இங்கிலாந்தின் மன்னர் (Edward the Confessor 1042 to 1066 இருக்கலாம் !) 1500 ஆம் ஆண்டில் ஒருதீர்மானத்தைக் கொண்டு வருகிறார்.இது உலகில் ஆங்கில ஆட்சிப்பரவல் போல விரிந்துப் பரவி ஓநாய் இனம் அழிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது .காரணம் மனித இனத்தின் மாமிச உணவின் மேல் கொண்ட பேராவல் . அதற்குத் தடையாக இந்த ஓநாய்களின் வளர்ச்சித் தடையாக இருப்பதாகக்கருதிக்கொள்கிறது .ஓநாய்கள் மனிதனுக்குத் தடையாக நினைக்கத் தொடங்கிய காலமே அதன் வாழ்க்கைச் சுதந்திரத்தை மனித இனம் அறுவடைச்செய்யத்தொடங்கியது.இப்போது நாம் புலிகள் இனத்தைக் காப்பதற்கு இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ”ஆடு பகைக் குட்டி உறவு”என்பது போலஓநாயின் இனத்தின் உட்பிரிவான நாய்களை (சாம்பல் ஓநாய்க் கேனிசு லூப்பஸ் Canis Lupus Familiaris ) நம் வீட்டுச் செல்லமாக மனித இனமாக வளர்கிறது.

நாம் ஒரு படி மேலே போய்ப் பைரவர் ( சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவர் ) வாகனமாகக் கோவிலுக்குள்வைத்துக் கும்பிடுகிறோம் என்பதும் மகாபாரதத்தில் போரின் போது ”அஞ்சுதற்குரியச் செயல்களையுடைய ஓநாய் வயிற்று வீமன் பௌண்ட்ரம்(பௌண்ட்ரம் என்பது “புடி கண்டநே” என்கிற தாதுவிலிருந்து உருவாக்கப்பட்டது இது எதிரிகள் மனதைப் பிளப்பது என்று பொருள் கொள்ளப்படுகிறது ) என்ற பெருஞ்சங்கை ஊதினான்”என்று பேசப்படுகிறது என்பது வேறு விசயம்.அதாவது நமது சமயத்தில் கூட ஒநாயின் இனமான நாய்கள்ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது .அப்படிபட்ட இந்தியாவும் அந்த இனதிற்கு எதிராகச் செயல்பட (கதைப்படி) எட்டு வருடங்களுக்கு முன் துருக்கியின் எர்ஜரம் எனும் நகரத்தில் அட்டாடர்க் பல்கழைகலகத்தில் (Ataturk University) உலகளாவிய ”மூன்றாம் உலக நாடுகளில் வேளாண்மை ,கால்நடைவளர்ப்பில் உயிரியல் சவால்கள்” என்ற கருத்தரங்கில் விவாதிக்கப்படுகிறது .இதில் இந்திய இந்திய விஞ்ஞானிகளின் நிலைத் தவறாகச் செச்சன்யார்களால் புரிந்து கொள்ளப்படுகிறது இதன் விளைவாகப் போராளிப் பிரிவு ஒன்று இந்தியாவுக்கு எதிராக ஒரு திட்டம் வகுக்கிறது .
அந்தத் திட்டம் இருவகையில் வகுக்கப்படுகிறது .ஒன்று நேரடிக் குண்டு வெடிப்புகள் மூலம் இந்தியாவுக்கு எதிராகச் செயல்படுவது . இதுதான் இந்தநாவலின் 21 ஆம் துவங்கும் ஒரு போராளி ( கொஞ்சம் நல்லவன் என்று முன்னரே சொல்லியிருந்தேனே அவர்(ன்) ) செய்ய வந்த வேலை. இன்னொருவகை நாம் இதுவரை எந்தப் புத்தக்கங்களிலும் வாசிக்கப்படாதப் பகுதி இதை மிகக் கவனமாகப் பக்கம் 105 முதல் 112 சொல்லப்படுகிறது .
மனிதக் குலத்திற்கு எதிரான நுண்மின் அலைப் பேரழிவு !.
மூளையோட இயக்கம் நுண்மின் அலைகளால் ஆனது.நம் அனைத்து உணர்ச்சிகளையும் மின் அதிர்வுகளால்தான் மூளை உணர்கிறது .ஒவ்வொருஉணர்ச்சிக்கும் உணர்வுக்கும் இந்த மின்அலைதான் எனத் தோராயமாக மூளைமின்னலை வரைவு Electroencephalography, (EEG) என்ற கருவி மூலம்பெருமூளைப் புறணியில் உள்ள பெருமளவிலான நியூரான்கள் அடங்கிய உறுப்புகளுக்கிடையே காணப்படும் சீரான மின்னோட்ட அலைவுகளைஎலக்ட்ரோடுகளின் உதவியுடன் பதிவு செய்து Electroencephalography Functional magnetic resonance imaging மூலம் கண்டறிந்து அதை ஒரு ‘டேட்டாப்பேஸ்ல”சேகரித்து வைத்து அதே மாதிரிச் செயற்கை மின் அலைகளை உற்பத்திச் செய்யும் எஞ்சினை உருவாக்கி,அதைக் கம்யூட்டர் மூலமாக்கண்ட்ரோல் செய்து எந்த மனித உணர்ச்சிகளைத் தூண்ட வேண்டுமோ அதை உருவாக்கி அதை ஓர் ஏற்பு அலை என்று சொல்லும் கேரியர் அலைமூலமா ஒரு குறிப்பிட்ட இடத்தில் பொழியச் செய்து அங்குள்ள மனிதன் அல்லது மீன்கள், எலி,யானை ,ஓநாய் போன்ற எந்த உயிரையும் தூண்டிச்செயல்பட வைக்கலாம்.உதாரணமாக மனிதனுக்கு இந்த உணர்ச்சியின் போது இந்த அலை மூளையில் ஏற்படும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தப்பட்டுஇருக்கிறது.

