கலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்
Friday, June 23, 2006
பின் நவீன இஸ்லாம்
பின் நவீன இஸ்லாம்
பின் நவீனத்துவ கோட்பாடு பொதுவாக உலகப் பொதுவான இருப்பையும் வட்டார சூழலின் தன்மையையும் அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. பின் நவீனத்துவம் ஒரு பெரும்பாவமாக கூட கருதப்படுகிற மனோநிலை கூட கருத்தியல்வாதிகளிடம் காணப்படுகிறது. உலக பொதுவான நவீனத்துவ அறிவையும், நவீன ஒழுக்கவியலையும் கேள்விக்குட்படுத்துவது அதன் பொது நெறியாக இருக்கிறது. எனவே மையமற்ற விளிம்பு நிலை(Decentered) தன்மை உடையதாக பின் நவீனத்துவ சொல்லாடல்கள் பல்வேறு வடிவங்களில் பின் காலனீய கதையாடல்களாகவும(Post colonial discourse) பின் நவீனத்துவ விமர்சன நோக்காகவும், பின் அமைப்பியல் ஆய்வாகவும், பின் நவீனத்துவ பெண்ணியமாகவும், கட்டுடைத்தலையும், மரபு தோற்றங்களுக்கும், வரலாற்றில் தொல் அறிவிலுமாக பண்பாடு களத்திலான உரையாடல்களாகவும், விவாதமாகவும் பகுத்தறிவையும், பகுத்தறிவு வாதத்தையும் மறுதலிப்பதாகவும் இருக்கின்றது. பின் நவீனத்துவ சொல்லாடல் முறையை எளிதில் சுருக்கிவிட முடியாதாகையினால் பெருங் கதையாடல்களின் தகர்வை நியாயபடத்தும் அடிப்படையிலான முறையுடன் ஒழுக்க நெறிக்கு அப்பால் சென்று காலம், வெளி சம்பந்தமான தவிர்க்க முடியாத காரணங்களை கூட கேள்விக்குட்படுத்துவதை காணலாம்.
லயோர்டு முன் மொழிந்த விளக்கமான பின் நவீனத்துவம் என்பது பெருங்கதையாடல்களின் தகர்வு முக்கியமானதாக கருதப்படுகிறது. (Post modernism is an expression of incredulity at grand nattatives) பின் தொழிற் சமூகமானவை (Post Industrial Society) பின் அறிவொளி நவீனத்துடன் தொடர்பு கொண்டு இருப்பதினால் அதன் நவீன நிறுவனங்களான திருமணம், மரபுசார் குடும்பம், பாலின பங்கு மற்றும் தேசீயம் போன்றவைகளை இது நிராகரிக்கிறது. இஸ்லாமிய உலக பின் நவீனத்துவம் கூட மத வடிவ நிறுவனங்களையும், நவீனத்துவ நிறுவனங்களான மதசார்பின்மை, தேசீயம் ஆகியவைகளுடன் வேறுபட்ட அரசியல் அலகுகளான ஒழுக்கம், அரசியல் நெறி போன்ற சொல்லாடல்களுக்கு தேவையான விவாதங்களை முதலில் முன்மொழிந்தது.
வரலாற்று சொல்லாடல்களில் மனித சுதந்திரம், மரபுக்கு எதிரான நவீன பிரக்ஞை, விஞ்ஞான தாக்கம், காரணகாரிய, பயன்பாட்டு வாதங்கள், நவீன சமூக கட்டமைப்பு, தேச கட்டுமானம் போன்றவைகள் நவீன சூழலுடன் தொடர்புக் கொண்டிருந்தன. பின் நவீனத்துவம் இவைகளை கேள்விக்குட்படுத்தியதும் நவீன அரசியல் பண்பாட்டை எதிர்த்ததும் பண்பாட்டு சொல்லாடலின் கட்டுடைப்பில் மனித ஆன்மாவை புதிய தளத்துக்கு நகர்த்தி உயர்ந்த சமூகத்துக்கு மற்றும் செயல் தளமும் இதில் அடங்கியிருக்கிறது. நவீனத்துவம் கட்டமைக்கின்ற பல்வேறு சொல்லாடல்களை எதிர் கொள்வதும் பின் நவீனத்துவத்தின் பணியாக இருக்கிறது. பயங்கரவாதம் என்பது மிக முக்கியமான நவீன நிறுவனங்களின் எதிரியாகும். தேசம் வடிவமைக்கும் இறையாண்மை, ஒழுக்க நெறிக்கு விரோதமாக இவை பார்க்கப்படுகிறது. இன்று பயங்கரவாதம் என்பது தேசத்தை தாண்டிய உலக போராட்டமாக இருக்கிறது. விடுதலை வீரர்களை தேச விரோதிகளாக பாவித்து விடுதலையை தீவிரவாதமாக கருதுகின்ற சூழலை கணக்கிலெடுத்துக் கொண்டு பின் நவீனத்துவம் மறுவிடுதலையை(ReLiberty) பேசுகின்றது. நவீனத்துவத்தை இரண்டு விதமாக பின் நவீனத்துவம் அணுகுகிறது. ஒன்று பண்பாட்டு ரீதியிலானது மற்றது தத்துவ ரீதியிலானது. பண்பாட்டு ரீதியில் புதிய இயக்கத்தை கலை வடிவங்கள், அரசியல், வாழ்வு நிலை, நிறுவனமய எதிர்ப்பு என்றும் தத்துவ ரீதியாக உண்மை பற்றிய அடிப்படைகள் அதிகார தொடர்புகள் வழி ஆய்கின்றது.
