Tuesday, September 29, 2009

முதலாளித்துவ நெருக்கடியும் வரலாற்றின் திருப்பமும்


முதலாளித்துவ நெருக்கடியும் வரலாற்றின் திருப்பமும்

1. 1930களுக்கு பின்னர் மிக மோசமான உலகப் பொருளாதார நெருக்கடி முதலாளித்துவத்தின் சர்வதேச நம்பகத்தன்மைக்கு ஒரு மிகப் பெரிய தாக்குதலைக் கொடுத்துள்ளது என்பதை முக்கிய முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். அரசியல்வாதிகள், செய்தி ஊடக வர்ணனையாளர்கள் மற்றும் பல உயர்கல்வித்துறை பொருளாதார வல்லுனர்கள் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக சவாலுக்கு உட்படுத்த முடியாத உண்மைகள் என்று உயர்த்தப்பட்டிருந்த சுதந்திரச் சந்தை பற்றிய கணிப்புக் கருத்துக்கள் அறிவார்ந்த முறையிலும், அறநெறிவகையிலும் இழிவிற்கு உட்பட்டுவிட்டன. முதலாளித்துவ அமைப்புமுறை எதிர்கொள்ள இருக்கும் வருங்காலம் பற்றிய கவலைகள் பெருகிய முறையிலுள்ளன. மார்ச் 8ம் தேதி பைனான்சியல் டைம்ஸில் மார்ட்டின் வொல்ப் எழுதினார்:

இத்தகைய திருப்புமுனையில் நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் எனக் கூற இயலாது. ஆயினும்கூட நிதியச் சரிவு மிகப் பெரிய மந்த நிலையுடன் இணைந்திருப்பது, மிக மோசமானது என்பதுடன், உலகையும் மாற்றுவது உறுதி. சந்தையின் நெறி பற்றிய கருத்துக்கள் வலுவிழக்கும். அமெரிக்காவின் நம்பகத்தன்மை பாதிப்பிற்குட்படும். சீனாவின் ஆளுமை எழுச்சியுறும். பூகோளமயமாக்கல் முறையே தடுமாற்றத்திற்கு உட்படும். இது ஒரு எழுச்சிகளின் காலம் ஆகும்.

2. மற்றொரு கட்டுரையில் பைனான்சியல் டைம்ஸ், மாஸ்கோவில் மெரில் லிஞ்சின் செயல்களின் தலைவராக இருக்கும் ஙிமீக்ஷீஸீவீமீ ஷிuநீலீமீக்ஷீ இன் அறிக்கையை மேற்கோளிட்டுள்ளது:

எமது உலகம் முறிந்துவிட்டதுடன், இதற்கு பதிலாக எது வரவிருக்கிறது என்பது பற்றி உண்மையில் எனக்குத் தெரியவில்லை. அமெரிக்கர்கள் என்ற முறையில் நாம் மேலே செல்லப் பயன்படுத்திய திசையறிகருவி மறைந்துவிட்டது. இதுபோன்ற நம்பிக்கையற்ற நிலையையும் திசைதெரியாப் போக்கினையும், சோவியத் ஒன்றியம் உடைந்தவேளையில் என்னுடைய நண்பர்களுடன் இருந்தபோது [ரஷ்யாவில்] கடைசியாக நான் கண்டேன்.

விளக்கத்தின் தோல்வி

3. ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் நடைமுறைக்குள் தற்போதுள்ள விவாதம் இந்த அமைப்புமுறையை எப்படிக் காப்பாற்றப்பட முடியும் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. ஆயினும்கூட, நிலைமையின் பெரும் ஆழ்ந்த தன்மை ஒருபுறம் இருந்தாலும்கூட, இந்த நெருக்கடியின் வரலாற்று, பொருளாதார மூலகாரணங்கள் நன்கு அறியப்படவில்லை. குறைந்த பிணையுள்ள அடைமான சந்தை முறையின் வெடிப்பு, சொத்துக்கள் மதிப்பின் சரிவு, கடன் சந்தைகள் உறைந்து நின்றது ஆகியவை அமெரிக்க வணிக முறையையும் அத்துடன் உலகப் பொருளாதாரத்தையும் மண்டியிடச் செய்துள்ள நிலையைக் கொண்டுவந்த முக்கிய கூறுபாடுகள் என்று கருதப்படுகின்றன. ஆனால் நெருக்கடியின் இக்கூறுபாடுகள் பற்றிய குறிப்பு இந்த நிகழ்வுகள் ஏன், எப்படி வளர்ச்சியுற்றன என்பதற்கான சரியான விளக்கங்களை நமக்குக் கொடுக்கவில்லை. சமீபத்தில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் "கட்டணங்கள் செலுத்துவதில் தாமதம்", "போலியான பங்குப் பத்திரங்கள்" ஆகியவை நெருக்கடியின் "மூலகாரணங்கள்" என்று உறுதிபடுத்தியுள்ளது. இங்கு நெருக்கடிக்கு வெறும் வார்த்தை ரீதியான விளக்கம்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. "கட்டணங்கள் செலுத்துவதில் தாமதம்", "போலியான பங்குப்பத்திரங்கள்" ஆகியவை நெருக்கடியின் வெளிப்பாடுகள் என விபரிக்கப்படுகின்றபோதிலும், இவற்றின் "மூலகாரணங்கள்" இன்னும் விளக்கப்படவில்லை.

4. நெருக்கடியின் மூலகாரணங்கள் பற்றிய முக்கிய விளக்கங்கள் ஏன் கிடைக்கவில்லை என்பதற்கு உறுதியான காரணங்கள் உள்ளன. அதாவது தற்போதைய நிலையை விபரிப்பதற்கு அப்பால் போகும் விளங்கங்கள் மற்றும் முன்வந்துகொண்டிருக்கும் பேரழிவிற்கு காரணமாக இருக்கக் கூடியவை பற்றி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. முதலில் முதலாளித்துவ முறையின் அடிப்படை நிலைத்து நிற்கும் தன்மை (குறிப்பாக அமெரிக்காவிற்குள்) மற்றும் அதன் வரலாற்று ரீதியான மாற்றமுடியாத நிலை வினாவிற்கு உட்படுத்தப்படக்கூடாது. மேலே கூறப்பட்டுள்ள கட்டுரையில் மார்ட்டின் வொல்ப் அறிவித்துள்ளபடி, "சந்தைப் பொருளாதாரத்திற்கு நம்பகத்தன்மை உடைய மாற்றீடு ஏதும் இல்லை..." சிந்தனைக்குரிய ஆய்வாளர்களான வொல்ப் போன்றோர்கூட கொண்டிருக்கும் இக்கருத்து மற்ª£றாரு கருத்தாய்வுடன் பிணைந்துள்ளது: மொத்தப் பாதிப்பு எவ்வளவு தாக்கத்தை கொடுத்திருந்த போதிலும் கூட, இந்த நெருக்கடி பொருளாதார முறைக்கு எவ்வகையிலோ வெளியே இருக்கும் சூழ்நிலைகளின் விளைவு ஆகும் என்பதே அது. நெருக்கடியின் காரணம் இலாப முறையின் இயல்பான தன்மையில் கண்டுபிடிக்கப்பட முடியாது, மாறாக பிரச்சினை அது இப்பொழுது செயல்பட்டுக் கொண்டிருக்கும் புறச்சூழ்நிலையில் உள்ளது என்பதே.

5. மார்க்சிசம் அத்தகைய மேம்போக்கான பார்வையை நிராகரிக்கிறது. அது முதலாளித்துவம் பற்றி வரலாற்றுரீதியாக விமர்சனரீதியான அணுகுமுறையைத்தான் எப்பொழுதும் கொண்டுள்ளது; தற்போதைய நெருக்கடி முதலாளித்துவ உற்பத்தி முறையின் சமூகப் பொருளாதார மரபியல் தன்மையில் (ஞிழிகி) என்று சொல்லக்கூடிய வகையில் இயைந்து இருக்கும் முரண்பாடுகளின் வெளிப்பாடுதான் என்று விளக்குகிறது. முதலாளித்துவ பொருளாதாரவாதிகளும், கட்டுரையாளர்களும் இதற்கு மாறாக முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்கும் அணுகுமுறையை கொண்டுள்ளனர். அது அவர்களுக்கு தவிர்க்க முடியாமல் நெருக்கடி மற்றும் நிலைமுறிவை ஏற்படுத்தக் கூடிய பொருளாதார விளைவுகள் இருப்பதை நிராகரிக்கின்றது. ஆனால் மார்க்ஸ் விளக்கியுள்ளபடி:

இந்த முரண்பாடுகள் இருப்பதால் நெருக்கடிகளும் உள்ளன. அவர்கள் [முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள்] நெருக்கடிக்கு எதிராக முன்வைக்கும் ஒவ்வொரு காரணமும் ஒரு பேயைவிரட்டும் இன்னொரு முரண்பாட்டை தோற்றுவிக்கும் உண்மையான முரண்பாடு ஆகும். எனவே ஒரு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய முரண்பாடுகள் இல்லை என்று தன்னையே நம்பவைத்துக் கொள்ளும் விருப்பம், உண்மையாகவே இருக்கும் முரண்பாடுகள் இருக்கக்கூடாது என்ற நம்பிக்கையான விருப்பத்தின் உண்மையான வெளிப்பாடாக உள்ளது. (ஜிலீமீஷீக்ஷீவீமீs ஷீயீ ஷிuக்ஷீஜீறீus க்ஷிணீறீuமீ, ஙிஷீஷீளீ மிமி [கினீலீமீக்ஷீst, ழிமீஷ் சீஷீக்ஷீளீ: றிக்ஷீஷீனீமீtலீமீus ஙிஷீஷீளீs, 2000], ஜீ. 519).


6. முரண்பாடுகளை விரட்டி அடிப்பதற்கான முயற்சி கீழ்க்கண்ட வடிவத்தை எடுக்கின்றது: செய்தி ஊடகங்களில் கூறப்படுவதுபோல், முதலாளித்துவ அமைப்புமுறை பொறுப்பற்ற ஊக விளையாட்டுக்காரர்கள், நன்கு கட்டுப்படுத்தப்படாத வங்கிகள், மிக அதிகமாக பயன்படுத்தப்படும் தனியார்முதலீட்டு நிதிகள், பேராசை மிகுந்த, அதிக ஊதியம் பெறும் நிர்வாகிகள் மற்றும் தன்னைப் பெரிதும் மகிழ்வித்துக்கொள்ளும் அமெரிக்க நுகர்வோர் போன்ற வேறுபட்ட, தெளிவாக அடையாளம் காணப்படாத தீய கூறுபாடுகளின் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது. இவர்களுக்குத்தான் அமெரிக்காவின் புதிய தலைமை, அறநெறிப் போதகரான திரு.ஒபாமா தன்னுடைய ஆரம்ப உரையில் கடுமையான கண்டனத்தை கொடுத்தார். இந்த "விளக்கங்கள்" அனைத்தும் பொதுவாகக் கொண்டிருப்பது அவை இந்த நெருக்கடியை அடிப்படையில் அகநிலைரீதியான வகையில் விளக்கம் காண்பதுதான். அதாவது, அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவ அமைப்புமுறையின் வரலாற்று வளர்ச்சியில் வேறூன்றிருக்கும் புறநிலை முரண்பாடுகளின் விளைவு என்பதற்குப் பதிலாக பல பிழைகள், தவறுகளின் விளைவு என்று காட்டுதலாகும்.

7. இவ்விதத்தில் உதாரணத்திற்கும் விமர்சகர்கள் நிதியச் சந்தைகளில் உள்ள கொந்தளிப்பு பல கடன் சந்தைகளில் உள்ள துஸ்பிரயோகங்களின் விளைவு என்று விபரிப்பாளர்கள் விளக்குகின்றனர். முதலிலும் முக்கியமானதுமாக அவர்களால் திருப்பிக் கொடுக்க முடியாது எனத் தெரியும்போதும் மிகப் பெரிய அளவில் தனிநபர்களுக்கு அடைமானத்தை விரிவுபடுத்தியதை குறிப்பிடுகின்றனர். இது ஏன் நடைபெற்றது, அதுவும் பல நூற்றுக்கணக்கால பில்லியன்கள் டாலர்கள் மதிப்பிற்கு, என்பது விளக்கப்படவில்லை.

"வரலாற்றின் முடிவு"?

8. கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த நெருக்கடியுடன் ஒப்பிடும்போது, தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடி மதிப்பீடு செய்யப்படும் விதத்தில் உள்ள விந்தையான அறிவார்ந்தமுறை இரட்டை வேஷம் பற்றியும் கவனத்திற் கொள்ளவேண்டும். 1989ல் ஸ்ராலினிச ஆட்சிகளின் பொருளார நெருக்கடிகள் சோசலிசத்தின் முழுத் தோல்வியை நிரூபணம் செய்தன என்பது அடிப்படை நம்பிக்கையாகவே கொள்ளப்பட்டிருந்தது. டிசம்பர் 1991ல் சோவியத் கலைக்கப்பட்டதை சோசலிசம் பொருளாதார ரீதியாக நிலைத்திருக்க முடியாது என்பதின் மறுக்க முடியாத நிரூபணம் என்று அறிவிக்கப்பட்டு, அதையட்டி இனிமேல் எந்த அறிவார்ந்த நபரும் முதலாளித்துவத்திற்கு மாற்றீட்டை கற்பனை செய்ய மாட்டார்கள் என்றும் நினைக்கப்பட்டது. பிரான்சிஸ் புகுயாமா பிரபலப்படுத்திய சொற்றொடரில் மனிதகுலம் "வரலாற்றின் முடிவிற்கு வந்துவிட்டது" என்று கூறப்பட்டது.