ஒரு ஹெர்ட்ஸ் அளவு என்பது ஒரு நொடிக்கு ஒரு சுழற்சி நிகழ்வதைக் குறிக்கும். Hertz என்பதை Hz என்று சுருக்கிக் குறிப்பிடுவர் .மூளையின் செரிப்ரல்கார்டெக்ஸ் என்று அழைக்கப்படும் மேலுறைப் போன்ற பகுதிப் பல மடிப்புகளைக் கொண்ட வெளி அடுக்காக உள்ளது. இதில் கோடிக்கணக்கில்நியூரான்கள் உள்ளன. ஒரு சதுர மில்லி மீட்டர் அளவில் சுமார்ப் பத்து லட்சம் நியூரான்கள் உள்ளன என்றால் எத்தனை கோடானுக் கோடி நியூரான்கள்மூளை இணைப்பில் உள்ளன என்பதைக் கற்பனைச் செய்து கொள்ளலாம் ! இந்த நியூரான்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப் பட்டுள்ளன. மற்ற மூளைப்பகுதிகளிலிருந்து தகவல் முதலியவற்றின் உள்ளீடுகளைப் பெறுகின்றன. நரம்பு தூண்டுதலினால் மின் செயல் பாட்டைப் பெறுகின்றன. புலன்கள்அனுப்பும் அனைத்தையும் பெற்று நியூரான்கள் மூளை மேலுறையில் செய்யும் செயல்பாட்டை அளப்பதை ஒரு EEG ன் எலக்ட்ரோடை மண்டையில்இணைத்து விட்டால் போதும், அதன் அடியில் உள்ள மூளையின் செயல்பாட்டை அது துல்லியமாகக் காட்டி விடும். EEG, சீரான இடைவெளியில்வருகின்ற ஆல்பா, பீட்டா டெல்டா , தீட்டா,காமா மற்றும் பல வகை மின்னலைகளைப் பதிவுச் செய்கிறது.இவற்றை அலைவரிசை அல்லது அலைஎண்என்று இனம் கண்டு ஹெர்ட்ஸ் அல்லது வினாடிக்கு இத்தனை சைக்கிள் (Hz or cycles/sec) என்றும் ஆம்ப்ளிட்யூட் எனவும் அளக்கிறோம்.உதாரணம்..
Delta wave – (0.1 – 3 Hz)
Theta wave – (4 – 7 Hz)
Alpha wave – (8 – 15 Hz)
Mu wave – (7.5 – 12.5 Hz)
SMR wave – (12.5 – 15.5 Hz)
Beta wave – (16 – 31 Hz)
Gamma wave – (32 – 100 Hz)
இப்போது இன்னும் பல மடங்கு முன்னேறியுள்ளது .அதாவது 0.1 நுண்ணிய ஹெர்ட்ஸ் மின்அலையில் மூளைச் செயல்படும்போது என்ன உணர்வு ஏற்படுகிறது என்று கூட EEG கருவியின் மூலம் கண்டறியும் அளவுக்கு நுட்பம் முன்னேறியுள்ளது .

