கலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்
Thursday, October 22, 2009
ஹாமீம் முஸ்தபா என்ற நேர்காணல்காரரை முன் வைத்து
தமிழில் சிறுபத்திரிக்கைகளிலிருந்து வெகுஜன பத்திரிக்கைகள் வரை நேர்காணல் என்கிற உரையாடல் களனை பத்திரிக்கை மரபாக கொண்டு தொடர்ச்சியாக இயம்கிகொண்டிருப்பதை காணலாம்,தமிழில் சிறுபத்திரிக்கையின் ஆரம்பகாலம் தொட்டு நேர்காணல் கலை வளர்ந்துகொண்டிருக்கிறது.இன்றைய காலகட்டதில் நேர்காணல்கள் அனைத்தும் தொகுப்பாக மாறிக்கொண்டிருக்கிறது.மேற்கத்திய சூழலில் பிரம்மாண்டமான தாக்கத்தினை ஏற்படுத்திய நேர்காணல் கலை தமிழ் சூழலிலுல் சோடைபோகவில்லை என்பது தெளிவு.மேற்கத்திய சூழலில் செய்யப்படும் நேர்காணல்கள் சற்று தீவிரமானதாக,எழுத்தாளர் மற்றும் கலைஞர்களின் பார்வையை ஒட்டு மொத்தமாக எளிதில் புரியவைத்து விடுகிற தன்மை முக்கியமான நேர்காணலின் குணமாகும்.பொதுவாக நேர்காணல்கள் எழுத்தாளர்களின் சுயமதிப்பீடுகளை வெளிகாட்டுவதும் நேர்கோட்டு பாதையில் தொடர்ச்சியாக புரிதல்களை உருவாக்குவதும் கருத்தியல் ரீதியான உரையாடல்கள் சற்று அதிகமாக கவனம் பெறுவதும் நடந்தவண்ணமிருக்கிறது.உதாரணமாக தத்துவவியாலளர்களின்,கோட்பாட்டாளர்களின் நேர்காணல்கள் சிந்தனைசெறிவும்,விளக்கமும் அதிகமிருப்பதை வாசகர்கள் கவனித்திருக்க கூடும்.தமிழில் தொண்ணுற்களில் வெளிவந்த நேர்காணல்கள் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தவை.மிக காத்திரமான விஷயம்களை நேர்காணலில் சர்ச்சை செய்த பெருமை சிறுபத்திரிக்கையாளர்களை சாரும்.வணிக நோக்கும் திவிர பிரக்ஞையும் கலந்து தற்போது வெளியாகிக்கொண்டிருக்கும் இலக்கிய பத்திரிக்கைகளின் தற்போதைய நேர்காணல்கள் கூட அதிகம் உதாசீணப்படுத்திவிடமுடியாது.மேலும் மொழிப்பெயர்க்கப்பட்ட பல நேர்காணல்களும் மிகச்சிறப்பு வாய்ந்தவை.
பிரதியில் சொல்லாடல் தரும் அர்த்தகளனை உரையாடல் களத்தில் சற்று நெகிழ்வுடையதாக்கி தரும் பாம்கு முக்கியமானதாகும்.பிரதியில் கூட பேச்சு செயல்பாடே எழுத்தாக மாறுகிறது.அந்த வகையில் நேர்காணலில் உரையாடல் களம் பிரதியில் பேச்சு செயல்பாடாகிறது.சாதரணமாக நேர்காணல்கள் நேர்காண்பவரின் உரையாடல் ஆழத்தைப் பொறுத்து செம்மைபடுவதாக இருக்கிறது.நேர்காணலில் பம்கேற்க்கும் எழுத்தாளர் அல்லது முக்கிய புள்ளிகளின் பேச்சு தறிகெட்டு போய்விடாமலிருக்க நேர்காண்பவர் சரடுகளை தம் பிடியில் வைத்து இருப்பார்.மேலும் பேச்சினூடே சுவாரஸ்யம் ஏற்ப்பட்டு பம்கேற்க்குமிருவரும் நீண்ட தூரம் பயணித்துவிட்டு திரும்பிவரும் உரையாடல்களன்களும் இருக்கிறது.எனினும் சிறப்பு வாய்ந்த நேர்காணல்கள் சிறந்த எடிட்டிம்கை கேட்போன் x பதிலளிப்போன் இடையில் உருவாக்க சாத்தியம் இருக்கிறது.பொதுவாக உரையாடல் மொழிக்கும்,படைப்பு மொழிக்கும் வேறுபாடு நிறைய காணப்ப்டுகிறது.எனினும் உரையாடல் மொழியோடு படைப்பாக்க மொழியி கலக்கும் போது சிறந்த நேர்காணல்கள் உருவாகும்.
