Friday, March 04, 2016

சூபியிசம் என்றால் என்ன?

அல்லாஹ்வின்வுஜூத்ஒன்றே ஒன்றுதான். அது இரண்டுமல்ல. பலதுமல்ல. அதில் எண்ணிக்கைக்கு இடமே இல்லை. அதன் உடைகள் பலதரப்பட்டவையாகும். அவைதான் வேறென்ற திரை போட்டுக் கொண்டவர்களுக்கு அவனைக் காட்டாமலும், அவ்லியாஉகளுக்கு அவனைக் காட்டியும் நிற்கின்றன.

பலது என்பதும், எண்ணிக்கை என்பதும்மள்ஹர்எனப்படும்  பாத்திரங்களைக் கவனிப்பது கொண்டேயன்றி அவற்றில் வெளியாகும் அந்தவுஜூதைக் கவனிப்பது கொண்டல்ல.

முகம் ஒன்றே ஒன்றுதான். ஆனால் நீ அதற்கு எதிரில் பல கண்ணாடிகளை வைத்தால் எதார்த்தத்தில் உள்ள ஒரு முகம் பல முகங்களாக தோற்றும். இதனால் முகம் பலதென்று கொள்ள முடியாது.

சிருட்டிபிரபஞ்சம்அந்தவஜூத்வெளியாகும் உடையாகும். அதுசிருட்டிஅவனின் அறிவில்அஃயான் தாபிதாவாக இருந்து பின்னர்அஃயான் காரிஜாவாக ஆயிற்று.

மர்தபதுல் வாஹிதிய்யாஎன்ற இடத்தில் அந்தவுஜூத்உள்ளமை அறிவு ரீதியான குறிப்புக்களாயிருந்தவைதான் சர்வ பிரபஞ்சங்களாகவும் வெளியாகித் தோற்றுகின்றன. ஆகையால் சகல சிருட்டிகளுக்கும் அந்த வுஜூத்ஒன்றே எதார்த்தமானதாகும்.  
நூல்அத்துஹ்பதுல் முர்ஸலா
ஆசிரியர்முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ்
முகம் ஒன்றே ஒன்றுதான். ஆயினும் நீ முகத்துக்கு எதிராக கண்ணாடிகளை அதிகமாக்கினால் அவற்றின் எண்ணிக்கைப்படி முகம் அதிகமாகி விடும்.

ஸூபிஸ ஞானிகள் மேற்கண்ட இப்பாடலை தமது ஞான நூல்களில் குறிப்பிடத் தவறுவதில்லை.

இதன் சுருக்கம் என்ன வெனில் ஒரு பொருளுக்கு எதிராக பல கண்ணாடிகளை வைத்தால் அந்த ஒரே பொருள் கண்ணாடிகளின் எண்ணிக்கையின் படி பலதாகத் தெரியும் என்பதாகும்.

இந்த விடயம் அனைவரும் அறிந்த ஒன்றாயிருக்கும் போது இதை ஏன் சொல்ல வேண்டுமென்று ஒருவர் கேட்கலாம்.

இக்கவிதை இறையியலைச் சுட்டிக்காட்டும் கவிதையே தவிரஇறை தத்துவத்தை உணர்த்தும் பாடலே தவிர தத்துவமற்ற சாதாரண பாடல் அல்ல.  

முகம்என்பது அல்லாஹ்வின்உள்ளமையைகுறிக்கும் ஒரு சொல்லாகும். திருக்குர்ஆனிலும் இச் சொல் இதே பொருளுக்கு பயன் படுத்தப்பட்டுள்ளதை இறையியல் கற்றவர்கள் நன்கறிவர்.

கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்குரியவை. (ஒளிர்ந்த பிரதேசங்களும், இருண்ட பிரதேசங்களும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை) நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் உண்டுஉள்ளமை உண்டு -. (அல்லாஹ் உள்ளான்)
திருக்குர்ஆன்

மேற்கண்ட திருவசனத்தில் வந்துள்ளவஜ்ஹ்என்ற சொல்லுக்குமுகம்என்று பொருள் கொள்ளாமல் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவரான இப்னு அப்பாஸ்றழியல்லாஹு அன்ஹுஅவர்கள் தங்களின் திருக்குர்ஆன் விரிவுரை நூலில் கூறியுள்ளதாத்அல்லதுவுஜூத்என்ற பொருள் கொண்டு விளங்க வேண்டும்.