9. புகுயாமா இனி வருங்காலத்தில் எந்த "நிகழ்வுகளும்" இருக்காது என்று ஒன்றும் கூறிவிடவில்லை. மாறாக "வரலாற்றின் முடிவு" என்பது சமூகப் பொருளாதார அமைப்பு என்ற முறையில் முதலாளித்துவம் வரலாற்றுரீதியான முன்னேற்றத்தின் இறுதிக்கட்டத்தைப் பிரதிபலித்தது என்ற பொருளைக் கொடுக்கிறது என்று அவர் கருதினார். அவருடைய நூல் ஸ்ராலினிச ஆட்சிகளின் சரிவை அடுத்து அமெரிக்கா மற்றும் சர்வதேச ஆளும் வர்க்கத்திடம் ஏற்படுத்தியிருந்த பெரும் வெற்றி உணர்வைப் பிரதிபலித்தது. முதலாளித்துவத்தின் விரிவாக்கத்திற்காக புவியியல்ரீதியாக மட்டுமல்லாது வரலாறுரீதியான கட்டுப்பாடுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. ஆனால் இங்குதான் நாம் இரட்டை நிலைப்பாட்டு முறையைக் காண்கிறோம். சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் நெருக்கடி, சோசலிசத்தின் தோல்வியைக் குறிப்பிட்டது என்றால் (இந்த ஆட்சிகளின் சோசலிசமற்ற தன்மையை ஒரு புறம் தவிர்ப்போம்), தற்பொழுதைய அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தின் நெருக்கடி ஏன் முதலாளித்துவ அமைப்புமுறையில் நெருக்கடி மற்றும் தோல்வி என்று விளக்கப்படவில்லை?

10. குளிர்யுத்தகால எதிரியின்மீது அதன் அரசியல் வெற்றியால் ஏற்பட்ட களிப்பின் உச்சியில் இருந்த அமெரிக்க ஆளும் வர்க்கம் தான் எப்பொழுதும், எங்கும் வலிமை நிறைந்ததாக இருக்கும் என்று நினைத்தது. இந்த நப்பாசை ஸ்ராலினிச ஆட்சிகளின் மறைவு பற்றிய "மூலகாரணங்களை" தவறான முறையில் மதிப்பிட்டதை அடிப்படையாகக் கொண்டிருந்தது மட்டும் இல்லாமல், அமெரிக்க முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை முற்றிலும் சுயமாகவே இல்லை எனக் கூறிக்கொண்டதுடன், குறிப்பாக உலக முதலாளித்துவத்தில் அமெரிக்காவின் வீழ்ச்சியடைந்து வந்த நிலைபற்றி கணிக்காமல் இருந்தது. அமெரிக்க ஆளும் வர்க்கத்தால் புரிந்து கொள்ளமுடியாது போனது அல்லது ஒருவேளை புறக்கணிக்க விரும்பியது என்னவெனில், ஸ்ராலினிச ஆட்சிகளை இல்லாதொழித்த பொருளாதார சக்திகள் உலகளாவிய தன்மை கொண்டிருந்தன என்பதையும் தேசிய அரசமைப்பு முறைக்கும் பெருகிய முறையில் இணைந்துள்ள உலக பொருளாதார முறைக்கும் இடையிலான தவிர்க்கமுடியாத அழுத்தத்தில் இருந்து உருவாகும் இதே அழுத்தங்கள் அமெரிக்கா மீதும் பாதிப்பை ஏற்படுத்தி, அதை வலுவிழக்கச் செய்துவருகின்றன என்பதைத்தான்.

11. ஸ்ராலினிச ஆட்சிகள் தகர்ந்தது ஒரு குறுகிய காலத்திற்கு அமெரிக்கா தன்னுடைய மூலோபாய நலன்களை முன்னேற்றுவிக்க சுரண்டும் பூகோளஅரசியல் நிலைமைகளை சாதகமாக தோற்றுவித்தது. ஆனால் ஸ்ராலினிச ஆட்சிகளின் முடிவு ஏற்கனவே 1989-91 க்குள் முற்றிலும் முதிர்வடைந்துவிட்ட அமெரிக்க முதலாளித்துவமுறை உலகில் கொண்டிருந்த வீழ்ச்சியை மாற்றுவதற்கு முடியவில்லை. "வரலாறு முடிந்துவிட்டது" போன்ற முடிவிலா பேச்சுக்கள் இருந்தாலும், அமெரிக்கா அதன் பொருளாதார அஸ்திவாரங்களை அரிக்கும் வரலாற்றுத் தன்மை நிறைந்த, வளர்ச்சி பெற்றுவிட்ட முரண்பாடுகளின் பிடியில்தான் சிக்கியிருந்தது.

நெருக்கடியின் வரலாற்றுப் பின்னணி

12. வரவிருக்கும் ஆண்டுகளில் 2008ம் ஆண்டுப் பெரும் சரிவு, (1) பல தசாப்தங்களாக தயாரிப்பில் இருந்த அமெரிக்காவின் உலக நிலைமையில் நீடித்த வீழ்ச்சி மற்றும் உடைவு என்பதாக நோக்கப்படும். மற்றும் (2) அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் முழு அமைப்பையும் பாதிக்கும் நெருக்கடி மற்றும் புரட்சிகர வர்க்கப் போராட்டங்கள் என்பதின் புதிய காலத்தின் தொடக்கமாகவும் காணப்படும்.

13. உலக முதலாளித்துவ அமைப்புமுறையில் 20ம் நூற்றாண்டில் அமெரிக்கா மிக முக்கியமான தீர்மானகரமான பங்கைக் கொண்டிருந்தது. முதலாம் உலகப் போர் முடிவில், அமெரிக்கா உலகின் தொழில்துறை பெரும் சக்திக் கூடமாக விளங்கியது. தொழில்துறையின் ஒவ்வொரு பிரிவிலும் அமெரிக்க நிறுவனங்கள் ஒரு மேலாதிக்க நிலைமையை சாதித்திருந்தன. ஆனால் அமெரிக்காவில் வளர்ச்சி இருந்தபோதிலும்கூட, 1914ம் ஆண்டுமுதல் உலகப் போரின் வெடிப்பு ஒரு 30 ஆண்டு காலத்திற்கு உலக நெருக்கடி, உறுதியற்ற தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தியது.

14. முதலாம் உலக யுத்தம் ஐரோப்பிய பொருளாதார அரசியல் மற்றும் சமூக சமநிலையை சிதைத்து, பின்னர் வெளிவந்தது போல் உலக முதலாளித்துவத்தையும் சிதைத்தது. ரஷ்ய புரட்சியும் அக்டோபர் 1917ல் போல்ஷிவிக்குகள் பதவிக்கு வந்ததும் புறநிலை நெருக்கடியின் புரட்சிகர தாக்கங்களை வெளிப்படுத்தின. ஜேர்மனியில் நவம்பர் 1918ல் நடந்த மற்றொரு புரட்சிகர வெடிப்பு நிலை உலகப் போரை ஒரு முடிவிற்குக் கொண்டுவந்தது. அடுத்த இரு ஆண்டுகள் ஐரோப்பா முழுவதும் பொருளாதாரத்தில் பெரும் குழப்பத்தையும் புரட்சிகர எழுச்சிகளையும் கண்டன. ஆனால் அனுபவம் மிக்க புரட்சிகரத் தலைமை இல்லாதது ஐரோப்பிய முதலாளித்துவத்தை சீர்குலைந்த நிலையில் இருந்து மீண்டு உறுதித்தன்மையை ஓரளவிற்கு மீட்க உதவியது.

15. குறுகிய, பரபரப்பான பொருளாதார மீட்பும் விரிவாக்கமும் 1920களின் மத்தியில் அக்டோபர் 1929ல் வோல் ஸ்ட்ரீட்டில் ஆரம்பித்த உலகப் பொருளாதார உடைவிற்குத்தான் இடமளித்தன. ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டின் "புதிய உடன்பாட்டின்" (ழிமீஷ் ஞிமீணீறீ) பல பரிசோதனைகள் நடந்தும், பெரும் மந்த நிலையை இந்த மிக உயர்ந்த ஆற்றல் பெற்ற அமெரிக்காவின் ஆளும் வர்க்கத்தின் தலைவரால் முடிவிற்குக் கொண்டுவர முடிவில்லை. 1930கள் முழுவதும் வேலையின்மை மிக அதிக அளவில் தொடர்ந்து நீடித்தது. டிசம்பர் 1941ல் அமெரிக்க போரில் நுழைந்ததுதான் பாரிய அரசாங்க செலவு போர்த்தளவாட உற்பத்திக்கு நிகழ்ந்தது; அது பல காலமும் எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார புத்துயிர்ப்பை கொண்டுவந்தது.

போருக்குப் பிந்தைய அமைப்புமுறையும் அமெரிக்காவின் மேலாதிக்கமும்

16. போரினால் ஏற்பட்ட அழிவு, சோகமும் துயரமும் இணைந்த நிலையில் பொருளாதார வளர்ச்சி, உறுதி ஆகியவற்றிற்கு அவசியமான முதலாளித்துவத்திற்கு ஒரு புதிய நீண்டகால சமநிலைக்கு சாத்தியமான நிலைமைகளை தோற்றுவித்தது. இந்த உறுதித்தன்மை அமெரிக்காவில் நிதிய மற்றும் தொழில்துறை ஆதாரங்களை நம்பியிருந்தது. அமெரிக்க ஆளும் வர்க்கம், ஐரோப்பாவிலும் ஜப்பானிலும் சோசலிசப் புரட்சி ஏற்பட்டவிடுமோ என்ற அச்சத்தில் உலக முதலாளித்துவ முறையின் பொருளாதார மறு கட்டமைப்பை அமைத்தது. இந்த மறுகட்டமைப்பிற்கு தேவையான அடிப்படை கட்டுமானங்களும் கருவிகளும் ஆகஸ்ட் 1944ல் பிரெட்டன் வூட்ஸ் (ஙிக்ஷீமீttஷீஸீ கீஷீஷீபீs) மாநாட்டில் வகுக்கப்பட்டன.

17. புதிய உலகப் பொருளாதார முறையின் மிக முக்கியமான கூறுபாடு சர்வதேச நிதிய அமைப்புமுறை அமெரிக்க டாலரை தளமாகக் கொண்டிருந்தது ஆகும். இந்த முறையின்படி, அமெரிக்காவிற்கு வெளியே உள்ள அனைத்து நாணயங்களும் டாலரோடு ஒப்பிடும்போது ஒரு மதிப்பு கொடுக்கப்பட்டன. அதையட்டி டாலர் தங்கத்துடன் பிணைக்கப்பட்டது; 35 டாலருக்கு ஒரு அவுன்ஸ் தங்கம் என்று மாற்றிக் கொள்ளப்பட முடியும். இவ்விதத்தில் டாலர் உலகின் இருப்பு நாணயமாக செயல்படும். சர்வதேச வணிகம் டாலர்களில் குறிப்பிடப்பட்டது; அதாவது சர்வதேச வணிக மற்றும் நிதிய நடவடிக்கைகள் அனைத்தும் டாலர்களில் முடிக்கப்பட்டன. அமெரிக்காவிற்கு வெளியேயும் நாடுகள் டாலர் இருப்புக்களை வைத்துக் கொண்டு இந்த டாலர்களை தங்கள் சர்வதேச வணிக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அமெரிக்க நாணயத்தின் நேர்மையில் நம்பிக்கை அமெரிக்க உறுதிமொழியான டாலரை தங்கத்திற்கு குறிப்பிட்ட விகிதத்தில் ($35 ஒரு அவுன்ஸ் என) மாற்றிக் கொள்ளப்பட முடியும் என்பதால் நிலைநிறுத்தப்பட்டது.


18. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அப்பொழுது இருந்த நிலையில் இந்த உறுதியை அமெரிக்கா காப்பாற்றும் என்பதில் எந்தக் கவலையும் இருந்ததில்லை. அமெரிக்காவின் பொருளாதார, நிதிய சக்தி உலகத்தில் சவாலுக்குட்படாது இருந்த நேரம் அது. 1952ல் முன்னேற்றமடைந்த முதலாளித்துவ நாடுகளின் அனைத்து தொழில்துறை உற்பத்தியில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் அமெரிக்காவில் இருந்துதான் வந்தது. மேலும் தனி நபர் அடிப்படைப்படையிலும் அமெரிக்காவின் மொத்த பொருளாதார உற்பத்தி இங்கிலாந்து, பிரான்சைப் போல் இரு மடங்காகவும், ஜேர்மனியுடையதைப் போல் கிட்டத்தட்ட மூன்று மடங்காகவும் இத்தாலியுடையதைப் போல் நான்கு மடங்காகவும் இருந்தது. 1957ல் கூட உலகின் மிகப் பெரிய 50 நிறுவனங்களில் 43 அமெரிக்காவை அடித்தளமாக கொண்டிருந்தன. மிகக்கணிசமான வணிகத்தை கொண்டதும் மற்றும் பணச்செலுத்துமதி உபரியாக கொண்டிருந்ததனூடாக இதன் மேலாதிக்க நிலைமை வெளிப்பட்டிருந்தது. அதே நேரத்தில் ஐரோப்பிய, ஜப்பானிய பொருளாதார மறுகட்டமைப்பிற்கும் அமெரிக்கா நிதி உதவி அளித்து வந்தது.

அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியின் ஆரம்பம்

19. ஐரோப்பிய, ஜப்பானிய தொழில் பிரிவுகள் மறு எழுச்சி பெற்று அமெரிக்க மேலாதிக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் இந்த அமைப்புமுறை பெருகிய அழுத்தத்திற்கு உட்படுவது தவிர்க்கமுடியாததாகிற்று. 1950களின் கடைசிப் பகுதியில் பொருளாதார வல்லுனர்கள் ரோபர்ட் டிரிபின் போன்றவர்கள் அமெரிக்காவின் செலுத்துமதி நிலுவை சீர்கேடு அடைவது பற்றி கவலை தெரிவித்து, டாலர் பற்றாக்குறையின் அதிகரிப்பு அமெரிக்கா கொடுத்துள்ள உறுதிமொழியான டாலருக்கு ஈடான தங்கம் கொடுக்கும் இயலுமையை கேள்விக்குட்படுத்திவிடும் என்று எச்சரித்தனர். ஆகஸ்ட் 15, 1971ல் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் நிக்சன் நிர்வாகம் டாலரை தங்கமாக மாற்றிக் கொள்ளும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தவுடன் பிரெட்டன் வூட்ஸ் சரிவு ஏற்படக்கூடுமோ என்ற இந்த அச்சங்கள் நியாயமாயின. இச்செயல் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய முதலாளித்துவ முறையில் ஒரு திருப்பு முனையைப் பிரதிபலித்தது. போருக்குப் பிந்தைய காலத்திய உலக முதலாளித்துவத்தில் விரிவாக்கம் ஏற்பட்டதற்குக் காரணமான நிதிய சமநிலையை இது குலைத்துவிட்டது. ஆகஸ்ட் 1971க்கு பின்னர், உலக முதலாளித்துவம் பெருகிய முறையில் உறுதிகுலைக்கக் கூடிய அதிர்ச்சிகளுக்கு உட்பட்டது. உண்மையில் நான் ஏற்கனவே தெரிவித்துள்ளபடி, தற்போதைய நெருக்கடி பல விதத்திலும் கடந்த 37 ஆண்டுகளாக இருந்து வரும் சீர்குலைப்பு நிகழ்வுபோக்கின் உச்சக்கட்டத்தைத்தான் காட்டுகிறது.

