அத்தியாயம் 6
கட்டிடக்கலை
தென் அறேபியாவில் கருங்கற் பாறைகள் செறிவாகக் காணப்பட்டன. இதனால்
கட்டிடக் கற்கள் தென் அறேபியர் இவற்றிலிருந்து இலகுவாகப் பெற்றுக் கொண்டனர். தூண்களுக்குக் கருக்கற்கள் பயன்படுத்தப்பட்டன. கட்டிடங்களில் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அலங்கார வேலைப்பாடுகளுக்கும் கவர்கள் அமைப்பதற்கும் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. சுவர்களிலும் தூண்களின் மேற்பகுதிகளிலும் காணப்படும் மலர், மற்றும்
உருவ அலங்காரங்களிலும் தங்கமும் ஏனைய உலோகங்களும் பயன்படுத்தப்பட்டிருந்தன.
பல மாடிகளைக் கொண்ட அரண்மனைகளும் வீடுகளும் சமய வழிபாட்டாலயங்களும் இங்கு காணப்படுகின்றன. கட்டிடங்கள் மெஸெபொட்டேமியக் கட்டிடங்களையும், செங்கல் வேலைப்பாடுகள் பபிலோனிய மரபையும் தழுவியிருந்தன. பாரிய கலைகளைத் தவிர சிறு அலங்காரக் கலைகளிலும் அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். தங்க, வெள்ளி முதலாம் ப+சப்பட்ட சபாவாசிகளின் கோப்பைகளும் ப+ச்சாடிகளும் உயர்வாக மதிக்கப்படுகின்றன. தங்க ஆபரணங்களும் அவர்களிடையே தாரளமாகப் புளக்கத்தில் இருந்தன.
வட அறேபியா
பெற்ரா
கி. பி. 2ம் நூற்றாண்டில் அறேபியாவிலும் சில அரசுகள் உருவாகின. இவை நாகரி;கமும் செல்வ வளமும் பெற்று விளங்கின. மேற்கிலும் கிழக்கிலும் ஊடறுத்துச் சென்ற பிரதான வர்த்தகப் பாதைகள் சந்திக்குமிடங்களில் இவ்வரசகள் காணப்பட்டன. இவற்றுள் நபேத்தியர் (யேடியவயநயளெ) அரசு முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியதாகும். நபேத்தியர் செல்வ வளத்தையும் முன்னேறிய நாகரிகத்தையும் பெற்றிருந்தனர். ஓரிடத்தில் தரித்து வாழ்க்கை நடத்திய இவர்கள் பல நகரங்களை உருவாக்கினர். அல்லது மறுசீரமைத்தனர். இவர்களது பொருளியல் நடவடிக்கை விவசாயத்திலும் வர்த்தகத்திலும் தங்கியிருந்தது.
பெற்ரா (Pநவசய) பல்மைரா (Pயடஅலசய) ஹீரா (ர்சைய) போன்றவை இவ்வகையில் குறிப்பிடத்தக்க நகரங்களாகும். பெற்ரா அறேபியாவிலிருந்து சிரியா நோக்கிச் செல்லும் காரவன் பாதையைத் தனது கட்டுபாட்டில் வைத்திருந்தது. வடமாநிலத்தில் வளர்;ச்சி பெற்ற வர்த்தக நிலையமாகவும் பெற்ரா நகரம் விளங்கியது. அங்கு காணப்பட்ட நீர்க் கால்வாய்களும் ஏனைய நீர்பெறுமிடங்களும் நபேத்தியரின் திறனை எடுத்துக் காட்டுவனவாக உள்ளன.
பெற்ராவின் மக்கள் நபேத்தியராகும். நபேத்தியருக்கு முன்னர் இது எடோமிட்டஸ் (நுனழஅவைநள) களின் வாழிடமாக இருந்தது. நபேந்தியரின் வர்த்தக, அரசியல் சாதனைகளின் பின்னணியில் இருவேறு நாகரிகங்கள் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. அவை பபிலோனியாவின் அஸ்ஸீரிய நாகரிகமும் கிரேக்க நாகரிகமுமாகும்.
