Tuesday, April 21, 2009

மானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்

அத்தியாயம் 10
நபி இப்றாஹீம்



“தீன் ஹனீபிய்’’ இன் அடிப்படை இப்றாஹீம் நபிகள் போதித்த சமயமாகும் குறிப்பாக இப்றாஹீம் நபியின் ணரிறைவாதத்தை ஹனீப்வாதிகள் தீவிரமாகப் பின்பற்றினர்.

மத்திய கிழக்கின் உலகச் சமயங்கள் அனைத்தும் தமது முன்னோடிச் சமயத் தலைவராகவோ, தந்தையாகவோ இப்றாஹீம் நபியையோ ஏற்றுள்ளன. நபிமூஸா, நபி ஈசா, நபி முஹம்மத் ஆகியோரின் நிறுவனங்களாகப் பின்னர் வடிவமைத்த மூன்று சமயச் சிந்தனைப் பிரிவுகளின் ஊற்றாகவும் மூலமாகவும் இப்றாஹீம் விளங்கியுள்ளார்கள். (1977 : 219)

மத்திய கிழக்கின் உலகச் சமயங்கள் அனைத்தும் தமது முன்னோடிச் சமயத் தலைவராகவோ, தந்தையாகவோ இப்றாஹீம் நபியையே ஏற்றுள்ளன. நபிமூஸா, நபி ஈசா, நபி முஹம்மத் ஆகியோரின் நிறுவனங்களாகப் பின்னர் வடிவமைந்த மூன்று சமயச்’ சிந்தனைப் பிரிவுகளின் ஊற்றாகவும் மூலமாகவும் இப்றாஹீம் விளக்கியுள்ளார்கள். (1977 : 219).

மத்திய கிழக்கின் உலகச் சமயங்கள் அனைத்தும் தமது முன்னோடிச் சமயத் தலைவராகவோ, தந்தையாகவோ இப்றாஹீம் நபியையே ஏற்றுள்ளன. நபிமூஸா, நபி ஈசா, நபி முஹம்மத் ஆகியோரின் நிறுவனங்களாகப் பின்னர் வடிவமைத்த மூன்று சமயச் சிந்தனைப் பிரிவுகளின் ஊற்றாகவும் மூலமாகவும் இப்றாஹீம் விளக்கியுள்ளார்கள். (1977 : 219)

பழைய ஏற்பாடு (ழுடன வுநளவயஅநவெ ) இப்றாஹீமின் இறைநம்பிக்கையையும் குணப்பண்புகளையும் மிக உயர்வாகப் போற்றகின்றது. அநேக மக்களுக்கு உன்னைத் தந்தையாக்குவோம்’’ என ஆண்டவர் இப்றாஹீமுக்கு வழங்கிய வாக்குறுதியை ஆதியாகமத்திற் காணமுடியும். ஆதியாகமம் மேலும் இவ்வாறு உரைக்கின்றது.

ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி நாம் உன்னைப்
பெருங்குடியாய்ப் பெருகச் செய்து உன்னையும் ஆசீர்வதித்து
உன்பெயரையும் மேன்மைப்படுத்துவோம். நாம் எல்லாம் வல்ல
கடவுள்’ நீ நமக்கு முன் நடந்து உத்தமனாயிரு. நீ திரளான
மக்களுக்குத் தந்தையாவாய். அநேக மக்களுக்கு உன்னைத்
தந்தையாக்குவோம்.

கிறிஸ்தவர்களுக்கு மட்;டுமல்ல கடவுளில் நம்பிக்கை வைத்து கடவுளைத் தேடும் எல்லாச் சமூகத்தவருக்கும் ஏப்ரஹாம் (இப்றாஹீம்) தந்தையாவார் என கிறிஸ்த்தவ இறையியல்வாதிகள் கூறுகின்றனர். (ஆயசயை ஆயவாini ஊயசடழஇ 1992 : 13 ) புதிய ஏற்பாட்டின் (நேற வுநளவயஅநவெ) புனித மத்தேயுவில் காணப்படும் ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்’’ என ஆரம்பிக்கும் வம்சத் தொடர்ச்சியின்படி ஏப்ரஹாமை ஆன்மீக நிலையில் மட்டுமல்ல உண்மைத் தந்தையாகவே கொள்ள முடியும் என்றும் அவர்கள் கருதுகின்றனர் (1992 : 13)

நபி இறாஹீமைத் தூய விசுவாசி என்றும் உண்மையான சமயத்தைப் பின்பற்றியவர் என்றும் இஸ்லாம் கூறுகின்றது.

நிச்சயமாக மனிதர்களில் இப்றாகீமுக்கு மிக நெருங்கியவர்
எவரென்றால் அவரைப் பின்பற்றியோரும் இந்த நபியும்
இவரை விசுவாசம் கொண்டவர்களும் தான் (அத் 3: 67 , 68)
என்பது அல்குர் ஆனின் வாக்கு.

இப்றாஹீம் நபியின் மகன் இஸ்மாயிலின் வம்சத் தொடர்ச்சியென்றே முஹம்மது நபிகளை இஸ்லாமிய வரலாறு கூறுகிறது. மூன்று அறபு இனப் பிரிவுகளில் இஸ்மாயிலின் ஒரு பிரிவினராகும். முஹம்மது நபிகளும், இஸ்லாத்தின் வரலாறும், நீண்ட காலத்;துக்;கு முன்னர் இப்றாஹீம் நபி போதித்த சமயத்தைக் கடைப்பிடித்த அவரது மகன் இஸ்மாயின் வம்சத்துடன் தொடர்பு பட்டதாகும் (1979 : 115) நபி இஸ்மாயில் அவர்களைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாற கூறுகிறது.

நிச்சயமாக அவர் (இஸ்மாயில்) உண்மையான வாக்குறுதி
உடையவராகவும் (நம்முடைய) தூதராகவும் நபிகளாகவும்
இருந்தார். அவர் தன் குடும்பத்தினரை, தொழுகையைக்
கடைப்பிடித் தொழுகும்படியும், ஜகாத்துக் கொடுத்து
வரும்படியும் ஏவிக் கொண்டிருந்தார். அவர் தன்
இறைவனால் மிகவும் விரும்பப்பட்டவராகவும் இருந்தார். (அத்
19: 54, 55)

இப்றாஹீம் என்பது ஹிப்றூ மொழிப் பெயராகும். அவர் ஹிப்றூ பழங்குடியிற் பிறந்தவர். மெஸெபொட்டேமியாவின் “ஊர்’’ (ருச) நகரம் அவரது பிறப்பிடமாகும். அப்போது அங்கு செமித்திய சால்டியரின் (ஊhயடனநயளெ) ஆதிக்கம் நிலவியது. செமித்தியச் சால்டிய வழிபாட்டு முறைகளையும் ஒழுக்கத்தையும் அவர் தாக்கினார். அவர்களது நட்சத்திர, சூரிய மற்றும் சிலை வணக்கங்களை பகுத்தறிவுக்குப் பொருந்தாதவை என்றும் போலியானவை என்றும் வெளிப்படையாக அவர் வாதிட்டார். “ஒரு இறைவனை வணங்குமாறும் நேர்மையைக் கடைப்பிடிக்குமாறும்’’ அவர் போதித்தார்.


இப்றாஹீமின் ஒரிறைவாதப் போதனை ஒரு புதிய சிந்தனையின் அல்லது சமயப்பிரிவின் தொடக்கமாக அமைந்தது. ஏனெனில் சால்டியச் சூழலின் ஆதிக்கத்தினுள் வாழ்ந்த இப்றாஹீம் பல தெய்வவாதியாகவோ, “என்லில்’’ வழிபாட்டாளராகவோ, சூரியவழிபாட்டாளராவோ அல்லது சிலை வணக்கத்தவராகவோ இருந்திருக்க வேண்டும். மாறாக இப்றாஹீம் ஓரிறைவாதத்தைப் போதிப்பவராக இருந்தார். சோதாம் நாட்டு மன்னுடன் உரையாடும்போது தனது ஏகத்துவக் கோட்பாட்டை இப்றாஹீம் பின்வருமாறு வெளிப்படுத்தினார். “விண்ணையும் மண்ணையும் ஆளும் அதி உன்னத கடவுளுக்கு என் கையை உயர்த்தி’’ (ஆதியாகமம் 14:22) என அதைப் பழைய ஏற்பாடு கூறுகிறது. இதே தன்மையிலான நபி இப்றாஹீமின் ஏகத்துவக் கருத்தை நபிஇப்றாஹீமின் கூற்றாக அல் - குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது : “வானங்களையும் ப+மியையும் எவன் படைத்தானோ அ(ந்த ஒரு) வனின்பாலே நிச்சயமாக நான் முற்றிலும் நோக்குகின்றேன். நான் (அவனுக்கு எதனையும்) இணைவைப்போன் அன்று !’’ (அத் : 6 : 79)

இப்றாஹீம் நபிக்கு, ஒரு வயதாக இருக்கும் போது இறைவனுடன் தொடர்பு கொள்ளும் அருள் கிடைத்ததென்றும், சிலர் 3 அல்லது 48 வயதில் இவ்வருள் கிடைத்தென்றும் கூறுகின்றனர். மற்றொரு வரலாற்றுக் குறிப்பு 14 வயதில் மனிதனின் அக்கிரமங்களைக் கண்டிக்க ஆரம்பித்தார் என்றும் போலியான விக்ரக வணக்கத்திலிருந்து தனது தந்தையைத் தடுக்க முற்பட்டார் என்றும் கூறுகிறது (1992 1992 : 23). இப்றாஹீம் நபியின் ஓரிறைவாதத் தோற்றம் பற்றிய ஹெலனிய பிலோ (Phடைழ) வின் கருத்து இன்னொரு கோணத்தில் அமைந்துள்ளது. “ஏப்ரஹாம் சால்டிய மரபில் தோன்றியவர், வான சாஸ்திரத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட காலப்பிரிவு அது. பிரபஞ்சத்தைப் படைத்தவன் ஒருவனே என்ற கருத்தை இச்சூழல் அவருக்கும் வழங்கியிருக்க வேண்டும். இதனூடாகவே பிரபஞ்சத்தைப் படைத்தவன் ஒரு இறைவன் என்ற கருத்துக்கு அவர் வந்திருக்க வேண்டும்’.

இது எவ்வாறெனினும் நபி இப்றாஹீம் புதிய மார்க்கத்திலிருந்தார் என்பதும் அந்த யுகம் ஏற்றுக்கொள்ளவிருப்பாத ஒரு கோட்பாட்டின் வெற்றிக்காக அவர் போராடினார் என்பதும் தெளிவு. தனது தந்தையை நோக்கி இப்றாஹீம் கூறுவதாக அமைந்துள்ள அல்குர்ஆனின் பின்வரும் வாக்கியத்தை இங்கு கூறுவது பொருத்தமானது : “என் தந்தையே உங்களுக்குக் கிடைக்காத ஒரு ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது. எனவே என்னைப் பின் பற்றுவீராக நான் உங்களுக்கு நேர்வழியைக் காண்பிப்பேன்’’ (அத், 19 : 41). இதற்குத் தந்தையின் பதில் நான் கல்லால் அடிப்பேன் என்னைவிட்டும் பிரிந்து போய்விடு’’ என்பதாகவே இருந்தது. (அத், 9:41,42). சமய மாற்றம் மட்டுமன்றி அதனோடிணைந்து சமூக சீர்திருத்தச் சிந்தனைகளும் அவரது கருத்துக்களில் எதிரொலித்தன.

அன்றைய சமூக அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் எதிராக இப்றாஹீம் கிளர்ந்தார். மக்களைச் சூறையாடிய மன்னர்களுக்கு எதிராகப் போர்தொடுத்தார் (ஆதியாகமம் 14:12,13). மேய்ச்சல் நிலப் பகிர்வதில் நீதியை நிலை நாட்டினர். சிலைகளை உடைத்து ஏகத்துவத்தைப் போதித்ததுடன், நீதியான வாழ்க்கைக்குத் திரும்புமாறும் மக்களுக்கு அவர் அறைகூவல் விடுத்தார்.

இப்றாஹீம் நபியின் மார்க்கம் நேரான மார்க்கம் என குர்ஆன் கூறுகின்றது. இப்றாஹீம் கடைப்பித்த வழிமுறையிலேயே நபிகள் நாயகம் இருந்ததாகவும் அதுவே இறைவனின் உண்மையான வழிபாட்டுதலாகும் என்றும் அல்குர் ஆன் கூறுகின்றது :

(நபியே) கூறுவீராக : “நிச்சயமாக என் இறைவன் எனக்கு
நேரான வழியைக் காட்டிவிட்டான் அது முற்றிலும் சரியான
கோணலில்லாத தீன் (நெறி) ஆகும். இப்றாஹீம்
கடைப்பிடித்து வந்த வழி முறையுமாகும். மேலும் அவர்
இணைவைப்பவரில் ஒருவராகவும் இருக்கவில்லை.

பலிச் சடங்கு

மத்திய கிழக்கு நாடுகளில் “பலி’’ க்கு முக்கிய இடமிருந்தது. “பலியின்றி வழிபாடில்லை என்பதே அப்போதைய அவர்களது சமய சுலோகமாகும். பலியும் நரபலியும் உலகெங்கினும் காணப்பட்ட தொன்மைச் சமய வழிபாட்டம்சம் எனக் கூறலாம். “மிருகங்கள் பலிக்காகவே படைக்கப்பட்டுள்ளன. முழு உலகின் நன்மைக்காகவுமே, பலி ஏற்பாடு செய்யப்படுகின்றது’’ என மனுசாஸ்திரம் கூறுகிறது. யாகங்களில் எண்ணற்ற விலங்குகள் பலியிடப்பட்டன. நரபலிகளைப் பற்றிய பட்டியல் யஜுர் வேதத்தில் உள்ளது.

புனிதச் சடங்குகளில் ஆச்சரியமளிக்கும் விடயம் பலிக் காணிக்கைகளாகும். அண்மைக் கால அறிஞர்களின் கருத்துப்படி பலிச் சடங்குகள் (சுவைநள ழக ளுயஉசகைiஉந) பழங் கற்காலம் வரை (Pயடயநழடiவாiஉ யுபந) செல்கிறது. பைபிளின் பழைய ஏற்பாட்டில் பல்வேறு பட்ட பலிவகைகளையும் அவை செய்யப்படும் விதத்தையம் காணமுடியும். தகனப் பலி, பாவப்பலி, குற்ற நிவர்த்திப்பலி, பரிகாரப்பலி எனப் பல்வேறு பலி வகைகளை வேலியராகமம் (பழைய ஏற்பாடு) குறிப்பிடுகிறது. லேவியராகமத்தில் வரம் பின்வரும் கூற்றிலிருந்து இதனை விளக்க முடியும்.

ஆண்டவரின் கட்டளையை மீறி ஒரு பாவம் செய்யும்
போது……… அவன் தன் பாவத்திற்குப் பரிகாரமாக ஒரு
மறுவற்ற ஒரு இளங்காளையை ஆண்டவருக்கு ஒப்புக்
கொடுப்பாவான (எவ்வாறெனில்) சாட்சியக் கூடார வாயிலிலே
ஆண்டவர் திரு முன் அதைக் கொணர்ந்து அதன் தலையின்
மீது கையைவைத்து அதைக்கொன்று ஆண்டவருக்குப்
பலியிடுவான். (லேவியராகமம், 4:1 – 5)

இவ்வகைப் பலிகளின் மூலம் புனித பீடங்கள் இரத்தத்தினாலும் மிருகக் கொழுப்புக்களினாலும் நீராட்டப்பட்டன. தீட்டிலிருந்தும் அறியாமற் செய்த பாவங்களிலிருந்தும் சுத்திகரிக்கப்பட்ட இத்தகைய பிராயச்சித்த பலிகள் உதவுவதாக சமய ஆகமங்கள் உணர்த்தின. இந்தியச் சமய மரபிலும் நரபலிகள் சமய அங்கீகாரத்தைத் பெற்றிருந்தன. பேராசிரியர் கோசம்பியின் கருத்தை இங்கு நோக்கலாம்.

நரபலிகளைப் பற்றிய பட்டியல் யஜுர் வேதத்திற்
காணப்பட்டாலும் சதபதபிரமாணம் தோன்றிய காலத்திலேயே
நரபலிகள் பிரமாணங்களிலிருந்தும் வழக் கொழித்து விட்டன.
இருப்பினும் கோட்டை வாயில் போன்ற வலுவாக தளங்களைப்
பகைவர் வெல்லாதிருக்கவும், நதிவெள்ளங்கள் அணைகளை
அடித்துக் கொண்டு செல்வாமல் இருக்கவும் எப்போதாவது
நடத்தப்படும் நரபலிகள் அவசியமாகக் கருதப்பட்டன. அதன்
பொருட்டு பலியிடப்படும் மனிதனை அஸ்திவாரத்தில்
புதைத்து மேலே கட்டிடத்தை எழுப்புவார்கள். (கோசப்பி, 1983 : 181)

சமயங்களின் தோற்றத்திற்கும் இப்பலிகளுக்கும் தொடர்பிருந்தன. பலியிடுவதற்குச் சமயங்கள் நேராகவோ மறை முகமாகவோ அங்கீகரிக்கின்றன. பழங்கற்கால மனிதனும் சரி அதற்குப் பிந்திய நாகரிக யுகத்துக்குரிய மனிதனும் சரி பலிகளை நிறைவேற்றி வந்துள்ளான். மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே ஆவிகளை அல்லது கடவுள்களைச் சாந்திப்படுத்தவும், தனது எண்ணங்களை நிறைவேற்றவும், தெய்வங்களின் விரோதத்தை தணிவிக்கவும் மனிதன் பலிகளை வழங்கி வந்துள்ளான். பலிச் சடங்குகளில் பயம், குற்ற உணர்வு, தெய்வ ஆராதனை, வழிபாடு என எண்ணற்ற மனவெழுச்சிகள் அடங்கியிருந்தன. (து.ஊ.டுiஎiபௌவழnஇ 1989:120). ‘நான் உனக்குத் தருகிறேன் நீ எனக்கு வழங்கு’ வேறுவார்த்தைகளில் கூறுவதாயின் ஒரு “பேரம் பேசல்’’ அங்கு நிகழ்ந்தது. இக்கருத்து ஹிந்துமத சடங்கொன்றில் சுருக்கமாக இவ்வாறு இடம் பெற்றுள்ளது.”இதோ வெண்ணெய், எங்கே உனது வெகுமதி;’’ (1989”120). சடங்குகளிலும் வழிபாடுகளிலும் நன்கொடைகளிலும் கொடுக்கல்வாங்கல் முறையொன்று காணப்படுவதாகவும் கடவுளின் நல்லெண்ணத்தையும், பாதுகாப்பையும் பகரமாக மனிதன் விழைகிறான் என்றும் மானிடவியலாளர் (நு.டீ.வுலடழச) கூறுவர்.

நரகபலி

மெஸெபொட்டேமிய, செமித்திய வழிபாடுகளில் பலியும் நரபலியும் மட்டுமன்றி பகுத்தறிவுக்குப் பொருந்தாத வேறு குரூர வழிபாடுகளும் இடம் பெற்றிருந்தன. இப்றாஹீம் இப்பிரதேசங்களில் செல்வாக்குப் பெற்றிருந்த நரபலியையும் குரூரமான சமயச் சடங்குகளையும் கடுமையாக எதிர்த்தார்.

பலஸ்தீனத்திலும் நரபலியிடும் வழக்கம் ஆழமாக வேரூன்றியிருந்தது. முதலில் பிறந்தவை அனைத்துமே பலிக்குரியதாகக் கருதப்பட்டன. தலைப்பிள்ளையின் இரத்தத்தினால் பலி பீடங்;கள் நீராட்டப்பட்டன’ (1935 : 159)

உன் முதற்பலனில் பத்தில் ஒரு பாகத்தை காணிக்கையாகச்
செலுத்தத் தாமதிக்க வேண்டாம் மேலும் உன் புதல்வரில்
தலைச்சன் பிள்ளையை நமக்குக் கொடுப்பாயாக (யாத்ராகமம்,
23 : 28)
எனக் கானான் தேசத்து நரபலி பற்றி பைபிளின் பழைய ஏற்பாடு கூறுகிறது. பலிபீடங்களில் மட்டுமன்றி புதிய கட்டிடங்களின் அத்திவாரங்களுக்கும் உயிர்ப்பலிகள் தாராளமாகக் காணிக்கையாக்கப்பட்டன. “ஆண், பெண், குழந்தை, மிருகம் ஏதாவதொன்றின் மரணத்தின் மீதே ஒவ்வொரு வீடும் (பலஸ்தீனத்தில்) கட்டப்பட்டது (யு.ளு.ஊழழமஇ 1908 : 40). ஹிந்து மரபிலும் இத்தகைய வழக்கங்;;;;;;;;;களிருந்தன. கோட்டைகள் கட்டும் போது அவற்றின் அத்திவாரத்தில் நரபலியிடப்பட்டது. வரட்சி மிகுந்த காலத்தில் பாலை மண்ணில் மனித இரத்தத்தைச் சிந்தச் செய்து மழை பெய்விக்கும் முயற்சிகளும் நடந்தன.

