அத்தியாயம் 2
இஸ்லாத்தின் சரித்திரம்
இஸ்லாத்தின் தோற்றம் பற்றியும் அதன் வரலாற்றுப் பாத்திரம் பற்றியும் பொதுவாக மார்சிய வாதிகள் மௌனம் சாதிக்கின்றனர். (1985 : 138) எனினும் மார்க்ஸ் எங்கெல்லா இருவருமே பண்டைய ஆசிய சமூகத்தாரின் சமூகம், அறேபியாவில் இஸ்லாத்தின் தோற்றம் என்பன பற்றி கருத்தற்றவர்களாக இருக்கவில்லை. அறேபியாவில் இஸ்லாத்தின் தோற்றம் குறித்து 1953ல் மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் கீழ் நாடுகளின் சரித்திரம் மதங்களின் சரித்திரமாக இருப்பது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.
தனது வரலாற்றுப் பொருள்முதல்வாதச் சித்தாந்தத்தின் ஊடாக ஆசிய சமூகத்திலும், பாலைவன அறேபியாவிலும் சமய எழுச்சியைத் தூண்டிய காரணங்;;;களின் அடிப்படையை ஆராயும் ஆர்வம் மார்க்சிற்கு இருந்தது.
குடிபதிகளாக ஓரிடத்தில் தரித்து வாழ்ந்தோருக்கும் நாடோடிகளுக்குகிடையே நிலவிய உறவு, முஹம்மது நபியின் காலத்தில் ஐரோப்பாவிலிருந்து ஆசியாவிற்குச் செல்லும் வர்த்தகப் பாதை திருத்தியமைக்கப்பட்டிருந்தமை, இந்தியா முதலிய நாகளோடு வர்த்தகத்தில் பெரும் பங்கு வகித்து வந்த அறேபிய நகரங்களின் வாணிபச் சீரழிவு போன்ற காரணிகளே இஸ்லாத்தின் எழுச்சிக்கான உந்து சக்திகளாய் இருந்தன என்று அவர் எழுதினார்.
இவ்வுந்து சக்திகளால் உருவான இஸ்லாத்திள் எழுச்சியை மார்க்ஸ் புரட்சி என்றே உணர்ந்திருந்தார். எங்கெல்ஸ் மார்க்சிற்கு அனுப்பிய பதில் கடிதத்தில் நீங்கள் மிகவும் சரிவரக் கருதியுள்ள முஹம்மதியப் புரட்சியில் என எழுதியிருந்தார். முஹம்மது நபிகளின் பிறப்பிற்கு முந்திய தென் அறேபிய வர்த்தகத்தின் சீரழிவை மார்க்சும் எங்கெல்சும் புதிய இயக்கத்திற்கான உந்து சக்திகளில் ஒன்றெனக் கருதினர்.
கிறிஸ்துவுக்குப் பிந்திய ஆறு நூற்றாண்டுகளின் வர்த்தக சரித்திரத்தை அறிவது இந்நோக்கினுக்கு உதவுமென எங்கெல்ஸ் கருதியதை இங்கு முக்கியமாகக் குறிப்பிடலாம். தென் அறேபியா மீது அபீசினியர் சுமார் 500 ஆண்டுகளாகத் தொடுத்த போரையும் தென் அறேபியாவைக் கொள்ளையடிக்கும் அடிமைப்படுத்தவும் முயன்ற அபீசினாயரின் போக்கையும் ஆராய்வதின் தேவையையும் அவர் வலியுறுத்தினார்.
அபீசினியரின் வெளியேற்றம் முஹம்மது நபிகளுக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னத் தான் நிகழ்ந்தது. அறேரியத் தேசிய உணர்வின் விழிப்பிற்கான முதல் அடையாளமென எங்கெல்ஸ் இதனைக் குறிப்பிட்டார். அறேபியாவின் வடக்கிலும், மக்கா வரையிலும் நடந்த பாரசீகப் படையெடுப்புக்களும் இத்தேசிய உணர்வைத் தூண்டிய மற்றொரு நிகழ்வென அங்கெல்ஸ் குறிப்பிட்டார்.
