Sunday, January 17, 2016

வகாபிய முதலாளித்துவம்

வகாபிய முதலாளித்துவம்
பேரா.எச்.முஜீப் ரஹ்மான்

வகாபிய முதலாளித்துவம் என்பது, உற்பத்திச் சாதனங்கள் பெரும்பாலும் தனிப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு பொருளியல் முறைமையாகும். அத்துடன் இம்முறையில், முதலீடு, விநியோகம், வருமானம், உற்பத்தி, பொருள்களின் விலை குறித்தல், சேவைகள் என்பன சந்தைப் பொருளாதாரத்தினால் தீர்மானிக்கப்படுகின்றன. இதில், மூலதனப் பொருட்கள், கூலி, நிலம் மற்றும் பணம் ஆகியவற்றில் வணிகத்தில் ஈடுபடுவதற்கான தனிப்பட்டவர்களினதும், சட்ட அடிப்படையில் நபர்களாகச் செயற்படும் தனிப்பட்டவர்களைக் கொண்ட குழுக்களினதும், உரிமைகள் தொடர்புபடுகின்றன.
முதலாளித்துவச் செயற்பாடுகள், 16 ஆம் நூற்றாண்டுக்கும், 19 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் ஐரோப்பாவில் நிறுவனப்படுத்தப்பட்டது. வணிக முதலாளித்துவத்தின் தொடக்க வடிவங்கள் மத்திய காலத்தில் சிறப்புற்று விளங்கின. நிலப்பிரபுத்துவத்தின் முடிவுக்குப் பின்னர், முதலாளித்துவம் மேலை நாடுகளில் முதன்மை பெற்று விளங்கியது. இது இங்கிருந்து, சிறப்பாக இங்கிலாந்தில் இருந்து படிப்படியாக அரசியல் மற்றும் பண்பாட்டு எல்லைகளைக் கடந்து பிற இடங்களுக்கும் பரவியது. 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவம், உலகம் முழுவதிலும் தொழில்மயமாக்கத்துக்கான முக்கிய காரணியாக விளங்கியது.கால அடிப்படையிலும், புவியியல், அரசியல், பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலும், முதலாளித்துவம் பல்வேறுபட்டுக் காணப்படுகின்றது. பல நாடுகளைப் பொறுத்து இதைக் கலப்புப் பொருளாதாரம் என்று அழைப்பதே பொருத்தம் எனச் சிலர் கருதுகின்றனர்.
சவுதி உருவாக்கமே வகாபிய முதலாளித்துவத்தின் அடுத்த கட்ட நகர்வுக்கு காரணமாகியது.சவுதியில் மன்னர் 1902 ஆம்ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அடுத்து 1932 ஆம் ஆண்டு அப்துல் அஸீஸ் பின் சவூத் தனது மூதாதையரது நகரமான ரியாத்தை கைப்பற்றிய பின்னர் சவூதி அரேபிய இராச்சியத்தைப் பிரகடணப் படுத்தி அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார். சவூதி அரேபியா உலகில் அதிகளவு மசகு எண்ணெயை ஏற்றுமதிச் செய்யும் நாடாகும். மசகு எண்ணெய் ஏற்றுமதி அந்நாட்டின் 90% பங்கை வகிப்பதோடு அரசின் வருவாயில் 75% இதன் மூலம் பெறப்படுகிறது.
சவூதி அரேபியாவின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும், அரை வறண்டப் பகுதிகளுமேயாகும். இப்பகுதிகளில் மக்கள் குடியிருப்புகள் இல்லாதிருப்பதோடு பெதோயின் ஆதிவாசிகள் மாத்திரமே சிறிய எண்ணிக்கைகளில் இங்கு வாழ்கின்றனர். இப்பகுதிகளில் பற்றைகளும் புற்களுமே சிறிய அளவுகளில் காணப்படுகின்றன. நாட்டின் பரப்பளவில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே வேளாண்மைக்கு உகந்த நிலமாகக் காணப்படுகிறது. முக்கிய மக்கள் குடியிருப்புகள் கிழக்கு, மேற்குக் கரையோரங்களிலும் பாலைவனப் பசுஞ்சோலைகளை அண்டியும் அமைந்துள்ளது. சவூதி அரேபியாவின் தென்பகுதியான ரப் அல்-காலியிலும், அராபிய பாலைவனத்திலும் மசகு எண்ணெய் அகழ்விற்காக குடியமர்த்தப்பட்ட சில குடியேற்றங்கள் தவிர மக்கள்குடியேற்றங்கள் அற்றதாகவே காணப்படுகிறது. சவூதி அரேபியாவில் ஆண்டு முழுவதும் பாயும் ஆறுகளோ அல்லது நீர் நிலைகளோ இல்லை எனினும் அதன் கடற்கரை 2640 கிமீ (1640 மைல்) நீளமானது.சவுதி மட்டுமல்லமல் வளைகுடா நாடுகள் மசகு எண்ணையை உற்பத்தி செய்கின்றன.
"வளைகுடா நாடுகள் " அல்லது "அராபிய பாரசீக வளைகுடா நாடுகள் அல்லது "பாரசீக வளைகுடா அரபு நாடுகள் "  என்றெல்லாம் பொதுவாக அறியப்படுபவை நடுவண் ஆசியாவில் பாரசீக வளைகுடாவினை ஒட்டி அமைந்துள்ள எண்ணெய்வளமிக்க முடியாட்சிகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன் மற்றும் ஓமன் ஆகும். ஈராக் மற்றும் ஏமன் நாடுகளும் பெர்சிய வளைகுடாவினை ஒட்டி யிருந்தாலும் அரபு நாடுகளாக இருப்பினும் அவை வளைகுடா நாடுகளாகக் கருதப்படுவதில்லை. பாரசீக வளைகுடாவின் அனைத்து அரபு நாடுகளும் எண்ணெய் மற்றும் எரிவாயு மூலம் மிகுந்த வருமானம் பெறுகின்றன. சவுதி அரேபியாவைத் தவிர ஏனைய நாடுகள் சிறிய மக்கள்தொகையைக் கொண்டுள்ளன. இதனால் இந்நாட்டு மக்களின் தனிநபர் வருமானம் அண்டை நாடுகளின் வருமானத்தைவிட கூடுதலாக உள்ளது. தங்களின் பணியாள் தேவைகளுக்காக தெற்காசியா (பெரும்பாலும் இந்தியா) மற்றும் தென்கிழக்கு ஆசியா (பெரும்பாலும் பிலிப்பைன்சு, இந்தோனேசியா) பகுதிகளிலிருந்து குடியுரிமையற்ற பொருளாதார குடியேறிகளை அமர்த்துகின்றனர்.
மசகு எண்ணையை பிரதானமாக கொண்டே வகாபிய முதலாளித்துவம் தன்னை சூப்பர் பவர் முதலாளித்துவமாக அல்லது பெட்ரோ முதலாளித்துவமாக கட்டமைத்துக்கொண்டது.மேலும் வகாபியத்தை அரசுக்கொள்கையாக சவுதி பின்பற்றிய போது ஹஜ்ஜை பிரதானப்படுத்த முயற்சி மேற்கொண்டனர்.புனித ஹஜ்ஜை மையப்படுத்தி சவுதியின் பொருளாதார வளர்ச்சி நாற்கால் பாய்ச்சலில் சென்றுக்கொண்டிருக்கிறது.பர்தா அல்லது ஹிஜாப் புதுமாதிரியான பண்பாட்டு அடையாளமாக ஆக்கப்பட்டு உலகநாடுகள் அனைத்திலும் பெருவணிகர்களால் அடையாள சின்னமாக பெண்களுக்கு உருவாக்கப்பட்டது.இதில் கோடிக்கணக்கான டாலர் புரள்கிறது.
வகாபியமுதலாளித்துவம் என்பது தனிமனித உரிமைகளை முழுமையாக அங்கீகரிக்கும் ஒரு சமுதாய அமைப்பு" என்கிறார்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள்.  "தனிமனித உரிமை என்பது சொத்துரிமையையும் உள்ளடக்கியது. முதலாளித்துவத்தில் எல்லா சொத்துக்களுமே தனி மனிதர்களின் உடைமையாக மட்டுமே இருக்கும். உற்பத்தி, வர்த்தகம் போன்ற பொருளாதார நடவடிக்கைகளில் அரசு பங்கேற்காது. இதுவே அரசியல் சுதந்திரம்" என மேலும் விளக்கமளிக்கிறார்கள் இவர்கள்.

வகாபிய முதலாளித்துவத்தை "லெஸ்-ஸெய்-ஃபேர் கொள்கை என்றும் அழைக்கிறார்கள். இந்த பிரெஞ்சு வார்த்தையின் பொருள் "அப்படியே விட்டு விடு" என்பதாகும். வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடாமல் அவற்றைச் சந்தையின் போக்கிலேயே விட்டுவிட வேண்டும் என்ற முதலாளித்துவத்தின் அடிப்படையையே இது பிரதிபலிக்கிறது.வகாபிய முதலாளித்துவத்தின் மிக முக்கிய குணமே சுரண்டலாகும்.

வர்த்தகத்தை, சந்தையின் போக்கிலேயே விட்டுவிடுவது எப்படி என்பதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம். ஒரு பழ வியாபாரி ஒரு மாந்தோப்பிலிருந்து மாம்பழங்களை வாங்கி, தனது ஊர்ச் சந்தையில் ஒரு பழம் ரூ.2 என்ற விலையில் விற்கிறார். நன்றாக வியாபாரம் நடக்கிறது. சில மாதங்கள் ஆன பிறகு இன்னொரு வியாபாரி அதே தோப்புப் பழங்களை அதே சந்தையில் ரூ.1.80-க்கு விற்கத் தொடங்குகிறார். தனியாளாக ஒருவர் மட்டும் வியாபாரம் செய்து வந்து வந்த பழச்சந்தையில் இப்போது போட்டி வந்து விட்டது. முதலாமவரின் வாடிக்கையாளர்கள் இப்போது இரண்டாமவரிடம் வாங்கத் தொடங்கி விட்டார்கள். வேறு வழியின்றி முதலாமவரும் தனது விலையை ரூ.1.80-க்கு குறைத்தார். இந்நிலையில் மூன்றாவதாக ஒரு வியாபாரி வருகிறார். அவரும் அதே பழங்களை ரூ.1.50-க்கு விற்கத் தொடங்கி விட்டார். போட்டி இன்னும் கடுமையாகி விட்டது. முதல் இருவரும் தங்கள் விலையையும் ரூ 1.50-க்கு குறைத்தாலன்றி வியாபாரம் செய்ய முடியாது என்ற நிலையில் அவர்களும் விலையைக் குறைத்தனர்.