ஆண் தலைப் பிள்ளைகளை பலி இடுவது ஒரு தொன்மையான வழக்கமாகும். ஆண் (மகன்) இரத்தப் பாவவிமோசனம் இரத்தக் கடனை தீர்ப்பதற்காகச் செய்யப்படும் இரத்தக்காணிக்கைச் சடங்காகும். இதன் மைய அம்சம் ஆண் தலைப் பிள்ளையைப் பலிகொடுப்பதாகும். கிரமமான முறையில் ஆண்கள் எண்ணற்ற அளவில் இவ்வாறு கொலை செய்யப்பட்டனர். இரத்தப்பலி காட்டு வாசியுகத்தின் அடையாளமாகும். விலங்குத் தன்மை (ளுயஎநபநசல) யுகத்திற்கு தன்னின உண்ணுந் தன்மை (ஊயnniடியடளைஅ) அடையாளமாகும். (பார்க்க, நுஎநடலn – சுநநனஇ 1992 : 398 – 9) இக் கொலைகளுக்கும் உறவுமுறை அமைப்பி (முiளொip ளுலளவநஅ ) ற்கும் உள்ள தொடர்பை இல்வின் றீட் விளக்கியுள்ளார். சுருக்கமாக இதனைக் கூறுவதாயின் சகோதரியின் மகனும் மனைவியின் மகனுமே இரத்தப்பாவவிமோசனத்துக்குள்ளாக்கப்பட்டனர். கணவனுக்கு மனைவியாயினும் சகோதரனுக்குச் சகோதரியாயினும் “மகன்’’ பலியில் துன்பத்திற்குள்ளாகுவது தாய்தான். (1992 : 399)

பிந்திய கட்டத்தில் இரத்தப் பாவவிமோசனத்திற்கு முதற்பிள்ளைக்குப் பதிலீடாக வீட்டுமிருகத்தைப் பலியிடும் வழக்கத்தில் திருப்தி காணப்பட்டது. ஜோன் லயார்ட் (துழாn டுயலயசன) தனத நூலில் (ளுவழநெ ஆநn ழக ஆடநமரமய) கூறியுள்ள மனித இரத்தப்பலிகளுக்குப் பதிலீடாகக் கொம்பன் பன்றிகளைத் தாம் பலியிடுவதாக மலெக்குலாவினர் கூறுவதை இங்கு நோக்குவது பொருத்தமாகும் (பார்க்க 1992 : 400) போர்க் கடவுளுக்கும், உணவுவிருத்திக்கும், இயற்கையின் சீற்றத்திற்குமாக எண்ணற்ற மகன்களும் மனிதர்களும் இவ்வாறு பலியாக்கப்பட்டுள்ளன. எனினும் பழைய உலகின் இந்த இரத்தப் பாவவிமோசனம் வெற்றி கொள்ளப்பட்டது. நாகரிகத்தின் அரும்புதலில் தனியார் சொத்துடமையின் தோற்றம் இதற்கு முடிவைக் கொண்டு வந்தது. (1992 : 400)

செமித்திய மரபிலும் பலஸ்தீனத்திலும் வேரூன்றியிருந்த நரபலிச் சடங்குகளை இப்றாஹீம் நபி வன்மையாக எதிர்த்தார். ஒரு நாள் இப்றாஹீம் நபி தனது மகளை தானே அறுத்துப் பலியிடுவதாகக் கனவு கண்டார். இதனை இறை கட்டளையெனக் கொண்டு தனது மகனைத் அறுத்துப் பலியிட ஆயத்தமானார். இச் சம்பவத்தை அல் குர் ஆனும் பழைய ஏற்பாடும் கூறுகின்றன. (பார்க்க : குறிப்பு : 08) குர் ஆனில் இச்சம்பவம் பின்வருமாறு கூறப்படுகின்றன. அச்சமயம் நாம் அவரையழைத்துக் கூறினோம் “இப்றாஹீம்! உண்மையாகவே உம்முடைய கனவை மெய்யாக்கிவிட்டீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி கொடுப்போம்……… ஆகவே (அவருக்குப் பதிலாக ஓர் ஆட்டுக் கடாவைப் பலியிடச் செய்து) மகத்தான தியாகத்தின் மூலம் அவரை விடுத்தோம்’’ (அத் 104: 107) பைபிளில் இது பின்வருமாறு அமைந்துள்ளது. “அடுக்கியிருந்த விறகுக் கட்டைகளின் மேல் அவனைக் (ஈசாக்கை) கிடத்தி தம் கையை நீட்டி வாளை உருவிப் பலியிட முயற்சித்தார். அப்பொழுது ஆண்டவருடைய தூதர் வானத்திலிருந்து கூப்பிட்ட உன் பிள்ளையின் மேல் கையோங்கி அவனுக்கு ஒன்றும் செய்யாதே என்று அசரீரி கேட்டது. அப்போது ஆபிரஹாம் திரும்பிப் பார்க்கையில் முட்செடியில் கொம்பு மாட்டிக் கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கடாவைக் கண்டார். அதைப்பிடித்துத் தனது மகனுக்குப் பதிலாய் அதைத் தகனப்பலி கொடுத்தார். (ஆதியாகம், 22: 4 – 14)

மகனுக்குப் பகரமாக செம்மறியாட்டைப் பலியிடுவதாக அந்நிகழ்ச்சி முடிவுற்றது. உண்மையில் கானான் தேசத்திலும் அறபு தேசத்திலும் உலகின் வேறு பாகங்களிலும் நிலவி வந்த நரபலி வழிபாட்டை சமயத்தினாலே முறியடித்த நிகழ்வாக அது முடிவுற்றது. சுமேரிய – பபிலோனிய நாகரிகங்களில் மனிதத் தலைக்குப் பகரமாக ஆட்டின் தலையைப் பலியிடும் வழக்கம் மிக நீண்ட காலத்துக்கு முன்னரே நடைமுறையிலிருந்து வந்தது. தொன்மைச் சுமோரிய நாட்டார் கவிதை ஒன்று பின்வருமாறு கூறுகிறது : “செம்மறியாடு மனிதனுக்கான பதிலீடு ஆகும். மனிதத் தலைக்குச் சரியான மாற்றீடு செம்மறியாட்டுத் தலையாகும்’’ (1935 : 165) (பார்க்க, குறிப்பு : 09)

இப்றாஹீம் நபியின் ஒரிறைவாதமும் மனிதாபிமானமும் சீர்திருத்தக் கருத்துக்களும் ஹனீப்வாதிகளால் அறபு மண்ணில் மீண்டும் நினைவு கூரப்பட்டன. அல் குர் இப்றாஹீமை “ஹனீப்’’ என்றும் “முஸ்லிம்’’ என்றும் கூறுகிறது. அவர் ய+தரோ அல்லது கிறிஸ்தவரோ அல்ல என்றும் கூறுகிறது. “இப்றாஹீமோ ய+தராயிருக்கவில்லை. இன்னும் கிறிஸ்த்தவராகவும் (இருக்க இல்லை, ஆனால் அவர் ஹனுPபாகவும் …….. முஸ்லிமாகவம் இருந்தார். (அத் 3:67 (1992).

ஹறம்

இஸ்லாத்தின் தோற்றத்தோடு “ஹறம்’’ நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. தொன்மை அறேபியாவில் “ஹறம்’’ ஒரு முக்கிய சமய நிறுவனமாக இருந்துள்ளது. வட, தென் அறேபியா அனைத்திற்கும் ஹறம்களில் புகழ்பெற்றதும் தொன்மைமிக்கதும் “கஃபா’’(நாற்சதுரப் புனித ஆலயம்) ஆகும். குர்ஆன் கஃபவைப் புராதன ஆலயம் அல்பைத் அல் அத்தீக், (குர்: 22 : 29) எனக் கூறுகிறது. (1950 : 516)

கஃபா எப்போது யாரால் முதலில் கட்டப்பட்டது என்பது பற்றி தெளிவான கருத்துக்கள் இல்லை. ஆனால் அதை மீளக்கட்டியவர்களில் இப்றாஹீமையும் அவர் மகன் இஸ்மாயிலையும் முதன்மையானவர்களாக இஸ்லாமிய வரலாறு கூறுகிறது. இப்றஹீம் நபிகளுக்கு முன்னரே கஃபா இருந்துள்ளது (1950 : 516) இப் புதிய ஆலயத்தை ஆதம் நபிதான் கட்டினார் என சில குர்ஆன் வியாக்கியானிகள் கருதுகின்றனர். (பார்க்க 1984 : 158, 9) எவ்வாறாயினும் அது ஒரு பாதுகாக்கப்பட்ட புனிதமான இடமாக இஸ்லாத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தே கணிக்கப்பட்டு வந்துள்ளது. இதுவே அவதானிப்பிற்குரியதாகும். குர்ஆன் வியாக்கியானி அல் கும்மி அப+ அல்ஹஸன் தரும் பின்வரும் பதிலும் இக் கருத்துப் பிரதிபலிப்பதைக் காணலாம். அவர்களை (இஸ்மாயிலையும் அவர் தாயையும்) எனது புனிதர் தலத் (ஹறம்) திற்கு அனுப்புங்கள் அது ப+மியில் மக்காவில் உள்ள பாதுகாப்பான இடம் (என இறைவன் கூறினான்) (ஆ.ஆ.யுலழரடி : 1984 : 158இ 9)

இஸ்லாத்திற்கு முன்னதமாகவே புனிதகுடும்பத்தின் (ர்ழடல குயஅடைல) நிர்வாக அமைப்பாகவும் சமய ஆணைகளுக்குரிய மையமாகவும் “ஹறம்’ விளங்கியுள்ளது. மிகத் தொன்மைமிக்க வரலாற்றையுடைய வணக்கஸ்தலமான கஃபாவை அல்குர் ஆன்’’ “அல்பைத் அல்ஹறம்’’ (5.97) அல்லது “அல்முஹர்றம்’’ (14:37) எனக் குறிப்பிடுகிறது. மீறப்பட முடியாத புனிதத் தன்மைமிக்க இடம் என்பது “ஹறம்’’ என்பதற்குரிய பொருளாகும். (பார்க்க, 1950 : 516)

“ஹறம்’’ என்பதைத் தற்காலத்துக்குரிய பொருளில் கூறுவதாயின் அது சமய அரசியல் மையமாகும். கருத்து முரண்பாடுகள் கொண்டிருந்தாலும் தொன்மை அறேபியர் “ஹறம்’’ களை மதித்து நடந்துள்ளனர். தென் அறேபியாவிலும் ஹறம்கள் காணப்பட்டன. அவற்றின் தொடர்ச்சியை இன்றும் அங்கு காணலாம் (ளுநசதநயவெ) பொதுவாக ஒவ்வொரு பழங்குடி அலகும் யுத்தமாயினும் யுத்தநிறுத்தமாயினும் ஐக்கியக் கூட்டமைப்புக்களை உருவாக்குவதாயினும் தமக்கிடையே நடைமுறையிலிருந்த வழக்காற்றுச் சட்டங்களையே கடுமையாக அனுசரித்தன (1981 : 42) குருதிப்பண விவகாரம் போன்ற இன்னும் சில பிரச்சினைகளுக்கு தமது சொந்த சட்ட அதிகாரங்களுக்குக அப்பால் இயற்கை கடந்த ஒன்றின் தீர்ப்புக்கள் சுமத்தப்படுவதை பழங்குடி மனிதன் விரும்பி நின்றான். இத்தகைய சந்தர்ப்பங்களில் தெய்வீக அதிகாரம் பெற்ற சில புனித குடும்பங்களையோ அல்லது அவற்றுக்குச் சொந்தமான தீர்க்கதரிசிகளையோ, புனிதர்களையோ அவன் நாடினான்.

“ஹறம்’’ புனிதக் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டிருந்த ஒரு நிறுவனமாகும். தொன்மை அறேபியாவில் அறியப்பட்டிருந்த ஹறம் தென் அறேபியாவின் “ஹவ்தா’’ (ர்யறவாயா) வுக்குச் சமமானதென்று சார்ஜண்ட் குறிப்பிடுகிறார். பெரும்பாலும் புனித குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு குறி;த்த நிலப்பகுதியை “ஹறம்’’ என வரையறுக்கப்பதிலிருந்து இது உருவாகிறது.

ஹறம் தெய்வ ஆணைகளுக்கு அதிகாரம் பெற்ற ஒரு பிரதேசத்தைக் கொண்ட ஒரு பிரத்தியேக நிறுவனமாகும். இதன் பரிபாலகரான “புனிதர்’’ கடவுள் கட்டளைகளுக்கு முகவராக இயங்குகிறார். அதை நடைமுறைப்படுத்துகிறார். முக்கியமாக கடவுளின் பெயரால் அப்பிரதேசத்தின் பாதுகாப்பு அல்லது சமாதானம் நிலை நிறுத்தப்படுகிறது. கொலைகளிலிருந்தும் பாவச் செயல்களிலிருந்தும் தடுக்கப்பட்ட புனித பிரதேசம் என்பது இதன் பொருள். இதைத் தொடர்ந்து இங்கு வணிகர்களும் குடியானவர்களும் குடியமர்த்துகின்றனர். பெரும்பாலும், ஒரு சந்தையாக இது பரிமிக்கும், “ஹவ்தா’’ வும் இதற்குச் சமமானதே’ (ளுநசதநயவெ) ஹவ்தாவின் ஸ்தாபகர் மரணித்தால் அவரே அந்த ஹவ்த்தாவின் எஜமானனாக என்றைக்கும் கொள்ளப்படுவார். எனினும் அவரின் இடம் அவரது வம்சத்திலிருந்து ஒருவரைத் தேர்ந்ததெடுப்பதன் மூலம் நிரப்பப்படும். “இதற்குரிய அவரது பதவழப் பெயர்’’ “மன்ஸிப்’’ அல்லது “மன்ஸ{ப்” ஆகும். இதற்கான செந்நெறி அறபுப்பதம் “மன்ஸிப்’’ ஆகும். இது “மறாத்’’ (ஆயசயனன) என்ற சொல்லுக்குச் சமம். மறாத் என்றால் சுல்தான், தலைமைக்காரன், பழங்குடிச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர் என்ற பொருள்களைக் குறிக்கும்’ (1981 : 111 – 144). நபிகளின் குடும்பத்தின் மூதாதையரான குஸை இத்தகைய முதல் மன்ஸப் ஆகக் கருதப்படுகிறார்.

பொதுவாக மக்காவின் “ஹறம்’’ தென் அறேபியாவின் “ஹவ்தா’’ இரண்டிற்குமே பணிகளிலும் வழிபாட்டு முறைகளிலும் சில ஒருமைப் பாடுகள் இருந்துள்ளன. பழங்குடிகளுக்கிடையில் ஏற்படும் சச்கரவுகளுக்கு சமாதானத் தீர்வுகளைத் தருவதும், கொலைக்குரிய பிரதியீடுகளை நிர்ணயிப்பதும், புனித தலத்தை வலம் வந்து வழிபடுவதும் அவற்றுள் அடங்கும். கஃபாவுக்கு லிவா என்ற கொடி இருந்தது போல் ஹவ்த்தாக்களுக்கும் கொடிகள் இருந்தன.

“ஹறம்’’ உயர்குடியினரின் ஆதிக்கத்திலிருந்த புனித நிறுவனமாகும். “புனிதக்குடும்பம்’’ இவ்வுயர் சார்ந்தவர்களாகும். நபிகள் நாயகம் பிறந்த குடும்பத்தினர் நபிகள் பிறக்கு முன்னரே மக்காவின் புகழ்பெற்ற ஹறத்திற்கு (கஃபா) ப் பாதுகாவலர்களாகவும் தலைவர்களாகவும் விளங்கி வந்துள்ளனர். அதன் மூலம் புனித குடும்பம் என்ற தகுதியை அவர்கள் இயல்பாகவே பெற்றிருந்தனர். குறைஷியரினாலும் முழு அறேபியக் கோத்திரங்களினாலும் கண்ணியப்படுத்தப்பட்ட புனித தலமாக ஹறம் பிரசித்தி பெற்றிருந்தது.

நபிகள் தமது சமயப் பணிகளை மக்காவில் ஆரம்பித்த தொடக்க காலப்பிரிவில் “ஹறத்தை’’ தமது ஆதிக்கத்திற்குள் கொண்டு வரமுடியாதவர்களாகவே இருந்தனர். எனினும் மதீனாவில் மற்றொரு ஹறத்தை உருவாக்கி அதன் மூலம் தமது சமயப் பணிகளிலும் மதீனக் கோத்திரங்களுக்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் வெற்றி கண்டனர். “ஒவ்வொரு தீர்க்கதரிசிக்கும் ஒரு ஹறம் என்றும் நபிகள் குறிப்பிட்டுள்ளனர். (பார்க்க, 1981:50).

எனினும் மக்காவின் புனித ஹறத்தைப் பற்றிய ஆவல் நபிகளுக்கு எப்போதுமிருந்தது. படையுடன் சென்று நபிகள் மக்கா ஹறத்தைத் தம் வசமாக்கியதை அவர்களின் இலட்சிய நிறைவேற்றங்களில் ஒன்றாக இஸ்லாமிய வரலாறு கூறுகின்றது. புனித பிரதேசத்துள் நபிகளி;ன் பிரவேசம் நபிகளின் சமய அரசியல் வெற்றியை உறுதி செய்தது. இப்போது நபிகள் இரு ஹறம்களின் சொந்தக்காரரானார்கள். அதாவது பழங்குடிகளின் சமூக அரசியல் மைய நிறுவனங்கள் இரண்டின் கட்டுப்பாடு இப்போது நபிகளின் இரு ஹறம்களின் சொந்தக்காரரானார்கள். அதாவது பழங்குடிகளின் சமூக அரசியல் மைய நிறுவனங்கள் இரண்டின் கட்டுப்பாடு இப்போது நபிகளின் கைகளில் இருந்தது.

மானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்

அத்தியாயம் 9

மாலா

அறேபியக் குல அமைப்பில் தலைவனைத் தவிர ஒவ்வொரு குலத்திற்கும் ஒவ்வொரு மஜ்லிஸ் அல்லது சபை இருந்தது. இம் மஜ்லிஸ்களின் ஒருங்கிணைப்பாக மாலா என்ற மேல்சபை உருவாகியது. மாலா முறை, நபிகள் பிறப்பதற்கு முன்னரே நடைமுறையிலிருந்த ஒரு அமைப்பாகும். நூஹ்நபி மற்றும் ஹ{ஐப் நபி காலத்திலும் கூட மாலா அமைப்புக் காணப்பட்டுள்ளது. அவர்கள் தம் காலத்துத் தலைவர்களுடனும் சபைகளுடனும் பேசிவந்துள்ளார்கள் (பார்க்க, 1984 : 19, 20) இவ்வமைப்பு பொதுவாக நகர்ப்புறங்களில் காணப்பட்டது. வெளியாரின் தாக்குதல்களிலிருந்து தமது நகரங்களைப் பாதுகாக்க மாலாக்கள் ஆரம்பத்தில் செயற்பட்டுள்ளன. இஸ்லாத்திற்;கு முன்னத் மக்காவில் இது செயல்பட்டது (1984 : 19. 20).


மக்காவை மையமாகக் கொண்டியங்கிய மாலாவை மக்காவின் அரசாங்க உறுப்பெனக் கருதலாம். மாலாவின் தீர்ப்புக்களைக் குலங்கள் அங்கீகரித்தன. ஒவ்வொரு அங்கத்தவர்களும் அல்லது பிரஜைகளும் மாலாவின் தீர்மானங்களுக்கு மதிப்பளித்தனர். எனினும் அங்கத்தவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இச்சபைக்கு இருக்கவில்லை. அங்கத்தவர்கள் சுதந்திரமாக இயங்கினர். அங்கத்தவர்களிடையே உயர்வு தாழ்வு காட்டப்படவில்லை. மக்காவின் மாலா எதென்ஸ் நகரத்தின் என்லேஷியா (நுமடநளயை) என்ற மக்கட் சபையைவிட அதிகளவு ஜனநாயகப் பண்புகளைக் கொண்டதென்பது பேராசிரியர் வொட் அவர்களின் கருத்து. (1979 : 04)

என்லேஷியாவில் பேச்சாற்றலுக்கே முக்கியத்துவமளிக்கப்பட்டது. இதனால் நாவென்னம் உள்ளவர்கள் சபையின் மதிப்பை இலகுவில் பெற்றனர். மேலும் மக்கள் சபையில் பேசுவதற்கு அங்கத்தவர்கள் உரிய தகைமைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. சொத்துடைமையோ, விவாகமோ ப+ர்த்தி செய்யப்பட வேண்டிய நிபந்தனைகளாவிருந்தன. மாலாவின் உயர்வைக் காட்டும் பேராசிரியர் வொட்டின் கீழ்வரும் கருத்தையும் நோக்கலாம்.