ஆதிகிறிஸ்தவ சமயத்தின் வரலாற்றை ஆராய்கையில் எங்கெல்ஸ் ஆதி இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பின், படிமுறைகள் குறித்து சில குறிப்புக்களை முன் வைத்தார். அன்றைய மோதும் இரு குழுக்களைப் பற்றி அக் கருத்து ஏற்கனவே மார்க்ஸ் குறிப்பிட்டிருந்த கூற்றின் வியாக்கியாளத்தைப் போல அமைந்தது.
எல்லாக் குலங்களின் மத்தியிலும் சரித்திரம் தொடங்கிய
காலத்திலிருந்து ஓரிடத்தில் தனித்து வாழ்ந்த குலங்களின் ஒரு
பகுதியினருக்கும் தொடர்ந்து நாடோடி வாழ்க்கை நடத்தி வந்த
மக்களுக்கிடையில் பொதுவான தொடர்புகள் இருந்தன. (1976:106)
ஒரு புறத்தில் வியாபாரத்திலும் தொழில் துறைகளிலும் இருந்த நகரவாசிகளுக்கும் இன்னொருபுறத்தில் நாடோடிகளான பெடோயின்களுக்குமிடையில் ஒரு மதமாக இஸ்லாம் வளர்ந்ததை எங்கெல்ஸ் அதிற் குறிப்பிட்டிருந்தார். முரண்பாட்டின் கரு இங்கு இந்த இரண்டிற்குமிடைலேயே உளதென்ற எங்கெல்ஸின் கருத்து நுணுகி நோக்குதற்குரியதாகும்.
நகர மக்கள் செல்வமும் செழிப்புமுள்ளவர்கள் சட்டத்தை மதிப்பதில் அவர்கள் தளர்ச்சியுடன் நடந்து கொள்கிறார்கள். ஏழைகளான நாடோடிகள் ஒழுக்கவிதிகளுக்கு கண்டிப்பாகக் கட்டுப்பட்டவர்கள். நகலவாசிகளின் செல்வங்களையும் இன்பங்களையும் பொறாமையோடும் பொருளாசையோடும் பார்த்து மனங்குறுகின்றார்கள். பாலைவன அறேபியரிடையே வளர்ந்து வந்த மோதலின் வித்தையும் முரண்பட்ட மனோ பாவத்தையும் பற்றிய எங்கெல்சின் இக்கூற்று இப்னு கல்தூன் தனது படைப்பான முக்கத்திமா (ஆரஙஙயனiஅய) வில் நாடோடி படோபியின்கள் (பதவிகள்) விரிவான விளக்கங்களுடன் ஒப்பு நோக்குதற்குரியதாகும்.
பாலைவன நாடோடிகள் தமக்கக் கிடைத்த குறைந்த பட்ச ஜீவனோபாயத்துடன் தமது வாழ்வை கட்டுப்படுத்திக் கொண்டனர். அல்லது அவ்வாறு வாழ நிர்ப்பந்திக்;;;;;கப்பட்டனர். அதைக் கடந்து செல்ல அவர்களால் முடியவில்லை. ஆனால் ஓரிடத்தில் தரித்து வாழ்ந்த நகரவாசிகள் மகிழ்சியான ஆடம்பர வாழ்விலிருந்தனர். எல்லாவகைக் களிப்புக்களையும் அவர்கள் அனுபவித்தனர். உலகியல் ரீதியான அவாவிலும் தீய செயல்களிலும் அவர்கள் தீவிர நாட்டம் கொண்டிருந்தனர். நாடோடி வாழ்வும் கட்டுப்பாடான ஏழ்மை நிலையும் எளிமையும் பாலைவன வாழ்க்கையின் ஆதார வாழ்க்கை முறையாகும் அதிலிருந்தே நகர வாழ்க்கையையும் வாழ்க்கையின் ஆதாரத்தையும் நோக்கிப் பாலைவன நாடோடி தனது ஆவலை இலட்சியமாக்கி அதற்காகப் பாடுபடுகிறான் என்று இப்னு கல்தூன் குறிப்பிடுகிறார். எந்த நகரை எடுத்துக் கொண்டாலும் அதன் மக்கள் ப+ர்வீகத்தில் நாடோடிகளே என்றும் முக்கத்திமா கூறுகின்றது. (ஐடிn முhயடனரnஇ 1958 : 252 – 55 )
பிரைன் டேர்னர் (டீசலn வுரசநெச) கூறுவது போல இஸ்லாத்தின் தோற்றம், அதன் வரலாறு பற்றிய மார்க்ஸ், எங்கெல்சின் கருத்தாக்கங்கள் ப+ரணமற்றவை என்றாலும் அவை கருத்தைத் தூண்டுவனவாகும்.
