முன்னுரை
1
சமூகவியல் பண்பாட்டியல் நோக்கில் இஸ்லாத்தின் தோற்றத்தையும் இஸ்லாத்திற்கு முந்திய சமூக அமைப்பையும் ஆராய்கையில் எழும் பிரச்சினைகள் பன்முகத் தன்மை வாய்ந்தவையாகும். ஏனைய உலக சமயங்களைப் போல இஸ்லாமும் சிக்கலான தோற்றப்பாட்டையுடையது. தொன்மை மிக்க நீண்ட வரலாறும், பல நாகரிகங்களின் தாக்கமும், செல்வாக்குப் பெற்றிருந்த பழங்குடி அமைப்பும் இஸ்லாம் தோன்றிய மண்ணுக்குச் சொந்தமாயிருந்ததென்பது மனங்கொள்ளப்பட வேண்டியதாகும்.
இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்னரே அறபு மண்ணின் பல்வேறு பாகங்களில் வளர்ச்சியடைந்திருந்த நாகரிகங்கள் காணப்பட்டன. மக்கா ஒரு வர்த்தக நகராக அதன் பிரசித்தத்தை வரலாற்றிற் பொறிப்பதற்கு முன்னரே முன்னேற்றமடைந்திருந்த பலநகரங்களின் நாகரிகங்களையும் அவற்றிற்கே உரித்தான சமூக பொருளாதாரப் பின்னணியையும் அறபு மண் கொண்டிருந்தது. இஸ்லாத்தின் தோற்றத்தை அதன் பல்வேறு பரிமாணங்களிலும் ஆழமாகப் புரியும் முயற்சிக்கு இவற்றின் ஆதாரத்தைக் குறைவாக மதிப்பிட முடியாது.
முந்திய நாகரிகங்கள் வெறும் நாகரிகங்கள் மட்டுமல்ல. அதற்கும் முன்ரே இருந்து வந்த ஒரு சமூகப் பிரவாகத்தின் தொடர்ச்சியும் ஆனால் ஒரு முக்கிய கட்டமுமாகும். அந்த மண்ணி;ற்குரியனவாயிருந்த பண்புகளும் சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதில் செயல்பட்ட சமூகவிதிகளும் அடுத்த கட்ட அறபு சரித்திரத்தை மாற்றுவதில் பங்களிப்புச் செய்த வகையினைத் துல்லியமாக அறியாது இஸ்லாத்தின் தோற்றத்தை சமூகவியல் நோக்கில் புரிந்து கொள்ளலாம் என்பதில் எவ்வித நம்பிக்கைக்கும் இடமில்லை.
இஸ்லாத்தின் தோற்றத்தையும் தோற்றத்திற்கு முந்திய நாகரிகங்களையும் பொருளாதாரம் பண்பாடு என்பவற்றின் தாக்கங்களையும் முதன்மைப்படுத்திய ஆய்வுகள் குறைந்த அளவிலேயே நடைபெற்று வருகின்றன. டு.ஊயவயniஇ ஊ.ர்.டீநஉமநசஇ பு.டு.னுடடயஎனைநஇ நு.யு. டீநடலநளவஇ ஆழவெபழஅநவல றுயவவஇ டீசலயn ளு. வுரசநெச போன்றோரின் ஆய்வுகள் இவ்வகையில் கவனத்திற்குரியன. இ. எ. பெல்யீர், அஸ்கர் அலி இன்ஜியர் போன்றோர் இதே விடயத்தை மார்க்ஸியப் பொருள் முதல்வாத நோக்கில் ஆராய்ந்துள்ளனர். நாகரிக மாற்றங்களிற்கு இட்டுச் சென்ற வரலாற்றில் விதிகளைப்பற்றிய அனுபவம் சமூகவியல் நோக்கிலான ஆய்வுகளுக்கு, உகந்த வழிபாட்டியாகவோ முறையியலாகவோ அமைய முடியும். மார்க்ஸ் எங்கெல்ஸ் போன்றோரின் சமூகவியல் நோக்கு இந்நூலில் இடம் பெற்றிருப்பது இதன் காரணத்தினாலாகும்.