முதலாமவர் கொஞ்சம் மாற்றி யோசித்தார். இப்படியே போய்க் கொண்டிருந்தால் போட்ட முதலைக்கூட எடுக்க முடியாது. ஒரே தரத்திலுள்ள பழத்தை வைத்துப் போட்டி போட்டுக் கொண்டிருப்பதை விட்டு நாம் சற்று உயர்தர பழத்தை விற்கலாமே என்ற யோசனை அவருக்குத் தோன்றியது. சிறிது தூரத்திலுள்ள வேறொரு தோப்பிற்குச் சென்று விசாரித்தார். அங்கு விளையும் பழம் சந்தையில் இருக்கும் பழத்தைவிட உயர்தரமானது. ஆனால் கொள்முதல் விலை கிட்டத்தட்ட அதேதான். அவர் அந்த உயர்தர பழங்களை வாங்கி வந்து தனது கடையில் அறிமுகப் படுத்தினார். விலை ரூ. 1.50. அதே விலைக்கு உயர் தரமான பழம் கிடைக்கிறது என்பதால் வாடிக்கையாளர்கள் திரும்பவும் அவரது கடைக்கு வரத் தொடங்கினார்கள். தான் ஏற்கனவே விற்றுக் கொண்டிருந்த பழத்தின் விலையையும் அவர் ரூ. 1.40 எனக் குறைத்தார்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால், இந்த நடவடிக்கையில் நிகர பலன் அடைந்தது வாடிக்கையாளர்கள்தான். சந்தையில் அவர்கள் வாங்கிக் கொண்டிருந்த பழத்தின் விலை ரூ 2.00-லிருந்து 1.40-க்கு குறைந்ததோடல்லாமல், ரூ.1.50-க்கு உயர்தர பழவகை ஒன்றும் கிடைக்கிறது.  இவையெல்லாம் வெளியார் யாருடைய தலையீடும் இல்லாமல் சந்தையில் போட்டி ஏற்பட்டதன் விளைவு. முதலாளித்துவத்தால் கிடைக்கும் மிகச் சில பலன்களுள் இதுவும் ஒன்று!.ஆனால், வகாபிய முதலாளித்துவத்தின் இன்னொரு முகம் இதிலிருந்து வேறுபட்டது. பொதுநலம் கடுகளவுமின்றி, முழுக்க முழுக்கச் சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பணக்கார முதலைகளைப் பாதுகாப்பதற்காக ஏற்பட்டது

எளிய பண்ட பரிவர்த்தனையில் உழைப்பதற்கு தேவைப்படும் சாதனங்களும், உழைப்பும் உற்பத்தியாளரைச் சார்ந்தே நடைபெற்றது. ஆனால் முதலாளித்துவத்தில் உற்பத்தி சாதனங்கள் முதலாளிக்குச் சொந்தமானவையாகவும், உழைப்பதற்கு என்று தனியே தொழிலாளர்களை, வைத்து உற்பத்தி நிகழ்த்தப்படுகிறது. எளிய பண்ட உற்பத்தியின் இறுதி நோக்கம் உற்பத்தியாளரின் சொந்த தேவைகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதாகும், முதலாளித்துவத்தில் ஆதாயத்தை அடைய வேண்டும் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் உற்பத்தி நடத்தப்படுகிறது. எனவே இயற்கை பொருளாதாரத்தில் பரிவர்தனையாக செய்யபப்பட்ட பண்டத்திற்கு, சாதாரணமாக பொருள் என்ற வகையிலேயே நிகழ்த்தப்படுகிறது, முதலாளித்துவத்தில் அப்பொருளுக்கு சரக்கு என்று பெயர்பெறுகிறது.

சரக்கு உற்பத்தி  என்பது சமூக வேலைப் பிரிவினையிலும், இதனோடு்கூட உற்பத்தி சாதனங்கள், தனிநபர்களிடம் தனியுடைமையாய் ஒன்றுகுவிவதன் மூலமும்  தோன்றுகிறது.

முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்திச் சாதனங்களும், வாங்கப்பட்ட உழைப்புச் சக்தியும், முதலாளிக்குச் சொந்தமானவையாகும், அதனால் எதை உற்பத்தி செய்ய வேண்டும், எவ்வளவு, எப்படி செய்யவேண்டும் என்பதை, முதலாளியே முடிவு செய்கிறார். இத்தகைய முதலாளியின் கட்டுப்பாட்டின் கீழ் தொழிலாளி வேலை செய்கிறார். தொழிலாளியால் உற்பத்தி செய்யப்பட்ட சரக்கை விற்று பணமாக்கி அதனை முதலாளி் சொந்தமாக்கிக் கொள்கிறார்.

முதலாளி, தொழிலாளிக்கு அவரது உழைப்புச் சக்தியின் மதிப்பிற்கு மட்டுமே சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதாவது சரக்கு என்ற முறையில் உழைப்புச் சக்திக்கு மட்டுமே இங்கு சம்பளம் தரப்படுகிறது.  தொழிலாளி தமது அவசியத் தேவைகளை நிறைவு செய்யப்பட்டால் தான் அவரால் தொடர்ந்து உழைக்க முடியும். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அளவு சாப்பட்டிற்கு செலவு செய்கிறார். அவரது ஆடைகள், காலணி போன்ற தேவையான பொருட்கள் தேய்மானம் அடைகிறது. வீட்டு வாடகைக்கு என குறிப்பிட்ட பணத்தை கொடுக்கிறார். முதலாளிக்கான புதிய உயிருள்ள சரக்கான வளர்ந்து வரும் குடும்பத்தையும் கவனிக்கிறார். இந்த செலவிற்கான பணத்தை மட்டுமே தொழிலாளிக்கு சம்பளமாக தரப்படுகிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொழிலாளி செலுத்தும் உழைப்பு இரு பகுதியாக செயல்படுகிறது.  அதாவது தொழிலாளி  வேலை நாளின் ஒரு பகுதியில் தமது உழைப்புச் சக்தியின் மதிப்புக்குச் சமமான மதிப்பை உற்பத்தி செய்கிறார். இதற்கு அவசிய உழைப்பு என்றழைக்கப்படுகிறது. உற்பத்தி செய்த மற்றொரு பகுதிக்கான மதிப்பை தொழிலாளிக்கு பணம் கொடுக்காமல்,  முதலாளி தனதாக்கிக் கொள்கிறார். இதற்கு உபரி உழைப்பு என்றழைக்கப்படுகிறது. இந்த உபரி உழைப்பே, உபரி மதிப்பை தோற்றுவிக்கிறது. அவசிய உழைப்பிற்கு மட்டுமே தொழிலாளி சம்பளம் வாங்குகிறார். உபரி உழைப்பிற்கு என்று எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. தொழிற்சாலை முதலாளிக்குச் சொந்தமானவை, அங்கு உற்பத்திசெய்யப்பட் சரக்கு அனைத்தும் முதலாளிக்குச் சொந்தமானதாகிறது, ஆகவே இந்த உபரி மதிப்பு முதலாளிக்கு எவ்வித செலவுமில்லாமல் சென்றுவிடுகிறது.

                அதிகமான ஆதாயத்தைத் தேடி அலையும் முதலாளிகள், உற்பத்தி செலவைக் குறைக்க இரு முறைகளைக் கையாளுகிறார்கள்.

                முதலாவதாக, உழைக்கும் நேரத்தை நீட்டிப்பதின் மூலம் நடத்தப்படுவது. இது உபரி உழைப்பின் அளவை அதிகப்படுத்துவதால் கிடைக்கிறது. இதுபோன்ற நேரங்களில் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் பகைமையும், எதிர்ப்புகளும் அதிகமாகிறது. இதனை தவிர்ப்பதற்காக  இரண்டாம் வழிமுறையை கடைபிடிப்பதிலியே முதலாளி அதிகம் கவனம் செலுத்துகிறார். அதாவது மேம்பாடு அடைந்துள்ள இயந்திரங்களை பயன்படுத்த விளைகிறார். புதிய தொழில்நுட்பத்தில் மேம்பாடு அடைந்த இயந்திரத்தை உற்பத்தியில் ஈடுபடுத்துகிறார்.

                இயந்திரங்கள் அதிகம் புகுத்தப்பட்ட தொடக்க காலத்தில் தொழிலாளர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, அதனை அடித்து, உடைத்து துடைத்தெறிய முனைந்தனர். தங்களது வேலையை இயந்திரம் பறித்துவிடுகிறது என்று நினைத்தனர். பிற்காலத்தில் இயந்திரங்கள் தமக்கு எதிரானதல்ல, இவைகளை பயன்படுத்திவரும் முதலாளித்துவ அமைப்பு முறையே பகைமையானது என்பதை கண்டுகொண்டனர்.

தொழிற்சாலையில் புதிய இயந்திரம் புகுத்தப்படும் போது தொழிலாளர்களின் பணிகள் எளியதாக்கப்பட வேண்டும், ஆனால் முதலாளித்துவ உடைமை அமைப்பு, இதற்கு இடம் கொடுக்காமல் உழைப்பின் கடுமையை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.

                உழைப்பின் உற்பத்தித் திறன், உயர்வதின் மூலம் இயந்திரங்கள் சமூகச் செல்வத்தை அதிகரிக்க செய்கிறது. ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் தனிச்சொத்துடைமை நிலவுவதால், கிடைத்திடும் பலன்கள் முழுமையையும் முதலாளிகள் தம்முடையதாக்கிக் கொள்கிறார்கள். இதனால் உருவான முரண்பாடு, முதலாளித்துவ அமைப்பு நெடுகிலும் தீர்க்கப்படாமல் தொடர்கிறது.

