Thursday, January 21, 2016

பாலியலின் அரசியல்

பாலியலின் அரசியல்
பேரா.எச்.முஜீப் ரஹ்மான்


நமது சமகால பெண் விடுதலை இயக்கங்களில் நிலவுகின்ற பாலியல் வகை மாதிரிப் பாத்திரங்கள் பாலியல் வன்முறைதொல்லைகள்,நிறுவனமயமாக்கப்பட்ட தாய்மைவீட்டு வேலைமுறையிலும் உழைப்புச் சந்தையிலும் பெண்களின் நிலை இன்னும் பல விடயங்கள் குறித்தும் அக்கறையோடு அலசுகின்ற ஏராளமான எழுத்துக்களைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தப் பிரச்சனைகள் பலவும் ஒரு வரலாற்றுக் கட்டத்திற்குள் வைத்து ஆராயப்பட்டிருக்கிறது. பெண்ணிய ஆய்வுகள் இத்தகைய பிரச்சனைகளை நோக்கும் முறையையே மாற்றியமைத்திருக்கிறது.

இந்தக் கட்டுரை தற்போது நடைமுறையில் உள்ள பாலியல் வழக்கங்கள்அவற்றின் சமூகப் புலம் குறித்து அலசி ஆராய்ந்து விளக்கிறது. கார்ல்மார்க்சின் மதிப்பு விதி குறித்த கோட்பாட்டை ஒத்தமுறையில் ஓரினச் சேர்க்கை மற்றும் ஆண்-பெண் சேர்க்கை பால் உறவுகள் ஆராயப்படுகிறது. ஆண்-பெண் சேர்க்கை உறவுகள் பெண்களின் பாலியல் இன்ப நுகர்வு நிறைவெய்வதைப் பொருட்படுத்தாதுஆண்களின் இன்ப நுகர்ச்சியை திருப்தி செய்யும் வகையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன என்ற முடிவுக்கு கட்டுரை வருகின்றது. இதற்கு மாறாகஓரினச் சேர்க்கையாளரின் பாலுறவு இயக்கங்கள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் இருவருக்குமே நிறைவு தருவதாக இருப்பது தெரிய வருகிறது. ஆதிக்கம்அதிகாரம்ஏற்றத் தாழ்வுகள் அற்ற ஒரு பாலியல் அமைப்பைக் கட்டமைக்க வேண்டுமென்றால் நிலவுகின்ற ஆண்-பெண் சேர்க்கை உறவுகளின் கட்டமைப்புகளிலிருந்து விலகி புணர்ச்சியை பாலியல் நடவடிக்கையின் மையமாக வரையறுக்காத ஒரு பாலியல் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்கட்டமைக்கப்பட வேண்டும்.

இன்னும் சொல்லப் போனால் Ann Kodrs (1971) “The myth of the viginal orgasm” மற்றும் Shese hires the hires report (1976) குறித்த தவறிய நம்பிக்கை என்ற புத்தகமும்அறிக்கையும் பெண்பாலுறவு பற்றிய முக்கிய இரண்டு ஆய்வேடுகளாய் நாம் கருத்தில் கொள்ளலாம். ஏனெனில் இவ்விரண்டுமே பெண்பாலுறவு என்ற ஒன்றை அரசியலோடு பின்னிப் பிணைத்த மனித உயிரியல் தொடர்பான ஒரு கூட்டுக் கலவையாக பாவிக்கின்றன.

சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல்” நிலையில் இருந்து முன்னேறி ஆண்கள் எப்படி பாலுறவு என்ற அமைப்பை தங்களுக்குச் சாதகமாக உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள். குறிப்பாக சொல்லப் போனால் ஷெய்ட் பல உதாரணங்கள் மூலம்அதிகமாக புழக்கத்தில் இருக்கும் பாலுறவு முறையில் ஆணுடைய திருப்தியே மேலானதாக கருதப்படுகிறது என்பதை ஹெய்ட் தன்னுடைய அறிக்கையில் விளக்குகிறார். பாலுறவு முறைகளே சமுதாயத்தில் உருவாக்கப்படும் கட்சியமைப்புகள் என்று கூறும் ஹெய்ட்டினுடைய தெளிவான பார்வையே அவருடைய ஆய்விற்கு ஒரு இன்றியமையாத சிறப்பை வழங்குகிறது.

அவருடைய புத்தக தரவானது நன்முறையிலான பாலியல் செயற்பாடுகளை தெளிவாக விவாதிப்பதோடு திருமணம் ஆக்கப்படாத பாலுறவு முறையே அமைவதையே நோக்கமாக கொண்டு பிரயோகித்த போல ஆண்வழி சார்ந்த சமூகத்தின் பாதிப்போடு கூடிய நாம் பாலுறவு முறையே விரும்புவதற்கு முறையான ஒரு பாலுறவு தொடர்பான மேலும் ஒரு ஆய்வை வழங்குவதும் மறைக்கப்படும். அல்லது வெளியில் பேசப்படாத சில பாலியல்நுனுக்கங்களை வெளியே கொண்டு வருவதும் என்னுடைய நோக்கமாகும். என்னுடய இந்த முறையை இருபாலுறவின் 'சரிசம இன்பம்” என்று கருதப்படும் ஒன்றைப்பற்றி நன்றாக ஆராய்வதன் மூலம் இருபாலினரிடையே இருக்கும் சமத்துவமற்ற தன்மையை திரைவிலக்கி காட்ட விரும்புகிறேன். சல்லாபமுறை ஆண்-பெண் உறவை மட்டுமே பிரத்தியகப்படுத்தி சாட்டுப் போக்கையும் ஆண்-பெண் சேர்க்கையில் பெண் அடையும் இன்பம் இரண்டாம் தரமாக கருதப்படும் நிலையையும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்ற கோட்பாடாக பரப்பி பழக்கப்படுத்தி வந்திருக்கிறது.

அதாவது ஆண்-பெண் சேர்க்கைதான் பாலுறவு முறை என்பது போலவும் அதில் மிகுதியான அன்பு இன்பம் தயக்கப்­படுவதாலும் அதுவும் ஈடுபாட்டின் இருபாலருக்குமே சமபங்கு திருப்தி கிடைப்பதாகவும் சல்லாபக் கோட்பாட்டின் படி நம்பப்படுகிறது. எனினும் இப்படிப்பட்ட பிரகடனங்கள் இருந்தாலும் உண்மையில் ஆண்-பெண் உறவென்பது சமத்துவமற்ற ஆற்றலுடன் கூடிய உறவாகவும் ஆண்களுக்கு மட்டுமே பாலுறவில் பெருமளவு இன்பம் வழங்கக் கூடிய முறையாகவும் திகழ்கிற அரங்கத்தை ஒத்ததாக இருக்கிறது.

உறவு பிணைப்பின் மூலம் ஆண்களுக்கு மட்டுமே பெருமளவு பாலின்ப பங்கை ஒதுக்கின்ற சூழலோடு பாலுறவில் பெண்கள் பொருளாதார ரிதியில் ஆண்களை சார்ந்த நிலையின் தாக்கம்ஆண்களின் வன்முறைகாழ்புணர்ச்சியோடு ஓரினச்சேர்க்கையா­ளரை பழிவாங்கும் சமூகப் போக்குஇப்படிப் பழிவாங்குவதன் மூலம் சமமற்ற அண்-பெண் சேர்க்கை முறையை சமூகம் பாதுகாத்து வளர்க்கும் விதம் என்ன விற்றை எல்லாம் வியக்க இருக்கிறேன். இந்த சூழ்நிலையில் பின்னணியில் ஓரினச் சேர்க்கை பற்றியும் பார்க்கலாம். அவ்வுறவு முறைகளைப் பற்றி ஆராயலாம்.

ஓரின சேர்க்கை உறவு முறையின் படி இப்பாலுறவு முறையில் ஈடுபடும் அடுத்தவரை தங்களுடைய சக சமுதாய உறுப்பினராகவே பார்க்கும் மனோபாவத்­தோடு பாலுறவு இன்பம் சம அளவில் நுகரப்படுவதாக தெரிகிறது. இதுவே இக் கட்டுரையின் மையக் கருத்தாகும். இருப்பினும் இத்தகைய ஓரின உறவு பழக்கத்தை தடுக்கும் அல்லது கட்டுப்படுத்­தும் நோக்கத்தில் அப்படிப்பட்ட உறவில் ஈடுபடுவோர் பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் மூலமாக ஒடுக்கப்படுகிறார்கள். எனவே தான் ஓரினச் சேர்க்கையாளர்களின் சுதந்திரத்தைப் பரப்பும் இயக்கத்தின்இன்றியமையாமையையும் இந்த இயக்கத்தின் செயற்பாடுகள் எந்த அளவிற்கு எல்லா பெண்களுக்குமே (ஓரின அல்லது நேரான” உறவுப்பழக்கமுள்ள­வராக இருந்தாலும்) தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை தெரிவாக்க விரும்புகின்றேன். இறுதியாக பாலுறவு முறை சீர்திருத்தப்பட்டு ஒரு புதிய உறவு முறை மலர வழிவகுக்கும். சமூக அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை முன்மொழிய இருக்கின்றேன். இந்தக் கட்டுரை எப்படி ஆண் சார்ந்த சமூக உறவுமுறையை உருவாக்கியிருக்ககூடும் என்ற கேள்வியைப் பற்றி ஆராய்ந்து எடுக்கும் நோக்கம் அல்ல. இந்த ஆண் ஆதிக்க உறவுமுறைக்கு வழிவகுத்திடும் கருத்துக்களை நம்மால் யூகிக்கத்தான் முடியும்.