மார்க்சிய அணுகுமுறைகள் இடம் பெற்ற போதும் இது மார்க்சியத்திற்கும் இஸ்லாத்திற்குமிடையிலான ஒப்பாய்வு அல்ல. மாக்சிய வரலாற்றுப்பொருள் முதல்வாதம் (ர்ளைவழசiஉயட ஆயவநசயைடளைஅ) எவ்வாறு ஒரு சமயத்தை ஆராய்கிறது, என்பதும் இதன் விடயப் பொருள் அல்ல. இவ்வாய்வு இஸ்லாத்திற்கு முற்பட்ட சமூகத்தையும் அதன் கட்டமைப்பின் பிரதான இயல்புகளையும் மற்றும் சமயம், நாகரிகம் என்பவற்றின் இயக்கக் கூறுகளையும், அவற்றின் இயல்புகளையும் வரலாற்றியல் சமூகவியல் நோக்கில் ஆராயும் முயற்சி என்ற வரையறைக்குட்பட்டதாகும்.
ஒரு பண்டைய சமூக சரித்திரத்தில் சமயத் தோற்றப்பாடு என்ற கருத்திலோ, அல்லது சமய எழுச்சியைத் தூண்டி அதை வெற்றிபெற வைத்த சமூக பொருளாதார பண்பாட்டு அம்சங்களையும் பொருளாதார மற்றும் பௌதிகக் கூறுகளின் நிர்ணயகரமான செயற்பாட்டையும் ஆராயும் முயற்சி என்ற பொருளிலோ இதைக் கொள்ள முடியும்.
இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முந்திய சமூகம் அதன் தொன்மைச் சமூகக்கட்டமைப்பின் தளர்வையும் அது கட்டிக்காத்து வந்த பழங்குடி அமைப்பின் தகர்வையும் தெளிவாக வெளிப்படுத்தியது. ஏனைய தொன்மைச் சமூகங்களின் கட்டமைப்போடும் அவற்றின் தகர்வோடும் ஒப்பாய்வு நோக்கில் இதனைப் புரிந்து கொள்வதும் ஹென்றி மோர்கன், மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியேரின் மானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாத்தின் தோற்றக்கால அறபு சமூகத்தின் இயல்பினை ஆராய முயல்வதும் உற்சாகமூட்டும் அறிவு நடவடிக்கையாகும்.
எந்த ஒரு சமூகவடிவமும் அல்லது வரலாற்று மாற்றங்களும் தானே உருவானவையோ முந்நிகழ்ந்தனவற்றின் தொடர்ச்சியை பெறாதனவோ அல்ல. வரலாற்றில் ஒருமையும் தொடர்ச்சியும் காணப்படுவதை வரலாற்றில் உணர்த்துகிறது. எக்காலத்திற்குரிய வரலாற்றுப் பிரிவும் முன்னர் நிகழ்ந்தவற்றின் தொடர்ச்சியை நிபந்தனையாகப் பெற்றுள்ளதென்பது வரலாற்றியல் உணர்த்தும் மற்றொரு உண்மையாகும்.
மார்க்சின் சமய அணுகுமுறை பற்றித் தவறாக கருத்துக்களும், முற்கற்பிதங்களும் வளர்ந்துள்ள அளவு ஆரோக்கியமான கருத்துக்கள் வளரவில்லை. மார்க்சின் சமயம் பற்றிய கருத்துக்களை பொருளாதார விதிமுறைகளுக்கு மாத்திரம் வரையறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. அதனினும் விரிவான எல்லைகள் அவரது சிந்தனைக்கு உண்டு. எனினும் சமூக அல்லது சமய வரலாற்றைப் பொறுத்தவரை அவரது வரலாற்றுப்பொருள் முதல்வாத எண்ணக்கரு பாய்ச்சும் ஒளி இவ்விடயங்களில் நிர்ணகரமான கருத்துத் தெளிவைப் பெற உதவுகிறது.
பொருளாதார சமூக இயக்கமும் சமூக இயக்கமும் சமூக உறவுகளும் சமயமும் பிணைந்து கிடக்கும் நிலை கீழ் நாட்டுச் சமயங்கள் அனைத்திற்குமே பொதுவானதாய் ஏன் உள்ளதென்ற கருத்து நுணுகி நோக்கத்திற்குரியதாகும். “கீழ்நாடுகளின் சரித்திரம் ஏன் மதங்களின் சரி;த்திரமாக உளதென்று மார்க்சை ஆழமாகப் பாதித்த கேள்வியாகும். “இன்னும் சில தினங்களில் நான் முகம்மதின் சரித்திரத்தை ஆராய்ச்சிக்காக எடு;த்துக்கொள்வேன்.’’ என எங்கெல்ஸ் மார்க்சிடம் கூறியிருந்தார். இவையும் இஸ்லாம் சமயத்தின் எழுச்சியை ஆழமாகக் கற்க அவர்களுக்கு இருந்த ஆர்வமும் சமயங்கள் ஆற்றிய சமூகமாற்றப் பாத்திரத்தை அறிவதன் அவசியத்தைத் தூண்டி நிற்பனவாகும். தொண்மைச் சமூகத்திலிருந்து நவீன சமூக அமைப்பிற்கு அறபு சமூகத்தை மாற்றியதில் இஸ்லாம் வகித்த பாத்திர முக்கியத்துவம் இன்னும் அலசப்படாத வரலாறாகவே உள்ளது.
