Tuesday, February 23, 2016

மகாகிரந்தம் தமிழின் அசல் மைக்ரோ நாவல்

மகாகிரந்தம் தமிழின் அசல் மைக்ரோ நாவல்

முனைவர் பி.முருகன்
ஜெயமோகன் நாவல் பற்றிய விவாதத்தில் இப்படி தொடங்குகிறார் தொன்மையான பெருநாவல்கள் அனைத்துமே ஒரு பொதுத்தன்மை கொண்டிருக்கின்றன. இவை ஒருவகை நிகர் வரலாறுகள். மைய ஓட்ட வரலாறாக இருந்தவை வம்சவரலாறுகளும் அரசுகளின் வரலாறுகளும்தான். இவை அவற்றுக்கிணையாக அல்லது மாற்றாக உணர்ச்சிகரமான ஒரு வரலாற்றை உருவாக்குகின்றன. விழுமியங்களையும் கனவுகளையும் உள்ளடக்கிய வரலாறு என இவற்றைச் சொல்லலாம்.
ஆகச்சிறந்த வரலாறுகள் அமைச்சர்களாலும் அறிஞர்களாலும் எழுதப்பட்டன. முதல் நாவல் என்று சொல்லப்படும் ஜெஞ்சியின் கதை தாசியால் எழுதப்பட்டது. இந்த வேறுபாடே போதும் என நினைக்கிறேன்.பின்னர் உரைநடையில் நாவல் எழுதப்பட்டபோது எங்கும் அதன் முதல் வடிவமாக இருந்ததுஇன்னொரு வரலாற்றை சமைப்பதுஎன்பதே. இந்த ஒற்றை வரியில் உலகப்பெருநாவல் மரபையே வரையறுக்க முடியும். வரலாற்றை புறவயமாகச் சொல்வது தல்ஸ்தோயின் பாணி. மனிதர்களின் அகம் வழியாக உணர்வுகளின் எண்ணங்களின் வழியாக மட்டுமே சொல்வது தஸ்தயேவ்ஸ்கியின் பாணி. இரண்டுமே உலகில் வலுவாக வேரூன்றின
ஆனால் உலகமெங்கும் சென்றுசேர்ந்தது இந்த பெருநாவல் மரபுதான். ஆகவே நாவல் உருவான ஆரம்பகாலகட்டத்தில் எல்லா மொழிகளிலும் நேரடியாக பெருநாவலுக்கான முயற்சிகளே உருவாயின. மலையாளத்தில் இந்துலேகா [சந்துமேனன்] மார்த்தாண்ட வர்மா [சி வி ராமன்பிள்ளை] கன்னடத்தில் சாந்தலா [கே.வி.அய்யர்] வங்காளத்தில் ஆனந்தமடம் [பங்கிம்சந்திரர்] கோரா [தாகூர்] குஜராத்தியில் ஜெயசோமநாத் [ கெ.எம் முன்ஷி] போன்றவை நினைவுக்கு வருகின்றன.ஆனால் தமிழில் இந்தப்பெருநாவல் மரபு பெரிய செல்வாக்கைச் செலுத்தவில்லை. சரியாகச் சொல்லப்போனால் பெருநாவல் மரபின் சில அம்சங்களை எடுத்து உருவாக்கப்பட்ட வணிக-கேளிக்கை எழுத்துமுறையே இங்கே வலுவான செல்வாக்கைச் செலுத்தியது. என் பார்வையில் இங்கே செல்வாக்கைச் செலுத்திய நாவல் என்பது ரெயினால்ட்ஸின் லண்டன் அரண்மனை ரகசியங்கள் எனற நாவல்தான்
அந்த வணிகக் கேளிக்கை எழுத்துக்கு எதிரானதாக இங்கே நாவல் உருவாகி வர மேலும் காலம்பிடித்தது. வலுவான தமிழ்நாவல்கள் நாற்பதுகளில்தான் உருவாகி வந்தன. ஆனால் அவை அடுத்தகட்ட நவீனத்துவ நாவல்களை முன்னுதாரணமாகக் கொண்டன
 பொதுவாக உலகப்போக்கு என ஒன்றை பொதுமைப்படுத்துவது இலக்கியத்தை புரிந்துகொள்வதற்கே என்பதை மீண்டும் வலியுறுத்த விழைகிறேன். இதை மிகச்சரியான வரலாறாகச் சொல்லமாட்டேன். இப்படி சிந்திக்கலாமே என்ற ஒரு சிபாரிசு மட்டுமே இது.