பெண்களை ஒடுக்கும் சூழலின் போக்கை குறித்தும் சமத்துவமற்ற நிலை என்பது ஆண்களின் அதிகார மிரட்டலா அல்லது பெண்களின் பொருளாதாரப் பலவீனத்தாலா என்பவற்றைக் குறித்தெல்லாம் அடிக்கடி பெண்ணிய வாதிகளுக்கு இடையே விவாதங்கள் நடந்து வந்திருக்கின்றன. இப்படிப்பட்டஆய்வுகள் பாலியல் இயல்பையும் பெண்ணிய வாதிகளையும் பற்றி நன்கு விளங்கிக் கொள்ள உதவுகிற அதேவேளையும் தற்கால சமூக யதார்த்த நிலையை மையமாகக் கொண்ட ஒரு அலசல் தேவைப்படுகிறது. இந்த கட்டுரையின் முக்கிய நோக்கமே அப்படிப்பட்ட தற்கால பாலியல் நடைமுறை மற்றும் அதனுடைய சமுதாய பின்னணி போன்றவற்றைக் குறித்து விவாதிப்பதுதான். எப்படி ஆணை மையப்படுத்துகிற ஈரினச் சேர்க்கை ஆணுக்கு எந்த முக்கியத்துவம் கொடுக்கிறது அதை சமுதாயம் எந்த அளவிற்கு பின்பற்றுகிறது என்பதை எல்லாம் வெறுப்புதன் தோன்றுகிறது. இந்நிலைமையின் அடிப்படையை அலசுவது இக்கட்டுரைக்கு அப்பாற்பட்டதாகும்.





Shere hite (1976) 
சியர் ஹெய்ட்டின் அறிக்கையில் பெண் பாலுறவு குறித்த தேசிய அளவிலான கருத்தாய்வின்படி கணக்கில் எடுக்கப்பட்ட பெண்களில் 82சத வீதத்தினர் தாம் சுய இன்பம் அனுபவிப்பதாகவும் அவர்களே 95 சதவீதம் பாலுறவு பரவச நிலையை சுலபமாக அடிக்கடி அனுபவிக்க முடிந்ததாகவும் தெரிவித்தார்கள். இன்னும் சொல்லப் போனால் ஹெய்ட்டின் கண்டுபிடிப்பின்படி பாலுறவு பரவச நிலையையும் சுய இன்பத்தையும் ஒன்றாகவே பெண்கள் கருதுகிறார்கள். சுய இன்பத்தின் பொழுது பெண்கள் பரவச நிலையை அடைகிறார்கள் என்ற உண்மை பெண்கள் பாலுறவில் உணர்ச்சிகளை சரியாக வெளிப்படுத்­தாதவர்கள் என்றும் பெண்கள் பரவச நிலையை ஆற்றல் அற்றவர்கள் என்றும் நம்பப்படும் தவறான வாதத்தை இருக்கிறது. இந்த நம்பிக்கை கூற்றோடும்யூகத்தோடும் தொடங்கி மேலும் ஹெய்ட் இருபால் உறவுமுறை கூறுகளான( Fore play Peneteration )செயல்பாடுகள் பெண்களுக்கு எதிராகவே இருந்து வருகின்றது என்று விளக்குகிறார்.
ஹெய்ட்டின் அய்வின்படி 30 சாவீதப் பெண்கள் மட்டும் தான் பாலுறவு பரவச நிலையை ஆண்பெண் புணர்ச்சியின் பொழுது அடைவதாக கூறியுள்ளார்கள். அத்தோடு அப்பரவச நிலை என்பது வழக்கமாக பெரும்பாலும் பெண்ணின் கணக்கின் முயற்சிகளின் மகளிர்சத்தை தூண்ட எடுத்துக் கொள்ளப்படும் பெண்ணின் கணக்கிட்ட ஒரு துல்லியமான முயற்சியின் விளைவாகத்தான் பெண்கள் பரவச நிலை எட்ட முடிகிறது. அதிலும் குறிப்பாக இந்த தூண்டல் ஆணினுடைய பொது உறுப்பால் தூண்டப்படுவதால் மட்டுமே வழக்கமாக அடைய முடிகிறது. புணர்ச்சியின் போது ஆண் பிறப்பு உறுப்பு உள்ளே செலுத்தப்படுவதால் மட்டுமே மறைமுகமாக ஏற்படுத்தப்படும் தூண்டல் பெண்களுக்கு பரவச நிலையை உண்டாக்குவதற்கு போதுமானதாக இல்லை. (ர்வைந 1976 - 168) அதே சமயம் புணர்ச்சி ஆண்களின் பால் இன்பத்தை நல்ல முறையில் அணுகுகிறது. புணர்ச்சியின் போது ஆண் உறுப்பு பெண் மர்ம உறுப்பு சுவர்களின் உராயச் செய்வதன் மூலம் சுய இன்பத்தின் போது பெறப்படும் தூண்டல் உறுதி செய்யப்படுகிறது. எனவே வழக்கமாக ஆண்கள் புணர்ச்சியின் போது பரவச நிலையை அடைவார்கள். இது ஆண்களின் உடல் சார்ந்த உயிரியல் அமைப்பிற்கு உகந்ததாய் இருக்கிறது. இப்படி செய்வதால் எல்லா ஆண்களும் எப்பொழுதும் புணர்ச்சியின் பொழுது பரவச நிலையை அடைகிறார்கள் என்று பொருளாகாது. எடுத்துக் காட்டாக ஆண்கள் தம்முடைய விரைப்புத் தன்மையை புணர்ச்சியின் போது இழக்கலாம். இருந்தாலும் ஆண்களிடையே இந்த பாலுறவில் செயலாற்றும் திறனில் ஏற்படும் கோளாறும் சமுதாயத்தில் அதிகரிக்கப்பட்டு நிறுவனமாக்கப்பட்டுள்ள காலம் காலமாய் பின்பற்றப்பட்டு வருகின்ற பாலியல் முறையின் ஏற்றத் தாழ்வான நிலையால் ஏற்படுவதில்லை. அண்களுடைய பாலியல் பிரச்சனைகள் பேசிய (ஆண்மைத்தன்மையின் மேல் மலட்டுத் தன்மைபோதை மருந்து பழக்கம்மது அருந்தும் பழக்கம்பெருஞ்சோர்வுதளர்வு நிலை) பூதாகமான பிரச்சனைகளின் விளைவாக தோன்றுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. (hite- 1981-402)

மற்ற பல்வேறு வகையான பாலுறவு வெளிப்பாடுகளை விட ஆண்பெண் புணர்ச்சி வடிவம் செலுத்துகிற ஆதிக்க நிலையும் புணர்தல் ஒன்றுதான் பாலுறவு இன்பத்தின் அடிப்படை இலக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையும் பெண்களை ஒடுக்குகிற கோட்பாட்டையும் பாலியல் அல்லது சமுக உறவு முறைகளையும் தான் கொண்டு இருக்கிறது. ஈரினச் சேர்க்கை உறவு முறை வகுக்கப்பட்ட விதத்தின் படி ஆண்கள் விந்து வெளியேற்றலுக்கான வழியை வரையறையைச் செய்யப்பட்ட பாலுறவு முறைகளால் ஆண்கள் பாலுறுவு பரவச நிலையை பெருமளவு அடைகிறார்கள். ஆனால் அதே சமயம் மகளிர் கந்து தூண்டல் என்ற ஒன்று வெறும் பாலுறவு சல்லாப நிளையாட்டாகவே கருதப்படுகிறது. அதாவது வெறும் சாதாரண நேரம் கடத்தும் இன்ப விளையாட்டாகவே கருதப்படுகிறது. 'சல்லாப கோரிக்கை விளையாட்டு” என்ற இந்த வார்த்தையே (Fore play) பாலுறவில் அது அவ்வளவாக முக்கியம் இல்லை. உண்மையில் ஆணுறுப்பின் ஊடுதலை சுலபமாக்குவதற்காக நடத்தப்படும் ஒரு முன்கூட்டிய விளையாட்டுஎன்றுதான் குறிக்கிறது. இந்த இன்ப கேளிக்கை விளையாட்டைக் குறிக்கும் இந்த விளக்கம் மகளிர் கந்து தூண்டப்படும் விதத்தை மற்றும் அதன்முக்கியத்துவத்தையே பாதிக்கிறது. உதாரணமாக ஷெய்ட் கூறுவது போல புணருதல் ஒன்றுதான் பாலுறவில் முக்கிய செயலாக கருதப்படுவதில் ஆண்கள் பொதுவாக தங்கள் விறைப்புத் தன்மையை பாதுகாத்துக் கொள்ளவே பெரிதும் பதட்டமடைகிறார்கள். எனவே அவர்கள் புனர்வதற்கு முன்பாக நடக்க வேண்டிய மற்ற நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ள எத்தனிக்கிறார்கள். அச்செயல்களுக்காக சிறிதளவு கால அளவை செலவிடுகிறார்கள்.