2
கீழ்நாடுகளின் சரித்திரம், முக்கியமாக அறபுநாட்டின் சரித்திரம் அடிப்படையில் மதங்களின் சரித்திரமாகவே உள்ளது. அரசியல் இங்கு வேறொரு பண்பாட்டு வடிவத்தினூடாக வெளிப்படுத்தப்படுகிறது. சமயநம்பிக்கைகளின் தளங்களிலிருந்து அதன் செயற்பாடுகள் துளிர்க்கின்றன.. “மனிதனின் ஒரு அரசியல் பின்னணி’’என்ற அரிஸ்டோட்டிலின் கூற்று பண்பாட்டுவடிவம் எவ்வகையினதாக இருந்தாலும் அரசியல் உணர்வு அதில் வேர்விடக்கூடியது என்பதை இத்தகைய வரலாறுகள் உணர்த்துகின்றன.
சமயமத்தின் தோற்றமும் வளர்ச்சியுமே இந்த நூலின் பிரதான பாடப்பொருளாயினும் அரசியல், பகுத்தறிவு, சிந்தனை மாற்றம், சமூகமாற்றம், பண்பாடு, கருத்தியல் என்ற எண்ணக்கருக்களின் விபரிப்பே இது என்பது நோக்குதற்குரியதாகும். இவற்றின் பின்னணியில் “ஆன்மீகம்’’ ஒரு உந்து சக்தியாக இருப்பதுதான் ஏனைய வரலாறுகளிலிருந்து இது மாறுபடுவதற்கு முக்கிய காரணியாக உள்ளது. ஆயினும் ஆன்மீகத்தை ஆன்மீகத்தினாலன்றி மண்ணிற்குரிய எண்ணங்களினால் மீளப்பரிசீலனை செய்யாவிடில் சாதாரண உண்மைகளும் புரிய முடியாத மர்மங்களாகவே என்றும் இருந்து விடும்.
தந்தைத்தலைமை அறபு மண்ணில் 4000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னரே தோற்றம் பெற்றிருக்கவேண்டும். கிடைக்கக்கூடிய வேதநூல்களின் சான்றுகளின் படி ஏப்ரஹாமை (இப்றாஹீம்) தந்தைத்தலைமைக்குரிய முதல்வராகவே கொள்ளலாம். அவர் ஏகத்துவக் கொள்கைக்காக (ஓர் இறைக் கோட்பாடு)ப் போராடினார். உண்மையில் ஒரு பொருளாதார முறையிலிருந்து இன்னொரு பொருளாதார முறைக்கும் ஒருவகைப் பண்பாட்டிலிருந்து இன்னொரு வகைப் பண்பாட்டிற்கும் பழைய மரபிலிருந்து புதிய மரபிற்கும் இதன் மூலம் அவர் அழைப்பு விடுத்தார்.
கடவுள் கொள்கைகள் மாறும்போது அதனுடன் சமூகத்தைக் கெட்டியாகப் பிடித்திருக்கும் பல கட்டுக்களும், சடங்குகளும், மரபுகளும், ஏன் கருத்துக்களும் கூட மாற்றம் அடைகின்றன. புதிய சமய சிந்தனைகளினால் பொருளாதாரமும் பண்பாடுகளும் மாற்றமடைந்தனவா? மாற்றமடைந்து வரும் அடித்தனக் கட்டமைப்புக்களின் பிரதிபலிப்பின் விளைவுகளிலிருந்துதான் இதன் ஊற்றுக்களைத் தேடவேண்டுமா? என்ற கேள்விகள் சமூக மாற்றங்களுக்கான பௌதிகத் தளங்களை நோக்கி நம்மை ஈர்க்கின்றன. சமய ஆய்வுகளில் இத்தகைய நோக்கு பொதுவாகக் கைவிடப்படுவது பிரபலமான விடயமாகும்.