20. டாலர்-தங்கம் மாற்று முறையின் சரிவு, மற்றும் நிலையான மாற்று விகிதங்கள் சரிந்தது ஆகியவை உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் நிலைமையில் பாரிய வெளிப்பாட்டைக் காட்டின. ஆனால் இச்சரிவின் நீண்டகால விளவுகளை அறிந்து கொள்ளுவதற்கு, குறிப்பாக அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடி கொண்டிருக்கும் வடிவமைப்பில் அதன் உறவுகளைக் காணவேண்டும் என்றால் (அதாவது தொடர்ந்த ஊக உந்துதல் குமிழிகள், நிதியச் சரிவுகள் பற்றி), அதற்கு அமெரிக்க பெருநிறுவனங்களின் மூலோபாயச் சார்பு கடந்த 45 ஆண்டுகளில் எப்படி குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டது என்பது கவனிக்கப்பட வேண்டும்.

அமெரிக்க நிறுவனங்கள்மீது பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு

21. 20ம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் அமெரிக்க முதலாளித்துவம் அறிமுகப்படுத்திய புது முறைகளில் மிகவும் முக்கியமானது தொழிற்துறை பெருநிறுவனம் (மிஸீபீustக்ஷீவீணீறீ சிஷீக்ஷீஜீஷீக்ஷீணீtவீஷீஸீ) என்பது தோற்றுவிக்கப்பட்டது ஆகும். இந்த புதிய வகை பொருளாதார அமைப்பு புதியவகையான தொடர்புமுறைகள் (ஸீமீஷ் நீஷீனீனீuஸீவீநீணீtவீஷீஸீs) மற்றும் போக்குவரத்து தொழில்நுட்பங்கள் என்பவைகள் இரயில்பாதைகள், நீராவிக்கப்பல்கள், தந்தி, கடல் கேபிள்கள் ஆகியவை விடுத்திருந்த சவால்களுக்கு விடையிறுப்பு ஆகும். அமெரிக்க வணிகத்தின் மிகச் சிறப்பான வரலாற்றாளர்களில் ஒருவரான ஆல்பிரெட் சாண்ட்லெர் ஜூனியர் தன்னுடைய அரிய படைப்பான பரப்பும் அளவும்: தொழிற்துறை முதலாளித்துவத்தின் இயக்க ஆற்றல் (ஷிநீணீறீமீ ணீஸீபீ ஷிநீஷீஜீமீ: ஜிலீமீ ஞிஹ்ஸீணீனீவீநீs ஷீயீ மிஸீபீustக்ஷீவீணீறீ சிணீஜீவீtணீறீவீsனீ - சிணீனீதீக்ஷீவீபீரீமீ, விணீss.லி பிணீக்ஷீஸ்ணீக்ஷீபீ ஹிஸீவீஸ்மீக்ஷீsவீtஹ் றிக்ஷீமீss, 1990) இல் விளக்கியுள்ளபடி;


''இரயில், தந்தி முறைகளைக் கட்டமைத்துச் செயல்படுத்துவதற்கு ஒரு புதிய முறையிலான வணிக அமைப்புக்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்ற தேவை எழுந்தது. அந்த அமைப்புமுறைகளை மற்றும் சிக்கல் வாய்ந்த செயற்பாடுகளைக் கட்டமைப்பதற்கு தேவையான மாபெரும் முதலீடு நிர்வாகத்திடமிருந்து உடைமையை பிரிக்கும் முறையைக் கொண்டுவந்தது. இந்த விரிவுபடுத்தப்பட்ட நிறுவனங்கள், ஊதியம் பெறும் நிர்வாகிகளால் நடத்தப்பட்டன. அவர்களுக்கு இந்த நிறுவனத்தில் சிறிய பங்குகள் இருந்தது அல்லது பங்குகள் ஏதும் இல்லாமலும் இருந்தது. ஏராளமான, சிதறிக் கிடந்த உரிமையாளர்கள் இடைவிடாமல் சரக்குகள், பயணிகள் மற்றும் தகவல்கள் ஆகியவை எப்பொழுதும் சென்று கொண்டிருப்பதால் அனுபவம், துறையைப் பற்றிய அறிவு அல்லது அதைக் கற்பதற்கான நேரம், முடிவுகளை எடுக்கும் திறன் ஆகியவை இல்லாமல் இருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான பங்குதாரர்கள் ஒரு இரயில்பாதை முறையையோ தந்தி முறையையோ சாத்தியமானதாக செயல்படுத்த முடியாது''.

22. சாண்ட்லரின் ஆய்வின் முக்கிய கருத்தாய்வு, தொழில்வாரியாக அவர் ஆவணப்படுத்திக் காட்டியுள்ளது, 20ம் நூற்றாண்டின் முதல் தசாப்தங்களில் உரிமை (ளிஷ்ஸீமீக்ஷீsலீவீஜீ), நிர்வாகத்தில் (விணீஸீணீரீமீனீமீஸீt) இருந்து பெருகிய முறையில் பிரிக்கப்பட்டது பற்றியதாகும். பெரும்பாலானவற்றில் முழுத் தொழில்களின் கணிசமான பிரிவுகளை சொந்தமாகக் கொண்டிருந்த சக்தி வாய்ந்த முதலாளித்துவக் குடும்பங்கள், நேரடியாக அன்றாட செல்வாக்கை நிறுவனக் கொள்கை மீது செலுத்தினர். ஆனால் அது எந்த அளவிற்கு அவர்கள் திறமை படைத்த நிர்வாகக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தது என்பதைப் பொறுத்துத்தான் இருந்தது. அமெரிக்க தொழிற்துறையின் குறிப்பிடத்தக்க பிரிவுகள் சாண்ட்லர் கூறியபடி, தாங்கள் நிர்வாகம் செய்யும் அமைப்புக்களில் "1% பங்குகூட இல்லாதவர்கள்தாம்." அவர் எழுதுகிறார்:

....இந்த ஊதியம் பெறும் நிர்வாகிகள் பெரும்பாலான பங்குதாரர்கள் விருப்பத்தினால் தடைக்கு உட்படாதவிதத்தில் (நிறுவனக் குடும்ப உறுப்பினர்கள், பணம் போடும் முதலீட்டாளர்கள் அல்லது வெளி முதலீட்டாளர்கள் என்று எப்படி இருந்தாலும்) தங்கள் நிர்வாகக்குழு இயக்குனர்களை தேர்ந்தெடுத்து தங்களுக்குப் பின்னர் பதவிக்கு வரவிருப்பவர்களையும் நியமித்தனர். (ஜீ.145)

23. அமெரிக்க பெருநிறுவன நிர்வாகக் கட்டமைப்பு நீண்டகால வளர்ச்சியை வலியுறுத்தியது. மீண்டும் சாண்ட்லரை மேற்கோளிடுவோம்:

இரண்டாம் உலப் போருக்கு பின்னரும் கூட, நிறுவனத்தில் அதிக பங்கு இல்லாத நிர்வாகிகளும் (உள் இயக்குனர்கள்) மற்றும் பெரும் பங்குதாரர்களின் பிரதிநிதிகளும் (வெளி இயக்குனர்கள்), தக்கவைக்கப்பட்டுள்ள வருமானங்கள் தொழில்துறையின் வசதிகளைப் பெருக்கவும், ஆட்களை அதிகரிக்கவும் மறு முதலீடு செய்யப்பட வேண்டும் என்று உடன்பட்டனர். அதிலும் அமைப்புமுறைத் திறனில் போட்டிமிக்க அனுகூலங்களை வளர்த்துள்ள நிறுவனங்களில் இது முதலீடு செய்யப்பட வேண்டும் என்று உடன்பட்டனர். அத்தகைய முதலீடு குறைந்த ஆபத்தைத்தான் கொண்டுள்ளது என்றும் அதே நேரத்தில் நிறுவனம் இத்தகைய நலன்கள் இல்லாத நிலையில் காண்பதை விட, இதில் கூடுதலான இலாபத்தைப் பெறக் கூடிய வாய்ப்பைக் கொண்டுள்ளது என்றும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். (ஜீ.595)

24. தற்போதைய சூழ்நிலையில் சாண்ட்லர் காட்டியுள்ள காட்சி பெரும் மிகச் சிறந்த நிலையை தருவது போல் தோன்றும். ஆனால், அப்படியானால் அதன் முறிவிற்குக் காரணம் என்ன? இரு வரலாற்று நிபந்தனைகள், இடைத்தொடர்புடைய காரணிகள் குறிப்பாக முக்கியத்துவம் கொண்டுள்ளன. முதலிலும் முக்கியமானதும் உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் நிலைமை மொத்தத்தில் வீழ்ச்சி கண்டிருப்பது ஆகும். 1970கள் வரை கூட அமெரிக்க தொழிற்துறை சக்தியில் மேலாதிக்க நிலைமையில் இருந்தாலும், ஐரோப்பிய, ஜப்பானியப் போட்டியாளர்களுக்கு அந்த மேலாதிக்க இடத்தை 1950களின் கடைசிப் பகுதி, 1960களில் விட்டுக் கொடுத்துக் கொண்டேதான் வந்தது. இரண்டாவதாக, பெருநிறுவன அமைப்புக்களில் மாற்றம், முதலீட்டு மூலோபாயங்களில் அமெரிக்காவிற்குள் மாற்றம் என்பது இலாப முறை வீழ்ச்சியுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தது. இது 1960களிலும் 1970களின் ஆரம்பத்திலும் இரண்டாம் உலகப் போரிற்கு பின்னான பெருக்கத்தின் பின்னணியில் கூட உலக பரிமாணத்தை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

25. ஒரு ஆய்வின்படி அபிவிருத்தியடைந்த முதலாளித்துவ நாடுகளில் இலாப விகிதம் ஐந்தில் ஒரு பங்கு வணிகம் மற்றும் உற்பத்திப் பிரிவுகளில் 1968 க்கும் 1973க்கும் இடையே வீழ்ச்சியடைந்தது. (சிணீஜீவீtணீறீவீsனீ ஷிவீஸீநீமீ 1945, தீஹ் றிலீவீறீவீஜீ கிக்ஷீனீstக்ஷீஷீஸீரீ, கிஸீபீக்ஷீமீஷ் நிறீஹ்ஸீ ணீஸீபீ யிஷீலீஸீ பிணீக்ஷீக்ஷீவீsஷீஸீ [ளிஜ்யீஷீக்ஷீபீ ணீஸீபீ சிணீனீதீக்ஷீவீபீரீமீ: ஙிணீsவீறீ ஙிறீணீநீளீஷ்மீறீறீ, 1991], ஜீ. 182). பல காரணிகள் இந்த நிகழ்போக்கினை தூண்டின. அவற்றுள் மிக முக்கியமானது போருக்குப் பின்னர் பாரிய மூலதனக் குவிப்பே இருந்தது. குறிப்பாக ஜேர்மனி, ஜப்பானில், அவற்றின் முந்தைய தொழில்துறை கட்டுமானத்தில் போர் ஏற்படுத்தியிருந்த பேரழிவு அந்நாடுகளை மிகவும் முன்னேற்ற தொழில்நுட்பங்களையும் உற்பத்தி முறைகளையும் பயன்படுத்தி தங்கள் தொழில்துறையை மேம்படுத்தச் செய்தன.

26. 1960களை ஒட்டி ஐரோப்பாவில் தொழில்துறை முன்னேற்றம் அடைந்த நாடுகளும், ஜப்பானும் அமெரிக்காவுடன் உலகச் சந்தைகளிலும் அமெரிக்க சந்தைக்குள்ளும் ஒரு இடத்திற்காக மிகத் திறமையுடன் போட்டியிட்டன. உலக இலாப விகிதங்களில் மீதான பெருகிய அழுத்தம், 1960 களின் நடுப்பகுதியில் மிகவும் வெளிப்படையாக பெருகி, சர்வதேச போட்டி அழுத்தங்களைத் தீவிரப்படுத்தியது. இது இன்னும் கூடுதலான முறையில் அமெரிக்க தொழிற்துறையை உலகத் தரத்தில் பலவீனமடைய செய்தது. இது அமெரிக்க பெருநிறுவன மூலோபாயங்களின் சார்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு இட்டுச்சென்றது. "கூடுதலான போட்டி இலாபங்களைக் குறைக்கும் அச்சத்தையும் தொழில்துறையில் நிறுவனங்களின் அமைப்புத் திறமை போட்டியில் நலன்களைக் கொடுத்தாலும் அங்கு மீண்டும் வருமானங்களை முதலீடு செய்வதை அச்சுறுத்தியதால், அவற்றின் நிர்வாகிகள் வளர்ச்சிக்கான புதிய வகைகளைக் காண முற்பட்டதுடன், புதிய நிர்வாக வழிவகைகளைக் கண்டறிய முற்பட்டனர்" என்று சாண்ட்லர் எழுதுகிறார் (ஜீ.606).

நிறுவன இணைப்புக்களும், கையகப்படுத்துதலும் முதல் இரண்டு "அலைகளாக" வெளிவந்தன.

