Tuesday, April 21, 2009

மானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்

அத்தியாயம் 4
சமயம்

சுமேரிய காலப்பகுதியில் அனு, எயா, என்லில் ஆகிய கடவுள்கள் முக்கியம் பெற்றிருந்தன. இந்தக் கடவுளரின் மூலத்தை அறிவது கடினமானது. சுமேரிய மொழியில் அன் என்பது வானத்தைக் குறிக்கிறது. அனு வானக் கடவுளாகும். அனுவை மனிதர் மட்டுமல்ல வானத்துப் பறவைகளும் நிலத்தில் ஊர்வனவும், மரம், மலை யாவும் வணங்குவதாகக் கொள்ளப்பட்டது. அது அதிக வல்லமைமிக்க தெய்வம்.


என்லில் காற்றுக் கடவுளாகும். அடிப்படையில் என்னில் சுமெரியக் கடவுள், சுமேரிய மொழியில் “வில்’’ என்பதற்கு காற்று – சுவாசித்தல், ஆவி என்று பொருள் கொள்வர். மலைக் காற்றுடனும், வெள்ளத்துடனும் இத் தெய்வத்தின் பெயர் தொடர்புபடுகிறது. எயா அல்லது என்கி தூய நீருடன் அதன் மூலம், ஆக்கச் சக்தியுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது. அறிவு புத்தி என்பவற்றுடனும் எயா குறிப்பிடப்படுகிறது. கரையோர மீனவர்கள் எயாவைத் தமது பாதுகாப்புக் கடவுளாகக் கொண்டனர். எல்லாவற்றையும் விட அது ஆற்றல் மிக்கதாக விளங்கியது. என்லில் சக்தி மிக்கது எயா புத்தியும் புனிதமும் கொண்டது.

ஆரம்பகாலத்தில் மிக அதிக அளவிலான கடவுளின் உருவங்கள் மனித வடிவிலமைந்திருந்தன. பாதி மீனும் பாதி மனிதனும் கொண்ட எயா தெய்வத்தைவிட மெஸெபொட்டேமியத் தெய்வங்கள் மனித உருவினையே பெற்றிருந்தன. ஏனைய மெஸெபொட்டோமியத் தெய்வங்கள் பல மனிதன், சந்திரன், நட்சத்திரம், தூயநீர் போன்ற பல்வேறு பொட்களின் தோற்றத்தை விளக்கும் மனிதத் தேவையினடியாக எழுந்தனவாகக் காணப்படுகின்றன. ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு கடவுள் படைத்ததாக அவர்கள் நம்பினர்.

சுமேரியக் கடவுளரையும் செமித்தியக் கடவுளரையும் வேறுபடுத்துவது கடினமாகும். செமித்தக் காலப்பிரிவில் சுமேரியரின் கடவுள்கள் சுமேரியப் பெயர்களாலேயே அழைக்கப்பட்டு வந்தன. அதேவேளை செமித்தியருக்கே உரிய கடவுள்களும் காணப்பட்டன. செமித்தியரின் கடவுளரில் மனிதப் பண்புகள் ஏற்றிக் கூறப்படுவது முக்கிய பண்பாக இருந்தது.

மெஸெபொட்டேமியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலமாக 2500 க்கு மேற்பட்ட தெய்வங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சுமேரியர் எண்ணிறந்த கடவுளரை வணங்கி வந்த போதும் அவர்களின் பிரதான கடவுள் சூரியனாகும். இதை அவர்கள் “ஷமாஷ்’’ என அழைத்தனர். இது நீதிக்கும் பாதுகாப்புக்குமுரிய கடவுளாகக் கருதப்பட்டது. சந்திரனையும் அவர்கள் வழிபட்டனர். இது அறிவுக் கடவுளாகவும் இரவின் நீதிபதியாகவும் கருதப்பட்டது. இது “காரன்’’ மற்றும் “ஊர்’’ போன்ற நகர்களில் சிறப்பாக வழிபட்டது.