நபேத்திய நாகரிகம்
கி. மு. 65 அளவில் பலஸ்தீனத்தில் சில பகுதிகளை நபேத்தியர் தம் வசமாக்கினர். குறுகிய காலத்திற்குள் நபேத்தியரின் ஆதிக்கம் அல் ஹிஜ்ர் (மதாயின் ஸாலிஹ்) வரை பரவியது. (வுhயஅரன) சமூகத்தவர் உருவாக்கிய கட்டிடங்கள் இங்குள்ளன. அல்ஹிஜ்ர், அல்உலா ஆகிய நகரங்களில் தமூத் மக்களின் நாகரிகம் காணப்பட்டமைக்குச் சான்றுகள் உளதென்பர். தமூத் மக்களின் செல்வளத்தையம் பொருளாதார நடவடிக்கைகளையும் அல்குர்ஆன் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நபேந்தியருக்கு முன்னதாகடீவா தமூத் மக்கள் வாழ்ந்துள்ளனர். கிரேக்க, நபேத்திய எழுத்துப் பொறிப்புக்கள் தமூத் வாசிகள் பற்றிக் குறிப்பிடுகின்றன. (1946 : 38) (பார்க்க, குறிப்பு : 03)
வேறு எந்த அறாபியரையும் விட இஸ்லாத்தின் தோற்றத்திற்குச் சற்று முன்னர் நபேத்தியரின் நாகரிகமே செல்வாக்குடன் விளங்கியதை இங்கு சுட்டிக் காட்டலாம். நபேத்தியர் தூய அறவு இரத்தத்தை உடையவர்கள், அல்லர் என்பர். அவர்கள் பெரிதும் அரெமெய்க் நாகரிகத்தைச் சார்ந்தவர்கள். அவர்களது எழுத்துப் பொறிப்புக்கள் அரெமெய்க் விபியிலேயே காணப்படுகின்றன. நபேந்தியர் கிரேக்கருடன் குறிப்பிடத்தக்க வகையில் தொடர்பு கொண்டிருந்தனர். நபேந்தியரின் கலைகளில் கிரேக்க உரோமச் செல்வாக்கு அதிகம் காணப்படுகின்றது.
நபேத்திய அரசு வீழ்ச்சியுற்றதன் பின்னர் பாலைவனப் பசுந்தரை நாடான பல்மைரா முன்னேற்றமடையத் தொடங்கியது. கி. மு. 1ம் நூற்றாண்டில் பல்மைரா வளர்ச்சியடைந்த நாகரிக அரசாக விளங்கியது. ஆசியாவையும் மத்தியதரைப் பகுதியையும் இணைக்கும் பிரதான வர்த்தகப் பாதையில் இந்நாடு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பல்மைரா மக்கள் உண்மையில் அறேபியராயினும் அரமெய்க், மற்றும் கிரேக்க நாகரிகச் செல்வாக்கு அவர்களிடையே காணப்பட்டது. அவர்களது எழுத்துப் பொறிப்புக்கள் அரமெய்க் மொழியாகவே விளங்கின. கிரேக்கத்துடன் அவர்களுக்கு நெருங்கிய தொடர்பிருந்தது. அவர்களது சமய மரபுகளிலும் கருத்துக்களிலும் அரமெய்க் மெஸெபொட்டேமிய செல்வாக்குக் காணப்பட்டது.
பெற்ரா, பல்மைரா, ஹீரா போன்ற நகரங்கள் சமய மரபில் தொன்மை உருவ வழிபாட்டுவாதத்தை (Pயபயnளைஅ) யே சார்ந்திருந்த போதும் இப் பழைய மரபை ய+த, கிறிஸ்தவ சமயங்கள் அசைக்க முயன்றன. குடியேற்றங்களும் இந்நாகரிக நகரங்களை முற்றுகையிடத் தொடங்கின. (பார்க்க, குறிப்பு : 04)
நாகரிகமும் வீழ்ச்சியும்
வட மேற்குப் பாகத்தில் வாழ்ந்த தமூதுக் கூட்டத்தினரும் பெற்ரா, பல்மைரா, ஹீரா முதலிய நகரங்களில் வாழ்ந்த சமூகத்தவர்களும் கட்டிடக் கலையில் உயர்ந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக கற்பாறைகளைச் செதுக்கிக் கட்டிடமமைக்கும் கலையில் (சுழஉம ஊரவ யுசஉhவைநஉவரசந) அவர்கள் தனித்திறமை பெற்றிருந்தனர்.