எத்தேனியரின் எக்லேஷியாவை வட மக்காவின் மாலா கூடிய
விவேகமுள்ளதாகவும் பொறுப்பு வாய்ந்ததாகவும் இருந்தது.
மாலாவின் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வெறும்
பேச்சாற்றலினாலன்றி மனிதனின் உறுதியான திறமைகளின் பேரில்
எடுக்கப்பட்டன. (1979 : 09)

இலக்கியம்

அறேபியாவில் இஸ்லாத்திற்கு முந்திய இலக்கியம் பெரும்பாலும் கவிதையைத்தனித்துவமாகக் கொண்டது. நாடகம், காவியம் என்பன கவிதையைத்தனித்துவமாகக் கொண்டது. நாடகம், காவியம் என்பன அவர்களிடத்தில் இருக்கவில்லை. அவர்களின் கவிதைகள் பாடல்கவிதை (டுலசiஉயட Pழநவசல) வடிவில் அமைந்தவை. இப்பாடல்கவிதைகள் காவியங்களுக்குரிய நாடகங்களுக்கரிய சில கூறுகளைப் பிரதிபலித்தன என்பர். தொன்மைக்காலத்தில் நாடங்களில் வளர்ச்சிக்கும் புராணவியலுக்கும் நெருங்கிய சம்பந்தமிருந்;துள்ளன. அறேபிய மரபில் சிக்கல்மிகுந்த புராணவியல் இருக்கவில்லை. அறேபியரின், கடின வாழ்க்கை முறையும் பாலைவனச்சூழலும் நாடகம், காவியம் போன்ற கலைகனின் வளர்ச்சிக்கு சாதகமானதாக அமையவில்லை.

அறேபியரின் மனப்பாங்கு மிகக்கூரிய தினநபர் தன்மை கொண்டது. இதனால் தனிநபர் மனோநிலைகளைக் கூறக்கூடிய சிறுபாடல்வகைகளில் அவர்கள் அதிக நாட்டம் செலுத்தினர். இவ்வகையிலான சிந்துகளும் கஸீதாக்களும் அவனுக்குக் கைவந்த கலைகளாகின (யுனழnளைஇ 1990 : 14) இவை செபிப்புல வாய்ப்பாட்;டுக்கவிதைகள், இவற்றுக்கு எழுத்து வடிவம் இல்லை. பரம்பரைபரம்பரையாக இக்கவிதைகள் வாய்மாறிச் சென்றன. இப்பாடல் கவிதைகளுக்குக் குரல் உயிர் மூச்சாகும். இவை பேச்சாகவோ அல்லது பேச்சுநிலை கடந்ததாகவோ ஆனால் குரலுக்கும் மொழிக்குமிடையிலான செழுமையையும் சிக்கலும் நிறைந்த தொடர்பின் பிறப்பிடமாகவோ இருந்தன என்பர் எடொனிஸ் (1990 : 14) அறபுமக்களின் வழக்காறுகள், மரபுகள், வீரப்பிரதாபங்கள் துயரங்கள், தோல்விகள் முதலியவற்றை இக்கவிதைகள் வெளிப்படுத்தின.

வாய்வழியாகக் கவிதையைக் கேட்பதையே முந்தைய அறேபியர் தகுந்த வடிவமெனக்கருதினர். அறபு மொழியில் பாடல் என்பது குரலையே வேர்ச் சொல்லாகக்கொண்டிருந்தது. வாய்வழியாய்க் கவிதை இசைத்தலை தனித்துவனமான கலையென அறேபியர் கருதினர்.

வருடாந்த சந்தைகள் கூடும்போது வர்த்தக நடவடிக்கையோடு கவிதை வெளியீடுகளும் வேறு பொழுதுபோக்குகளும் இடம்பெற்றன. மக்காவுக்கு அருகே இருந்த “உக்காஸ்’’ இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு பெயர்பெற்று விளங்கியது. கவிஞர்கள் கவிதைகளை இங்கு வெளியிட்டனர். பேச்சாhளர் தமது மொழி அலங்கார வல்லமையைக்காட்டினர். வருவதுரைப்போரும். குறிசொல்வோரும் நடக்க இருப்பன பற்றி எடுத்துரைத்தனர் (பார்க்க 1979 : 165).

வீழ்ச்சி

பழங்குடியினரிடம் காணப்பட்ட பல்வேறு சமூக மரபுகளிலும் வழக்காறுகளிலும் உயர்ந்த பண்பாட்டாம்சங்களுக்கும் ஒழுக்கங்களுக்கும் இடமிருந்ததை மோர்கன், எங்கெல்ஸ் போன்றோரின் எழுத்துக்கள் அழுத்தமாகத் தெரிவிக்கின்றன. குல அங்கத்தவர் பெற்றிருந்த சுதந்திரம், ஜனநாயக மரபுகள், அதிகாரம் ஓரிடத்தில் குவிக்கப்படாத தலைமைத்துவம், இரத்த பந்தத்திற்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம், குல ஐக்கியம், சகோதரத்துவம் என்பன இவற்றுள் எடுத்துக் காட்டக்கூடிய அம்சங்களாகும்.

அரசு தோன்றுவதற்கு முன்னதாக நாகரிக யுகத்தின் தொடக்கத்திலிருந்த நியாயமானதும் நயமானதுமான பண்புகள் கொண்ட, எளிமையும் அற்புதமான அமைப்பென எங்கெல்ஸ் இதனைப் புகழ்ந்தரைத்தார். எனினும் எளிமையையும் அற்புதமுமான இவ்வமைப்பு தொடர்ந்தியங்க முடியாத நிலை உருவாகியது. அரசர்கள் அற்ற, போர் வீரர்கள் அற்ற இச்சமூக அமைப்பு அதன் தொன்மை மிக்க ஒழுங்கமைப்பினை இழக்கவேண்டியிருந்தது.

எளிமையும், குறைந்த தேவைகளும், பொதுச் சொத்துக்கள் என்ற உணர்வும், பொருட்களைப் பகிர்ந்தளிக்;கும் பரோபகாரமும், தாராளத் தன்மையும் மாற்றமடைந்தன. இதனையே “பண்டைக்காலப் பழங்குடிச் சமுதாயத்தின் ஒழுக்க மேன்மைகள் வீழ்ச்சியடைந்தன’ என்ற எங்கெல்ஸின் வார்த்தைகள் எடுத்துக் கூறின. மீண்டும் எங்கெல்ஸ் வார்த்தைகளில் கூறுவதாயின் உண்மையில் “அந்த சமுதாயம் அழிய விதிக்கப்பட்டிருந்தது’. அவர் இதனை இவ்வாறு கூறினார்.

இந்தப் பழங்குடி அழிவதற்கு விதிக்கப்பட்டிருந்தது என்பதை
நாம் மறக்கக்கூடாது. பழங்குடி என்பதற்கு மேலாக அது
வளரவில்லை. நிகழ்ந்து கொண்டிருந்த குலங்களுக்
கிடையிலான ஒருங்கிணைப்புக்கள் (ஊழகெநசயஉல) ஏற்கனவே இதன் வீழ்ச்சியின் ஆரம்பத்தை அடையாளங்காட்டின (1972 : 97)


தொன்மைச் சமயமும்
ஹனீப் வாதமும்

விக்ரகவழிபாடுகள்

நபிகள் நாயகத்திற்கு முந்திய அறேபியாவில் “கடவுட் சமயம்’’ இருக்கவில்லை. நாடோடி அறபிகளிடம் வழிபாட்டுச் செயற்பாடுகள் குறைந்தளவிலேயே காணப்பட்டன. மரங்கள், கற்கள், புனிதப் பொருட்கள், கோள்கள், நட்சத்திரங்கள் எனப் பல்வேறு இயற்கைப் பொருட்களில் தெய்வாம்சமோ “ஆவியோ’’ இருப்பதாகக் கருதி அவற்றை வழிபட்டனர். எனினும் அவர்கள் வழிபாட்டு அக்கறை குன்றியவர்களாகவும் இயல்பில் ஆன்மீகப் பக்குவமற்றவர்களாகவுமே வாழ்ந்தனர்.

ஓரிடத்தில் தரித்து வாழ்ந்த அறபிகளிடம் காணப்பட்ட வணக்க முறைகள் பதவிகளின் சமயத்தைப் பார்க்க உயர்வான சமய வடிவங்களாக விளங்கின. எனினும்பொதுவாகப் பதவிகளினதும் ஏனைய பழங்குடிகளினதும் வணக்க வழிபாடுகளில் ஒருமைப்பாடும் ஒழுங்கும் இருக்கவில்லை. குல வேறுபாடுகளினாலும் வாழ்க்கைமுறை வேறுபாடுகளினாலும் மூதாதையர் மரபுகளினாலும் வௌ;வேறு வழிபாட்டு முறைகளாகவும் சடங்குகளாகவும் அவை விளங்கின. இதனால் அவர்களது நம்பிக்கைகளும், தெய்வாம்சப் பொருட்களும், தெய்வீக ஆற்றல் பற்றிய கருத்துக்களும் பெரிதும் சிதறிய வகையில் காணப்பட்டமை இயல்பென்றே கூறவேண்டும்.

வளர்ச்சியடைந்த கடவுட் சமயத்திற் காணப்படும் சீரான வணக்க முறைகள் இவர்களின் சமயங்களில் காணப்படவில்லை. பல்வேறு பழம் நம்பிக்கைகளையும், தொன்மை மரபுகளையும் கொண்ட ஒருமைப் பாடற்றவற்றில் தொகுதிகளே அவர்களின் சமயமாகும். தமது நம்பிக்கைக்குரிய வழிபாட்டு பொருட்களை அவர்கள் வணங்கினர் என்பதைவிட அவர்களது வணக்க முறைகள் பேய்களைச் சாந்தி செய்வதற்குச் சமமான இருந்தன. (டீநசவசயஅ வுhழஅயளஇ 1937 (1) : 15).

சுமேரிய நாகரித்திலும் கடவுளுக்குப் பதிலாக மனிதன் பௌதிகப் பொருட்களின் ஆவிக்கு பயந்து வழிபாடுகள் செய்வதையே பெரிதும் காணமுடிகிறது. (ளுயலஉநஇ யு.ர்.1899.234) நீரிலோ, வில் அம்புகளிலோ, இடிமின்னலோ இருப்பதாக அவன் கற்பித்த ஆவிகள் அவனை அச்சத்திற்குள்ளாக்கின. இவைகள் அவன் வணங்கினான் என்பதைவிட பேய்களுக்குப் பயப்படுவது போல இவைகளுக்கு அவன் பயந்தான் என்பதே பொருந்தும்.

அறேபியரிடையே விக்ரக வணக்கமும் கல்வழிபாடும் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன. ஒவ்வொரு குலமும் அவற்றிற்குச் சொந்தமான தேவதைகளையும் தெய்வங்களையும் விக்ரகவடிவில் பெற்றிருந்தன. விக்ரகங்களை வணங்கியதைப்போல உருவம் செதுக்கப்படாத கற்களையும் அவர்கள் வணங்கினார். அவிந்து போன எரிமலைப் பாறைகளின் துண்டுகளை வணக்கப் பொருட்களாக அவர்கள் கருத்தியிருக்க வேண்டும். என்ற விளக்கம் இதற்கு உண்டு. மேலும் மரங்களையும் தமது குலத்தினுள் இறந்த பெரியார்களையும் அவர்கள் வழிபட்டனர். சூரியன், நட்சத்திரங்கள் முதலிய விண்பொருட்களையும் அவர்கள் வணங்கினர்.

ஆன்மா

தொன்மை அறேபியன் ஆன்மாவை சூட்சுமமான அல்லது காற்றுப் போன்ற பதார்த்தமாகக் கருதினான். இறந்தவர்களிடமிருந்து மூச்சு நின்றுவிடும் என்ற அனுபவத்திலிருந்து இந்த முடிவுக்கு அவன் வந்தான். அதாவது ஆன்மாவை அவன் மூச்சுடன் இனங்கண்டான். இயற்கை மரணத்தின் போது ஆன்மா நாசித்துவாரங்களில் வெளியேறுவதாகவும் வன்முறைச் சாவின் போது காயங்களின் வழியாக ஆன்மா வெளியேறுவதாகவும் அவன் நம்பினான்.

ஒரு மனிதர் கொலை செய்யப்பட்டால் அங்கு அதற்குப்பகரமான இரத்தப்பழி அவசியம். கொல்லப்பட்டன் இரத்தப் பழிக்காகக் காத்திருப்பான். சவக்கிடங்கிலிருந்து இவன் வெளவாலின் வடிவில் வெளியேறி பருகத் தாருங்கள்’ (ஐளஙரஅi) என அவல ஓலமெழுப்பி அலைவான். பழி நிறைவேற்றப்படும்வரை இவ்வோலம் தொடரும் (பார்க்க ஐயெலவாரடடய ள. 1963 : 1325).

இறந்தவனின் ஆவி மனிதனுள் அல்லது மிருகத்தினுள் புகமுடியும் என அவர்கள் நம்பினர். தமது மூதாதையர்களின் சமாதிகளை அவர்கள் வழிபட்டனர். இறந்தவர்களின் இறப்புக்குப் பிந்திய வாழ்க்கை நலனுக்காக ஒட்டகங்கள் பலியிடப்பட்டன. அநேகமாக தலைவர்களின் அடக்கஸ்தலத்திற்கு அருகாமையில் மிருகங்களை கட்டி வைத்து அவற்றைப் பட்டினியில் சாகவிடுவர். அறேபியரின் சிலவகைச் சவஅடக்கச் சடங்குகள் ஆன்மாவுக்கு எதிர்கால வாழ்வுண்டு என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது என்று கருதத்தூண்டுகின்றன (1963: 132). “எனினும் மரணத்திற்குப் பிந்திய வாழ்வு பற்றியோ ஆன்மா பற்றியோ’ இவர்களிடம் தெளிவான கருத்துக்கள் இருக்கவில்லை. ( 1967 : 73)

பல பழங்குடிகளின் குலப் பெயர்களில் மிருகங்களின் பெயர்கள் காணப்படுகின்றன. இவை அறேபியரிடையே குலக்குறிமுறைகள் (வுழவநஅளைஅ) அல்லது விலங்கு வழிபாடு பற்றிய கருத்துக்கு வலுவூட்டுவனவாக உள்ளன. அஸத் (சிங்கம்), கல்ப் (நாய்), பக்ர் (இனம் ஒட்டகை), ஸஃலப் (நரி), த்வர் (எருமை), துப் (கரடி), திப் (ஓநாய்) என்பன இவற்றுள் அடங்கும். அமெரிக்க இரொகுவாய்ப் பழங்குடிகளிடமும் மிருகங்களின் பெயர்களைத் தாங்கிய பல குலங்கள் உள்ளன. ஓநாய், கரடி, ஆமை, மான், பருந்து முதலிய பெயர்களைக் கொண்டு அப்பழங்குடிகள் அழைக்கப்பட்டனர்.

ஒட்டகை இறைச்சியைச் சில முக்கிய தினங்களில் கூடிப்புசித்தனர். இதன் மூலம் ஒட்டகையின் பலம் கிடைக்கும் என நம்பினர். விக்கிரகங்களை மாவினால் செய்து உண்ணும் வழக்கமும் அவர்களிடையே இருந்தது. இது விக்கிரகங்களின் ஆற்றலை மனிதனுக்குத் தருவதாகக் கருதினர்.

சந்திர வாழிபாடு

சந்திரனையும் சூரியனையும் வழிபடுவது தொன்மைக்காலத் தொட்டு நிலவும் வழக்கமாகும். தொன்மை பபிலோனியாவின் முக்கிய நகரான ஊர் (ருச) மக்கள் சந்திரனைக் கடவுளாக வழிபட்டனர். தென் அறேபியாவின் மைனியர்களும் சபாயின்களும் கோள்களையும் நட்சத்திரங்களையும் வணங்கினர். சந்திரக் கடவுள் வணக்கமும் அவர்களிடையே செல்வாக்குடன் காணப்பட்டது. இவர்கள் சூரியனையும் வழிபட்டனர்.

நாடோடிகளான பதவிகளும் சந்திரனை வழிபட்டனர். தமது வாழ்க்கையின் அபிவிருத்திச் சின்னமென சந்திரனை அவர்கள் கருதினர். பாலைவனத்தின் வெப்பத்தைத் தாங்க முடியாத அவர்களின் மந்தைகள் இரவில் பரந்த புல்வெளிகளில் மேய்ச்சல்தேடி அலைவதற்கு சந்திரனின் வருகை தேவையாயிருந்தது. செமித்திய இனத்தவர் நாடோடிகளாக இருந்த காலம் முழுக்க சந்திர வழிபாடு அவர்களிடையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. கால் நடைகளின் மேய்ச்சலுக்கும் பாலைவனவாசி சந்திரனை நம்பியிருந்தான். தாவரங்களையும் மேய்ச்சல் நிலத்தையும் சூரியன் சாகடித்து விடுவதாக அவன் கருதினான். சந்திர வழிபாடு பொதுவாக ஆயர் சமூகத்தை அடையாளப்படுத்துவதாகக் கருதுவர்.

சந்திரப் பெருநாள்கள் கொண்டாடுவது பொதுவாக எல்லாத் தொன்மைச் சமூகங்களிலும் காணப்படுவதாகும். எனினும் செமிமத்தியரிடத்தில் இது அதிக அளவில் காணப்பட்டது. புதிய பிறையின் பிறப்பைக் கொண்டாவது அறபு மக்களிடம் தொன்மைக் காலந்தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். மிருகங்களைப் பலியிட்டு சந்திரனின் வரவை அவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பொதுவாக இஸ்லாத்திற்கு முந்திய அறேபியாவின் சமயநிலை பற்றி தெளிவான கொள்கைகள் இதுவரை முன்வைக்கப்படவில்லை. வளர்ச்சியடைந்த சமயக் கோட்பாடுகள் அறேபியரிடம் இருந்தமைக்குச் சான்றுகள் இல்லை. தொன்மைச் சமூகங்களுக்குரிய வழிபாடுகளையும் சடங்குகளையுமே அவர்களின் சமய முறைகள் வெளிப்படுத்தின. புனிதப் பொருள் வழிபாடு (குநவiளாளைஅ) ஆவியுலகக் கோட்பாடு (யுniஅளைஅ) குலக்குறிமுறை (வுழவசஅளைஅ) விக்கிரக வழிபாடு, மூதாதையர் முதலியவற்றையே அவர்களின் சமயமாகக் காண முடிகிறது.

ஏகத்துவம்

எனினும் சர்வ வல்லமையுள்ள ஒரு கடவுள் பற்றி அறபு மக்களிடம் குறிப்பாக செமித்திய இனத்தாரிடம் கருத்துக்கள் நிலவி வந்துள்ளன. ஒரு கண்ணோட்டத்திற் பார்ப்பதாயின் ஓரிறைக் கோட்டுபாடு (ஆழழெவாநளைஅ) அறபு தீபகற்பத்திற்குப் புதியதன்று. ஓரிறைக் கோட்பாட்டைப் போதித்த கைவிடப்பட்டுப் போன பழைய மரபு அம்மண்ணிற்குச் சொந்தமாயிருந்தது. மெஸெபொட்டேமியாவிலிருந்து மேற்கு அறேபியாவில் குடியேறிய நபி இப்றாஹீம் (ஏப்ரஹாம்) அங்கு ஏகத்துவத்தை நிலைநாட்ட முற்பட்டார். ஓரிறைவாதமும் மனித குலம் பற்றிய பொதுவான சிந்தனைகளும் ஒழுக்கக் கருத்துக்களும் அவர் போதனைகளிலிருந்தன. மக்காவின் கஃபாவோடு ஒன்றிணைத்து இச்சிந்தனைகளை அவர் வளர்க்க முயன்றனர்.