அதாவதுவஜ்ஹ்என்ற சொல்லுக்குமுகம்என்று பொருள் கொள்ளாமல் அவனின்தாத்அல்லதுவுஜூத்என்று பொருள் கொண்டு நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்தான் உள்ளான் என்று விளங்க வேண்டும். இவ்வாறுதான்ஈமான்விசுவாசம் கொள்ளவும் வேண்டும்.

எங்கும் நிறைந்த ஏகன் என்று விளங்கிக் கொள்ளாமல் எங்குமாயுமுள்ள ஏகன் என்று விளங்கி விசுவாசம் கொள்ள வேண்டும்

வஹ்த்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று  அல்லாஹ் மாத்திமே இருக்கின்றான். படைப்புகள் என்பது சுயமான உள்மை அற்றது என்பதை​ மறுப்பவர்கள் இதை சிந்தித்துப்பாருங்கள்.

அல்லாஹ் தஆலாவின் தன்மைகள்திருநாமங்கள் அனைத்தும் பூர்வீகமானவை. புதிதாக உருவானவை அல்ல. அவனது தன்மைகளும் திருநாமங்களும் மாற்றமடைவதில்லை.. அவன் படைப்புகளை படைப்பதற்கு முன் எவ்வாறு இருந்தானோ அவ்வாறே படைப்புகளை படைத்த பின்னரும் எந்த மாற்றமுமின்றி இருக்கின்றான். என்பதுதான் சரியான நம்பிக்கை.
அவ்வாறாயின் அல்குர்ஆனில் அல்லாஹ் தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.

நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன் (அல்லாஹ்) இருக்கின்றான். (57-04)

என்று கூறுகின்றான்.

இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்புகளுடன் “உடன் இருத்தல்” எனும் தன்மை அல்லாஹ்வுக்கு புதிதாக ஏற்பட்ட ஒரு தன்மையாக இருக்க முடியாது. அது அல்லாஹ்வின் பூர்வீகமான தன்மையாகவே இருக்கவேண்டும். படைப்புகளை படைத்தபின் அவைகளுடன் அல்லாஹ் இருப்பது பற்றி பிரச்சினை இல்லை. படைப்புகளை படைக்க முன், படைப்புகளே இல்லாதபோது அவைகளுடன் அல்லாஹ் இருப்பது எவ்வாறு? என்பதை சிந்திய்யுங்கள்.

படைப்புகளை படைக்க முன் அவை அல்லாஹ்வின் தாத் எனும் உள்ளமையிலேயே இருந்தன. அப்போது அவற்றுக்கு தனியான தோற்றம் இருக்கவில்லை அந்தநேரத்தில் அவை அல்லாஹ்வுடனேயே இருந்தன. படைப்புகளைப் படைத்தபின் அவற்றுக்கு தனியான தோற்றம் உருவானது. ஆயினும் அவை அல்லாஹ்வை விட்டு பிரியவுமில்லை. அல்லாஹ் அவற்றை விட்டு  பிரியவுமில்லை. எப்போதும் “நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன் (அல்லாஹ்) இருக்கின்றான்”அவன் சகல சிருஷ்டிகளுக்கும் மிகச் சமீபமாக இருக்கின்றான். அவன் அடியானின் பிடரி நரம்பைவிட அவனுக்கு மிகச் சமீபமாக இருக்கின்றான்.
 
அல்லாஹ்தான்வுஜூத்ஆவான். உள்ளமை ஆவான். “வுஜூத்என்றால்உள்ளமைஎன்று பொருள் கொள்ள வேண்டும். உள்ளமை என்பது வேறு. உண்மை என்பது வேறு. இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.

உண்மை என்ற பொருளுக்குஸித்குன்அல்லதுஹக்குன்என்ற சொல்தான் பாவிக்கப்படும். “வுஜூத்என்ற சொல் பாவிக்கப்படுவதில்லை. உள்ளமை என்ற பொருளுக்குவுஜூத்என்ற சொல்தான் பாவிக்கப்படும்.

வுஜூத்என்ற சொல்லின் எதிர்ச் சொல் இல்லாமை என்ற பொருள் தருகின்றஅதம்என்ற சொல்லாகும். உண்மை என்ற பொருள் தருகின்றஸித்க்என்ற சொல் அல்ல.

வுஜூத்என்ற உள்ளமைக்கு உருவமோகட்டுப்பாடோ எதுவுமில்லை. இதுவேதன்ஸீஹ்என்று சொல்லப்படுகின்றது. இதைதன்ஸீஹ்உடைய நிலை என்றும், “மகாம்என்றும்ஸூபிமகான்கள் கூறுவார்கள்.
எனினும் குறித்தவுஜூத்உள்ளமை எப்பொருளாக, எந்த உருவத்தில், எந்தக் கட்டுப்பாட்டில் வெளியானாலும் வெளியாவதற்கு முன்னிருந்த நிலையில் இருந்து அது மாறுபடவில்லை. வெளியான பின்னும், வெளியாகு முன்னும், எப்போதும் அது இருந்தவாறே இருக்கிறது.