ஆய்விற்காக கணக்கில் எடுக்கப்பட்­டவர்களில் 45 சத வீதத்தினர் மட்டுமே சம்பந்தப்பட்ட மற்றவாpன் செய்கையின் மூலம் காமப்பரவச நிலையை உணர்ந்திருப்பதாகவும் அனால் 95 சத வீதத்தினர் இக்காமப் பரவச நிலையை சுயஇன்பத் தூண்டல் மூலமே அடைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. (hite – 1972-209) மேலும் பெருமளவு எண்ணிக்கையிலான ஆண்கள் சம்பந்தப்பட்ட பெண் கூட்டாளிகளுக்கு எந்தவிதமான மகளிர் கந்து தூண்டல்'இன்பத்தையும் (Clitorolstrimutation) வழங்கவே இல்லையாம். (1976 - 212) இப்பிரச்­சனையின் அடிப்படையே பிரத்தியேகமாக அண்,பெண் சேர்க்கை மட்டும் தான். பாலுறவு முறை என்று வரையறுக்கப்பட்ட நிலைமைதான் இந்த ஆண் சமூக மூடநம்பிக்கையின் விளைவாக ஆண் காம பரவச நிலைக்கு முழு உத்திரவாதம் கொடுக்கும் ஒரு பாலுறவு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. மகளிர் பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும் கந்து தூண்டல் ஆண்களின் விருப்பத்திற்கு ஏற்ப எப்போதாவது நடத்தப்படுகின்ற அல்லது எப்போதுமே நடத்தப்படாத செயலாகவும் தான் கருதப்படுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள ஆண்பெண் பாலுறவு முறைக்கு இருபாலருக்குமே ஒருவருக்கொருவர் 'சம அளவில் முழு இன்பம்” வழங்கக் கூடியது என்ற நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளச் செய்ய சமூக அங்கீகாரம் பெற்ற குடும்ப முறை புணர்ச்சியை உணர்த்திக காட்டுகின்ற வக்கிரமான கலாச்சார சூழலில் போன்றவற்றின் மூலம் பெரும்பாலான மககள் காலம் காலமாக பழக்கப்பட்­டிருக்கிறார்கள். ஆனால் இந்த பாலுறவு சூழ்நிலை தலைகீழாய் மாறுவதாய் கற்பனை செய்தால் அதாவது ஆண்களில் ஒரு சிலருக்கு மட்டுமே எப்போதாவது ஆணுறுப்புத் தூண்டப்பட்டு அதன் மூலம் பரவசநிலை அடைந்ததாகவோ அல்லது இப்பரவச நிலையை ஆண்கள் எட்டாத நிலைமை இருப்பதாகவும் அதேசமயம் பெண்கள் எப்போதுமே மகளிர் கந்து தூண்டப்பட்டு பரவசநிலையை பெரும்பாலும் அல்லது எப்போதும் அடைவதாகவும் இருந்தால்அடையும் பரவச நிலையில் இருக்கும் விகிதாசார ஏற்றத்தாழ்வு அனைவருக்கும் மிகவும் தெளிவாக புலப்படும் அல்லவாஆனால் பாலுறவில் அண்களை மேலானதாய் மதித்து பெண்களை இரண்டாம் தர அல்லது முக்கியத்துவமற்ற நிலைக்கு தள்ளுகின்ற போக்கு நம் சமுதாயத்தில் நிலவுவதால் மிகச் சிலர் மட்டுமே தற்போது நடமுறையில் உள்ள பாலுறவு பரவசநிலை ஏற்றத்தாழ்வு குறித்து அதிர்ந்து போகிறார்கள். துரதிஸ்டவசமாக பாலுறவு நனடைமுறையில் இருக்கும் இந்த ஏற்றத் தாழ்வான நிலைமை குறித்த பெரும்பாலான விவாதங்கள் வெறும் விவரித்தல் நிலைமையோடு நின்று விடுகின்றன. இத்தனை விவாதங்கள் பிரச்சனைகளை விபாpத்து பேசும் நிலையை கடந்து போவதில்லை. இந் நிலைமைக்கு காரணமே மாக்ஸின் மூலதன கொள்கைக்கு நிகரான ஒரு பரந்த ஆற்றல்வாய்ந்த பாலுறவு முறையில் சுரண்டல் நிலையை நன்கு விளக்கும் ஒரு கோட்பாட்டு வரையறை உருவாக்கப்படாததுதான். மதிப்பு ரிதியான மாக்ஸின் தொழில் கொள்கை பொருளாதாரச் சுரண்டலை மிகவும் தெளிவான வகையில் விவாதிக்க வழிவகை செய்திருக்கிறது. தொழில் ஆற்றல் என்பது அத்தகைய மதிப்பிற்கு ஏற்ற வாங்கவோ அல்லது விற்றகவோ படுகிறது. அதன் மதப்பு மற்ற விற்பனைப் பொருள்களைப் போலவே அதன் உற்பத்திக்குத் தேவையான வேலை நேரத்தைப் பொறுத்தே நிர்ணயம் செயயப்படுகிறது. ஒரு தொழிலாளியின் சராசரி தின வருமானம் ஈட்டப்படுவதற்கு ஆறுமணி நேரமானால் சராசாயாக அவன் ஆறு மணி நேரம் நிச்சயம் வேலை செய்து ஆகவேண்டும். அவனுடைய உழைப்பத்­திறனை வெளிப்படுத்துவதற்கு ஒரு நாளில் சராசரியாக ஆறு மணி நேரம் உழைக்க வேண்டும். அவனுடைய தொழிலாற்றல் என்ற விற்பனை விளைவாகத்தான் அடைந்து நன்மையை வேறு வகையில் ஈடு கட்டி விடுகிறான். எனவே அவனுடைய வேலை நாளுக்குத் தேவையான நேரம் அறு மணிநேரம் என்று கணக்காகிறது.

எனவே வாங்கிய அளவிற்கு கொடுக்கிற சமஅளவு கொள்கையாக (Caeteris parivus) இது ஆகிறது. இந்த யுகத்தை அனுபவமாக கொண்டுதான் நாம் கிரகித்துக் கொண்டு இருந்தோம். ஆனால் ஆனால் இதில் வேலை நாளில் அளவு அல்லது எந்த அளவு வேலை நாள் நீடிக்கப்பட வேண்டும் என்பதுகுறித்த தெளிவான வரையறை இல்லை. (1967 : 231) முதலாளித்து சமுகத்தில் தொழிலாளிகளின் உழைப்புத்திறனுக்கு பதிலாக இந்த வேலை நாளின் கால அளவு 'அடைந்து லாபம் அல்லது மதிப்பை ஈடுகட்ட தேவையான” நேரத்திற்கு மேலாக நீடிக்கப்படுகிறது. இதைத்தான் மிகுதியான இலாபத்தை முதலாளிகளுக்கு விளைவிக்கிறஉழைப்பை சுரண்டுகிற போக்காகும் என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார். மார்க்சின் இந்த மதிப்பு ரிதியான தொழில் கொள்கையைப் போன்று ஒரு கோட்பாட்டை பாலுறவு நடைமுறையில் இருக்கும் ஏற்றத்தாழ்வை அலச உதவும் வகையில் உருவாக்க முடியுமா என்று நாம் இப்போழது பார்க்கலாம். உதாரணமாக ஊதியத்திற்கு தக்க வேலை என்று ஏற்படுத்துகின்ற உறவு முறையை வாங்கி வேலைத்திறனை விற்பதால் திணிக்கப்டும் சமத்துவமற்ற சமூக உறவு முறைகள் 'சுதந்திரம் மற்றும் சமத்துவம்” போன்றவற்றில் புதைக்கப்­பட்டிருப்பதை நாம் நன்கு காண முடியும். பாலுறவு பிரச்சனைகளை இந்தக் கோணத்தில் இருந்து நாம் அனுகினால் ஆண்களும் பெண்களும் கூட சுதந்திரமான சமத்துவமான உறவில் நுழைவதாக அளிக்கும்மாயத் தோற்றத்தை நம்மால் உணர முடியும். இருப்பினும் இருபால் கூடலில் கையாளப்படும் முக்கிய முறையே பெண் காம இச்சசைக்கு எதிராக அல்லது அதைப் பொருட்படுத்தாது ஆண் இச்சையத் திருப்திப்படுத்தும் வண்ணமே அமைந்திருக்கிறது. பாலுறவு என்பதே ஆண்பெண் புணர்ச்சியின் மூலமே வெளிப்படுத்தப்பட்டு வந்திருப்பதால் பெண்களை விட ஆண்களே பெருமளவு காம இன்பத் தூண்டலை பெறுகின்றனர். உண்மையில் ஆண்பெண் பாலுறவு முறையின் படி பெரும்பாலும் அண் காமபரவச நிலையை எட்டியபின் பெண்ணின் பரவச நிலையும் முடிவுக்கு வந்தாக வேண்டும்.


எனவே ஆண்பெண் உறவு முறை ஒரே அளவு இன்பத்தை இருவரும் நுகரச் செய்யும் தன்மை உடையதாக தோன்றினாலும் உண்மையில இது ஒருவர் இன்பத்தின் அப்பாற்பட்டதேயாகும். ஆண்பெண்ணிடம் இருந்து பெற்ற காமத் தூண்டலை மிகச் சிறிய அளவில் தான் திரும்பத் தருகிறான்.இதனால் பெண் பரவச நிலையை அடைவது என்பது மிகவும் அரிதாகவே இருக்கிறது. பெண்ணின் பாலுறவுச் செயல்கள் யாவுமே ஒரு குறிப்பிட்ட சமூக உறவுமுறையின் பின்னணியில் நிர்ப்பந்திக்கப்பட்ட சில குறிப்பிட்ட சூழ்நிலைகளோடு மட்டுமே இழையோக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தனித்துவத்தோடு தானாக நிகளும் வெளிப்பாடு என்ற நிலையில் இருந்து விலகி ஆண்பெண் உறவு முறையானது முன்கூட்டியே சமுதாயத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகவும் மிகவும் வரையறுக்கப்ட்ட கட்டுமானங்களோடு கூடிய ஒரு கட்பாயமாகவும் தான் இருக்கிறது.

