Tuesday, April 21, 2009

மானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்

அத்தியாயம் 1

மார்க்ஸின் மானிடவியல்

தொன்மைச் சமூக ஆய்வில் அல்லது மானிடவியல் (யுவொசழிழடழபல) ஆய்வில் மாக்ஸின் சிந்தனைகள் முழுமையான விளக்கத்தை அளிப்பனவாகக் கொள்ள முடியாது. எல். எச். மோர்கனின் படைப்பான தொன்மைச் சமூகம் (யுnஉநைவெ ளுழஉநைவல) மார்க்ஸின் மானிடவியல் பற்றிய கருத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தைச் செலுத்தியது. 1879 – 1882 களில் மார்க்ஸ் மோர்கனின் “தொன்மைச் சமூகம்’’ பற்றிய முக்கியமான குறிப்புக்களைத் தயாரித்திருந்தார். ஆதி சமூகம் பற்றிய ஏனைய ஆய்வாளர்களின் நூல்களையும் அவர் கற்றறிந்தார். எனினும் மார்க்சோ எங்கெல்சோ ஒரு முறையான மார்க்சிய மானுடவியவாதத்தை உருவாக்கினர் எனக் கூறமுடியாது (வுழசn டீயவவழஅழசநஇ 1985 : 23)

குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ (1884) எனும் எங்கெல்ஸின் நூல் எல். எச். மோர்கனின் கண்டுபிடிப்புக்களையும் மார்க்ஸின் இந்நூல்பற்றிய கருத்துக்களையும் கொண்டமைந்ததென்பது குறிப்பிடத்தக்கது. எங்கெல்ஸ் தனது நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். மார்க்ஸ் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்திருந்த வரலாறு பற்றிய அதே பொருள் முதல்வாத எண்ணக்கருவை (ஆயவநசயைடளைவ ஊழnஉநிவழைn ழக ர்ளைவழசல) மோர்கன் தனது வழியில் அமெரிக்காவில் மீண்டும் கண்டு பிடித்தார்’ (1972 : 5). கட்டுவாசி நிலை அதாவது நாகரிகத்திற்கு முந்திய நிலை (டீயசடியசளைஅ) நாகரிக நிலை இரண்டையும் பற்றி மோர்கனின் நூல் குறித்து மார்க்ஸ் விரிந்த அளவில் எழுதியிருந்த குறிப்புக்களையும் பயன்படுத்தியே தனது நூலை ஆக்கியதாக எங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

பண்டைய சமுதாயத்தின் வரலாறு வளர்ச்சி விதியைக் கண்டறியும் முயற்சியை மோர்கனின் “தொன்மைச் சமூகம்’’ இலகுபடுத்தியது. மோர்கன் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் பொருள் முதல்வாதக் கருத்துக்கள் அவரது நூலில் பிரதிபலித்தன. மார்க்கம் எங்கெல்லாம் இயக்கவியல் பொருள் முதல்வாதக் கண்ணோக்கில் இதனை ஆராய்ந்தனர். எங்கெல்சி;ன் “தனிச் சொத்து குடும்பம் அரசு ஆகியவற்றின் தோற்றம்’’ எனும் நூல் மோர்கனின் கண்டு பிடிப்புகளை இயக்கவியல் நோக்கில் நுணுகிக் காணும் ஒரு உயர்ந்த இலக்கியப் படைப்பாகும்.

மோர்கன் எடுத்துக்காட்டும்வரை தந்தைவழிக் குடும்பமே சமூக அமைப்பின் ஆதி வடிவமாகக் கருதப்பட்டது. மோர்கனின் ஆய்வுகள் தாய்த் தலைமைக் குலமே சமூக அமைப்பில் ஆதி வடிவம் என நிறுவின. தந்தைவழிக்குல அமைப்பு இதிலிருந்தே உருவாகி இருக்கவேண்டும். சொத்துடமையில் ஏற்படும் மாற்றமே தாய் வழியை தந்தை வழிக் குடும்பமாக மாற்றுகிறதென மோர்கனின் ஆதாரங்களின் வழியாக மார்க்சிசம் நம்புகின்றது.

பொதுச் சொத்தைவிட உடமையின் கை மேலோங்கும் போது வாரிசுரிமையில் மாற்றம் நிகழ்கிறது. தந்தை உரிமையும் அதைத் தொடர்ந்து ஒருதாரா மணமும் முதல் நிலைக்கு வந்து விடுகின்றன.