நபிகள் பிறப்பதற்கு மிக நீண்ட காலத்திற்கு முன்னரே இப்றாஹீம் விட்டுச் சென்ற ஓரிறைவாதத்தை அறபுத் தீபகற்பத்தில் பல தீர்க்கதரிசிகள் போதித்து வந்தனர். தென் அறேபியாவின் ஆத் சமூகத்தவரிடையேயும் ஹிஜாஸின் ஸமூத், சுஹைப் சமூகத்தாரிடையேயும் தோன்றிய ஹ{து, சாலிஹ் போன்ற தீர்க்கதரிசிகள் இப்பணியைச் செய்தனர். எனினும் அம்முயற்சியில் அவர்கள் வெற்றி பெறவில்லை. இணைவைத்தலும், உருவவழிபாடுமே செல்வாக்குடன் வளர்ந்தோடு “இப்றாஹியம்’’ உருவான கஃபா ஆலயம் உருவ வழிபாட்டிற்கும் பல்தெய்வ வணக்கத்திற்குமான மையநிலையமாக மாறியது. நபிகள் பிறப்பதற்கு சற்று முன்னர் கூட கஃபாவில் உச்சநிலையில் இருந்தது இவ்வகை வழிபாடுகளேயாகும்.
மக்காவின் சமயம்

கஃபா ஆலயத்திற்கு உள்ளேயும் வெளியேயுமாக குறைஷியருக்குப் பல தெய்வங்கள் இருந்தன. இவற்றுள் ஹ{பல் பெரிய தெய்வமாகும். இது செந்நிறக் கருக்கல்லில் வடிவமைக்கப்பட்டிருந்தது. கஃபாவினுள் வைக்கப்பட்டிருந்த ஹ{பல் சிலையை எல்லா அறேபியரும் வழிபட்டனர்.

கஃபாவின் சுவர்களில் தேவதைகளினது திருத்தூதர்களினதும் உருவங்கள் தீட்டப்பட்டிருந்தன. அவற்றுள் நபி இப்றாஹீம், நபி இஸ்மாயில், கன்னி மேரியும் குழந்தையும்’ முதலிய ஓவியங்களும் அடங்குகின்றன. இவை தவிர கஃபாவிற்குள் 360 சிலைகள் இருந்தன. இது பற்றிக் குர் ஆனும் குறிப்பிடுகிறது. வணக்கத்திற்கெனப் புனித கல்லும் கஃபாவில் இடம் பெற்றிருந்தது.

வட அறேபிய நகரமான பெற்ராவின் தேசியக் கடவுள் டுசாரஸ் ஆகும். இது வளத் தெய்வம் என்பர். அதன் மனைவியாக அல்லாத் (யுடடயவ) கருதப்பட்டது. மற்றொரு நகரான பல்மைராவில் செமித்திய நாகரிகத்துக்குரிய பால் (டீயடட) வணங்கப்பட்டது. பால் சூரியக் கடளோடு தொடர்புபட்டதாகும். மக்காவாசிகள் அல்லாத், அல் மனாத், அல் உஸ்ஸா போன்ற தெய்வங்களை வழிபட்டனர். இத் தெய்வங்களை இவர்கள் அல்லாஹ்வின் குழந்தைகள் எனக் கருதினர்.

பழைமையான தெய்வங்களுள் மனாவும் (ஆயயொ) ஒன்றாகும். அவர்கள் தமது குழந்தைகளுக்கு அப்துல் மனாப், செய்யித் மனாப் என்று பெயரிட்டனர். அல் - லாத் (யுட – டயவ) மற்றொரு தெய்வம். குறைஷிக் குலத்தவரிடத்தில் இதற்கு அதிக செல்வாக்கு இருந்தது. இத்தெய்வத்தின் பெயரைத் தமது குழந்தைகளுக்கு இட்டனர். தாக்கீப் என்ற பழங்குடியினர் இத் தெய்வத்தின் பாதுகாவலராக விளங்கினார். இப்பழங்குடியினர் இஸ்லாத்தில் இணையும் வரை மக்கரவாசிகளும் அறேபியரும் இதனை வழிபட்டனர்.

அறேபியரிடையே குறிப்பாக மக்காவாசிகளிடையே புகழ்பெற்றிருந்த மற்றொரு தெய்வம் அல் - உஸ்ஸாவாகும். (யுட – ருணணய) தமது குழந்தைகளுக்கு அல் - உஸ்ஸா எனப் பெயரிட்டார். குறைஷிகள் கஃபாவைச் சுற்றிவலம் வருகையில் அல் - உஸ்ஸாவில் பேரில் மந்திரங்களை ஜெபித்தனர் அல்லாத், அல் - உஸ்ஸா, அல் - மனா ஆகிய மூன்று தெய்வங்களும் மக்காவாசிகளிடையே அதிக செல்வாக்குப் பெற்றிருந்தன. விக்ரகங்களாக அமைக்கப்பட்டிருந்த இம் மூன்றும் பெண் தெய்வங்களாகும். இஸ்லாத்தின் தோற்றத்தின் போது குர் ஆன் இத் தெய்வங்கள் நிராகரி;க்குமாறு விசுவாசிகளுக்கு கட்டளையிட்டது.

இவைகளெல்லாம் (லாத், உஸ்ஸா மனாத்) நீங்கள் உங்கள்
மூதாதைகளும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்களேயன்றி
(உண்மையில் அவை) ஒன்றுமில்லை. அ (வை தெய்வங்கள்
என்ப) தற்காக அல்லாஹ் உங்களுக்கு யாதோர்
ஆதாரத்தையும் முந்திய எந்த வேதத்திலும் இறக்கிவைக்க
வில்லை. அவர்கள் (தங்கள்) மனோ இச்சையையும் (வீண்)
சந்தேகங்களையும் பின்பற்றுகின்றனரேயன்றி வேறன்று.
(அத், 53:23)

மக்காவில் விக்ரக வழிபாடு, உருவம் செதுக்கப்படாததும் செப்பனிடப்படாததுமான கல்வழிபாடு உட்பட, சபாயிய வழிபாடான கோள்களையும் நட்சத்திரங்களையும் வழிபடும் வழக்கத்தையும் கொண்டிருந்தது. மக்காவின் பொதுவான சமயப்பண்புகளை வெளிப்படுத்தும் மத்திய நிலையாக கஃபா விளங்கியது. கஃபாவிலிருந்த கறுப்புக்கல் மக்காவிலும் பொதுவாக அறேபியாவிலும் தொன்று தொட்டு நிலவிய கல்வழிபாட்டைப் பிரதிபலிப்பதாகும். கஃபாவில் நட்சத்திர வழிபாட்டைப் பிரதிபலிப்பனவும் இடம் பெற்றிருந்தன. ய+த கிறிஸ்தவ ஓவியங்களும் அங்கு வரையப்பெற்றிருந்தன.

அனைத்துச் சமய, வழிபாட்டுக் குழுக்களையும் குலங்களையும் கவரும் ஐக்கிய சமய மத்திய நிலையாக கஃபா விளங்கியது. அறேபியாவின் எல்லா பாகங்களிலிருந்தும் அதன் எல்லைக்கு அப்பாலிருந்தும் மக்கள் இப்புனித ஆலயத்தைத் தரிசிக்க மக்காவிற்று வந்தனர். பெற்ரா, ஹீரா, யெமன், ஹழரமவுத் முதலிய இடங்களிலிருந்தும் யாத்திரிகர் வந்தனர். மக்காவின் சமயம் பரந்தன்மையும் நெகிழ்ச்சியுடையதாக இருந்தமையை கஃபாவின் சமயநிலை பிரதிபலித்தது. கஃபாவின் வழிபாடுகளில் தொன்மைச் சமூகங்களின் செல்வாக்கு தொடர்ச்சியாக நிலவியது. நபிகள் காலம்வரை நீடித்த அதன் பாரம்பரிய வழிபாடுகளில் நபேத்திய சமயத்திற் காணப்படும் வழிபாடுகளுக்கு ஒப்பான விடயங்கள் பலவும் இடம் பெற்றிருந்ததாகக் கருதுவர்.

நபிகள் நாயகத்தின் காலத்தில் பண்டைய உருவ வழிபாட்டுவாதமும் பல தெய்வ வழிபாடும், விக்கிரக ஆராதனையும் அவை பெற்றிருந்த முன்னைய செல்வாக்கை இழந்து கொண்டிருந்தன (1888 : 23) புதிய சூழலுக்கு மக்காவின் பண்டைய உருவ வழிபாட்டுவாதம் பொருந்தாதிருப்பதை மக்காவாசிகள் உணரத் தொடங்கினர். உண்மையில் தொன்மை உருவ வழிபாட்டுவாதம் காலத்திற் கொவ்வாததாகிக் கொண்டிருந்தது. (1905 : 24)

ரோம சாம்ராஜ்யத்துடனும் பாரசீகத்துடனும் வேறு முன்னணி நகரங்களுடனும் தொடர்பு கொண்டிருந்த மக்காவாசிகள் தமது தொன்மைச் சமய முறைகள் கேலிக்குரியதாகிவருவதை அறிந்தனர். மேலும் இவற்றிற் காணப்பட்ட அநாகரிகமான அம்சங்களை சிலர் சுட்டிக் காட்ட முற்பட்டனர். (1904 : 24). சிலை வணக்கம் அறேபியாவில் ஏற்கனவே கேள்விக்குரியதாகி விட்டது. (1988 : 23)

ய+த சமயத்தின் ஓரிறைக் கோட்பாடு ய+தக் குடியேற்றங்களினாலும் யுத்தங்களினாலும் அறேபியாவில் ஊடுருவியது. இஸ்லாத்திற்கு முன் பல நூற்றாண்டுகளாக ய+தர் அறேபியாவில் குடியேறி வந்துள்ளனர். ரோமரின் தாக்குதல்களுக்கு அஞ்சிப் பல ய+தக் குலங்கள் அறேபியாவிலும் குடியேறின. வட அறேபியாவில் யத்ரிப் இவ்வகை ய+தக் குடியேற்றங்கள் அதிகமாகக் காணப்பட்ட நகரமாகும். தென் அறேபியாவில் ய+த சமயத்தைப் பரப்புதற்கு யூதர்கள் பெரிதும் முயன்றனர். தென் அறேபியாவில் பல சக்தி குலங்கள் ய+த சமயத்தைத் தழுவியிருந்தன.

ய+த சமயமும் கிறிஸ்தவ சமயமும் அவை ஊடுருவிய அறபுப் பிரதேசங்களில் தொன்மைச் சமயங்களின் வழிபாடுகளையும் பல தெய்வ வணக்கங்களையும் எதிர்த்தன. இதுவரை விக்ரக வணக்கம், கல்வழிபாடு போன்றவற்றினால் மக்கா பெற்றிருந்த கௌரவத்தை இது பாதித்தது. இது எவ்வாறாயினும் ய+தமதமும் கிறிஸ்தவமும் அங்கு வேரூன்றிப் பரவ முடியாதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்கா வாசிகளின் தொன்மைச் சிலை வணக்கமும் பல்தெய்வ வழிபாடும் தொடர்ந்தும் சக்தியுடன் செயல்பட முடியாத நிலை உருவாகியது. இவற்றிற்கு எதிரான கருத்துக்கள் ஆங்காங்கே எழுச்சிபெறத் தொடங்கின. பெரிதும் தெளிவற்றதாயிருந்த போதும் ஒரு கடவுள் கொள்கையை ஆதரிப்பதற்கும் அதை அறிவதற்கும் சிலர் தீவிரமாக முயன்று வந்தனர். (Phiடிஇ மு. ர்வைவiஇ 1937 : 108) ஏகத்துவ வாதத்தை அடிப்படையாகக் கொண்ட இவர்களது சமயச் சீர்திருத்தச் சிந்தனைகள் “தீன் ஹனீபிய்” எனப்பட்டது.

தொன்மைச் சமூக உறவுகள் சிதைந்து வர்க்க உறவுகளைக் கொண்ட புதிய சமூக மாற்றத்தின் வாயிலில் மக்கா நின்றது. தொன்மைச் சமயக் கட்டமைப்பில் மாற்றங்கள் நிர்ப்பந்திக்கப்படுவதை புதிய சமய சிந்தனைகள் உணர்த்தின. பலதெய்வ வழிபாடு ஒரு முடிக்கு வந்து கொண்டிருந்ததையும் அறேபியாவி;ல் அதன் இடத்தை ஓரிறைக்கோட்பாடு நிரப்ப முயல்வதையும் இஸ்லாத்தின் தோற்றத்திற்கு சற்று முந்திய சமய நடவடிக்கைகள் உணர்த்தின (1969 : 94)

ஹனீப் வாதம்

இஸ்லாம் தோற்றம் பெறுவதற்கு சிறிது முன்னர் ஹனீப்வாதிகளின் நடவடிக்கைகளை அவதானிக்க முடிகிறது. நேர்மையும் ஆர்வமுள்ள சிறு குழுவினர் விக்ரக வழிபாட்டை எதிர்த்துக் குரல் எழுப்பியதோடு மக்காவின் ஆலயங்களில் சிலைகள் இருப்பது தெய்வீகத் தூய்மையை இழிவுபடுத்தும் செயலெனவும் கூறினர். ஹனீப்வாதிகளின் பிரதான கோட்பாடு ஓரிறைவாதமாகும். (ஆழழெவாநளைஅ) ஏற்கனவே ய+த, கிறிஸ்தவ சமயங்கள் ஓரிறைவாதத்தைப் போதித்து வந்தபோதும் ஹீனிப்வாதிகள் இச்சமயங்களின் செல்வாக்கிற்கு உட்பட்டிருக்கவில்லை.

மக்காவின் தொன்மை வழிபாட்டு முறைகள் தாக்கிவந்தமையினாலும் வெளிப்படையாகக் கருத்துக்களைக் கூறி வந்தமையாலும் மக்காவாசிகள் இக்குழுவினரை ஒதுக்கிவைத்தனர். (1989 : 27) ஹனீபிய்’’ (ர்யnகைi) என்ற பதம் பற்றிப் பல கருத்துக்கள் கூறப்படுகின்றன. முஸ்லிம் அறிஞர்களும் தமக்கிடையில் வேறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். இது, மேற்கத்திய அறிஞர்களுக்கும் பொருந்தும். இதன் பொருள் பற்றிக் குர்ஆன் விரிவுடையாளர்களிடமும் கருத்தொற்றுமை இல்லை (ஆயாஅழரன ஆ. யுலழரடிஇ 1984 : 164 ஏழட. ஐ)

தபாரியின் கருத்துப்படி ஹனீப் (ர்யnகைi) என்ற பதம் புனித யாத்திரைச் சடங்குகளை (சவைநைள ழக Pடைபசiஅயபந) நிறைவேற்றுபவர்களைக் குறிப்பிடுவதாகும் எனச் சிலர் கூறுகின்றனர். முஜஹ்ஹித் “ஹனீப் என்றால் யாத்திரைகள் என்றார்’’ இப்னு அப்பாஸின் பிரமாணங்களும் இதனை வலியுறுத்துவதாக மஹ்மூத் எம். ஐய+ப் எழுதுகிறார். “இஸ்லாத்திற்கு முன் ஜாஹிலியாக் காலத்தில் புனித யாத்திரையை நிறைவேற்றுபவர்கள் “ஹ{னபாஉ’’ (ஹனீப் என்பதன் பன்மை) என அழைக்கப்பட்டனர். இதனாலேயே இறைவன் கீழ்வரும் வாக்கியத்தை இறக்கினான் : அல்லாஹ்வுக்கு எதனையம் இணை வைக்காது அவன் ஒருவனுக்கு முற்றிலும் தலைசாய்த்து வழிபட்டுவிடுங்கள் (ஹனிபா) குர், 22:31) இப்றாகீஹீமின் சமயம் (சுன்னா)ப் பின்பற்றுபவரே ஹனீப் ஆவர் எனச் சிலர் கூறினர். “இப்றாஹீமின் சமயம் அல் ஹனபிய்யா என அழைக்கப்பட்டது. அல் - சுத்தியின் ஆதாரத்தை கொண்டு இறைவனில் மாத்திரம் நம்பிக்கை கொண்டவர்கள் எவனோ ஹனீப் என அல்தபாரி குறிப்பிடுகிறார். (பார்க்க, 1984 : 164, ஏழட ஐ)

நபி எனத் தன்னைப் பிரகடனப்படுத்திய முஸைலமாவுடனும் அவரது கோத்திரத்துக்குரிய பெயருடனும் இச் சொல்லைத் தொடர்படுத்த டி. எஸ். மார்கோவியத் (னு.ளு.ஆயசபழடழைரவா) முயன்றார்.

“ஹனிபிய்’’ (ர்யnகைi) என்றால் புரட்சி என்று பொருள். ஹிப்றூ, சிரியெக் மொழிகளில் இதன் பொருள் நம்பிக்கையற்றவர் என்பதாகும்.’’ பிரிவினைவாதிகள் ஒப்புக்கொள்ளாதவர்கள்’’ என்ற பொருளும் இதற்கு உண்டு. ஹனீப் வாதிகளின் எதிரிகள் இவ்வாறுதான் அவர்கள் அழைத்தனர். (பார்க்க நு.யு.டீநடலநச 1969 : 94) ஓரிறை வாதிகளுக்குச் சிலை வணக்கவாதிகள் இட்டபெயராக இது இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அல்லாமா ஷிப்லி நூஃமானி “தீன் ஹனிபிய்’’ என இது ஏன் அழைக்கப்பட்டதென்பதை திட்டவட்டமாகக் கூறமுடியாதிருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள் (பார்க்க. 1979 : 113).

ஹனீப் (ர்யnகை) என்ற பதத்தை, வரலாற்றுரீதியில் ஆய்வு செய்துள்ள சேர். சார்ள்ஸ் ஜே. லியால் (ளுசை ஊhயசடநள து. டுலயடட) இதன் மேற்கு மூலத்தை அறிவது கடினமானதெனக் கருதுகிறார் : “தோற்ற்த்தை விளக்க மூலத்தை அறிவது கடினமானதெனக் கருதுகிறார் : “தோற்றத்தை விளக்க முடியாதவாறு, குர்ஆனிலும் பழைய கவிதைகளிலும் காணப்படும் பல சொற்களைப் போன்றதே ஹனீப் என்ற பதமுமாகும். அப்பதம் ஏறத்தாழ ஒர சமயத்தைக் குறிப்பதை நாமறிவோம். அதன் தோற்றத்தைப் பற்றி உறுதியாகச் சொல்ல முடியாது’’ (ஊhயநடநள து. டுலயடடஇ 1903 : 781). எனினும் ஓரிறைக் கோட்பாட்டையே ஹனீப் வாதம் தனது கடவுள் கோட்பாடாகக் கொண்டிருந்தது என்பது பற்றி அபிப்பிராய பேதங்களில்லை (ஊhயநடநள து. டுலயடட. 1903 :773). ஏனைய குர் ஆன் வியாக்கியானிகள் “ஆப்ரஹாமின் சமயமே அல் ஹனீபிய்யா “எனக் குறிப்பிடுகின்றனர் (1984 : 64)

ஹனீப் வாதத்தை இப்றாஹீமின் சமயத்தை தழுவிய கொள்கை எனக் கருதலாம். ஹனீப் வாதிகள் என அடையாளப்படுத்தப்பட்டவர்கள் நேராகவோ மறைமுகமாகவோ இப்றாஹீம் நபியின் ஏகத்துவ இறைகோட்டையே தமது கொள்கையாக ஏற்றிருந்தனர். இப்னு இஷாக்கின் பதிவுப்படி வறக்கா இப்னு நவ்பல், அப் அல்லாஹ் இப்னு ஜஹ்ஷ், உத்மான் இப்னு ஹ{வைறித், ஸையித் இப்னு அம்று இப்னு நுபைல் ஆகியோர் இக்குழுவின் முக்கியஸ்தர்களாவர். இவர்கள் குறைஷிக் குலத்தைச் சேர்ந்தவர்;களாகும். வறக்கா நபிகளின் முதல் (ஊழரளin) யாவர். (1978 : 111 : ஏழட ஐ ) இருண்டாவது நகரான உபைதுல்லா இப்னு ஜஹ்ஷ் அப்துல் முத்தலிபின் மகள் உமைமாவின் மகனாகும் அதனால் அவர் நபிகளின் பெற்றோரின் உடன் பிறந்தாரின் பிள்ளையாகும்’’ (1903 : 772) (பார்க்க, குறிப்பு : 06)

இப்றாஹீமின் சமயத்தை ஆராய்வதற்காக அல்லது சமயக் கல்விக்காக ஸையித், வறக்கா உட்படச் சில மக்காவாசிகள் சிரியாவிற்குப் பயணம் செய்தனர். “சஹீஹ் புகாரியின் ஆதாரத்தின்படி ஸையித் ஒரு முறை புனித கஃபாவின் முன்னால் நின்று “ஓ குறைஷிகளே இப்றாஹீமை நான் பின் பற்றுவதை நீங்கள் ஒருவருமே ஏற்றுக் கொள்ளவில்லை’’ என்று கூறியுள்ளார். (1979 : 112. எழட.ஐ) அவரது மகன் செய்து பின் ஸைய்த் மிகச் சிறந்த முஸ்லிம்களில் ஒருவராக விளங்கினார். இப்னு இஷ்ஹாக்கினால் அவரது சமய இலட்சியங்கள் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “அவர்’’ விக்ரகவணக்கத்தைக் கை விட்டார். தானாக இறந்தவற்றையும், இரத்தத்தையும், தெய்வங்களுக்குப் பலியிட்டவற்றையும் அவர் உணவாகக் கொள்வதிலிருந்து தவிர்த்துக் கொண்டார். பெண்குழந்தைகள் புதைப்படுவதை அவர் தடுத்தார். ஏப்ரஹாமின் (இப்றாஹீம்) கடவுளையே தான் வணங்குவதாகப் பிரகடனம் செய்தார்.

