Tuesday, April 21, 2009

மானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்

அத்தியாயம் 2

நாட்டார் வழக்காறுகள்



மக்கள் குலங்களாக வாழ்ந்த போது ஒவ்வொரு குலமும் தமக்குரிய மரபுகள் பாரம்பரியங்கள் முதலியவற்றைப் பெற்றிருந்தன. முதியோரை மதிப்பது, குலத்தீர்மானங்;;;களை ஏற்பது, குல அங்கத்தவர்களுக்கு உதவி அளிப்பது போன்ற சமூக நடவடிக்கைகளாக அவை வெளிப்பட்டன. தமது வாழ்வுக்கும் குலத்தின் இருப்பிற்கும் இவை இன்றியமையாதவையாக இருந்தமையால் தொன்மைக் குலங்கள் இவற்றைச் செயற்படுத்துவதில் தீவிர மனப்பாங்கைக் கொண்டிருந்தன.

இவ்வழக்காறுகளையும் இவற்றோடு தொடர்புடைய பாரம்பரியங்களையும் மரபுகளையும் ப+ர்வீகக் குடிகள் மாற்ற முடியாத அந்தஸ்துடையனவாகக் கருதினர். நாட்டார் வழக்காறுகளை ஆழமாக ஆராய்ந்த பேராசிரியர் சம்மனர் (று. பு. ளுரஅநெச) நாட்டார் வழக்காறுகள் அநாதி காலமாக நிலவி வருபவையென்றும் ஒவ்வொரு இனமும் தனது மூதாதையரிடமிருந்து அவற்றை பிதுர்ராஜ்ஜிதமாகப் பெற்று அடுத்த தலைமுறைக்கு வழங்குகிறதென்றும் கூறுகிறார். அது மனிதன் உணர்ந்தோ தேர்ந்தெடுத்தோ கடைபிடித்ததல்ல. அது இயற்கைச் சக்திகளின் உற்பத்திச் சக்திகளுக்கு ஒப்பானதென்றும் விலங்குகளின் இயல்ப+க்கத்திற்குச் சமமானதென்றும் அவர் விளக்குகிறார்.

இவை நபிகள் கால அல்லது அதற்கு முந்திய பாலைவனப் பழங்குடி அறேபியரின் மரபுகளுடன் நன்கு ஒப்பிடுவதற்குரியனவாகும். “ஒரு குறிப்பிட்ட விடயத்தில் குறிப்பிட்ட விதமாக ஏன் செயல்பட்டீர் எனப் ப+ர்வீக மனிதனைக் கேட்டால் எனது மூதாதையர் அவ்வாறுதான் செய்தனர் எனப்பதிலிறுப்பான்’’ என்றும் “மூதாதையர் மீது ஆவித்தன்மையான அச்சமும் அதீத மரியாதையும் கொண்டவனாகப் ப+ர்வீன மனிதன் வாழ்ந்தான்’’ என்றும் கூறும் சம்னின் கருத்துக்களையும் அறாபியரின் மூதாதையர் வழிபாட்டுடன் ஒப்பு நோக்கலாம்.
வடிவம் எவ்விதமாக இருந்த போதிலும் சமூகம் என்பது என்ன? மனிதனின் பரஸ்பர நடவடிக்கைகளின் சிருஷ்டியே சமூகம்’’ என்ற மார்க்சின் கருத்து இரு தளங்களில் கொள்ளப்பட வேண்டும். மனிதனின் செயற்பாடு மனிதனுக்கும் மனிதனுக்குமிடையில் நிகழ்வது மட்டுமன்று. அடிப்படையில் மனிதன் இயற்கையின் ஒரு பாகம். பரஸ்பர நடவடிக்கை என்பது மிகவும் தீர்மானமான சமூக விதிகளை உள்ளடக்கியதாகும்.

சமூகம் தனது தோற்றத்தின் மூலம் இயற்கையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. சமூகத்தின் இருத்தலுக்கும் பரிணாம வளர்ச்சிக்கும் இயற்கை அடிப்படையான நிபந்தனையாக உள்ளது. பேராசிரியர் டப். ஜி. சம்னரின் கீழ்வரும் கருத்து இத் தொடர்பில் கருதத்தக்க தொன்றாகும்.