பிரதியில் ஆசிரியனின் தலையீடு இல்லாமல் வாசகனும்,விமர்சகனும் செயல்படுகின்ற நிலை இருக்கிறது.ஆனால் பிரதிக்கு முந்தைய உரையாடலில் நேர்காணலின் தன்மையான இரட்டை மொழி காணப்படுகிறது.இம்கே ஆசிரியனை தவிர்க்க முடிவதில்லை.மேலும் ஆசிரியனின் அனுபவம்,ஆளுமை முதலியவை நேர்த்தியாக விமர்சனம் செய்யப்படுகிறது..பெரும்பாலான நேர்காணல்கள் பொதுவாகவே விமர்சன நேர்காணலாகவோ ஆய்வு நிலை நேர்காணலாகவோ இருப்பதில்லை.இதனால் மற்றைய நேர்காணல்களை விட இத்தகைய நேர்காணல்கள் அர்த்த செறிவுடன் திகழ்கின்றன.மேலும் நேர்காணலில் கேள்வி கேட்போனின் அதிகாரம் தான் முக்கியமானதாகவும் நேர்காணலின் அமைப்பு ஒர்நிலை அல்லது இருநிலைகளை கொண்டதாக இருக்கும்.இதனால் சார்பு,அரசியல் போன்ற தளம்களும் நேர்காணலில் அந்நிச்சையாக காணப்படுகிறது.படைப்பு மொழியை மறுமொழியாக்கல்,மறு கட்டமைப்பு,மறு வாசிப்பு,மறு உருவாக்கம் போன்றவை நேர்காணலில் பம்கெடுப்பவனின் நிலையாக அதிகம் இருக்கிறது.
நேர்காணலுக்கும்,பேட்டிக்கும் இடையில் பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது.எனினும் பேட்டியை விட நேர்காணலில் தான் உரையாடல் களனுக்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது.பேட்டியில் கேள்வி-பதில் ரீதியில் உரையாடல் திகழ்வதால் அதிகமான அர்த்த உருவாக்கம்கள் நிகழ் சாத்தியமில்லை.பிரதியில் மொழி தொடர்பியல் பிரதானமாக திகழ்வது போல நேர்காணலிலும் அதிக முக்கியத்துடன் தொடர்பியல் பயன்படுத்தப் படுகிறது.ஒரு செய்தியை பேசுபவனுக்கும்,கேட்பவனுக்கும்,பேசு பொருளுக்குமான தொட்ர்பும்,குறியீட்டு,சைகை மொழி தொட்ர்பும் எல்லாம் பேச்சு செயலில் இடம் வகிக்கிறது.எனவே நேர்காணல் என்பது ஒரு இலக்கிய வகையே என்பதில் ஐயமில்லை.