இப்படிப்பட்ட ஈரினச்சேர்க்கையின் கூறுகளும் நிகழ்த்தப்படும் விதமும் ஆண் ஆதிக்க சமூக உறவு முறையின் பிரதிபலிப்பகளாகவே இருக்கினறன. தேனிவாகப் பார்த்தால் பாலுறவு நடைமுறையில் சமத்துவமின்மை என்பது அடிப்படையில் பெறப்படும் இன்பத்தின் சமத்துவமின்மையோடுதான் தொடர்புடைய­தாய் காணப்படுகிறது. துரதிஷ்டவசமாக காம இன்ப அளவை தனிமனிதர்களுக்கிடையே ஒப்பிட்டு வரையறை செய்வதோ அல்லதுஒவ்வொரு தடவையும் எந்த அளவு ஆத்மதிருப்தியோடு ஒரு தனிமனிதன் காம பரவச நிலையை அடைகிறான் என்பதை அளப்பதோ மிகவும் அரிதான செயலாகும். இருப்பினும் காம பரவச நிலை (விந்துமற்றும் மதனநீர்) ஒன்றுதான் பாலுறவில் இன்பத்தை நன்கு பார்க்க மற்றும் கணக்கிட முடியும் ஒரே வெளிப்பாடாகும். காமத்தில் இப்பரவசநிலையை இருபாலருமே எட்டமுடியும். மேலும் இப்பரவச நிலைதான் காமத்தில் அடையப்பட வேண்டிய மற்றும் விருப்ப படுகின்ற விளைவாக கருதப்படுகி­றது.

இந்தப் பின்னணியில் என்னுடைய ஆதங்கம் என்னவெனில் ஆண்பெண் கூடலில் காமப்பரவசநிலையை அடையும் திறனில் ஆண்கள் மற்றும் பெண்களுக்­கிடையே இருக்கும் குறிப்பிடத்தகுந்த வேறுபாடு ஆற்றலில் சமத்துவமற்ற உறவு முறையைத்தான் தெளிவாக காட்டுகிறது என்பதுதான்,தரம்தன்மை போன்ற அடிப்படைகளில் பெண்கள் அண்களைவிட சிறந்த உயர்ந்த நிலையில் பரவச நிலையில் பரவசநிலை அடைகிறார்கள். இது அவர்கள் அண்களைவிட காலஅளவு விகிதாசாரத்தில் குறைந்து இருப்பதை ஈடுகட்டிவிடுகிறது என்று ஒருவர் விவாதித்தால் அன்றி மற்றப்படி உறுதியாக அண்பெண் கூடல் முறையில் அண்களின் சுரண்டல் மற்றும் அண்கள் பெண்கள் இன்பத்தை புறக்கணித்து அளவில் அதிகமாக பரவச நிலையை அடையும் நிலை போன்றவற்றை குறித்து ஒரு பெரிய முறையீடு பதிவு செய்யும் அளவற்கு இப் பிரச்சனை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஈரினச் சேர்க்கை உறவு முறையில் பெண்கள் ஒட்டகப்படுகின்ற கோட்பாட்டை வேறு எந்த கோட்பாட்டை பயன்படுத்தி பெண்களை விட அண்கள் ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகளவு காம இன்ப பரவசநிலையை அடைகிறார்கள் என்ற எதார்த்த நிலையை கருத்தளவில் விலகிக் காட்ட முடியும்?சூழ்நிலையை பாலுறவுச் சுரண்டல் என்று கூறுவதால் மாக்சின் மதிப்புக் கொள்கையை படுக்கையறையில் பயன்படுத்த வேண்டும் என்று பொருளாகாது. மதிப்பு ரிதியான மார்க்சின் தொழில் கொள்கையை வியாபாரத்தை உறவுகளுக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும். இருந்தாலும் பெண் அடையும் இன்பத்தை புறக்கணித்து அதிக அளவு விகிதாசாரத்தில் அடையும் அண்பரவசநிலை என்ற ஒப்பீடு மிகவும் பயனுள்ளதாகிறது. ஏனெனில் இதன் மூலம் ஆண்களை பால் ஆதிக்க உணர்வு கொண்டவர்கள் என்று பொருட்படுத்தி காட்ட முடியும்.

ஈரினச் சேர்க்கையின் பெரும்பாலான அமைப்பு முறையினால் ஆண்கள் அடையும் ஆதாயத்தால்தான் இவர்களுக்கு இந்த ஆதிக்க போக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். இப்படி அவர்கள் அடயும் ஒரு முக்கியமான இலாபம் அவர்கள் பாலுறவின் போது ஈரினச் சேர்க்கையில் பெருமளவு உடல் தூண்டல் இன்பம் பெண்களை விட அதிக அளவு அடைவதுதான். அதன் விளைவாக முன்பு சொன்னது போலவே ஆண்கள் மட்டுமே பெருமளவு காம பரவச நிலையை பெண்களை விட அடைகிறார்கள்.

பெண் அடையும் இன்பத்தை புறகணித்து சுரண்டி ஆண் அனுபவிக்கும் இந்த பரவச நிலையை காரணமாக கொண்டு அபூர்வமாக சில பெண்கள் பாலியல் மருத்துவர்களை அணுகியும் இருக்கிறார்கள். (Ress:1978 - 2) அவ்வேளைகளில் அப்பெண்கள் மனரீதியான உளைச்சலையும்hpச்சலையும் அதன் விளைவால் ஏற்பட்ட உடல் சார்ந்த அறிகுறிகளையும் எடுத்துக் காட்டி திருமணத்தை குறித்த தங்கள் அறிகுறியை தெரிவித்திருக்கிறார்கள். (Bornar-1971 :148 to 152) இங்கே இருண்டு முக்கிய கருத்துக்கள் கவனத்திற்குரியவை முதளில் ஈரினச்சேர்க்கை நடைமுறையில் அண் இன்று திருப்தியை அதிகப்படுத்துவதற்கான வழிவகைகள் கூட இல்லை. ஏனெனில் நடைமுறையில் சமூதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பாலியல்உறவு முறைகள் அண்களின் விருப்பத்­திற்கேற்ப பாலின்பம் அனுபவிக்கும் சுதந்திரத்தைக் கூட ஊக்குவிப்பதில்லை. ஆண்கள் ஒரு சீரான கால அளவில் அல்லது அடிக்கடி வாய் நுகர் இன்பம் (Fellotio) தாங்கள் பெறுவதில்லை. அதிலும் குறிப்பாக பரவசநிலையை அடையும் வகையில் தங்களுக்கு அந்த இன்பம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி தெரிவிப்பதாக ஹெய்ட் கண்டறிந்தார் (1981 : 538)

இதிலிருந்து ஆண்கள் வேறுபட்ட பாலின்ப வழிகளின் மூலம் இன்பம் நுகர்ந்து திருப்தி அடைகிறார்கள் என்று நன்றாக புலப்படுகிறது. மேலும் பல்வேறு அல்லது வேறுபட்ட வழிகளில் காம பரவச நிலையை அடைய பாலின்ப செயலை மாற்றுவதற்கே ஆண்கள் அடிப்படையில் விரும்புகிறார்கள். ஆண்கள் மட்டும் ஆண் குறியை மையமாக வைத்து பல்வேறு வழிகளில் உடலுறவு இன்பத்தை நுகரலாம்! ஆனால் பெண் இன்ப நெகிழ்வு அல்லது தூண்டலுக்கு பாதகமான ஆண் உடலின்ப தூண்டலை முக்கியத்துவ படுத்துகிற பாலுறவு நடைமுறைகளின் வெளிப்பாடாக உடலுறவில் பெண்ணின் இன்பத்தை இரண்டாந்தரப்படுத்தலாம் அல்லது புறக்கணிக்கலாம் என்பதைத்தான் அண்களின் உடலுறவு முறையை பெண்களுக்கு இன்பமளிக்கும் வகையில் மாற்ற விரும்பாத பிடிவாதமான விருப்பமின்மை உணர்த்துகிறது. இது தான் ஆண்பெண் பாலுறவு அமைப்பிலிருந்து ஆண்கள் அடையும் இலாபமாகும்.

இரண்டாவதாக காமப்பரவச நிலையும்பாலுறவில் முழு திருப்தி நிலையும் ஒன்றென்று நான் கூறவரவில்லை. ஐயமின்றி முழுமையான பாலுறவு திருப்திய­டைய மற்ற பல்வேறு கூறுகளும் பங்கு வகிக்கின்றன. இருப்பினும் பெண்கள் மிகச்சிறிய அளவில் எப்போதாவது பாலுறவு பரவசத்தை அடைகின்ற நிலைமை அவர்களது பாலுறவு அனுபவம் போதுமான அளவு மகிழ்ச்சி தருவதாய் இல்லை என்பதையும் உணர்த்துகிறது.