1957 இராக் போரில் அமெரிக்காவின் CIA - Central Intelligence Agency இவ்வாறு ஒரு குறிப்பிட்டக் கோப உணர்ச்சிகளைத் தூண்டிச் செயல்படுத்தி இராக் மக்கள் தங்களுக்குள்ளே தாக்கிக் கொல்லுமாறு செயல்படுத்தப்பட்டார்கள். இது மாதிரித் தெரிந்தும் தெரியாமலும் உலக நாயகன் அமெரிக்க அண்ணன்செயல்படுத்தி இருப்பார் யாருக்குத் தெரியப் போகிறது ? கூகுள் மேப்ஸ் எர்த்தில் இருந்து பிக்சலேட் செய்யப்பட்டோ அல்லது முழுமையாகஅழிக்கப்பட்டோ காட்சியளிக்கும் மறைக்கப்பட்ட உலகின் 10 ரகசியப் பகுதிகளில் இந்த அமெரிக்காவின் அரசு ஆய்வு மையம் (HAARP government researchfacility) : அலாஸ்காப் பகுதியில் உள்ள 'ஹார்ப்' எனப்படும் அமெரிக்க ஆராய்ச்சி மையமும் (HAARP - High Frequency Active Auroral Research Program) ஒன்று !அப்படி இந்த ஆராய்ச்சி மையம் உலகுக்கு என்ன செய்கிறது ? இதற்கு இன்னும் பல பெயர் உண்டு அதில் ஒன்று Secret Weapon Used For Weather Modification .இதன் செயல்பாடுகளில் ஒன்றைக் கடந்த 04.12.2016 தினமலர்ச் செய்தி (http://www.dinamalar.com/user_comments.asp…)உறுதிப்படுத்துகிறது.வாசித்துப் பாருங்கள் இதன் வலிமைப் புரியும்.

சென்னையில் மேலும் பல பகுதிகளைச் சூழ்ந்தது வெள்ளம் 50 லட்சம் பேர்ப் பாதிப்புத் தண்ணீர் வெளியேற வழியில்லாததால் மீட்புப் படைத் திணறல்இந்தப் பேய்மழைச் செயற்கையாக உருவாக்கப்பட்டது...
உலகப் பருவ நிலை மாற்றம் குறித்ததான மாநாடுப் பாரிஸில் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அதற்கு ஆதரவுப் பெறும் நோக்கில் இவ்வாறுநிகழ்த்தப்படுகிறது. இதைபோல் பல நாடுகளில் நிகழ்த்தியிருக்கிறார்கள். இதற்குப் பெயர் ஹார்ப் [ HAARP: Secret Weapon Used For Weather Modification ] இந்தமாநாட்டின் நோக்கமே, தொழில்சாலைகளில் இருந்து வரும் கரியாமிலவாயுக்களால் பருவ நிலை மாறுபட்டுவிட்டதாகக் கூறித் தொழில்சாலைகளைமூட வைக்க வேண்டும் என்பதாகும்.
ஒருவேளை இம்மாதிரி மறைமுக விஞ்ஞான ஆயுதங்கள்தான் எல்லா நாடுகளையும் அமெரிக்காவிற்குப் பணியவைக்கும் முயற்சியா ?தெரியவில்லை.இது அமெரிக்கா அண்ணன் மட்டுமல்ல ரஷ்யச் சகோதரரும் Sura Ionospheric Heating Facility என்ற பெயரிலும் நியுஜிலாந்து ( military in aprogramme code named ) Project Sea என்ற திட்டத்தின் கீழும் இம்மாதிரி இன்னும் உலக நாடுகள் பல விஞ்ஞான முன்னேற்றங்களை அழிவின் விளிம்பிற்குஉலகை அழைத்துச் செய்யும் முயற்சியாகத் திட்டமிடுகிறார்கள் .இந்த நாவல் படிக்கும் போது நம் உலகம் எவ்வளவு பெரிய அபத்து வலைப்பின்னலில்சிக்கித்தவிக்கிறது என்பது மிரட்டும் உண்மையாகச் சுடுகிறது.இந்த நாடுகளின் முன் மனிதாபிமானம் என்பது நூறு டன் இரும்புக் குண்டை எச்சில்தொட்டுக் கட்டிடக் கூரையில் ஒட்டும் முயற்சி என்பது மிகத்தெளிவாக உணர முடிகிறது .