குறிப்பிட்ட பொருளுக்கு, சந்தையில் பொதுவாய் காணும் தேவையின் அடிப்படையில், அனைத்து முதலாளிகளும் சரக்கை உற்பத்தி செய்கின்றனர். தனது பொருளை சந்தையில் அதிகயாய் விற்கவேண்டும் என்கிற போட்டி முதலாளிகளுக்கிடையே நிலவுகிறது. இதன் விளையாய் அதிக ஆதாயத்தை அடைவதற்கும், சந்தையில் தமது பொருட்கள் மிகுந்த அளவு விற்பதற்கும், பொருளின் விலை, போட்டி உற்பத்தியாளர்களின் சரக்குகளின் விலையைவிட குறைவாக இருக்க வேண்டியது அவசியமாகிறது, தங்களது சரக்கின் உற்பத்திச் செலவை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அதனால் முதலாளிகள் புதிதுபுதிதான தொழில்நுட்பத்தையும், புதுமையான இயந்திரத்தையும், தமது தொழிற்கூடத்தில் புகுத்துகின்றனர்.

சந்தையின் தேவையை நோக்கி பல்வேறு உற்பத்தியாளர்கள் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்த திட்டம் ஏதுமில்லாமல் சரக்கை உற்பத்தி செய்திடுகிறார்கள். இதனால் உற்பத்தியில் அராஜகம்  ஏற்படுகின்றது. குறிப்பிட்ட சரக்கின் தேவை சந்தையில் உருவாவதைக் காணும் போது, பல்வேறு முதலாளிகள் அப்பொருளையே உற்பத்தி செய்திட முனைகின்றனர். கால ஓட்டத்தில் அப்பொருளின் தேவைவிட அதிகமாக உற்பத்தியாகிவிடுகிறது, அதனால் உற்பத்தியான சரக்கு சந்தையில் விற்பனையாகமல் தேங்கிவிடுகின்றன. இது போன்ற நேரங்களில் விலையில் கடுமையாக இறக்கம் காண்கிறது. அதானல் உற்பத்தியாளர், அச்சரக்கின் உற்பத்தியை குறைத்துக்கொள்கிறார், அல்லது முழுவதுமாக நிறுதிவிட்டு, வேறொரு சரக்கை உற்பத்தி செய்ய முயல்கிறார்.

ஆதாயம் பெருகுவதையே நோக்கமாக கொண்ட முதலாளிகளுக்கிடையே உள்ள  போட்டா போட்டியின் விளைவாக மிகுதியான சரக்குகள் உற்பத்தி செய்து விடுகின்றனர், அதற்கான சந்தையின் தேவையைப் பற்றி கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இவ்வாறு மிகுஉற்பத்தி என்னும் சிக்கலில் வீழ்கிறது முதலாளித்துவச் சமூகம்.

                முதலாளித்துவ அமைப்புத் தோன்றுவதற்கு முன்பு பல நெருக்கடிகளை சமூகம் கண்டிருக்கின்றன. அது வறட்சி, சுனாமி, பெருவெள்ளம் போன்றவற்றால் ஏற்பட்டவை, அதாவது இவை இயற்கையின் சீற்றத்தால் உருவானவை. மிகு உற்பத்தி என்ற இந்த நெருக்கடியை முதலாளித்துவ அமைப்பில் மட்டும் தோன்றக் கூடியதாக காணப்படுகிறது.

                மிகு உற்பத்தியால் வாணிபம் சுருங்குகின்றன, சந்தையில் பொருட்கள் விற்பனையாகாமல் குவிகின்றன, இதனைத் தொடர்ந்து தொழிற்சாலையில் உற்பத்தி குறைத்தல், உற்பத்தியை நிறுத்துதல், தொழிற்சாலை மூடுதல் போன்றவை ஏற்படுகிறது. தொழிலாளிகளின் வேலையிழப்பு தொடர்கிறது.

                இந்த மிகை உற்பத்தி என்பது,  ஒருவகையில் சார்பானதாகும். அதாவது உண்மையில் சமூகத்திற்குத் தேவையானது போக மீதமுள்ளதை, இந்த மிகைஉற்பத்தி குறிப்பிடவில்லை, இந்த முதலாளித்துவ உற்பத்தி முறை, தொழிலாளர் மற்றும் பல வேலையாளர்களை வேலையிழக்கச் செய்து, அவர்களிடம் வாங்கும் சக்தியிழக்க செய்துவிட்டது. முதலாளித்துவம், தனியுடைமை முறையில் செயல்படுவதால், உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும், பலன்களை கையகப்படுத்தும் தனிவுடைமை பெற்ற முதலாளித்துவ வடிவத்திற்கும் இடையே காணும் முரண்பாடாய் விளங்குகிறது.  

                முதலாளித்துவ உற்பத்தியில் ஏற்பட்ட அராஜக போக்காலும், மூலதனத்தின் உழைப்பைச் சுரண்டுவதின் விளைவுகளாலும், தொழிலாளிகளிடையே வாங்கும் திறனற்றுப் போயிற்று.  முதலாளித்துவத்தில் உற்பத்தியின் நோக்கம், மக்களின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதல்ல, உழைப்பாளியின் உபரி உழைப்பை சுரண்டி மூலதனத்தை பெருக்குவதே ஆகும். 

                முதலாளித்துவத்தின் சரக்கு உற்பத்தியானது, நுகர்வுடன் தொடர்புடையதாகும். நுகராமல் சந்தையில் சரக்கு குவிந்து கிடக்கும் காலகட்டத்தில் உழைப்பாளியும். மக்களும் நுகரமுடியாமல், வேலையிழந்து, பட்டினியில் கிடந்து  அவதிபடுகின்றனர்.

                முதலாளித்துவ அமைப்பில் மிகுஉற்பத்தி, நெருக்கடி, தேக்கம், ஏற்றம், செழுமை என்ற சுற்று மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது. வீழ்ந்து போகாமல் தாக்குப்பிடித்த, தொழில் நிலையங்கள் புதிய ஏற்றம் பெற்று, புத்துயிர் உற்று வளர்கிறது. மீண்டும் முதலாளித்துவத்தில் திறனுடைய தேவையை கணக்கில் எடுக்காமல், மிகுஉற்பத்தி என்ற நிலையை நோக்கிச் செல்கிறது. மீண்டும் சந்தை சுருங்குதல், சரக்குகள் சந்தையில் குவிதல், உற்பத்தியில் வீழ்ச்சி, உற்பத்தி நிறுத்தம், தொழிற்கூடம் மூடுதல் என்ற பழைய நிலைமைகளை விட, கடுமையான நிலைமைகள் மீண்டும் மீண்டும் அரங்கேறுகிறது.

வகாபிய முதலாளித்துவப் பொருளாதாரத்தில் பணம் படைத்த முதலாளிகளும் மெகா கார்ப்பரேட் நிறுவனங்களுமே 'எதை உற்பத்தி செய்வது?, எதை யாருக்கு வினியோகம் செய்வது?' போன்றவற்றையும் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகளையும் தீர்மானிக்கிறார்கள். இந்த முடிவெடுத்தல்களில் அவர்களைச் செலுத்துவது ஒன்றேதான்: லாபம், அதிக லாபம், மேலும் மேலும் லாபம்.