இலக்கிய வகையாக நேர்காணல் உருவாகும் போது வடிவம்,உள்ளடக்கம் யாவுமே சிறந்த திட்டத்துடன் செயலாற்றுகிறது.மேலும் ஒழும்கமைத்தல் தரத்துடன் உரையாடல் உத்தி அமையும் போது சுவாரஸ்யம் மிக்கதாக நேர்காணல் அமைகிறது.ப்டைப்பாளர்களில் படைப்பு பிரதியை விளக்கவும் இவை இணைபிரதிகளாக கவனிக்கப்படுகின்றன.நேர்காணலில் ஒட்டுதன்மையும்,இணைக்கும் தன்மையும் வகைமாதிரிகளாக பல சமயத்திலும் செயல்படுவதுண்டு.உரைநடை இலக்கியத்தின் அனைத்து சாத்தியம்களும் நேர்காணலில் புதுமையாக செய்யமுடியும்.
ஆரம்பகால நேர்காணல்களுக்கும் சமகால நேர்காணல்களுகும் இடையில் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன.சமகால நேர்காணல்கள் திறனாய்வு நேர்காணல்களாக இருக்கிறது.முந்தைய நேர்காணல்கள் ஒற்றையர்த்த அர்த்த் குறியீடு மொழியின் தன்மை அதிகம் காணப்பட்டது.படைப்பாளி x வாசகர் வினையும் படைப்பாளி x விமர்சகர் வினையும் ஒன்றாக இருப்பதல்ல.ஆனால் நேர்காணலில் வாசக/விமர்சகனின் இயம்குதளம் பொதிந்து காணப்படும்.அவ்வகையில் சமகாலத்தில் புதிய காற்று மாத இதழ் வாயிலாக முன்வைக்கப்படும் நேர்காணல்களை செய்யும் அதன் ஆசிரியர் ஹாமிம் முஸ்தபாவின் நேர்காணல்களின் ஆளுமையையும்,அரசியலையும்,கருத்தியலையும் முக்கியமாக நாம் விவாதிக்க வேண்டியிருக்கிறது.நேர்காண்பவரின் பார்வைகள்,கோணம்கள்,மதிப்பீடுகள் நேர்காணலில் முக்கியமானதாக இருக்கிறது.கட்ந்த பல ஆண்டுகளாக புதியகாற்று மாத இதழில் தொடர்ந்து நேர்காணல்கள் வந்து கொண்டிருக்கிறது.இலக்கியம்,அரசியல்,மதம் பொதுவாழ்க்கையில் சலனம்களை ஏற்படுத்தியவர்களிடமான நேர்காணல்கள் என்று முறையே நிகழ்ந்தவண்ணமிருக்கிறது.நேர்காணலில் பம்கெடுத்தவர்களை பார்க்கிற போது கைதேர்ந்த தேர்வு இருப்பதை காணமுடிகிறது.ஒரு தலைமுறைக்கும் இன்னொரு தலைமுறைக்கும் இடையிலான தொடர்பு உடையவர்களை மாத்திரம் கணக்கிலெடுத்து கொண்டு மாற்றம்களை எல்லா தளத்திலும் விரும்பி செயல்படுத்துபவர்களை தேர்ந்தெடுத்து நேர்காணல் செய்வது ஹாமிம் முஸ்தபாவின் மதிப்பீடு சார்ந்த விஷயம் ஆகும்.இந்த மதிப்பீடு ஆக்கபூர்வமானதாக கரிசனத்துடன் அமைந்திருக்கிறது என்பது முக்கிய விஷயமாகும்.