நவீனத்துவம் கடவுளை மையப்படுத்தாது, காரணத்தை, இறையாண்மை அதிகாரத்தை, உண்மை ஆதாரங்கள் போன்றவற்றை முன்னிறுத்துவதை மூலதன உண்மை (Capital T) கட்டமைப்பாக பின் நவீனத்துவம் அடையாளம் காணத் தொடங்கியது. இந்த வகையில் பின் நவீனத்துவம் நாகரீக வளர்ச்சிக்குமுன்னேற்றத்துக்கு கேடு விளைவிப்பதாக இருக்கிறது என்ற விமர்சனமும் எழாமலில்லை. மனிதன் எப்படி வாழ்கின்றானோ அது தான் வாழ்க்கை. எனவே வளர்ச்சி, முன்னேற்றம் என்பவைகள் வெறும் புனைவே கடவுள் மட்டும் இல்லாமல், காரணம் இல்லாமல், உலக கண்ணோட்டம் இல்லாமல் மனிதன் வாழ்வதையே முக்கிய அம்சமாக பின் நவீனத்துவம் கருதுகிறது. பூக்கோ, அதிகாரம் தான் கடவுள் என்றார். தெரிதா, மனித நாகரீகம் கட்டுடைக்க படவேண்டும். நடனத்திலிருந்து சப்தத்திற்கு கடவுளில் இருந்து கடவுளுக்கு, கருத்தில் இருந்து கருத்துக்கு என்று வலியுறுத்தினார். ரோட்டி, வாழ்க்கையென்பது வெற்றிகளை சார்ந்தது மாறாக நல்ல வாழ்க்கை என்றோ, நல்ல வெற்றியன்றோ அல்ல. என்றார். இவ்வாறாக வட்டாரங்களும், விதிகளும் ஆன மனித ஆன்மாவை போராட வைக்க வேண்டும் என்கிறது பின் நவீனத்துவம்.
இன்றைய சூழலில் உலகமயமாதல் (Globalaisation) நிகழ்வு பிரதானமானதாக கருதப்படுகிறது. அமைப்புசார் செயல்பாடுகள் மற்றும் சொல்லாடல்கள் நவீன காலத்திற்கு பிறகு கண்ணீர் விட துவங்கியுள்ளன. நாம் யாத்திரை உலகில் வாழ்கிறோம். இப்படியான நிலையில் நவீனத்துவமும் பின் நவீனத்துவமும் இடையிலான போர் உலக மயமாதலுக்கு ஒரு வகையில் காரணியாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வுக்கிடையில் நவீனத்துவத்தை மறுதலிக்கின்ற போக்கு மத அடிப்படைவாதத்துக்கு (Fundamentalism) துணை போவதாக இருக்கிறது என்று விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. ஒப்பீடளவில் சொல்லப்படும் இந்த விமர்சனம் நியாயமானதல்ல. ஏனெனில் பின் நவீனத்துவ கூறுகள் மத அடிபடைவாதத்தையும், ஒற்றை அடையாளத்தையும், ஒற்றை அதிகாரங்களையும், ஒற்றை அர்த்தங்களையும் கேலி செய்கிறது. எனவே பரவலான பொருளின் மதம் கட்டமைப்பு செய்கின்ற அடிப்படைவாதத்தையும், நிறுவனமையத்தையும் நவீனத்துவத்தின் பகுத்தறிவையும் விசாரணைபடுத்துவதால் மதத்தின் நம்பிக்கைகள் குறித்த பரவல் நம்பிக்கை முன்னிறுத்தப்படுகின்றன. இச்சூழல்களை கணக்கிலெடுத்துக் கொண்டு பின் நவீனத்துவ இஸ்லாத்தை மதிப்பிடுவது எளிதாக முடியும். காலம் முக்கிய விஷயமாக இருப்பதினால் பின் நவீன காலத்தில் வாழ்வதினால் பின் நவீனத்துவ இஸ்லாம் என்று விளங்கி அதனை வரையறுக்கலாம்.