27. அமெரிக்கப் பெருநிறுவனங்கள் பயன்படுத்திய மூலோபாயங்களில் ஒன்று பெருநிறுவன இணைப்புக்கள் மூலம் பலதரப்பட்ட மாற்று உற்பத்திகளைக் மேற்கொள்ளுதலும் புதிய நிறுவனங்களை கையகப்படுத்துதலும் (கிநீஹீuவீsவீtவீஷீஸீs) ஆகும். அமெரிக்க முதலாளித்துவ அமைப்புமுறையின் வரலாற்றில், குறிப்பாக அதன் தற்கால பெருநிறுவன வளர்ச்சி முறையில், இணைப்புக்களும் (விமீக்ஷீரீமீக்ஷீs) புதிய நிறுவனங்களை கையகப்படுத்துதலும் கணிசமான பங்கைக் கொண்டிருந்தன. 1960 களுக்கு முன்பு இணைப்புக்கள், புதிதாக கையகப்படுத்துதலும் என்று இரண்டு முக்கிய "அலைகள்" இருந்தன. முதல் முறை 1873-1895 ல் நீடித்த இலாப மந்த முறைக்குப் பின்னர் வந்து அதன் உச்சக்கட்டத்தை 1898ல் இருந்து 1904க்குள் ஏட்டியது. இதுதான் வரலாற்றளவில் "சமாந்திரமான- (லீஷீக்ஷீவீக்ஷ்ஷீஸீtணீறீ)" இணைப்புக்கள் எனப்படுவது; இதில் ஒரே தொழிலுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் ஒரு மகத்தான ஏகபோக உரிமை இருக்கும் அமைப்பாக ஒருங்கிணைந்தனர். இந்த முதல் அலையில் இருந்து மிகக் கணிசமான முறையில் வெளிவந்ததுறை அமெரிக்க எஃகு ஆகும்; இது பின்னர் அமெரிக்க எஃகு தயாரிப்புத் துறையில் 75 சதவீதத்தை கொண்டது. இத்தகைய இணைப்பு அலை முறையில் வந்த மற்றய உற்பத்தி ஞிu றிஷீஸீt, மிஸீநீ., ஷிtணீஸீபீணீக்ஷீபீ ளிவீறீ, நிமீஸீமீக்ஷீணீறீ ணிறீமீநீtக்ஷீவீநீ, ணிணீstனீணீஸீ ரிஷீபீணீளீ, கினீமீக்ஷீவீநீணீஸீ ஜிஷீதீணீநீநீஷீ மிஸீநீ. நிறுவனங்கள் போன்றவைகள் ஆகும். (விமீக்ஷீரீமீக்ஷீs, கிநீஹீuவீsவீtவீஷீஸீs, ணீஸீபீ சிஷீக்ஷீஜீஷீக்ஷீணீtமீ ஸிமீstக்ஷீuநீtuக்ஷீவீஸீரீ, திஷீuக்ஷீtலீ ணிபீவீtவீஷீஸீ, தீஹ் றிணீtக்ஷீவீநீளீ கி. நிணீuரீலீணீஸீ [பிஷீதீஷீளீமீஸீ, ழி.யி.: கீவீறீமீஹ் & ஷிஷீஸீs, 2007), ஜீஜீ. 31-33).


28. இரண்டாம் அலை இணைப்புக்கள் 1916ல் இருந்து 1929 வரை நடைபெற்றன. இந்த அலை முதலில் இருந்து சில முக்கிய விதங்களில் வேறுபட்டிருந்தது; முதலில் மிக அதிகமான இணைப்புக்கள் "சமாந்திரமாக" இல்லாமல் "செங்குத்தானதாக" (ஸ்மீக்ஷீtவீநீணீறீ) இருந்தன. அதாவது வாங்குபவர்-விற்பவர், பொருட்களை விற்பவர்கள்-அளிப்பவர்கள் என்ற விதத்தில் போட்டியிடுபவர்கள் என்பதற்கு மாறாக இது இருந்தது. சிலவற்றில் கிறீறீறீவீமீபீ சிலீமீனீவீநீணீறீ போன்ற நிறுவன அமைப்பில், தோன்றி நிறுவனங்கள் ஒரேவித உற்பத்தி வகை, சந்தை மூலோபாயங்கள் போன்றவற்றைக் கொண்டிருந்தன; இதையட்டி அவற்றிற்கு போட்டிமிக்க அனுகூலங்கள் கிடைத்தன. வரலாற்றளவில் முதல் மற்றும் இரண்டாம் அலை இணைப்புக்களும் கையகப்படுத்துதலும் அமெரிக்க பெருநிறுவன ஏற்றத்தில் முக்கிய நிகழ்வுகள் ஆகும்; இவைதான் அது உலக மேலாதிக்கத்தைப் பெற உதவின.

"மூன்றாம் அலை" இணைப்புக்களும் கையகப்படுத்துதலும்

29. 1965 முதல் 1969 வரை வெடித்தெழுந்த மூன்றாம் இணைப்பு அலைகளின் தன்மைகள் அடிப்படையில் மற்ற இரு அலைகளில் இருந்து வேறுபட்டிருந்தன. அமெரிக்காவில் உலக நிலை வீழ்ச்சியடைந்து வந்ததை எதிர்கொள்ளும் வகையில் இலாபங்கள் வேண்டும் என்ற அதிக அழுத்தத்தின் பேரில் வந்த மூன்றாம் அலையின் மூலோபாயத்தின் நோக்கம் வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொண்டு இலாபங்களை ஆக்கிரோஷமாக பெருக்குவதற்காக அத்துடன் தொடர்புடைய அல்லது தொடர்பே இல்லாத நிறுவனங்களை, தொழிற் துறையில் பெருநிறுவன வாங்குதல் என்பது வரலாற்று ரீதியாக வேரூன்றி இருந்தது. இந்த புதிய மூலோபாயம் அமெரிக்க ஆளும் வர்க்கம் மற்றும் பெரு நிறுவனங்கள் இடையே அதன் முக்கிய தொழிற்துறைகளின் இலாபத்திறனில் பரந்த முறையில் அவநம்பிக்கை ஏற்பட்டத்தைத்தான் பிரதிபலித்தது. இணைப்புக்களும், கையகப்படுத்துதல்களும் அமெரிக்க பெருநிறுவனங்களின் முக்கிய வேலையாகப் போயின. இத்தகைய செயற்பாடுகள் 1965ல் 2,000 என்பதில் இருந்து 1969ல் 6,000 ஆகியது. (சிலீணீஸீபீறீமீக்ஷீ, ஜீ.622).

30. இதன் விளைவாக ஏற்பட்ட வெறி ஒரு சக்தி வாய்ந்த புதிய வணிக முயற்சியின் வளர்ச்சி என ஆயிற்று: பெருநிறுவனங்களை வாங்குதல், விற்றல், "பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்கு ஒரு சந்தை" என்பதைத் தோற்றுவித்தல். இந்த சந்தை மிகக் குறிப்பிடத்தக்க வகையில் 1970களில் விரிவடைந்தது. இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் அலையைத் தொடர்ந்து பல துறைகளில் ஈடுபடும் அலை வந்தது. பெருநிறுவனங்கள் "குறைவான செயற்பாடு உடைய" தங்கள் நிறுவனங்களின் பிரிவுகளை விற்கத் தலைப்படட்ன. ஒரு கணிசமான அளவிற்கு இத்தகைய பல துறைகளில் ஈடுபடும் முறை முன்பு ஒழுங்காக ஆராயாமல் எடுக்கப்பட்ட செயல்களைக் கண்டனம் செய்ததற்கு ஒப்பாகும். எப்படிப் பார்த்தாலும், இது ஒரு புதிய நிகழ்வு ஆகும். 1970க்கு முன்பு பல துறைகளில் ஈடுபடும் தன்மை அபூர்வமாகத்தான் இருந்தது. 1970களில் இது ஒரு சாதாரண வணியகச் செயலாகப் போயிற்று. வணிகங்களை வாங்கி விற்பது என்பது அமெரிக்காவின் வணிகச் செயல்களில் முக்கிய கூறுபாடாக மாற்றம் அடைந்தது.

31. இந்த வளர்ச்சி அமெரிக்க பெருநிறுவனங்கள் (பின்னர் சர்வதேச வகையில்) பாரிய தாக்கத்தை கொண்டதுடன், மேலும் நிதியப் பிரிவிற்கும் தொழில்துறைக்கும் இடைய உள்ள முழு உறவுகளிலும் பாதிப்பு வந்தது. புதிய மூதலீட்டு மூலோபாயங்கள் வியத்தகு அமெரிக்க பெருநிறுவன மறுகட்டமைப்பிற்கு வழிவகுத்தன. 1960 நடுப்பகுதிக்கு முன்பு வாடிக்கையாக இருந்த நீண்டகால முதலீட்டு பத்திரங்களுக்கு பதிலாக குறுகிய காலத்தில் அதிக இலாபம் வரக்கூடிய மூலோபாயங்கள் இடத்தை பிடித்தன. நிர்வாகமும் தொழில்துறையின் இயக்கமும் வோல்ஸ்ட்ரீட்டின் நிதிய நடவடிக்கைகளின் ஆணைக்கு உட்பட்டன.

32. நிதிய மூலதனத்தைப் பிரதிபலித்த வங்கிகள் அமெரிக்க வணிகத்தில் 20ம் நூற்றாண்டு முழுவதும் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன என்பது உண்மையே. ஆனால் தன்னுடைய வரலாற்று ஆய்வில் சாண்ட்லர் ஆதாரம் காட்டியுள்ளது போல், அந்தப் பங்கு நீண்ட கால வணிக மூலோபாயத்தின் வடிவமைப்பிற்குள் இயக்கப்பட்டது. பொதுவாக தொழிற்துறையின் வேறுபட்ட பிரிவுகளுள் இருக்கும் போட்டியினால் நலன்களை அடைவதில் தொடர்பட்டிருந்தன. ஆனால் நிதியின் பங்கு 1960 களின் நடுப்பகுதியில் இருந்து மாறியது. வோல் ஸ்ட்ரீட் செயல்பாடுகளினால் நிறுவனங்களில் பங்குளை வாங்குவதன் மூலம் உரிமைகளை பெற்ற நிதி வழங்குனர்கள் குறுகிய கால இலாபங்களுக்காக பெருநிறுவனத்தின் கொள்கைகளை விரைவில் மாற்றமுடியும். வோல் ஸ்ட்ரீட்டின் செயல்பாடுகளின் அளவு மிகப் பெரியளவில் வளர்ந்தன. 1950களின் ஆரம்ப ஆண்டுகளில் நியூயோர்க் பங்குச் சந்தைகளில், ஆண்டிற்கு வணிகத்திற்குட்பட்ட பங்குகளின் எண்ணிக்கை ஒரு அரை பில்லியன் என இருந்தது. 1965ல் கூட இந்த எண்ணிக்கை 1.5 பில்லியன் என்றுதான் இருந்தது. 1985ல் இது வியத்தகு முறையில் 27.5 பில்லியன் என்று உயர்ந்தது. 2006ல் மொத்த பங்கு மதிப்பு 625 பில்லியன் ஆண்டிற்கு எனப் போயிற்று. இந்த நிகழ்வுப்போக்குகளுடன் இணைந்தது அமெரிக்க பெருநிறுவனங்களின் மறுசீரமைப்பில் முதலீட்டு வங்கிகள் கொண்ட மத்திய பங்கு இருந்தது. "1960களின் பிற்பகுதியில் ஏற்பட்ட கையகப்படுத்தல் செயற்பாடுகளுக்கு முன்பு, எந்த முதலீட்டு வங்கியும் இணைப்புக்கள், கையகப்படுத்தலுக்காக ஒரு தனிப்பிரிவைக் கொள்ளவில்லை. விரைவில் அத்தகைய சிறப்புப் பிரிவுகள் வங்கிகளுக்கு மிகப்பெருமளவு பணத்தை கொண்டுவரும் துறைகளாயின." என்று சாண்ட்லர் எழுகிறார். (ஷிtக்ஷீணீtமீரீஹ் ணீஸீபீ ஷிtக்ஷீuநீtuக்ஷீமீ: சிலீணீஜீtமீக்ஷீs வீஸீ tலீமீ பிவீstஷீக்ஷீஹ் ஷீயீ tலீமீ கினீமீக்ஷீவீநீணீஸீ மிஸீபீustக்ஷீவீணீறீ ணிஸீtமீக்ஷீஜீக்ஷீவீsமீ [சிணீனீதீக்ஷீவீபீரீமீ, விணீss.: ஜிலீமீ விமிஜி றிக்ஷீமீss, 1990], மிஸீtக்ஷீஷீபீuநீtவீஷீஸீ, ஜீ. ஸ்வீ).

இணைப்புக்கள், கையகப்படுத்தல் ஆகியவற்றில் "நான்காம் அலை"


33. அமெரிக்காவிலும் (பின்னர் சர்வதேச அளவிலும்) பங்குச் சந்தை வணிகத்தின் முக்கியத்துவம் நான்காம் அலையான இணைப்புக்களில் குறிப்பாக வெளிந்தன; இவை 1984 முதல் 1989 வரை நடைபெற்றன. இக்காலக்கட்டத்தில்தான் அடிப்படையில் ஒட்டுண்ணித்தன, அழிவு தரக்கூடிய, குற்றம்சார்ந்த நடைமுறைகள், ஒரு புதிய நிதிய உந்துதல் கொண்ட பெருநிறுவன முன்மாதிரி உறுதியாக நிறுவப்பட்டது. முதலீட்டு வங்கியாளர்கள் (மிஸீஸ்மீstனீமீஸீt தீணீஸீளீமீக்ஷீs) இந்த வழிவகையில் மத்திய பங்கை கொண்டிருந்தனர் பாட்ரிக் காகன் குறிப்பிட்டுள்ளது போல், "இணைப்புக்கள் முதலீட்டு வங்கியாளர்களுக்கு கிட்டத்தட்ட ஆபத்து இல்லாத ஆலோசனைக் கட்டணம் பெறுவதற்கு பெரும் ஆதாரமாக விளங்கின." இணைப்புக்கள் சிறப்பு வல்லுனர்கள் முதலீட்டு வங்கிளிலும், சட்ட அலுவலகங்களிலும் பல புதிய உற்பத்திப் பொருட்களையும் தொழில்நுட்பங்களையும் வளர்த்தன. இவை அப்படியே "கையேற்றலுக்கு" (ஜிணீளீமீஷீஸ்மீக்ஷீs) வசதி தரும் வகையிலும் அல்லது தடுக்கும் வகையிலும் இருந்தன. (விமீக்ஷீரீமீக்ஷீs, கிநீஹீuவீsவீtவீஷீஸீs ணீஸீபீ சிஷீக்ஷீஜீஷீக்ஷீணீtமீ ஸிமீstக்ஷீuநீtuக்ஷீவீஸீரீ, ஜீ. 57). முதலீட்டு வங்கியாளர்கள் வழிகாட்டிய விதத்தில் அமெரிக்க வரலாற்றில் முன்னொருபோதும் அறியப்படாத "விரோதமான கையேற்றல்" (பிஷீstவீறீமீ ஜிணீளீமீஷீஸ்மீக்ஷீ) முன்னோடியில்லாத வகையில் மிகப் பெரிய பரிமாணங்களைக் கொண்டது. நான்காம் அலையின் மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த கூறுபாடு இணைப்புக்களின் நிதியத் தரங்கள் ஆகும். $100 மில்லியனுக்கும் மேலான நிதி தொடர்புடைய செயற்பாடுகள் 1974க்கும் 1986க்கும் இடையே 23 மடங்கு அதிகரித்தன (வீதீவீபீ, ஜீ.54). "பெருநிறுவனக் கொள்ளையர்" கையேற¢றுக¢கொள¢ளும¢ முயற்சியில் ஏற்பட்டதை அடுத்து வந்த வருமானம்தான் முக்கிய ஆதாரம் என்ற விதத்தில் விரோதமான கையேற¢றல¢கள¢ 1980 களில் நிதிய ஒட்டுண்ணித்தனத்தின் முழு உருவகத்தன்மையின் வெற்றியையும் காட்டியது. கையேற¢றல¢ முயற்சிக்கு பின்னர் நிறுவனம் நீண்ட காலம் நீடித்துச் செயல்படுமா என்பது ஒரு புறம் இருக்க, செல்வக்கொழிப்பு என்பது அதனதன் முயற்சியின் வெற்றியை நம்பியிருக்கவில்லை.

