Tuesday, April 21, 2009

மானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்

அத்தியாயம் 3


கி.மு. 300ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அறேபியாவைப் பற்றிய தகவல்கள் குறைவாகவே உள்ளன. இதனால் அறேபியாவின் ப+ர்வீகக் குடிகள் யார் என்பது இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. (னுநடடய ஏனைநஇ 1946 : 21) அறேபியாவின் நிலப்பாகம் மிகப் பரந்ததாயிருந்ததால் அது ஒன்றுக்கு மேற்பட்ட நாகரிகங்களைப் பெற வாய்ப்பிருந்தது. அறேபியாவின் தென்பாக நாகரிகத்துக்குரிய மக்களின் மூல இனம் யாது என்பது பற்றியும் பிரச்சினைகள் உள்ளன. இது இவ்வாறிருந்த போதும் அறேபியாவில் நடைபெற்றுள்ள அகழ்வாய்வுகள் அதன் ப+ர்வீகக் குடிகள் பற்றி முன்னேற்றமான தகவல்களைத் தந்துள்ளன.

அறேபியாவின் தொண்மைப் பண்பாடு மற்றும் அறேபியாவின் தொண்மைக் குடிகள் பற்றிய உரையாடல்களில் மெஸெபொட்டேமியா, பபிலோனியா, மற்றும் சுமேரியர், செமித்தியர் (ளுநஅவைiஉள) போன்ற சொற்கள் அடிக்கடி பிரயோகிக்கப்படுகின்றன. இவை அறேபியாவின் தொன்மை நாகரிகம் பற்றிய சிந்தனைக்க தூண்டுதளிப்பனவாக உள்ளன.
ஒன்றுக்கொன்று இணையாகப் பாயும் ய+ப்ரடீஸ் தைகிரிஸ் என்ற நதிகளுக்கிடைப்பட்ட வளமான மெஸெபொட்டேமியாவாகும். அறேபியத் தீபகற்பத்தின் மிகப் பரந்த பாலைவன அல்லது அரைப்பாலைவன நிலப்பிரச்சினை மெஸெபொட்டேமியா தொட்டுநிற்கிறது. அறேபியா, சீரியா, பாலஸ்தீனம், மெஸெபொட்டேமியா ஆகிய முப்பெரும் நிலப்பாகங்கள் புவியியல் அமைப்பில் பெருமளவு ஒருமைப்பாடு கொண்டனவாகும். மனித நாகரிக நாடகத்தில் அக்காலப் பகுதியில் இப்பிரதேசங்களே முக்கிய பாத்திரத்தை ஏற்றிருந்தன என்பர்.

மெஸெபொட்டேமியா என்ற கிரேக்கச் சொல்லுக்கு இரு நதிகளுக்கிடையிலுள்ள நாடு என்று பொருள். இவ்விரு நதிகளும் கடலோடு கலக்குமிடங்களில் எரிது, ஊர் ஆகிய நகரங்களிலிருந்தன. கி. மு. 6000ம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே நகர அமைப்புக்களும் நீர்ப்பாசனத் திட்டங்களும் இங்கு இருந்துள்ளன. தென்மேற்கு ஆசியாவின் விவசாயத்திற்குப் பெயர் போன பிரதேசங்களில் மெஸபொட்டேமியா பிரதான இடமாகக் கணிக்கப்படுகிறது. வளமிக்க வளர்பிறைப்பிரதேசம் (குநசவரடந ஊசநளஉநவெ ) என வரலாற்றாசிரியர் இதனை வர்ணித்தனர். மெஸெபொட்டேமியாவில் சுமேரியர் சிறந்த நாகரிகத்தைக் கட்டியெழுப்பினர். செமித்தியரல்லாத இவர்கள் கி.மு. 5000ம் ஆண்டில் அங்கு குடியேறினர். செமித்தியருக்கு முன்னரே சுமேரியர் அங்கு வாழ்ந்தனரா என்பது பற்றிச் சர்ச்சைகள் உள்ளன. விவசாய நிலங்களால் சூழப்பட்ட சுதந்திரமான சிறிய நகர்ப்புறங்களில் சுமேரியர் வாழ்ந்தனர்.
இரு வேறுபட்ட மூலங்களைச் சேர்ந்த மக்கள் குழுவினர் மெஸெபொட்டேமியாவின் கலாசாரத்தையும் வரலாற்றையும் கட்டியெழுப்பியுள்ளனர். சுமேரியர் (ளுரஅநசயைளெ ) அடிக்காடியர் (யுமமயனயைளெ) ஆகிய இவ்விரு மக்கள் குழுவினரும் வழங்கிய வரலாற்று, பண்பாட்டு விருத்தியையே மெஸெபொட்டேமியா பெருமளவு பெற்றது. சுமேரியர் தனது கலாசார வரலாற்று அடையாளங்கள் பலவற்றை இங்கு விட்டுச் சென்றுள்ளனர்.

கி. மு. 4000ம் ஆண்டளவில் மெஸெபொட்டேமியாவின் எல்லா நகரங்களிலும் சுதந்திரமான தனித்தனி – அரசுகள் (ஊவைல - ளுவயவந) காணப்பட்டன. அரசன் புரோகிதனாகவும் தெய்வங்களின் பிரதிநிதியாகவும் விளங்கினான். அரசர்கள் இராணுவ பலத்தின் மூலம் ஏழைகளையும் அடிமைகளையும் கொடுமைப்படுத்தினர். மெஸெபோட்டேமியாவின் நதிகள் அடிக்கடி பெருக்கெடுத்தன. வெள்ளப் பெருக்கினால் மக்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதமேற்;பட்டன. சில காலங்களில் ய+ப்ரடீஸ், தைகிரிஸ் நதிகள் பெரு வெள்ளத்தினால் ஒன்றிணையும் போது முழு உலகுமே நீரில் மூழ்கியதாக மக்கள் கருதினர்.

விவசாயம் இங்கு முக்கியமாக இடம் பெற்றது. நிதி நீர்வளத்தையும் வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் அதிகரித்த நீரையும் மக்கள் நீர்ப்பாசனத் திட்டங்களினூடாக விவசாயத்திற்குப் பயன்படுத்தினர். நீர்வனப் பயன்பாட்டில் அவர்கள் சிறந்த பொறியியல் நிபுணத்துவத்தைப் பெற்றுக் கொள்ள நதிகளின் மௌ;ளப் பெருக்கு அவர்களை நிர்ப்பந்தித்தது. அவர்களது பட்டினங்கள் கடலை அண்மித்திருந்ததால் வணிகமும் செழித்து வளர்ந்தது. பபிலோனியர் வணிகக் கடலோடிகளும் விவசாயிகளும் ஆவர். பபிலோன், ய+ப்ரடிஸ் நதிக்கரையில் அமைந்திருந்த வளர்ச்சியும் செழிப்புமிக்க நகராகும். அது மெஸெபொட்டேமியாவின் மிகப் பெரும் வர்த்தக நகராக விளங்கியது. எரிது (நுசனைர) ஊர் (ருச) நிப்ப+ர் (Nippரச) என்பனவும் இங்கு காணப்பட்ட முக்கிய நகரங்களாகும்.

No comments:

கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான பார்வை

கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான  பார்வை அர்ப்பணிப்புள்ள வன அதிகாரியான அஜய் மற்றும் அபர்ணா ஆகியோரின் திருமணத்துடன் திரைப்படம் தொடங்குக...