இஸ்லாம் என்கிற பொருங்கதையாடலை கட்டுடைக்கின்ற போது சன்னி, ஷியா, அ ?லே ?தீஸ், அ ?லே குரான், அ ?மதியாக்கள், வகாபிகள், சகாபிகள் என்று பல்வேறு முகங்கள் இருப்பதை காணலாம். யார் உண்மையான முஸ்லிம் ? எது இஸ்லாமிய நெறி ? என்ற கேள்விகளாலே அனைத்து விதமான பிரச்சனைகளும் எழுந்து கொண்டிருக்கிறது. இஸ்லாமிய புனித சொல்லாடல்களின் இருப்பு இருமை எதிர்வில் சிறந்தது,தாழ்ந்தது, நல்லது,கெட்டது என்பது போன்று கட்டமைக்கப் பட்டிருக்கிறது. ஷிர்க், பித்அத், தக்லீத், குப்ர், ஹராம், ஹலால் என்பன போன்ற சொல்லாடல்கள் கூட பன்முக தன்மையை நிராகரித்த அதிகார வடிவை, அர்த்தத்தை கொண்டு இருப்பதினால் ‘இஸ்லாமிய பன்முகம்’ கணக்கிலெடுக்கப்படவில்லை. இஸ்லாம் என்ற தீனுக்கு முஸ்லிம்கள் அனைவரும் அவரவர் நம்பிக்கை சார்பு அடிப்படையில் பரந்துபட்ட பன்முக தன்மை இருக்கின்றது. இந்த வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு ‘மற்றவை’ (Others) குறித்த பொருள் சுட்டலை (Crisis of referent) பிரச்சினைக்குட்படுத்த வேண்டும். மேலும் நவீன சிந்தனைகளான கோட்பாடுகள், மனித பகுத்தறிவு, பார்வைகள், இயற்கை, சாராம்சம், தேற்றுவாய், ஒற்றை அடையாளம், ஒருங்கிணைந்த தன்னிலை ஆகியவற்றின் அரசியலை கட்டுடைக்கின்ற போது பெருங்கதையாடல்களின் தகர்வில், பின் நவீனத்தை இஸ்லாம் துவங்குகின்றது.
இஸ்லாம் எனும் பெருங்கதையாடல் பரப்புகுள் தீன், ஷரியத் என்ற சொல்லாடல்கள் பற்றிய கற்பிதங்கள் குறித்த மறு சிந்தனை பின் நவீனத்துவ இஸ்லாத்தின் முக்கிய உட்பொருளாக இருக்கிறது. மேற்கட்டுமானங்களுக்கும், உட் கட்டுமானங்களுக்கும் இடையிலான வித்தியாசங்களற்ற பொதுமை அரசியலை முன் வைத்து இயங்குகின்ற போது ஒற்றை தீர்வுகள் ஏதேச்சகாரமாகிப் போகின்றன. தீனுக்கும், ஷரியத்துக்குமான கட்டமைப்பு சிக்கல்களை பொதுமை படுத்தி ஆய்கின்ற போது மத அடிப்படைவாதம், தூய்மைவாதம், நவீன பகுத்தறிவு வாதங்கள் அடிப்பட்டுப் போகின்றன. இதனால் மதநீக்க இஸ்லாம் (Secular Islam) என்கிற நிலையை காண முடியும். தீன் எனும் வார்த்தைக்கு மூன்று வகைப்பொருள்கள் இருக்கின்றன. ஒன்று கண்ணியம், அதிகாரம், ஆட்சி, கட்டளையிடுவது முதலானவை. இரண்டாவது இவற்றுக்கு நேர் எதிரானது. அடிபணிவது, உட்படுவது, அடிமைப்படுத்துவது, பின் பற்றுவது முதலியவை, மூன்றாவது விசாரணை செய்வது, தீர்ப்பு வழங்குவது செயல்களுக்கு நற்கூலியும் தண்டனையும் கொடுப்பது. திருக்குர் ஆனில் தீன் எனும் வார்த்தை இந்த மூன்று பொருள்களிலும் வந்திருக்கிறது. இதை திருகுர் ஆன் வருமாறு கூறுகிறது.
“மேலும், தங்கள் தீனை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கியவர்களாகவும், முற்றிலும் ஒருமனப்பட்டவர்களாய் அல்லாஹ்வுக்கு அடிபணிய வேண்டும், என்பதையும் தவிர வேறு எந்த கட்டளையும் அவர்களுக்கு இடப்படவில்லை.” (98:5)
இந்த நிலையில் தீன் என்பது இறைவனைத் தலைவனாகவும், எஜமானனாகவும் அதிகாரியாகவும் ஒப்புக் கொள்வது.இறைவனுக்கு அடிபணிந்து பணிபுரிவது அவனை பின்பற்றுவது இறைவனின் விசாரணைக்கு அஞ்சுவது, அவனுடைய தண்டனைக்குப் பயப்படுவது, அவனையே நற்கூலிக்கு ஆசைப்படுவது என்றாகிறது.