இறுதியாகப் பின்வரும் விடயத்தை இங்கு நோக்குவது பொருத்தமாகும். இஸ்லாத்தை அதன் தனித்துவமான தோற்றத்துக்குரிய இலட்சணங்களாலன்றி ய+த சமயத்தினதும் தென் அறேபிய கலாசாரத்தினதும் வெறும் பிரதியமைகள் என்று மட்டுமே வியாக்கியானப்படுத்திய கீழைதேய ஆய்வாளரின் முயற்சிகள் ஒரு தலைப்பட்சமானவை.
நபிகள் காலத்திலும் அதற்கு முன்னரும் அறேபியாவிலும் குறிப்பாக மக்காவிரும் நிகழ்ந்து கொண்டிருந்த சமூக, பொருளாதார கலாசாரக் காரணிகளின் பிரத்தியேகமான இயல்புகளை அத்தகைய சிந்தனையாளர் கருத்திற் கொள்ளத் தவறினர். மார்க்சினதும் எங்கெல்சினதும் சிந்தனைகள் இஸ்லாத்தின் தோற்றம் வரலாறு ஆழமானதென்றும் அதற்கே உரித்தான சமூக, வரலாற்றியல் வேர்களைக் கொண்டதென்றும் இனங் காட்டின. அதன் மூலம் இஸ்லாத்தின் தோற்றம் பற்றிய ஆய்வில் தனித்துவமானதும் மாறுப்பட்டதுமான போக்கினையும் தொன்மை அறேபிய சமூக விரிசலிடையே அதன் வரலாற்றுப் பாத்திரத்தையும் அவர்களால் சுட்டிக்காட்ட முடிந்தது. இதனை இஸ்லாத்தை நோக்கிய ஆழமான அவர்களது முக்கிய பாங்களிப்பெனக் கருத முடியும்.
இஸ்லாம் தோன்றுவதற்கு முன்ரே மக்காவிலும் மதீனாவிலும் ய+தர்களும் கிறிஸ்தவர்களும் செல்வாக்குடன் வாழ்ந்தனர். மதப் பரப்பு நடவடிக்கைகளிலும் அவர்;கள் ஈடுபட்டனர். பண்டைய வட அறேபிய தென் அறேபிய நகரங்களிலும் ய+த, கிறிஸ்தவ சமயத்தவர்களின் செல்வாக்கும் ஆதிக்கமும் குறிப்பிடத்தக்க அளவில் காணப்பட்டன. அப்ரஹா போன்ற மன்னர்கள் கிறிஸ்தவ ஓரிறைவாதத்தைப் பரப்ப படைப்பலத்தையும் பயன்படுத்தினர். அப்ரஹாவின் படைகள் மக்காவின் கஃபா வரையும் பிரவேசித்தமை புகழ்பெற்ற நிகழ்வாகும்.
மக்காவாசிகளுக்கு ய+த, கிறிஸ்தவ சமயங்களைத் தழுவ வாய்ப்புக்களிருந்தன. எனினும் இஸ்லாம் தோன்றும் வரை எந்தப் புதிய கருத்தியலையும் (ஐனநடழபல) ஏற்காதவர்களாகவே அவர்கள் வாழ்ந்தனர்.
சமயமாற்றம்
மக்காவலி; தோன்றி வளர்ந்து கொண்டிருந்த பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளோடும், புதிய சிந்தனைகளோடும் இஸ்லாம் தோன்றியது. முந்திய சமய மரபுகளும் நம்பிக்கைகளும் ஏன் வழிபாட்டு முறைகளுங் கூட புதிய மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாதிருந்தன. சிந்தனையிலும் செயல் முறையிலும் மாறுபட்ட புதிய சமய இயக்கம் தன் முன்தோன்றிய எதிர்ப்புக்கள் அனைத்தையும் உடைத்துக் கொண்டு வெளிப்படுவது தவிர்க்க முடியாததாயிற்று.