இளஞ்சிவப்பு, செம்மஞ்சல், ஊதா முதலிய இயற்கை வண்ணங்களால் ஒளிதரும் பாரிய செங்குத்தான கல்மலைகளைக் குடைந்தும் செதுக்கியும் பெரும் பாறை மாளிகைகளை இவர்கள் நிர்மணித்தனர். கோபுரங்களையும், ஆலயங்களையும், கல்லறைகளையும் அவர்கள் இதே அமைப்பில் உருவாக்கினர்.
பெற்ரா நகரில் வீதியை நோக்கி செங்குத்தாக அமைந்துள்ள கல்மலைகளில் செதுக்கப்பட்டுள்ள அழகிய கல்லறைகளும் கட்டிட முகப்புக்களும் இன்றும் அங்கு செல்வோரைக் கவர்வதாக உள்ளன. கல்மலைகளில் செதுக்கப்பட்ட எழுநூறு கல்லறைகள் பெற்ராவில் உள்ளன. இவற்றைவிட இயற்கையிலேயே அமைந்துள்ள நூற்றுக் கணக்கான குகைகளும் இப்பல்வர்ண கல்மலைச் சரிவுகளை அழகூட்டுகின்றன. பெற்ராவிலும் ஏனைய வட அறேபிய தொன்மை நகரங்களிலும் அமைந்துள்ள கல்மனைக் கட்டிடங்கள் பற்றி அல் குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது.
நீங்கள் உயர்ந்த இடங்களிலெல்லாம் (ஸ்தம்பங்கள் போன்ற)
ஞாபகச் சின்னங்கள் வீணாகக் கட்டுகிறீர்கள் நீங்கள்
அழியாது என்றென்றும் இருப்பர்கள் போல் உங்கள்
மாளிகையில் உயர்ந்த வேலைப் பாடுகளையும்
அமைக்கின்றீர்கள். (அத்,26 : 128, 129).
நீங்கள் அதன் ஸம ப+மியில் மாளிகைகளைக் கட்டியும்
மலைகளைக் குடைந்தும் வீடுகளை அமைத்துக் கொள்கின்றீர்கள்.
(அத், 7:74)
பெற்ரா, பல்மைரா, ஹீரா போன்ற பண்டைய நகரங்களில் இன்னும் தலை நிமிர்ந்து நிற்கும் மாளிகைகளும் தூபங்களும் தூர்ந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகளும் இவர்களின் கடந்த கால நாகரிகச் செழுமையின் சான்றுகளாக உள்ளன. இவ் வட அறேபிய நாகரிகத்தின் உட்தூண்டல்கள் கிரேக்க ரோம நாகரிகங்களைத் தழுவியனவாகும். தூண்களின் அமைப்பும் கட்டிடங்களின் முகப்புத் தோற்றமும் மலர் வடிவங்களையும் உருவடிவங்களையும் கொண்ட செதுக்கு வேலைப்பாடுகளால் அழகூட்டப்பட்டுள்ளன.
மக்கா ஒரு வர்த்தக நகரமாகத் தோற்றம் பெறுவதற்குச் சற்று முன்னர் வரை புகழுடன் விளங்கிய இந்நகர நாகரிகங்கள் அவை தோன்றி நிலைத்த சில நூற்றாண்டுகளுக்குள்ளாகவே மறைந்து போகின்றன. இந்நகரவாசிகள் விஷமங்கொண்டலைந்தனால் அவர்கள் அழிக்கப்பட்டதாகக் குர்ஆன் கூறுகிறது.
ஆகவே (முன்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) ப+கம்பம்
அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள்
வீடுகளில் (இறந்து) வீழ்ந்து கிடக்கப் பொழுது விடிந்தது. (அத்.
7:78).
இஸ்லாத்தின் தோற்றத்துக்குச் சற்று முன்னர் வரை நபேந்திய நாகரிகம் இருந்தது. நபேந்திய நாகரிகத்தில் அண்மைக்கிழக்கினதும் கிரேக்க ரோம நாகரிகங்களினதும் முக்கிய கூறுகள் சங்கமித்திருந்தன. எனினும் நபேத்தியரிடையே இஸ்லாத்திற்கு ஒப்பான சக்தி மிக்க சமய ஆர்வமோ பலம் பொருந்திய இராணுவமோ காணப்படவில்லை. சில நூற்றாண்டுகள் மட்டுமே நிலைத்திருந்த இந்நாகரிக நகரம் கி. பி. 100 அளவில் முற்றாக வீழ்ச்சியுற்றது.