இறைவசனம் கூறுகிறது.
“ஆதத்தின் மக்களே (நினைவில் வையுங்கள்) உங்களிலிருந்தே என்னுடைய வசனங்களை ஒதிக் காண்பிக்கின்ற தூதர்கள் உங்களிடம் வந்தால், அப்போது எவர்கள் மாறு செய்வதிலிருந்து விலகிக் கொள்கிறார்களோ, மேலும் தங்களுடைய நடத்தையைச் சீர்திருத்திக் கொள்கின்றார்களோ அவர்களுக்கு எத்தகைய அச்சமில்லை ; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்” (7:35)
இதிலிருந்து இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் நேரடியாகக் கட்டளை அனுப்புவதில்லை என்றும், அவன் தன் திருத்தூரின் வழியாகவே கட்டளைகளை அனுப்புகிறான் என்றும் தெளிவாகிறது. எனவே ஒருவன் இறைவனை அதிகாரம் செலுத்துகின்றவனாய் ஏற்றுக் கொண்டு, இறைத்தூதர் மூலம் வந்திருக்கின்ற சட்டங்கள் அனைத்துக்கும் பணிந்தால், மேலும் இறைத்தூதர்களைப் பின்பற்றி நடந்தால் இதற்குத்தான் தீன் என்று பெயராகும்.எனவே தீன் என்ற சொல்லாடலின் பன்முகத்தன்மை இங்கு பிரதானமாகயிருக்கிறது.அடுத்தப்படியாக ஷரியத் என்ற சொல்லாடலை பற்றிய உறுதிப் பாடை தகர்கிற போது அறிவாதாரங்களின் தொகுப்பு ஏதோன்றையும் உறுதிப்பட சொல்லிட விடமுடியாது என்ற நிலையில் அணுகும் போது ஷரியத் என்றால் பாதை, மார்க்கம் என்று பொருள்படுவதை காணலாம். ஒருவன் இறைவனை அதிகாரியாக ஏற்றுக்கொண்டு, அவனுக்கு (இறைவன்) பணிந்து நடப்பதாக ஒப்புக் கொண்டு இறைத்தூதர் அவர்களை இறைவனிடமிருந்து வந்திருக்கின்ற இறைமறை என்று ஏற்றுக் கொண்டால் தீனுக்குள் நுழைந்துவிடுவான். அதன் பிறகு, எந்த வழியில் இறைவனுக்கு அவன் பணிய வேண்டுமோ, அவனுடைய (இறைவன்) கட்டளைகளைச் செயல்படுத்தும் போது எந்த வழியில் அவன் நடக்க வேண்டுமோ அந்த வழிக்கு தான் ஷரிஅத் என்று பெயர்.
தீனுக்கும் ஷரியத்துக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், தீன் எப்போதும் ஒன்றுதான். அது எப்போதும் ஒன்றாகவே இருந்தது, இப்போதும் ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் ஷரிஅத் எனப்படும் மார்க்கங்கள் பல வந்திருக்கின்றன. பல ஷரிஅத்துகள் ரத்து செய்யப்பட்டன. பல ஷரிஅத்துகள் திருத்தமும் மாறுதலும் செய்யப்பட்டன. ஷரியத்தை திருத்துவதால் என்றைக்கும் தீன் மாறியதில்லை.நூ ? (அலை) அவர்களின் தீனே தான் இப்ராஹிம் (அலை) அவர்களின் தீனாகும். அதுவே மூஸா (அலை), ஷீஜப் (அலை) ஸாலிஹ் (அலை), ஜுத் அலை ஆகியோரின் தீனும் ஆகும். அதுவே பெருமானார் (ஸல்) அவர்களின் தீனும் ஆகும். ஆனால் இவர்களின் ஷரிஅத்துகள் - மார்க்கங்கள் ஏதேனும் ஒருவிதத்தில் ஒன்றுக்கொன்று மாறுபட்டே இருந்தன. தொமுகை, நோன்பு ஆகியவற்றை நிறைவேற்றுகின்ற வழிகள், ஒரு ஷரி அத்தில் ஒரு விதமாகவும், மறு ஷரியத்தில் வேறு விதமாகவும் இருக்கின்றன. ஹராம், ஹலால், தூய்மை, திருமணம், விவாகரத்து, சொத்து பிரிவினை ஆகியவை பற்றிய சட்டங்களில் ஒரு ஷரிஅத்துக்கும் இன்னொரு ஷரியத்துக்கும் சிறிது வேறுபாடு இருந்து வந்தது. இந்த வேறுபாடுகள் இருந்தாலும் எல்லோரும் முஸ்லிம்களாகவே இருந்தார்கள். நூஹ் நபியை பின்பற்றிவர்களும், இப்ராஹிம் நபியை பின்பற்றியவர்களும், மூஸா நபியை பின்பற்றியவர்களும் எல்லாம் முஸ்லிம்கள் தான், ஏனெனில் எல்லோர்க்கும் தீன் ஒன்றுதான்.