சுமேரிய சமயம் ப+வுலகிலும் அதன் சக்திகளிலும் அதிக அக்கறை காட்டுகின்றது. எல்லாம் திட்டத்திற்கமைய தென்றும் அமைதியும் பாதுகாப்பும் அவசியம் என்றும் அது கூறுகின்றது. சுமேரிய சமயத்தில் ப+மி பெண் தெய்வமாகக் கருதப்பட்டது. தாய்த் தேவதை வணக்கத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். பபிலோனிய சமயம் கடவுளுக்குச் சேவை செய்வதே மனிதனின் பிரதான கடமை எனப் பணித்தது. இதற்காக மக்கள் சடங்குகளிலும் தெய்வங்களுக்குப் படைப்பதிலும் ஈடுபட்டனர். ஆயினும் பொதுமக்கள் தெய்வங்கள் அணுக முடியாதிருந்தது. இச் செயல்களை புரோகிதர்களும் குருக்களும் செய்து வந்தனர்.

மரணத்தின் பின்னர் மனித உயிருக்கு வாழ்க்கை உண்டென்பது சுமேரியரின் நம்பிக்கை. சடலங்;களைப் புதைக்கும்போது சவக்குழியுள் உணவும் நீரும் வைக்கப்பட்டன. இறந்த பின்னர் உயிர்கள் இருண்ட உலகொன்றுக்குச் செல்வதாகவும் அங்கு துன்பமனுபவித்து சில காலத்தின் பின்னர் விடுதலை அடைவதாகவும் அவர்கள் நம்பினர். உலக உற்பத்தியைப் பற்றியும் வெள்ளங்களைப் பற்றியும் உலகை மூழ்கடித்த ஏழுநாள் பெரு வெள்ளம் பற்றியும் பல நம்பிக்கைகள் அவர்களிடம் நிலவின.

செமித்தியர்

செமித்தியர் மொஸெபொட்டேமியாவில் ஏற்கனவே வாழ்ந்த மக்கள் குழுவினராகும். சுமேரிய நாகரிகங்களுக்க அணித்தாக அவர்கள் வாழ்ந்தனர். பபிலோனிய வரலாற்றிற் பெரும்பகுதி செமித்தியரின் வரலாறாகும். தமது பெரும் சாதனைகளைச் செமித்தியர் பபிலோனியாவில் உருவாக்கினர். எனினும் பபிலோன் செமித்தயரின் மூலப் பிறப்பிடமோ என்பது ஐயத்துக்குரியதாகும். அவர்களின் மூலப்பிறப்பிடமாக அறேபியா, மெஸெபொட்டேமியா, ஆபிரிக்கா என்ற மூன்று நிலப்பாகங்கள் கூறப்படுகின்றன. இவற்றுள் செமித்தியரின் மூலப் பிறப்பிடம் அறபுகத் தீபகற்பம் என்ற கொள்ளையே அதிக வலுவுள்ளதெனக் கருதுகின்றனர்.

தொண்மை வரலாற்று அடிப்படையில் நோக்கும்போது ளுநஅவைநள என்பது ஒரு இனப்பண்புடைய சொல்லாகும். வரலாற்றுக்கு முந்திய மூலத்தோற்றமுள்ள மக்கள் குழுவினரை இச்சொல் குறிக்கிறது. (ர்.று.கு.ளுயபபளஇ 1965.29) இன்று கிடைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில் செமித்தியரின் மூலப்பிறப்பிடம் அறேபியாவின் உட்பகுதி என்றே கொள்ளப்படுகிறது. பனி ஊழியின் (புடயஉயைட Pநசழைன) இறுதிப் பகுதியில் கி. மு. 8000ம் ஆண்டிலிருந்து தற்காலம் வரை கருணைக்கிடமற்ற மண்ணரிப்பினால் அறேபியா சேதமாக்கப்பட்டது. இதனால் பாலைவனம் மேலும் விரிவுபெற்றுச் சென்றது. மக்கள் வாழ்வுக்கு ஆதாரமாயிருந்த ஈரலிப்பான நிலப்பகுதி அருகிச் சென்றன. வரலாறு முழுக்க இங்கிருந்த மக்கள் வேறிடங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். (1965 : 29)