நவீனத்துவநாவல் என்பது பெருநாவல் மரபுக்கு எதிரான ஒரு போக்கு. அது பெருநாவல் மரபின் இரு அம்சங்களை நிராகரித்தது. 1. வரலாறு 2 புறவயமான யதார்த்தம் .
விளைவாக தனிமனிதனை மையமாக்கிய, அந்தரங்கத்தின் வெளிப்பாடாக மட்டுமே நிற்கக்கூடிய படைப்புக்கள் உருவாகி வந்தன. ‘தனிமனிதனின் அகம்என அவற்றை மிகப்பொதுப்படையாக வகுக்க முடியும்.ஓர் எல்லையில் காம்யூவின் அன்னியன் மறு எல்லையில் ஜாய்ஸின் யுலிஸஸ் ஆகியவை இந்த வகை எழுத்துமுறைக்கான உதாரணங்கள். காம்யூ எண்ணி எண்ணிச் சொல்லும் அகம் ஜாய்ஸால் மொழிப்பெருக்காக மாற்றப்பட்டிருக்கிறது.இந்தவகையான நவீனத்துவ எழுத்துமுறையே தமிழில் நாவலாக அறிமுகமாகியது. அதையொட்டிய நாவல்களிலேயே நாம் சாதனைகளை படைத்தோம். பொய்த்தேவு [.நா.சு] தலைமுறைகள் [நீல பத்மநாபன்] ஒரு புளியமரத்தின் கதை [சுந்தர ராமசாமி] 18ஆவது அட்சக்கோடு [அசோகமித்திரன்] என நமக்கு ஒரு பட்டியல் உள்ளது.மலையாளத்தில் பெருநாவல் மரபு தகழியின் கயறுடன் முழுமைக்கு வந்தது. .வி.விஜயனின் கசாக்கின் இதிகாசம் நவீனத்துவநாவலுக்கான தொடக்கமாக அமைந்தது.
கன்னடத்தில் மண்ணும் மனிதரும் [சிவராம காரந்த்] முழுமையடையச்செய்த பெருநாவல் மரபை அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா நவீனத்துவநாவல் வடிவை நோக்கிக் கொண்டுவந்தது.மகத்தானபெருநாவல்களை உருவாக்கிய வங்க மரபு கணதேவதை, ஆரோக்கிய நிகேதனம் [தாராசங்கர் பானர்ஜி, பாதேர் பாஞ்சாலி[விபூதிபூஷண் பந்தியோபாத்யாய], நீலகண்டப்பறவையைத் தேடி[அதீன் பந்த்யோபாத்யாய] அடுத்தகட்ட நகர்வை சீர்ஷேந்து முகோபாத்யாயவின் கறையான் வழியாக நிகழ்த்தியது.
இந்த வகை எழுத்துமுறை உலகமெங்கும் அடுத்தவகையான எழுத்துக்கு வழிவிட்டதை நான் உணர்ந்தேன்.இதை பின் நவீன நாவலாக பார்க்கலாம்.இதில் ஜோ டி குரூஸின் கொற்கை, ஆழிசூழ் உலகு, சு.வெங்கடேசனின் காவல்கோட்டம், எம்.கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகை, எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம், நெடுங்குருதி, இமையத்தின் செடல், கோணங்கியின் பாழி, பிதிரா, பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதை யுவன் சந்திரசேகரின் மணல்கேணி, வெளியேற்றம், பகடையாட்டம் போன்ற நாவல்களுக்கெல்லாம் ஏதேனும் பொதுக்கூறை கண்டுபிடிக்கமுடியும் என்றால் இதுதான். அவை தனிமனிதனின் உலகை வரலாற்றில் வைத்து விரிக்கின்றன. மாற்று வரலாறாக ஆகின்றன. வரலாற்றைக்கொண்டு விளையாடுகின்றன.அவ்வகையில் சமீபத்தில் வந்த பலநாவல்களை குறிப்பாகச் சுட்ட முடியும். பூமணியின் அஞ்ஞாடி ஒரு நிகர்வரலாற்றை உருவாக்குகிறது. சொ தருமனின் கூகையில் கூடவே ஒரு மெல்லிய பகடியும் ஓடிச்செல்கிறது.முருகவேளின் மிளிர்கல் உண்மையான வரலாற்றை தொன்மமாக ஆக்க முயல்கிறது. கௌதம் சன்னாவின் சமீபத்திய நாவலான குறத்தியாறு நாட்டார் தொன்மத்தைக்கொண்டு ஒரு வரலாற்றை உருவாக்க முயல்கிறது.