எனவே அதிகளவு புழக்கத்திலுள்ள ஆண்பெண் கூடலில் பெண்களுக்கும்அண்களுக்கும் அடைய வேண்டிய இலக்குகள் வெவ்வேறாய் இருக்கின்றன. இருவரும் ஒரே நேரத்தில் திருப்தியை அடைந்துவிடுவதில்லை. அண்களுக்கு தங்கள் பாலின்ப வெளிப்பாட்டை அதிகப்படுத்த வேணடுமென்ற அங்கலாய்பு இருக்கலாம்! அனால் பெண்களோடு அவர்களை ஒப்பிடுகையில் அண்கள் பெருமளவில் பாலின்ப திருப்தி அடையத்தான் செய்கிறார்கள். ஆண்கள் உயிரியல் அல்லது அண் விந்து வெளியேற்றல் தேவை என்ற யதார்த்த நிலை நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்ப உடல் இன்ப தூண்டல்வழங்கும் விதத்தில் தான் பாலுறவு என்ற ஒன்றே வரையறை செய்யப்பட்டிருக்கிறது. அனால் பெண்களில் பெண்களின் பாலின்பத்தை பொறுத்தவரையில் (Female Sexuality ) அது கட்டுப்படுத்தப்படுகின்ற ஒன்றாகலாம். ஆண் பாலின்பத்திற்கு சுகம் சேர்க்கும் ஒர் இரண்டாந்தரம் போலதான் வரையறை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அத்தோடு கூட அதிக அளவிலான ஆண் பரவசநிலை சமூகத்தில் பெருமளவு பரவியிருக்கும் ஆணை பிரத்தியகப்படுத்தும் போக்கின் பிரதிபலிப்பே அகும். உடலுறவு நடைமுறையில் இருக்கும் பாலின்ப செயல் பங்கீடு பெண்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை பொறுத்தவரையில் தொழில் நிறுவனங்களில் பால் ரிதியான வேலை பங்கீட்டு முறையோடு ஒத்ததுதான் இவ்விரண்டிற்கும் அதிக வேறுபாடு இல்லை. இரண்டுமே ஆணின் பாலுறவு அல்லது பொருளாதார நிலைமையில் எவ்வளவு குறை இருந்தாலும் அல்லது அதிருப்திக­ரமான நிலையிலிருந்தாலும் பெண்களில் வாழ்நிலை அதைவிட கீழாக தாழ்ந்துதான் இருக்க வேண்டும் என்பதை உறதி செய்கின்றன.

இத்தோடு கட்டுரையின் இப்பிரிவின் இறுதியான மற்றொரு முக்கிய கருத்தைக் காணலாம். ஆண்கள் பெருமளவில் காமப்பரவச நிலையை எட்டுவதற்கு காரணமே அண்கள் ஈரினச் சேர்க்கையில் ஆண்சார்ந்த பாலுறவு முறையில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படும் நிலைதான். இக்கருத்தை நிரூபிக்க ஆதாரம் இருப்து போல் தெரிகிறது. ஹய்ட்டின் ஆண் பாலுறவு ஆய்வில் ஆண்கள் தாங்கள் அடிக்கடி புணர்ச்சியில் இடுபட வேண்டும் என்ற சமூக கட்டாயத்தை உணர்ந்ததாக கூறினர்.

எனினும் புணர்ச்சி பாலுறவில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பாலுறவில் ஆண்களின் முக்கிய செயலாக அடையாளம் காணப்படுகிறது. உடலுறவில் புணர்ச்­சியே விருப்பமாக நிகழ்த்தக்கூடியதொன்றாக வைத்துக் கொள்ளும் படி ஹய்ட் தெரிவித்த யோசனை ஆய்விற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்களில் பலரை திடுக்கிட வைத்ததாம். எனினும் ஆய்விற்கு எடுக்கப்பட்ட மிகப் பெரும்பான்மையானோர் ஈரினச் சேர்க்கையில் புணர்ச்சியை விலக்கி வைப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று உணர்ந்து இந்த யோசனையைப் புறக்கணித்து விட்டார். (hite– 1981 : 461 to 468). மேலும் வரையறுக்கப்பட்ட சமூக சட்டங்களால் தம்முடைய வாழ்க்கை பெரிதும் கட்டுப்படுத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் பெரும்பாலான ஆண்கள் பாலுறவில் ஆண்பெண் பங்கு குறித்து பேசக்கூடிய பெண்ணிய சிந்தனையாளர்களின் பெண்ணிய இணக்கத்தையும் அங்கீகரிக்க மறுத்தனர்.அர்த்தமற்ற வகையில் அவர்கள் இவற்றை தங்களுக்கு பாதகமாக பாலுறவில் சமத்துவ நிலையை அடைய எத்தனிக்கும் பெண்ணின் முயற்சியை பெரிதும் வெகுண்டு கண்டித்தனர். (hite : 303 to 328).

இதிலிருந்து ஈரினச்சேர்க்கையில் ஆண்களின் இந்தச் சார்பு நிலை புழக்கத்தில் உள்ள ஈரினச் சேர்க்கை உறவு அமைப்பு முறையை பாதுகாத்துக் கொள்வதால் அவர்கள் இலாபம் அடைகிறார்கள் என்பதால்தான் தெரிகிறது.

Sunday, January 17, 2016

வகாபிய முதலாளித்துவம்

வகாபிய முதலாளித்துவம்
பேரா.எச்.முஜீப் ரஹ்மான்

வகாபிய முதலாளித்துவம் என்பது, உற்பத்திச் சாதனங்கள் பெரும்பாலும் தனிப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு பொருளியல் முறைமையாகும். அத்துடன் இம்முறையில், முதலீடு, விநியோகம், வருமானம், உற்பத்தி, பொருள்களின் விலை குறித்தல், சேவைகள் என்பன சந்தைப் பொருளாதாரத்தினால் தீர்மானிக்கப்படுகின்றன. இதில், மூலதனப் பொருட்கள், கூலி, நிலம் மற்றும் பணம் ஆகியவற்றில் வணிகத்தில் ஈடுபடுவதற்கான தனிப்பட்டவர்களினதும், சட்ட அடிப்படையில் நபர்களாகச் செயற்படும் தனிப்பட்டவர்களைக் கொண்ட குழுக்களினதும், உரிமைகள் தொடர்புபடுகின்றன.
முதலாளித்துவச் செயற்பாடுகள், 16 ஆம் நூற்றாண்டுக்கும், 19 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் ஐரோப்பாவில் நிறுவனப்படுத்தப்பட்டது. வணிக முதலாளித்துவத்தின் தொடக்க வடிவங்கள் மத்திய காலத்தில் சிறப்புற்று விளங்கின. நிலப்பிரபுத்துவத்தின் முடிவுக்குப் பின்னர், முதலாளித்துவம் மேலை நாடுகளில் முதன்மை பெற்று விளங்கியது. இது இங்கிருந்து, சிறப்பாக இங்கிலாந்தில் இருந்து படிப்படியாக அரசியல் மற்றும் பண்பாட்டு எல்லைகளைக் கடந்து பிற இடங்களுக்கும் பரவியது. 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவம், உலகம் முழுவதிலும் தொழில்மயமாக்கத்துக்கான முக்கிய காரணியாக விளங்கியது.கால அடிப்படையிலும், புவியியல், அரசியல், பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலும், முதலாளித்துவம் பல்வேறுபட்டுக் காணப்படுகின்றது. பல நாடுகளைப் பொறுத்து இதைக் கலப்புப் பொருளாதாரம் என்று அழைப்பதே பொருத்தம் எனச் சிலர் கருதுகின்றனர்.
சவுதி உருவாக்கமே வகாபிய முதலாளித்துவத்தின் அடுத்த கட்ட நகர்வுக்கு காரணமாகியது.சவுதியில் மன்னர் 1902 ஆம்ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அடுத்து 1932 ஆம் ஆண்டு அப்துல் அஸீஸ் பின் சவூத் தனது மூதாதையரது நகரமான ரியாத்தை கைப்பற்றிய பின்னர் சவூதி அரேபிய இராச்சியத்தைப் பிரகடணப் படுத்தி அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார். சவூதி அரேபியா உலகில் அதிகளவு மசகு எண்ணெயை ஏற்றுமதிச் செய்யும் நாடாகும். மசகு எண்ணெய் ஏற்றுமதி அந்நாட்டின் 90% பங்கை வகிப்பதோடு அரசின் வருவாயில் 75% இதன் மூலம் பெறப்படுகிறது.
சவூதி அரேபியாவின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும், அரை வறண்டப் பகுதிகளுமேயாகும். இப்பகுதிகளில் மக்கள் குடியிருப்புகள் இல்லாதிருப்பதோடு பெதோயின் ஆதிவாசிகள் மாத்திரமே சிறிய எண்ணிக்கைகளில் இங்கு வாழ்கின்றனர். இப்பகுதிகளில் பற்றைகளும் புற்களுமே சிறிய அளவுகளில் காணப்படுகின்றன. நாட்டின் பரப்பளவில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே வேளாண்மைக்கு உகந்த நிலமாகக் காணப்படுகிறது. முக்கிய மக்கள் குடியிருப்புகள் கிழக்கு, மேற்குக் கரையோரங்களிலும் பாலைவனப் பசுஞ்சோலைகளை அண்டியும் அமைந்துள்ளது. சவூதி அரேபியாவின் தென்பகுதியான ரப் அல்-காலியிலும், அராபிய பாலைவனத்திலும் மசகு எண்ணெய் அகழ்விற்காக குடியமர்த்தப்பட்ட சில குடியேற்றங்கள் தவிர மக்கள்குடியேற்றங்கள் அற்றதாகவே காணப்படுகிறது. சவூதி அரேபியாவில் ஆண்டு முழுவதும் பாயும் ஆறுகளோ அல்லது நீர் நிலைகளோ இல்லை எனினும் அதன் கடற்கரை 2640 கிமீ (1640 மைல்) நீளமானது.சவுதி மட்டுமல்லமல் வளைகுடா நாடுகள் மசகு எண்ணையை உற்பத்தி செய்கின்றன.
"வளைகுடா நாடுகள் " அல்லது "அராபிய பாரசீக வளைகுடா நாடுகள் அல்லது "பாரசீக வளைகுடா அரபு நாடுகள் "  என்றெல்லாம் பொதுவாக அறியப்படுபவை நடுவண் ஆசியாவில் பாரசீக வளைகுடாவினை ஒட்டி அமைந்துள்ள எண்ணெய்வளமிக்க முடியாட்சிகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன் மற்றும் ஓமன் ஆகும். ஈராக் மற்றும் ஏமன் நாடுகளும் பெர்சிய வளைகுடாவினை ஒட்டி யிருந்தாலும் அரபு நாடுகளாக இருப்பினும் அவை வளைகுடா நாடுகளாகக் கருதப்படுவதில்லை. பாரசீக வளைகுடாவின் அனைத்து அரபு நாடுகளும் எண்ணெய் மற்றும் எரிவாயு மூலம் மிகுந்த வருமானம் பெறுகின்றன. சவுதி அரேபியாவைத் தவிர ஏனைய நாடுகள் சிறிய மக்கள்தொகையைக் கொண்டுள்ளன. இதனால் இந்நாட்டு மக்களின் தனிநபர் வருமானம் அண்டை நாடுகளின் வருமானத்தைவிட கூடுதலாக உள்ளது. தங்களின் பணியாள் தேவைகளுக்காக தெற்காசியா (பெரும்பாலும் இந்தியா) மற்றும் தென்கிழக்கு ஆசியா (பெரும்பாலும் பிலிப்பைன்சு, இந்தோனேசியா) பகுதிகளிலிருந்து குடியுரிமையற்ற பொருளாதார குடியேறிகளை அமர்த்துகின்றனர்.
மசகு எண்ணையை பிரதானமாக கொண்டே வகாபிய முதலாளித்துவம் தன்னை சூப்பர் பவர் முதலாளித்துவமாக அல்லது பெட்ரோ முதலாளித்துவமாக கட்டமைத்துக்கொண்டது.மேலும் வகாபியத்தை அரசுக்கொள்கையாக சவுதி பின்பற்றிய போது ஹஜ்ஜை பிரதானப்படுத்த முயற்சி மேற்கொண்டனர்.புனித ஹஜ்ஜை மையப்படுத்தி சவுதியின் பொருளாதார வளர்ச்சி நாற்கால் பாய்ச்சலில் சென்றுக்கொண்டிருக்கிறது.பர்தா அல்லது ஹிஜாப் புதுமாதிரியான பண்பாட்டு அடையாளமாக ஆக்கப்பட்டு உலகநாடுகள் அனைத்திலும் பெருவணிகர்களால் அடையாள சின்னமாக பெண்களுக்கு உருவாக்கப்பட்டது.இதில் கோடிக்கணக்கான டாலர் புரள்கிறது.
வகாபியமுதலாளித்துவம் என்பது தனிமனித உரிமைகளை முழுமையாக அங்கீகரிக்கும் ஒரு சமுதாய அமைப்பு" என்கிறார்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள்.  "தனிமனித உரிமை என்பது சொத்துரிமையையும் உள்ளடக்கியது. முதலாளித்துவத்தில் எல்லா சொத்துக்களுமே தனி மனிதர்களின் உடைமையாக மட்டுமே இருக்கும். உற்பத்தி, வர்த்தகம் போன்ற பொருளாதார நடவடிக்கைகளில் அரசு பங்கேற்காது. இதுவே அரசியல் சுதந்திரம்" என மேலும் விளக்கமளிக்கிறார்கள் இவர்கள்.