நாம் இதுவரை பார்த்த 'தனியார் பொருளாதாரச் சுதந்திரம்' முதலாளித்துவத்தின் உயிர் மூச்சு என்றால், அதன் உடலெங்கும் ஓடும் இரத்தம் என வட்டியைச் சொல்லலாம். பொருளாதார இயந்திரம் சிக்கலில்லாமல் இயங்க உதவும் மசகு எண்ணெய்தான் வட்டி என முதலாளித்துவ ஆதரவாளர்கள் பெருமைப் பட்டுக் கொள்வார்கள். ஆனால் உண்மையில், பணக்காரர்கள் கொழுத்த பணக்காரர்களாகவும் ஏழைகள் பரம ஏழைகளாகவும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மென்மேலும் அதிகரிக்க வகை செய்யும் கருவியே வட்டி.ஆனால் வகாபிய முதலாளித்துவத்தில் வட்டிக்கு பதிலாக கமிஷன் என்ற முறை நடைமுறையிலிருக்கிறது.ஆனால் இதன் செயல்பாடு வட்டியை போன்றதே.இன்றைய பெட்ரோ டாலர் அரசியல் முறையை தோற்றுவித்த்து வகாபிய பொருளாதார முறை என்றால் அதில் சந்தேகமேயில்லை.
1999ல் கச்சா எண்ணெயின் விலை சுமார் $16 அமெரிக்க டாலர் என்னும் அளவிலே இருந்தது. இதற்கு முக்கிய காரணமாக கருதபடுவன, இராக்கிய எண்ணெய் வயல்களில் அதிகமான உற்பத்தியும், ஆசிய பொருளாதார நெருக்கடி நிலையும் ஆகும். கச்சா எண்ணெயின் விலை, பிப்ரவரி 2005 வாக்கில் ஒரு பேரலுக்கு(பீப்பாய்க்கு) ஐம்பது அமெரிக்க டாலர் என்னும் அளவில் இருந்தது. அதுவே பிப்ரவரி 2008ல் ஒரு பேரலுக்கு நூற்றிப் பதினேழு டாலர் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. ஒரு பேரல் என்பது 42 அமெரிக்க கேலன்கள், ஒரு கேலன் சுமார் மூணே முக்கால் லிட்டர். ஆக, ஒரு பேரல் என்பது சுமார் 160 லிட்டர்கள்.
சில ஆண்டுகளுக்குள்ளாகவே விலை இவ்வளவு தூரம் கூடியும் எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தியைப் பெருக்கும் வழிகளைக் கையாளவில்லை. எண்ணெய்ப் போக்குவரத்துக்குப் பயன்படும் கப்பல்கள் புதிதாய் நிர்மாணிக்கப் படவில்லை. எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலைகள்  புதிதாகக் கட்டப்படவும் இல்லை. இவை எல்லாமே இந்த எண்ணெய் வளம் குறைந்து வருகிறது என்பதற்குச் சான்றுகள் என்று தங்கள் வாதத்திற்கு வலுச் சேர்க்கிறார்கள் ஹப்பர்ட் உச்சக் கோட்பாட்டுக்காரர்கள். நிலத்தடியில் இருந்தால் தானே எண்ணெய் உற்பத்தியைக் கூட்ட முடியும். அதனால் தான் விலை உயர்வடைந்தாலும் உற்பத்தி கூடவில்லை என்கின்றனர்.
ஈரான், பாரசீக வளைகுடாவிலுள்ள கிஷ் தீவின் தனது புதிய எண்ணெய் விற்பனை சந்தையை அமைத்துள்ளது. கணிணியும் மென்பொருட்களும் நிறுவப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ஆனால் சில அழுத்தங்கள் காரணமாக தள்ளிப் போடப்பட்டது. எங்கிருந்து அழுத்தம் வந்திருக்கும் என்பது சொல்லித்தான் அறிய முடியுமா என்ன?. மே 5ந்தேதி மிளிஙி பதிவு செய்யப்பட்டு விட்டது. சந்தை துவங்கும் நாள் குறிக்கப்படாததற்கு எண்ணெய் மாபியா கும்பல்களின் ஊடுருவலும் உலக நாடுகளின் அழுத்தமும் ... ... காரணம் என சிலரால் சொல்லப் படுகிறது,2007ல் எண்ணெய் 60 டாலர்களுக்கு கொள்வரவு செய்யப்பட்டது. டாலரின் மதிப்பு ஒவ்வொரு நாளும் வீழ்ச்சி அடைவதை அனைவரும் அறிவோம். தனது சந்தை மூலம் வெறும் யூகங்களை  முன்னிறுத்தி எண்ணெயின் விலையை ஏற்றிக் கொண்டிருக்கிறது. 60 டாலர்களுக்கு விற்ற எண்ணெயை 140 டாலருக்கு விற்றால் டாலரின் தேவை 230விழுக்காடுகள் அதிகரிக்கும். சமீபத்தில் எண்ணெய் விலையேற்றத்திற்கு 60சத காரணம் வெறும் யூகங்களைக் கொண்டு செய்யும் முன் வியாபாரம்தான் எனக் கூறியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக மசகு எண்ணையின் விலையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் வளைகுடா நாடுகளின் உதவியாலே முன்னெடுக்கப்படுகிறது.தற்சமயம் பொருளாதார மந்தம் முற்றிலுமாக மாறிவிடாத சூழலில் இன்னும் சீனா,ஜப்பான்,மேற்கத்திய நாடுகளில் பொருளாதார மந்தம் நீடிப்பதினால் மசகு எண்ணையின் அரசியல் சற்று ஓய்வெடுத்திருக்கிறது என்று சொல்லலாம்.ஆனால் விரைவில் அதன் அரசியல் முதலாளித்துவத்தை பாதுகாப்பதில் முழுவெற்றியை அடைந்துவிடும்.முடிவாகச் சொல்வதென்றால் அமெரிக்கா தனது டாலரை அழிவிலிருந்து காக்க, உலகில் டாலருடைய ஏகாதிபத்தியத்தை நிலை நிறுத்திக் கொள்ள எந்த நாட்டையும் அழிக்கத் தயங்காது.அதற்கு சவுதி போன்ற நாடுகள் துணை நிற்கின்றன.இது முதலாளித்துவம் தனது இருப்பை மறு உற்பத்தி செய்தி கொண்டிருக்கும் என்பதன் வெளிபாடாகும்.வகாபிய முதலாளித்துவமும் அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் அடிவருடியாகவே இருக்கிறது. 

