Thursday, November 23, 2000

சிறுகதை

தேவதைகளின் சொந்த குழந்தை


ஆஷிக்கின் முதாதையர்கள் பச்சை நிறத்தவர்கள் என்று பொpய மாமா சொல்ல கேட்டிருந்த போதிலும் தனக்கு பிறந்த மகன் பச்சை வர்ணத்துடன் இருப்பான் என்று அவன் கொஞ்சம் கூட நினைத்தானில்லை. மனைவி குழந்தைக்கு பாலு}ட்டுகின்ற போது அந்த வர்ணத்தை பார்த்ததும் அவனுக்கு ரொம்பவும் துக்கம் தான் வந்தது. இரண்டொரு வருடங்களுக்கு முன்பு வளைகுடா நாடொன்றில் அவன் பணிபுhpயும் அலுவலகத்தில் தற்செயலாக ஒரு பச்சை நிற மனிதனை சந்தித்திருக்கிறhன். அவனிடம் எதார்த்தமாக நிறத்துக்கான காரணத்தை கேட்ட போது எங்கள் குடும்பத்திலோ, முந்தைய தலைமுறைகளிலோ யாரும் என்னை போலில்லை என்றும் நானும், எனது இரண்டு மகன்களும் தான் பச்சை நிறத்தில் இருப்பதாகவும், இதனால் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாவதாகவும் இதற்கான சாpயான காரணம் தொpயவில்லை என்று கூறிச் சென்று விட்ட போதும், நெடுநேரம் அந்த பச்சை நிற மனிதனை பற்றியே ஆஷிக் யோசனை செய்து கொண்டிருந்தான். அதன் பின்பு இப்போது தனது மகன் வடிவில் பச்சைநிற மனிதனை பார்க்க நேர்ந்திருக்கிறது. டெலிபோனில் செய்தியறிந்து நேரடியாக வீட்டுக்கு வந்த பொpய மாமா ரொம்பவும் உற்சாக மிகுதியால் பரவசப்பட்டு போனார். “மோனே... நமது குலம் தளைத்திருக்கிறது” என்று ஆனந்த பட்டுக் கொண்டார். ஆஷிக் பொpயமாமாவிடம் மூதாதையர் பற்றி விசாhpக்கின்ற போது நு}ற்றhண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முப்பாட்டன் ஒருவருக்கு மாந்திhPகத்தில் அதிக விஷய ஞானம் இருந்ததின் காரணமாக ஜpன்னை வசப்படுத்தியருக்கிறhர். பல வருடங்களாக நடந்த முயற்சியின் பயனாக ஒரு பெண்ஜpன் அவருக்கு வசப்பட்டது. ஒரு நாள் தன் வசப்படுத்திய பெண்ஜpன்னை ஜpன் உருவிலேயே அவர் காண ரொம்பவும் மகிழ்ச்சியுற்றவர் அந்த பெண்ஜpன்னோடு ரொம்ப நேரம் பழகி உறவாடி விடவே, பதினேழு தினங்கள் மூர்ச்சையற்று விழுந்து போனார். அதன் பிறகு நீண்ட காலத்திற்கு பின் அவருக்கு பிறந்த மகனிலிருந்து தான் பச்சை நிறத்தவர்கள் தோன்ற ஆரம்பிக்கலானார்கள். முதலில் ரொம்பவும் கதிகலங்கி போயிருந்த அவர் தனது புத்தி சாதுர்யத்தால் தனது குலமே உயர்ந்த குலம் என்று பறைசாற்ற ஆரம்பித்தார். அதன் பின்னர் அந்த பச்சை நிற குலமே மனித இனத்தில் உயர்ந்த இனமாக கருதப்படுகிறது என்று மரபியல், பாpணாம, உயிhpயல் விஞ்ஞானிகள் ஒரு மாநாட்டில் எழுபது வருடங்களுக்கு முன்பு உலகறிய செய்ததன் நிமித்தம் பச்சை நிற குலத்தின் மகிமை உலகெங்கும் பரவியது.