வகாபிய முதலாளித்துவத்தை "லெஸ்-ஸெய்-ஃபேர் கொள்கை என்றும் அழைக்கிறார்கள். இந்த பிரெஞ்சு வார்த்தையின் பொருள் "அப்படியே விட்டு விடு" என்பதாகும். வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடாமல் அவற்றைச் சந்தையின் போக்கிலேயே விட்டுவிட வேண்டும் என்ற முதலாளித்துவத்தின் அடிப்படையையே இது பிரதிபலிக்கிறது.வகாபிய முதலாளித்துவத்தின் மிக முக்கிய குணமே சுரண்டலாகும்.

வர்த்தகத்தை, சந்தையின் போக்கிலேயே விட்டுவிடுவது எப்படி என்பதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம். ஒரு பழ வியாபாரி ஒரு மாந்தோப்பிலிருந்து மாம்பழங்களை வாங்கி, தனது ஊர்ச் சந்தையில் ஒரு பழம் ரூ.2 என்ற விலையில் விற்கிறார். நன்றாக வியாபாரம் நடக்கிறது. சில மாதங்கள் ஆன பிறகு இன்னொரு வியாபாரி அதே தோப்புப் பழங்களை அதே சந்தையில் ரூ.1.80-க்கு விற்கத் தொடங்குகிறார். தனியாளாக ஒருவர் மட்டும் வியாபாரம் செய்து வந்து வந்த பழச்சந்தையில் இப்போது போட்டி வந்து விட்டது. முதலாமவரின் வாடிக்கையாளர்கள் இப்போது இரண்டாமவரிடம் வாங்கத் தொடங்கி விட்டார்கள். வேறு வழியின்றி முதலாமவரும் தனது விலையை ரூ.1.80-க்கு குறைத்தார். இந்நிலையில் மூன்றாவதாக ஒரு வியாபாரி வருகிறார். அவரும் அதே பழங்களை ரூ.1.50-க்கு விற்கத் தொடங்கி விட்டார். போட்டி இன்னும் கடுமையாகி விட்டது. முதல் இருவரும் தங்கள் விலையையும் ரூ 1.50-க்கு குறைத்தாலன்றி வியாபாரம் செய்ய முடியாது என்ற நிலையில் அவர்களும் விலையைக் குறைத்தனர்.

முதலாமவர் கொஞ்சம் மாற்றி யோசித்தார். இப்படியே போய்க் கொண்டிருந்தால் போட்ட முதலைக்கூட எடுக்க முடியாது. ஒரே தரத்திலுள்ள பழத்தை வைத்துப் போட்டி போட்டுக் கொண்டிருப்பதை விட்டு நாம் சற்று உயர்தர பழத்தை விற்கலாமே என்ற யோசனை அவருக்குத் தோன்றியது. சிறிது தூரத்திலுள்ள வேறொரு தோப்பிற்குச் சென்று விசாரித்தார். அங்கு விளையும் பழம் சந்தையில் இருக்கும் பழத்தைவிட உயர்தரமானது. ஆனால் கொள்முதல் விலை கிட்டத்தட்ட அதேதான். அவர் அந்த உயர்தர பழங்களை வாங்கி வந்து தனது கடையில் அறிமுகப் படுத்தினார். விலை ரூ. 1.50. அதே விலைக்கு உயர் தரமான பழம் கிடைக்கிறது என்பதால் வாடிக்கையாளர்கள் திரும்பவும் அவரது கடைக்கு வரத் தொடங்கினார்கள். தான் ஏற்கனவே விற்றுக் கொண்டிருந்த பழத்தின் விலையையும் அவர் ரூ. 1.40 எனக் குறைத்தார்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால், இந்த நடவடிக்கையில் நிகர பலன் அடைந்தது வாடிக்கையாளர்கள்தான். சந்தையில் அவர்கள் வாங்கிக் கொண்டிருந்த பழத்தின் விலை ரூ 2.00-லிருந்து 1.40-க்கு குறைந்ததோடல்லாமல், ரூ.1.50-க்கு உயர்தர பழவகை ஒன்றும் கிடைக்கிறது.  இவையெல்லாம் வெளியார் யாருடைய தலையீடும் இல்லாமல் சந்தையில் போட்டி ஏற்பட்டதன் விளைவு. முதலாளித்துவத்தால் கிடைக்கும் மிகச் சில பலன்களுள் இதுவும் ஒன்று!.ஆனால், வகாபிய முதலாளித்துவத்தின் இன்னொரு முகம் இதிலிருந்து வேறுபட்டது. பொதுநலம் கடுகளவுமின்றி, முழுக்க முழுக்கச் சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பணக்கார முதலைகளைப் பாதுகாப்பதற்காக ஏற்பட்டது

எளிய பண்ட பரிவர்த்தனையில் உழைப்பதற்கு தேவைப்படும் சாதனங்களும், உழைப்பும் உற்பத்தியாளரைச் சார்ந்தே நடைபெற்றது. ஆனால் முதலாளித்துவத்தில் உற்பத்தி சாதனங்கள் முதலாளிக்குச் சொந்தமானவையாகவும், உழைப்பதற்கு என்று தனியே தொழிலாளர்களை, வைத்து உற்பத்தி நிகழ்த்தப்படுகிறது. எளிய பண்ட உற்பத்தியின் இறுதி நோக்கம் உற்பத்தியாளரின் சொந்த தேவைகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதாகும், முதலாளித்துவத்தில் ஆதாயத்தை அடைய வேண்டும் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் உற்பத்தி நடத்தப்படுகிறது. எனவே இயற்கை பொருளாதாரத்தில் பரிவர்தனையாக செய்யபப்பட்ட பண்டத்திற்கு, சாதாரணமாக பொருள் என்ற வகையிலேயே நிகழ்த்தப்படுகிறது, முதலாளித்துவத்தில் அப்பொருளுக்கு சரக்கு என்று பெயர்பெறுகிறது.

சரக்கு உற்பத்தி  என்பது சமூக வேலைப் பிரிவினையிலும், இதனோடு்கூட உற்பத்தி சாதனங்கள், தனிநபர்களிடம் தனியுடைமையாய் ஒன்றுகுவிவதன் மூலமும்  தோன்றுகிறது.

முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்திச் சாதனங்களும், வாங்கப்பட்ட உழைப்புச் சக்தியும், முதலாளிக்குச் சொந்தமானவையாகும், அதனால் எதை உற்பத்தி செய்ய வேண்டும், எவ்வளவு, எப்படி செய்யவேண்டும் என்பதை, முதலாளியே முடிவு செய்கிறார். இத்தகைய முதலாளியின் கட்டுப்பாட்டின் கீழ் தொழிலாளி வேலை செய்கிறார். தொழிலாளியால் உற்பத்தி செய்யப்பட்ட சரக்கை விற்று பணமாக்கி அதனை முதலாளி் சொந்தமாக்கிக் கொள்கிறார்.

