Tuesday, February 10, 2009

தண்டனைச்சட்டத்தின் பொய் தர்க்கவாதமும் அதிகாரத்தின் புனைவுகளும்


தண்டனைச்சட்டத்தின் பொய் தர்க்கவாதமும் அதிகாரத்தின் புனைவுகளும்




சமூக கட்டமைப்பிற்க்கு புனைவுகளும்,பொய் தர்க்க வாதம்களும் பேருதவியாக இருந்து வருகிறது.சமூக பெரும்கதையாடல்களில் அதிகாரத்தின் சொல்லாடல் பேரிய அதிகார அமைப்பு கொண்டாதாக இருக்கிறது.சமூக கட்டமைப்பில் ஆளுவோர்,ஆளப்படுவோர் இடையிலான கருத்துருவாக்கம்கள் பொய்தர்க்கவாதத்தை உடையதாக இருக்கிறது.சிறந்த குடிமகன் என்பவன் சட்டத்தை மதித்து நடப்பவன் x நடக்காதவன் என்பன போன்ற இருமை எதிர்வில் கட்டமைக்கப்படுகி

ன்ற பொய் தர்க்கவாதம்கள் யாவுமே ஆளுவோர் நலனை பாதுகாப்பதில் மாத்திரமே இருக்கிறது. சமூகம்களும்,தனிமனிதனும் அதிகார அக அமைப்பில் வெறுமனே கூத்தாட்டத்தை நடத்துகின்றன,ஆட்டுவிக்கப்படும் பாவைகளாக இருக்க வைப்பதன் நிமித்தம் அதிகார அக அமைப்பில் ஊடாட்டம் தொடர்பாக அவை திகழ்ந்துவருகின்றன.அதிகார அக அமைப்பில் மையம் ஒன்றிருந்த போதும் படிநிலை,உபகிளைகள் போன்றவை தான் பிரதானமாக இருக்கிறது.அதிகாரத்தின் புனைவுகள் யாவுமே நீதி,நேர்மை,சட்டம் போன்ற சொல்லடல்கள் வழி ஊடுபாவும்.


அதிகாரத்தின் உடல் ஆண்பாலாக இருக்கிறது.பெண்களுக்கு யாதொரு வகையிலும் பயன்படாதவாறு சமூக கட்டுமானம்களின் வழி இயம்கும்.

அதிகாரத்தின் புனைவுகள் ஆள்கைகளின் கருத்தியல் நடைமுறைகளுக்கு இயைந்து செல்லும் தன்மை உடையது.குடிமைகளின் நலன் என்ற பிரதான சொல்லாடல் வழியே இந்த புனைவு ஆள்கைகளின் நலனை காத்து நிற்கும்.அதிகாரத்தின் புனைவுகளை கற்பிதம் செய்வதில் மதமும்,அரசும்,சமூக நிறுவனம்களும் முக்கிய பம்காற்றுகின்றன.சமூக நிகழ்வுகளுக்கு தக்கன தமது செயல்பாடுகளை வகுத்துக் கொண்டு சில நியாயபடுத்தல்களை செய்து கொண்டு ஆள்கைகளின் வியூகம்களுக்கு அதிகாரம் தனது சார்பில் புனைவுகளை எப்போதும் உற்பத்தி செய்த வண்ணமிருக்கிறது.வரலாற்றில் ஆள்கைகளும்,குடிமைகளும் எம்கெல்லாம் இருக்கின்றனரோ அம்கெல்லாம் அதிகாரமும்,சட்டமும் தோன்றிவிடுகிறது.அரசு என்கிற கருத்தாக்கம் என்பது கூட பிற்ப்படாடு உருவாகியதே.


அதிகாரம் பிறக்கும் சமூகம்களில் ஒடுக்குதலும்,ஒடும்கிநிக்கலும் பொதுவாக காணப்படுகிறது.ஆள்கை என்ற அதிகார அக அமைப்பு முறையில் ஒடுக்குதல் என்பது சமூக,பொருளாதார,அர்சியல்,மத,பண்பாடு போன்ற பல்வேறு வடிவம்களில் காணப்படும்.இன்றைய சூழலில் பத்திரிக்கை,தகவல் தொடர்பியல் ஊடகம்கள் கூட அதிகார அக அமைப்பின் இன்றைய பரிணாமம்களே.இவையாவுமே ஆள்கை,ஒடுக்கும் நலன் பாதுகாப்பதற்க்காக இருக்கிறது.