இடைக் காலத்தில் மற்ற நிறத்தவர்களின் வருகைக்கு பின் சமூக, பொருளாதார, பண்பாட்டு, அரசியல் மாற்றங்களுக்கு பிந்தைய காலகட்டத்தில் பச்சை நிறத்தவர்களின் மகிமைகளும், உன்னதங்களும் தகர ஆரம்பித்தன. ஏழெட்டு தலைமுறைக்கு முன் பிறந்த ஒரு பெண்ணை பாரசீகன் ஒருவன் கடத்திச் சென்று போய்விட்டதாகவும், அதன் பின்பு பெண்களை ரொம்பவும் பாதுகாப்பாக முக்காடிட்டு, கண்கள் மாத்திரம் வெளியே தொpயும் படி பார்த்துக் கொள்வார்கள் என்று செவிவழி கதைகள் தொpவிக்கின்றன. இந்த செய்திகளையெல்லாம் சொல்லிவிட்டு, “மோனே அந்த காலம் போலில்லை இந்த காலம். எனவே எச்சாpக்கையுடன் இருக்குமாறு” ரொம்பவும் கேட்டுக் கொண்டு போய்விட்டார் பொpய மாமா, இரண்டொரு தினத்துக்குள் திரும்ப வந்த பொpய மாமா ஆஷிக்கிடம் ஐந்தாறு iடாpகளை கொடுத்து, நமது குலத்தைப் பற்றிய என்னுடைய நீண்டநாள் ஆய்வின் குறிப்புகளாகும். இவை இதை படித்தால் நமது குலபெருமையை நீயே புhpந்து கொள்வாய் என்று தந்துவிட்டு திரும்பி போய்விட்டார். அன்றைய தினத்திலிருந்து அவன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த iடாpகளை புரட்டினான்.
பச்சைநிற மனிதர்கள் என்பவர்கள் முதலில் ஜpன்னின் வாhpசுகள் என்பதை புhpந்துக் கொண்டார். இறைவனை புகழ்ந்து துதித்துக் கொண்டிருக்கும் ஆண், பெண் ஜpன்களும், சாத்தானின் வடிவங்களான ஜpன்களும் என ஜpன்கள் பலவாக இருந்தன. ஒரு முறை சாத்தானிய ஜpன்கள் தமது தலைவனான ஜpன்னிடம் சென்று பூமியில் அலைந்து திhpந்து கொள்ளவும், மனிதர்களோடு பழகவும் ஆன வேண்டுகோளை விண்ணப்பித்த போது, சாத்தானிய ஜpன்களின் தலைவன் அனுமதியளிக்கவே, பெருங்கூட்டமாக ஜpன்கள் பூமிக்கு தரையிறங்கின. ஆதாம், ஏவாளுக்கு பிந்தைய அடுத்த தலைமுறையில் ஒன்பதாம் குலப்பிhpவில் உள்ள ஆதிமனிதர்கள் முதலில் ஜpன்களையே கடவுளாக வணங்க தலைப்பட்டனர். அது முதற்கொண்டு ஜpன்கள் மனிதர்களுக்கு பல்வேறு விதமாக பாpசயமாகவும், உதவிகரமாகவும் இருந்தது. ஆதி இனக்குழுக்கள் பலவும் ஜpன்களையே வணங்கின. பின்னர் இறைவனின் அவசர கட்டளையின் நிமித்தம் இறைவனின் அதிகாரம் கோலோட்ச ஆரம்பித்தது. பின்னர் உலகெங்கும் ஜpன்கள் மனிதர்களால் பல்வேறு கால கட்டங்களில் வசப்படுத்தப்பட்டு சம்பாத்யம் தேடிக் கொண்டனர். இப்ராஹிம் அலைஹிவஸ்ஸலம் கால கட்டத்தில் அரபு தேசமொன்றில் பருவமங்கை ஒருவளை காதல் மயக்கம் கொண்டு ஆண் மனித உருவில் வந்து, இவளை தனதாக்கிக் கொண்டு காம இச்சையை முடித்துவிட்டு போய்விட்டது. அவளுக்கு ஜெனித்த குழந்தை தான் முதல் பச்சைமனிதனாகும். அதிலிருந்து உலகின் பலபாகங்களிலும் பச்சை மனிதர்கள் வாழ்ந்து கொண்டு தானிருக்கிறhர்கள். பச்சை மனிதர்களை பற்றிக் குறிப்பிடும் போது, பச்சை மனிதர்கள் சாதாரண மனித தோற்றம் உடையவராக இருந்த போதும், அவர்களின் குணாம்சங்கள் சற்றே வேறுபாடு உடையதாகவேயிருந்தது. அடிமை படுத்துவது என்பது இனங்களுக்கு பிடித்த விஷயமாகும். இதனால் பல்வேறு நாடுகளில் யுத்தங்கள் கூட நிகழ்ந்திருக்கின்றன. இரவானதும் இவர்களது கண்கள் பூனையின் கண்களை போல பளபளபாக காட்சியளிக்கும். மேலும் பகலும், இரவும் இவர்களுக்கு ஒன்றுதான். பச்சைநிற மனிதர்களில் அநேகம் பேர் கூர்ந்த மதியூகிகளாகவும், தந்திரவாதிகளாகவும், விவேகிகளாகவும், வீரர்களாகவும், அசாத்திய கலைகளை தொpந்தவர்களாகவும் இருந்தனர். இவர்கள் கோபாவேசபடுகின்றபோது கண்டிப்பாக