முதலாளி, தொழிலாளிக்கு அவரது உழைப்புச் சக்தியின் மதிப்பிற்கு மட்டுமே சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதாவது சரக்கு என்ற முறையில் உழைப்புச் சக்திக்கு மட்டுமே இங்கு சம்பளம் தரப்படுகிறது.  தொழிலாளி தமது அவசியத் தேவைகளை நிறைவு செய்யப்பட்டால் தான் அவரால் தொடர்ந்து உழைக்க முடியும். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அளவு சாப்பட்டிற்கு செலவு செய்கிறார். அவரது ஆடைகள், காலணி போன்ற தேவையான பொருட்கள் தேய்மானம் அடைகிறது. வீட்டு வாடகைக்கு என குறிப்பிட்ட பணத்தை கொடுக்கிறார். முதலாளிக்கான புதிய உயிருள்ள சரக்கான வளர்ந்து வரும் குடும்பத்தையும் கவனிக்கிறார். இந்த செலவிற்கான பணத்தை மட்டுமே தொழிலாளிக்கு சம்பளமாக தரப்படுகிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொழிலாளி செலுத்தும் உழைப்பு இரு பகுதியாக செயல்படுகிறது.  அதாவது தொழிலாளி  வேலை நாளின் ஒரு பகுதியில் தமது உழைப்புச் சக்தியின் மதிப்புக்குச் சமமான மதிப்பை உற்பத்தி செய்கிறார். இதற்கு அவசிய உழைப்பு என்றழைக்கப்படுகிறது. உற்பத்தி செய்த மற்றொரு பகுதிக்கான மதிப்பை தொழிலாளிக்கு பணம் கொடுக்காமல்,  முதலாளி தனதாக்கிக் கொள்கிறார். இதற்கு உபரி உழைப்பு என்றழைக்கப்படுகிறது. இந்த உபரி உழைப்பே, உபரி மதிப்பை தோற்றுவிக்கிறது. அவசிய உழைப்பிற்கு மட்டுமே தொழிலாளி சம்பளம் வாங்குகிறார். உபரி உழைப்பிற்கு என்று எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. தொழிற்சாலை முதலாளிக்குச் சொந்தமானவை, அங்கு உற்பத்திசெய்யப்பட் சரக்கு அனைத்தும் முதலாளிக்குச் சொந்தமானதாகிறது, ஆகவே இந்த உபரி மதிப்பு முதலாளிக்கு எவ்வித செலவுமில்லாமல் சென்றுவிடுகிறது.

                அதிகமான ஆதாயத்தைத் தேடி அலையும் முதலாளிகள், உற்பத்தி செலவைக் குறைக்க இரு முறைகளைக் கையாளுகிறார்கள்.

                முதலாவதாக, உழைக்கும் நேரத்தை நீட்டிப்பதின் மூலம் நடத்தப்படுவது. இது உபரி உழைப்பின் அளவை அதிகப்படுத்துவதால் கிடைக்கிறது. இதுபோன்ற நேரங்களில் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் பகைமையும், எதிர்ப்புகளும் அதிகமாகிறது. இதனை தவிர்ப்பதற்காக  இரண்டாம் வழிமுறையை கடைபிடிப்பதிலியே முதலாளி அதிகம் கவனம் செலுத்துகிறார். அதாவது மேம்பாடு அடைந்துள்ள இயந்திரங்களை பயன்படுத்த விளைகிறார். புதிய தொழில்நுட்பத்தில் மேம்பாடு அடைந்த இயந்திரத்தை உற்பத்தியில் ஈடுபடுத்துகிறார்.

                இயந்திரங்கள் அதிகம் புகுத்தப்பட்ட தொடக்க காலத்தில் தொழிலாளர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, அதனை அடித்து, உடைத்து துடைத்தெறிய முனைந்தனர். தங்களது வேலையை இயந்திரம் பறித்துவிடுகிறது என்று நினைத்தனர். பிற்காலத்தில் இயந்திரங்கள் தமக்கு எதிரானதல்ல, இவைகளை பயன்படுத்திவரும் முதலாளித்துவ அமைப்பு முறையே பகைமையானது என்பதை கண்டுகொண்டனர்.

தொழிற்சாலையில் புதிய இயந்திரம் புகுத்தப்படும் போது தொழிலாளர்களின் பணிகள் எளியதாக்கப்பட வேண்டும், ஆனால் முதலாளித்துவ உடைமை அமைப்பு, இதற்கு இடம் கொடுக்காமல் உழைப்பின் கடுமையை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.

                உழைப்பின் உற்பத்தித் திறன், உயர்வதின் மூலம் இயந்திரங்கள் சமூகச் செல்வத்தை அதிகரிக்க செய்கிறது. ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் தனிச்சொத்துடைமை நிலவுவதால், கிடைத்திடும் பலன்கள் முழுமையையும் முதலாளிகள் தம்முடையதாக்கிக் கொள்கிறார்கள். இதனால் உருவான முரண்பாடு, முதலாளித்துவ அமைப்பு நெடுகிலும் தீர்க்கப்படாமல் தொடர்கிறது.

குறிப்பிட்ட பொருளுக்கு, சந்தையில் பொதுவாய் காணும் தேவையின் அடிப்படையில், அனைத்து முதலாளிகளும் சரக்கை உற்பத்தி செய்கின்றனர். தனது பொருளை சந்தையில் அதிகயாய் விற்கவேண்டும் என்கிற போட்டி முதலாளிகளுக்கிடையே நிலவுகிறது. இதன் விளையாய் அதிக ஆதாயத்தை அடைவதற்கும், சந்தையில் தமது பொருட்கள் மிகுந்த அளவு விற்பதற்கும், பொருளின் விலை, போட்டி உற்பத்தியாளர்களின் சரக்குகளின் விலையைவிட குறைவாக இருக்க வேண்டியது அவசியமாகிறது, தங்களது சரக்கின் உற்பத்திச் செலவை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அதனால் முதலாளிகள் புதிதுபுதிதான தொழில்நுட்பத்தையும், புதுமையான இயந்திரத்தையும், தமது தொழிற்கூடத்தில் புகுத்துகின்றனர்.

சந்தையின் தேவையை நோக்கி பல்வேறு உற்பத்தியாளர்கள் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்த திட்டம் ஏதுமில்லாமல் சரக்கை உற்பத்தி செய்திடுகிறார்கள். இதனால் உற்பத்தியில் அராஜகம்  ஏற்படுகின்றது. குறிப்பிட்ட சரக்கின் தேவை சந்தையில் உருவாவதைக் காணும் போது, பல்வேறு முதலாளிகள் அப்பொருளையே உற்பத்தி செய்திட முனைகின்றனர். கால ஓட்டத்தில் அப்பொருளின் தேவைவிட அதிகமாக உற்பத்தியாகிவிடுகிறது, அதனால் உற்பத்தியான சரக்கு சந்தையில் விற்பனையாகமல் தேங்கிவிடுகின்றன. இது போன்ற நேரங்களில் விலையில் கடுமையாக இறக்கம் காண்கிறது. அதானல் உற்பத்தியாளர், அச்சரக்கின் உற்பத்தியை குறைத்துக்கொள்கிறார், அல்லது முழுவதுமாக நிறுதிவிட்டு, வேறொரு சரக்கை உற்பத்தி செய்ய முயல்கிறார்.

ஆதாயம் பெருகுவதையே நோக்கமாக கொண்ட முதலாளிகளுக்கிடையே உள்ள  போட்டா போட்டியின் விளைவாக மிகுதியான சரக்குகள் உற்பத்தி செய்து விடுகின்றனர், அதற்கான சந்தையின் தேவையைப் பற்றி கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இவ்வாறு மிகுஉற்பத்தி என்னும் சிக்கலில் வீழ்கிறது முதலாளித்துவச் சமூகம்.

                முதலாளித்துவ அமைப்புத் தோன்றுவதற்கு முன்பு பல நெருக்கடிகளை சமூகம் கண்டிருக்கின்றன. அது வறட்சி, சுனாமி, பெருவெள்ளம் போன்றவற்றால் ஏற்பட்டவை, அதாவது இவை இயற்கையின் சீற்றத்தால் உருவானவை. மிகு உற்பத்தி என்ற இந்த நெருக்கடியை முதலாளித்துவ அமைப்பில் மட்டும் தோன்றக் கூடியதாக காணப்படுகிறது.

                மிகு உற்பத்தியால் வாணிபம் சுருங்குகின்றன, சந்தையில் பொருட்கள் விற்பனையாகாமல் குவிகின்றன, இதனைத் தொடர்ந்து தொழிற்சாலையில் உற்பத்தி குறைத்தல், உற்பத்தியை நிறுத்துதல், தொழிற்சாலை மூடுதல் போன்றவை ஏற்படுகிறது. தொழிலாளிகளின் வேலையிழப்பு தொடர்கிறது.

                இந்த மிகை உற்பத்தி என்பது,  ஒருவகையில் சார்பானதாகும். அதாவது உண்மையில் சமூகத்திற்குத் தேவையானது போக மீதமுள்ளதை, இந்த மிகைஉற்பத்தி குறிப்பிடவில்லை, இந்த முதலாளித்துவ உற்பத்தி முறை, தொழிலாளர் மற்றும் பல வேலையாளர்களை வேலையிழக்கச் செய்து, அவர்களிடம் வாங்கும் சக்தியிழக்க செய்துவிட்டது. முதலாளித்துவம், தனியுடைமை முறையில் செயல்படுவதால், உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும், பலன்களை கையகப்படுத்தும் தனிவுடைமை பெற்ற முதலாளித்துவ வடிவத்திற்கும் இடையே காணும் முரண்பாடாய் விளங்குகிறது.  