தென் அறேபிய நகரங்களுடன் ஒப்பிடுகையில் வட அறேபிய அரசுகள் சிறிய அரசுகளாகும். மேலும் இச் சிறிய அரசுகள் உறுதியற்ற கட்;டமைப்பையும் குறைந்த ஆயுளையும் பெற்றிருந்தன. நாடோடி வாழ்க்கையில் இருந்த மக்கள் மீது தரித்து வாழ்ந்தோரின் நகர நாகரிச் செல்வாக்கினால் உருவான நகரங்கள் இவையாகும்.
வர்த்தக வளர்ச்சியினால் ஏற்பட்ட பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் இப்பிரதேசத்திற்கே உரித்தான புவியியற் காரணிகளும் இச்சிறு அரசுகளின் தோற்றத்தையும் அழிவையும் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகித்தன. இந்நகரங்களின் வளர்ச்சிக்கும் நாகரிகத்திற்கும் இந்நகரங்கள் பிரதான வர்த்தகப் பாதைகளில் அமைந்திருந்தமை மற்றொரு முக்கிய காரணமாகும்.
இப்பாதைகளில் நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகளை இப்பிரதேச அரசியல் தீர்மானித்தது. இப்பாதைகள் வர்த்தகத்திற்காகத் திறக்கப்படுவதும் அல்லது மூடப்படுவதும் அரசியலேயே தங்கியிருந்தது. இதுவே அறேபிய எல்லைப்புறச் சிற்றரசுகளின் தலைவிதியை நிர்ணயிப்பதாகவும் அமைந்தது. (1957 : 170)
தென் அறேபியாவிற்கும் வட அறேபியாவிற்குமிடையில் மிகத் தொன்மைக் காலந்தொட்டே தொடர்குகள் இருந்து வந்துள்ளன. நாகரிகங்களின் தோற்றமும் வணிக வளர்ச்சியும் அரசியல் சமயச் செல்வாக்கும் தென், வட அறேபியாக்களுக் கிடையில் பரஸ்பரத் தாக்கங்களை ஏற்படுத்தின. தென் அறேபியாவின் அரசியல் அதிகாரம் வட அறேபியா வரை பரவி இருந்தமைக்குச் சான்றுகள் இருப்பதாக வரலாற்றாய்வாளத் கூறுகின்றனர். தென் அறேபியாவினால் வட அறேபியா பெற்ற எல்லா நலன்களிலும் நகரமயமாக்கலில் வட அறேபியாவில் தாக்கமே முக்கியமானதாகும்.
வட அறேபியாவில் ஹிஜாஸிற்கு வட பாகத்தில் தென் அறேபியாவின் மைனியன் குடியேற்றங்கள் காணப்பட்டமையைக் கல்வெட்டுச் சான்றுகள் உறுதி செய்கின்றன. (1946 : 32) எத்தியோப்பிய யுத்தங்களினாலும் மஆரி;ப் அணை உடைப்பினாலும் மக்கள் பல பகுதிகளுக்கும் பரந்து சென்று குடியேறினர். இவ்வாறு சென்ற யெமனியக் குலத்தவர்களில் பலர் நபி (ஸல்) பிறந்த ஹிஜாஸ் மாகாணத்திலும் குடியேறினர்.
பாலைவனப் பசுந்தரைகள் (ழுயளநள) தொடர்ந்தும் வெறும் பசிய நிலப்பாரப்பாகவோ பேரீச்சை மரங்கள் கொண்ட சிறு துண்டு நிலங்களாகவோ இருக்க நேரவில்லை. அவற்றை ஊடறுத்துச் சென்ற வர்த்தகப் பாதைகள் விரைவில் பெரும் மாற்றங்களைத் தோற்றுவித்தன. ஆரம்பத்தில் வர்த்தகக் கூட்டங்கள் தங்கிச் செல்லும் தரிப்பிடங்களாகவும் பின்னர் புதுவகை நகரக் குடியிருப்புக்களாகவும் அதாவது காரவன் நகரங்களையும் அவை வளர்ச்சி பெற்றன. அறேபிய சமூக அமைப்பில் வலிமை பெற்று வரும் வர்த்தக சமூகத்தினரின் ஆதிக்கத்தை முன்னடையாளப்படுத்தும் நிகழ்ச்சிகளாகவும் இவை அமைந்தன.