ஷரிஅத் சட்டங்களின் வேற்றுமை ஏற்படுவதால் தீனில் வேற்றுமை ஏற்படுவதில்லை என்று தெளிவாக இருக்கிறது. இவ்வாறான வேறுபாடுகள் தீனுக்கும், ஷரியத்துக்கும் இருக்கின்ற பட்டசத்தில் இறைவன் கட்டளையிடுகிறான். “முந்திய மார்க்கங்கள், வழிகள் அனைத்தையும் இப்போது நாம் ரத்து செய்கின்றோம். இனி இறை தூதர் வழியையொட்டி பணிபுரியட்டும்” இதன் பின்னர் பெருமானால் (ஸல்) அவர்கள் மூலம் இறைவன் அனுப்பியிருக்கின்ற மார்க்கத்தை இறைமார்க்கம் என்று ஒப்புக் கொண்டு அதன்படி நடப்பது தான் கடமை என்று உணர்ந்தவர்கள் யாவரும் முஸ்லிம்கள் என்றழைக்கப்பட்டனர். அதன் பின்னரும் மார்க்கத்தின் சட்டங்களை ஒருவர் ஒரு விதமாகவும், மற்றொருவர் வேறு விதமாகவும் புரிந்துக் கொண்டு, அவ்விருவரும் தாம் புரிந்துக் கொண்டதற்கு தக்கப்படி செயலாற்றுகின்றார்கள் என்றால் அவர்களின் செயல்களில் எவ்வளவு தான் வேற்றுமை இருந்தாலும் அவர்களில் எவரும் பணியாளன் என்ற தகுதியை இழந்து விடவில்லை. ஏனெனில் அவர்கள் எந்த வழியில் நடந்து கொண்டிருந்தாலும் ‘இது இறை கட்டளை’ என்று நினைத்தே அந்த வழியில் நடந்து கொண்டிருக்கின்றனர். எனவே “நான் தான் பணியாளன், மற்றவன் பணியாளன் அல்லன்” என்று கூறுவது அறியாமையே ஆகும்.
அதிகபட்சம் “அதிபதியின் கட்டளையை நான் சரியாகப் புரிந்துக் கொண்டேன். அவர் சரியாக புரிந்து கொள்ள வில்லை” என்று அவர் சொல்லலாம். ஆனால் அவனை பணியாளன் எனும் படித்தரத்திலிருந்து நீக்கி விட முடியாது. எனவே பணியாற்றும் வழிகளில் வேற்றுமை தோன்றுவதினால், தீனில் வேற்றுமை தோன்றுவதில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஷரியத்தின் - பாதைகளின் அணுகுமுறை பற்றிய வேறுபாடுகளை, பிரச்சனைகளை ‘தீன்’ என்று நினைத்துக் கொள்வதால் வரும் வேறுபாடுகளே அன்றி வேறில்லை என்பது இஸ்லாமிய அணுகு முறையில் கூட காணக்கிடக்கிறது. மேலும் தீன், ஷரியத் போன்ற வித்தியாசங்கள் தோற்றுவிக்கும் வேறுபாடுகளையும் தீனின் வேறுபாடுகள் யாதுமிருந்தாலும், ஷரியத்தின் வேறுபாடுகள் யாதுமிருந்தாலும் அத்தனையும் வேறுபாடுகளாகவே இருந்து விட்டு போகின்ற மையமற்ற நிலையை பின் நவீனத்துவ இஸ்லாம் வலியுறுத்துகிறது. எத்தனை குழுக்கள் இருந்தாலும் வேறுபாடுகள் இருந்தாலும் அது தீனின் வேறுபாடு அல்ல என்பதை புரிந்து கொண்டால் இஸ்லாத்துக்குள் குழப்பங்கள் தோன்றhது. இந்த குழப்பங்களை அரசியலாக்கி பார்க்கின்ற நிலை உருவாகிய போது ‘அதிகாரம்’ கட்டமைக்கப் படுகின்ற தேர்வுகள் நிலை கொள்கின்றன. நிறுவனங்கள் நிறுவனங்களின் அதிகாரத்தன்மையே மிக முக்கிய செயல்பாட்டு காரணியாக திகழத் தொடங்கியது இந்த இடத்தில் தான்.