பெண் குழந்தைகளைக் கொலை செய்யும் அறோபிரியரின் வழக்கத்தை முதலில் கண்டித்தவர் ஸையிதாகும். பெண்குழந்தை ஒன்று கொல்லப்பட இருப்பதாக அவர் அறிந்தால் உடனே அக்குழந்தையின் பெற்றோரைச் சந்தித்து அந்தக் குழந்தையைத் தன்னிடம் ஒப்படைக்குமாறும் அதனை வளர்க்கும் பொறுப்பைத் தான் ஏற்பதாகவும் அவர் கூறுவது வழக்கம் (1979 : 112)

தாயிஃபின் தலைவரும் புகழ்பெற்ற கவிஞருமான உமையா இப்னு அபிசல்ட் இக்காலப் பகுதியில் விக்கிரகவணக்கத்தை எதிர்த்துக் குரலெழுப்பியவர்களில் மற்றொருவராகும். உமையா பத்ர் யுத்தகாலம் வரை வாழ்ந்தார். உருவவழிபாட்டுக் காலத்தில் அவர் புனித வேதங்களைக் கற்றிருந்ததோடு உண்மையான இப்றாஹீமிய நம்பிக்கையையும் ஏற்றிருந்தார். இவர் இஸ்லாத்தைத் தழுவவில்லையாயினும் இவர் இயற்றிய நூற்றுக்கும் அதிகமான ஈரடிச் செய்யுள்களை விருப்பமுடன் செவியுற்று வந்த நபிகள் நாயகம், உமையா, இஸ்லாத்தை ஏற்பதற்கு மிக அருமையில் வாழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர் (1979 : 112) உமையா உட்பட மேலும் சுமார் ஐந்து ஹனீப் வாதிகளின் பெயர்;கள் வரலாற்றுப் பதிவுகளில் உள்ளதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே ஹிஜாஸ் மாநிலத்தையும் மேற்கு அறேபியத் தீபகற்பத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் சிலை வணக்க எதிர்ப்பாளர்களாகவும்’ இப்றாஹீமின் கடவுளை ஏற்றவர்;களாகவும் விளங்கினர். இவர்களுள் சிலர் “துறவி’’ நடைமுறைகளிலும் ஈடுபட்டனர். (1903 : 774) பார்க்க, குறிப்பு 06:07)

ஹனீப்வாதிகளுக்கும் நபிகளுக்குமிடையிலிருந்த தொடர்புகள் பற்றி திருப்தியான தகவல்கள் இல்லை. எனினும் இக்குழுவினரின் ஒரு சிலருடன் நபிகளுக்குத் தொடர்பிருந்தது பற்றிச் சில பதிவுகள் தெரிவிக்கின்றன. சஹீஹ் புகாரியின் பதிவின் படி நபித்துவத்தை அடைவதற்கு முன்னர் ஸையிதுடன் நபிகளுக்குத் தொடர்பிருந்ததாக அறிய முடிகிறது (1979 : 112) ஹதீஜா நாயகியை நபிகள் மணந்ததன் பின்னர் ஹனீப்வாதத்தின் சக்திமிக்க தலைவரும் ஹதீஜா நாயகியின் மைத்துணருமான வறக்கா இப்னு நவ்பல் மூலமாக ஹனீப்வாதத்தை நபிகள் தெரிந்து கொண்டிருக்கலாம் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது. மேலும் அறேபியாவின் ஏனைய குலங்களைவிட குறைஷிக் குலத்தைச் சேர்ந்த நபிகளின் பாட்டனாரான அப்துல் முத்தலிப் தமது கருத்துக்களில் இப்றாஹீம் நபியின் இறைகோட்பாட்டைப் பெரிதும் அண்மித்திருந்தார் (1989 : 27) என்பதையும் இங்கு குறிப்பிடலாம்.

ஹனீப் வாதிகள் ஓரிறை வணக்கத்தை ஆதரித்தனர். தேசியவாதம், நாட்டுப்பற்று என்பவற்றையும் அவர்கள் வலியுறுத்தினர். எனினும் மக்காவின் மக்கள் ஹனீப்வாதிகளின் புதிய சிந்தனைகளை ஏற்கவில்லை. குறிப்பாக குறைஷியர் இவர்களை எதிர்த்தனர். புதிய கொள்கைக்கு குறைஷியர் காட்டிய எதிர்ப்பில் சமயப்பிரச்சினை மட்டுமன்றி பொருளாதாரப் பிரச்சினையும் அடங்கியிருந்தது. தொன்மை உருவ வழிபாட்டுவாதமும் பலதெய்வ வணக்கமும் மக்காவின் பொருளாதாரத்தோடு ஒன்றிணைந்திருந்தமையினால் புதிய சமய சிந்தனை இதனைத் தகர்க்கக் கூடுமென அவர்கள் அஞ்சினர். எல்லாப் பழம் வழிபாடுகளினதும் மத்திய நிலையமாக கஃபா பெற்றிருந்த கௌரவமும், மக்காவில் வளர்ந்து வந்த சாதகமான வர்த்தகச் சூழலும் பாதிக்கப்படுமென குறைஷியர் உணர்ந்திருந்தனர்.

ஹனீப் வாதிகள் பொதுவாக சமயக் கோட்பாட்டில் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முயன்றனர். மக்காவில் நிகழ்ந்து கொண்டிருந்த சமூக பொருளாதாரப் பிரச்சினைகளை அவர்கள் கவனத்திற் கொள்ளவில்லை. மக்காவை அன்று வாட்டி வந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சினைகளுக்கு அவர்களிடம் தீர்வுகளிருக்கவுமில்லை.

ஹனீப்வாதிகள் முன்வைத்த உலக முடிவு. நரக வேதனை போன்ற சமயக் கருத்துக்கள் சமய விடயங்களில் பெரும்பாரும் ஐயவாதிகளிலிருந்த அறபு மக்களை அதிகம் கவரவில்லை. (1969 : 96) புதிய சமய சிந்தனை மட்டுமல்ல, அன்றைய சமூகத்தை வேதனையயிலாழ்த்தியிருந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் தேவையாக இருந்தன. இதனால் மனிதனின் விடுதலை மரணத்தின் பின்னர் வருவதே’ என்ற அவர்களின் சமய வாக்குறுதி அறபு மக்களிடத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இது எவ்வாறெனினும், என்றோ ஒரு காலத்தில் அறபுத் தீபகற்பத்தில் நிலவிய தொன்மைமிக்க ஏகத்துவ வாதத்தின் பழைய சுவடுகளில் செல்வாக்கு ஹனீப்வாதிகள் முன்வந்தனர் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

மானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்




இரத்த பந்தத்தைத் தவிர வேறு பிணைப்புக்களும் இடம் பெற்றன. ஒரே இரத்தத்தில் தோன்றிய பிள்ளை குட்டிகளின் அலகாக அன்றித் தமக்குள் சண்டையிடுவதில்லை என்ற வாக்குறுதியுடன் நேச ஒப்பந்தங்கள் (ஊழகெநனநசயவழைn) பல உருவாகின. இதன் மூலம் தனி நபர், குடும்பம் அல்லது குலங்கள் இணைவது சாத்தியமாயிற்று. இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்னர் நடைபெற்ற “முத்தையாபின்’’, “புலூல்’’ (குரனரடட) ஆகியவை இவ்வாறு ஏற்பட்ட ஒப்பந்தங்களில் புகழ்பெற்றவையாகும். சிறிதும் தொடர்பற்ற தூரத்துக் குலங்களையும் இவை பிணைத்தன. (1987 : 09) இதில் பிணைப்புற்ற அங்கத்தவர் எவராயினும் பழங்குடியின் உண்மையான அங்கத்தவராகவே கணிக்கப்பட்டனர்.

ஒப்பந்த அடிப்படையில் ஏற்பட்ட உறவாயினும் அறேபியன் அதில் இரத்த பந்தத்துக்குரிய கடப்பாடுகளை நிறைவேற்றினான். பழங்குடியினுள் இணைந்தோருக்கு உரிய பாதுகாப்பு முழு அளவில் வழங்கப்பட்டது. அறேபியரிடையே வழங்கிய “சகோதரர்’’ என்ற பட்டம் இரத்த உறவினரை மட்டும் குறிக்கவில்லை. இரத்த உறவற்ற சகோதரத்துவத்திற்கு, ஒத்த கருத்து இருந்தால் அதுவே போதுமானதாக இருந்தது. (1969 : 21)

ஏழைகளும், கைதிகளும் பலவீனங்களும் இவ்வகை நேசஒப்பந்தகளினால் பாதுகாப்புப் பெற்றனர். சக்தியற்ற குலங்களுக்;கு இது பெரு வாய்ப்பாக அமைந்தது. அரசோ, சமாதானத்தை திணிக்கும் வேறு சக்தி மிக்க இயந்திரமோ இல்லாத நிலையில் மக்களில் அப்போது ஏற்பட்ட புதிய நெருக்கடிகளுக்கு இதுவே இயலக்கூடிய அதிகபட்சத் தீர்வாக அமைந்தது. கடும் வரட்சி, உணவுத் தட்டுபாடு, வழிப்பறி, குலச்சண்டைகள் போன்ற பிரச்சிளைகளின் தாக்கத்திலிருந்து தனிநபரை அல்லது பலவீனமான குலத்தைப் பாதுகாக்கவும் இப்பிணைப்பு உதவியது.

தொன்மைஅறபு சமூகத்தில் உருவான இக்குல இணைவினை செயற்கைக் குல ஒருமைப்பாடு’’ என பேராசிரியர் வொட் குறிப்பிடுகிறார். நேச ஒப்பந்தங்களினால் இவ்வாறு உருவான குல ஐக்கிய எழுச்சி நபிகள் காலத்தில் பரவலாகக் காணப்ட்ட அம்சமாகும். இக்குல ஐக்கியங்கள் ஒரு அரசியல் இணைப்பினை அடையாளப்படுத்துவதாக அமைந்தது. (ஐபயௌ புழடனணihநசஇ 1967 :14)

நபிகள் காலத்தில் நடைபெற்ற இக்குல ஐக்கியச் செயற்பாட்டில் வணிக நலன்கள் முக்கிய இடத்தைப் பெற்று வந்தன. வணிகப் போட்டியில் தனி ஆதிக்கத்தைச் செலுத்த முனைந்த குலங்களுக்கு அல்லது வர்த்தகக் குபேரர்களுக்கு எதிராகவும் இவை உருவாகின. பலவீனமான வணிகர்கள் ஒப்பந்தங்;ள் செய்து தமக்குள் ஐக்கியத்தை ஏற்படுத்திக் கொண்டனர். சக்திமிக்க குபேரர்கள் தமக்குள் குலக் கூட்டுறவை உருவாக்கிக் கொண்டது போல் பலவீனர்களும் தமது குல எல்லைகளைத்தாண்டி வேறு குலத்தவர்களுடன் அல்லது தனி நபர்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டனர். ஹில்ப் - அல் - புலூல் இவற்றுள் குறிப்பிடத்தக்க அமைப்பாகும். குல ஐக்கியத்தின் இடத்திற்கு வர்க்க ஒருமைப்பாடு வந்து சேர்வதை இதுவும் இதுபோன்ற ஒப்பந்தங்களும் உணர்த்தின.

“ஹில்ப் அல் புலூல்’’ அமைப்பை உருவாக்குவதில் நபி (ஸல்) அவர்களின் ஹாஷீம் குலத்தினரே முன்னணியில் நின்றனர். சுதந்திரமாக வர்த்தகக் காரவன்;களை அனுப்பமுடியாத வர்த்தகர்களின் பாதுகாப்பு இதில் முக்கியத்துவம் பெற்றது. குபேர வணிகர்களினால் அல்லது வர்த்தகப் போட்டியில் தன்னாதிக்கம் செலுத்தியவர்களினால் நபிகளின் ஹாஷீம் குலமும் பாதிக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட வர்த்தகர்களின் ஒருங்கிணைப்பை இதிற்காண முடிவது முக்கிய அம்சமாகும்.

மக்கா நகரில் ஒடுக்கப்படும் அமைப்பின் அங்கத்தவர்களுக்கு உதவி வழங்குவதென்று புலூல் உடன்படிக்கையின் போது பிரதிக்ஞை எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் ஒருங்கிணைப்பாக மட்டுமன்றி பலவீனர்களுக்கு ஆதரவளிப்பதும் அவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தருவதும் இதன் நோக்கங்களில் ஒன்றாக இருந்ததும் கவனத்திற் கொள்ளத் தக்கதாகும். (யுளபாநச யுடi நுபெநெநசஇ 1980 : 17) நபிகளின் இளமைப் பருவத்தில் நடைபெற்ற இவ்வுடன்படிக்கையின் போது நபிகளும் அங்கு பிரசன்னமாகி இருந்தனர். பிற்காலத்தில் இவ்வுடன் படிக்கையை நபிகள் நினைவு பிரச்சன்னமாகி இருந்தனர். யார் இந்த உடன்படிக்கையின் பேரில் உதவி கோரினாலும் உதவத் தயாராக உள்ளேன்’’ எனக் கூறினார்கள்.

போர்ச்சூழல்

அறேபியரின் வாழ்வில் இரத்தஞ்சிந்துதலும் கொள்ளையிடுவதிலும் பொதுவழக்காகும். விடுதலையளிக்கப்பட்ட மூன்று புனித மாதங்களைத்தவிர வருடம்ப+ராகவும் அவர்கள் போர்புரிந்தனர். ஒரு நாதாரணச் சச்சரவோ ஒரு தனிநபர்கொலையோ பல தசாப்தங்கள் நீடிக்கக்கூடிய போருக்குப் போதிய காரணங்களாயிந்தன. அவர்களது போர்முறைகள் மிகக்குரூரமானவையாகவும் மனிதத்தன்மையற்ற வையாகவுமிருந்தன. நபிகள் காலத்திலும் அதற்கு முன்னரும் மனித நேயத்திற்குப் புறம்பான பல கொடூரங்களைப் போர்களில் அவர்கள் நிகழ்ந்தனர். பண்டைய போர்களின் குரூபரங்கள் பற்றிய பைபிளின் பதிவுகள் இவ்வாறு காணப்படுகின்றன.

சமூவேல் பவுலை நோக்கி இப்போது நீ போய் அமலேக்கைக்
கொன்று அவன் உடைமைகள் அனைத்தையும் அழித்துவிடு.
அவன்மேல் இரக்கங் கொள்ளாதே. அவனது சொத்துக்களில்
ஒன்றையும் விரும்பாதே. ஆனால் ஆண்பிள்ளைகள் முதல், பெண்
பிள்ளைகள் வரை, சிறுவர், பால் குடிக்கிற பிள்ளைகள், மாடுகள்,
ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள், முதலியவற்றைக்கொன்றுவிடு.
(15:13)

அவர்கள் கொள்ளைப்பொருட்களின் மேல் பாய்ந்து
ஆடுமாடுகளையும் கன்றுகளையும் கொணர்ந்து தரையில் போட்டு
அடித்து இரத்தத்துடன் சாப்பிட்டனர். (14 : 32 : 33)

அறேபியப் போர்களிலும் இதற்குச் சமமான செய்திகள் உள்ளன. குழந்தைகளையும், பெண்களையும் அவர்கள் எரிய+ட்டிக் கொலை செய்தனர். கர்ப்பிணிகளின் வயிற்றை வெட்டிப்பிளந்தனர். அம்பெய்யும் பயிற்சிக்கு சிறுவர்கள் பலியாக்கப்பட்டனர். போரில் பிடிக்கப்பட்ட கைதிகள் கொலை செய்யப்பட்டனர். இறந்தவர்களின் சடலங்கள் குரூபமாகச் சிதைக்கப்பட்டன. அங்கங்கள் அறுக்கப்பட்டு அகற்றப்பட்டன. தாயும் பிள்ளைகளும் பிடிக்கப்பட்டால் அவர்களைப் பிரித்துவைத்தனர். யுத்தத்தின் போது மரங்களையும் கட்டிடங்களையும் பாழ்படுத்தினர்.

போர்க்கொள்ளை கிட்டத்தட்ட அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக இருந்தது. கொள்ளைப் பொருள்களுக்காகவே அவர்கள் போர்களில் இறங்கினர். போர்க்கொள்ளையும் வழிப்பறியும் கண்டிக்கப்படவில்லை. இவை அவர்களது ஜீவனோபாயமாக இருந்தமையால் அவர்களது ஒழுக்க நியமங்கள் இவற்றை ஆதரித்தன. போர்க்கொள்ளைக்குரிய அறபுப்பதம் “கனீமத்’’ ஆகும். அறபு மக்களின் வாழ்வில் கனீமத் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது.

தார்விதி

பாலைவன அறேபியர் யுத்தத்தை நேசித்தனர். ஓரளவுக்கு யுத்தம், அவர்களது வாழ்க்கையுமாகும். “தார்’’ (வுhயச) முறை யுத்த ஆவலை அவனுக்கு மேலும் தூண்டியது. இது “தார்விதி’’ (டுயற ழக வுhயச) எனப்பட்டது. ஏதாவதொரு வழியில் ஒரு பழங்குடிநபர் கொலைசெய்யப்பட்டால் அக்கொலைக்காக முழுக்குல அங்கத்தவர்களும் கூட்டுமுறையில் பழிவாங்குவதை தார்விதி கட்டாயப்படுத்தியது. இம் முறையில் எழும் போர்கள் பல நூற்றாண்டுகள் வரையும் நீடிக்கும். இந்த யுத்தங்களிலிருந்து கிளை யுத்தங்களும் தொடர்வதுண்டு. தார் அறேபியரின் குணப்பண்புகளில் ஊறியிருந்த ஒன்று என அல்லாமாஷிப்லி நூஃமானி குறிப்பிடுகிறார்கள் (பார்க்க : 1981 : 245, ஏழட ஐஐ)

கொலைக்குரிய வாங்கப்படாத வரை கொலையுண்டவனின் ஆன்மா ஒரு பறவையாக ஓலமிட்டு அலையுமென்றும், பழி வாங்கப்படாதவரை கொலையுண்டவனின் சவக்கிடங்கு தீராத இருளில் மூழ்கிக்கிடக்கும் என்றும் அவர்களிடம் புராண நம்பிக்கைகள் நிலவின. இத்தகைய நம்பிக்கைகள் தார்விதியை மேலும் தீவிரப்படுத்தின. அறபுகளைப் பொறுத்தவரை காயப்பட்டு யுத்தகளத்தில் இறப்பதுதான் கௌரவமான மரணம். ஆன்மா மூக்கின் வழியாக அன்றி காயத்தின் வழியாக வெளியேறியது என்ற இறப்புச் செய்திக்கே அவர்கள் மதிப்பளித்தனர். நோயுற்று இயற்கையாய் மரணிப்பதை தொன்மை அறேபியர் இழிவுச்சாவெனக்கருதினார் - இதனை அவர்கள், “மூக்கு மரணம்’’ என்றனர். அவர்களது பாடல் ஒன்று இவ்வாறு கூறுகிறது.