பெருந்சேதத்தையோ, உயிர் அழிப்பையோ மேற்கொள்வர் என்று பல்வேறு குறிப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருப்பதை போல இருந்தது. அரேபியா, பாரசீகம், இந்தியா, எகிப்து, சீனா, கிரேக்கம் போன்ற நாடுகளில் பலதலைமுறைகளாக பச்சைமனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர். கிரேக்கத்திலும், பாரசீகத்திலும் மிக முக்கிய ஆட்சியாளர்களாக கூட இருந்திருக்கின்றனர். இவர்கள் ரொம்பவும் பேராபத்துகளில் சிக்கி தவிக்கின்ற போது ஜpன்கனே நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவிகள் பல செய்வதாகவும் பல்வேறு வாய்மொழிக் கதைகள் காணப்படுகின்றன. உண்மையில் இவர்களது வரலாறுகள், வரலாறுகளாகவும், கதைகளாகவும் கொண்டிருக்கின்றன. பின்னர் வருகின்ற குறிப்புகள் பலவும் ஆஷிக் மூதாihயர்களை பற்றியதாகவேயிருந்தது. மொகலாயர்களின் காலகட்;டத்தில் நப்தாலிஷhஹன்ஷh ஆளுகைக்கு உட்பட்டிருந்த தாக்காண பீடபூமியில் ஒரு பழைய தலைமுறையை சார்ந்த பச்சை மனிதன் வாழ்ந்து வந்தான். ஆசிக்கின் மூதாதையாpல் அதி பராக்கிரமசாலியான அவன் கூடு விட்டு கூடு பாயும் கலையில் அதிக தேர்ச்சியுடையவன். இந்த கலையை கிட்டதட்ட இருபது வருட காலமாக மரபு சார்ந்து பழகி கொண்டபோதும், ஆசிக் தான் ரொம்பவும் திறமைசாலியாக இருந்தார். அந்த பராக்கிரமசாலியின் பெயரும் ஆசிக்தான். பொதுவாக கூடு விட்டு கூடு பாயும் கலையென்பது, மனிதன் ஒருவன் தனது உள்ளொளியை இறந்த சவங்கள் மீது செலுத்தும் பட்சத்தில் இறந்து போன சவங்கள் உயிர் பெற்றெழும். இதுவரை உண்மையான அந்த கலையின் உடம்பு சவம் போன்று இருப்பதோடல்லாமல் நினைத்த கணத்திலேயே மற்ற உடல்களில் இருந்து செத்த உடம்புக்கு வந்து விட முடியும்.
ஆசிக் இந்த கலையை வெகு திறமையோடு கற்றதோடு அல்லாமல் தனது மன வலிமையின் காரணமாக இன்னொரு உடம்பை கூட தன் சொந்த கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும், தான் இயங்கவும் உயிருடனோ, சவமாகவோ உடல்களை பயன்படுத்தி கொள்வதில் அசகாய தேர்ச்சி பெற்றிருந்தான். பச்சை மனிதர்களின் செல்வாக்கு தீடீரென்று உயர்வதும், தீடீரென்று தாழ்வதுமான காலகட்டத்தில் வீழ்ச்சியின் தருணத்தில் தான் ஆசிக் பச்சைமனிதன் தோன்றியிருந்தார். அவர் பச்சை மனிதனாக பிறந்த காரணத்துக்காகவே சமூகமும், மற்றவர்களும் வெறுக்கபட கூடிய Nழ்நிலையில் வாழ்ந்தான். பெரும் சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் தனது மனோவலிமையாலும், பயிற்ச்சிகளாலும் தக்காண பிரதேசத்தின் கௌரவ மந்திhpயாக நியமிக்கப்படுவதற்கு முன் வரை அவர் பட்ட வேதனைகள் கொஞ்சநஞ்சமல்ல. நாள்தோறும் விதவிதமான விஷ பாpட்சைகளும், பேராபத்துகள் நிறைந்த வழிகளுமே வாழ்வில் குறுக்கிட்டு கொண்டிருந்தது. வாழ்நாளில் தான் சாதிக்க வேண்டியவை நிறைய இருப்பதாக அவிப்பிராயபட்டுக் கொண்டே அவர் கிட்டதட்ட பதினான்கு மொழிகளையும், வெற்றி, நல்ல ஆட்சி, ஆளுமை என்று ஐந்தாறு பொpய நு}ல்களுக்கும் சொந்த காரராக திகழ்ந்தார். அதில் வெற்றி என்கிற நு}ல் உலக வரலாற்றில் மிகச்சிறந்த ராஜதந்திர வியூகால்களுக்கான வரையறைகளின் தோற்று வாய் என்பதை கோடிட்டுக் காட்டியது. நல்ல ஆட்சியாளராக இருப்பதும், எப்போதும் வெற்றிகளை பெறுவதும், ஆளுமையை சாpசெய்து கொள்வதும், மனோதிடத்தையும், பயிற்சிகளையும் சாpவர செய்வதும் அவரது தலைசிறந்த சிந்தனைகளாக பின்னாளில் ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பிறரை வசியப்படுத்துவதில் தான் மாபெரும் வெற்றி அடங்கியுள்ளது என்ற பிரகடனத்தை வெளியிட்ட போது “வசியகலை” குறித்த அறிவை மக்கள் அவர் வாயிலாக பெரும் அளவில் பெற்றிருந்தார் என்பதே உண்மையாகும். ஆரம்ப காலகட்டத்தில் ஜpன்னின் துணையுடன் வசியப்படுத்தும் கலையை தொடங்கினார். பின்னர் கடின உழைப்பாலும், அயராத பயிற்ச்சியாலும் தானிருக்கிற இடத்திலிருந்து மூன்றே முக்கால் சதம் வரையிலான மக்களை வசியபடுத்தும் மாபெரும் வலிமையை பெற்றிருந்தார். மூன்றே முக்கால் காதம் கழித்து பதினான்கு முறை மூன்றே முக்கால் காதம் வரை பதினான்கு ஆலமரத்தின் விழுதுகள் மூலம் வசியம் மேற்க்கொண்டிருந்தார். அவர் இருக்கின்ற பகுதியை சுற்றி கற்பூர மணம் வீசுகிறது என்று அவரது சக தோழர்களும், மனைவியும் பொது அவிப்பிராயம் கொண்டிருந்ததை “ஆளுமை” நு}லில் ஒரு அத்தியாயத்தில் வசியகலைக்கு தேவை மணம் என்கிற பகுதி தௌpவுபடுத்துகிறது. அவர் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னிலிருந்து தலை சுற்றிய ஒளிவட்டம் இருந்ததை பார்த்ததாக அவரது மகன்களும், மகள்களும், நண்பர்களும் சொன்ன நம்பகமான தகவல்கள் இருக்கிறது.
பல்வேறு கலைகளை பல்வேறு தேசங்களுக்கு அலைந்து திhpந்து கற்க வாழ்நாளில் பெரும் பகுதியை செலவிட்டதாக சில குறிப்புகள் உறுதிபடுத்துகின்றன. எனினும் “மருத்துவம்” குறித்த அவரது சிந்தனைகள் தான் பெரும் சர்ச்சையை கிளப்பின. கிட்டத்தட்ட பல நு}ற்றhண்டுகளாக இந்த சார்ச்சை நீடித்ததாக அறிஞர்கள் தொpவிக்கிறhர்கள். வசியகலைக்கும், கூடுவிட்டு கூடுபாயும் கலைக்கும் பெரும் சவாலாக இருப்பது மருத்துவமே. பொதுவாக நோய்வாய்ப்பட்டவர்களையே வசிய கலைக்கும், கூடு விட்டு கூடு பாயும் கலைக்கும் அவர் தேர்வு செய்து கொண்டார். மருத்துவத்தின் மூலமாக நோயை குணப்படுத்த முடிகின்ற காரணத்தினால் ஆரம்பம் முதலே மருத்துவத்தை அவர் வெறுத்தே வந்திருந்தார். மருத்துவத்தில் பச்சிலை வைத்தியமும், தைலம், மூலிகை போன்றவைகளும் மனித மனத்தின் வலிமையை ஒன்றிணைப்பு செய்கிறது. உடலாலும், மனதாலும் ஒன்றிணைப்பு செய்யப்படுவது என்பது சுத்த பொய் என்று வேண்டுமென்றே அவதூறhன பிரச்சாரத்தை மேற்கொண்டார். ஆயர்வேத, யூனானி, சித்தா, அறுவை மருத்துவங்களை அவர் கேலி செய்தார். மருத்துவம் வினோத கலைகளுக்கு எதிரானது என்று ஒரு சமயம் அறிக்கை விட்டார். வினோத கலையின்றி மனிதனால் வாழ முடியாது. எனவே மருத்துவத்தை அழிக்க வேண்டும் என்று கௌரவ மந்திhpயாக இருக்கும் போது அவர் சொன்ன வார்த்தைகள் மொகலாய மன்னாpன் காதுகளுக்கு எட்டவே ஐந்தாவது வருடம், ஐந்தாவது மாதம், ஐந்தாவது நாள் அவருக்கு வழங்கப்பட்ட “கௌரவ மந்திhp” அந்தஸ்து பாதிக்கப்பட்டது. அது முதல் கொண்டு பேரரசனுக்கு எதிராக ரகசியமான யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரது வாழ்வில் எழுபத்து ஏழு வயதுக்கு மேல் சோதனை காலம் நிலவத் தொடங்கியது. பேரரசன் ஆஷிக்கை ரகசிய சதியாலோசனைக்கு துணை நின்றதாகவும் ராஜ துரோக வேலையில் ஈடுப்பட்டதாகவும் கூறி பத்து வருடம் கடுங்காவல் தண்டனை விதித்தார். ஆனால் கூடுவிட்டு கூடு பாயும் கலையை பயன்படுத்தி சாpயாக பதினொரு மாதத்தில் மஞ்சள் நிற உடம்புக்கு தாவவே சில மாதங்களுக்குள்ளே கடுங்காய்ச்சல் ஏற்பட்டு மரணம் அடைந்தார் என்று குறிப்புகள் கூறுகின்றன. ஆசிக் பச்சை மனிதன் கூடு