இந்தியசூழலில் பொதுவான சட்டவாக்கியமாக காணப்படும் ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்ற பொய்தர்க்கவாதம் தண்டனை சட்டத்தின் மூலாதாரமாக இருக்கிறது.ஆனால் ஒடும்குபவை அதிகாரத்தின் கோரப்படியில் தண்டிக்கப்ப்டுகிறது என்பது நடைமுறையாக இருக்கிறது.ஒடுக்குபவை அதிகாரத்தின் எந்த வடிவாக இருந்தாலும் எத்தகைய கோரக்குற்றம்களை செய்த போதிலும் யாதொரு தண்டனையும் பெறாமல் சமூகத்தில் இயம்குவதற்க்கான தளம்களை அதிகார அமைப்புகள் ஏற்படுத்திக்கொடுத்துள்ளன.பொய்யான நீதிகள் மக்கள் முன்பு நீதிமொழிகளாக சட்டஒழும்கை காப்பாற்றுதல் பொருட்டு ஏமாற்றுவதாக இருக்கிறது.ஒடுக்குபவை நீதிகளையும்,நியாயம்களையும்,சட்டஒழும்கையும் குறித்தே அதிக அக்கரை படுவதாக காட்டிக்கொள்ளும்.புனைவு மொழிகள் நீதியை வழம்கி கொண்டிருக்கின்றன என்று குடிமைகள் நினைத்து கொள்கின்றன.


கண்காணிப்பின் அரசியலானது ஒடுக்கப்பட்டவைகளின் உரிமைகளை நசுக்குவதற்க்காக ஒடுக்கப்படுபவைகளால் அதிகார புனைவுகள்மூலம்

ஏற்படுத்தப்பட்டது.இதில் தண்டனை சட்டம் குறித்த பொது உளவியல் அணுகுமுறை சமூக நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்தாக்கமாக இருக்கிறது.அதிகாரத்தின் புனைவுகள் எப்போதும் நீதி,நியாயம்,தர்மம் என்று கற்பிதம் செய்யபடுபவையாக இருக்கிறது.இப்புனைவுகள் ஆணின் ஆதிக்கத்திற்க்கும் அதிரார,ஆதிக்க அரசு அகமுறைக்கு சமூகத்தை முன்னிறுத்தி ஆதிக்கம் செலுத்துகின்றன.மேலும் அரசியல் கோட்பாட்டாளர்கள் பொத்தாம் பொதுவாக புனைவுகளை இருமை எதிர்வாக கட்டமைப்பு செய்து அதிகார நடைமுறையை உருவாக்குன்றனர். மேலும் காலனீய,தேசிய,சோசலிச பெரும்கதையாடல்கள் யாவும் அதிகார குவிப்பை செய்கிறது என்பதை வரலாறு கூறுகிறது.இந்த அதிகாரம் ஆளுமைகளின் கைகளில் உள்ளன என்பதை மறுக்க முடியாது.


மாக்ஸ் வெப்பர் என்ற சமூகவியலாளர் அதிகார நிறுவன செயல்பாடுகளை அர்த்தமுள்ள,பகுத்தறிவுக்கு பொருந்துகிற அமைப்பாக இருக்கிறது என்றார்.ஆனால் கோபம்,பழிவாம்கல்,பொறாமை உள்ளிட்ட காழ்ப்புணர்வு மனோபாவம்கள் அதிகார விதிகளுக்கு பொருத்த கூடாது என்றார்.என்றபோதிலும் தனிமனித விருப்புவெறுப்புகளே நாளடவில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஒடுக்கபடுபவகைளுக்கு எதிராக செயல்படுகின்றன,ஒடுக்கபடுபவை பெண்களாக,விளிம்புநிலையினராக,சமூக,பொருளாதார அடிமைகளாக இருப்பதை காணலாம்.


அந்தோணியா கிராம்சி,மிஷல் பூக்கோ போன்ற அறிஞர்கள் பண்பாட்டு முரண்பாடுகள்,ஒடுக்கு முறைகள்,ஒடுக்கப்பட்டமனித உடல்கள்,பாலியல் நடைமுறைகள் ,பாலியல் சொல்லாடல்கள்,அறிவு புலம்கள் ஆகியன குறித்தும் சமூக நிறுவன மேலாதிக்கம்,அறிவின் மேலாதிக்கம்,மொழியின் மூலம் கட்டமைக்கப்படும் சொல்லாடல்களின் மேலாதிக்கம் ஆகியவை குறித்த கருத்துக்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் அடித்தள வாழ்வை பற்றி பேசுவதாக அமைந்துள்ளது.இந்தியாவில் சமீபத்தில் தடா,பொடா போன்ற சட்டம்கள் விளிம்புநிலை முஸ்லிம்களை குற்றவாளிகளாக கருத்தில் கொண்டு அவர்களை அடக்கி ஒடுக்குவதற்க்காக நடைமுறைப்படுத்தினர்.இந்த சட்டத்தின் புனைவு தளவும்,பொய்தர்க்க வாதமும் மனித உரிமைகளுக்கு எதிரானவை என்பதில் சந்தேகம் இல்லை.