அந்நிய முதலீட்டினால் வாங்குதலும், "கடன் வணிகரும்"

34. நான்காம் அலைகள் காலத்தில் நிகழ்ந்த இணைப்புக்கள் மிகப் பெரிய கடன்களால் நிதியளிக்கப்பட்டன. இத்துறையில் ஒரு வல்லுனர் விளக்குகிறார்:

வணிக சமூகத்தின் வரலாற்றில் மற்றொரு சொற்றொடர் இந்த இணைப்புக்கள், கையகப்படுத்தல் என்னும் நான்காம் அலைக்காலத்தில் புழக்கத்திற்கு வந்தது. அது அந்நிய முதலீட்டினால் வாங்குதல் (லிஙிளி-றீமீஸ்மீக்ஷீணீரீமீபீ தீuஹ்ஷீut). இம்முறையை வளர்த்து அனைவரும் செயல்படுத்த ரிஷீலீறீதீமீக்ஷீரீ ரிக்ஷீணீஸ்வீs உதவியது. அதற்காக மட்டுப்படுத்தப்பட்ட தன்மை உடைய பங்குதாரர்கள் முறை தொடர்ச்சியாக தோற்றுவிக்கப்பட்டன. அவை பெரிதும் இலாபம்தராததாக கருதப்பட்ட பல பெருநிறுவனங்களை வாங்கின. பெரும்பாலனவற்றிற்கு ரிலீஷீறீதீமீக்ஷீரீ ரிக்ஷீணீஸ்வீs நிறுவனம் வாங்கும் விலையில் பத்து சதவிகிதம் வரை அதன் மூலதனத்தில் இருந்தே நிதி கொடுத்தது. எஞ்சிய தொகை வங்கிக் கடன்கள் அல்லது உயர் இலாபம் கிடைக்கும் பத்திரங்கள் மூலம் பெறப்பட்டது.

வங்கிக் கடன்கள் மற்றும் பத்திரங்கள், இலக்கு கொள்ளப்பட்ட நிறுவனத்தின் இருக்கும், வரக்கூடிய சொத்துக்களை பயன்படுத்தின... மைக்கேல் மில்கென் தலைமையிலான ஞிக்ஷீமீஜ்மீறீ ஙிuக்ஷீஸீலீணீனீ லிணீனீதீமீக்ஷீt போன்ற முதலீட்டு வங்கிகள், இப்படி ஆதாயம் கிடைக்கக்கூடிய வகையில் நிறுவனங்களை வாங்க பணம் கிடைக்க உதவின. எடுத்துக் கொண்ட பின்னர் ரிஷீலீறீதீமீக்ஷீரீ ரிக்ஷீணீஸ்வீs நிறுவனம் மறுசீராக்க உதவும், இலாபம் குறைந்த பிரிவுகளை விற்றுவிட்டு, செலவினங்களை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இத்திறமைகள் அடையப்பட்டபின், நிறுவனம் மறுபடியும் கணிசமான இலாபத்தில் விற்க்கப்பட்டுவிடும்." ("ஜிலீமீ லிமீssஷீஸீs ஷீயீ பிவீstஷீக்ஷீஹ் ஸிமீறீணீtமீபீ tஷீ விமீக்ஷீரீமீக்ஷீs ணீஸீபீ கிநீஹீuவீsவீtவீஷீஸீs," தீஹ் ஙிவீறீறீ ஞிuஸீநீணீஸீ)

35. ரிஷீலீறீதீமீக்ஷீரீ ரிக்ஷீணீஸ்வீs போன்ற நிறுவனங்களின் செயல்கள் தனிப்பட்ட பேராசையின் விளைவு மட்டும் இல்லை. அமெரிக்க முதலாளித்துவத்தின் தொழில்துறை அடித்தளத்தின் சிதைவு "கடன்களின் வணிகர்களான" ரிஷீலீறீதீமீக்ஷீரீ ரிக்ஷீணீஸ்வீs, ஞிக்ஷீமீஜ்மீறீ ஙிuக்ஷீஸீலீணீனீ லிணீனீதீமீக்ஷீt போன்றவற்றின் அழிக்கும் செயற்பாடுகளின் வெளிப்பாடும்தான். பொருளாதார நடவடிக்கையின் ஒவ்வொரு குறியீடும் காட்டுவது போல், அமெரிக்கத்தளத்தை கொண்ட உற்பத்திமுறை ஆபத்தாக சரிந்து கொண்டிருக்கையில், நிதிய ஊகம் அமெரிக்க முதலாளித்துவம் தன்னை செல்வக் கொழிப்பு உடையதாக செய்துகொள்ளுவதற்கு முக்கிய வழிவகையாக மாறியது. 1980ம் ஆண்டில் பெருநிறுவன இலாபங்களில் 6 சதவிகிதம்தான் நிதியத் துறையில் அடையப்பட்டது. 2005ம் ஆண்டிலோ, நிதியத் தொழில்துறை பெருநிறுவன இலாபங்களில் 40 சதவீதத்தை தோற்றுவித்தது அதாவது பணத்தை குவிப்பதில் மிகவேகமான வழிவகை உற்பத்தியில் ஈடுபடுவது என்று இல்லாமல் உற்பத்தியில் இருந்து எவ்வளவு அந்நியப்பட்டு இருக்க முடியமோ அவ்வளவு அந்நியப்பட்டு இருப்பது. இது மற்றொரு புள்ளிவிவரத்தின் மூலமும் வெளிப்படுகிறது: 1981, 2008க்கு இடைப்பட்டகாலத்தில் அமெரிக்க நிதியத் துறையின் மொத்தக் கடன் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 22 சதவிகிதத்தில் இருந்து 117க்கு உயர்ந்து! இது ஊக வணிகம் பணத்தை அடைவதற்கு கூடுதலான நம்பிக்கை தருவதாக நிரூபிக்கப்பட்டது. அதாவது தொழில்துறை உற்பத்தி என்னும் உறுதியற்ற, கடின வழிவகையை விட!

36. இணைப்புக்கள் மற்றும் கையேற்றல்களின் நான்காம் அலை பயனற்ற பத்திரச் சந்தையின் சரிவு, மற்றும் 1980 களின் கடைசியில் இருந்த சேமிப்பு மற்றும் கடன் கொடுத்தல் ஊழல்களுக்கு நடுவே முடிவுற்றது. அமெரிக்கப் பொருளாதாரம் 1990-91ல் மந்தநிலையைக் கண்டது. அந்த நிலையில் இருந்து மீட்பு, சந்தை குறியீடுகளை பெரிதும் உயர்த்தியது, ஐந்தாம் அலையான பாரிய இணைப்புக்களை ஏற்படுத்தியது. இவை மீண்டும் இணைப்புக்கள் இலாபம் ஈட்டுவதற்கு விரைவான வழிவகைகள் என்று கருதப்பட்டன.

இணைப்புக்கள், கையேற்றுக்கொள்ளல் ஆகியவற்றின் "ஐந்தாம் அலை"


37. 1992ம் ஆண்டு ஆரம்பித்த இந்த ஐந்தாம் அலையின் குறிப்பிடத்தக்க கூறுபாடு, 2008 உலக நெருக்கடி வெடிக்கும் வரை தொடர்ந்திருந்தது. இது பெருநிறுவனப் பங்குகளை நிதிய கையேற்றுக்கொள்ளல்களுக்கு பயன்படுத்துவது ஆகும். இது 1990களின் பங்குச் சந்தை பெரும் ஏற்றத்தில் ஊதிப் போயிருந்த பங்கு மதிப்புக்களால் எளிதாயிற்று. உண்மையில் இக்காலக்கட்டத்தில் செய்யப்பட்ட இச்செயல்கள் பலவும், செய்தி ஊடகத்தால் திறமைகளையும், கட்டமைத்த ''ஆற்றல்களையும்'' தோற்றுவிப்பவை எனப் பாராட்டப்பட்டாலும், முதலீட்டு வங்கியாளர்கள், சட்ட நிறுவனங்கள், பெரிய பங்குகள் உரிமையாளர்கள் மற்றும் பெருநிறுவன நிர்வாகிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடனடி நிதிய ஆதாயங்களுக்கு அப்பால் எந்தவித பொருளாதாரப் பகுத்தறிவையும் கொண்டிருக்கவில்லை. இந்த ஊக நடவடிக்கைகளின் விளைவுகள் பேரழிவு தரக்கூடியதாகின. ஒருங்கிணைக்கபட்ட நிறுவனங்கள் பலவும் இறுதியில் திவாலாயின. 1998ல் இருந்து 2001க்குள்ளாக நிதியங்களின் பங்குதாரர்கள் இணைப்புக்கள், கையேற்றுக்கொள்ளுதல்கள் ஆகியவற்றின்மூலம் திகைப்பூட்டும் வகையில் 240 பில்லியன் டாலரை இழந்தனர். (நிணீuரீலீணீஸீ, ஜீ.63). 87 ஒப்பந்தங்களில் பங்குதாரர்கள் இணைபுக்களுக்காக 1 பில்லியன் டாலர், அதற்கும் அதிமாக இழப்பைக் கண்டனர். (நிணீuரீலீணீஸீ, ஜீ.64).

38. இணைப்புக்களின் ஐந்தாம் அலை மற்றொரு விதத்திலும் குறிப்பிடத்தக்கது ஆகும். இது சர்வதேசரீதியாக நிகழ்ந்தது. அமெரிக்காவில் சற்றே காலம் தாமதித்து வந்தாலும், ஐரோப்பிய பரிமாற்றங்களின் மதிப்பு 1999ம் ஆண்டு கிட்டத்தட்ட அமெரிக்க செயல்களுக்கு ஒப்பாக இருந்தன. ஆசியாவும் குறிப்பிடத்தக்க வகையில் இந்த இணைப்புக்கள் அலையில் பங்கு கொண்டது. இந்தப் போக்கு புதிய நூற்றாண்டிலும் தொடர்ந்தது; 2001-02 ல் சந்தை சுருக்கம் என்ற ஒரு குறைவான காலத்திற்கு பின்னரும் தொடர்ந்தது. நிணீuரீலீணீஸீ உடைய கருத்தின்படி, "வி&கி (இணைப்புக்கள்,கையேற்றல்கள்) வணிகம் மீண்டும் நன்கு செயல்படத் தொடங்கி உண்மையில் உலகளாவியதாயிற்று. புதிய எதிர்கால இலக்குகள் மற்றும் ஏலம் எடுப்போர் குறிப்பாக கிழக்கு ஐரோப்பா, ஆசியா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா ஆகியவற்றில் அதிகரித்த தனியார்மயத்தை ஒட்டி சந்தைக்கு வந்தனர்-- " (மிதீவீபீ, ஜீ.68)

39. இந்த ஆய்வு காட்டியுள்ளது போல், இணைப்பு "அலைகள்" எழுச்சி, சரிவு, மற்றும் அமெரிக்க முதலாளித்துவதின் வீழ்ச்சி ஆகியவற்றின் வரலாற்றைக் காட்டியுள்ளது. முதல் இரு அலைகளும் (1898-1904, 1916-1929) அமெரிக்கப் பெருநிறுவனங்கள் உலக மேலாதிக்க நிலையில் ஏற்றத்தை அடைந்ததின் ஒரு பகுதி ஆகும். மூன்றாம் அலை (1965-69) சரிந்து கொண்டிருந்த இலாப விகிதங்களுக்கு விடையிறுப்பு என்ற விதத்தில் தோன்றியது; அதே போல் அமெரிக்க முதலாளித்துவத்தின் உலக அந்தஸ்து சரிவு என்பதின் ஆரம்ப அடையாளமாகவும் வந்தது. நான்காம், ஐந்தாம் அலைகள் (1984-89, 1992-2008) சமூகப் பொருளாதாரத்தின் சரிவு, வீழ்ச்சி, ஒட்டுண்ணித்தனம் ஆகியவற்றின் நிகழ்வுகள் ஆகும். கடைசி அலைகள் பாரிய கடன்கள், அத்துடன் அது கோரிய, அதற்கு முன்பும் இருந்த உண்மையான உற்பத்தி சக்திகள் அழிவு வேண்டும் என்பதும் இருந்தது. இந்த செயல்களின் அடிப்படை நோக்கம் அதுவும் முதலீட்டாளர்களுடைய இலாப, தனியார் சொத்துக் குவிப்பிற்காக சமூக செல்வத்தை அழித்தல் என்று இருந்தது. இந்த வழிவகை மிக சிறப்பாக சிலீணீக்ஷீறீமீs ஸி. விஷீக்ஷீக்ஷீவீs எழுதியுள்ள டிரில்லியன் டாலர் அழிப்பு (ஜிலீமீ ஜிக்ஷீவீறீறீவீஷீஸீ ஞிஷீறீறீணீக்ஷீ விமீறீtபீஷீஷ்ஸீ) என்ற புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது. அவர் ஜிக்ஷீணீஸ்மீறீஜீஷீக்ஷீt என்ற ஒரு வலைத் தள பதிவுசெய்யும் நிறுவனம் பற்றி கூறுகின்றார். இது சமீபத்தில் ஙிறீணீநீளீstஷீஸீமீ தனியார் பங்குச் சந்தை நிறுவனத்தாலும் மற்றும் ஒரு சிறிய பங்காளிகளாலும் வாங்கப்பட்டது.