இதையொட்டித்தான் இலக்கியத்தின் வரலாற்று மதிப்பு என்ன என்ற வினா எழுகிறது. தங்கள் வரலாற்றை எழுத்தாளன் திரித்து எழுதுகிறான் என்று மக்கள் தெருவுக்கு இறங்குகிறார்கள்.நாவல் என்பதே ஒரு வகையில் திரிக்கப்பட்ட வரலாறுதான். ஆசிரியனின் பார்வைக்கு ஏற்ப, அவனுடைய இலக்குக்கு ஏற்ப அதை மாற்றியமைப்பதே கலை எனப்படுகிறது. சிவசு அவர்கள், “வாசிப்பு முறை எவ்வாறு காலந்தோறும் மாறுபடுகிறதோ அதற்கேற்ப, இன்று நாம் எப்படி வாசிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும். காப்பியங்கள் படித்துக் கொண்டிருந்த நாம் ஆற்றுப்படை போன்ற நூல்கள் எழும்போது, அதற்கேற்ப நம் வாசிப்பு முறையை மாற்றிக் கொண்டோம். அதுபோல இன்று வழக்கமான நூல்களையும், பாடத்திட்ட நூல்களையும் தாண்டி புதிய சூழலுக்கு வந்துள்ளோம். மேலும், வெளிப்படையாக எழுதப்படும் படைப்புகள் எப்போதும் ஒரு பொருளைத் தருவன. அவை ஒரு காலத்தை மட்டுமே நிர்ணயித்துப் பேசுவன. ஆனால், இது போன்ற படைப்புகள் நம்மை வெவ்வேறு தளத்திற்கு அழைத்துச் செல்கின்றனஎன்றார்.
பின்நவீனத்துவம் தன்னகத்துள்ளே புதமை வாய்ந்த பல உட்கூறுகளைக் கொண்டுள்ளது. அவற்றை மேற்கூறிய பின்நவீனத்துவம் குறித்த அறிஞர்களின் கருத்தாடல்களில் இருந்தே புரிந்து கொள்ள முடியும். எனினும் பின்நவீனத்துவ வாசிப்பு அணுகளுக்கு துணைசெய்யும் விதமாக, பின்நவீனத்துவத்தின் உட்கூறுகளைத் தொகுத்தளிக்கலாம். அவை,
1.   
மையத்தை சிதறடித்தல்
2.   
ஒழுங்கை குலைத்தல்
3.   
புனிதங்களைப் பகடி செய்தல்
4.   
நேர்கோடற்ற சிதறடிப்பாக எழுதுதல்
5.   
அர்த்த சாத்தியப்பாடற்ற பிரதிகளை உருவாக்குதல்,
6.   
முழமையை மறுத்து துண்டுகளை முன்வைத்தல்
7.   
விளிம்புகளை முன்னிலைப்படுத்தல்
8.   
எதிர்க  கலைத்துவத்தை (anti artistic) உருவாக்குதல்
9.    
கேள்விகளால் துளைத்தல்
10.  
சொல் சமிஞ்ஞையால் விளையாடுதல்
11.  
அதிர்ச்சிகளைத் தருதல்
12.  
இடக்கரடக்கலானவற்றை வெளிப்படுத்துதல்
13.  
கனவு நிலையில் மொழிதல்
14.  
காலத்தை முன் பின்னாக இணைத்தல்
15.  
தன்னிலை தகர்த்தல்
16.  