மனித சமூக பாகுபாடுகளை தற்கால சிந்தனைமுறைகள் கேள்விக்கு உட்படுத்தி வருகையில் மொழியியல் முக்கியத்துவம் பெற்றது.சமூகத்தில் விலகியோடுபவர்களின் வரலாறு கவனம் பெற்ற்து.சமூக அடிமைத்தனம்களுக்கு சமூகமயமாக்கலும் மொழியும் முக்கியமானவைகளாகும்.பாலியல் பாகுபாடும்,விளிம்புநிலையினர் பாகுபாடும் சமூகபண்புகளாக,நடத்தைகளாக கற்பிக்கப்பட்டிருக்கிறது.சமூகமயமாக்கம் மொழிவழியே நிகழ்கிறது.எனவே மொழி முக்கியமான இடம் வகிக்கிறது.மொழிவழி நடைபெறும் ஆதிக்கத்தன்மையை அறிந்துகொள்ள விமர்சன மொழியியல் பெரிதும் உதவும்.சமூக அரசியல் ஆதிக்க சக்திகள் மொழிப்பிரதியையும்,விளக்கவுரைகளையும் பயன்படுத்தி அதிகாரமையத்தை தம்மிடம் தக்க வைத்திருப்பதை விமர்சன மொழியியல் சுட்டிக்காட்டுகிறது.நாம் பயன்படுத்தும் மொழிக்கூறுகள் எல்லாம் சமூக செயல்பாடுகளின் ஓர் அம்கமாகவும் அவற்றின் விளைவுகளாகவுமே அமைக்கின்றன என பௌலர் கூறுவார்.பொதுவாக சமூக மொழியியலாளர் சமூகத்திற்கும் மொழிக்கும் இடையே உள்ள உறவை மட்டும் விளக்குவர்.ஆனால் விமர்சன மொழியியலாளர் மொழியின் பிரதி,உரை அமைப்பு வழியாக சமூக்,பொருளாதார மேம்பாடும்,அதிகார குவிப்பும் ஒரு சாரரால் கையகபடுத்தப்படுவதை விளக்குவார்.


சமூக மொழியியலில் மொழிக்கும் சமூகத்துக்குமான உறவுகள் பெரிதும் ஆராயப்பட்டன.அவ்வாய்வுகளில் மொழி நிர்ணயவாதமும்,தொடர்நிலை வாதமும் முக்கியமானவையாகும்.

1.சமூகத்தின் சுற்றுப்புறச் சூழல் மனிதனின் மொழியை பாதிக்கிறது.

2.மனிதன் தன்னுடைய மொழி அமைப்பை வைத்து தான் உலகை பாகுபாடு செய்கிறான்.

3.மொழியும்,சமூகமும் ஒன்றைஒன்று பாதிக்கின்றன.

என்பனவற்றின் அடிப்படையில்தான் விவாதம்கள் அமைகின்றன.ஒருவர் சமூகத்தை பார்க்கும் பார்வை தன்னிடம் உள்ள மொழியின் அமைப்பை வைத்துதான் என்பது மொழிநிர்ணயவாதக் கோட்பாட்டின்[linguistic determinism] அடிப்படை ஆகும்.ஒவ்வொரு சமூகமும் இவ்வுலகத்தை வேறுவேறு விதமாக பாகுபடுத்துவதற்கு அச்சமூகம்களில் காணப்படும் வேறுபட்ட மொழியமைப்பே காரணம் என்பதை மொழி நிர்ணயவாத கோட்பாடு வலியுறுத்துகிறது.இதை தான் மொழியியலில் சபீர்-உர்ப் கருதுகோள் என்று சொல்லுவார்கள்.