எமது எந்தத்தலைவனும்
மூக்கினால் மரணிக்கவுமில்லை
பழிவாங்கப்படாத நிலையில்
எங்களில் ஒருவன் கொலை செய்யப்படவில்லை

இஸ்லாம் பழைய போர் முறைகளிலும் போர்க்கொள்ளையிலும் (கனீமத்) மாற்றங்களை ஏற்படுத்தியது. போர் ஒழுக்கக் கோவை என்று கூறுவதற்குச் சமமான கருத்துக்களை இஸ்லாம் போர் சம்பந்தமாக முன்வைத்தது. “நீதியான வழியிலன்றிப் போரில்லை’’ என்ற அடிப்படைக்கருத்தை இஸ்லாம் பிரகடனப்படுத்தியது. “போரில் வரம்பு மீறவேண்டாம்’’ அல்லாஹ்வின் வழியில் போர்புரியுங்கள் அநீதியிழைப்போருடன் மட்டுமே போர்’’ என்ற குர் ஆனின் கட்டளைகள் பழைய போர்முறைகளையும் அதற்கான காரணிகளையும் குர்ஆன் முற்றாக நிராகரிக்கிறது என்பதற்காக சான்றுகளாகக் கொள்ளலாம்.

அப+தாவ+தின் பதிவின்படி நபித்தோழர் அனஸ் (ரலி) அவர்களுக்கு நபிகள் வழங்கிய போர் அறிவுரைகளிலொன்று பலவீனப்பட்ட முதியோர் சிறார்கள், மகளிர் எவரையும் நீங்கள் கொலை செய்துவிட வேண்டாம்’’ என்பதாகும். கலீபா அப+பக்கர் தமது தளபதிகளுக்குப் போர் அறிவுரை வழங்கியபோது பாதிரிமார்கள், வணக்கவாளர்கள், தொழிலாளர்கள் போன்றவர்களை அவர்கள் போரில் பங்கெடுத்துக் கொள்ளாத வரையில் தாக்க வேண்டாம் எனக் கூறினார்.

பிணைக்கப்பட்ட நிலையில் இருப்பவர்களையோ கைதிகளையோ கொலை செய்வதை நபிகள் தடுத்து விட்டன்ர். எதிரிகளின் சடலங்களைச் சிதைப்பதையும் சடலங்களிலிருந்து மூக்கு, காது, ஈரல் போன்ற உறுப்புக்களை அறுத்தெடுப்பதையும் நபிகள் தடுத்தனர். எதிரி நாட்டிற்குள் நுழைகையில் நாசவேலைகளில் ஈடுபடவேண்டாம் என்றும் பள்ளிவாசல்களை கண்டால் அல்லது பாங்கோசையைக் கேட்டால் யாரையும் கொல்லவேண்டாம் என்றும் நபிகள் கூறினார். போர்த்தளபதிகளை நியமிக்கும்போது இறையச்சத்துடன் அல்லாஹ்வின் பாதையில் போர்புரியுமாறு பணித்தனர். ஒப்பந்தங்களுக்கு மாறு செய்யவேண்டாம் என்றும் யாரையும் கோரப்படுத்தவேண்டாம் என்றும் சிறுவர்களைக் கொலை செய்யவேண்டாம் என்றும் தமது தளபதிகளுக்கு அறிவுரை கூறினர்.

நபிகள் காலத்தில் யுத்தங்கள் நடைபெற்றபோதும் அதில் மாற்றங்கள் தென்பட்டன. இரத்தவெறி இல்லாதொழிக்கப்பட்டது. யுத்தங்களுக்கு வரையறைகளும் விதிகளும் வகுக்கப்பட்டன. உண்மையில் ஆயுதப்பயன்பாடும் இரத்தஞ் சிந்துதலும் அதன் இறுதி எல்லைவரை கட்டுப்படுத்தப்பட்டது’’ (ர்யஅனைரடடாயஇ 1979 :87). மேலும் இதுகாலம்வரை பெரும் கௌரவத்துக்குரியதாகக் கருதப்பட்ட கொலைக்குரிய இரத்தக் கோரிக்கையை நபிகள் தமது இறுதி ஹஜ்ஜின் போது நிராகரித்தனர். அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யுமாறும் உலகியல் எதிர்பார்ப்புக்களைக் கைவிடுமாறும் நபிகள் கோரிக்கை விடுத்தனர். யுத்தத்தில் பொருள்ளைக் கவர்வதைவிட மறுமையின் பலன்களே மேலானதென்று கூறியது புதியகருத்தாகும். இதன்மூலம் போர்க்கொள்ளையின் மீது அவர்கள் பாராட்டிவந்த மாபுரிமையை நபிகள் கேள்விக்;குரியதாக்கினர்.

பழிக்குப் பழி

அறபுப் பழங்குடியில் பழிக்குப் பழி ஒரு உயிர்பாதுகாப்பு முறையாக விளங்கியது. குலத்தினது பொதுப் பாதுகாப்பும் இதில் அடங்கியிருந்தது. குலத்தின் அல்லது குடும்பத்தின் அங்கத்தவர் தாக்கப்பட்டால், பொது எதிர்ப்பு உருவானால் காரணகாரிய ஆராய்ச்சியின்றி பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. பதில் தாக்குதலைப் பழங்குடி புனிதக் கடமையாகக் கருதியது. இது பழங்குடி சமுதாய அமைப்பு அனைத்திற்கும் பொதுவான முறையெனக் கருதலாம்.

அமெரிக்க இந்திய இரொகுவாய் (ஐசழஙரழளை) பழங்குடியிடம் காணப்பட்ட இதே வகைப் பண்பாட்டம்சத்தை எங்கெல்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “ஒவ்வொரு பழங்குடியினுள்ளும் ஒருவருக்கொருவர் உதவுவதும் பாதுகாப்பளிப்பதும் குறிப்பாக அந்நியரின் கெடுதிகளிலிருந்து பாதுகாப்பளிப்பதும் கட்டாயச் செயலாகும். ஒவ்வொரு பழங்குடி அங்கத்தவனும் பாதுகாப்பிற்குத் தனது பழங்குடியை நம்பியிருந்தான், அவ்வாறு நம்பியிருக்க வேண்டியிருந்தது. ஒருவனுக்குச் செய்த அநியாயம் முழுப் பழங்குடிக்கும் செய்ததாகக் கருதப்பட்டது. பழங்குடியின் இரத்த இணைப்பிலிருந்தே இரத்தப்பழி வாங்கும் கடப்பாடு தோன்றுகிறது.’ (1972 : 86)

நிறுவனப்படுத்தப்பட்ட சமாதான, பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் உருவாகாத தொன்மைச் சமூக அமைப்பில் பழிக்குப்பழி அவற்றின் இடத்தை நிரப்பியது. எதிரிகளை மன்னிப்பதும் சமரஸம் செய்து கொள்வதும் ஒழுக்கமென அறபுப் பழங்குடியினன் கருதவில்லை. நாடோடி அறபியரிடம் மாத்திரமல்ல உயர்ந்த நாகரிகத்திற்குரியவரெனக் கருதப்படும் பண்டைய எகிப்தியரிடமும் கிரேக்கரிடமும் இக்கருத்தே நிலவியது.

பழங்குடிச் சமூகத்திற்கும் நாகரிகச் சமூகத்திற்குமுள்ள வேறுபாடு போருக்;கு சமாதானத்திற்குமான வேறுபாடாகும். நாகரிகச் சமூகத்தில் சட்டத்தையும் ஒழுக்கத்தையும் நிலைநிறுத்துவதற்கென நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்களைப் பெற்றிராத பழங்குடிச் சமூக அமைப்பு யுத்த சூழலிலேயே தங்கிருக்க வேண்டியிருந்தது. பலாத்காரத்திற்குக் கட்டற்ற உரிமை வழங்கப்பட்டது ஹொப்ஸ் (ர்ழடிடிநள) இதனை “றுயசசந’’ எனக்குறிப்பிட்டார். இது நேரடியான யுத்தத்தைவிட பலாத்காரத்தைப் பிரயோகிப்பதற்கு அன்றிருந்த சுதந்திரத்தையே குறித்தது. நிறுவனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சமாதானத்தையும் மனிதன் தேடுவதில் உள்ள நியாயம் இந்த யுத்த சூழலிலிருந்தே (றுயசசந) தோன்றுவதாக ஹொப்ஸ் கருதுகிறார். (யுளாடநல ஆழவெயபர, 1968 :201)

இஸ்லாத்தின் தோற்றத்தின் பின்னரும் பழங்குடியின் யுத்த சூழல் இருந்தது. இது பண்டைய “முர்ருஆ’’ வின் பழிக்குப் பழி, பதிலுக்குப் பதில் என்ற நிலை நீடித்திருந்ததையே காட்டுவதாகும் (1967 : 24) சமூகத்தில் இரத்தக் களரியை கட்டுப்படுத்தும் அரணாகப் பழிக்குப் பழி இயங்கியதை இஸ்லாம் அறிந்திருந்தது. “விசுவாசிகளே கொலைக்குப் பழிவாங்குவது உங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கிறது’’ (அத் 2 : 178). எனக் குர்ஆன் குறிப்பிட்டது. “அறிவாளிகளே கொலைக்குப் பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை உண்டு’’ என்று மற்றோர் இடத்தில் குர்ஆன் போதும் சமாதானத்தை ஏற்படுத்த உதவும் நிறுவனங்;களற்றநிலையில் பழிக்குப்பழியின் சமுதாயப் பங்கினை அது உணர்த்துகிறது, எனக் கொள்ள வேண்டும்.

எனினும் பழிக்குப் பழி தொடர்ந்தும் அதன் பழைய நிலையில் இருந்து வருவதை புதிய சூழ்நிலை அங்கீகரிக்கவில்லை. பழிக்குப்பழியில் மாற்றம் நிகழ முன்னுரிமை அளிக்கப்பட்டது. பழிக்குப் பழி என்பதிலும் அல்லது பதிலுக்குப்பதில் என்பதிலும் ஏற்பட்ட இம் மாற்றத்தை நபிகள் தமது நீர்திருத்தங்களில் முக்கியப்படுத்தினர். பழிக்குப் பழியே கௌரவமானது என்ற மனோபாவத்தை மாற்றவும் மன்னிப்பும் கௌரவமானதே என்பதை நிலை நிறுத்தவும் நபிகள் பெரிதும் முயன்றனர். இது பழங்குக்கே உரித்தான அடிப்படை ஒழுக்க அமைப்பில்;;;;;;; ஏற்பட்ட மாற்றமாகும். “பண்டைய முர்ருஆவில் நபிகளின் புதிய தீன் ஏற்படுத்திய மாற்றமென இங்னஸ் கோல்ட்ஷியர் இதனைக் குறிப்பிடுவார்.

பழிக்குபழி அதன் பாத்திர முக்கியத்துவத்தை இழந்து கொண்டிருந்தது என்பதே உண்மை. பழிக்குப்பழிக்கு அனுமதி இருந்தபோதும் அதன் கொடூர நடைமுறைகளை குர்ஆனின் கட்டளைகள் தடுத்தன. “பழிக்குப்பழியில் வரம்பு மீற வேண்டாம்’’ (அத், 2 : 278) எனக் குர்ஆன் எச்சரிக்கை செய்ததுடன் மன்னித்தலை வீர செயல் எனவும் வர்ணித்தது.

எவரேனும் பொறுத்துக்கொண்டு மன்னித்து விட்டால் இது
மிக்க வீரம் பொருந்திய காரியங்களில் உள்ளதாகும். (அத், 42:43)

குல அரசியல்

குலம் அல்லது பழங்குடி தனக்கெனச் சில எளிமையான அதிகார அமைப்புக்களைப் பெற்றிருந்தது. ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு தலைவனிருந்தான். அவனைச் “செய்யித்’’ அல்லது “ஷெய்க்’’ என அழைத்தனர். செய்யித் தலைவனாக இருந்தபோதும் அவனது தலைமைத்துவம் மட்டுப்படுத்தப்பட்டதாகும். ஷெய்க்கிடம் சில அதிகாரங்கள் இருந்த போதிலும் தீhப்புக்களை அவன் தனது சுய பொறுப்பில் எடுப்பதில்லை. மற்றவர்களின் ஆலோசனைகளை அவன் பெற வேண்டியிருந்தது.
சமாதான காலத்தில் தமது குலத்தவர் மேய்ச்சல் நிலங்களுக்குச் செல்வதைக் கண்காணிப்பதும், முகாமமைப்பதற்கு பொருத்தமான இடத்தைத் தெரிவு செய்வதும் ஷெய்க்கின் பணியாகும். குலத்திற்குள் ஏற்படும் பிணக்குகளைத் தீர்த்து வைப்பதும் குலங்களுக்கிடையிலான பேச்சு வார்த்தைகளில் குலத்தின் சார்பாகப் பங்குகொள்வதும் செய்யிதைச் சார்ந்ததாகும். எனினும் யுத்த காலத்திற்குரிய தலைமையைக் குலம் வேறொருவருக்கே வழங்கியது. நீதிப் பிரச்சினைகளில் தீர்ப்பளிப்பதற்கு மூதாதையினரின் மரபுகளை நன்கறிந்த போதிய அறிவுள்ள (ஹக்கீம்) ஒருவரே தேர்ந்தெடுக்கப்பட்டார். கொலைகளுக்கான இழப்பீட்டை அல்லது குருதி நிதியைப் (டிடழழன – அழநெல) பெற்றுத்தரும் பொறுப்பு செய்யிதுடையதாகும்.

பதவிகளின் தலைவர்களுக்கு மெய்ப்பாதுகாவலர்கள் இருக்கவில்லை. தலைவனை விளிக்கும் கௌரவச் சொற்களும் கிடையாது. தலைவனுக்கும் குலத்தின் சாதாரண அங்கத்தவர்களுக்குமிடையே “அந்தஸ்து’’ பேதம் இருக்கவில்லை. பாலைவனப் பழங்குடி சமூகத்தின் ஒருமைப்பாட்டை வளர்க்கும் முக்கிய சமூக அலகாக செய்யிமத் செயல்பட்டார்.

இரொகுவாய்ப் பழங்குடிகளின் “சாகெமிற்கும்’’ “செய்யிதிற்கும்;;;;’’ ஒற்றுமைகள் அதிகமுள்ளன. குல ஐக்கியம் சாகெமின் கைகளிலிருந்தது சாகெமிடமோ, செய்யிதிடமோ அவர்களின் ஆணைகளை நிறைவேற்றும் பலாத்காரச் சாதனங்;;;கள் எதுவுமே இருக்கவில்லை. இரொகுவாய்த் தலைவனின் அதிகாரம் தந்தையின் இடத்தையும் தார்மீகத் தன்மையையும் கொண்டிருந்தது என்ற கருத்து செய்யிதிற்கும் பொருந்துவதாகும். அறபுப் பழங்குடிகள் உட்படப் பொதுவாகப் பழங்குடிகள், குல ஒருமைப்பாட்டைக் கட்டிக் காப்பதற்கு பலாத்காரமற்ற ஜனநாயக ரீதியில் முறைகளிலேயே பெரிதும் தங்கியிருந்தனார்.

மானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்

அத்தியாயம் 7
பழங்குடி

இன்று உலகம் எவ்வாறு தேசிய அரசு (யேவழைn – ளுவயநள) களுக்குச் சொந்தமானதாக உள்ளதோ, அதே போல பல ஆயிரம் ஆண்டுகளின் முன்னர் இதற்குச் சமமான இவ்வுலகு பழங்குடிக்;குச் சொந்தமானதாக இருந்தது. (ளுயாடiளெ ஆயசளாயடடஇ 1968:195) நாகரிகம் தொடர்ந்து மாறிவரும் வளர்ச்சியின் ஒரு கட்டமாகும். பழங்குடி (வுசiடிந), நாகரிக உலகுக்கு வழிவகுத்த சமூக அமைப்பாகும். முன்னரிலும் பார்க்க உயர் கலாசாரத்தைக் கொண்ட சமூக அமைப்பு பழங்குடியிலிருந்தே உருவாகி வளர்ந்தது.


மனிதன் வேட்டையாடி உணவு சேகரித்து வாழ்ந்த காலத்தைவிட புதிய கற்காலம் மாறுபட்டிருந்தது. புதிய கற்காலம் (நேழடiவாiஉ Pநசழைன) வழங்கிய விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற புதிய பொருளாதார முறைகளின் மூலம் உலக நிலப்பரப்பின் பெரும்பகுதியை பழங்குடிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். பழங்குடி அமைப்பும் அவர்களின் பண்பாடும் புதிய கற்கால உற்பத்தித் தொழில் நுட்பங்களுடன் தொடர்புபட்டிருந்தது. சுற்றாடலை ஆக்க ப+ர்;வமாக மாற்றுவதற்கான தொழில் நுட்ப முறைகளையும் இப்பழங்குடியினர் நன்கறிந்திருந்தனர். (1968 : 197)

தாவரங்களையும் மிருகங்களையும் வீட்டுச் சூழலுக்குரியதாக மனிதன் மாற்றியதிலிருந்தே புதிய கற்காலத்தின் புரட்சி ஆரம்பமாகின்றது. இதன் மூலம் புதிய கற்காலத்து மக்கள் வேட்டையாடி வாழ்ந்த சமூகத்தைவிட உயர்ந்த சமூக ஒழுங்கமைப்பையும் பண்பாட்டையும் பெற்றவர்களாக நாகரிக வளர்ச்சி நிலையில் காணப்பட்டனர்.

பயிர்ச் செய்கையும் வீட்டுத் தேவைக்கான மிருகங்கள் பழக்கப்பட்டமையும் உயர்தரப் பொருளாதார உற்பத்தியையும் அதற்கும் மேலாக உறுதியானதும் நிலையானதுமான உற்பத்தியையும் ஊக்குவித்தன. எங்கெல்ஸின் வார்த்தைகளில் கூறுவதாயின் :

மிருகங்களைப் பழக்குவதும் மந்தைப் பெருக்குவதும்
இது வரை கேட்டறியாத மூலதாரங்களிலிருந்து பெற்ற
செல்வமாக முற்றிலும் புதிய சமூக உறவுகளைத்
தோற்றுவித்தன……. இப்பொழுது கதிரைகள், ஓட்டகைகள்,
கழுதைகள், எருதுகள், ஆடுகள், பன்றிகள் முதலிய மந்தைக்
கூட்டங்களும் மேய்ச்சல் தொழில் புரிந்த மக்கள் சமூகங்களும்
உருவாகின. இவற்றினூடாக மக்கள் செல்வப்
பெருக்கத்தையும் பெற்றனர். இந்தியாவில் கங்கை, சிந்து
சமவெளியிலும் ய+ப்ரடீஸ், தைகிரிஸ் நதிக்கரை அருகே
வாழ்ந்த செமிட்டியர்களிடையேயும் இதுவே நடைபெற்றது.
(நுபெநடளஇ197 : 54)

சமுதாயப் படிமுறை வளர்ச்சியில் மூன்று சமுதாய நிலைகளை மானிடவியலாளர் எடுத்துரைப்பர். அவை (1) சமத்துவ சமுதாயங்கள் (நுபயடவைநசயைn ளுழஉநைவநைள) (2) தரநிலைச் சமுதாயங்கள் (சுயமெ ளுழஉவைநைள ) (3) வர்க்க, சாதி சமுதாயங்கள் (ஊடயளளஇ ஊயளவந ளுழஉநைவரநள) என வகையீடு செய்யப்பட்டுள்ளன. இதுவரை நாம் அவதானித்த ஆதி சமுதாய அமைப்புக்கள் சமத்துவ சமுதாயப்படி நிலைக்குரியனவாகும். (சீ. பக்தவத்சல பாரதி, 1990 : 291)

சமத்துவ சமுதாய அமைப்பில் முதலில் குரக்குழு (டீயனெ) வும் அடுத்த நிலையில் பழங்குடியும் இடம் பெறுகின்றன. வேளாண்மை தோன்றிய காலம் வரை பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் - ஏறக்குறைய அனைத்து சமுதாயங்களும் குலக். குழுக்களாகவே வாழந்தனரென மானி;டவியல் கூறுகிறது.

சமத்துவ சமுதாயங்களில் வளங்கள் சமமாகப் பகிரப்பட்டன. சமுதாயத் தகுதியிலும் வேறுபாடிருக்கவில்லை. குலக்குழுவை அடுத்துத் தோன்றிய பழங்குடியில் அதிக அங்கத்தவர்கள் அல்லது குடும்பங்கள் காணப்பட்டன. பழங்குடிச் சமுதாயம் குடும்பங்களுக்கும் குடும்பத் தலைவர்களுக்கும் முக்கியத்துவமளித்தது. “ஒவ்வொரு குழுவும் நிலப்பகுதியை வரையறுத்துக் கொண்டனர். (1990 : 294) வர்க்க வேறுபாட்டிற்கு இடமளிக்கும் தனி உடைமைப் பொருளாதாரம் வளரும் வரை பழங்குடியிலும் பெரும்பாலும் சமத்துவ நிலையே காணப்பட்டது.