நபிகள் நாயகத்தின் பிறப்பின் பின்னர் கி. பி. 7ம் நூற்றாண்டில் அறேபியாவில் நிகழ்ந்து கொண்டிருந்த வரலாற்று முக்கியத்துமிக்க சமூக மாற்றங்களில் முக்கிய பங்கு வகித்த வர்க்கத்தினராக இவ்வர்த்தக சமூகத்தவரெ காணப்பட்டனர்.
மக்கா
நபிகள் நாயகம் நகர் மக்காவாகும். இது வட அறேபியாவின் ஹிஜாஸ் மாநிலத்தில் உள்ளது. ஒரு புண்ணிய தலம் என்ற அறிமுகத்திலிருந்தே மக்காவின் பண்டைய வரலாறு ஆரம்பமாகின்றது. பெற்ரா, பல்மைரா முதலிய வட அறேபிய நகரங்களின் வீழ்ச்சியின் பின்னரே மக்கா அதன் முக்கியத்துவத்தைப் பெறத் தொடங்கியது. கி. மு. 5ம் நூற் : ஹெரோடோடஸ் (ர்நசழனழவரள) “மக்காரபா’’ (ஆயமயசயடிய) எனவும் 2ம் நூற். தொலமி மக்கோரபா (ஆயஉழசயடிய) எனவும் குறிப்பிட்டிருப்பது மக்காவையே எனக் கொள்வர்.
மார்கோலியத் போன்ற கீழைத்தேய ஆய்வாளர் சிலர் மக்காவின் தொண்மையை குறைத்து மதிப்பிட்டுள்ளனர். இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் அல்லாமா ஷிப்லி நுஃமானி அதன் தொண்மை குறித்து தந்துள்ள ஆதாரங்களை (சுருக்கமாக) இங்கு நோக்குவது பொருத்தமானது.
மக்காவின் பழைய மூலப்பெயர் டீயமமய வாகும். அல்குர் ஆன்
இதனை பக்கா (டீயமமய 3:96) எனக் கூறுகிறது. தவ்ராத்
(ஆதியாகமம்) தில் பக்கா என்று குறிப்பிட்டிருப்பது
மக்காவையேயாகும். பிரான்ஸ்நாட்டைச் சேர்ந்த
கீழைத்தேயவாதியும் சிறந்த ஆய்வாளருமான பேராசிரியர்
டோஸி (னுழணல) கிரேக்கப் புவியியலாளர் மெக்ரோபா என்று
கூறுவது பக்கா என்ற அதே இடத்தேயே எனக் கூறுகிறார். ரோம வரலாற்றாசிரியர் சவஸ்ட்டியஸ் (புரைள ளுயடடரளவரைள ஊசiளிரள ஊ . 86 – 36 டீ. ஊ) “ஏல்லா வணக்க வழிபாட்டிடங்களை விடவும் உயர் வணக்கத்துக்குரியதாக இருந்தது கஃபா’’ எனக்குறிப்பிடுகிறார். இது கிறிஸ்து பிறப்பதற்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டதாகும். தொன்மையானவர்களில் ஒருவரான தொலமி (Pவழடநஅல) தனது புவியியல் மக்காவைக் குறிப்பிட்டுள்ளார். இவற்றை விட மக்காவின் பழைமைக்கு வேறு என்ன ஆதாரங்கள் வேண்டும். (பார்க்க, 1979 : 135 – 5)
தென் அறேபிய மொழியில் “மக்பர்’’ என்றும் எத்தியோப்பிய மொழியில் “மெக்வராப்’’ என்றும் கூறப்படும் சொல்லின் வடிவமே மக்ரோபாவாகும். பாதுகாக்கப்பட்ட இடம் என்பது இதனபொருள் என்பர். “உயிர்த்தியாகம் செய்யுமிடம்’’ என்ற பொருளும் இதற்கு உண்டு (பார்க்க : 1969 : 89). ஹிஜாஸ் மாநிலத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் சேர்ந்தோர் நினைவுக்கெட்டிய நாள் முதலே மக்காவை ஒரு புண்ணிய தலமாகப் போற்றி வந்துள்ளனர்.