அல்லாஹ்வின்வுஜூத்உன்ற உள்ளமைக்குதன்ஸீஹ்அரூப, கட்டுப்பாடற்ற நிலை என்றும், “தஷ்பீஹ்ரூப, கட்டுப்பாடுள்ள நிலை என்றும் இரண்டு நிலைகள் உள்ளன. ஒருவன் உண்மை விசுவாசியாவதற்கு இவ்விரு நிலைகளையும் நம்ப வேண்டும். இன்று உலகில் வாழும் அனேக முஸ்லிம்கள் போல்தன்ஸீஹ்நிலையை மட்டும் நம்பினால்ஈமான்சரி வராது. இந்த விபரம் உலமாஉகளில் அதிகமானவர்களுக்குத் தெரியாமல் இருப்பது கவலைக்குரிய ஒன்றாகும். குறிப்பாகதரீகாவின் ஷெய்காககுருவாக இருப்பவருக்கும், “கலீபாஉகளாயிருக்கின்ற மௌலவீ மார்களும், “முகத்தம்ஆக இருப்பவர்களுக்கும் தெரியாமல் இருப்பது இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டிய ஒன்றாகும்.

அது தொடர்பாக ஞானத்தாரகை அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

தன்ஸீஹ்என்பதை மட்டும் நீ சொன்னால்நம்பினால்அதில் மட்டுமே அந்தவுஜூதைகட்டுப்படுத்தினவனாவாய். அதே போல்தஸ்பீஹ்என்பதை மட்டும் நீ சொன்னால்நம்பினால்அதில் மட்டுமே அந்தவுஜூதைகட்டுப்படுத்தினவனாவாய்.


நீ இரண்டு நிலைகளையும் சொன்னால்இரண்டு நிலைகளையும் நம்பினால்நீ நேர்மையானவனாகி விட்டாய். அதோடு இறையியலில் தலைவனாகவும் ஆகிவிட்டாய்.

அல்லாஹ்வின்தன்ஸீஹ்” “தஸ்பீஹ்என்ற இரு நிலைகளையும் நம்பினவன்தான் உண்மையானதவ்ஹீத்வாதியாவான். அதே நேரம் அல்லாஹ்வின் வுஜூத் என்ற உள்ளமையைதன்ஸீஹ்அரூப நிலையிலோ, “தஷ்பீஹ்என்ற ரூப நிலையிலோ கட்டுப்படுத்துவதும் கூடாது. இரண்டையும் ஏற்றுக் கொள்வதுடன் இரண்டுக்கும் அப்பால் உள்ளதன்ஸீஹ் மஹ்ழ்தெளிவானசுத்தமான தன்ஸீஹ் என்பதையும் நம்ப வேண்டும்.

மேற்கண்ட இந்த விபரம் முஹம்மத் இப்னு பள்லுல்லாஹ் றஹ்மதுல்லாஹ் அவர்களின்அத்துஹ்பதுல் முர்ஸலாஎன்ற நூலில் இருந்து பெறப்பட்டதாகும்.

துஹ்பதுல் முர்ஸலாஆசிரியர் முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் றஹ்மதுல்லாஹ் அவர்கள் இன்னும் சொல்கிறார்கள்.

மவ்ஜூதாத்என்ற சொல் சிருட்டிகள் அனைத்தையும் உள்வாங்கிய ஒரு சொல்லாகும். இவையாவும்வுஜூத்உள்ளமையின் புறத்தால் அல்லாஹ் தானானவைகளேயாகும். (அவனுக்கு வேறானவை அல்ல) எனினும் தனித்தனியாகக் குறிப்பிடும் போது அல்லாஹ் அல்லாதது சிருட்டி எனப்படும். அவைகள் கூட அவனின் வெளிப்படையாகும். “ஙெய்ரிய்யத்வேறு என்பது கூட வெளிப்படையான கவனிப்பைக் கொண்டதேயாகும். எனினும் எதார்த்தத்தில் சிருட்டிகள் யாவும் அல்லாஹ்தானானவையாகும்.
குமிழி, அலை, பனிக்கட்டி (ஐஸ்), என்பன போன்று. இவை மூன்றும் எதார்த்தத்தில் நீரையன்றி அதற்கு வேறானதல்ல. எனினும் தனித்தனி குறிப்பை கவனித்து நீருக்கு வேறானவைதான். “ஸறாப்கானல் நீர் போன்றுமாகும். கானல் நீர் எதார்த்தத்தில் ஆகாயம் தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல. எனினும் வெளிப்படைக்குறிப்பு என்ற வகையில் அது ஆகாயத்திற்கு வேறானதே. கானல் நீர் என்பது எதார்த்தத்தில் ஆகாயத்தின் வெளிப்பாடுதான்.