குலக்குழுவை விடப் பழங்குடி இரத்த உறவுத் தொகுதிகளை அதிக அளவில் பெற்றிருந்தது. இன்னொரு வகையில் பல இனக்குழுக்களின் தொகுதியாகவும் பழங்குடி அமைந்திருந்தது எனக் கூறலாம். பழங்குடி குழுக்குழுவை விட அளவிற் பெரிதாக இருந்தமையால் அது ஐக்கியமின்மைக்கு இட்டு செல்வது இலகுவாயிற்று. எனவே பழங்குடிகளிடையே இயங்கும் சமதரத்தையுடைய கூறுகளிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்குரிய புதிய ஒழுங்கு முறைகளும் உருவாகின.

அறேபியாவில் பழங்குடி

இஸ்லாத்தின் தோற்றத்தின் போது அறேபியா பழங்குடி சமூக அமைப்பில் இருந்தது. பேராசிரியர் மொண்ட் கொமறி வொட் கூறுவது போல பழங்குடி என்பதைவிட நபிகள் காலத்தில் ஒரே சமுகமக ஒரே பொது வாழ்க்கையைப் பெற்றிருந்தனர் என்று ஒரு மக்கள் குழுவினரைக் குறிக்கும் வேறொரு பொருத்தமான எண்ணக்கருவை முன்வைப்பது கடினம்.

தொன்மை அறேபியரை நாடோடிகள், ஓரிடத்தில் தரித்து வாழ்ந்த விவசாயிகள், வணிகர்கள் என்று மூன்று பிரிவினராக வகுக்கமுடியும். எனி;னும் பழங்குடியே இவ்வலகுகள் அனைத்தினதும் பொதுச் சமூக அமைப்பாக இருந்தது.

இஸ்லாத்திற்கு முந்திய அறேபியாவில் நாடோடிகளே (ழேஅயனள) பெரும்பான்மையோராக இருந்தனர். இவர்கள் “பதவி’’ (டீயனயற) எனப்பட்டன. பாலைவன நாடோடிகளைக் குறிக்கும் விஷேட பதம் இதுவாகும். சுதப்பிகளிலும் (ளுவநிpநள) அரைப் பாலைவனங்களினதும் பதவிகள் பரந்து வாழ்ந்து வந்தனர். நபிகள் நாயகம் பிறந்த அறேபிய, மத்திய பாகங்களில் பதவிகள் அதிகளவிலேயே காணப்பட்டனர்.

பதவி, நாடோடி வாழ்க்கையில் இருந்தான். பாலைவனப் பிரதேசங்களின் ப+ர்வீக வாழ்க்கை முறை அதுவென இப்னு கல்தூன் கூறுவர் நாடோடிகள் எனப்படுவோர் அர்த்தமற்று அலைந்து திரியும் கூட்டத்தினர் அல்ல. “ஒரு குறிப்பிட்ட வாழிடத்தைக் கொண்டு நிலையான வாழாமல் பருவ காலத்திற்கேற்ப தொடர்ச்சியாக இடம் விட்டு இடம் சென்று வாழும் மக்களே நாடோடிகளாவர். இவர்கள் இடம் பெயர்ந்து வாழும் முறை ஒரு முறைப்படுத்தப்ட்ட சுழற்சியான இருக்கும். இதனாலேயே இவர்கள் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் என்று குறிப்பிடப்படுவதில்லை. (1990 : 470)

விவசாயத்தில் ஈடுபடுவோர், கால்நடை வளர்ப்போர் எனப் பாலைவன நாடோடிகளை இரு பிரிவில் அடங்குவர். கால்நடை வளர்ப்போரையும் இரு பிரிவினராகக் கொள்ளலாம். இதில் முதல் நிலை ஒட்டக வளர்ச்சிக்குரியதாகும். அறேபியாவின் முழுமையான நாடோடித்துவம் ஒட்டக நாடோடிகளையே சார்ந்திருந்தது. இவர்கள் முழு நாடோடிகளாவர். முழு நாடோடிகளே பாலைவனத்தில் உட்பிரதேசத்துள் சென்றனர். ஆடு வளர்ப்பில் ஈடுபட்டிருந்த நாடோடிகள் அரைநாடோடிகளாவர். பாலைவனத்தின் ஓரப்பகுதிகளில் மட்டும் இவர்கள் சஞ்சரித்தனர்.

ஒட்டக நாடோடிகள்

ஒட்டகமோட்டிகள் பாலைவனத்தில் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டனர். ஒட்டகத்திற்குத் தேவையான உணவு, நீர், வெப்பம் முதலியவற்றைத் தேடி ஒட்டக நாடோடிகள் பாலைவனத்தின் மத்திய பகுதிகளிலும் ஆழ்ந்த உட்பிரதேசங்களிலும் பிரவேசித்தனர். ஒட்டக நாடோடி தரித்து ஓரிடத்தில் வாழும் மக்கள் கூட்டத்திலிருந்து பிரிந்து தனித்துவமானவனாக நின்றான். பாலைவனமும் ஒட்டகமும் அவனது வாழ்க்கைத் தீர்மானித்தன.

பாலைவன வாழ்க்கைக்கு பதவிகள் ஒட்டகத்தை நம்பியிருந்தனர். மறுபுறத்தில் ஒட்டகங்களில் வாழ்க்கைகாகவும் பதவிகள் பாலைவன வாழ்க்கையை நாடினர். சுதப்பியிலும் வரண்ட பாலைவனத்திலும் வாழக்கூடிய ஒட்டகம் பதவியின் உற்றதுணையாகியது வியப்புக்குரியதன்று.

கி.மு. 2000 ம் ஆண்டளவிலேயே ஒட்டகம் வீட்டு மிருகமாக அறிமுகமாகியது. பாலைவன வாழ்க்கைக்குப் பயனுள்ள மிருகமாக ஒட்டகம் அறிமுகமானதன் பின்னர் பதவி தனது வாழ்க்கையை அதனோடு மாற்றிக் கொண்டான். ஒட்டகத்திற்குப் பாலைவன உட்பகுதியில் உள்ள புதர்களும், உவர் நீரும், பாலை மணலும், வெப்பக் காற்றும் இன்றியமையாத வையாகும். எனவே ஒட்டகப் பராமரிப்பு அவனைப் பாலைவனத்தின் ஆழமான உட்பகுதிகளுக்கு இட்டுச் சென்றது.

பதவிகளைப் பொறுத்தவரை ஒட்டகம் வெறும் பாலைவனக்கப்பல் என்பதற்கும் மேலானதாகும். பதவி தனது பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒட்டகத்தையே நம்பி வாழ்ந்தான். ஒட்டகம் அவனது வர்த்தக்காவரன், மணமகளுக்கான சீதனம், கொலைக் குற்றத்திற்கான இரத்த வெகுமதி, சூதாட்டத்தில் இலாபம், பணம், கூடாராம், பாதணி, மருந்து, வாசனைத்திரவியம். இவ்வாறு ஒட்டகத்திலிருந்து அவன் நேராகவும் மறைமுகமாகவும் பெற்ற பலன்கள் பல. எலொய் ஸ்ப்ப்ரெஞ்சர் (யுடழளை ளுpசநபெநச) “அறேபியரை ஒட்டக ஒட்டுப்பண்ணிகள்’’ என்று குறிப்பிட்டார். பதவிக்கு ஒட்டகம் அழகிய பிராணி. ஒட்டகத்தை உவமித்துப் பெண்களின் அங்கங்களை அவன் வர்ணித்தான். அதன் குளம்பொலிகளின் தான். அதன் குளம்பொலிகளின் தாளத்திற்கிசைவாக இனிய ராகங்களை அவன் உருவாக்கினான்.

பதவிக்கு வாழிடமும் நிரந்தரமற்றது பாலைவனப் பசுமையும் தோன்றி மறைவது. ஒரு பசுந்தரையின் வரட்சி மற்றொரு பசிய நிலத்தை நோக்கி அவனை விரட்டியது. மேய்ச்சல் நிலத்தையும் நீரையும் தேடிச் செல்வது அவனது வாழ்க்கையின் விதி. ஒரேவிதமான சுழற்சி வாழ்க்கையில் அவன் இருந்தான். மாற்றத்தை அவன் விரும்பாமைக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். தனிமையும் பட்டினியும் தொடர்ச்சியான பயணங்களும் எதிரிகளின் அச்சமும், இயற்கை உபாதைகளும், அவனைக் கடின குணமுள்ளவனாக்குகின்றன. ஆனால் இந்த அனுகூலமற்ற நிலைமைகள் எதுவுமே அவனது முயற்சிகளுக்குத் தடையாயிருக்கவில்லை. இவற்றை எதிர்கொள்ள அவன் தயராக இருந்தான். ஒட்டகமும் துணிவும் அவனது இப்பிரயத்தனத்திற்கு பெரும் துணையாக விளங்கின.

நாடோடிகள் தமது வாழ்க்கைக்குரிய கட்டாயமான, வெளிப்படை நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது. அதனை அவர்கள் கடந்து செல்வது கடினம். அதனால் அவர்கள் பாலைவனத் தேவைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் தம்மை வரையறுத்துக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர் (ஐடிரn முhயடனரஅ. 1958 : 249).

பாலைவனப் பசுந்தரைகளில் விவசாயம் நடைபெற்றது. பேரீச்சைச் செய்கைக்கு இவை பிரச்சித்தி பெற்றிருந்தன. மலைப் பிரதேசங்களில் உணவுத் தானியங்கள் பயிரிடப்பட்டன. இவ்வகைச் செழிப்பான பகுதிகள் மக்களின் வாழிடங்களாயின. நபிகள் காலத்தில் மக்கள் தரித்து வாழ்ந்த யத்ரிப் (மதீனா) சிறப்பான பசுந்தரைப் பொருளாதாரத்தைப் பெற்றிருந்தது. இவ்வாறு ஓரிடத்தில் தரித்து வாழ்ந்தோரின் வாழ்வுக்கும் நாடோடிகளின் வாழ்வுக்குமிடையில் இயற்கை ரீதியாகவே வேறுபாடுகள் காணப்பட்டன. தரித்து வாழ்வோரோடு ஒப்பிடுகையில் நாடோடிகளின் வாழ்க்கை நாகரிகமற்றதாகும். தரித்து வாழ்வோரின் சௌகரியத்திற்கும், ஆடம்பரத்திற்கும் இது முற்பட்ட வாழ்க்கையாகும்.

சுற்றாடல் வேறுபாடுகள் தான் மக்கள் தமது வாழ்வை வௌ;வேறு வழிகளில் உருவாக்கி கொள்ளக் காரணமாகிறது. தரித்து வாழ்வோரும் நாடோடிகளும் தேவைகளின் அடிப்படையில் அமைந்த இரு இயற்கைக் குழுக்களாகும் (இப்ன் கல்தூன்).

சமூக அமைப்பு

பதவியின் சமூக பழங்குடியாகும். ஒரு பழங்குடி பல குலங்களைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு பழங்குடியும் ஒரு முகாமையும் குடும்;பங்களுக்கென தனித்தனி கூடாரங்களையும் பெற்றிருந்தன. ஒவ்வொரு குலமும் அல்லது பழங்குடியும் அவற்றிற்குரிய பெயர்களால் அழைக்கப்பட்டன.

பழங்குடியின் இரத்த உறவு வம்சாவழித் தொடர்ச்சி, தாயிலிருந்து அல்லது தந்தையிலிருந்து கணக்கிடப்பட்டது. உலகின் ஆரம்பக் குல அமைப்பு தாய்வழிக் (ஆயவசடைநnயைட) குரியதென்பது பொதுவான கருத்து. தாய்வழி மரபு ப+ர்வீக மனித குலத்தின் ஒழுங்கமைப்பின் ஆரம்ப வடிவமென எல். எச். மோர்கனும் (டுநறளை ஆழசபயn) எங்கெல்லாம் நிறுவ முயன்றனர். இவ்வமைப்பு பொருளாதார மாற்றங்களால் பின்னர் மாற்றமடைந்தன எனக்கருதுவர். தாய்வழி, குலச் சமுதாயத்தின் ஆரம்பக் கட்டமாகும். மரபு வழி பெண்ணிடமிருந்து கணக்கிடப்படுவதை இது குறிக்கிறது. பெண்கள் ஆண்களை அடக்கியாண்டனர் என்ற கருத்தில் இது கொள்ளப்படுவதில்லை. எனினும் பொருளாதார முக்கியத்துவமும் தாய்த் தலைமை மரபும் இதிற் காணப்பட்டது.

அறேபியப் பழங்குடி அமைப்பு, நபிகள் காலத்தில் தந்தைவழி மரபையே பெற்றிருந்தது. எனினும் தாய்வழி மரபை அறபுப் பழங்குடிகள் பெற்றிருந்தமைக்கு அடையாளங்களிருந்தன. (பார்க்க, துரசபi ணயலனயைnஇ 1987: 06) தாயின் கௌரவமிக்க இடம் இன்னும் மறைந்துவிடவில்லை, என்பதை அவர்களின் கலாசார மரபுகள் எடுத்துக் காட்டின. குலங்களைக் குறிக்கும் பெயர்களில் பெண்களின் பெயர்களும் காணப்பட்டன. (1937 : 26) இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னர் மனைவியை விடத் தாயைக் கௌரவிக்கும் வழக்கம் ஆழமாக வேரூன்றியிருந்தது. மனைவியைவிடத் தாயின் உறவு நிரந்தரமானதென மதிக்கப்பட்டது (1987 : 06)

அறேபியக் குல மரபில் தாய்வழி மாமனுக்கும் முக்கியத்துவமிருந்தது. இதற்குரிய உதாரணங்களில் நபிகளின் வாழ்வில் இடம் பெற்ற தாய் மாமன்களை நோக்கிப் பயணமான சம்பவங்கள் கவனத்திற்குரியதென ஜுர்ஜிஸெய்தான் விளக்குகிறார். (பார்க்க, குறிப்பு : 04).

தாயுரிமை மறைந்து தந்தை உரிமை நிலைபெறும் போது பெண்ணின் சமூக அந்தஸ்து பாதிக்கப்படுகிறது. பெண், அடிமையாகவும் வெறும் குழந்தைகள் பெறுபவளாகவும் ஒடுக்கப்படும் நிலை உருவாகிறது. நபிகளின் கால அறேபியாவின் நிலை இதுவாகவே இருந்தது. தந்தைவழிக் குடும்பத்தின் முக்கிய அடையாளமான பலதார மணம் தாரளமாகவே அறேபியப் பழங்குடி மரபில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. “செமித்திய வடிவத்தில் இந்தக் குடும்பத் தலைவன் பலதார மண முறையில் வாழ்கிறான்’’ என எங்கெல்ஸ் குறிப்பிடுவார்.

உண்மையில் பலதார மணமென்பது பணக்காரர்களுக்கும் பிரபுகளுக்குமுரிய சலுகையாகும். பிரதானமாகப் பெண் அடிமைகளை விலைக்கு வாங்குவதன் மூலம் இச்சலுகையை சேகரிக்கப்பட்டனர். செமித்திய வடிவத்தில் குடும்பத் தலைவனே இச்சலுகைiயை அனுபவித்தான். அதாவது பலதார மணமென்பது எல்லோருக்குமுரியதாக இருக்கவில்லை. இம்மணமுறையில் சீர்திருத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை நபிகளே முன்வைத்தனர்.

இது எவ்வாறெனினும் நபிகள் காலத்தில் குல உணர்ச்சியும் வம்ச வழித் தொடர்ச்சியும் ஒரு தந்தையிலிருந்தே தொடரும் முறை முதலிடத்தைப் பெற்றுவிட்டது. (1987 : 06)

இரத்த பந்தம் அல் அசபிய்யா

ஒரு பழங்குடிச் சமூகம் அதன் நேரடியான இரத்தக் கலப்பினாலேயே நிர்ணயிக்கப்பட்டது. குல அங்கத்தவர்களிடையே உறுதியான பிணைப்பினை ஏற்படுத்தும் முதற் சாதனமாக இரத்த உறவு விளங்கியது. உறவின் மறுபொருள் குல அங்கத்தவர்களின் பாதுகாப்பாகும். தந்தை வழியாயினும் தாய்வழியாயினும் குல அங்கத்தவர்கள் அனைவரினதும் நரம்புகளிலும் ஒரே இரத்தம் ஓடுவதாகவே அறேபியர் கருதினர்.

இரத்த பந்தம் என்பது பாசப்பிணைப்பு மட்டுமல்ல அது குலத்தின் வலுவுமாகும். கைமாறு கருதாத உதவியையும் பாதுகாப்பையும் அது குல அங்கத்தவர்க்கு வழங்குகிறது. பழங்குடிக் கலாசாரத்தில் ஒரு குழுவினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இதனை இப்னு கல்தூன் அல் அசபிய்யா எனக் கூறுகிறார்.

குழு உணர்வு இரத்த உறவினால் மட்;;டும் ஏற்படுவதாகும்.
அல்லது ஏதாவதொருவகையில் அதனோடு
தொடர்புடையதாகும். இரத்த பந்தத்தை மதிப்பது அற்ப
விதிவிலக்குகளைத் தவிர மனிதனின் பொதுவான
சுபாவமாகும் (1958 : 264).

பழங்குடி மக்களின் எளிய பொருளாதார நடவடிக்கைகளும், சமூக வாழ்வும், சுற்றாடல் பிரச்சினைகளும் அவர்களிடையே குறிப்பிட்ட வகையான லௌகீக, ஒழுக்க குணாம்சங்களைத் தோற்றுவிக்கின்றன. நாடோடிகளாயினும் தரித்;து வாழ்வோராயினும் அவர்கள் சிறு தொகையினராக இருந்தமையும் அவர்களது எளிய பொருளாதார முறையும் அவர்களைப் பெரிதும் சுதந்திரமானவர்களாக வாழ்வதற்கே இடமளிக்கின்ற.ன அரசு போன்ற ஆதிக்க நிறுவனங்கள் அவர்களுக்குத் தேவையாயிருக்கவில்லை. எனினும் அவற்றின் இடத்திற்கு “சமூக ஒருமைப்பாடு (அசபிய்யா) என்ற எளிய வடிவத்தைப் பெற்றிருந்தனர்’ என்பார் இப்னு கல்தூன்.

இரத்த பந்தத்தின் அடிப்படையிலேயே அசபிய்யா என்ற எண்ணக்கருலை இப்னு கல்தூண் முன்வைத்தார். இரத்த உறவினருக்கு ஆபத்து நேராது பாதுகாப்பதும், தனது இரத்த உறவினர் நீதியற்ற முறையில் தாக்கப்பட்டால் அதற்காக வெட்கமடைவதோடு எந்த எதிர்ப்பு வரினும் உறவினருக்காக அப்பிரச்சினையில் தலையிடுவதும் மனிதனின் இயல்பான தூண்டுதல் என்று இப்னு கல்தூண் விளக்குகிறார். பழங்குடிச் சமூக அங்கத்தவர்களின் பாதுகாப்பிற்கென அன்;று மனிதனுக்கு இருந்த ஒரே வழி இவ்விரத்த பந்தமே என்பது அவரது கருத்தாகும். “இரத்த உறவினர்களை நேரடியாகப் பாதுகாப்பது என்ற உணர்விலிருந்தே அசபிய்யா தோற்றம் பெறுகிறது. இது குடும்பத்தையும் குலத்தையும் பாதுகாக்கும் வடிவமாகவும் அக்காலத் தேவைகளுக்கேற்ப இந்த இயல்பான உணர்வு திடமான சமூக வடிவமாகவும் வளர்ச்சியுறுகிறது.’’ (ஆராளin ஆயானiஇ 1957 : 196) என்ற முஹ்ஸின் மஹதியின் கருத்தையும் இங்கு நோக்கலாம்.
இரத்த பந்தத்திற்கு நபிகள் நாயகம் வழங்கிய முக்கியத்துவத்தையும் இப்னு கல்தூன் எடுத்துக் காட்டினார். தனது கருத்துக்கு ஆதாரவாக முடிந்த வரை உங்கள் இரத்த உறவை உறுதிப்படுத்துவதற்காக உங்கள் வம்சத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்’’ என்ற நபிகளின் வாக்கினை அவர் முன்வைத்தார். (பார்க்க, 1958 : 264) அல் குர் ஆனிலும் இரத்த பந்தத்திற்கு முக்கியத்துவம் தரும் கூற்றுக்கள் உள. (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக்கலப்புப் பந்துத்தவத்திற்கும் மதிப்பளியுங்கள்’. (அத், 4:1) என்பது அத்தகைய கூற்றுக்களில் ஒன்றாகும்.