அதிகாரம் என்றhல் என்ன ? என்று பூக்கோ சொல்கிற போது எதை தடை செய்ய வேண்டும் ? மனிதர்கள் செய்வதில் என்ன தடைகளை ஏற்படுத்தலாம் என்ற தீர்மான காரணியே அதிகாரம் என்பதாகும். அதிகாரத்தின் வியூகங்கள் எப்போதும் அறிவையே சார்ந்திருக்கும். எனவே அறிவு தான் அதிகாரத்தை உற்பத்தி செய்கிறது எனும் போது இஸ்லாமிய வேறுபாடுகளின் தன்மை ‘மற்றவை’ குறித்த அதிகார அறிவில் மையம் கொண்டு இருப்பதை காண முடிகிறது. அறிவு, சுதந்திரம், உண்மை போன்ற சொல்லாடல்களை கொண்டு நிறுவன அமைப்புகள் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே பகுத்தறிவும், பகுத்தறிவுவாதமும் முக்கியமானவைகளாக உருவாகின்றது. அவரவர் சார்பின் படியிலான அறிவு வாதம் உருவாகி அதிகாரம் நடைமுறைபடுத்த படுகின்ற போது போராட்டங்களும், குழப்பங்களும் அதிகரிக்கத்தான் செய்யும். அதிகாரம் மேலும் உண்மையின் பொதுவான அரசியல் ஆகும். இது உண்மையைப் பேச சொல்லுகிறது எனும் போது உண்மை என்பது உற்பத்தி செய்யபடுவது என்று புலனாகிறது. எனவே பொதுவான உண்மை என்றோ, நிரந்தர உண்மை என்றோ எதுவும் இருக்க முடியாது. எல்லாம் கட்டமைக்கப்பட்டது தான் என்கிற நிலை முக்கியமானதாகும்.
இந்த அணுகு முறை இஸ்லாம் பற்றிய மற்றைய அணுகு முறைகளுக்கு, நோக்கங்களுக்கும் கூட ஏதுவாக இருக்கிறது. அந்த வகையில் நவீனத்துவ கருத்தியல்களும் சேர்ந்து விட அதிகாரத்தின் தன்மை மாற துவங்குகின்றது. இஸ்லாமிய மானுடநேயம், இஸ்லாமிய நீதி, இஸ்லாமிய சோசலிஷம், இஸ்லாமியவகை கருத்தியல்கள் பல நவீனத்தால் கட்டமைப்பு செய்யப்படுகின்றன. இவ்வாறான பெருங்கதையாடல்களின் தகர்வு, முக்கியமானதாக திகழவேண்டியதில் தான் பின் நவீனத்துவ இஸ்லாம் நிலைபாடு கொண்டிருக்கிறது. பொதுமை படுத்தல்களை தவிர்த்து வேறுபாடுகளை, வேறுபாடுகளாக பார்க்க வேண்டியதன் நிர்பந்தம் அவசியமானதாகும். இஸ்லாத்தில் எத்தனை வகையிருந்தாலும், எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் அவைகளை அங்கீகரித்துக் கொண்டு முஸ்லிம்கள் அனைவருக்கும் அவரவர்கான நம்பிக்கையை நிலைநாட்டுவதை பின் நவீனத்துவ இஸ்லாம் வலியுறுத்துகிறது.எத்தனை வேறுபாடுகள் கொண்டு இஸ்லாம் இருந்த போதிலும் அவற்றை ஏற்று நம்பிக்கையின் பரிணாமங்களை வளர்ச்சியுற செய்வதே பின் நவீனத்துவ இஸ்லாத்தின் முக்கிய நிலைபாடாகும். இதையே மாற்று இஸ்லாம் (Alternetive Islam) எனவும், தாராளவாத இஸ்லாம் (Liberal Islam) எனவும், மதநீக்க இஸ்லாம் (Seculer Islam) எனவும் விளங்கிக் கொள்ள இயலும்.
நவீனத்துவம் இஸ்லாமிய பெருங்கதையாடல் பரப்புக்குள் அரசியல், தத்துவம், பொருளியல், அறிவியல், கலை, இலக்கியம் என சகலத்துறைகளையும் பாதித்த விஷயமாகும். அரசு, ஜனநாயகம், தேசம், தேசீயம், நகரம், மத்திய தர சமூக உருவாக்கம், சமூக நீதி, கல்வி, மருத்துவம், குடும்ப அமைப்பு போன்றவைகளை நவீனத்துவம் இறுக்கத்தை அளித்த போது இயல்பான செயல்பாடுகள் அமுக்கப்பட்டன. நவீனத்துவத்தின் பெருங் கொடையான வெகுஜன ஊடகங்களின் மேட்டிமைத்தனம், புனைவுகளை, கற்பிதங்களை, வரைவுகளை, அத்துகளை கட்டமைப்பு செய்தன. காலனீய செயல்பாடுகளும், கல்வித்துறை சீர்திருத்தங்களும், நுகர்வு கலாச்சார வலை பின்னலும், மேட்டிமை சக்திகளின் மைய உருவாக்கத்தின் ஒன்றிவிட்டன. கடந்த முன்னூறு வருடகாலமாக இஸ்லாம் ஐரோப்பிய அறிவொளியையும், நவீனத்துவத்தையும் எதிரிட்டே வளர்திருக்கிறது. மத்திய இஸ்லாமிய நாரீகத்தின் ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்கள் யாவும் நவீனத்துடன் மழுங்கடிக்கப்பட்டன. எனவே முன் நவீன நிலைபாட்டை எடுக்க வேண்டியது.