ஐரோப்பாவின் பாரிய பனி ஊழிக் காலப்பகுதியில் அறேபியா தற்காலத்தைவிடச் சிறந்த மழைவீழ்ச்சியைப் பெற்று வந்தது. இங்கு நடைபெற்றுள்ள அகழ்வாய்வுகள் பழைய கற்காலக் கலாசாரத்துக்குரிய – வரலாற்றுக்கு முந்திய மக்கள் வாழ்ந்துள்ளதை உறுதி செய்துள்ளன. இந்த மக்கள்தான் வளமான பபிலோனியப் பகுதிகளுக்கு பல தடவைகளில் சென்று குடியேறி வாழ்ந்துள்ளனர். பபிலோனியராகவும் அஸ்ஸீரியர்களாகவும் ஹிப்றூக்களாகவும் அறேபியர்களாகவும் பெரும் நாகரிகங்களை உருவாக்கியவர்கள் செமித்தியர்களே என்பது இக்கோட்டின் முடிபு. இதன்படி சுமேரியரைத் தவிர அக்காடியர், சால்டியர், அஸ்ஸீரியர், ஹிப்றூக்களின் இனப் பின்னணியில் இருப்பதும் செமித்தியராகும். செமித்திய மொழி, நவீன மொழிளில் அறபு, ஹிப்றூ ஆகிய மொழிகளுடனும் தொண்மை மொழிகளில் அக்காடெய்ன் அறமெய்க் மொழிகளுடனும் தொடர்புடையதாகும். (பார்க்க, குறிப்பு : 01)

சுமேரியர் பபிலோனியாவை வந்தடைந்தபோது பபிலோனியா வெற்றுத்தரையாக்கக்கிடக்கவில்லை. பபிலோனியாவில் ஏற்கனவே காணப்பட்ட கிராமங்களை சுமேரியர் நகரங்களாக்கினர். கோட்டை கொத்தளங்களையும் நீர்ப்பாசனங்களையும் தொழில்நுட்பங்களையும் சுமேரியர் தழுவினர். தமது பங்கிற்குப் புதிய பலவிடயங்களையும் பபிலோனிய நாகரிகத்திற்கு சுமேரியர் வழங்கினர். (1965 : 28) தென் இராச்சியத்திற்குச் சுமேரியர் வந்தபோது அது வெற்றிடமாக இருக்கவில்லை. அங்கு ஒரு மூத்த குடியினர் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் செமித்தியராக இருக்கலாம் என்பதே இன்றுள்ள ஊடமாகும். தென் இராச்சியப் பகுதிகளில் சுமேரியர் குடியேறியபோது அங்கு செமித்தயர் வாழ்ந்திருக்கலாம் என்பதற்கு அகழ்வாய்வுச் சான்றுகள் காட்டப்படுகின்றன. (பார்க்க, 1965 : 30)

எமது அறிவுக்கெட்டியவரை செமித்தியரின் பிறப்பிடம் அறேபியாவாகும் என்பர் ஹிய+கோ வின்ல்கர் (ர்ரபழ றுiமெடநச). பபிலோனிய வரலாற்றின் பெரும் பகுதி செமித்தியரின் வரலாறு என்றும் செமித்தயர் தமது பாரிய சாதனைகளை பபிலோனியாவிலே படைத்தனர் என்றும் அவர் குறிப்பிடுகிறார். (பார்க்க, ர்ரபழ றுiமெடநச 1907 : 09)

கலாசாரக் கலப்பு

மெஸெபொட்டேமிய வரலாறு சிக்கலானது. பல இனக்குழுக்களின் தாக்கங்களுக்கும் படையெடுப்புகளுக்கும் அது இலக்காகி வந்துள்ளது. அவர்களது சமய வரலாறும் கலாசார வரலாறும் இதனைப் பிரதிபலிப்பதைக் காணலாம். குறிப்பாகச் சமய விடயங்களில் சுமேரிய பபிலோனிய, அஸ்ஸீரிய, செமித்தியக் கூறுகள் பிரித்தறியக் கடினமான முறையில் இங்கு ஒன்று கலந்துள்ளன. விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட மக்களின் பண்பாடும் கருத்துக்களும் மந்தைமேய்ப்பாளரின் பண்பாடும் கருத்துக்களும் இதில் ஒன்றிணைந்திருப்பதை அகழ்வாய்வுகள் காட்டியுள்ளன.