ஒரு துணை மணம் (ஆழழெபயஅல) பல துணைமணம் (Pழடலபயஅல) குழு மணம் (புசழரி ஆயசசயைபந) போன்ற திருமண முறைகள் சமூகத்தில் தான் தோன்றித் தனமாக உருவாகிச் செயல்பட்டவை அல்ல. அல்லது மனிதன் தனது இஷ்டத்திற்கு தேர்ந்தெடுத்துக் கொண்டனவுமல்ல. ஒரு குறிப்பிட்ட வகை சமூக பொருளாதார அமைப்பின் நிலவுகையே இவற்றில் ஏதேனுமொன்றை முதன்மை நிலைக்குரிய மணமுறையாக மேலே கொண்டு வருகிறது. எங்கெல்சின் கருத்தில் ஒரு துணை மணமுறை அதன் சொத்துரிமையைப் பாதுகாக்கும் நிறுவனமாக வந்து சேர்ந்தது. கால் நடை வளர்ப்பின் வளர்ச்சியும் பரிவர்த்தனை உறவுகளின் முன்னேற்றமும் தந்தை வழிக் குடும்பத்திற்கு வழி விட்டது. குழந்தைகள் தமது தந்தையின் இயற்கை வாரிசுகள் அதாவது சொத்துச் சுவீகாரத்திற்குரிய உரிமையாளர் என்பதை தந்தை வழிமுறை புலப்படுத்தியது.

ஆதி சமூக அமைப்பிலிருந்த ஏற்பட்டு வந்த மாற்றங்களைப் பின்வருமாறு சுருக்கமாக நோக்கலாம். மிருகங்களைப் பழக்குவதும், மந்தைகளைப் பெருக்குவதும் இதுவரை கேட்டறியாத மூலதாரங்களிலிருந்து பெருகி வந்த செல்வ வளமும் முற்றிலும் புதிய சமூக உறவுகளைத் தோற்றுவித்தன. முன்னர் காட்டுமிராண்டிக் காலத்தில் அல்லது அநாகரிக காலத்தின் இறுதிக் கட்டத்தில் காணப்பட்ட செல்வங்கள் மிகச் சொற்பமானவை. வீடு, ஆடைகள், செம்மையற்ற ஆபரணங்கள், உணவு பெறுவதற்குத் தேவையான ஆயுதங்கள், உணவைத் தயாரிப்பதற்கு உதவும் சில கருவிகள் என்பனவே அவர்களின் சொத்துக்கள். இப்பொழுது குதிரைகள், ஒட்டகைகள், கழுதைகள், எருதுகள், ஆடுகள், பன்றிகள் முதலிய மந்தைக் கூட்டமும் மேய்ச்சல் தொழில் புரியும் மக்கள் கூட்டமும் உருவாகி இருந்தன.

கால்நடைகள் பெருகின. இவற்றைக் கவனித்துக் கொள்ள அதிக அளவில் ஆட்கள் தேவைப்பட்டனர். போர்களில் பிடிக்கப்பட்ட கைதிகள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டனர். இவற்றினால் செல்வ அதிகரிப்பு தீவிரமடைந்தது. இவ்வாறு பெருகிய செல்வம் பழங்குடிக்குச் (வுசiடிந) சொந்தமாயிருந்தது. எனினும் இச் செல்வங்கள் குடும்பங்களின் தனிச் சொத்தாகி அது மேலும் மேலும் பெருகிய போது அது அப்போதைய சமூக அமைப்பிலும் திருமண முறையிலும் தாய்த் தலைமை முறையிலும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. செல்வப் பெருக்கம் குடும்பத்தில் பெண்ணை விட ஆணுக்கு முக்கிய அந்தஸ்தைக் கொண்டு வந்தது. மனித நாகரிக வரலாற்றில் தாயுரிமையின் இடத்தை தந்தை உரிமை சுவீகரித்துக் கொண்ட விதத்தை எங்கெல்ஸ் இவ்வாறுதான் அணுகுகின்றார்.
பண்டைய சமூகத்தின் பொருளியல் உறவுகள் முற்றிலும் வேறுபட்டதாகும். அங்கு ப+ர்வீக கூட்டுடைமை காணப்பட்டது. அதாவது உற்பத்திச் சாதனங்கள் கூட்டுடைமையாக இருந்தன.

வேட்டையாடுவதிலும், மீன் பிடிப்பதிலும் மனிதன் ஈடுபட்டிருந்த ஆதிகாலத்தில் பொருள்களைச் சேர்த்து வைக்கும் எண்ணமே அவர்களிடையே இல்லாதிருந்தது. மீனையோ மாமிசத்தையோ சேர்த்து வைக்க முடியாது. வேட்டையோ மீன்பிடியோ எப்போதும் நிகழவில்லை. அப்போது அவன் உணவுக்காக மற்றவர்களையே எதிர்பார்த்தான். குறிப்பாக வேட்டையாடும் முறை வேட்டைப் பொருட்களைப் பரஸ்பலம் பகிர்ந்து கொள்வதிலேயே தங்கியிருந்தது. மேலும், ஒருவன் உயிர் பிழைத்திருப்பதற்குத் தேவையானவற்றை மற்றவர்களின் உதவியின்றித் தன்னந்தனியாகப் பெற மனிதன் கண்டு பிடித்திருந்த ஆதிகாலக் கருவிகள் அவனுக்கு உதவவில்லை. எனவே மற்றவர்கள் எதிர்பார்க்கும் தவிர்க்க முடியாத நிலையில் அவன் இருந்தான்.