பின் நவீனத்துவ இஸ்லாத்தின் உட்கிடங்கையாகும். அல் கஸாலி, இபின் கல்தூன், இபின் ருஸ்த் போன்றவர்களின் மரபார்ந்த ஆன்மீக தத்துவ நீட்சி, ஆன்மீக பாதை மீண்டும் புனரமைப்பு அல்லது மறுஉருவாக்கம் செய்தலை முன்னிறுத்த வேண்டும். அவர்கள் முன்வைக்கும் லோகதாய ஆய்வுகள், இறையியல் நிலைபாடுகள் யாவும் பகுத்தறிவு காலத்துக்கு முந்தைய காலகட்டத்திலேயே இஸ்லாமிய இறையியலுக்கு மாற்று சிந்தனைகளாக திகழ்ந்தன. கடந்த ஆயிரத்து முன்னூறு வருட காலமாக செழுமை பெற்று வரும் தீன் மற்றும் ஷரியத் நிலைபாடுகள் பொதுவான உண்மையை, தேவையான விளக்கங்களுடன், காரணங்களுடன் விவாதம் நடத்து வளர்ந்த இஸ்லாமிய தத்துவ மரபு மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டும். அறிவாதார பன்முக தன்மைகள், எதார்த்த சமூக பன்மைத்தனம் வித்தியாசங்களாக வேறுபாடுகளை ஏற்றுக் கொண்டு வேறுபட்ட சொல்லாடல்களை உற்பத்தி செய்வது பின் நவீனத்துவ இஸ்லாமிய செயல்திட்டமாக கொள்ளலாம். ஆன்மீகவாதம், புதிர்மைவாதம், அனுபதிவாதம் போன்ற ஆன்மீக செயல்பாடுகள் இஸ்லாமிய மறுபுனரமைக்கு உட்படுத்தபடவேண்டும்.
நவீனத்துவம் வளர்ந்து விட்ட காலனீயம், காலனீயத்தில் இருந்து விடுபட்ட நாடுகளிலும் வர்க்க ரீதியான அணுகுதலில் மக்கள் கூறுபட்டு நிற்கிறார்கள். இதனால் அடித்தட்டு மக்கள் (Subaltern People) மையங்களை கட்டமைக்கும் அரசியல், பொருளாதார, கலாச்சார நிறுவனங்களில் இருந்து தூர விலகியிருக்கும் விளிம்புகளை பின் நவீனத்துவம் கணக்கிலெடுத்துக் கொள்கிறது. வரலாற்றில் தப்பி நின்ற அடித்தள மக்களின் செயல்பாடுகளையும், கலாச்சார சமூக உறவுகளும், நம்பிக்கைகளும் பேசபடுகின்ற காலத்தில் பின் நவீனத்துவ இஸ்லாம் அத்தகைய மறுசிந்தனையை முன் வைக்கிறது. நவீனத்துவ பெருங்கதையாடல் தகர்வில் அறிவு உருவாக்கத்தின் மூலம் கையகப்படுத்துவதின் சாத்தியமின்மையை பேசப்படுகின்ற பின் நவீனத்துவம் ‘பிற’ சமூகங்களை பற்றிய பொதுவிதிகள், வழமைகள், சட்டகங்கள், அதிகார வடிவங்கள் மற்றும் பண்பாட்டு தளத்திலான தடைகள், விலங்குகள் ஆகியவற்றை ஒழுங்கின்மையிலிருந்து ஒழுங்கை கண்டறியும் முயற்சியாக செய்தது. உலகு தழுவிய செயல்பாடுகள் பார்வைகளை குறுக்கி குறிப்பான காலத்துக்குரிய, குறிப்பான பருதிக்குரிய பார்வைகளாக பிராந்தியமயப்படுத்தும் அணுகுமுறை என்பது தொpயுதா சொல்வது போல் பொருள்கள் மற்றும் நிகழ்வுகள் வரலாறு கடந்ததாகப் பார்க்காமல் அவற்றை குறிப்பான வரலாற்றுக்குரியதாக மாற்ற வேண்டும் எனும் நீட்சியோடு சார்ந்திருக்கிறது ை ?டேக்கர் சொல்வது போல் பழமையை எழுதுதல் என்பது தேங்கிப்போன, நிலையான ஒன்றைப் பற்றிய அறிக்கை எழுதும் முயற்சிக்கு மாற்றாக செய்யப்பட்டது. விளிம்புகள் ஒரு படித்தானவை அல்ல. ஒற்றை கருத்தியல் கொண்டவையுமல்ல. விளிம்பு என்பது ஒரு ஒப்பீட்டான கருத்தாக்கமாக ஒரு மையத்திற்கு விளிம்பாக இருக்கும் ஒன்று அதினினும் விளிம்புடன் ஒப்பிடும் போது மையமாக செயல்படுவதும் உண்டு. எனினும் மையத்தில் இருந்து விலகியோடுவதை, தப்பியோடியவர்களை கணக்கிலெடுக்க வேண்டும்.