விட்டு கூடுபாயும் தன்னிகரற்ற கலைக்கு புதிய அளவுகோல்களை நிர்மாணித்தார் என்ற புகழ் கிட்டுவதற்கு முன் தனது இருபத்தோராம் வயதில் புராதன முறைப்படியான கூடு விட்டு கூடுபாயும் முறையில் தர்ஹhவில் சிறிய இடத்தில் மரணமடைந்த ஒரு பெண் புறhவின் உடலில் பயணிக்க, காட்டில் வைத்து இந்த முயற்சி மேற்கொண்டதன் காரணமாக சவம் போன்று கிடந்த ப்சைநிற உடம்பை வல்லு}றுக்கள் காயப்படுத்த வலது கண்ணை இழந்திருந்தார் என்று நம்பகமான தகவல் என்று சொல்லப்படும் குறிப்பு இருந்தாலும், பின்னர் தன் வாழ்நாள் முழுவதும் ஒன்றை கண்ணோடு தான் வாழ்ந்து மாpத்தாரா என்பது இன்னமும் ஐயத்திற்கிடமான விஷயமாகவே இருக்கிறது. பச்சை நிற மனிதனாக இருப்பதினால் ஆரம்ப காலத்தில் கூடுவிட்டு கூடுபாயும் பயிற்சி காலத்தில் மாபெரும் இன்னல்களை சந்தித்ததினால் பிற்பாடு உள்ளொளியை இரண்டாக பிhpந்து ஒரு ஒளியை தன்னுடம்பினும் மற்றதை அடுத்த உடம்பினுமாக வைத்துக் கொண்டு பல்வேறு காhpயங்களை செய்து முடித்திருக்கிறhர். ஒரு வயதான மாpத்து போன மருத்துவனின் உடம்பிலிருந்து கொண்டு வயித்தியம் பார்த்ததன் விளைவாக ஏற்பட்ட கடும் சோதனைகள் தான் மருத்துவத்தை குறித்த மோசமான முடிவுக்கு ஆசிக் வந்ததாக ஒரு தகவல் சொல்லுகிறது. பிற்காலத்தில் மாpக்காத ஜPவனிடங்களில் தனது கூடுவிட்டு கூடுபாயும் கலையில் இரண்டாவது கட்டத்தில் கூடு பாயும் விசித்திர விநோத பயிற்சி தான் அவரை பொறுத்தவரையில் புதிய வாழ்க்கை தடத்தை பெற்றுத் தந்தது என்று சொன்னால் மிகையொன்றுமில்லை. மனித, ஜPவ உயிர்களை ஆட்டுவிக்கும் தன்மையில் செய்து வந்த ஆசிக் பிற்பாடு பொpய அளவில் மனித ஜPவன்களை வசியப்படுத்துவதற்காக வசிய கலைக்கு மாறிய திருப்பு முனையும் வாழ்வில் நடந்திருக்கிறது.
வசியத்தில் கெட்டிக்காரனான ஆசிக் முதலில் வசியபடுத்தியது என்னமோ பெண்களை மட்டும் தான். ஆனால் நாளடைவில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், சிறியவர்கள் என்று எல்லா தரப்பினரையும் வசியப்படுத்துகின்ற ஆற்றலை அவர் பெற்றிருந்தார். வெறுமனே இரண்டு மூன்று மணி நேரமே ஆரம்பத்தில் ஒன்று இரண்டு பேரை வசியம் செய்த போதிலும் பின்னர் நாள் முழுவதும் என்று வார, மாத, வருட காலகட்டத்தில் நு}று, இருநு}றுபேர் என்று மூன்றே முக்கால் காதம் வரையிலான அனைவரையும் வசியப்படுத்தியிருந்தார் என்பது வசிய கலையில் இதற்கு முன்பு யாருமே நினைத்து பார்க்க முடியாத மாபெரும் சாகசமாக கருதப்படுகிறது. சில நேரங்களில் மருத்துவர்கள் வசிய மருந்து கொடுத்து வசியம் செய்யும் முறைகளை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கிய ஆசிக், மேலும் மேலும் மருத்துவத்தை முற்றுமாக மறுக்க ஆரம்பித்திருந்தார் என்பதே உண்மையாகும். ஒரு முறை கடல் கடந்து சென்று வியாபாரம் செய்யும் ஒரு பெரும் வைர வியாபாhpயை கடலில் அவன் சென்று கொண்டிருக்கும் போது இருந்த இடத்தில் இருந்து கொண்டு வசியம் மேற்கொண்டு தோல்வியை தழுவியதும், பின்னர் கூடு விட்டு கூடு பாயும் இரண்டாம் கலையில் வியாபாhpயை ஆதிக்கம் செய்து விலையுயர்ந்த வைர, வைடூhpய, தங்க ஆபரணங்களை கவர்ந்து பத்து தலைமுறைக்கு சொத்து வரும் அளவுக்கு சேமித்த சாகசமும் காண முடிகிறது. எனினும் பணத்தின் மீது அவருக்கு அதிக ஈடுபாடு இல்லை என்றும் புகழின் மீது தான் ஈடுபாடே காட்டி வந்ததாகவும் பல விதமான குறிப்புகள் தௌpவுபடுத்துகின்றன.