மேலும் இயற்கைச் சக்திகளை மனிதன் கூட்டுமுயற்சியினாலேயே எதிர்க்க முடிந்தது. எனவே, ஒத்துழைப்பும் பரஸ்பர உறவும் அடிப்படையாகவிருந்தன. தமக்குக் கிடைத்தவற்றை அவர்கள் சமமாகப் பகிர்ந்து கொண்டனர். இது பண்டைய சமுதாய வாழ்க்கையில் காணப்பட்ட கூட்டுறவு விதிகளை உணர்த்துவதாகக் காணமுடியும். கிடைப்பனவற்றை தமக்குள் பகிர்ந்து கொள்ளும் முறை இக் கூட்டுறவு விதிகள் செயல்படுவதற்கான சூழலைத் தந்ததாகக் கருதலாம்.

அவர்களிடம் உபரி இல்லை. அதாவது அங்கு சுரண்டல் நிகழவில்லை. வேறு வகையில் கூறவதாயின் உற்பத்திச் சாதனங்களின் தனிஉடையை இங்கு நிலவவில்லை.

சிறுபிள்ளையின் கள்ளங்கபடமற்ற தன்மையோடு மனித குலத்தின் இவ் வரலாற்று ரீதியான குழந்தைப் பருவத்தை மார்க்ஸ் ஒப்பிடுகிறார். மனித குலத்தின் வரலாற்று ரீதியான குழந்தைப் பருவம் அதனுடைய மிகவும் அழகு நிறைந்த காலமாகும். அந்தக் குழந்தைப் பருவம் இனி ஒருபோதும் திரும்ப முடியாது என்பதற்காக அதன் அழியாக் கவர்ச்சியை நம்மீது செலுத்தக்கூடாது என்று சொல்ல முடியுமா? (1982 : 323)

இப்புராதனப் பொது உடைமை அமைப்பு அளவுக்கு மீறி எளிமைப்படுத்தலுக்குள்ளாகும்போது நம்ப முடியாத நிலைக்குள்ளாக இடமுண்டு. மனித சமூகம் பாதுகாத்து வளர்த்திருக்கக் கூடிய சில உயர்ந்த பண்புகள் அங்கிருந்து என்பதை அது உணர்த்துகிறது என்று கொள்வதே பொருத்தமதிகமுடையதாகும். புராதன பொது உடைமையின் நயக்கத்தக்க அம்சங்களுக்கப்பால் மறந்து அபரிமிதமான வர்ணணைகளைச் சிலர் அள்ளி வழங்குகின்றனர்.

மார்க்ஸ் கூறிய “குழந்தைப் பருவ’’ நிலை என்ற எச்சரிக்கை மிக்க ஒப்பீட்டையும் கருத்திற் கொள்ளாது இலட்சிய இன்புரியாக அதை வர்ணிப்பதில் பலர் ஆர்வமாயுள்ளனர். இதிலுள்ள அபாயத்தைப் பற்றிய பேராசிரியர் கோசாம்பியின் எச்சரிக்கை மனங்கொள்ளத்தக்கதாகும்.

சிலர் இப்பொழுதுங் கூட புராதன உடைமை பற்றிக் கூறும்
போது கிடைத்ததையெல்லாம் பகிர்ந்து கொண்டும் கூட்டுறவு மூலம்
தங்களது எல்லாத் தேவைகளையும் ப+ர்த்தி செய்து கொண்டும்
எல்லோரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த இலட்சிய சமுதாய நிலை அது
என்பது போலப் பேசுகிறார்கள். வரலாற்றுக் காலத்துக்கு
முன்பிருந்த பழங்குடி மனிதன் மாண்புமிக்க நிலைலிருந்தவன்
என்னும் விசித்திரமான இன்பக் கற்பனைகளாக அள்ளி
வீசுகின்றார்கள்.

No comments:

தீப்தி நேவலின் குழந்தைப் பருவம்

தீப்தி நேவலின் குழந்தைப் பருவம்  தீப்தி நேவல். அவரது முகநூல் பக்கத்தின் புகைப்பட உபயம் செப்டம்பர் 6, 2022 தீப்தி நேவாலின் குடும்ப வாழ்க்கையி...