இதன் சுருக்கம் என்னவெனில் படைப்புகளும்பிரபஞ்சம் யாவும் – “வுஜூத்உடைய புறத்தால் அதாவது உள்ளமை என்ற அடிப்படையில்அல்லாஹ்தான். ஆயினும்தஅய்யுன்குறிப்பு என்ற வகையில் அது வேறானதேயாகும். வேறு என்பது கூட கணிப்பின் படியேதான். எதார்த்தம் என்னவெனில் பிரபஞ்சம் எல்லாம் அல்லாஹ்தான். குமுழி, அலை, ஐஸ் என்பன போன்று. இவையாவும் நீரேயன்றி வேறல்ல. இவ்வாறுதான் கானல் என்பதுமாகும்.

மேற்கண்ட கருத்தின்படி சிருட்டி என்று சொல்லப்படுகின்ற எதுவாயினும் அது அல்லாஹ்வின்வுஜூத்உள்ளமைக்கு வேறானதே இல்லை. அலை என்பது நீர்தானேயன்றி அதற்கு வேறானதல்ல. குமிழி என்பதும் இவ்வாறுதான். அது நீருக்கு வேறானதல்ல. ஐஸ்கட்டி என்பதும் இவ்வாறுதான். அது நீருக்கு வேறானதல்ல. “ஸறாப்எனும் கானல் நீரும் இவ்வாறுதான். அது ஆகாயத்திற்கு வேறானதல்ல.

சகல படைப்புகளுக்கும் மூலம்கருஎன்பது அல்லாஹ்வின்வுஜூத்என்ற உள்ளமைதான். வேறொன்றல்ல.

மோதிரதுக்கு தங்கம் மூலம் என்றால் மோதிரம் என்பது தங்கம் தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல. அலைக்கு நீர் மூலம் என்றால் அலை என்பது நீர் தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல. நூலுக்கு பஞ்சு மூலம் என்றால் நூல் என்பது பஞ்சு தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல.

இந்தவஹ்தத்துல் வுஜூத்ஞானம் பற்றிக் கூறிய தற்கலைவாழ் அற்புத வலிய்யுல்லாஹ் பீர் முஹம்மது றஹ்மதுல்லாஹ் அவர்கள் பாடியுள்ளார்கள்.  

மண்ணால ஆனதெல்லாம் மண் எடுத்த கோலமது
மண்ணையன்றி வேறுள்ளதோ யா ஹய்யு யாகையூமே!
பொன்னால ஆனதெல்லாம் பொன் எடுத்த கோலமது
பொன்னையன்றி வேறுள்ளதோ யா ஹய்யு யாகையூமே!
பஞ்சால ஆனதெல்லாம் பஞ்செடுத்த கோலமது
பஞ்சையன்றி வேறுள்ளதோ யா ஹய்யு யாகையூமே!

65 ஆயிரம் ஞானப் பாடல்களை மனு குலத்தின் நன்மை கருதிப் பாடிவிட்டுச் சென்ற ஞானக்கடல் பீரப்பா அவர்கள்வஹ்தத்துல் வுஜூத்” பேசியுள்ளார். “துஹ்பதுல் முர்ஸலாஎன்றவஹ்தத்துல் வுஜூத்ஞான நூலை எழுதிய முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் அவர்கள்வஹ்ததுல் வுஜூத்ஞானத்தைச் சரி கண்டு எழுதியுளார்.இவர்கள் போல் குறித்த ஞானத்தைஇறையியலைஉலகுக்கு அள்ளிக் கொட்டிய மகான்கள் அனைவரும் இதை உண்மை என்றே சொல்லுகின்றனர்.
 Mevlana_Wajd Ecstasy Sufism

No comments:

கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான பார்வை

கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான  பார்வை அர்ப்பணிப்புள்ள வன அதிகாரியான அஜய் மற்றும் அபர்ணா ஆகியோரின் திருமணத்துடன் திரைப்படம் தொடங்குக...