ப+ர்வீகத்தில் அறேபியா செழுமையான நிலப்பரப்பாக இருந்தது என்பதும் அதுவே செமித்தயரின் மூலப் பிறப்பிடம் என்பதும் இன்று பெருமளவு ஏற்பட்ட கருத்தாகும். 920, 000 ஆண்டுகள் நீடித்த பனி உழிக்காலத்தில், ஐரோப்பிய நிரந்தரமான உறை பனியில் மூழ்கியிருந்தபோது ஸஹாரா மழை மிகுந்த பிரதேசமாக இருந்தது. ஐரோப்பா மனித வாழ்க்கைக்குப் பொருத்தாதாகவும் ஸஹாரா மனித வாழ்க்கைக்கு ஏற்ற இடமாகவும் இருந்தது. பின்னர் நிகழ்ந்த புவியியல் மாற்றங்களின் போது ஸஹாரா நிலப்பாகம் மழைவீழ்ச்சியை இழந்தது. ஐரோப்பிய மனித வாழ்க்கைக்குரிய நிலப்பரப்பாக மாறிவந்தது. (ஊயசசழடட ஞரபைடல : 1979: 182)

கி.மு 2500 ம் ஆண்டின் உண்டான வரட்சிக்காலத்தில் ஸஹாராவில் புல் நிலங்களும் கால் நடைகளும் வெகுவாகக் குறைவடைந்தன. வறுமை இங்கு வாழ்ந்த மக்களை செழிப்பான நிலங்களுக்கு விரட்டியது. பெருவறட்சிக் காலங்களில் அறேபியாவிலிருந்து சென்றவர்கள் செமித்தியரே என்பது கெரோல் குவிக்லியின் கருத்தாகும் (1979 : 195) இவ்வாறு சென்ற செமித்தியர் (i) கிழக்கில் மெஸெபொட்டேமியா (ii) மேற்குப் பகுதியிலிருந்த சிரியா பாலஸ்தீனம் (iii) ஆபிரிக்காவின் தென்மேற்குப் பகுதிகள் ஆகியவற்றில் குடியேறினர். முதலாவது குடியேற்ற அலை கி. மு. 3000 ம் ஆண்டளவில் நிகழ்ந்துள்ளது. காலத்திற்குக் காலம் ஏற்பட்டுள்ள இப்புலம் பெயர் அலைகளில் சம்பந்தப்பட்டவர்கள், ஒருவரோடொருவர் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாயிருந்த போதும் அவர்கள் தனித்துவமான பெயர்களால் அடையாளப்படுத்தபட்டனர். பலஸ்தீனத்திற்கும் சிரியாவிற்கும் சென்றவர்கள் செமித்தியர் என்றும் கிழக்கு நோக்கிச் சென்ற இவர்களின் சகோதரர்கள் அக்காடியர் என்றும் மத்திய, வட சமவெளிகளில் குடியேறிய இதே பிரிவினர் அஸ்ஸீரியர் என்;றும் அழைக்கப்பட்டனர். (1979 : 195)

எனினும் மெஸெபொட்டேமியாவின் வரலாறு கூறும் முதலாவது நாகரிகம் கி. மு. 5000 ம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பமாகின்றது. விலங்குவளர்ப்பிலும் விவசாயத்திலும் ஈடுபட்டிருந்த ஐரோப்பாவின் மேட்டு நிலப்பரப்பைச் சார்ந்த மக்கள் (சுமேரியர்) இங்கு வந்து வாழத் தொடங்கினனர். ஸஹாரா உட்பட சமநிலப் பரப்புக்களில் வாழ்ந்து வந்தவர்கள் இன்னும் வேட்டையாடுபவர்களாகவே காணப்பட்டனர். ஓரிடத்தில் தனித்து வாழும் காலம் தோன்றிய பின்னர் வேட்டையின் முக்கியத்துவம் குறைந்து சென்றது. ஆண்கள் விலங்கு வளர்ப்பில் ஈடுபட்டனர். ஆண்களுக்கும் விலங்குகளுக்குமான உணவு உற்பத்தியில் பெண் ஈடுபட்டாள்.