வாழ்க்கையின் இருப்பிற்கான போராட்டம் வாழ்க்கை
நிபந்தனைகளுடனும் அதனோடு தொடர்பான வாழ்க்கைப்
போட்டியுடனுமே நடக்க வேண்டியுள்ளது. வாழ்க்கை நிபந்தனைகள்
என்பதில் சுற்றாடலின் பல்வேறு கூறுகள் அடங்கியுள்ளன. வாழ்வதற்கு
ஆதாரமாயிருக்கக்கூடிய பொருட்களைப் பெறுவது, அவற்றின் பயனை
அடைவதிலுள்ள இடர்பாடு, காலநிலை, தட்ப வெப்பநிலை முதலியன
இவை வாழ்க்கைக்கு ஆதாரவளிக்கின்றன. அல்லது எதிராக
அமைகின்றன (1906 : 16)

மக்களின் சமூக இருப்ப அல்லது வாழ்நிலை (ளுழஉயைட நுஒளைவநnஉந) சமூக உணர்வை நிர்ணயிருக்கின்றது. மார்க்சிய சிந்தாந்தங்களில் சமூகவாழ்நிலை என்பது மனிதன் இயற்கையுடனும் மனிதர் தமக்கிடையேயும் கொண்டுள்ள பொருளாயத (பௌதிக நிலைப்பட்ட) உறவுகளாகும்.

சமூக உணர்வு என்பது வர்க்கங்கள், கருத்துக்கள், எண்ணங்கள், சட்டம், தத்துவம், சமய உணர்வுகள் என்று பொருள்படும். சமூக உணர்வுகள் சுதந்திரமானவையல்ல. சமூக வாழ்நிலையே சமூக உணர்வை நிர்ணயிக்கிறது. சமூக செயற்பாடுகளினதும் பொருளாதாரத் தேவைகளினதும் பிரதிபலிப்பாகவே சமூக உணர்வுகள் அமைகின்றன.

சமுதாய வளர்ச்சி சில தீர்மானமான விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக மார்க்சியம் கூறுகிறது. இவற்றை இயற்கையின் விதிகளைப் போலக் கருதும் மார்க்சியவாதிகளும் உளர். வரலாற்று விதிகள் இயற்கை விதிகளை ஒத்தனவா என்பது பற்றி கருத்து பேதங்கள் உள. மார்க்சின் சொந்தக் கருத்துக்களே இவ்வகைக் கருத்துப் பேதங்களின் தீர்வுக்கு உசாவத் தகுதியானவை. வரலாற்று விதிகளை எவ்வாறு நோக்கினாலும் அவை மனித நடவடிக்கைகளின் விதிகளாகும். இயற்கை விதிகளையும் வரலாற்று விதிகளையும் வேறுபடுத்திக் காட்டும் அம்சம் மனித நடவடிக்கை என்பது அழுத்திக் கூறத்தக்கதாகும்.

மார்க்சிய வரலாற்றுப் பொருள் முதல்வாதம் (ர்ளைவழசiஉயட ஆயவநசயைடளைஅ) உற்பத்தி முறையை (ஆழனந ழக Pசழனரஉவழைn) வரலாற்றின் அடிப்படை இயக்கமாகக் கருதுகிறது. ஒவ்வொரு யுகமும் தனக்கென ஒரு உற்பத்தி முறையை கொண்டுள்ளது. அந்தந்த யுகத்துக்குரிய உற்பத்தி முறையே வர்க்க வேறுபாடுகளையும் வர்க்கப் ப+சல்களையும் தோற்றுவிக்கிறது. உற்பத்தி உறவுகள் வர்க்கப் போராட்டத்தைத் தவிர ஒன்றுமல்ல என மார்க்சியம் கூறுகிறது.

எவ்வாறு உற்பத்தி வர்க்கத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் தருகிறது? காற்றாடி இயந்திரம் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தையும் நீராவி இயந்திரம் கைத்தொழில் முதலாளியையும் எப்படித் தருகிறது.

உற்பத்திக் கருவிகளின் உடைமை உரிமை அல்லது சொத்துடைமையே இதைத் தீர்மானிக்கிறது. மக்கள் உற்பத்தியில் ஈடுபடும் போது இயற்கையில் மாத்திரம் வேலை செய்யவில்லை. ஒருவருக்கொருவர் தெளிவான உறவுகளில் அவர்கள் பிரவேசிக்கின்றனர். இந்த உறவுகள் உடைமை உறவுகள். உற்பத்திக் கருவிகளைப் பெற்றிருப்போருக்கும் அவற்றைப் பெறாதோருக்கும் இடையிலான பொருளாதார நலன்களில் முரண்பட்ட இரு பகுதியினர்க் கிடையிலான உறவு அது.