பிரதிகளை மீட்டுருவாக்கம் செய்தல்
17. 
ஆழமான ஒற்றை கருத்தை மறுத்தல்
18.  
பன்முகமாய் இருத்தல்
19.  
அபத்தங்களைப் பிரசுரித்தல்
20.   
பகுத்தறிவற்ற மாயத்தன்மையை(Mystic) ஏற்படுத்தல்
21.   
பிரதிகள் தனக்குள்ளே சுழலுதல்
22.   
கலைத்துப் போடுதல்
23.   
உண்மையையும் புனைவையும் கலந்து மொழிதல்
24.   
அறிதலின் மீதான அறிதல்
25.   
கொண்டாட்டங்களை மறுத்தல்
26.   
முரண்படுத்துதல்
27.   
தொடர்ச்சியின்மையாக மொழிதல்
28.   
மிகை நடப்பியத்தை புகுத்தல்
29.   
முடிவின்றி விட்டுவிடுதல்
30.   
ஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகளைத் தருதல்
31.   
புதிய இலக்கிய வகைமைகளைக் கையாளுதல்
32.   
பலகுரல் எடுத்துரைப்பைத் (polypony) தருதல்
33.   
எல்லாவற்றையும் கேலி செய்தல்
34.   
பிரதியைக் கட்டுடைத்தல்
35.   
சந்தர்ப்ப வசங்களைக் கையாளுதல்
36.   
வாசகனை படைப்பாளியாக்குதல்
37.   
பிரதிக்குள்ளே முரண்படுதல்
38.  
இருண்மையாக மொழிதல்
 -
என பின்நவீனத்துவத்தின் உட்கூறுகள் இலக்கியத்தைப் பொறுத்தவரை பலவாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 1990 -களில் பின்நவீனத்துவம் தமிழுக்கு அறிமுகமானது. காப்ரியல், லூயி போர்கே, இடாலோ, டொனால்ட் பார்தல்மே போன்ற அயல்நாட்டு பின்நவீன எழுத்தாளர்களின் கதைகள் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டு பின்நவீனத்துவக் கதைகள் தமிழுக்கு பரிச்சயமாயின. அந்த பாதிப்பில் தமிழிலும் அதுபோல் எழுத தமிழ் எழுத்தாளர்கள் முயற்சி செய்தனர். சில்வியா, தி. கண்ணன், பிரேம் - ரமேஷ், சாருநிவேதிதா, போன்றோர் மையம் நீக்கிய, நேரற்ற எழுத்தில் பின்நவீன சிறுகதைகளை எழுதி ஒரு தொடக்கத்தை நிகழ்த்தினார்கள். அந்தத் தொடக்கம் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், எம்.ஜி.சுரேஷ், கோணங்கி, யுவன் சந்திரசேகர் போன்றோரால் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேலும், தமிழ்ச்சூழலில் 1980 -களில் இருந்து பேசப்பட்டு வரும் பெண்ணியம், தலித்தியம் சார்ந்த பல படைப்புகள், இங்கு அதுவரை நிலவி வந்த ஆதிக்க கதையாடல்களை, இலக்கிய கட்டமைப்புகளை உடைத்துக்கொண்டு வெளிவந்துள்ளன. அவைகளும் பின்நவீனத்துவ வாசிப்புக்கு உட்படுவனவே தவிர பின்நவீனத்துவத்தை பேசியும், எழுதியும், திறனாய்வு செய்தும் அதனை வளர்ச்சி நிலைக்கு எடுத்து வந்தவர்களில் முக்கியமானவர்கள். தமிழவன், எம்.டி.முத்துக்குமாரசாமி, நாகர்ஜீனன், பெ.வேல்சாமி, .மார்க்ஸ், எஸ்.ரவிக்குமார்.பூர்ணசந்திரன், தி.சு.நடராசன், .ராமசாமி, காரத்திகேசு சிவம்தம்பி, .முத்துமோகன்,எச்.முஜீப் ரஹ்மான் ராஜ்கௌதமன், பா.செல்வகுமார், பிரம்மராஜன், கோவை.ஞானி, .பஞ்சாங்கம் போன்றவர்கள் ஆவர். பிரேம்-ரமேஷ் அவர்கள் பின்நவீனத்துவம் குறித்தான நூல்களை படைத்தும், உரையாடல்களைப் பெருக்கியும் வருவதுடன், அதிகமான பின்நவீன கலைப் பிரதிகளையும் எழுதி வருகின்றனர்.தமிழில் தேவதைகளின் சொந்தக்குழந்தை முழுமையான ஒரு பின்நவீன சிறுகதை தொகுப்பாகும்.