சமுதாய மாற்றத்தில் பங்கேற்கும் அடிப்படை அம்சங்களில் பௌதிகக் காரணிக்குள்ள முக்கியத்துவத்தை அலட்சியப்படுத்த முடியாது. இத்தகைய அறிவுப்பார்வையின் தேவை பற்றி நேராகக் குறிப்பிடாவிட்;டாலும் அல்லாமா இக்பாலின் பின்வரும் கருத்துக்களின் உள்நோக்கம் மிகவும் வெளிப்படையானதாகும்.
இஸ்லாத்தின் தாபகர் (நபிகள்) மிகத் தெளிவான
முறையில் நம்முன் தோற்றமளிக்கிறார். உண்மையில்
அவர் ஒரு வரலாற்றுப் புருஷர். ஆழமான ஆய்வு
நோக்குள்ள விம்சனங்களுக்கு கூடத்தம்மை சுதந்திரமாக
உட்படுத்துபவர். புத்தியீனமான புராணக்கதைகள்
அவரது தோற்றத்தை மறைத்துவிடாது. அவர் மிகவும்
வெட்டவெளிச்சமான வரலாற்றுக் காலத்திற் பிறந்தவர்.
அவரது செயல்களின் உள்ளார்ந்த ஊற்றுக்களை நாம்
நன்கு புரிந்து கொள்ளமுடியும்….. இப்போதைக்கு
இயற்கைகடந்த கூறுகளை (ளுரிநசயெவரசயட நுடநஅநவெ)
நீக்கிவிட்டு இஸ்லாத்தின் கட்டமைப்பை நாம்
பார்ப்போம் (டஙடியடஇ 1992 ய : 31).
3
இஸ்லாத்திற்கு முந்திய காலப்பகுதி அறேபிய வரலாற்றில் பாரம்பரியமாக “அல்ஜாஹியா’’, “அறியாமையுகம்’’, அல்லது “காட்டுவாசிக்காலம்’’ வுhந யபந ஐபழெசயnஉந ழச டியசடியசளைஅ) எனக் குறிப்பிடப்படுகிறது. ஜாஹிலியாக்காலம் மிகத் தொன்மையான காலத்தை உள்ளடக்கியதெனக் கூறப்பட்டாலும் கி.பி 6ம் நூற்றாண்டே ஜாஹிலியாக்காலமாகும். (டீநப ஆ.யு.து. 1981 ; 21) கி.பி 6ம் நூற்றாண்டு பற்றி எழுதப்பட்ட வரலாறு இல்லை. இக்காலத்துக்குரிய தகவல்களைத் தருவதில் தொன்மைக் காலத்திலிருந்து தொடர்ந்து நிலைத்துள்ள நாட்டார் பாடல்கள் முக்கிய மூலமாகக் கருதப்படுகின்றன. அல்குர் ஆனிலும் ஹதீஸ்களிலும் (நபிவழிமரபுகள்) இக்காலத்தைக் குறிக்கும் சான்றுகள் உள்ளன.
அறேபியாவின் ஜாஹிலியாக் காலச்சமூகம் பல்வகைப்பட்டதாக இருந்தது. தென் அறேபிய வட அறேபிய வேறுபாடுகள் முதலிற் குறிப்பிடப்பட வேண்டியதாகும். தென் அறேபியா நிலையாகத் தரித்து வாழும் மக்கள் சமூகத்தைப் பெற்றிருந்தது. முன்னேற்றமடைந்த விவசாயம் அவர்களின் பிரதான தொழிலாகும். அங்கு மன்னராட்சி காணப்பட்டது. மறுபுறத்தில் வடமானில அறேபியர் மற்றொருவகை சமூக அமைப்பிலிருந்தனர். ஹெலெனிய நாகரிகத்தின் செல்வாக்கு இப் பகுதிகளில் ஊடுருவியிருந்தது. வட அறேபியாவிலும் மேற்கு அறேபியாவிலும் ஹெலெனிய செல்வாக்கு அரை – நாகரிக எல்லைப்புற அரசுகளை உருவாக்கியிருந்தது. இன அடிப்படையில் இப் பிரதேச மக்கள் அறேபியராயினும் இவர்கள் ஹெலனியச் செல்வாக்கிற்குள்ளாகியிருந்தனர். பொதுவாக ஆர்மெய்க் மொழியைப் பயன்படுத்தினர். நாடோடிப் பழங்குடிவாதம் (டீநனழரin வுசiடியடளைஅ) இவர்களின் முக்கியமான வாழ்க்கை முறையாகும் (பார்க்க, ஆ. யுடினயட யுசi,1995 :05).