பொpய மாமா தந்த iடாpகள் அனைத்தையும் ஒருவாறhக படித்து முடித்த ஆசிக் பச்சை நிற மனிதன் குறித்த தாழ்வு மனப்பான்மையை முற்றிலுமாக விட்டொழித்தான். குழந்தை வளர்வது வரை ரகசியமாக வளக்கப்பட வேண்டும் என்று பெற்றேhருக்கும், உறவினர்க்கும், மனைவிக்கும் தொpயப்படுத்தினான். அதன் பின்னர் ஆசிக்கின் மனதில் தான் ஒரு உயர்ந்த இனத்தை சார்ந்தவன் என்றும், உடல் நிறத்தால் தான் வேறுபாடு கொண்ட போதிலும் அசகாயதன்மை உடையவர்களின் வாhpசுகளே என்று தீர்க்கமான முடிவுக்கு வந்தான். பிற்பாடு தனது முன்னோர்களில் மூன்றே தலை முறைக்கு முன்பு நிகழ்ந்த வர்ண கலப்பால் வெள்ளை நிற மனித குடும்பமாக மாறி இருப்பதை ஆய்ந்து அறிந்து கொண்டான். மூன்று தலைமுறைகளாக ஏற்பட்ட இழுக்கு அடுத்த தலைமுறையுடன் மாறும் என்றும் இதொரு ஜpன்னின் சாபம் என்றும் குடும்பத்தில் மூத்த கிழவியொருவி அடிக்கடிசொல்லி வருவது குறித்து அவனுக்கு எந்த ஞானமும் முன்பு இருக்க வில்லை. இப்போது எல்லாம் தௌpவாகிவிட்டது. மேலும் அவனது தந்தை வழி தூரத்து ஒரு உப்பா சொல்லும் போது பச்சை நிற மனித இனத்தின் மதோனத்தை உலகம் மீண்டும் ஒருமுறை காண்பதற்கான சந்தர்ப்பம் தொடங்க இன்னும் சில நாட்களே காத்திருக்க வேண்டும் என்று அதிர்ச்சி கலந்த செய்தியை சொன்னபோது, அவன் அது பற்றி கேட்டப்போது பொறுத்திருந்து பார்த்துக் கொள் என்று மாத்திரம் அந்த உப்பா சொன்னார். உப்பா சொல்லி சுமார் நாற்பத்தியொரு நாள் கழிந்ததும், கறுப்பு, மஞ்சள் நிற இனக் கூட்டத்தினாpன் கருத்து மோதல் பயங்கரமான வன்முறையாக வெடித்தது.