பின்நவீனத்துக்கு பிந்தைய சூழலில் மறுநவீனத்துவம் செல்வாக்கு செலுத்திவருகிறது. எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாவல்கள் தற்போது சமூகத்தின் அனைத்துத் தரப்பினருடைய வாழ்க்கையையும் எழுதுகிறது. பொது சமூகத்தின் பார்வைக்கு வராத பல சிறு சிறு பிரிவு மக்களுடைய வாழ்க்கையும் நாவலகிறது என்று பெருமை கொள்ளும் அதே நேரத்தில் சாதி, மத, இன மோதல்கள் அதிகரித்து வரும் வேளையில் புதிய கொருளாதார கொள்கையால் ஏற்பட்ட மாற்றம் உலகமயமாக்கல், நவீன மயமாக்கல், பெரும் வளர்ச்சி பெற்றுவிட்ட நிலையில், இது குறித்தெல்லாம் பேசாமல் தங்களுடைய இளமைக்கால வாழ்க்கைஅதாவது கால் நூற்றாண்டு, அரை நூற்றாண்டுக்கு முந்தைய வாழ்க்கையையே தமிழ் நாவல்கள் அதிகம் பேசுவது விந்தையானது. இது தமிழ் நாவல்கள் நவீனமான இன்றைய வாழ்க்கைக்குள் இன்னும் வரவில்லை என்பதும், அரசியல், வரலாறு, பண்பாடு ஆகியவற்றை இணைத்துப் பார்த்து நாவல் எழுதவும் நமக்கு இன்னும் கைகூடவில்லை என்பதும் புலனாகிறது. மரபுக்கும் நவீனத்துவத்திற்குமான உரையாடலை நமது அண்மைக்கால நாவல்கள் தொடங்கவே இல்லை. வரலாற்றை, மரபை மறுகதையாக்கம் செய்த நாவல்கள் என்று ஒன்றையும் குறிப்பிடமுடியாது. ஆங்கில மொழிப்படிப்பால் தமிழ் நாவல்கள் வடிவரீதியாக, மொழி ரீதியாக கதை சொல்லும் பாங்கில் எந்த மாற்றத்தையும் பெற்றுவிடவில்லை. எப்போதும் போல மொன்னையாகவே இருக்கிறது. யதார்த்தத்தை உள்ளது உள்ளபடியே எழுத்தில் கொண்டுவருவது கலை அல்ல. யதார்த்தம் நம் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பாதிப்பை எழுதுவதுதான்வெளிப்படுவதுதான் கலை. மௌனத்தை கற்றுக்கொண்டவனே கலைஞன். ‘இயற்கையை அதிகம் நகல் செய்யாதே, கலை ஒரு கற்பனை, இயற்கையின் முன் நின்று கனவு நிலையாகி, அதை கொண்டுவர வேண்டும், கடைசியில் கையில் கிடைக்கப் போகும் படைப்பு முக்கியமல்ல, படைப்பதே முக்கியம் என்ற காகின் (18-ம் நாற்றாண்டின் பிரான்ஸ் ஓவியர்) வாக்கியத்தை தமிழ் நாவலாசிரியர்கள் அறிவது நல்லது.
தமிழில் மைக்ரோ நாவல் என்ற ஒரு ஜெனர்/வகைமை உருவாகியுள்ளது.இந்த வகையில் முக்கிய நாவலாக புது எழுத்து வெளியிட்ட மகாகிரந்தம் மிக முக்கியமானது.குறுநாவலுக்கும் மைக்ரோ நாவலுக்கும் வித்தியாசம் உள்ளது.இதை மகாகிரந்தம் நாவலை படிக்கும் போது தெரிந்து கொள்ளலாம்.No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...