மொழி நிர்ணயவாதிகளின் கருத்தை இரண்டு நிலைகளில் காணலாம்.முதல் நிலையில் ஒரு சமுதாய மக்கள் உலகப்பொருள்களை தம்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப அப்பொருளின் தன்மையை வைத்து பல்வேறு பெயர்களில் சுட்டுகின்றனர் என்பதை அறிய முடியும்.வேறுபட்ட சமுதாயத்தினர் தíகள் சமூகச் சூழலுக்கு ஏற்பச் சுற்றுப்புறப் பொருள்களை பிரிப்பார்கள்.எடுத்துகாட்டாக எஸ்கிமோ மக்கள் தíகள் வாழ்க்கை பனிப்பகுதியை சார்ந்திருப்பதால் பிற சமூகத்தினரை விடப் பனியைப் பல்வேறு விதíகளாக பிரிப்பார்கள் .அதே போல மீனவர்களும் கடல்,அலை,காற்று முதலியவற்றை பாகுபடுத்தும் விதம் பிறசமூகத்தினரிடம் இருந்து வேறுபட்டு நிற்கும்.இவ்வாறு ஒவ்வொரு சமூகமும் தíகளின் பயன்பாட்டுக்கும் தíகளின் தேவைகளுக்கும் ஏற்ப பொருள்களை பாகுபாடு செய்கின்றன.பொருள்களை பயன்படுத்தும் விதம் சமூக அதிகாரத்துக்கும்,தடைகளுக்கும் காரணமாக அமைந்து மொழிவழியாகபுனைவுகளை உருவாக்குகின்றன. அந்தந்த மொழியில் வழíகப்படும் வழக்காறுகள்,சொற்கள் ஆகியவை படித்தரத்தை நிறுவுவதாக அமைய பொருள் பாகுபாடு வழிகோலுகிறது.ஒரு சமூகத்தில் வழíகப்படும் வழக்காறுகள் பிற சமூகத்தில் இல்லாமல் இருக்கலாம்.இதை அடிப்படையாக கொண்டு படித்தர கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.ஒரு சமூகத்தினர் ஒரு சொல்லாகக் கொண்டு பயன்படுத்திய கருத்தை பிற சமூகத்தினர் ஒரு தொடராக அல்லது விவரிப்பாக விவரிக்க முடியும்.இது தான் புனைவுகளுக்கு காரணமாகிறது.எனவே வழக்காறுகளும்,சொற்களும்,விவரணைகளும் சமூக மேலாண்மை செய்யும் நோக்கிலும் செயல்பட கூடியதாகும்.


மொழிநிர்ணயவாதிகளின் இரண்டாவது நிலை மொழியை வைத்துதான் மனிதன் உலகை பார்க்கிறான் என்பதாகும்.நமது சிந்தனை அமைப்பு என்பது நம்மிடம் உள்ள மொழியமைப்பை பொறுத்தே அமையும்.ஒவ்வொரு சமூகத்தினரின் உலகமும் அவர்களின் மொழி அமைப்பை ஒட்டியே காணப்படுகிறது.ஒரு கருத்துக்கு பல சொற்கள் ஒரு சமூகத்தில் இருப்பதும் பிற சமூகத்தில் சொற்கள் குறைந்து இருப்பதும் அந்தந்த சமூகப்பண்பாட்டு அடிப்படையில் அமையும்.இவை இவ்விரு சமூகத்தினரும் இரண்டு உலகப்பார்வை உள்ளவர்கள் என்பதையே விளக்கும்.இக்கருது கோளை சபீர் என்ற அறிஞர் ஐரோப்பிய மொழிகளின் அமைப்பையும் ஹேப்பி என்ற மொழி அமைப்பையும் வைத்து விளக்குவார்.ஹேப்பி இன மக்கள் ஒவ்வொரு இடமாக மாறிமாறி இயíகி கொண்டே இருக்கும் வாழ்க்கை முறையை உடையவர்கள்.ஹேப்பி மொழியின் இலக்கண அமைப்பு முறை ஒரு வித இயíகு தன்மையுடையதாகவும்,பிற மொழியமைப்பு ஒருவித நிலைப்பு தன்மை காட்டுவதையும் வைத்து இருவேறு சமூகத்தினரது வாழ்க்கை முறையோடு சபீர் விளக்குவார்.எல்லா சமூக மக்களும்,வாழும் சூழலுக்கு ஏற்பவும் வாழ்க்கை முறைக்கு ஏற்பவும் மொழியை பயன்படுத்துவதில் வேறுபாடு உண்டு என்பதை அறியலாம்.மொழியில் வழíகப்படும் சொற்களில் நியாயம்,அநியாயம் என்ற ரீதியில் அதிகாரத்தை கட்டமைப்பதையும்,படித்தர நோக்கில் இழிவு படுத்துவதும்,மொழியின் வாயிலாக புனைவுகள்,தர்க்கவாதíகள் மூலமாக சட்டமும்,அதிகாரமும் இயíகுவதையும் காணலாம்.