வன்முறை வீதிக்கு வீதியென்று, வீட்டுக்கு வீடு என்று எல்லாயிடங்களிலும் பரவ ஆரம்பித்தது. போலீஸ், ராணுவம், சட்டம் என்று அரசு மிகுந்த கட்டுபாடுகள் விதித்த போதும் கூட அடிக்கடி வன்முறை நிகழ்ந்துக் கொண்டேயிருந்தது. நாடுமுழுவதும் ஏற்படும் கொந்தளிப்பு Nழ்நிலை உருவாக தொடங்கியதும், வன்முறையளர்களை கட்டுக் கொல்லும்படி அரசு உத்தரவிடவே நாடுமுழுவதுமாக சுமார் ஐந்தாறுக்கு மேற்பட்ட வன்முறை கலவரங்களால் இறந்திருக்க கூடும் என்று தேசிய நாளோடு ஒன்று புள்ளி விபரங்களை தந்தது. போலீஸ், ராணுவம வீடுவீடாக சோதனை செய்து எல்லா வன்முறையாளர்களையும் கைது செய்துக் கொண்டு போயினர். ஆசிக்கின் வீட்டுக்கு சற்று தொலைவில் தீடீரென்று கல்வீச்சு நிகழவே பெரும் கலவரம் நடந்தது. போலீசும், ராணுவமும், நான்கு பேரை சுட்டு கொன்று விட்டு வீடு வீடாக சோதனைச் செய்ய ஆரம்பித்தனர். ஆசிக்கின் மனைவி குழந்தையை குளிப்பாட்டி விட்டு, தலையை துவட்டி படுக்கை அறையில் தொட்டிலில் போட்டு விட்டு சமையலறையில் நுழையவே ஐந்தாறு ராணுவ வீரர்கள் தீடீரென வீட்டுக்குள் நுழைந்து ஒவ்வொரு அறையாக சோதனை செய்துவிட்டு குழந்தை கிடக்கும் அறையில் சோதனை செய்யும் போது ஒரு இராணுவ வீரர் தொட்டிலை பார்த்து அதிசயித்து நின்றhன். மற்றவர்களும் கூட அதிசயத்து நிற்கவே தொட்டிலில் கிடந்த குழந்தை பேசத் தொடங்கியது. “அற்பர்களே* அரசு, இராணுவம், போலீசு, சட்டம், கட்டுப்பாடு, சிறை தண்டனை என்று ஆட்சியதிகாரம் இயங்கும் போது பிரச்சனை வரத்தான் செய்யும். பல நு}ற்றhண்டுகளாக அடிமைபோல் வாழ்கின்ற கருப்பு நிற மனிதர்கள் இன்னும் அகதிகளை போல வாழவைத்து தான் ஆட்சியதிகாரம் செய்த மாபெரும் தவறு ஆம். மஞ்சள் நிற மனிதர்கள் அப்பாவிகள் என்று சொல்லுவரை நீதிமன்றங்கள் முதலில் நிறுத்தப்படும். அப்போது என்றேh தீவிர வாதம் ஒழிகிறதா இல்லையா என்று பாருங்கள். போங்கள், சாதாரண மனிதர்களை வேட்டையாடுவதை நிறத்துங்கள்” என்று சொல்லிவிட்டு அழத் தொடங்கியது. சிலைப்போல் உறைந்து போன இராணுவ வீரர்கள் உடனேயே அறையை விட்டகன்று வெளியே கிளம்பிப் போய்விட்டார்கள். வீட்டிலுள்ளவர்கள் என்ன நடக்கிறது என்று தொpயாமலேயே திகைத்து போய் நின்றனர். இது யாதொன்றும் அறியாமல் குழந்தைக்கு பால் உணவு வாங்கி கொண்டு திரும்பி வந்த ஆசிக் தன் வீட்டின் முன்பு பெருங்கூட்டம் நிற்பது கண்டு அதிசயிக்க மனைவி ஓடி வந்து சொன்னாள் “நம்ம கொழந்த தொட்டிலிலே பேசுனாங்க”
பச்சை மனிதர்களும் விநோதங்களும் என்கிற நு}லை ஜ;வாலையின் கண்களை நோக்கி எழுதிக் கொண்டிருந்ததார் தீர்க்க தாpசி நாஸ்ரடாமஸ் தனது அறையின் அமான்ஷ்யத்தின் மணம் கமழ, நு}ற்றhண்டுகள் நு}லை எழுதி முடித்து விட்ட திருப்தியில் பச்சை மனிதர்களை பார்க்காமலே, அவர்களைப் பற்றி தொpயாமலே அமான்ஷ்யத்தின் புதிர் வெளிச்சத்தில் தீநாக்குகள் எல்லாம் விஷயங்களையும் சொல்லிக் கொடுத்தது. மூன்றhம் உலக யுத்தத்தின் தொடக்கத்துக்கு முன்னால் ஒருவிஞ்ஞானத்துக்கும் விநோதத்துக்குமான போட்டியை அந்த பச்சைமனிதன் மாபெரும் போட்டியாக அறிவித்து, விஞ்ஞானத்தை அகலபாதாளத்துக்கு தள்ளிவிடுவான். பச்சை மனிதர்களின் கடைசி வாhpசான அவன் துணைக் கண்டத்துக்கு கடைசி வாhpசாக தம்மை அழைத்துக் கொள்வான். எனினும் உலக அழிவு நாள் வரை உலகின் எங்கோ ஒரு முலையில் கூட பச்சை மனிதன் இருக்கதான் செய்வான். தேவதைகளின் சொந்த குழந்தைகளான அந்த பச்சை மனிதர்கள் மனித சமூகத்துக்கு எண்ணிலடங்கா அதிசயங்களை நிகழ்த்திக் காட்டுவார்கள். நிஜத்துக்கும், பொய்க்கும் இடையிலான சுவரை உடைத்து அமானுஷ்யத்தின் வளையங்களை மிதித்து விடுகின்ற உன்னத சக்தி அவனுக்கு இருக்கிறது.