வர்க்கம் இருதுருவ வேறுபாடுடைய, கூர்மையடைந்து செல்லும் இரு முகாம்கள் என்ற கருத்து வர்க்கம் பற்றிய எளிமையான விளக்கவடிவமாகும். பாரிய வர்க்கப் பிரிவினை பற்றி மார்க்ஸ் அழுத்தமாகக் கூறியுள்ளார். எனினும், வர்க்கம் என்பது சமூகத்தின் சிக்கல்வாய்ந்த தோற்றப்படாகும். இந்த விடயத்தை மார்க்ஸ் உணர்ந்திருந்தார். வர்க்கங்கள் இருதுருவ நிலைப்பட்டவை மட்டுமே என்ற விளக்க வடிவத்திற்கு அப்பாலிருந்த சிக்கல் நிலையை அவரால் சுட்டிக்காட்ட முடிந்தது. வரலாற்றில் முந்திய சகாப்தங்களில் அனேகமாய் எங்குமே பல்வேறு வகுப்புக்களாலாகிய சிக்கலான சமூகப் பாகுபாடு, சமூக அந்தஸ்தின் பன்மடிப்படிநிலை அமைவு இருக்கக் காண்கிறோம்’’ என மார்க்கம் எங்கெல்லாம் தமது கம்ய+னிஸ்ட் கட்சி அறிக்கையில் குறிப்பிட்டனர்.

அடிப்படை வர்க்கத்துடன் தொடர்புற்ற சமூகத் தரப்படிவம் (ளுழஉயைட சுயமெ) அல்லது சமூக அடுக்கமைவு (ளுழஉயைட ளுவசயவகைiஉயவழைn) முதலாளித்துவதற்கு முந்திய சமூக அமைப்புக்களில் காணப்பட்டதை அவர்கள் முன் மொழிந்தனர்.

உற்பத்தி செய்யப்படும் பொருள், அது பரிவர்த்தனையாகும் விதம், செல்லப் பகிர்வு என்பனவே ஒரு சமுதாயம் எப்படி வர்க்கங்களாக அல்லது சமுதாயப் படிமுறை அமைப்பாகப் பிரிக்கப்படுகிறது என்பதைப் புரிய வைக்கிறது. விநியோகத்தில் எழும் வித்தியாசங்களிலிருந்து வர்க்க வித்தியாசங்கள் எழுகின்றன. உடைமை மேம்பாடுடையவர்களையும் உடைமை அற்றவர்;களையும் சமுதாயம் பெறும் நிலை இவ்வாறு வந்து சேர்கிறது. மார்க்ஸ் பின்வருமாறு கூறுகிறார் : பீ. வி. அனன்கோவ்வுக்கு எழுதிய கடிதத்தில் (1846) உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட கட்டத்திலிருக்கும் போது வணிகமும் நுகர்வும் குறிப்பிட்டதொரு அமைப்பிலிருக்கும் உற்பத்தி, வாணிபம், நுகர்வு என்பவற்றில் குறிப்பிட்டதொரு வளர்ச்சி ஏற்பட்டிருப்பின் அதற்;குகந்தாற் போன்ற சமூக அமைப்பும் ஏனைய நிறுவனங்களும் அல்லது வர்க்கங்களும் இருக்கும். ஒரு வார்த்தையில் கூறினால் அதற்குக் தகுந்தாற் போன்ற சிவில் சமூகமும் இருக்கும். (கார்ல் மார்க்ஸ் 1973 : 156)

மார்சின் கருத்தில் உற்பத்திச் சக்திகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் மனிதர்களுக்கு இல்லை. உற்பத்திச் சக்தி என்பது முந்திய நடவடிக்கைகளால் ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்ட சக்தியாகும். முன்னால் வாழ்ந்த ஒவ்வொரு பரம்பரையினரும் பெற்றிருந்த உற்கத்திச் சக்திகள் பின்வரும் ஒவ்வொரு பரம்பரையினருக்கும் புதிய உற்பத்திக்கு மூலப் பொருளாய் விளங்குகின்றன என அவர் கருதுகிறார்.