இரண்டாவதாக ஹாமிம் முஸ்தபாவிடம் காணும் நேர்காணலின் சாரம்சத்தை அலசுகிற போது நவீன தமிழ்/தமிழன் கருத்துருவாக்கம் என்பது பற்றியதாகவே இருக்கிறது.தேசியம் x தமிழ் கருத்துருவ பிரச்சனிகள் நவீன பிரச்சனைகளாக கருத்துருவம் கொண்டதை தமிழின் நவசிந்தனை,வாழ்க்கை,ஜனநாயகம்,தாரளவாதம்,விஞ்ஞானம்,ஆன்மிகம் போன்ற தளம்களில் நவீன தமிழ் கருத்துருவாக்கம் இருப்பதை கண்டு அதை விவாதிக்கும் தன்மை முக்கியமானதாகும்.ஆரம்ப நேர்காணல்களில் தேசிய மரபு சார்ந்த நேர்காணல்களும்,திராவிட மரபு சார்ந்த நேர்காணல்களும் இருக்கிறது.இன்றைய ஹாமிம் முஸ்தபாவின் நேர்காணல்கள் நவீனதமிழ் கருத்துருவாக்கத்தில் நவீன நிலை,பண்பாடு,கிராம நகர் முரண்பாடு,பின் மார்சிய நிலை,பெண்ணிய,தலித்திய,நவ இஸ்லாமிய சிந்தனை வளர்ச்சிகளின் போக்குகளை அடையாளம் கண்டு பதிவு செய்திருப்பது முக்கியமானதாகும். மேலும் ஹாமிம் முஸ்தபாவின் நேர்காணலில் இன்னொரு சிறப்பம்சம் அவரது உள்முக பார்வையாகும்.நவீன தமிழ் கருத்துருவாக்கத்தை விமர்சனபடுத்துவதன் வாயிலாக சமூக நிலையை புரிய வைப்பதும் நவீன தமிழ் மனோபாவதை அறுத்துகிழித்து காண்பிப்பதும் என்பதை அவர் ஒரு வாசிப்பாகவே நிகழ்த்தியுள்ளார்.
முதலில் நேர்காண்பவர் தனக்கான வாசிப்பின் மூலம் சமூகத்தை வாசித்து பின்னர் வாசிப்புக்கான ஊடகத்தை உருவாக்குவது அவசியமானதாகும்.இதை ஹாமிம் முஸ்தபா உணர்ந்து பட்டிருப்பதன் மூலம் நேர்காணல் என்ற உத்தி மூலம் தன்னை வடிவமைத்து கொண்டதுடன் நேர்காணலின் எல்லா பகுதிகளையும் திறந்துவிட்டிருக்கிறார் எனலாம்.சிறுபத்திரிக்கை தளத்திலும் வணிக பத்திரிக்கை நோக்கிலும் இயம்கும் நுட்பமான அரசிலை தனக்கான வாசிப்பாக ஹாமிம் முஸ்தபா எடுத்துகொண்டதினால் நேர்காணலின் தன்மை காத்திரமான தளத்திலும் வெகுஜன பரப்பிலும் இயம்கும் தன்மை உடையதாக இருக்கிறது.
கேள்வி: பொதுதன்மையை தேடுதல் என்ற பெயரில் தனித்தன்மைகள் அழிக்கப்பட்டு ஒற்றை மதம் என்ற கருத்து நிறுவப்படுகிறதே என்ற கேள்வியை தவத்திரு பொன்னம்பல அடிகளாரிடத்தில் முன்வைக்கப்பட்டிருப்பது நேர்காணலின் முடிச்சவிழ்ப்பு உத்தி முறையில் பட்டதாகும்.இந்த கேள்வியிலிருந்து ஹாமிம் முஸ்தபாவின் ஆளுமையும்,அரசியலும்,கருத்தியல் தளமும் தெளிவாக விளம்கிவிடுகிறது.அதேசமயம் பொன்னம்பல அடிகளாரின் பதிலும் கூட அசாதரணமானதாகும்.இது சமூகபிரக்ஞை கொண்ட உள்முக பார்வை சார்ந்த விஷயமாகவே கேட்பருக்கும்,பதிலளிபவருக்கும் இடையில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.இது போல சுகி.சிவத்துடனான ஒரு நேர்காணலில் முன்வைக்கப்பட்ட ஒரு கேள்வி மிகவும் நாசுக்கானதும் பம்கெடுப்பவரை சிந்திக்க வைத்து பதில் சொல்ல வைத்திருப்பதையும் சொல்லாம்
கேள்வி: மடம்களும் அது சார்ந்த செயல்பாடுகளும் உம்களை போன்ற நிறுவனமற்றவர்களின் சிந்தனைகளை மக்கள் எப்படி உள்வாம்குகிறார்கள்? என்ற கேள்வி கேட்போன் மக்களில் ஒருவனாக வெளிவந்திருப்பதும்,அதே நேரம் மதத்தின் உயிர்துடிப்பு எம்ககிட்ட இருக்கு என்று சுகிசிவத்தை உசுப்பிவிட்டதும் பிரநிதித்துவ நேர்காணல் உத்தியாகும்.