இன்னும் சில பயங்கர உண்மைகளை இந்தச் சதிவலைகளால் எவ்வளவு சாத்தியம் என்பதை உங்களால் முடிந்தால்http://www.maruthamunaionline.com/V3/index.php/articles/205-human-action படித்துப்பாருங்கள் .அது மட்டுமல்லாது நாவலின் பின் பகுதியில் (பக் 229 -231) வரைஆசிரியர் கொடுத்த Reference பகுதிகளுக்குக் கட்டாயம் ஒரு விசிட் அடியுங்கள் .
ஆனால் இந்தக் கதையில் இந்தத் தொழில் நுட்பம் எப்படி யாரிடம் பயன்படுத்தப்படுகிறது ? இந்தப் பாதிப்பை மரபியல் ரீதியாக MAO ( Mono Amine Oxide )Type 2 Allele பாதிக்கப்பட்டவர்களை எப்படித் தாக்குகிறது அதற்கு உபகருவியாக என்ன என்ன தேவைப்படுகிறது ? ( பக். 108)
இவ்வளவு சிரமமானக் கதை நகர்த்தலில் ஊடே திவாகர் – வித்யாக் காதல் இழைப் பின்னப்படுவதுவும், (பக் 132 – 133)
இந்த அராய்ச்சியில் ஈடுபட்ட ஜெயா என்ற பெண்ணுக்கு ஹோலிஸ்டிக் சென்சிங் (Holistic sensing) மூலம் நினவுகளைத் திரும்பவும் மின்காந்தஅலைத்தூண்டல்கள் மூலம் செய்தியாகப் பெற MANAS - Mind and neural activity stimulator செயற்கை நுண்ணறிவு மென் பொருள் உருவாக்கப்படுவது இந்தியாவின் சூப்பர்க் கம்ப்யூட்டர் உதவியால் PARAM is a series of supercomputers designed and assembled by the Centre for Development of Advanced Computing (C-DAC) inPune, India (பக் 117 )
இதை எப்படி நம் ராணுவம் ”மன ஆளுமைத் தன் வசம் இல்லாத மனிதர்களால் பெரிய தாக்குதல் வரும் என்பதை அறிந்து அதை முறியடிக்கும் இந்தியMAPRREC Mind And Psychical Resource REmote control என்ற திட்டத்தில் யாரெல்லாம் சேர்க்கப்படுகிறார்கள் ?(பக் 111)
நாவலின் போக்கில் இடச்செருகலாக விக்ரம் பத்ராவின் கனவின் ESP காட்சிகளும் சில்கா ஏரி நிகழ்வுகளும் மீன்களின் தாக்குதல் எலி, யானை, மனிதர்கள்மனிதனைச் சாப்பிடும் விசயங்கள் (பக் 77)

நாவல் மூலம் கற்றதும் பெற்றதும் ..

1.மனித இனத் தோற்றத்துக்குக் காரணமான ‘யாளி’என்றக் கலப்பின உயிரினத்தின் உடலும் ஆதி ஓநாய் இனத்தின் உடலின் அமைப்பும், முதலை அல்லது சிங்கம் போன்ற அமைப்பு Anatolia - Gobekli Tepe பழங்காலக் கோவில் சிற்பம் மூலம் ஒத்துப்போகிறது .இது என் தனிப்பட்ட தேடலுக்கு இன்னொரு பலம்சேர்க்கிறது.
2. நான் கற்றுக்கொண்டும் மற்றவர்களுக்குச் சொல்லிக்கொண்டு இருக்கும் அகத்தாய்வு Introspection ( empathy, and psychoanalysis: An examination of the relationship between mode of observation and theory.) என்ற HLA – Human Lucosite Antigen Allele பற்றிய செய்திகளும் அதன் தீர்வும் பற்றிய பயணமும் வலுப்பெற்று இருக்கிறது !
3. தியானத்தின் போது குறையும் EEG அலைகளின் தன்மைக் குறித்த
பின் பகுதி (பக் 229 -231) வரை ஆசிரியர் கொடுத்த Reference பகுதி அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்கிறது .
4.The Day After Tomorrow ஆங்கிலப்படமும் ,அமெரிக்காவிடம் தப்பித்த Edward Snowden - http://www.secretsofthefed.com/snowden-reveals-haarps-clob…/ பகுதிக்கும் இன்றைய நவீன HAARP சதிகளை http://www.pearltrees.com/tierracast/haarp/id9718285#l614 பாருங்கள்.
5 .மிகப்பல அறிவியல் நூல்களை ஆராய்ந்து வாசித்துக் கதைகள் புனையப்படுவதன் சாத்தியத்தை நீங்கள் அறியலாம் .ஆனால் ஒரு நாவலைப் படித்துவிட்டு நீங்கள் மிக்கப்பல ஆராய்சிக் கட்டுரைகளைத் தேடிப்போவது நிகழப் போகிறது என்றால் அது 7.83 ஹெர்ட்ஸ் நாவலைப் படித்தவர்களுக்கு நிகழப்போவது உறுதி.

No comments:

கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான பார்வை

கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான  பார்வை அர்ப்பணிப்புள்ள வன அதிகாரியான அஜய் மற்றும் அபர்ணா ஆகியோரின் திருமணத்துடன் திரைப்படம் தொடங்குக...