மற்றமைகளுடன் பேசுவது

மற்றமைகளுடன் பேசுவது
எச்.முஜீப் ரஹ்மான்
பேசுவது என்பது எல்லாவற்றுக்கும் மேலாக மற்றவர்களுடன் பேசுவது என்பார் லக்கான்.இன்றைய சூழலில் காட்டாக எயிட்ஸ் நோயாளிகளை எடுத்துக்கொள்வோம்.எயிட்ஸ் பாதித்த அந்த நோயளிகளிடம் நாம் பேசாமல் அவர்களை தனிமைபடுத்தி விடவேண்டும் என்ற எண்ணம் நமக்கு எப்படி வருகிறது.நமக்கு தெரிந்தவரோ அல்லது நண்பரோ அல்லது உறவினராக இருக்கும் அந்த நோயாளியை நாம் பேசமறுப்பதன் மூலம் என்ன சொல்லவிழைகிறோம்?நீ புரிந்து வைத்த அந்த நபர் உனது சமூக அறத்துக்கு எதிராக செயல்பட்டார் என்பதால் தானே நீ பேச மறுக்கிறாய்?அப்போது உன்னிடம் அதிகாரம் தானே செயல் படுகிறது.அப்படியானால் நீ பேச்சை எப்படி புரிந்து வைத்திருக்கிறது.நமது மனம் யாரிடம் பேசவேண்டும் யாரிடம் பேசக்கூடாது என்று பட்டியல் இட்டுவைத்திருக்கிறதல்லவா?நீ பேசும் நபர் எப்படிப்பட்ட ஒழுக்கங்களை கொண்டிருக்கவேண்டும் என்று தீர்மானித்து வைத்துள்ளாய் என்று தானே அர்த்தம்.சமூக விதிகளை நீ பின்பற்றுவதாக கூறிக்கொண்டு ஒரு அதிகாரத்தை கையில் எடுத்ததை நீ கவனித்தாயா?நம்மிடம் அடிக்கடி இப்படி சொல்லப்படுவதுண்டு.அதிகாரத்தை கையில் எடுக்காதே.அதாவது நீ எதிர்வினை செய்து சட்டத்துக்கு புறம்பாக நின்றுகொள்ளாதே என்பதாகும்.ஆனால் நீ ஏன் இப்படி எதிர்வினையாற்றுகிறாய் என்பதை யாரும் சிந்திப்பதில்லை.சிலர் நமக்கேன் வம்பு என்று இருந்துவிடுவார்கள்.இவர்கள் சட்டத்தை மதிப்பதற்க்காக அப்படி இருக்கவில்லை என்பது தெரியும்.நீ எதிர்வினையாற்றிய போது சட்டத்தைப்பற்றி ஒன்றும் நினைக்கவில்லைதான்.ஆக எதிர்வினையாற்றினாலும் ஆற்றாமல் இருந்தாலும் சட்டத்தை பற்றி நினைப்பது இல்லை.ஆனால் ஆற்றுபவர் அதிகாரத்தை பயன்படுத்துபவராகவும் ஆற்றாதவர் அதிகாரத்துக்கு அடிபணிந்தவராகவும் இருக்கிறார்.இதை லக்கான் ஆண்டான் அடிமை உளவியல் என்கிறார்.நீ சமூக விதிகளை பின்பற்றுவதால் தான் பேச்சு நடவடிக்கையில் விலகி இருக்க அல்லது பேசமறுக்க துணிந்துவிட்டாய்.அதிகாரம் இன்னொருபுறம் அரசு இயந்திரங்களான காவல்,சட்டம்,நீதிமன்றம்,தண்டனைகள்,ஜெயில் போன்றவற்றைக்கொண்டு எல்லோரையும் அடிபணியவைக்கிறது.நீ பேசமறுக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக பொது அல்லது சமூக அதிகாரம் நினைக்கவில்லை என்றாலும் நீ அதிகாரத்தை கையில் எடுக்க சமூக அதிகாரம் காரணமாக இருக்கிறது என்பதையும் சமூக அதிகாரம் அறிந்திருக்கவில்லை.சட்ட,ஒழுங்கு பிரச்சனையை தான் அது மையப்படுத்துகிறது.இதை ஒரு முறை கூட படி சட்ட,ஒழுங்கு பிரச்சனை.நீ பேசமறுப்பதற்க்கும் உன்னிடம் செயலாற்றும் சட்ட அல்லது விதியொழுக்க மனநிலையே காரணம்.ஆக சமூக அதிகாரமும் நீயும் ஒரே திசையில் இருக்கிறீர்கள் அல்லது நீங்கள் சமூக அதிகாரத்தின் தனிநபர் அதிகாரம் ஆவீர்கள்.அதிகாரம் என்பது எப்போதும் உள்ளேயும் வெளியேயும் செயல்படுகிறது.அகம்/புறம் என்றும் சொல்லலாம்.இன்னும் சொல்லபோனால் நாம் சமூகத்தின் அதிகாரத்தின் ஒரு பாகமாக இருக்கிறோம்.இனி நாம் யார் யாரிடமெல்லாம் பேசுகிறோம் யாரிடமெல்லாம் பேச தயங்குகிறொம் அல்லது யாரிடமெல்லாம் பேசமறுக்கிறோம் என்று பார்த்தால் அதிகாரத்துக்கு முன்பாக நாம் பேச தயங்குகிறோம்.நம் அதிகாரத்துக்கு கீழ் உள்ளவர்களிடம் பேச மறுக்கிறோம்.நம் அதிகாரத்திற்கு கீழ் வருவது என்பது நேரடியாக அல்ல.கீழ்பணிய அதிகாரத்தை பயன்படுத்துகிறோம்.அங்கு மற்றவர்களின் பேச்சு மறுக்கப்படுகிறது.அதிகாரத்தை அதிகம் கேள்விக்குள்ளாக்கியவர் பூக்கோ.அதிகாரம் இல்லாமலே நாம் சமூகத்தின் அதிகாரிகளாக உள்ளோம் என்பது கவனிக்கப்படவேண்டிய விசயமாகும்.மற்றவர்களுடன் பேசுவது என்றால் என்ன? அரசு தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்துவதில்லை.ஜெயில் அதிகாரி ஒரு கைதியிடம் பேச்சு நடத்துவதில்லை.ஒரு குடும்பஸ்தன் விபச்சாரிகளிடம் பேச்சு நடத்துவதில்லை.ஒரு எஜமானன் தனது வேலையாளுடன் பேச்சு நடத்துவதில்லை.ஒரு டாக்டர் பையித்தியத்துடன் பேச்சு நடத்துவதில்லை.ஆக சமூகத்தில் ஒருசிலர் ஒருசிலருடன் பேசுவது இல்லை.ஆர்பாட்டக்காரர்கள் ஆர்பாட்டம் நடத்தினாலும் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுக்கிறார்கள்.பேச்சு ஒரு அதிகாரமாக அல்லது புனிதமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.பேச்சு மொழியின் ஒரு செயல்பாடாக இருந்தாலும் அது ஒரு ஆயுதமாக,கருவியாக செயல்படுகிறது.அதனால் பேச்சு விதிகளாலும்,ஒழுக்கங்களாலும் ஆனது எனப்படும்.இது மொழியின் இலக்கணவிதியையோ,ஒழுங்கையோ சார்ந்ததல்ல.அவை வேறு.பேச்சு இன்னும் ஜனநாயகப்படுத்தப்படவில்லை என்பதே இங்கு முக்கியமானது.பாலியல் என்பதே ஒரு சமூக கட்டமைப்பாக இருந்தாலும் பாலியல் பேச்சின் பொருளாகாது.பொதுவில் பாலியல் பேசுவது தவறானது.ஒரு பெண் அதுவும் பாலியலை பேசுவது பெருந்தவறு.சிறுவர்கள் பாலியல் பேசக்கூடாது.ஆசிரியர்கள் பாலியல் பேசக்கூடாது.அரசியல்வாதிகள் பாலியல் பேசக்கூடாது.மதவாதிகள் பாலியல் பேசக்கூடாது.ஆக பாலியல் பேச்சு மறுக்கப்படுகிறது அல்லது தடுக்கப்படுகிறது.அதனால் தான் எம் டிவியையும் மிட்நைட் மசாலாவையும் பார்க்க நமக்கு ஆசை.பேச்சு விதிகளாலும்,ஒழுங்குகளாலும் ஆனது என்று சொல்ல இதுவே காரணம்.பாலியல் மட்டுமல்ல இன்னும் விதிகளாலும் ஒழுங்குகளாலும் ஏற்றுக்கொள்ளப்படாத எந்த ஒரு விசயத்தையும் பேச பேச்சு அனுமதிப்பதில்லை.நமது சமூகத்தில் வளவள என்று பேசுபவரை யாரும் விரும்புவது இல்லை.ஏனெனில் அடிப்படையில் நாம் பேச்சுக்கு எதிரானவர்களாக கட்டமைக்கப்படுகிறோம்.பெண்கள்,விதி மீறியவர்கள்,விளிம்புநிலை மக்கள் போன்ற எண்ணற்ற மக்கள் திரளினரிடம் நாம் பேச தயங்குகிறோம்.அவர்களது பிரச்சனையை பேச நாம் மறுக்கிறோம்.
பேச்சு என்ற இந்த நடவடிக்கைக்கு காரணமான மொழியை கொஞ்சம் அலசவேண்டியிருக்கிறது.மொழி நம்மை அந்நியமாக்குகிறது.நம் அனைவரிடமும் மொழியால் ஆன அகம் இருக்கிறது.இந்த அகம் குறிப்பானால் உணர்த்தப்படுகிறது.மொழியால் இணைப்பு நடந்தாலும் மொழியால் நாம் அன்னியப்பட்ட அகநிலையாக ஆகிக்கொண்டிருக்கிறோம் என்கிறார் லக்கான்.மொழி நம்மை அன்னியபடுத்த வேண்டியது ஏன் என்றால் நாம் பேசும் மொழியானது மற்றவர்களின் மொழியை போல இல்லை.உயர் மொழியும்,இழிமொழியும் இருக்கிற போது நாம் அன்னிய படுவது இயல்பாகிவிடும்.அகநிலை என்பது வரலாறு,பண்பாடு,அரசியல் என்று எண்ணற்ற விஷயங்களால் உருவாவது.நாம் சொல்லும் குறிப்பான்கள் அகநிலையை சரியாக விளக்க முடியாததாக இருக்கிறது.இதனால் அகநிலை நம்மை அன்னியபடுத்துகிறது.நமது அகத்தை மற்றவர்களால் புரிய முடியாமல் போனால் அல்லது நிராகரிக்க கூடுவதாய் அமைந்தால் நம்மை அந்நியமயமாக்கிவிடும்.நாம் பாலியலை அகமாக வைத்திருந்தாலும் மற்றவர்களிடம் நேரடியாக பேசமுடியாமல் குறிப்பான்கள் வழியாக பேசுகிறோம்.ஆனால் மற்றவர்கள் குறிப்பான்களை புரிந்து கொள்ளமுடியாதாகையால் மொழியால் அந்நியபடுத்தப்படும் நிலைக்கு ஆளாகிறோம்.உனக்கு அவளை பிடிக்கிறது அவளுடன் உடலுறவு வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறாய்.உனது மொழியால் அதை அவளிடம் சொல்லிவிட முடியுமா என்று யோசித்துப்பார்.எனவே நீ அவளை விரும்புவதாக கூறுகிறாய்.அவளோ உன்னை விரும்பலாம் அல்லது நிராகரிக்கலாம்.ஆனால் நீ உத்தேசித்த உடலுறவுக்கு அழைப்பதை அவளால் புரியவே முடியாது.இது மொழி உன்னை அன்னியப்படுத்திய இடமாகும்.அதே சமயம் உன்னால் ஒரு விபச்சாரியிடம் நேரடியாக கேட்க முடியும்.ஆனால் சமூகம் அதை அனுமதிக்காது.நீ இங்கு விதிகளாலும்,ஒழுங்குகளாலும் ஆன அமைப்பை மீற முடியாமல் தவிப்பதை காணலாம்.நமது மொழியும்,சமூக அமைப்பும் திருமணத்துக்கு பிறகு தான் உடலுறவு என்ற கருத்தியலை கொண்டிருப்பதால் உன்னால் காதல் நாடகம் தான் முடிகிறது.இங்கு இன்னொரு விசயத்தை கவனிக்கவேண்டும்.உனக்கு அடிமையானவர்களிடம் காட்டாக உனது வீட்டு வேலைக்காரியை பேச்சு மறுக்கப்பட்ட அடிமையை உனது மொழியின் துணையில்லாமலே பாலியல் அத்துமீறல் செய்து கொள்ளமுடியும்.இங்கே மொழி அந்த பெண்ணுக்கு தீங்கீழைக்கப்பட்டதை சொல்ல முடியாதவகையில் அந்நியப்படுவதை காணலாம்.நீ உடலுறவுக்கு அழைக்க முடியாத அந்த ஏமாற்றம் உன்னை வக்கிரத்துக்கு கொண்டு செல்கிறது.உன்னை பாலியல் அத்துமீறலை செய்யும் படியாக உனது மொழி அகநிலை அப்படி செய்கிறது.மொழி இங்கே அதிகாரமாக உன்னை செயல்படவைக்கிறது.பல சமயங்களிலும் சமூக அதிகாரம் தன்னிலைகளை இணைத்துக்கொண்டு ஒரு பெண்ணை பலர் பாலியல் வல்லுறவுக்கு கொண்டு செல்லுவதை ஊக்கப்படுத்துகிறது.இங்கே பேச்சு முற்றிலுமாக மறுக்கப்படுகிறது.மொழி அந்நியமாக்குகிறது.ஆக பாலியல் இச்சை மொழியால் பேசமுடியாத அல்லது மொழியை பேச மறுக்குகிற அகநிலைகளை உருவாக்குகிறது.இதனால் தான் அதிகாரம் மொழியை விட சக்திமிக்கதாக உடலை ஆட்படுத்தவும்,ஆட்கொள்ளவும் மிக்கதாக இருக்கிறது.நாம் மற்றவர்களிடம் சுதந்திரமாக பாலியல் அல்லது உந்துதலைகளை பேசமுடியுமென்றால் அங்கே அதிகாரமோ,அத்துமீறல்களோ நிகழவாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.மற்றவர்களிடம் பேச மொழி ஒரு தடையாக இருப்பது போல அதிகாரமும் ஒரு தடையாக இருக்கிறது.அதிகாரம் மிக்கவர்கள் மொழியால் பேச மறுக்கப்படுபவர்களை ஆட்கொள்ள மொழியோ,பேச்சோ தேவையில்லாமலே அதிகாரத்தால் ஆட்கொள்ளமுடியும்.காவல்துறையினர் பல இடங்களிலும் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களை நிகழ்த்த அதிகாரம் ஒரு முக்கிய காரணமாகிறது.ஒரே மொழியால் ஆட்கொள்ளவும் அனுமதிக்கவும் ஆவதால் மொழி ஏக காலத்தில் அதிகாரமிக்கதாகவும்,ஒடுங்கிபோகவும் தயாராக இருக்கிறது.மொழி அதிகாரமாக மாறும் போது உடல் அங்கே அதிகாரம் செலுத்துமிடமாக மாறுகிறது.உடல் அதிகாரத்தை அனுமதிக்கிறபோது மொழி மறுக்கப்படுகிறது.இன்னும் சொல்லப்போனால் பெண்ணில் உடல் மொழியை மொழி இல்லாமலே வாசிக்கவும்,ஆட்கொள்ளவும் மொழியால் ஆன சமூகமும் மொழியால் ஆன அதிகாரமும் அனுமதிக்கிறது.பெண்ணின் உடல் மொழியால் தீர்மானிக்கப்படுவது போல பாலியல் அத்துமீறலை மொழி அகமாக இருந்து செய்கிறது.மொழியும்,பேச்சும் இல்லாதபோதும் மொழி செயல் படும் தருணம் இதுவாகும்.ஏனெனில் பெண்ணைகுறித்த அத்துணை விசயங்களையும் மொழி நமக்கு ஏற்கனவே சொல்லித் தந்திருக்கிறது.மொழியால் நேரடியாக மற்றவர்களிடம் பேச முடியவில்லை என்றாலும் அதிகாரம் மூலமாக செயல்படமுடியும்.பேச்சு அங்கே முக்கியமில்லை.ஆக மொழியால் பேசமுடியாது என்பதே உண்மையாகும்.