இதேவேளை பாலைவனப் பசுந்தரை (ழுயளளை) சார்ந்த பகுதிகளில் தரித்து வாழ்ந்த நாடோடிக்குழுவினர் முன்னேற்றமான நகர வாழ்க்கையைத் தாபித்தனர். அத்தகைய நகர்களில் நபிகள் பிறந்த மக்கா முக்கியமானதாகும். ஜாஹிலியாக் காலத்து சமூக அடுக்கமைவினை (ளுலளவநஅ ழக ளுவசயவகைiஉயவழைn) ப் பின்வருமாறு வகைப்படுத்தலாம் : 1. பிரபுத்துவ அறவுப் பழங்குடி (குறைஷியர்) 2. பிரபுத்துவமல்லாத பழங்குடிகள் 3. சுதந்திரமளிக்கப்பட்டவர்களும் அடிமைகளும் 4. யூதர்களும் கிறிஸ்தவர்களும் (இவர்கள் பழங்குடிக்கும் அடிமைகளுக்கும் இடைப்பட்ட நிலையில் இருந்தனர்) (பார்க்க, 1981 : 21)
அடிப்படையில் ஜாஹிலியாயுகம் அடிமைச் சமூக அடிமைப்பிற்குரியதாகும் ஆயிரகணக்கான அடிமைகள் அறபு எஜமானவர்கள் உடைமைகளாக இருந்தனர். குறிப்பாக மக்காவில் மத்திய ஆளும் சக்தியாக உயர்வணிகர் காணப்பட்டனர். அவர்களுக்கு அடுத்ததாக சிறுவர்த்தகர் காணப்பட்டனர். மிகவும் அடித்தளத்தில் அடிமைகளும் உழைப்பாளிகளும் இருந்தனர். நபிகள் பிறந்தபோது அறபு சமூகம் இத்தகைய முரண்பட்ட அல்லது பலவகைப்பட்ட தன்மையிலிருந்தது என்பது கருத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும். சமூக இயக்கப்போக்கின் பௌதீக வகைப்பட்ட பொறிமுறையின் தளவரைபடம் என இதனைக் கொள்ளலாம்.
புதிய சமூக அமைப்பைக் கட்டியெழுப்புவதில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சீர்திருத்தங்கள் வகிக்கும் பாத்திரம் வரலாற்று முக்கியத்துவம் மிக்கதாகும். இப்றாஹிமியம், ஹனீப்வாதம் என்பவற்றிற்குப் பிறகு பாரிய சிந்தனை மாற்றத்துக்கான வழிமுறைகளை இஸ்லாம் அறபு மண்ணிற்கு அறிமுகப்படுத்தியது. காட்டுவாசி வாழ்க்கையில் (டீயசடியசளைஅ) அல்லது நாகரிகத்திற்கு முற்பட்ட நிலையிலிருந்த அறபு சமூகம் நாகரிகயுகத்துள் பிரவேசிக்கும்போது அதன் வழிகாட்டியாக நபிகள் இருந்தனர். தொண்மைக் காலத்திலிருந்து நவீன காலத்திற்கு அறபு சமூகம் மாறிய காலப்பிவென்று மகாகவி அல்லாமா இக்பால் இதனை அடையாளப்படுத்தினார். இதனால் இஸ்லாம், சமயம் என்பதற்கும் மேலானதாகும் என்பது மிகைப்படுத்தப்பட்ட கருத்தன்று. அது சமூகமாற்றத்தினதும் சிந்தனை மாற்றத்தினதும் வரலாறும் வழி முறையுமாகும்.
கலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்
Subscribe to:
Post Comments (Atom)
பின்நவீனத்துவ நிலை தமிழில்
பின்நவீனத்துவ நிலை: அறிவு குறித்த அறிக்கை(The Postmodern Condition: A Report on Knowledge) என்பது தத்துவஞானி ழீன் பிராங்கைஸ் லிய...
-
தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பின்கா...
-
தமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...
-
கவிஞர் அனார் : தமிழின் நவீன கவிதைகளுக்கு மிக வலுவான பங்களிப்பை தருகின்றவர். "ஓவியம் வரையாத தூரிகை(2004)", "எனக்குக் கவிதை முக...
No comments:
Post a Comment