... அவர்கள் 1 பில்லியன் டாலர் தங்கள் பணத்தைக் கொடுத்து, ஜிக்ஷீணீஸ்மீறீஜீஷீக்ஷீt உடைய இருப்புநிலைக் குறிப்பை பயன்படுத்தி மற்றொரு 3.3 பில்லியன் டாலரை கடன்வாங்கி அதனை வாங்கி முடித்தனர். சந்தேகத்திற்கு இடமில்லாமல் அவர்கள் தங்களுக்கு மிக அதிக முதலீட்டு வங்கிக் கட்டணத்தையும் கொடுத்துக் கொண்டனர். இதுவும் ஜிக்ஷீணீஸ்மீறீஜீஷீக்ஷீt இன் செலவுக் கணக்கில் எழுதப்பட்டிருக்கும். ஏழு மாதங்களுக்கு பின்னர் அவர்கள் 841 தொழிலாளர்களை வேலைநீக்கினர். ஒரு ஏற்கக்கூடிய உத்தேசத் தொகையான 125,000 டாலர் என்று ஊழியர் ஒருவருக்கு அனைத்தும் அடங்கிய முறையில் (ஊதியங்கள், பிற நலன்கள், இடம், தொலைபேசி, போன்றவை). இது ஆண்டு ஒன்றுக்கு 100 மில்லியன் டாலர் சேமிப்பை குறிப்பிடுகின்றது.

இதன் பின் இரு பங்காளிகளும் ஜிக்ஷீணீஸ்மீறீஜீஷீக்ஷீt உடைய இருப்பு நிலைக்குறிப்பில் இன்னும் 1.1 பில்லியன் டாலரை கடன் வாங்கி தங்களுக்கே அந்தப்பணத்தை கொடுத்துக் கொண்டனர்; தங்கள் கடின உழைப்பிற்கு வெகுமதியாகப் போலும். ஏழே மாதங்களில் அவர்கள் 1 பில்லியன் டாலர் நிதிய மூலதனத்தை திரும்பப் பெற்றதுடன், கூடுதலான முறையில் வங்கிக் கட்டணங்கள், ஆண்டு நிர்வாகக் கட்டணம் என்பதையும் பெற்றுக்கொண்டதுடன், நிறுவனத்தையும் தொடர்ந்து தங்கள் உரிமையில்தான் வைத்திருக்கிறார்கள். தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதால் பெறப்பட்ட 100 மில்லியன் டாலர் ஆண்டு சேமிப்பு என்பது 1.1 பில்லியன் டாலர் கடனுக்குக் கொடுக்க வேண்டிய தவணைக் கட்டுப்பணத்தை கொடுத்துவிடும். இதுதான் சிறந்த முறையில் நிதிய ஊடகம் "மதிப்புக்களை தோற்றுவித்தல்" என்று கூறுவது. எமது மனதில் தோன்றும் மற்றொரு சொல் "கொள்ளை அடித்தல்" என்பதாகும்.

உண்மையில் ஙிறீணீநீளீstஷீஸீமீ செய்தது புதிதாக பெறுமதியை உருவாக்கவில்லை, மாறாக அதை மறுபங்கீடு செய்ததாகும்.

ஒட்டுண்ணித்தனத்தின் சமூக, பொருளாதார விளைவுகள்

40. ஙிறீணீநீளீstஷீஸீமீ செயல்பாட்டு பாதிப்பு பற்றிய இந்த சுருக்கம் (இதன் தலைவர் ஷிtமீஸ்மீஸீ ஷிநீலீஷ்ணீsக்ஷீtக்ஷ்னீணீஸீ நிகரமாக 7 பில்லியன் டாலருக்கு மேல் நிதியை கொண்டுள்ளார்) அவற்றின் அடிப்படை சமூக முக்கியத்துவத்திற்கு கவனத்தை ஈர்க்கிறது. ஙிறீணீநீளீstஷீஸீமீ போன்ற அமைப்புக்களின் செயல்கள் சமூக அளவில் நடுநிலையில் நிற்பவை அல்ல. "பங்குதாரர்களுக்கான மதிப்பை தோற்றுவித்தல்" என்ற சொற்றொடர் மிருகத்தனமாக சுரண்டல் முறை, சமூக அழிவிற்கு வகைசெய்தது மற்றும் இந்த நிதிய செயல்களின் அடிப்படை குற்றத்தன்மையை மறைப்பதற்கும் நியாயப்படுத்துவதற்கும் பயன்படுத்திய சமூகச் சொல் ஆகும். 1980களின் இணைப்புக்கள், கையேற்றல்கள் அலை அமெரிக்காவின் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலை மீதான பாரிய தாக்குதலை நடத்தாமல் வெற்றி பெற்றிருக்க முடியாது. அதற்கு அது தேவை ஆகும். ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் ரேகன் நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்ட கொள்கைகள் பெருநிறுவன கொள்கையர்களின் செயல்களுக்கு தேவையான அரசியல் வடிவமைப்பைக் கொடுத்தன. 1980களில் வசதிக்கேற்ப வாங்கியவற்றின் பெரும் கடனை திருப்பிக் கொடுப்பதற்கு ஆழ்ந்த முறையில் தொழிலாளர்களை சுரண்டுதல் தீவிரமாக்கப்பட வேண்டும் என்று போயிற்று. அதுதான் தொழிற்சங்கங்களை உடைத்தல், ஊதிய வெட்டுக்கள், நலன்களைக் குறைத்தல், கடுமையான பணி விதிகள் மற்றும் அப்பட்டமாக நூறாயிரக்கணக்கான வேலைகளை அழித்தல் என்பவற்றின் மூலம் அடையப்பட்டது.

41. இப்படி பொருளாதாரப் பேரழிவுகள் பலமுறையும் தோன்றியது துரதிருஷ்ட நிகழ்வுகள் என்று விளக்கப்பட முடியாதவை. அதாவது முதலீட்டாளர்கள் குறைந்த பேராசை கொண்டிருந்தால், நிர்வாகிகள் இன்னும் பொறுப்போடு இருந்திருந்தால், செயல்படுத்துபவர்கள் கண்காணிப்பை அதிகம் காட்டியிருந்தால் இவ்வாறு நிகழ்ந்திருக்காது என்று விளக்கப்பட முடியாதவை. 1980களில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு பெரிய இழப்பு ஏற்பட்டு வந்துள்ளது. 1980களில், "பேராசை தசாப்தம்" எனப்பட்டதில், சேமிப்பு, கடன்கள் ஊழல், பயனற்ற பத்திரங்கள் வெறி (மிஸ்ணீஸீ ஙிஷீமீsளீஹ், விவீநீலீணீமீறீ விவீறீளீமீஸீ) மற்றும் 1987ம் ஆண்டு வோல் ஸ்ட்ரீட் சரிவு ஆகியவை இருந்தன. 1990 களில் மெக்சிக்கோ பெசோ நெருக்கடி, டாட் காம் குமிழி, ஆசிய நெருக்கடி, ரூபிள் நெருக்கடி, நீண்ட கால முதலீடு நிர்வாகச் சரிவு ஆகியவை இருந்தன. 2001ம் ஆண்டு ணிஸீக்ஷீஷீஸீ கிட்டத்தட்ட ஒரே இரவில் சரிந்தது; அதற்குக் காரணம் அது மோசடித்தன கணக்கு முறையைக் கையாண்டது, மிகப் புகழ்வாய்ந்த கணக்கு நிறுவனங்களும் உடந்தையாக நின்றதும் அம்பலமாயிற்று. இதன்பின் மத்திய வங்கி கூட்டமைப்பு பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு அதன் வட்டி விகிதங்களை குறைத்தது, வீடுகள் விலை ஏற்றம் தொடங்கியது. இந்த ஊக நடவடிக்கைள் அனைத்தின் அடித்தளத்தில் இருந்ததும் அமெரிக்க முதலாளித்துவத்தின் உண்மையான உற்பத்தி அஸ்திவாரங்கள் வீழ்ச்சியுற்றதும், உற்பத்தி நிகழ்வுப்போக்கிலிருந்தும் மற்றும் உண்மை மதிப்பு தோற்றுவித்தலில் இருந்தும் ஆளும் வர்க்கம் தனது செல்வக் செழிப்பாக்கலை பிரித்துக் கொண்டது ஆகியவை இருந்தன.


டாலர் ஆதிக்கத்தின் முடிவு

42, இந்த நெருக்கடி அமெரிக்க முதலாளித்துவத்தின் "பொற்காலம்" என்ற கற்பனையை புதுப்பிப்பதின் மூலம் பழையபடி மாற்றப்பட முடியாதது ஆகும். முதலில் உலகப் பொருளாதாரத்தின் அமெரிக்க முதலாளித்துவத்தின் புறநிலை நிலைமை கடந்த 40 ஆண்டுகளில் வியத்தகு முறையில் சரிந்துவிட்டது. இந்த அறிக்கையில் முன்னதாக நான் கூறியுள்ளபடி, டாலர் வலுவிழந்தது 1950களின் கடைசியிலேயே நடந்தது. இது அமெரிக்காவில் உலக நிலைமையின் சரிவில் மிக ஆரம்ப அடையாளங்களில் ஒன்றாகும். 1971ம் ஆண்டு அமெரிக்கா டாலர்-தங்கம் மாற்று முறையை முடிவிற்கு கொண்டுவந்தவிட்ட போதிலும்கூட டாலர் உலகின் இருப்பு நாணயமாக உள்ளது. அமெரிக்கா உலகின் மிகப் பெரிய கடனாளி நாடாகி மற்றும் பாரிய நடப்பு செலுத்தமதி பற்றாக்குறையைக் கொண்டிருந்தும் இது தொடர்கிறது. ஆனால் இந்த நெருக்கடியின் இது ஒரு வரலாற்றுத் திருப்பு முனை என்பதற்கான இன்னொரு அடையாளமாக இருக்கின்றது. சீனப் பிரதம மந்திரி வென் ஜியாபோ வெளிப்படையாக அமெரிக்க டாலரின் நிலைத்திருக்கும் வருங்காலத்தன்மை பற்றி கவலை தெரிவித்துள்ளதுடன், சீனா டாலர் இருப்புக்களை கொண்டுள்ளது பற்றியும் கவலையை தெரிவித்துள்ளார். "அமெரிக்காவிற்கு மிக அதிக பணத்தை கடனாக கொடுத்துள்ளோம். எங்கள் சொத்துக்கள் பற்றி நாங்கள் கவலைதான் கொண்டுள்ளோம். உண்மையாக கூறவேண்டும் என்றால், நான் சற்றே கவலை கொண்டுள்ளேன்" என்று சமீபத்தில் அவர் கூறினார்.

43. அமெரிக்காவின் நிதிய நிலைப்பாடு ஒரு முக்கிய பொருளாதார சக்தியால், அதுவும் அமெரிக்க டாலர்களை மிக அதிக அளவில் சேமிப்புக்களாகக் கொண்டிருக்கும் சக்தியால் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க விமர்சகர்கள் பெரும்பாலானவர்கள் வென்னின் அறிக்கையை உதறித்தள்ளியிருந்த போதிலும்கூட, சீனா தன்னுடைய நலனைக் கருத்திற்கொண்டு டாலர் சேமிப்புகளைக் குறைத்து அமெரிக்க நாணயத்தை அனைவரும் கைவிடும் நிலையை ஏற்படுத்தாது என்றாலும், அதன் முக்கியத்துவத்தை மிகைப்படுத்துதல் தேவையில்லை எனக்கூறினர். இதுவரை அமெரிக்க கொடுத்த டாலருக்கான உலகப் பங்கு ஒரு தனிப்பட்ட நிதிய ஆதாயத்தை கொண்டிருந்தது. அமெரிக்கா உலகின் இருப்பு நாணயமாக செயல்பட்டு வந்த நாணயத்தை அச்சிடும் உரிமையை கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது.

44. டாலர் தன்னுடைய சிறப்பு உலக அந்தஸ்தை இழந்துவிட்டால், அமெரிக்க முதலாளித்துவத்தின் உலக நிலைமையில் இது உடனடி விளைவை ஏற்படுத்தும் என்பது மட்டும் இல்லாமல், அதன் உள்நாட்டு பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்துவதிலும் பெரும் விளைவுகள் வரும். பல டிரில்லியன் டாலர்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தக் கூடிய ஒபாமா நிர்வாகத்தின் முழு ஊக்கப் பொதியும், வெளிநாட்டு கடன்கொடுத்தவர்கள் அமெரிக்க டாலரை அந்த நிலையிலேயே வைத்திருக்கும் விருப்பத்தில்தான் தங்கியுள்ளது.

ஒரு முழுஅமைப்பினதும் நெருக்கடி

45. இந்த உரையில் அளிக்கப்பட்டுள்ள பகுப்பாய்வு தற்போதைய நெருக்கடி ஒரு அமைப்புமுறையுடன் இயைந்ததே அன்றி தற்காலிகமானதல்ல, இதன் தோற்றம் அமெரிக்க முதலாளித்துவத்திற்கு உலக நிலையில் ஏற்பட்ட நீடித்த வீழ்ச்சியின் விளைவு எனக் கூறுகிறது. கடன்களால் ஊக்கம் பெற்ற தலைகொழுத்து ஆடிய ஊக வணிகம் நெருக்கடிக்கு காரணம் அல்ல. மாறாக இது அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரங்களில் வேரோடியுள்ள ஆழ்ந்த முரண்பாடுகளின் வெளிப்பாடு ஆகும். நாம் விளக்க முற்பட்டுள்ளது போல், அமெரிக்க முதலாளித்துவம் நான்கு தசாப்தங்களாக தான் எதிர்கொண்ட பொருளாதார அழுத்தங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் இன்று அதை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கான விதைகளை விதைத்துள்ளது.