உரூஸ்கள்,கந்தூரிகள்,ஈத்கள்,மிலாத்கள் முதலானவை குறித்து

உரூஸ்கள்,கந்தூரிகள்,ஈத்கள்,மிலாத்கள் முதலானவை குறித்து

எச்.முஜீப் ரஹ்மான்

இஸ்லாம் என்பது ஒரு வாழ்வியல் மட்டுமல்ல எளிமையான மார்க்கம்.உயிருக்கு ஆபத்தான சூழலில் ஹராமான எந்த காரியத்தையும் கூட செய்யலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் இஸ்லாம் மிகவும் இலகுவான மார்க்கம்.தர்ஹா என்ற அரபி வார்த்தைக்கு புனித இடம் என்று ஒரு அர்த்தம் இருக்கிறது.அது போல இன்னொரு அர்த்தமும் இருக்கிறது.தர் என்றால் உடல்.ஹாக் என்றால் இடம் ஈத்ஹாக் என்றால் பண்டிகைஇடம் என்பது போல உடல் வைக்கப்பட்டிருக்கும் இடம்.கபுர் என்றால் சவகுழி என்று அர்த்தமாகும்.ஆக கபுர் என்பதற்கும் தர்ஹா என்பதற்கும் வேறுபாடு இருக்கிறது.பள்ளிவாசல் என்றால் மஸ்ஜித் எனப்படும்.ஆக பள்ளிவாசல் என்பது வணங்குமிடமாகும்.நபிகள் நாயகத்தின் காலகட்டத்தின் போது யூதர்களும்,கிறிஸ்தவர்களும் இறைதூதர்களின் அடக்கதலங்களை பள்ளிவாசல் போன்று பயன்படுத்தினார்கள்.தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளை அவர்கள் செய்தனர்.அதனால் நாயகம் முஸ்லிம்களை பார்த்து மஸ்ஜித் போன்று ஆக்காதீர்கள் என்று எச்சரித்தார்கள்.அது போல கபுறின் மீது எந்த கட்டடத்தை கட்டுவதை தடை செய்துள்ளார்கள்.ஆனால் இவற்றை விளக்கும் வகாபிகள் தர்ஹாவையும் மஸ்ஜித்தையும் ஒன்று போல ஒப்பீடு செய்தார்கள்.ஆனால் அது தவறாகும்.ஏனென்றால் ஒவ்வொரு தர்ஹா வளாகத்திலும் பள்ளிவாசல் இருக்கிறது.அங்கு மட்டுமே முஸ்லிம்கள் தொழுதுவருகிறார்கள்.மேலும் நாயகம் சொல்வது போல கபுறுவுக்கு மேல் கட்டிடம் கட்டுவது தவறு.அதாவது சமாதி மீது கட்டிடம் கட்டகூடாது.உண்மையை சொன்னால் எந்த ஒரு தர்ஹாவை எடுத்து பார்த்தாலும் சமாதியின் மீது யாரும் கட்டிடம் கட்டியிருக்கமாட்டார்கள்.மாறாக சமாதியை சுற்றிதான் கட்டிடம் எழுப்பி உள்ளார்கள்.ஆக வகாபிகள் சொல்வது தவறாகும்.மேலும் கலிமா சொல்லிய எவ்வொரு முஸ்லிமும் இறைவனை புகழ்வதும்,இறைத்தூதரை புகழ்வதும்,அம்பியாக்கள்,அவுலியாக்களை புகழ்வதும் ஆகுமானதாகும்.இறைவன் தன்னையே வணங்குமாறு சொல்லுவதும் இறைவனை வணங்குகள் என்று நல்லடியார்கள் சொல்லுவதும் மார்க்கமுறையே ஆகிறது.இறைவனுக்காக தம்மை அர்பணித்துக்கொண்டவர்களை புகழ்வதும் அவர்களுக்காக விழாக்கள் எடுப்பதும் ஆகுமானதே.

மௌலிது என்னும் வார்த்தைக்கு அரபி மொழியில் பிறப்பு என்று பொருளாகும்இஸ்லாமியர்களின்வழக்கத்தில் நபிகள் நாயகம் முஹம்மத் மற்றும் இறைநேசர்கள் ஆகியோர்களின் பிறப்புவாழ்க்கை,வரலாறுஅற்புதங்கள்மாண்புகள் ஆகியவற்றைக் குறித்து பாடப்பட்ட கவிதைகளுக்கு மௌலிது என்றுபெயர்.இதை இஸ்லாமியர்கள் மிகவும் கண்ணியத்துடனும்மரியாதையுடனும்புண்ணியம் கருதியும்ஓதி வருகின்றனர்.மேலும் நல்லடியார்களின் நினைவை கொண்டாடும் விதமாக இஸ்லாத்தை நினைவூட்டும் விதமாக கந்தூரிகளும்,உரூஸ்களும்,சந்தனகூடுகளும்,தேர்பவனிகளும்,இஸ்லாமிய இன்னிசை கச்சேரிகளும்,இஸ்லாமிய கலை,கலாச்சார போட்டிகளும் அனைத்தும் அமைந்துள்ளது.இவை சமூகவியலில் முக்கிய இடம் பிடிக்கும் கலாச்சார நிகழ்வாகும்.மாற்று மதத்தவற்கு ஒப்பாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் இவை இஸ்லாமிய விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூக நிகழ்வாக இருக்கிறது.இஸ்லாமிய மார்க்கத்தை வெறும் சடங்கு,சம்பிரதாயமாக பார்க்கும் இறுக்கமான தளத்திலிருந்து குழந்தைகள்,பெண்கள்,அடித்தளமக்கள் சார்ந்த திருவிழாவாக மாறுவதற்கு சுதந்தர தன்மை நிச்சயப்படுத்தும் ஜனநாயக பூர்வமான ஆனால் எளிமையான கொண்டாடும் மனோநிலையாக மார்க்கத்தை தாரளவாதம் செய்யும் முறை கவனிப்புக்குரியது.இம்மாதிரியான நிகழ்வுகளை ஆய்வு செய்த மார்க்க அறிஞர்களும்,பண்பாட்டு அறிஞர்களும் மதத்தை நிறுவனமயமாக்கலிருந்து வெகுஜனமாக்கலுக்கு உருவாக்கும் நிகழ்வே விழாக்களின் தன்மையாக கணக்கிடுகின்றனர்.