                முதலாளித்துவ உற்பத்தியில் ஏற்பட்ட அராஜக போக்காலும், மூலதனத்தின் உழைப்பைச் சுரண்டுவதின் விளைவுகளாலும், தொழிலாளிகளிடையே வாங்கும் திறனற்றுப் போயிற்று.  முதலாளித்துவத்தில் உற்பத்தியின் நோக்கம், மக்களின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதல்ல, உழைப்பாளியின் உபரி உழைப்பை சுரண்டி மூலதனத்தை பெருக்குவதே ஆகும். 

                முதலாளித்துவத்தின் சரக்கு உற்பத்தியானது, நுகர்வுடன் தொடர்புடையதாகும். நுகராமல் சந்தையில் சரக்கு குவிந்து கிடக்கும் காலகட்டத்தில் உழைப்பாளியும். மக்களும் நுகரமுடியாமல், வேலையிழந்து, பட்டினியில் கிடந்து  அவதிபடுகின்றனர்.

                முதலாளித்துவ அமைப்பில் மிகுஉற்பத்தி, நெருக்கடி, தேக்கம், ஏற்றம், செழுமை என்ற சுற்று மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது. வீழ்ந்து போகாமல் தாக்குப்பிடித்த, தொழில் நிலையங்கள் புதிய ஏற்றம் பெற்று, புத்துயிர் உற்று வளர்கிறது. மீண்டும் முதலாளித்துவத்தில் திறனுடைய தேவையை கணக்கில் எடுக்காமல், மிகுஉற்பத்தி என்ற நிலையை நோக்கிச் செல்கிறது. மீண்டும் சந்தை சுருங்குதல், சரக்குகள் சந்தையில் குவிதல், உற்பத்தியில் வீழ்ச்சி, உற்பத்தி நிறுத்தம், தொழிற்கூடம் மூடுதல் என்ற பழைய நிலைமைகளை விட, கடுமையான நிலைமைகள் மீண்டும் மீண்டும் அரங்கேறுகிறது.

வகாபிய முதலாளித்துவப் பொருளாதாரத்தில் பணம் படைத்த முதலாளிகளும் மெகா கார்ப்பரேட் நிறுவனங்களுமே 'எதை உற்பத்தி செய்வது?, எதை யாருக்கு வினியோகம் செய்வது?' போன்றவற்றையும் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகளையும் தீர்மானிக்கிறார்கள். இந்த முடிவெடுத்தல்களில் அவர்களைச் செலுத்துவது ஒன்றேதான்: லாபம், அதிக லாபம், மேலும் மேலும் லாபம்.

நாம் இதுவரை பார்த்த 'தனியார் பொருளாதாரச் சுதந்திரம்' முதலாளித்துவத்தின் உயிர் மூச்சு என்றால், அதன் உடலெங்கும் ஓடும் இரத்தம் என வட்டியைச் சொல்லலாம். பொருளாதார இயந்திரம் சிக்கலில்லாமல் இயங்க உதவும் மசகு எண்ணெய்தான் வட்டி என முதலாளித்துவ ஆதரவாளர்கள் பெருமைப் பட்டுக் கொள்வார்கள். ஆனால் உண்மையில், பணக்காரர்கள் கொழுத்த பணக்காரர்களாகவும் ஏழைகள் பரம ஏழைகளாகவும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மென்மேலும் அதிகரிக்க வகை செய்யும் கருவியே வட்டி.ஆனால் வகாபிய முதலாளித்துவத்தில் வட்டிக்கு பதிலாக கமிஷன் என்ற முறை நடைமுறையிலிருக்கிறது.ஆனால் இதன் செயல்பாடு வட்டியை போன்றதே.இன்றைய பெட்ரோ டாலர் அரசியல் முறையை தோற்றுவித்த்து வகாபிய பொருளாதார முறை என்றால் அதில் சந்தேகமேயில்லை.
1999ல் கச்சா எண்ணெயின் விலை சுமார் $16 அமெரிக்க டாலர் என்னும் அளவிலே இருந்தது. இதற்கு முக்கிய காரணமாக கருதபடுவன, இராக்கிய எண்ணெய் வயல்களில் அதிகமான உற்பத்தியும், ஆசிய பொருளாதார நெருக்கடி நிலையும் ஆகும். கச்சா எண்ணெயின் விலை, பிப்ரவரி 2005 வாக்கில் ஒரு பேரலுக்கு(பீப்பாய்க்கு) ஐம்பது அமெரிக்க டாலர் என்னும் அளவில் இருந்தது. அதுவே பிப்ரவரி 2008ல் ஒரு பேரலுக்கு நூற்றிப் பதினேழு டாலர் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. ஒரு பேரல் என்பது 42 அமெரிக்க கேலன்கள், ஒரு கேலன் சுமார் மூணே முக்கால் லிட்டர். ஆக, ஒரு பேரல் என்பது சுமார் 160 லிட்டர்கள்.
சில ஆண்டுகளுக்குள்ளாகவே விலை இவ்வளவு தூரம் கூடியும் எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தியைப் பெருக்கும் வழிகளைக் கையாளவில்லை. எண்ணெய்ப் போக்குவரத்துக்குப் பயன்படும் கப்பல்கள் புதிதாய் நிர்மாணிக்கப் படவில்லை. எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலைகள்  புதிதாகக் கட்டப்படவும் இல்லை. இவை எல்லாமே இந்த எண்ணெய் வளம் குறைந்து வருகிறது என்பதற்குச் சான்றுகள் என்று தங்கள் வாதத்திற்கு வலுச் சேர்க்கிறார்கள் ஹப்பர்ட் உச்சக் கோட்பாட்டுக்காரர்கள். நிலத்தடியில் இருந்தால் தானே எண்ணெய் உற்பத்தியைக் கூட்ட முடியும். அதனால் தான் விலை உயர்வடைந்தாலும் உற்பத்தி கூடவில்லை என்கின்றனர்.
ஈரான், பாரசீக வளைகுடாவிலுள்ள கிஷ் தீவின் தனது புதிய எண்ணெய் விற்பனை சந்தையை அமைத்துள்ளது. கணிணியும் மென்பொருட்களும் நிறுவப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ஆனால் சில அழுத்தங்கள் காரணமாக தள்ளிப் போடப்பட்டது. எங்கிருந்து அழுத்தம் வந்திருக்கும் என்பது சொல்லித்தான் அறிய முடியுமா என்ன?. மே 5ந்தேதி மிளிஙி பதிவு செய்யப்பட்டு விட்டது. சந்தை துவங்கும் நாள் குறிக்கப்படாததற்கு எண்ணெய் மாபியா கும்பல்களின் ஊடுருவலும் உலக நாடுகளின் அழுத்தமும் ... ... காரணம் என சிலரால் சொல்லப் படுகிறது,2007ல் எண்ணெய் 60 டாலர்களுக்கு கொள்வரவு செய்யப்பட்டது. டாலரின் மதிப்பு ஒவ்வொரு நாளும் வீழ்ச்சி அடைவதை அனைவரும் அறிவோம். தனது சந்தை மூலம் வெறும் யூகங்களை  முன்னிறுத்தி எண்ணெயின் விலையை ஏற்றிக் கொண்டிருக்கிறது. 60 டாலர்களுக்கு விற்ற எண்ணெயை 140 டாலருக்கு விற்றால் டாலரின் தேவை 230விழுக்காடுகள் அதிகரிக்கும். சமீபத்தில் எண்ணெய் விலையேற்றத்திற்கு 60சத காரணம் வெறும் யூகங்களைக் கொண்டு செய்யும் முன் வியாபாரம்தான் எனக் கூறியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக மசகு எண்ணையின் விலையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் வளைகுடா நாடுகளின் உதவியாலே முன்னெடுக்கப்படுகிறது.தற்சமயம் பொருளாதார மந்தம் முற்றிலுமாக மாறிவிடாத சூழலில் இன்னும் சீனா,ஜப்பான்,மேற்கத்திய நாடுகளில் பொருளாதார மந்தம் நீடிப்பதினால் மசகு எண்ணையின் அரசியல் சற்று ஓய்வெடுத்திருக்கிறது என்று சொல்லலாம்.ஆனால் விரைவில் அதன் அரசியல் முதலாளித்துவத்தை பாதுகாப்பதில் முழுவெற்றியை அடைந்துவிடும்.முடிவாகச் சொல்வதென்றால் அமெரிக்கா தனது டாலரை அழிவிலிருந்து காக்க, உலகில் டாலருடைய ஏகாதிபத்தியத்தை நிலை நிறுத்திக் கொள்ள எந்த நாட்டையும் அழிக்கத் தயங்காது.அதற்கு சவுதி போன்ற நாடுகள் துணை நிற்கின்றன.இது முதலாளித்துவம் தனது இருப்பை மறு உற்பத்தி செய்தி கொண்டிருக்கும் என்பதன் வெளிபாடாகும்.வகாபிய முதலாளித்துவமும் அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் அடிவருடியாகவே இருக்கிறது. 

எழுத்தாளர் ரஹ்மத் ராஜகுமாரனின் எழுத்தியல் அற்புதங்கள்

எழுத்தாளர் ரஹ்மத் ராஜகுமாரனின் எழுத்தியல் அற்புதங்கள் பேரா.எச்.முஜீப் ரஹ்மான் ரஹ்மத் ராஜகுமாரன், இவரின் இயற்பெயர் ஏ.பி.எம். அப்த...