46. இந்த நெருக்கடியின் கீழே உள்ள வரலாற்று, உலகத்தன்மை வாய்ந்த முரண்பாடுகளினால்தான், ஒபாமா நிர்வாகம் இந்த வீழ்ச்சி ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் புதிய நீடிக்கக்கூடிய பொருளாதார வளர்ச்சிக்கு வழிவிடும், அதனால் மக்களின் பரந்த பிரிவுகளுக்கும் வாழ்க்கைத் தரத்தில் உயர்வும் முன்னேற்றமும் ஏற்படும் என்று கூறுவது இந்நிகழ்வுகளால் இழிவிற்கு உட்படுத்தப்படும். மாதத்திற்கு மாதம், ஆண்டிற்கு ஆண்டு பொருளாதார முறையில் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி கருத்துக்கள் வந்தாலும், நெருக்கடியின் நீடித்த பாதிப்பு மிக நீண்டகாலத் தன்மையைக் கொண்டிருக்கும் என்பதுடன் அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை ஆழ்ந்த வேதனை தரக்கூடிய விதத்தில் பெரும் சரிவை ஏற்படுத்திவிடும் என்பதுதான்.


47. மேலும், வரலாறு நமக்கு ஏதேனும் கற்பிக்கிறது என்றால், முதலாளித்துவத்தின் சர்வதேசரீதியான நிலைமுறிவு தவிர்க்க முடியாமல் வன்முறையான அரசியல் கிளர்ச்சிகளுக்கு இட்டுச்செல்லும் என்பதுதான். நெருக்கடியில் இருக்கும் முதலாளித்துவம், அரசியல் சர்வாதிகாரங்கள் மற்றும் மூர்க்கமான இராணுவவாதத்திற்கான விளைநிலமாகிவிடும். 1930களின் ஆரம்பகாலத்தின் பொருளாதார நிலைமுறிவை அடுத்துத்தான் முதலில் பாசிசமும் பின்னர் உலகப் போரும் வந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதலாளித்துவம் மறுஸ்திரப்படுத்தத் பட்டதானது பல மில்லியன் மக்களின் உயிரைக் குடித்த வகையில்தான் நடந்தேறியது.

அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் சமூக வெளிக்கூறுபாடுகள்

48. வெளிப்பட்டிருக்கும் நெருக்கடியின் ஆபத்தான தாக்கங்களை உணர்தல் பயத்தை தூண்டும் தன்மை அல்ல, மாறாக அரசியல் யதார்த்தமாகும். 1930களிலும், 1940களிலும் முதலாளித்துவ நிலைமுறிவைக் கையாள ஆளும் உயரடுக்குகள் பயன்படுத்திய மிருகத்தனமான வழிவகைகளுக்கு ஒப்பான விதத்தில்தான் 21ம் நூற்றாண்டின் முதல், இரண்டாம் தசாப்தங்களிலும் அது எதிர்கொள்ளும் என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. பெரும் செல்வம் படைத்த பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கு கூடுதலான நாகரிகம் அடைந்துவிட்டது அல்லது தன்னுடைய நலன்களைக் பாதுகாப்பதற்கு கடந்த நூற்றாண்டின் பெருஞ்செல்வந்தர்கள் போல் வன்முறையில் இறங்காது என்று காட்டுவதற்கு தற்கால கலாச்சாரத்தில் எந்தக் கூறுபாடும் எதுவும் இல்லை. முதலாளித்துவப் பொருளாதார முறையில் செயல்பாடு ஏதோ அரிய தத்துவக் கோட்பாட்டின்படி நடக்கும் எனக் கூறுவதற்கு இல்லை; அது அதனை உருவாக்கிய, அதனுடன் இயைந்துள்ள வர்க்க உறவுகள் மற்றும் நலன்களின் அடிப்படையில்தான் இருக்கும். கடந்த கால் நூற்றாண்டில், அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சி ஒரு சக்தி வாய்ந்த சமூகத்தளத்தைத் தோற்றுவித்துள்ளது. இது பரந்த செல்வத்தை கட்டுப்படுத்துவதுடன், இதன் சமூக மற்றும் அரசியல் திமிர்த்தனம் பொருளாதார ஒட்டுண்ணித்தனத்தால் மிகுந்து போய் உள்ளது. இதன் கொள்கையினால் ஏற்பட்ட திவால்கள் மற்றும் வீழ்ச்சிகளை இது எதிர்கொண்ட ஆரம்ப நடவடிக்கைகளில் இருந்து ஏதேனும் முடிவு எடுக்கப்பட முடியும் என்றால், அது ஆளும் வர்க்கம் மக்களின் பெரும் பிரிவுகளை இந்த நெருக்கடிக்கா ன விலையை செலுத்தவைக்கும் என்ற விதத்தில்தான் உள்ளது.

49. அமெரிக்காவில் ஆளும் உயரடுக்கின் பொருளாதார நெருக்கடிக்கான விடையிறுப்பைக் காணும்போது 1789ல் வெடித்து தோன்றிய புரட்சிக்கு முன்பு பிரெஞ்சு பிரபுத்துவத்துடன் இதற்கு உள்ள இணையான தன்மையைத்தான் அறிய முடிகிறது. பிரான்சை எதிர்கொண்ட நிதிய நெருக்கடிக்கான அறிவார்ந்த தீர்வைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் அனைத்தும் பிரபுத்துவத்தால் தடைக்கு உட்பட்டன. அது தன்னுடைய நலனுக்கு நெருக்கடியை சுரண்ட முற்பட்டது. அதன் செல்வம், அந்தஸ்து, சலுகைகள் ஆகியவற்றை அச்சுறுத்தும் எந்த நடவடிக்கைகளையும் அது பொறுத்துக் கொள்ளத் தயாரக இல்லை. இறுதியில் அதன் இந்த பிடிவாதக் குணம்தான் சமூகத்தில் இருந்த மக்களை "மூன்றாம் சமூகநிலை" எனப்பட்ட இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை நோக்கித் தள்ளியது.


50. மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் இருந்து தங்களுக்கு பல மில்லியன் டாலர்கள் மேலதிக கொடுப்பனவுகளை வழங்கும் உரிமை பெற்றவர்கள் என்றும் கூறிக் கொள்ளும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் நிர்வாகிகளால் காட்டப்படும் பொது மக்களின் கருத்துக்களை திமிர்த்தனமான இழிவுக்குட்படுத்துவது என்பது, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் முற்றிலும் மாற்ற முடியாத பிற்போக்குத்தனம் மற்றும் சமூகரீதியாக அழிவு கொடுக்கும் தன்மையைத்தான் காட்டுகிறது. கிமிநி விவகாரம் சலுகைகளினால் போதையுற்றிருக்கும் செல்வந்தர்கள் உள்ள சமூகத்தில், அவர்கள் தாங்கள் விரும்பும் எதையும் செய்யலாம் என்று நம்புவதையும், அறநெறி தடுப்புக்கள் ஒருபுறம் இருக்க, இதற்கு சட்டத் தடைகள் இருக்காது என்ற கருத்தையும் கொண்டிருப்பது தெரியவரும். ஜனாதிபதி ஒபாமாவின் பெரும் மில்லியன்களை உடைய (நிர்வாகத்தின் மற்ற உறுப்பினர்களைப் போல்) நிதி மந்திரி டிம் கீத்னெர், எந்த சட்ட அல்லது தொழில்ரீதியான பாதிப்பும் இல்லாமல் தான் கொடுக்க வேண்டிய வரிகளை ஏமாற்றினார். சொத்து வியாபார செல்வந்தர் ஒருவர் ஒரு தடவை "வரிகள் என்பவை மிகச் சிறிய மனிதர்களுக்கு உரியது" என்றார்.

51. அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒரு இழிசரிவுற்ற பிரபுத்துவத்தின் குணநலன்களை எந்த அளவிற்கு கொண்டுள்ளது என்பதைக் காண்கையில் பெரும் வியப்பு ஏற்படுகிறது. தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டு, உயர்வாகவும் கருதிக் கொண்டுள்ள நிலையில், வாழ்வதற்கு உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சமூகத்தின் பிரிவுகளின் உணர்வுகள், கருத்துக்கள் ஆகியவற்றைப் பற்றிச் சிறிதும் பொருட்படுத்துவதில்லை. கிமிநி ஊழலுக்கு இடையே, நியூயோர்க் டைம்ஸின் வணிகக் கட்டுரையாளர்களில் முக்கியமாக ஒருவர் கிஸீபீக்ஷீமீஷ் ஸிஷீss ஷிஷீக்ஷீளீவீஸீ, 160 மில்லியன் டாலர் மேலதிக கொடுப்பனவுகள் கிமிநி க்குக் கொடுக்கப்பட வேண்டும், அதுதான் ஒப்பந்தங்களின் புனிதத்தை காக்கும் நலனை உடையது என்று எழுதினார்! ஆயினும்கூட, இதே கட்டுரையாளர்தான் கார்த் தொழிலாளர்களுடைய ஒப்பந்தங்களை கிழித்து தூர எறிய வேண்டும் என்று கூறியதுடன் நலன்கள் அகற்றப்பட்டு, ஊதியங்களும் குறைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். இவ்விதத்தில் வர்க்க நலன்களை ஒட்டி சட்டத்தரங்கள் நிர்ணயிக்கப்படுவதைப் பார்க்கிறோம்.

ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகள்

52. வரவிருக்கும் மாதங்களில் நிகழ்வுகளின் போக்கை ஆராய்கையில் இந்த அடிப்படை சமூக உண்மைகள் மனதில் கொள்ளப்பட வேண்டும். ஒபாமா நிர்வாத்தின் கொள்கைகள் பெருநிறுவன மற்றும் நிதிய பிரபுத்துவத்தின் நலன்களினால்தான் முற்றிலும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த விதத்தில் ஒபாமாவை ரூஸ்வெல்ட்டுடன் ஒப்பிடுபவர்கள் பகிரங்க ஏமாற்றுத்தனம் அல்லது தன்னையே ஏமாற்றிக் கொள்ளுதல் என்ற இரண்டில் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியின் தீவிரம் இருந்தபோதிலும், 1930களின் அமெரிக்க பொருளாதார வளங்கள் மகத்தானவையாக இருந்து ரூஸ்வெல்ட்டை சமூகச் சீர்திருத்தங்களை பற்றி பரிசோதனை செய்ய இடம் கொடுத்தன. அந்த வாய்ப்பு இப்பொழுது இல்லை. தற்கால அமெரிக்க முதலாளித்துவம் அத்தகைய வளங்கள் அல்லது ஆதாரங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை.

53. ஆனால் 1930களின் நிகழ்வுகளில் ஒரு முக்கியத்துவமான கூறுபாடு உறுதியாக இருந்தது. எதிர்வரவிருக்கும் மாதங்களில் நிகழ்வுகளின் போக்கு செல்லக்கூடிய தன்மைக் கருத்தில் கொண்டால் அது மிகவும் பொருத்தமானது. ரூஸ்வெல்ட் நிர்வாகத்தின் முதல் "100 நாட்கள்" ஏராளமான கொள்கை, முன்முயற்சிகளுடன் அரசாங்கக் கொள்கையில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதில் ஐயமில்லை. ஆனால் அமெரிக்க சமூகத்தில் முற்போக்குத்தன மாற்றங்களுக்கான உந்துதல் மேல் இருந்து வரவில்லை, ரூஸ்வெல்ட்டிடம் இருந்து வரவில்லை. மாறாக கீழிருந்து அதிகரித்த போர்க்குணம், தைரியம் இவற்றுடன் தங்களுடைய கரங்களிலேயே பொறுப்புக்களை எடுத்துக் கொண்ட பெரும்பாலான உழைக்கும் மக்களிடம் இருந்துதான் வந்தது. அமெரிக்காவில் சமூக நிலைமைகளில் உண்மையான குறிப்பிடத்தக்க மாற்றங்கள் 1934ம் ஆண்டு டோலிடோ, சான் பிரான்ஸிஸ்கோ, மின்னியபோலிஸ் ஆகிய இடங்களில் நடைபெற்ற பாரிய வேலை நிறுத்தங்களினதும், 1935ம் ஆண்டு சிமிளி எனப்படும் சிஷீஸீரீக்ஷீமீss ஷீயீ மிஸீபீustக்ஷீவீணீறீ ளிக்ஷீரீணீஸீவீக்ஷ்ணீtவீஷீஸீs நிறுவப்பட்டதினதும், அதேபோல் 1936-37 ல் பெரும் உள்ளிருப்பு வேலைநிறுத்தங்கள் நடைபெற்றதன் விளைவுகள் ஆகும்.

நெருக்கடியும் வர்க்க சக்திகளும்


54. வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த நெருக்கடியின் மிக அடிப்படைக் கூறுபாடு அது பாதிக்கப்பட்ட நாட்டின் (அல்லது நாடுகளில்) முக்கிய வர்க்க சக்திகள் நெருக்கடியை பொறுத்த வரையில் ஒரு சுயாதீனமான நிலையை வரையறுக்கவும் எடுக்கவும் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. அதாவது தங்கள் சொந்த சமூகத் தேவைகளையும் மற்றும் நலன்களையும் வெளிப்படுத்துவதற்கு இந்த நெருக்கடிக்கு ஒரு தீர்வை முன்வைக்கும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. ஆளும் வர்க்கங்களை பொறுத்தவரையில் இந்த நிகழ்வுப்போக்கே சற்றே இயல்பாகத்தான் நடைபெறுகிறது. அவர்களுடைய அரசில் அல்லது பொருளாதர நலன்கள்தான் முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற முன்கருத்து அவர்களிடம் உள்ளது. இவ்விதத்தில் "தடையில்லாத மாறுதலை" அதற்கு முந்தைய அரசாங்கத்திடம் இருந்து அடைந்த பின்னர் தற்போதைய நிலையில் ஒபாமா நிர்வாகம் அதன் முக்கிய முன்னுரிமை வங்கிகளுக்கு முட்டுக் கொடுத்தல் என்பதாக இருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் கொண்டிருக்கவில்லை; அதே நேரத்தில் பெருநிறுவன மற்றும் நிதிய பிரபுத்துவத்தின் செல்வம் மற்றும் சிறப்புச் சலுகைகளைப் பாதிக்கும் நடவடிக்கைகள் எதையும் தவிர்க்கிறது.