உத்தம நபி அவர்களின் உன்னத நினைவை உயிர்பிப்பது என்பதுமவ்லிது ஓதுவதால் ஏற்படும்பயன்களில் ஒன்றாகும்அதேபோல் இறைநேசர்களின் மௌலிதும் பயனள்ளதாகும்இறைநேசர்களைப்பற்றி நினைவு கூறுமிடங்களில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்குகிறது என்று ஜுனைதுல் பகுதாதிநாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள்.மவ்லிதின் இறுதியான இலக்கு உரூஸ்களே.
நாயகம் கண்மணி அவர்களை குர்ஆனில் இறைவன் பல்வேறு இடங்களில் புகழ்ந்து பேசுகிறான்.
 நபியே) நிச்சயமாக நீங்கள் மேலான நற்குணத்தில் இருக்கிறீர்கள். (68:4)
(நபியே) உங்கள் கீர்த்தியை நாம் உயர்த்தியுள்ளோம். (94:4)
 (நபியே) அகிலத்தாருக்கு அருட்கொடையாகவே உங்களை நாம் அனுப்பியுள்ளோம். (21:107)
அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரலி அவர்கள்
1.    எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்கள்வைகறைப் பொழுது புலரும் நேரத்தில்அவர்கள் இறைவேதத்தை ஓதுகிறார்கள்.
2.    குருட்டுத் தன்மையில் இருந்த எங்களுக்கு நேர்வழி காட்டினார்கள்அவர்கள் கூறியது நிச்சயம்நிகழும் என எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன.
3.    இரவில் இணைவைப்பாளர்கள் படுக்கையில் ஆழ்ந்து கிடக்கும்போது நபியவர்கள்படுக்கையிலிருந்து எழுந்து தொழுவார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலி
நூல்: புகாரி 1087.
ஹஸ்ஸான் இப்னு தாபித் ரலி அவர்கள்,
1.    (இறை மறுப்பாளர்களே) முஹம்மது நபி அவர்களைக் குறைவுபடுத்தி நீங்கள் கவி பாடுகிறீர்கள். அதற்குப் பதிலாக அவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடம் உண்டு.
2.
    நல்லவராகவும் நேரிய வழியில் உள்ளவராகவும் இருக்கிற நபி முஹம்மது அவர்களை குறைவுபடுத்திப் பேசுகிறீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றுவது அவர்களின் அழகிய குணமாகும்.
3.    அவர்கள் விஷயத்தில் இறைவன் கூறினான், சத்தியத்தைக் கூறுகிற ஓர் அடியாரை திருத்தூதராக அனுப்பியுள்ளேன். அதில் ஒளிவு மறைவு இல்லை.
அறிவிப்பாளர்: ஆயிஷா ரலி
நூல்: முஸ்லிம் 4545
கஃப் இப்னு ஜுஹைர் ரலி அவர்கள்,
1.    நபிகள் நாதர் ஸல் அவர்கள் எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் என எனக்குத் தெரிவிக்கப்பட்டது. மன்னிப்பு என்பது இறைத் தூதர் அவர்களிடத்தில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே.
2.    மன்னிப்புத் தேடியவனாக நபி ஸல் அவர்களிடம் நான் வந்தேன். அம்மன்னிப்பு இறைத்தூதர் அவர்களிடம் ஒப்புக் கொள்ளப்பட்டது.
3.    நிச்சயமாக முஹம்மத் நபி அவர்கள் ஒளி கொடுக்கும் பேரொளியாகவும், இறைவனின் வாட்களில் உருவிய வாளாகவும் இருக்கிறார்கள்.
அறிவிப்பாளர்: ஆஸிம் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: ஹாகிம் 6558
நிச்சயமாக இறைவனும் அவனுடைய மலக்குகளும் நபி மீது ஸலவாத் சொல்கிறார்கள். ஈமான் கொண்டவர்களே! அந்த நபி மீது நீங்களும் ஸலவாத் சொல்லுங்கள் சலாமும் கூறுங்கள். (அல்குர்ஆன் 33:56)
   இதற்கு விரிவுரை சொல்லும் போது இமாம் அபுல் முஆலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் 'அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்றால் திருநபியை அமரர்களிடம் போற்றிப் புகழ்கிறான் என்பதே பொருள் என்று கூறுகிறார்கள். -ஸஹீஹுல் புகாரி 2:77
இமாம் இப்னு கதீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், அல்லாஹ் இப்பூவுலகவாசிகளோடு திருநபி மீது ஸலவாத் உரைக்க கட்டளையிட்டதன் நோக்கம், அவ்விண்ணிலும் இம்மண்ணிலும் திருநபியின் புகழ் முழங்கப்பட வேண்டும் என்பதற்கே என்கிறார்கள். -இப்னு கதீர் 3:533
மவ்லிதுகளில் கூறப்படும் ஸலவாத்துகள் இந்த இறைக் கட்டளையை நிறைவேற்றிய பலனைத் தருகிறது.ஸலவாத்துகளின் ஜனரஞ்சகாமான நிகழ்வுகளாக உரூஸ்கள் திகழ்கின்றன.
அதேபோல் இங்கு கூறப்படும் சலாமும், புகழ்ச்சிகளும் நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உடனே எத்திவைக்கப்படுகிறது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், அல்லாஹ்விற்கு மண்ணுலகில் சுற்றிவரும் மலக்குகள் இருக்கிறார்கள். என் உம்மத்தினர் கூறும் சலாமை அவர்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத்
நூல்: நசாயீ 1265
ஹஸ்ஸான் இப்னு தாபித் அவர்களின் அறிவிப்புப்படி நபிகள் நாயகம் அவர்களைப் புகழ்ந்து பாடினால் அதற்கு அல்லாஹ்விடம் கூலியும் கிடைக்கிறது.
அருள்மறையாம் திருக்குர்ஆனும் அண்ணல் நபி அவர்களின் பொன்மொழிகளும் இறைநேசர்கள் பெயரில் மௌலிது ஓதுவதற்கு சான்றாக அமைந்துள்ளன.
அல்குர்ஆன்:
இறைநேசர்களின் வாழ்க்கை வரலாறு, மாண்புகள் மற்றும் அற்புதங்களைக் கூறுபவைகளாகவே மௌலிதுகள் அமைந்துள்ளன. இதற்கு குர்ஆனில் காணப்படும் ஆதாரங்கள்:
1.    மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (அல்குர்ஆன் 3:35-47, 1:16-29)
2.     இஸ்கந்தர் துல்கர்ணைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (அல் குர்ஆன் 18:83-98)
3.    ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (அல்குர்ஆன் 18:65-82)
4.    அஸ்ஹாபுல் கஃப் வாழ்க்கை வரலாறு (அல்குர்ஆன் 1:9-25)
கவனமாகக் கேளுங்கள்! திண்ணமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எப்பயமும் இல்லை. அவர்கள் கவலை சொள்ளவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 10:62)
திண்ணமாக, எங்கள் இறைவன் அல்லாஹ்வே எனக் கூறி பிறகு (அதிலே) நிலைத்திருந்தவர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலை கொள்ளவும் மாட்டார்கள்.
அத்தகையவர்களே சுவர்க்கவாதிகள். அவர்கள் செய்தவற்றிற்கு நற்கூலியாக அதிலே அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 46:13,14)
பருவமில்லாத காலத்திலும் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குக் கிடைத்த கனிவர்க்கங்கள் பற்றியும், (அல்குர்ஆன் 3:37)
சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அவையிலிருந்த ஞானம் பெற்ற ஓர் இறைநேசர் பன்னூற்றுக் கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்த பல்கீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிம்மாசனத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கொண்டு வந்த அற்புதம் பற்றியும் (அல்குர்ஆன் 27:38-40)
முன்னூறு வருடங்களுக்கு மேலாக உறங்கிய குகைத் தோழர்களுக்கு நிகழ்ந்த அற்புதம் பற்றியும் (அல்குர்ஆன் 18:9-25)
அல்குர்ஆன் இனிதாக எடுத்தியம்புகிறது. இதேபோல்தான் இறைநேசர்களின் வாழ்க்கை வரலாறுகள், அற்புதங்கள் மௌலிதுகளில் கூறப்பட்டுள்ளன.
நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள், உங்களில் முன் சென்றோர்களின் நல்லவைகளை எடுத்துக் கூறுங்கள்.
அறிவிப்பாளர்: இப்னு உமர், நூல்கள்: திர்மிதி 940, அபூதாவூத் எண் 4254.
ஜனாஸாவைக் கடந்து சென்ற (அருமைத் தோழர்கள்) புகழ்ந்து பேசினார்கள். இறைத்தூதர் அவர்கள், கடமையாகிவிட்டது என்று கூறினார்கள். எது கடமையானது என்று உமர் அவர்கள் வினவியபோது இறைத்தூதர் அவர்கள் பதிலுரைத்தார்கள், இறந்து போன இம்மனிதரை நீங்கள் புகழ்ந்துரைத்தீர்கள். எனவே அவருக்கு சொர்க்கம் கடமையாகிவிட்டது.
அறிவிப்பாளர்: அனஸ் நூல்கள்: புகாரி 1278, முஸ்லிம் 1578.
எனது திருமண வைபவத்தின் போது இறைத்தூதர் அவர்கள் எனது இல்லம் வந்தார்கள். அந்த நேரத்தில் சிறுமிகள் பத்ர் யுத்தத்தில் ஷஹீதான முன்னோர்களை புகழ்ந்து பாடி தஃப் அடித்துக் கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பாளர்: ருபய்யிஃ பின்த் முஅவ்வித்
நூல்: புகாரி 3700, திர்மிதி 1010, 4276.

இறைத் தூதர் அவர்கள் முஹாஜிர் மற்றும் அன்ஸார் தோழர்களுக்கு பிரார்த்தனை செய்து கவி படித்தார்கள்.
திண்ணமாக வாழ்வு என்பது மறுமையின் வாழ்வுதான். இறைவனே! அன்ஸார்-முஹாஜிர் தோழர்களை மன்னிப்பாயாக!
நிச்சயமாக மறுமை நலனைத் தவிர வேறு எந்த நலனும் கிடையாது. இறைவனே! அன்ஸார்-முஹாஜிர் தோழர்களுக்கு பரகத் (அபிவிருத்தி) செய்வாயாக!
உறுதியாக மறுமை வாழ்வைத் தவிர வேறு எந்த வாழ்வும் இல்லை. இறைவனே! அன்ஸார் – முஹாஜிர் தோழர்களை கண்ணியப்படுத்துவாயாக!
திண்ணமாக நற்கூலி என்றாலே மறுமையின் நற்கூலிதான். இறைவனே! அன்ஸார்-முஹாஜிர் தோழர்களுக்கு கருணை புரிவாயாக!
அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 2622, 2623, 2741, 3616.
நாங்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை சந்திக்க சென்றோம். அப்போது ஹஸ்ஸான் இப்னு தாபித் ரளியல்லாஹு அன்ஹு தனது கவிகளின் மூலம் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தனர். (அவற்றில் ஒன்று)
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா நல்லொழுக்கமும், நுண்ணறிவும் மிக்கவர்கள், ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எந்தவொரு பெண்ணைப் பற்றியும் தவறாகப் பேச மாட்டார்கள்.
அறிவிப்பாளர்: மஸ்ரூக் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 3831, முஸ்லிம் 4543
மவ்லிது ஓதக் கூடியவர்களுக்கு மலக்குமார்களைக் கொண்டு பாதுகாப்பு அரண் இறைவன் ஏற்படுத்திக் கொடுக்கிறான்.
இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கூறினார்கள்,
நீங்கள் இறைவனுக்காகவும் இறைத்தூதருக்காவும் கவிபாடும் காலமெல்லாம் பரிசுத்த ஆன்மா(வான ஜிப்ரயில் அலைஹிஸ்ஸலாம்) உங்களைப் பலப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.
நூல்: முஸ்லிம் 4545.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவின் ஒரு பகுதிக்குச் சென்றார்கள். அங்கே சில சிறுமிகள் தஃப் அடித்து பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்கள். (அவற்றில் ஒன்று) நாங்கள் பனூ நஜ்ஜார் குடும்பத்தைச் சார்ந்த சிறுமிகள். முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறந்த அண்டை வீட்டுக்காரர் ஆவார்கள்.இந்த ஹதீது மிலாதுகள்,கந்தூரிகள் போன்ற விழாக்களுக்கு அனுமதியளிப்பதாக இருக்கிறது.
(இதைக் கேட்ட) நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், திண்ணமாக நான் உங்களை நேசிக்கிறேன்.(இதை) அல்லாஹ் அறிகிறான்.
அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: இப்னு மாஜா 1889.
கஃப் இப்னு ஜுஹைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளிவாசலில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்து படித்தார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு ஜத்ஆன் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: ஹாகிம் 6555.
பள்ளிவாசலில் ஹஸ்ஸான் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் கவி பாடிக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கடைக்கண் பார்வையால் பார்த்தார்கள். அப்போது ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்,
உங்களை விட சிறந்தவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தபோதே இப்பள்ளிவாசலில் கவி பாடியுள்ளேன்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 2973, முஸ்லிம் 4539.
இதை நல்லடியார்களின் தர்ஹாக்களில் பாராயணங்களாக பாடிவரும் முறைக்கும் அவை உரூஸ்சின் முக்கிய நிகழ்வாக இருக்கிறது என்பதற்க்கும் ஆதாரமாக எடுத்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பள்ளிவாசலில் ஒரு மிம்பரை அமைத்துக் கொடுத்தார்கள்.
அதிலே அவர்கள் ஏறி நின்று முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையேப் புகழ்வார்கள்.
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.
நூல்: திர்மிதி 2773.