மனிதர்கள் தங்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்பதை மார்க்ஸ் மறுக்கவில்லை. ஆனதல் தங்கள் விருப்பதற்கேற்ப அவர்களால் உருவாக்க முடிவதில்லை. ஒரு சமுதாயவடிவத்தை அதில் அப்போது வாழும் மனிதர்கள் உருவாக்கவில்லை. அது அவர்களுக்குத் தரப்பட்ட முந்திய பரம்பரையின் சிருஷ்டி என்பதை மார்க்சியம் வலியுறுத்துகிறது. லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புருமேர்’’ எனும் நூலில் மார்க்ஸ் இதனைப் பின்வருமாறு கூறுகிறர். “இதுவரை செத்துப் போயிருக்கிற பழைய தலைமுறைகளின் மரபு இன்று உயிரோடிருப்பவர்களின் மூளையில் அழுக்குப் பேயைப் போல் உட்கார்ந்திருக்கிறது. இப்பிரச்சினையின் சுருக்கத்தை மார்க்சின் வார்த்தைகளிலேயே பின்வருமாறு கூறலாம். ஒரு வகையிலான அல்லது வேறொருவகையிலான சமூகவடிவத்தை (ளுழஉயைட கழசஅ) த்தமக்காகத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் மனிதருக்கு உண்டா? எந்தவகையி;லும் அதற்கிடமில்லை. (1973 : 56)

வரலாற்றுப் பொருள்முதவாதம் பற்றிய தமது ஆரம்பகாலக் கருத்துக்களை மார்க்ஸ் தனது “தத்துவத்தின் வறுமை’’ (1847) எனும் நூலில் மேலும் திருத்தமான முறையில் முன்வைத்தார். அதில் அவர் முன்வைத்துள்ள பின்வரும் கூற்றுக்களை நோக்குவது பொருத்தமாகும். உற்பத்தி உறவுகள் உற்பத்திச் சக்திகளுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. புதிய உற்பத்திச் சக்திகளைப் பெற்றுக் கொள்ளவதற்காக மனிதர் தமது உற்பத்தி முறையை மாற்றுவதன் மூலம் தமது வாழ்க்கைக்காகச் சம்பாதிக்கும் வழியை மாற்றுவதன் மூலம் அவர்கள் சமூக உறவுகள் அனைத்தையுமே மாற்றுகிறார்கள். கை இயந்திரம் உங்களுக்கு நிலப்பிரபுத்துவ சமூகத்தைத் தந்தது : நீராவி இயந்திரம் முதலாளிகளின் சமூகத்தைத் தந்தது, என்றும் பொருளாயத உற்பத்திக்கு உகந்ததைப் போல கருத்துகளையும் கோட்பாடுகளையும் கூட மாற்றுகிறார்கள், என்றும் மார்கஸ் குறிப்பிட்டார்.

வளர்ச்சியில் குறிப்பிட்ட கட்டத்தில் சமூகத்தின் பொருளாயத உற்பத்தி சக்திகள் (ஆயவநசயைட Pசழனரஉவiஎந குழசஉநள ழக ளுழஉநைவல) அப்போது இருந்துவரும் உற்பத்தி உறவுகளுடன் மோதுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது என்ற கருத்து பொருள் முதல்வாதச் சிந்தனையின் பிரதான அடிப்படையில் ஒன்றாகும். இவ்வாறு பொருளாதார அடித்தளத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள் விரைவாகவோ தாமாகவோ மேற்கட்டமைப்பு முழுவதையுமே உருநிலை மாற்றத்திற்குள்ளாகிவிடுகிறது.

“உற்பத்தி சக்திகள்’’ என்ற எண்ணக்கரு மார்க்சின் பொருள்முதல்வாதச் சிந்தனையில் ஒரு தீர்க்கமான இடத்தைப் பெற்றுள்ளது. வரலாற்று விதிகள் பௌதிகவிதிகளுக்கு நெருக்கமாக இட்டுச் செல்லும் இயல்புகள் இதில் உள்ளன. உற்பத்திச் சக்திகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் மனிதனுக்கு இல்லை @ என்பது மார்க்சின் பொருள் முதல்வாதச் சிந்தனையின் மகா வாக்கியமாகும். மார்க்சின் கருத்தில் உற்பத்திச் சக்தி என்பது மனிதனின் முந்தைய நடவடிக்கைகளால் ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்ட சக்தியாகும்.