பெண்

வேட்டையிலிருந்து விவசாயத்திற்கு மாறியபோது வாழ்க்கை அதிக பாதுகாப்புள்ளதாகவும் வளர்ச்சியுள்ளதாகவும் மாறியது. போதிய நீர்வளமும் நிலவளமும் இருந்ததால் போரிடும் தேவை இருக்கவில்லை. நிலம் பயிர்களைப் பிறப்பிக்க வேண்டும் பெண் குழந்தைகளைப் பிறப்பிக்க வேண்டும் எனள மனிதன் இக்காலத்தில் கருதினான். “வளம்’’ (குநசவடைவைல) பற்றிய எண்ணம் அவனில் வளர்ந்தது. பொருள் உற்பத்திக்கும் இனவிருத்திக்குமான வளம் பயபக்திக்குரியதாகியது. மண்ணும் பெண்ணும் போற்றப்படும் நிலைமை இது தொடக்கிவைத்தது. முக்கியமாக சமூக பொருளாதார சமயங்களுக்கு ஊடுருவிய போது புதிய சமயக் கருத்துக்கள் தோற்றம் பெற்றன. முந்தைய வேட்டையாடும் மக்களிடத்திற் காணப்பட்ட சமயமான ஆவியுலகக் கோட்பாடு (யுniஅளைஅ) க்கு மாறுபட்ட ப+மித்தாய் தெய்வ வழிபாடு ஆரம்பமாகிறது (1979 : 177).

எனினும் அறேபிய சம நிலப்பரப்பு புதுக் கற்காலக் காலாசாரத்திற்கு ஏற்றதாயிருக்கவில்லை. விலங்கு மேய்ச்சலுக்குரிய புல்வெளிகளைப் பெறுவதற்குச் சண்டைதேவையாக இருந்தது. நீர் வசதியும் போதியதாக இருக்கவில்லை. பொதுவில் “யுத்தத்தில் தொடர்ந்திருக்க’’ வாழ்க்கை இவர்களை நிர்ப்பந்தித்த போது இவர்களிடம் தந்தைத் தலைமை சிறப்புப் பெற்றிருந்தது. ஆண்மை மிக்க வானக் கடவுளை அவர்களின் சமயம் பிரதிபலித்தது. வெண்கல யுகத்தில் அவர்களது யுத்த ஆவல் மேலும் தீவிரம் பெற்றது. தந்தைத் தலைமை சமூக அமைப்பை அது மேலும் உறுதிப்படுத்தியது.

கால் நடை வளர்ப்பு முதன்மை பெற்றதும் ஆணின் சமூக முக்கியத்துவம் அதிகரித்தது. இனவிருத்தியில் ஆணின் பங்கு உணரப்பட்டது. புதிய கற்காலக் கலாசாரத்தில் பயிர் உற்பத்தியிலும் பிள்ளை உற்பத்தியிலும் பெண் பெற்றிருந்த இடத்திற்குச் சமமான இடத்தை ஆண் பெறுகிறான். மெஸெபொட்டேமியக் கலாசாரத்தில் பொருளாதார உற்பத்தியிலும் பிள்ளை பெண்ணுடன் இணைந்திருந்த வளத்தன்மைக்கு சமயம் வழங்கிய முக்கிய இடத்தை இப்போது ஆண்மை பெற்றுக் கொண்டது.

பெண்ணை முக்கியபடுத்திய ப+மித்தாய் தெய்வம் பெண்வடிவம் சிருஷ்டிக்கப்பட்டது. ஆணுக்குரிய கடவுட் குறியீடாகத் தற்போது காளைமாடு வந்து சேர்ந்தது. ஆணின் அந்தஸ்து மேலோங்கிய போது புரோகிதத்துவம் (Pசiநாவாழழன) உடன் வளரலாயிற்று. புரோகிதத்துவம் மிகவும் பிரத்தியேகமாக ஆணாதிக்க அமைப்பாக வடிவம் பெற்றது. பழைய பெண்கடவுள் வழிபாடு செல்வாக்கிழந்து சென்ற போதும் அது இல்லாதொழிந்து விடவில்லை.

No comments:

எழுத்தாளர் எச்.முஜீப் ரஹ்மானுடன் ஒரு நேர்காணல் தொடர்ச்சி

எழுத்தாளர் எச்.முஜீப் ரஹ்மானுடன் ஒரு நேர்காணல் 5 நேர்காணல் செய்பவர்: திரு. ரஹ்மான், நீங்கள் சூஃபிசம் மற்றும் குறிப்பிடத்தக்க சூஃ...