ஒரு சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் சமூக தகுதியையும்,அவர்கள் மீது திணிக்கப்படும் கற்பிதíகளையும் மொழியை ஆய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.மொழிவழி நடத்தைகளும்,மொழிப்பயன்பாடும் சமூகத்திற்கு சமூகம் மாறிவரும்.ஆனால் மொழி என்பது அமைப்பு நிலையில் ஒன்றாகவே இருக்கும்.இதைதான் நோம் சாம்ஸ்கி என்ற மொழியியல் அறிஞர் மொழியின் ஆழ்நிலை அமைப்பு ஒன்றாகவும் புற நிலை அமைப்புகள் மொழிக்கு மொழி மாறியும் வரும் என்றார்.எனவே மொழி அமைப்பு நிலையில் அதாவது ஒலி,ஒலியன்,உருபன்,வாக்கியம் போன்றவையும் அவற்றைச்சுட்டும் விதிகளும் மொழிநிலையின் பால் பேதத்தை காட்டாது.ஆனால் இம்மொழி அமைப்புகளை சமூகத்தில் பயன்படுத்தும் போது சில கருத்தாக்கíகள் தோன்றி பால் வித்தியாசíகளும்,படித்தர வித்தியாசíகளும்,அதிகாரமும்,அறமும்,புனைய்வுகளும்,கற்பிதíகளும் தோன்றிவிடுகின்றன.எடுத்துக்காட்டாக விபச்சாரம் தண்டனைக்குரியது.என்பதையும் அழகி கைது செய்யப்பட்டாள் என்ற வாக்கியíகளையும் பார்கிற போது தண்டனைச்சட்டத்தின் தர்க்கவாதம் சரி என்பது போல தோன்றும்.ஆனால் விபச்சாரம் புரிந்த ஆண் என்னவானன் என்பது தான் அதிகாரத்தின் இயíகுதளத்தை புரிந்து கொள்ள ஏதுவாகிறது.அழகி என்ற பெயர்ச்சொல் பார்த்தவுடன் பல்வேறு கருத்துக்களை நம் மனதில் உருவாக்கினாலும் எந்த பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பதை வினைமுற்றில் வரும் அள் விகுதி வழியாக அறியலாம்.சமுதாயத்தில் ஆண்பெண் பால் வேறுபாடுகளுக்கு காரணமும்,மொழியில் இருக்கும் பால்வேறுபாடுகளுக்கு காரணமும் மொழி அமைப்பு தான் காரணம்.ஒடுக்கப்பட்டவர்களை ஒடுக்கும் நிலையில் வைத்திருக்கவும் சமூக வித்தியாசíகள் வாயிலாக படித்தர பேதம் நிலை கொள்ளுவதற்க்கும் மொழியே காரண்மாக அமைந்துள்ளது.


மொழிப்பயன்பாட்டில் பாலின பேதமும்,சமூக ஏற்றதாழ்வுகளும் பொதுவாக காணப்படுகிறது.மொழிப்பயன்பாட்டில் தண்டனைச்சட்டíகளின் பொய்யான தர்க்கவாதíகள் நிலைகொண்டுள்ளன.அது போல அதிகாரத்தின் புனைவுகள் மொழிபயன்பாட்டின் வழியே தக்கவைத்து கொண்டிருக்கின்றன என்பதை மொழிபயன்பாட்டை வைத்து புரிந்து கொள்ளமுடியும்.மொழி பயன்பாட்டில் பாலின வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை ராபின் லேகாப் என்பவரின் ஆய்வு தெளிவுபடுத்தியிருக்கிறது.பெண்கள் பயன்படுத்தும் மொழியில்


1.ஓர் அழுத்தம் இல்லாதது

2.உடன்பாட்டு கேள்விகளை அடிக்கடி கேட்பது

3.அதிகமான அடைகள்,அதிக மரியாதை சொற்கள் ஆகியவற்றை பயன்படுத்துதல்

4.மொழியை எளிமையாக சரளமாக பயன்படுத்த முடியாமை

5.மொழியில் முற்று பெறாத வாக்கியíகள் அதிகம் இருப்பது

போன்ற கூறுகள் காணப்படுகின்றன.இந்த வகையிலேயே ஒடுக்கப்பட்டவர்களின் மொழியும் அமைந்திருக்கிறது.



--------------------------------------------------------------------------------

No comments:

கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான பார்வை

கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான  பார்வை அர்ப்பணிப்புள்ள வன அதிகாரியான அஜய் மற்றும் அபர்ணா ஆகியோரின் திருமணத்துடன் திரைப்படம் தொடங்குக...