மௌலிது ஓதும் அமலை பெரும் விழாக்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக முதலில் ஏற்படுத்தியவர், தலைசிறந்த வள்ளல் தன்மை மிக்க அரசர்களில் ஒருவரான 'அல்மலிக்குல் முழஃப்பர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அலியிப்னு புக்தகீன்' என்பவர் ஆவார்.
இந்த மன்னர் இனிய பல பொது சேவைகள் செய்தவர் என்று இமாம் சுயூத்தி அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த மன்னர் ரபியுல் அவ்வலில் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மௌலிதிற்கு ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்க, மாபெரும் கூட்டத்தை திரட்டி வந்தார் என்றும், இந்த மன்னர் வீரமும், வியத்தகு ஞானமும், கொடைத்தன்மையும் கொண்டவர் என்றும் இப்னு கதீர் அவர்கள் எழுதிய வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் ஏற்பாடு செய்த மௌலிதின் விருந்தில் ஞானிகள் மற்றும் ஸூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கெல்லாம் மன்னர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அன்பளிப்புகளும் வழங்கினார். ஆண்டு தோறும் மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்பர் இந்த மௌலிதிற்காக செலவிட்டார்.
புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்களில் அல்ஹாபிழ் இப்னு ஜவ்ஸி, இப்னுல் இமாதுல் ஹன்பலிய்யீ, இமாம் ஸர்கானீ, இப்னு கல்கான், அல்ஹாபிழ் இப்னு கதீர் போன்றோர் இந்த மன்னரின் வரலாற்றையும், அவர் மவ்லிது மஜ்லிஸ் நடத்திய தனிச்சிறப்பையும் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.
வஹ்ஹாபிகளின் கருத்துக்களுக்கு முன்வடிவம் கொடுத்த இப்னு தைமிய்யா கூட தமது 'இக்திளா' நூல் 2:136 ல் கூறுகிறார், 'திருநபியின் மௌலிது நடத்துவதால் மகத்தான நற்கூலி கிடைக்கும்' என்று.
எனக்கு உஹது மலை அளவு தங்கம் இருந்தால் அவையனைத்தையும் அருமை நபிகள் நாயகம் அவர்களது மவுலிது ஷரீபை நடத்துவதற்காக செலவு செய்வதையே நான் பெரிதும் விரும்புவேன் என்று ஹஜ்ரத் ஹஸன் பஸரீ அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஸெய்யிதுத் தாயிபா -ஸூபியாக்களின் சக்கரவர்த்தி ஹஜ்ரத் ஜுனைதுல் பக்தாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'எவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மவ்லிது ஷரீபுக்கு ஆஜராகி அதை மகிமைப் படுத்தி சிறப்புறச் செய்தாரோ நிச்சயமாக அவர் காமிலியத்தான –சம்பூரணமான-ஈமானைப் பெற்றுக் கொண்டவராவார்' என்று.
ஆதார நூற்கள்: தர்ஜுமத்து இக்தில் ஜவ்ஹர் பீ மவுலிதிந் நபிய்யில் அஸ்ஹர், பர்ஸன்ஜீயின் ஷரஹு.
பர்ஸன்ஜீ மவுலிதை அரபுத் தமிழில் மொழி பெயர்த்துள்ள மர்ஹும் அல்ஹாஜ் அபூபக்கர் மிஸ்கீன் சாகிபு ஆலிம் பாஸி (காயல்பட்டணம் ஜாவியா கலீபா வ முதர்ரிஸ்) அவர்களும் அந்நூலில் மேற் சொன்ன ஆதாரங்களை எடுத்துக் கூறியுள்ளார்கள்.
எந்த இடத்தில் பெருமானார் அவர்களின் மௌலிது ஓதப்படுகிறதோ, அந்த இடத்தை ஒருவர் நாடினால், நிச்சயமாக அவர், சுவனப் பூங்காக்களில் இருந்தும் ஒரு பூங்காவை நாடிவிட்டார். ஏனெனில், ஏந்தல் நபி நாயகம் அவர்கள் மீது கொண்ட அன்பினாலேயே தவிர அவ்விடத்தை அவர் நாடியிருக்கவில்லை. என்னையொருவர் நேசித்தால் அவர், என்னுடனேயே சுவர்க்கத்தில் இருப்பார் என்பது நபி மொழியாகும் என்று மாமேதை அஷ்ஷெய்கு ஸரியுஸ் ஸிக்திய்யி அவர்கள் கூறியுள்ளார்கள்.
மவ்லிது ஓதுவது அந்த வருடம் முழுவதும் பாதுகாப்பாகவும், நாட்டத்தையும் நோக்கத்தையும் அடையச் செய்வதின் மூலமாக உடனடியாக நற்செய்தியாகவும் அமைந்திருப்பது மௌலிதின் தனித்தன்மையைச் சார்ந்தது என்று அனுபவத்தின் வாயிலாக அறியப்பட்டிருப்பதாக இமாம் கஸ்தலானி அவர்கள் கூறியுள்ளார்கள்.
நாயகம் அவர்கள் பிறந்த புனித இடத்தை மக்காவாசிகள் அன்றும் இன்றும் தரிசிக்கும் அமல், ரபியுல் அவ்வல் 12 ம் நாள் நடைபெற்று வந்ததாக மவாஹிபுல் லதுன்னியா என்ற நூல் கூறுகிறது.இந்த அடிப்படையிலேயே உரூஸ்கள் எடுக்க மார்க்கம் அனுமதிக்கிறது என்கிறோம்.
முந்தைய பிந்தைய மார்;க்க மேதைகள் நபி அவர்களின் பிறந்த நாள் இரவிலும் பகலிலும் மவ்லிது எனும் அமலில் ஈடுபடுவதில் ஒத்திருந்தார்கள் என்று அஷ்ஷெய்க் யூசுபுன்னபஹானி அவர்கள் கூறியுள்ளார்கள்.இந்த அடிப்படையிலேயே மிலாது விழா எடுக்க மார்க்கத்தில் அனுமதி இருக்கிறது என்கிறோம்.
எந்த ஒரு வீட்டிலோ, பள்ளிவாசலிலோ மஹல்லாவிலோ மாநபி அவர்களின் மௌலிது ஓதப்பட்டால் அவ்விடத்தைச் சார்ந்தவர்களை மலக்குகள் சூழ்ந்தே தவிர இல்லை. அவர்களை கருணையினால் அல்லாஹ் சூழ வைத்து விடுகிறான் என்று இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி அவர்கள் தமது அல்வஸாயில் ஃபீ ஷறஹிஷ் ஷமாயில் என்ற கிதாபில் கூறியுள்ளார்கள்.
இஸ்லாமிய கலாச்சார நிகழ்வுகளாக போன உரூஸ்கள்,கந்தூரிகள்,சந்தன கூடுகள்,தேர்பவனிகள் சர்வநிச்சயமாக இஸ்லாமிய மார்க்கத்தை விளம்பர படுத்தவும்.இஸ்லாமிய மார்க்கம் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கிறது என்பதையும் இஸ்லாமிய அழைப்பை மாற்று மதத்தவரிடம் கொண்டாட்டமனநிலையை அமைந்து ஒரு உறவு மேற்கொண்டு அதன் மூலம் அழைப்பை எளிதாக்கும் முறையும் இவற்றில் பொதுவாக அமைந்திருக்கிறது.ஜனநாயக பூர்வமான சமூக நல்லிணக்க அம்சங்களை பேணுவது இஸ்லாத்தை காயப்படுத்துவது ஆகாது.அதே சமயம் இறுக்கமான மனநிலையை உருவாக்கும் தூய இஸ்லாமிய கருத்தியல் ஜிஹாத்தை முக்கியத்துவம் கொடுத்து நல்லிணக்கத்துக்கு மாறான ஒரு வன்முறை அல்லது தீவிரவாதத்தை வளர்க்கிறது.இஸ்லாத்தில் வணக்க வழிபாடுகளை மையப்படுத்தும் நோக்கமானது தீவிரவாதத்தை ஊக்கு விப்பது போல இருக்கிறது.ஆனால் இஸ்லாம் வணக்க வழிபாடுகளை விட ஒரு மனிதனின் வாழ்வியல் முறையாக இருப்பதால் சமூகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பண்பட்டவனாக நல்லிணக்கம் உடையவனாக இருக்கவேண்டும் என்ற பொதுநலனை அடிப்படையாக கொண்டே இவ்வித உரூஸ்கள்,விழாக்கள் தகவமைக்கப்பட்டிருக்கின்றன.நாயகம் பெருமானாரின் நினைவு தினத்தை நினைவுகூரும் மிலாதுநபி பண்டிகைகளும்,சூபிகள்,நல்லடியார்களை நினைவுகூரும் விழாக்களும்,ஆசுரா பண்டிகைகளும்,பெருநாட்களும் மனிதசமூகத்தின் இருப்புக்கான மகிழ்வுக்கான தருணங்கள் ஆகும்.இவைகளை மறுதலித்து கொண்டு மனிதனால் இருக்கமுடியாது.பிறந்த நாள்களும்,தினம் தினம் புதிய விழாக்களும்,மகிழ்வு தினங்களும் கடைபிடிக்கப்படுவதற்கான காரணம் அவை மனிதனை மையப்படுத்துகின்றன.மனித வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களை அதிகப்படுத்துகின்றன.இவைகளை அனாச்சாரம் என்பது வன்முறை மனம் படைத்தவரின் காட்டுமிராண்டி மொழியாகும்.மூடநம்பிக்கைகள்,அனாச்சாரங்கள் என்று தீண்டாமை கற்பிப்பது நாகரீகமற்ற மனதின் மொழியாகும்.இஸ்லாம் என்ற மார்க்கம் வணக்கத்துக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பதில்லை.அது பிறப்பு முதல் இறப்பு வரையிலான ஒவ்வொரு விசயங்களுக்கும் மார்க்கத்தை சொல்வதால் விழாக்கள்,பண்டிகைகள்,கொண்டாட்டங்கள் ஆகியவை ஈமானுக்கு களங்கம் வராத வகையில் அமைந்து இருப்பதை வரவேற்கிறது.இஸ்லாத்தில் இவையனைத்துக்கும் வேர்கள் குரான்,ஹதீதுகளில் இருக்கிறது.இவையாவும் சுன்னாவாக இருக்கிறது என்பதை ஆழ்ந்து வாசிக்கும் போதே கண்டுகொள்ளமுடியும்.

ஒரு மார்க்சியவாதியின் பின்மார்க்சிய சிந்தனைகள்

ஒரு மார்க்சியவாதியின் பின்மார்க்சிய சிந்தனைகள் தத்துவத்தின் முடிவிலாப் பெருவெளியில் தடம் பதிக்கும் ஒரு சிந்தனையாளனின் பயணம் எப்ப...