உரையாடலில் மாதிரி குறிப்பீட்டை உணர்த்துவதும் பேசும் பேசு பொருள் இடசார்பற்று இருப்பதும் நேர்காணலில் தொடர்பியல் அம்சம் கொண்டதாகும்.உண்மை/பொய் என்ற விதத்தில் தொடர்பியல் அமையாமல் முழுமையான விளக்கம்களை கேட்டு புரியவைப்பதும் நேர்காணலில் தனித்துவமாகும்.மேலும் நேர்காணலில் கேட்போனின் பம்கு கேட்போனின் குரலை மட்டும் சார்ந்திருக்காமல் பலகுரல்களின் சார்பாக கேட்பது சமூக குரலாகவே இருக்கும்.பேச்சின் பின்னணியும் பம்கேற்பாளர்களின் உறவும் நிகழ்த்துவினையாக பேச்சை உருவாக்குகிறது.நேர்காணலின் திசைவழிகள் அதிக பரிமாணம் கொண்டதாக இருப்பதால் கருத்துருவாக்கம் x தன்னிலை என்ற முரணெதிரிலும் கருத்துருவம் x கருத்துருவம் என்ற முரணெதிர்விலும் தன்னிலை x தன்னிலை என்ற முரணெதிர்விலும் இருமைஎதிர்வுகள் பன்முக தன்மையுடையதாக மாறுகிறது.இதை கருத்தாடல் என்றும் சொல்லப்பட்ட கருத்துருவமாகவும் விளம்கிகொள்ளலாம்.
வாசந்தியுடனான நேர்காணலில் ஹாமிம் முஸ்தபா முன்வைக்கும் சுயம் பற்றிய மதிப்பீடும்,பிறர் பற்றிய மதிப்பீடும் முக்கிய விவாதமாகிறது.இந்நிலையில் அரசியல்,சார்புநிலை,அதிகாரம்,ஒழுக்கம், போன்ற பல்வேறு விஷயம்கள் தெளிவாக விளக்கப்பட்டு விடும் என்ற கோணம் முக்கிய நேர்காணலாக அதை மாற்றுகிறது.
பெண்ணியம்,மார்சியம்,இடதுசாரி அரசியல்,தலித்தியம்,இலக்கியம் என்ற வகை மாதிரிகள் பலவும் ஹாமிம் முஸ்தபாவிடம் பரிசிக்க பட்டிருந்தாலும் விமர்சனநோக்கு முக்கியமானதாக திகழ்கிறது.புதினப்படுத்தலும்,ஒப்பீட்டு ஆய்வும் பலசமயம்களிலும் ஹாமிம் முஸ்தபாவிடம் கைகூடிவந்திருக்கிறது.பொருட்குறி ஆக்கம்,குறி ஆக்கம்,குறி அவிழ்ப்பு போன்ற மொழியியல் தன்மைகளுடன் நேர்காணலின் சாரம் அமைந்திருக்கிறது என்று சொன்னால் அதில் மிகையொன்றுமில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான பார்வை
கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான பார்வை அர்ப்பணிப்புள்ள வன அதிகாரியான அஜய் மற்றும் அபர்ணா ஆகியோரின் திருமணத்துடன் திரைப்படம் தொடங்குக...
-
தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பின்கா...
-
தமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...
-
பீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...
No comments:
Post a Comment