55. தொழிலாள வர்க்கத்தை பொறுத்தவரையில் இந்த நெருக்கடிக்கு ஒரு சுயாதீனமான அணுகுமுறையை அமைத்தல் என்பது, தேவையான திட்டத்துடன் மற்றும் கொள்கைகளுடன், ஒரு நீடித்த சமூக மற்றும் அரசியல் நிகழ்வுப்போக்காகும். மக்கள் தங்கள் அனுபவத்தை அடிப்படையாக கொண்டு முடிவுகளுக்கு வரவேண்டும். ஆனால் இந்த நிகழ்வுப்போக்கு ஏற்கனவே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தேர்தல் ஆண்டில் கொடுத்த உறுதிமொழிகளுக்கும் அரசாங்கக் கொள்கையின் உண்மைக்கும் இடையே இருக்கும் பெரிய பிளவு ஒவ்வொரு நாளும் இன்னும் வெளிப்படையாகிக் கொண்டிருக்கிறது. நடவடிக்கைக்கான தேவை இன்னும் அவசரமாக ஆகும்போது, தொழிலாள வர்க்கம் "மாற்றம்" தொடர்பான வனப்புரை மற்றும் வெற்றுத்தனமாக பற்றி பேசப்படுவது பற்றி அதன் பொறுமையை இழந்து விடும்.

56. "இதுநாள் வரையிலுமான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போரட்டங்களது வரலாறே ஆகும்" என்று 1847ல் மார்க்ஸ§ம் ஏங்கல்ஸ§ம் எழுதினர். மார்க்சிசம் நிராகரிக்கப்பட்டுவிட்டது, சோசலிசத்தின் சமத்துவ அபிலாசைகள் தற்கால உலகிற்கு பொருந்தாதவை எனப்படும் கூற்றுக்களின் அடித்தளத்தில் "வர்க்கப் போராட்டம்" கடந்த காலத்திற்குரியது என்ற சுயதிருப்திப்படுத்திக் கொள்ளும் நம்பிக்கைதான் இருந்தது. விந்தையான முறையில் வர்க்கப் போராட்டம் பற்றிய உத்தியோகபூர்வ நிராகரிப்பு ஆளும் வர்க்கம் தனது நலன்களை தொடர்ந்திருந்த நிலைமையின் கீழேதான் நிகழ்ந்தது (இன்னும் அது அதைத்தான் தொடர்கிறது).


57. பொருளாதார நெருக்கடியின் ஒரு சந்தேகத்திற்கிடமில்லாத சாதகமான தன்மை என்னவெனில் அது தற்கால முதலாளித்துவ சமூகத்தின் உண்மை சமூக உறவுகளை வெளிப்படையாக காட்டியுள்ளது. தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்துவ பிரபுத்துவத்திற்கும் இடையே உள்ள சமரசத்திற்கு இடமில்லாத மோதலை வெளிப்படுத்திக் காட்டியுள்ளது. எனவே தொழிலாள வர்க்கத்தின் எழுச்சிக்கு தளம் அமைப்பதுடன், 1930களில் நடைபெற்ற மோதல்களை மறைத்துவிடக் கூடிய அளவிற்கு வெளிப்படையான வர்க்கப் போராட்டத்திற்கு புத்துயிர்ப்பளிக்கின்றது. அமெரிக்க தொழிலாள வர்க்கம் ஒரு சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் சூறாவளியில் இழுக்கப்படுகிறது. இந்த உணர்வில் உலகப் பொருளாதார நெருக்கடி "வரலாற்றின் திருப்பத்திற்கான" அரங்கை அமைத்துள்ளது.

Friday, September 18, 2009

பிரான்சிஸ் கிருபா எழுதிய வலியோடு முறியும் மின்னல்


நீண்ட நாட்களுக்குப்பிறகு நிறைவோடு வாசித்த கவிதை தொகுப்பு பிரான்சிஸ் கிருபா எழுதிய வலியோடு முறியும் மின்னல். இதில் நூற்றிற்கும் மேற்பட்ட கவிதைகள் உள்ளன. இத்தொகுப்பு எளிதில் கடக்க கூடியதாக இருக்கப்போவதில்லையென்று யூமா வாசுகி முன்னுரை வாசித்ததுமே புரிந்துவிட்டது. தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள் நன்றாக இருந்தன எனினும் எப்போதும் போல் வலியை சொல்லு கவிதைகளே வெகுவாகப்பிடித்துப்போனது. அதில் சில சிறிய கவிதைகளை மட்டுமே இங்கு இடுகிறேன்.



எப்போதோ எதற்காகவோ செய்த தவறுகளெல்லாம் தீடிரென்று நினைவிற்கு வந்து வதைத்துக்கொண்டிருப்பதுண்டு. பல குற்ற உணர்வுகளில் சிக்கி தவித்து தன்னைத்தானே வதைத்துக்கொண்டிருக்கும் மனம். அப்படி தைத்துக்கொண்டிருக்கும் மனதை நீயேனும் ஏன் மன்னிக்கூடாது என கெஞ்சுகிறது இக்கவிதை.


கணங்கள்தோறும்
என்னை நானே
தண்டித்துக்கொண்டிருக்கும்
போது….ஏன்
நீயேனும் கொஞ்சம்
என்னை மன்னிக்கக்கூடாது



பற்றிக்கொள்ள ஒரு விரல் தரும் ஆசுவாசத்தை, அதன் பின் முழுமையாய் உடனிருக்கும் மனிதனனப் பற்றிய நம்பிக்கையை அற்புதமாக நடைபடும் வழிகளையும், வீதியையும், நிலத்தையும் அவள் இல்லாமல் தான் தனித்து நடக்கும் வேதனையின் துணைக்கு புகுத்தியிருக்கிறார் இக்கவிதையில்.



நடைபடும் வழிகள்
கடைகள் வரை நினைக்கின்றன
பிள்ளைகள் பற்றிக்கொள்ள
ஒருவிரல் போதுமென்று

ஒற்றை விரலக்குப் பின்னே
முழுசாய் ஒரு மனுஷி ஒரு மனிதன்
வீணாயிருப்பதை
விளக்க முயல்கிறது வீதி

முயன்றாலும்
நான் மட்டும் நீயின்றி நடந்தால்
ஏனென்றே தெரியாமல்
வலியில் துவள்கிறது நிலம்.



ஏற்கவோ நிராகரிக்கவோ முடியாத நிலையில் கைமீறிப்போகின்ற காலத்தை நிறுத்தமுடியாமல் தவிக்கும் மனங்களை பற்றிய கவிதைகள் மீண்டும் மீண்டும் வாசித்தாலும் ஒவ்வொரு முறையும் நீங்கிப்போகின்றவைகளை விதவிதமாக இப்படி எழுதி வாசித்துக்கொள்ள மட்டுமே முடியும் என்று சொல்லித் தேற்றிக்கொள்ள நன்றாகத்தானிருக்கிறது.



இரவின் ஜன்னல் வழியே
எட்டிப்பார்க்கின்றன கனவுகள்
நேரம் காலமறியாமல்
விடிந்துவிடுகிறது பொழுது.
முகத்தை சுளித்துத் திருப்பிக்கொள்கின்றன கனவுகள்.
காலையில் ஏந்தும்
முதல் காப்பிக் கோப்பையில்
கனவுப் பிணங்கள் இறந்து மிதக்கின்றன.
ஈயைப்போல் எடுத்துத் தூரப் போடவோ
அல்லது புகாரோடு
அந்த காப்பியை நிராகரிக்கவோ
முடியாமல் தவிக்கும்போது
ஆறிப்போகிறது அன்றைய சூரியன்



எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை அவர்களுக்கு தேவையான அல்லது ஆசைப்படும் வாழ்வெனினும் ஏங்கித்தவிக்க தவராமல் வாய்க்கிறது யாவருக்கும். மர நாற்காலியை மட்டுமல்லாத மனித மனதின் ரணங்களை, இயலாமைகளை, ஏமாற்றங்களை, வாய்க்கப்பெறாதவைகளை இன்னும் எத்தனையோ வலிகளை தன்னுள் கொண்டுள்ளது இக்கவிதை.

பார்வை


ஆளற்ற கூடம்
அங்கே அந்த மர நாற்காலி அமர்ந்திருந்தது.
அதன் மேல்
வயலினை சாய்த்து வைத்துவிட்டு
வெளியேறியிருக்கிறான் இசைத் தொழிலாளி.
‘என்னிலும் நாலு தந்திகள் முறுக்கி
செல்லமாக தோளில் ஏந்து வைத்து
ரம்பத்தால் வருடினால் என்ன’
என்பது போல் யாரையோ
பார்க்கிறது மர நாற்காலி.
எதிரே திறந்திருக்கிறது
இசைக் குறிப்பு புத்தகம்.



நிறைய கவிதைகள் இத்தொகுப்பில் பிடித்திருந்தாலும் இக்கவிதையே என்னை மிகவும் ஈர்த்தது. மனதை பக்குவப்படுத்திக்கொள்ள பயன்படும் உன்னத கவிதையாக தோன்றுகிறது இது. துயரம் மிகுகையில் வார்த்தைகள் இத்தனை கச்சிதமாக தங்களை கோர்த்துக்கொள்ளுமோவென வியக்கவைத்தது.



முத்தமிட்டு என்னை
சாம்பலாக்கித் தந்துவிட்டு
கவலைப்படும் பூக்களாக
உன் கண்களை மாற்றிக்கொள்ளும்போது….
இலக்கின்றி நடக்கத் தொடங்குகிறேன்,
கொலை வாள் நீட்டி
மன்னித்துக் காட்டிய வழியில்



அடிகோடிட்ட வரிகளையெல்லாம் மீண்டும் வாசிக்கையில் எங்குமே சந்தோஷமான வரிகள் காணக்கிடைக்கவில்லை. சந்தோஷங்கள் எளிதில் கடந்து விடுகின்றனவோ, துக்கங்களும் அவநம்பிக்கைகளும் மட்டுமே சற்று தங்கிச்செல்கின்றனவோ எனத் தோன்றியது. வியக்க வைக்கும் உவமைகளைகொண்டு துயரங்களை பதித்திருக்கிறார் நிறைய கவிதைகளில். அவற்றில் சில வரிகள்…..


கண்ணீர் நாறிய தலையணையுறைக்குள்
பன்றிக்குட்டிகள் சிரித்துப் புரண்டன
மின்னல் கொடியிழுந்து
மேக ரதம் செலுத்தும் கற்பனையை
மூட்டைப் பூச்சியைப் போல நசுக்கினேன்.


**


கோபத்தை என்மீது துப்பிவிட்டுப் போகிறாய்
எச்சில் துளிகள் துப்பல் தொகுப்பில் இயல்பாக உலரும்.
அதைத் துடைத்தொழிக்க அவசரப்படமாட்டேன்


**


பெருஞ்சிரத்தையோடு வடிகட்டிய வெளிச்சத்தில்
பிச்சைப் பாத்திரம் நிரம்பிய பின்னும்
குருடனாகக் கெஞ்சும் உன் அறையை விட்டு
வெளியேறவே முதலில் விரும்புகிறேன்


**


பொறுக்க ஏலாமல்
அகதியான நாளின் நுனியில்
கூடடைந்த மலைத் தேனீக்களாய்
இதயத்தை மொய்த்துக் குமையும்
ஆயிரமாயிரம் வார்த்தைகள்


**


“தேவைகள் எல்லாச் சமயங்களிலும் காலைப்பிடித்து தூக்கிவிடுகின்றன பலவீனமான தீர்மானங்களை”, “என்னைக்காணாமல் நகங்களைக் கடித்து இன்னும் கொஞ்சம் துப்பியிருக்கலாம் நீ “, “சூரியனை நம்பக்கூட தயக்கமாக இருக்கிறது சந்தேகம் எப்படிப் புலருமென்று தெரியாத பட்சத்தில் “, “மனதின் மிகப்பழைய வரைபடத்தின் வரம்புக்குள்ளேயே மலர்கின்றன பூக்கள்” என்று வெவ்வேறு கவிதைகளில் குறிப்பிடும்போது ஒரே மனம் தன் நிலைகளுக்கும் சூழலுக்கும் சம்பவங்களுக்கும் ஏற்ப எவ்வாறாக வேறுபடுகின்றதென்பதை அறியமுடிகின்றது.



இத்தொகுப்பில் தாங்கமுடியாத பரிசு, மரணத்தின் நிறம், கதிர் ரோமங்கள் கருகும் மெழுகுவர்த்தி, ஆளொழிந்த வீட்டில், தீயின் இறகு, புகைச்சித்திரம், கிளிகளின் தொலைபேசியில், முத்தமிட, வானத்தைத் தோற்றவன், எதிர்மிச்சம், கடலுக்குப் பெயர் வைக்கவேண்டும் போன்ற கவிதைகளும் மேலும் பல தலைப்பில்லா கவிதைளும் மிகச்சிறப்பானதாக அமைந்திருக்கின்றன.



‘அதிகரித்து வருகிறது முன்னறிமுகமில்லா ஒரு புன்னகைக்கான நிச்சயம்’ என்னும் பிரான்சிஸ் கிருபாவின் வரிகளுக்கேற்பவே இத்தொகுப்பை வாசிக்கும் போது நிறைவுப்புன்னகைகான நிச்சயம் அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது பக்கங்கள் நகர்ந்துக்கொண்டிருக்க.

சாமான்யரின் வெறி - பணி மலையாளபடம்

ஜோஜு ஜார்ஜ், பணி(வேலை) திரைப்படத்தின் மூலம் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநராக அறிமுகமாகிறார், சரியான வேகத்தில் நிகழ்வுகள் வெளிப்படும் ...