புண்ணிய தலமாக மட்டுமன்றி நீண்ட காலமாக மக்கள் ஒரு வர்த்தக மையமாகவும் இருந்து வந்துள்ளது. அன்று யெமனிலிருந்து பலஸ்தீனம் வரை தெற்கிலிருந்து வடக்காக நீண்டு கிடந்த பிரதான வர்த்தகப் பாதைகளில் மக்கா ஒரு முக்கிய தரிப்பிடமாக விளங்கியது. மக்காவில் காணப்பட்ட தூயநீரூற்றும் யுத்த பீதியற்ற அதன் புனிதத் தல அந்தஸ்தும் வர்த்தகங்களைப் பெரிதும் கவர்ந்தன. புனித மாதங்களில் அறேபியாவின் எல்லா மூலைகளிலிருந்தும் புனித யாத்திரை மேற் கொண்டு மக்காவில் ஒன்று கூடினர். மக்காவைச் சூழ வாழ்ந்து நாடோடிகளும் சிறு வியாபாரிகளும் புனித யாத்திரைக் காலத்தில் வர்த்தகத்திற்காக மக்காவை நாடிவந்தனர்.
கற்களும் மணலும் மக்காவின் வரண்ட நிலம் விவசாயத்திற்கோ மந்தை வளர்ப்பிற்கோ உகந்ததாயிருக்கவில்லை. எனினும் வர்த்தக வளத்திற்கான வாய்ப்பை மக்கா பெற்றிருந்தது. புனித யாத்திரைக் காலமும் வர்த்தகக் காரவன்கள் மக்கா பெற்றிருந்தது. புனித யாத்திரைக் காலமும் வர்த்தகக் காரவன்கள் தரித்துச் செல்வதும் மக்காவாசிகளுக்கு வர்த்தகத்தில் நாட்டத்தை ஏற்படுத்தின. சிறு வர்த்தகர்களாகவும் வாங்கிவிற்கும் தரகர்களாகவும் வர்த்தகத் தொழிலை அவர்கள் ஆரம்பித்தனர். படிப்படியாக காரவன்களை அனுப்பும் பாரிய வர்த்தகளாகவும் அவர்கள் வளர்ச்சி பெற்றனர். அல் குர் ஆன் இதனைப் பின்வருமாறு கூறுகிறது.
அவன்தான் (அவர்கள் உழவடித்துப் பயிரிடாமலே இந்த வர்த்தக
யாத்திரையின் மூலம்) அவர்களுடைய பசிக்கு ஆகாரமளித்து
வருகிறான். (அத். 106 : 04)
வரலாற்று முக்கியத்துவமுடைய “பரிமளப் பதையில்’’ (ஐnஉநளெந சுழரவந) தென் பாகத்;து யெமனுக்கும் வடக்கைச் சேர்ந்த பெற்ராவுக்குமிடையில் மிக வாய்ப்பான வர்த்தக மையத்தில் மக்கா இருந்தும் அதன் வர்த்தக வளர்ச்சிக்கு முக்கிய தூண்டுதலாக அமைந்தது. மேலும் மக்காவில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த யுத்தம் தடைசெய்யப்பட்ட புனித பிரதேசம் என்ற சமயக் கொள்கையும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு வாய்ப்பளித்த மற்றொரு காரணியாகும். உண்மையில் புனித மாதங்களில் வர்த்தக நோக்கிலும் சமய நோக்கிலும் அறபு நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் அங்குவந்து மக்களிடையே ஐக்கிய உணர்வை ஏற்படுத்தவும் இச்சமயக் கொள்கை வழிவகுத்தது.
கலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்
Subscribe to:
Post Comments (Atom)
பின்நவீனத்துவ நிலை தமிழில்
பின்நவீனத்துவ நிலை: அறிவு குறித்த அறிக்கை(The Postmodern Condition: A Report on Knowledge) என்பது தத்துவஞானி ழீன் பிராங்கைஸ் லிய...
-
தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பின்கா...
-
தமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...
-
கவிஞர் அனார் : தமிழின் நவீன கவிதைகளுக்கு மிக வலுவான பங்களிப்பை தருகின்றவர். "ஓவியம் வரையாத தூரிகை(2004)", "எனக்குக் கவிதை முக...
No comments:
Post a Comment