ஒவ்வொரு சிறு பொருளாதார மாற்றமும் சமய மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறமுடியாது. (று.ஆ.றுயவவஇ : (யு) 1961 :30 ) ஆனால் உற்பத்தி முறை மாற்றத்தினால் உருவாகும் பாரிய பொருளாதார மாற்றத்தைத் தொடர்ந்து சமய மாற்றமும் தவிர்க்க முடியாது நிகழ நிபந்தனைப்படுத்தப்படுவதாகக் கருத முடியும். மார்க்சிய சிந்தனை இந்த விடயத்தில் அதிக ஒளி பாய்ச்சக்; கூடியதென்பது மீண்டும் கூறத் தேவையற்றதாகும்.
மக்காவில் இஸ்லாம் தோன்றிய போது மக்காவின் உற்பத்தி முறை அதன் பாரம்பரிய இயல்புகளைக் கடந்து சென்று கொண்டிருந்தது. பேராசிரியர் மொன்ட்கொமறி வொட்டின் (று.ஆ.றுயவவ) வார்த்தைகளில் கூறுவதாயின் கால்நடைகளில் தங்கியிருந்த நாடோடிப் பொருளாதாரம் வர்த்தகமாகவும், சர்வதேச வர்த்தகமாகவும் மாறியிருந்தது. இது மக்காவில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க அடிப்படைப் பொருளாதார மாற்றமாகும்.
உற்பத்தி முறையில் ஏற்படும் மாற்றம் முன்னைய சமூக அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எவ்வாறெனினும், பொருளாதார மாற்றத்திற்கும் சமய மாற்றத்திற்குமிடையில் நேர் தொடர்பைச் சமாந்தரமாகச் சுட்டுவது கடினமாகும். (1961 : 30) ஆனால் ஒரு சமூகம் குறிப்பிட்ட பொருளாதாரக் கட்;டமைப்பில் இருக்கும் போது அப்பொருளாதார முறை, தொழில்நுட்பம், மரபுகள் ஆகியவற்றின் வழியில் மனிதனின் வாழ்க்கையும் நம்பிக்கைகளும், அமைவதாகக் கருத முடியும்.
குர்;ஆன் முந்திய நாகரிகங்களையும் விமர்சித்தது. அந்நாகரிகங்கள் அழிவதற்கான காரணிகளையும் அது ஆராய்ந்தது. ய+த கிறிஸ்தவ சமயங்களையும் ஏனைய பண்டைய சமயங்களையும் பற்றிக் குர்ஆன் கருத்துத் தெரிவித்ததோடு விமர்சனங்களையும் முன்வைத்தது.
கடந்த காலத்தின் உயர்வான சிந்தனைகளுக்கும், சமூகமரபுகளுக்கும் குர்ஆன் மதிப்பளித்தபோதும் புதிய பண்பாட்டையும் புதிய சமூகத்தையும் உருவாக்க அது கொண்டிருந்த திடசங்கற்பமும் வர்த்தக வளர்ச்சியின் நலன்களை சாதாரண மனிதனும் பெறும் வகையில் அது முன் வைத்த சமயத்துச் சிந்தனைகளும் புதியனவாகும்.
அதனால் இஸ்லாம் ஏனைய மத்திய கிழக்குச் சமயங்களின் வெறும் தொடர்ச்சியே என்ற கருத்து இஸ்லாத்தை விளக்குவதற்குப் போதுமானதன்று. கி. பி. 6ம் நூற்றாண்டு வரை அறேபியாவில் காணப்பட்ட கலாசார சமய முறைகளிலும் சமூக பொருளாதாரச் சிந்தனைகளிலும் அது ஏற்படுத்திய தாக்கத்தையும் எழுச்சியையும் விரிவாக ஆராயதவரை இவ்விடயம் குறித்த விவாதம் நிறைவு பெறாது.
கலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்
Subscribe to:
Post Comments (Atom)
கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான பார்வை
கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான பார்வை அர்ப்பணிப்புள்ள வன அதிகாரியான அஜய் மற்றும் அபர்ணா ஆகியோரின் திருமணத்துடன் திரைப்படம் தொடங்குக...
-
தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பின்கா...
-
தமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...
-
பீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...
No comments:
Post a Comment