இத்தகைய சூழலை கவனத்தில் கொண்டு பின் நவீனத்துவ இஸ்லாம் விளிம்பு பற்றிய கவனத்தைச் செலுத்துகிறது. அந்த வகையில் தமிழ் சூழலில் நாட்டார் மரபு கூறுகளுடன் இணைந்திருக்கும் தாராளவாத இஸ்லாமான தர் ?ா பண்பாடும் அதை சார்ந்த செயல்பாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகிறது. நிறுவனங்களின் இறுக்கத்தின் பிடியிலிருந்து வெகுஜன மக்கள் நம்பிக்கையை மீட்டெடுத்த தமிழ் சித்தர்களும், தமிழ் சூபிகளும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர்களே. மேலும் பின் நவீனத்துவம் முன் வைக்கும் நிகிவிஷம், கெப்டிபிசம், மிஸ்டிசிஸம் ஆகியவை நம்பிக்கையின் விளிம்பு நிலையாலானவை. அந்த வகையில் தமிழ் ஞான மெய் ஞானிகள் ஆன்மீக மரபு பின் நவீனத்துவ இஸ்லாமிய நம்பிக்கையாக பார்க்கபடுகிறது. நவீனத்துவத்துக்கு முந்தைய ஆன்மீகமும், நம்பிக்கை செயல்பாடுகளும் அப்படியே பின் நவீனத்துவத்தை இஸ்லாம் ஒருவகையில் சில கூறுகளை ஏற்றுக் கொள்கிறது.
தாலாட்டு, ஒப்பாரி, குத்து, கும்மி, சொல், குறம், குறுவஞ்சி, கப்பல்பாட்டு போன்ற நாட்டுப்புற செல்வாக்குடைய மரபு விதங்களை கொண்டு ஞான இலக்கியங்கள் ஞானம் பேசுகின்றன. ஞானப் பொருளை எளிமைபடுத்தபடும் நோக்கும் முக்கியமானதாக இருக்கின்றன. தமிழ் சூழலில் மெய்ஞான அடியார்கள் சூபியிச தத்துவ ஞானத்தை அடிப்படையாக கொண்டு செயல்பட்டவர்கள். இஸ்லாத்தில் சூபியிஸம் ஒரு தத்துவ மரபாக பார்க்க படுகிறது. எனவே ஜுனைத் பக்தாதி, இமாம் கசாலி, மன்சூர் ஹல்லாஜ, ஷகாபுதீன் சுராவத்தி போன்றோர்களின் சூபி தத்துவ ஞானம், பிராந்திய கூறுகளுடன் விளிம்பு நிலையில் மையமற்ற மையமாக, பின்நவீனத்துவ நம்பிக்கை அல்லது இறையியல் தத்துவமாக கருதபடுவதால் பின் நவீனத்துவ இஸ்லாத்தின் நீட்சியும், மறுகட்டமைப்புக்குள்ளாகும். அனுபூதிவாதமும(Mysticism) இதன் உள் இயங்கு தளங்களாக மேற்கட்டுமான, அடிக்கட்டுமான அமைப்புகளுக்கு ஞான இலக்கியங்கள், தங்களுடைய பங்கை ஆற்றிக் கொண்டிருக்கின்றன என்று சொன்னால் அது மிகையொன்றுமில்லை. எனவே பின் நவீனத்துவ இஸ்லாம் தமிழ் சூழலில் சூபி நல்லடியார்களின் ஆன்மீக நெறிகளுடன் தொடர்புடையது எனும் போது அதன் விளிம்பு நிலை மிகவும் உதறிய கட்டமைப்பற்ற ஆன்மீக இறையியல்(Post modern Theology) சிந்தனை முறைகள் பின்நவீன இஸ்லாமிய இறையியல் ஆகும்.
- எச்.முஜீப் ரஹ்மான்
Subscribe to:
Post Comments (Atom)
சாமான்யரின் வெறி - பணி மலையாளபடம்
ஜோஜு ஜார்ஜ், பணி(வேலை) திரைப்படத்தின் மூலம் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநராக அறிமுகமாகிறார், சரியான வேகத்தில் நிகழ்வுகள் வெளிப்படும் ...
-
தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பின்கா...
-
தமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...
-
கவிஞர் அனார் : தமிழின் நவீன கவிதைகளுக்கு மிக வலுவான பங்களிப்பை தருகின்றவர். "ஓவியம் வரையாத தூரிகை(2004)", "எனக்குக் கவிதை முக...
No comments:
Post a Comment