மனித சக்தியின் விளைவுகளே உற்பத்திச் சக்திகள் என்பதை மார்க்ஸ் மறுக்கவில்லை. ஆனால் இந்த உற்பத்திச் சக்தியுங்கூட மனிதர்கள் வாழும் சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படுகின்றன. அந்த உற்பத்தி சக்திகளைப் பெறுவதற்கு முன்பிருந்த சமூகவடிவத்தால் நிர்ணயிருக்கப்படுகின்றன. அந்த சமூகவடிவத்தை மனிதர்கள் படைக்கவில்லை. அது அவர்களுக்கு முந்திய பரம்பரையின் சிருஷ்டி @ அவர்களது பௌதீக உறவுகள் தான் அவர்களின் சகல உறவுகளினதும் அடிப்படையாகும். என பீ. வி. அனன்கோவ்வுக்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் குறிப்பிட்டார்.

மார்க்சின் சித்தாந்தம் மனிதர்களின் முயற்சிகளுக்கும் சாதனைகளுக்கும் இடமே இல்லை என்று கூறுவதாக இதற்;குப் பொருள் கொள்ள வேண்டியதில்லை. மனிதன் முயற்சிக்கின்றான். சாதனைகள் செய்கின்றான். ஆனால் அப்போது முன்னர் அவன் செயற்பட்ட சமூகவடிவம் மாறத் தொடங்குகிறது. பிரித்தானிய முதலாளித்;துவத்தின் நிகழ்வொன்றின் மூலம் மார்க்ஸ் இதனைக் காட்டினார்.

மத்திய காலத்தில் பிரித்தானியாவில் இருந்த வியாபார அமைப்புகள், கில்டுகள், சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் என்பன மூலதனத் திரட்டலில் ஈடுபட்டன. உற்பத்திச் சக்திகளுக்கு உகந்த உற்பத்தி உறவுகளாக இவை இருந்தன. மனித முயற்சியினால் பெரும் மூலதனம் திரண்டது. வெளிநாட்டு வியாபாரம் வளர்ந்தது. குடியேற்ற நாடுகள் உண்டாக்கப்பட்டன. இந்தச் சாதனைகள் உற்பத்திச் சக்திகளுக்கும் உறவுகளுக்குமிடையில் பொருத்தமின்மையைத் தோற்றுவித்தன. மார்க்சின் மொழிகளிலேயே இதனை இவ்வாறு கூறலாம்.

இதையெல்லாம் செய்த மனித சாதனைகளை எந்த அமைப்புகளின்
பாதுகாப்பின் கீழ் பெற்றனரோ அந்த அமைப்புகளை அப்படியே

வைத்திருந்தால் தரம் பெற்ற சாதனைகள் எல்லாம் அவர்கள்
இழந்திருப்பர். அதனாலே தான் 1940,1988 களில் இங்கிலாந்தில்
இரு இடிமுழக்கங்கள் கேட்டன. அதாவது இரு புரட்சிகள் வெடித்தன.
பழைய சிவில் சமுகத்தின் அதிகார ப+ர்வ வெளிப்பாடான பழைய
பொருளாதார அமைப்புகள் அவைகளுக்குப் பொருத்தமான சமூக
உறவுகள் அரசியல் நிலைகள் யாவும் இங்கிலாந்தில்
அழிக்கப்பட்டன…………. புதிய உற்பத்தி முறைகளை பெற்றவுடன்
மனிதர்கள் தமது உற்பத்தி முறைகளையும் மாற்றிக் கொள்கிறார்கள்.
அந்த உற்பத்தி முறையுடன் அந்த குறிப்பிட்ட உற்பத்தி முறையின்
அவசியமான உறவுகளான சகல பொருளாதார உறவுகளும்
மாறுகின்றன (1973 : 158)

மாறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தை அதன் உணர்வுகளைக் கொண்டு முடிவு செய்யும் பழைய முறையை மார்க்ஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த உணர்வைப் பொருளாயத வாழ்க்கையின் முரண்பாடுகள் மூலமாகவே உற்பத்தியின் சமூக சக்திகளுக்கும் உற்பத்தி உறவுக்குமுள்ள போராட்டத்தின் மூலமாகவே விளக்கமுடியுமென அவர் கருதினார்.

No comments:

பின்நவீனத்துவ நிலை தமிழில்

பின்நவீனத்துவ நிலை: அறிவு குறித்த அறிக்கை(The Postmodern Condition: A Report on Knowledge) என்பது தத்துவஞானி ழீன் பிராங்கைஸ் லிய...