துணை கண்டத்தின் கடைசி வாhpசான பச்சை குழந்தையோ, மனிதர்கள் என்ன நினைக்கிறhர்கள் என்பதை மிக தௌpவாக அறிந்து சொல்லும் வலிமை பெற்றிருக்கும் அந்த பச்சை மனிதன் உளவியல் துறைக்கு புதிய விளக்கங்கள் அளிப்பதன் மூலம் மனித உளவியலின் பழைய கோட்பாடுகளை நீர் மூலம் செய்து விடுவான். மனிதர்களின் மனங்களை மனிதர்களை பார்க்காமலே அவர்களது பெயாpன் ஊடாக சென்று மனிதன் உலகின் எந்த பாகத்திலிருந்தாலும் அப்படியே மனத்தை தௌpவாக பார்த்து விடும் சக்தி பச்சை மனிதனுக்குண்டு. மனிதனை அவன் மனத்தை படிப்பதால் அவனுக்குள் ஒளிந்திருக்கும் தாழ்வு மனப்பான்மையை சுட்டிக்காட்டி அவனை அடக்கி விடும் வசியமும் பெற்றிருப்பான். மனித மனத்தின் விடுபட இயலாத புதிர்களை அவிழ்த்தும் அவன், மனம் என்பது அறிவை விட உயர்ந்தது என்பதை நிறுவுவதற்காக பெரும் முயற்சியை எடுத்துக் கொள்வான். மனித மனத்தை ஊடுருவி பார்க்கும் அந்த உன்னத கலையை திறம்பட பயின்று மனித மனம் காலம் தோறும் எப்படி செயல்படுகிறது என்பதை பட்டியல் போட்டு எதிர்காலம் பற்றிய மனதின் உள்ளுணர்வுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதன் மூலம் புதிய சமூக புரட்சியை ஏற்படுத்தி விடுவான். என்று நாஸ்ரடாமஸ் அந்த புத்தகத்தில் பலவிதமான செய்திகளை இரண்டு பாகமுடைய அந்த பொpய நு}லில் பதினாறு அத்தியாயங்களை வழி நிறுவ வேண்டும் என்று உத்தேசித்துக் கொண்டு சில அத்தியாயங்கள் வரை எழுதிக் முடித்திருந்தார்.
ஆசிக் பிறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அவனது உம்மா ஒரு கனவு கண்டு பதறியடித்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் கணவனை தட்டியெழுப்பி “பச்சை நிறத்தில் ஒரு மனிதனை கண்டேன். அவன் உயரங்களை தாண்டி பறப்பது போல இருந்தது”. என்று சொன்ன போது, சாp பேசாமல் படு என்று அவர் சொன்ன போதும் பச்சை மனிதனை பற்றி யோசிக்க தவறவில்லை. அடுத்த நாள் நண்பர் எழுவாpன் துணையோடு nஜhதிடர் ஒருவரை அணுகி விபரத்தை சொன்ன போது அவர் பேசினார். “உலக வரலாற்றின் பொன் எழுத்துகளால் பதிக்கபடும் ஆண்டுகளில் மனிதன் வாழப்போகும் தருணம் வந்து விட்டது. அவருக்கான அறிகுறி தான் இது” என்று சில விசித்திரமான தகவல்களை கணித்துக் சொன்னதை மனைவியிடம் மட்டும் அவர் கூறினார். சில நாட்கள் கழித்து ஆசிக்கின் வாப்பாவுக்கு ஒரு கனவு வந்தது. அதில் ஒரு தேவதை வந்து உன்னதமான பச்சை மனிதனை பார்க்கும் பாக்கியம் நீ பெறப்போகிறhய். பச்சை மனிதர்கள் பற்றிய என்று இந்த கனவை அவர் எல்லோhpடமும் கூறி பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார். ஆசிக்கின் பொpய மாமா மட்டும் எந்த எதிர்வினையும் காட்டாது, அந்த iடாpயை எழுதிக் கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு அவிப்பிராயம் சொன்னார்கள், சிலர் எச்சாpக்கை விடுத்தார்கள். சிலர் பயம் காட்டினார்கள். சிலர் நல்ல அறிகுறி என்றhர்கள். எனினும் கனவு குறித்து ரொம்பவும் சந்தோஷத்துடனே அவர் இருந்து வந்தார். அந்த சமயத்தில் தான் மனைவி பிரச வலியால் துடிதுடித்துக் கொண்டு இருப்பதையறிந்து மருத்துவச்சியை அழைத்து வந்த சில மணித்துளிகளிலே பச்சை மனிதன் பிறக்காமல் வெள்ளை நிற குழந்தை ஒன்று பிறந்தது.

No comments:

உக்ரைன் போர் குறித்து நோம் சாம்ஸ்கியின் நேர்காணல்

நோம் சாம்ஸ்கி: ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ விரிவாக்கம் வெற்றியாளர்களைக் கொண்டிருக்காது ஜெர்மனியின் கிராஃபென்வோஹரில் உள்ள 7வது ராணுவப்...