பாலைவனப் பதவிகளின் இலட்சிய ஒழுக்கம் பாலைவன வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அவனது இலட்சிய ஒழுக்கம் “வீர காவிய உணர்ச்சிவாதமாகும்.’’ அது “முர்ருஆ’’ (ஆரசர’யா) எனக் கூறப்பட்டது. வீரமரபும் பெருந்தன்மையும் இதன் இரு பிரதான பண்புகளாகும். அவனது சொல்லலங்காரத் திறனையும் இது குறித்தது. குடும்ப பந்தத்தோடு இணைந்திருந்த கடமைகள், பாதுகாப்பு, விருந்தோம்பல், இரத்தப்பழியை நிறைவேற்றும் பாரிய பொறுப்;பு என்பனவும் இதில் அடங்கியிருந்தன. (1967 : 22) யுத்தத்தில் தீரம், துயரத்தில் பொறுமை, பழிவாங்குவதில் தீவிரம், பலவீனருக்கக் கருணை எனப் பாலைவனப் பதவிகளின் “முர்ருஆ’’ வை ஆர். எ. நிக்கல்ஸன் குறிப்பிடுவார்.

அடிப்படையில் “முர்ருஆ’’ தனி நபருக்குரியதாயினும் சமூக உணர்விலும் அதற்குப் பங்கிருந்தது. பழங்குடிகளின் ஐக்கியம் நிலைபெற அதன் துணை பெரிதும் உதவியது. (1986 : 63) “முர்ருஆ’’ வின் ஒழுக்கப் பண்புகள் பாலைவனத்தின் கடின வாழ்க்கைக்கு ஈடுகொடுக்கக் கூடிய இயற்கையின் ஆற்றல்களுக்கு எதிரான மானிடக் கூட்டுறவென பேராசிரியர் மொண்ட் கொமறிவெட் குறிப்பிடுவார்.

மானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்

அத்தியாயம் 6

கட்டிடக்கலை



தென் அறேபியாவில் கருங்கற் பாறைகள் செறிவாகக் காணப்பட்டன. இதனால்
கட்டிடக் கற்கள் தென் அறேபியர் இவற்றிலிருந்து இலகுவாகப் பெற்றுக் கொண்டனர். தூண்களுக்குக் கருக்கற்கள் பயன்படுத்தப்பட்டன. கட்டிடங்களில் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அலங்கார வேலைப்பாடுகளுக்கும் கவர்கள் அமைப்பதற்கும் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. சுவர்களிலும் தூண்களின் மேற்பகுதிகளிலும் காணப்படும் மலர், மற்றும்
உருவ அலங்காரங்களிலும் தங்கமும் ஏனைய உலோகங்களும் பயன்படுத்தப்பட்டிருந்தன.

பல மாடிகளைக் கொண்ட அரண்மனைகளும் வீடுகளும் சமய வழிபாட்டாலயங்களும் இங்கு காணப்படுகின்றன. கட்டிடங்கள் மெஸெபொட்டேமியக் கட்டிடங்களையும், செங்கல் வேலைப்பாடுகள் பபிலோனிய மரபையும் தழுவியிருந்தன. பாரிய கலைகளைத் தவிர சிறு அலங்காரக் கலைகளிலும் அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். தங்க, வெள்ளி முதலாம் ப+சப்பட்ட சபாவாசிகளின் கோப்பைகளும் ப+ச்சாடிகளும் உயர்வாக மதிக்கப்படுகின்றன. தங்க ஆபரணங்களும் அவர்களிடையே தாரளமாகப் புளக்கத்தில் இருந்தன.

வட அறேபியா

பெற்ரா

கி. பி. 2ம் நூற்றாண்டில் அறேபியாவிலும் சில அரசுகள் உருவாகின. இவை நாகரி;கமும் செல்வ வளமும் பெற்று விளங்கின. மேற்கிலும் கிழக்கிலும் ஊடறுத்துச் சென்ற பிரதான வர்த்தகப் பாதைகள் சந்திக்குமிடங்களில் இவ்வரசகள் காணப்பட்டன. இவற்றுள் நபேத்தியர் (யேடியவயநயளெ) அரசு முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியதாகும். நபேத்தியர் செல்வ வளத்தையும் முன்னேறிய நாகரிகத்தையும் பெற்றிருந்தனர். ஓரிடத்தில் தரித்து வாழ்க்கை நடத்திய இவர்கள் பல நகரங்களை உருவாக்கினர். அல்லது மறுசீரமைத்தனர். இவர்களது பொருளியல் நடவடிக்கை விவசாயத்திலும் வர்த்தகத்திலும் தங்கியிருந்தது.

பெற்ரா (Pநவசய) பல்மைரா (Pயடஅலசய) ஹீரா (ர்சைய) போன்றவை இவ்வகையில் குறிப்பிடத்தக்க நகரங்களாகும். பெற்ரா அறேபியாவிலிருந்து சிரியா நோக்கிச் செல்லும் காரவன் பாதையைத் தனது கட்டுபாட்டில் வைத்திருந்தது. வடமாநிலத்தில் வளர்;ச்சி பெற்ற வர்த்தக நிலையமாகவும் பெற்ரா நகரம் விளங்கியது. அங்கு காணப்பட்ட நீர்க் கால்வாய்களும் ஏனைய நீர்பெறுமிடங்களும் நபேத்தியரின் திறனை எடுத்துக் காட்டுவனவாக உள்ளன.

பெற்ராவின் மக்கள் நபேத்தியராகும். நபேத்தியருக்கு முன்னர் இது எடோமிட்டஸ் (நுனழஅவைநள) களின் வாழிடமாக இருந்தது. நபேந்தியரின் வர்த்தக, அரசியல் சாதனைகளின் பின்னணியில் இருவேறு நாகரிகங்கள் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. அவை பபிலோனியாவின் அஸ்ஸீரிய நாகரிகமும் கிரேக்க நாகரிகமுமாகும்.

நபேத்திய நாகரிகம்

கி. மு. 65 அளவில் பலஸ்தீனத்தில் சில பகுதிகளை நபேத்தியர் தம் வசமாக்கினர். குறுகிய காலத்திற்குள் நபேத்தியரின் ஆதிக்கம் அல் ஹிஜ்ர் (மதாயின் ஸாலிஹ்) வரை பரவியது. (வுhயஅரன) சமூகத்தவர் உருவாக்கிய கட்டிடங்கள் இங்குள்ளன. அல்ஹிஜ்ர், அல்உலா ஆகிய நகரங்களில் தமூத் மக்களின் நாகரிகம் காணப்பட்டமைக்குச் சான்றுகள் உளதென்பர். தமூத் மக்களின் செல்வளத்தையம் பொருளாதார நடவடிக்கைகளையும் அல்குர்ஆன் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நபேந்தியருக்கு முன்னதாகடீவா தமூத் மக்கள் வாழ்ந்துள்ளனர். கிரேக்க, நபேத்திய எழுத்துப் பொறிப்புக்கள் தமூத் வாசிகள் பற்றிக் குறிப்பிடுகின்றன. (1946 : 38) (பார்க்க, குறிப்பு : 03)

வேறு எந்த அறாபியரையும் விட இஸ்லாத்தின் தோற்றத்திற்குச் சற்று முன்னர் நபேத்தியரின் நாகரிகமே செல்வாக்குடன் விளங்கியதை இங்கு சுட்டிக் காட்டலாம். நபேத்தியர் தூய அறவு இரத்தத்தை உடையவர்கள், அல்லர் என்பர். அவர்கள் பெரிதும் அரெமெய்க் நாகரிகத்தைச் சார்ந்தவர்கள். அவர்களது எழுத்துப் பொறிப்புக்கள் அரெமெய்க் விபியிலேயே காணப்படுகின்றன. நபேந்தியர் கிரேக்கருடன் குறிப்பிடத்தக்க வகையில் தொடர்பு கொண்டிருந்தனர். நபேந்தியரின் கலைகளில் கிரேக்க உரோமச் செல்வாக்கு அதிகம் காணப்படுகின்றது.

நபேத்திய அரசு வீழ்ச்சியுற்றதன் பின்னர் பாலைவனப் பசுந்தரை நாடான பல்மைரா முன்னேற்றமடையத் தொடங்கியது. கி. மு. 1ம் நூற்றாண்டில் பல்மைரா வளர்ச்சியடைந்த நாகரிக அரசாக விளங்கியது. ஆசியாவையும் மத்தியதரைப் பகுதியையும் இணைக்கும் பிரதான வர்த்தகப் பாதையில் இந்நாடு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பல்மைரா மக்கள் உண்மையில் அறேபியராயினும் அரமெய்க், மற்றும் கிரேக்க நாகரிகச் செல்வாக்கு அவர்களிடையே காணப்பட்டது. அவர்களது எழுத்துப் பொறிப்புக்கள் அரமெய்க் மொழியாகவே விளங்கின. கிரேக்கத்துடன் அவர்களுக்கு நெருங்கிய தொடர்பிருந்தது. அவர்களது சமய மரபுகளிலும் கருத்துக்களிலும் அரமெய்க் மெஸெபொட்டேமிய செல்வாக்குக் காணப்பட்டது.

பெற்ரா, பல்மைரா, ஹீரா போன்ற நகரங்கள் சமய மரபில் தொன்மை உருவ வழிபாட்டுவாதத்தை (Pயபயnளைஅ) யே சார்ந்திருந்த போதும் இப் பழைய மரபை ய+த, கிறிஸ்தவ சமயங்கள் அசைக்க முயன்றன. குடியேற்றங்களும் இந்நாகரிக நகரங்களை முற்றுகையிடத் தொடங்கின. (பார்க்க, குறிப்பு : 04)

நாகரிகமும் வீழ்ச்சியும்

வட மேற்குப் பாகத்தில் வாழ்ந்த தமூதுக் கூட்டத்தினரும் பெற்ரா, பல்மைரா, ஹீரா முதலிய நகரங்களில் வாழ்ந்த சமூகத்தவர்களும் கட்டிடக் கலையில் உயர்ந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக கற்பாறைகளைச் செதுக்கிக் கட்டிடமமைக்கும் கலையில் (சுழஉம ஊரவ யுசஉhவைநஉவரசந) அவர்கள் தனித்திறமை பெற்றிருந்தனர்.

இளஞ்சிவப்பு, செம்மஞ்சல், ஊதா முதலிய இயற்கை வண்ணங்களால் ஒளிதரும் பாரிய செங்குத்தான கல்மலைகளைக் குடைந்தும் செதுக்கியும் பெரும் பாறை மாளிகைகளை இவர்கள் நிர்மணித்தனர். கோபுரங்களையும், ஆலயங்களையும், கல்லறைகளையும் அவர்கள் இதே அமைப்பில் உருவாக்கினர்.

பெற்ரா நகரில் வீதியை நோக்கி செங்குத்தாக அமைந்துள்ள கல்மலைகளில் செதுக்கப்பட்டுள்ள அழகிய கல்லறைகளும் கட்டிட முகப்புக்களும் இன்றும் அங்கு செல்வோரைக் கவர்வதாக உள்ளன. கல்மலைகளில் செதுக்கப்பட்ட எழுநூறு கல்லறைகள் பெற்ராவில் உள்ளன. இவற்றைவிட இயற்கையிலேயே அமைந்துள்ள நூற்றுக் கணக்கான குகைகளும் இப்பல்வர்ண கல்மலைச் சரிவுகளை அழகூட்டுகின்றன. பெற்ராவிலும் ஏனைய வட அறேபிய தொன்மை நகரங்களிலும் அமைந்துள்ள கல்மனைக் கட்டிடங்கள் பற்றி அல் குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது.

நீங்கள் உயர்ந்த இடங்களிலெல்லாம் (ஸ்தம்பங்கள் போன்ற)
ஞாபகச் சின்னங்கள் வீணாகக் கட்டுகிறீர்கள் நீங்கள்
அழியாது என்றென்றும் இருப்பர்கள் போல் உங்கள்
மாளிகையில் உயர்ந்த வேலைப் பாடுகளையும்
அமைக்கின்றீர்கள். (அத்,26 : 128, 129).

நீங்கள் அதன் ஸம ப+மியில் மாளிகைகளைக் கட்டியும்
மலைகளைக் குடைந்தும் வீடுகளை அமைத்துக் கொள்கின்றீர்கள்.
(அத், 7:74)

பெற்ரா, பல்மைரா, ஹீரா போன்ற பண்டைய நகரங்களில் இன்னும் தலை நிமிர்ந்து நிற்கும் மாளிகைகளும் தூபங்களும் தூர்ந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகளும் இவர்களின் கடந்த கால நாகரிகச் செழுமையின் சான்றுகளாக உள்ளன. இவ் வட அறேபிய நாகரிகத்தின் உட்தூண்டல்கள் கிரேக்க ரோம நாகரிகங்களைத் தழுவியனவாகும். தூண்களின் அமைப்பும் கட்டிடங்களின் முகப்புத் தோற்றமும் மலர் வடிவங்களையும் உருவடிவங்களையும் கொண்ட செதுக்கு வேலைப்பாடுகளால் அழகூட்டப்பட்டுள்ளன.

மக்கா ஒரு வர்த்தக நகரமாகத் தோற்றம் பெறுவதற்குச் சற்று முன்னர் வரை புகழுடன் விளங்கிய இந்நகர நாகரிகங்கள் அவை தோன்றி நிலைத்த சில நூற்றாண்டுகளுக்குள்ளாகவே மறைந்து போகின்றன. இந்நகரவாசிகள் விஷமங்கொண்டலைந்தனால் அவர்கள் அழிக்கப்பட்டதாகக் குர்ஆன் கூறுகிறது.

ஆகவே (முன்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) ப+கம்பம்
அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள்
வீடுகளில் (இறந்து) வீழ்ந்து கிடக்கப் பொழுது விடிந்தது. (அத்.
7:78).

இஸ்லாத்தின் தோற்றத்துக்குச் சற்று முன்னர் வரை நபேந்திய நாகரிகம் இருந்தது. நபேந்திய நாகரிகத்தில் அண்மைக்கிழக்கினதும் கிரேக்க ரோம நாகரிகங்களினதும் முக்கிய கூறுகள் சங்கமித்திருந்தன. எனினும் நபேத்தியரிடையே இஸ்லாத்திற்கு ஒப்பான சக்தி மிக்க சமய ஆர்வமோ பலம் பொருந்திய இராணுவமோ காணப்படவில்லை. சில நூற்றாண்டுகள் மட்டுமே நிலைத்திருந்த இந்நாகரிக நகரம் கி. பி. 100 அளவில் முற்றாக வீழ்ச்சியுற்றது.

தென் அறேபிய நகரங்களுடன் ஒப்பிடுகையில் வட அறேபிய அரசுகள் சிறிய அரசுகளாகும். மேலும் இச் சிறிய அரசுகள் உறுதியற்ற கட்;டமைப்பையும் குறைந்த ஆயுளையும் பெற்றிருந்தன. நாடோடி வாழ்க்கையில் இருந்த மக்கள் மீது தரித்து வாழ்ந்தோரின் நகர நாகரிச் செல்வாக்கினால் உருவான நகரங்கள் இவையாகும்.

வர்த்தக வளர்ச்சியினால் ஏற்பட்ட பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் இப்பிரதேசத்திற்கே உரித்தான புவியியற் காரணிகளும் இச்சிறு அரசுகளின் தோற்றத்தையும் அழிவையும் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகித்தன. இந்நகரங்களின் வளர்ச்சிக்கும் நாகரிகத்திற்கும் இந்நகரங்கள் பிரதான வர்த்தகப் பாதைகளில் அமைந்திருந்தமை மற்றொரு முக்கிய காரணமாகும்.

இப்பாதைகளில் நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகளை இப்பிரதேச அரசியல் தீர்மானித்தது. இப்பாதைகள் வர்த்தகத்திற்காகத் திறக்கப்படுவதும் அல்லது மூடப்படுவதும் அரசியலேயே தங்கியிருந்தது. இதுவே அறேபிய எல்லைப்புறச் சிற்றரசுகளின் தலைவிதியை நிர்ணயிப்பதாகவும் அமைந்தது. (1957 : 170)

தென் அறேபியாவிற்கும் வட அறேபியாவிற்குமிடையில் மிகத் தொன்மைக் காலந்தொட்டே தொடர்குகள் இருந்து வந்துள்ளன. நாகரிகங்களின் தோற்றமும் வணிக வளர்ச்சியும் அரசியல் சமயச் செல்வாக்கும் தென், வட அறேபியாக்களுக் கிடையில் பரஸ்பரத் தாக்கங்களை ஏற்படுத்தின. தென் அறேபியாவின் அரசியல் அதிகாரம் வட அறேபியா வரை பரவி இருந்தமைக்குச் சான்றுகள் இருப்பதாக வரலாற்றாய்வாளத் கூறுகின்றனர். தென் அறேபியாவினால் வட அறேபியா பெற்ற எல்லா நலன்களிலும் நகரமயமாக்கலில் வட அறேபியாவில் தாக்கமே முக்கியமானதாகும்.

வட அறேபியாவில் ஹிஜாஸிற்கு வட பாகத்தில் தென் அறேபியாவின் மைனியன் குடியேற்றங்கள் காணப்பட்டமையைக் கல்வெட்டுச் சான்றுகள் உறுதி செய்கின்றன. (1946 : 32) எத்தியோப்பிய யுத்தங்களினாலும் மஆரி;ப் அணை உடைப்பினாலும் மக்கள் பல பகுதிகளுக்கும் பரந்து சென்று குடியேறினர். இவ்வாறு சென்ற யெமனியக் குலத்தவர்களில் பலர் நபி (ஸல்) பிறந்த ஹிஜாஸ் மாகாணத்திலும் குடியேறினர்.

பாலைவனப் பசுந்தரைகள் (ழுயளநள) தொடர்ந்தும் வெறும் பசிய நிலப்பாரப்பாகவோ பேரீச்சை மரங்கள் கொண்ட சிறு துண்டு நிலங்களாகவோ இருக்க நேரவில்லை. அவற்றை ஊடறுத்துச் சென்ற வர்த்தகப் பாதைகள் விரைவில் பெரும் மாற்றங்களைத் தோற்றுவித்தன. ஆரம்பத்தில் வர்த்தகக் கூட்டங்கள் தங்கிச் செல்லும் தரிப்பிடங்களாகவும் பின்னர் புதுவகை நகரக் குடியிருப்புக்களாகவும் அதாவது காரவன் நகரங்களையும் அவை வளர்ச்சி பெற்றன. அறேபிய சமூக அமைப்பில் வலிமை பெற்று வரும் வர்த்தக சமூகத்தினரின் ஆதிக்கத்தை முன்னடையாளப்படுத்தும் நிகழ்ச்சிகளாகவும் இவை அமைந்தன.

நபிகள் நாயகத்தின் பிறப்பின் பின்னர் கி. பி. 7ம் நூற்றாண்டில் அறேபியாவில் நிகழ்ந்து கொண்டிருந்த வரலாற்று முக்கியத்துமிக்க சமூக மாற்றங்களில் முக்கிய பங்கு வகித்த வர்க்கத்தினராக இவ்வர்த்தக சமூகத்தவரெ காணப்பட்டனர்.

மக்கா

நபிகள் நாயகம் நகர் மக்காவாகும். இது வட அறேபியாவின் ஹிஜாஸ் மாநிலத்தில் உள்ளது. ஒரு புண்ணிய தலம் என்ற அறிமுகத்திலிருந்தே மக்காவின் பண்டைய வரலாறு ஆரம்பமாகின்றது. பெற்ரா, பல்மைரா முதலிய வட அறேபிய நகரங்களின் வீழ்ச்சியின் பின்னரே மக்கா அதன் முக்கியத்துவத்தைப் பெறத் தொடங்கியது. கி. மு. 5ம் நூற் : ஹெரோடோடஸ் (ர்நசழனழவரள) “மக்காரபா’’ (ஆயமயசயடிய) எனவும் 2ம் நூற். தொலமி மக்கோரபா (ஆயஉழசயடிய) எனவும் குறிப்பிட்டிருப்பது மக்காவையே எனக் கொள்வர்.

மார்கோலியத் போன்ற கீழைத்தேய ஆய்வாளர் சிலர் மக்காவின் தொண்மையை குறைத்து மதிப்பிட்டுள்ளனர். இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் அல்லாமா ஷிப்லி நுஃமானி அதன் தொண்மை குறித்து தந்துள்ள ஆதாரங்களை (சுருக்கமாக) இங்கு நோக்குவது பொருத்தமானது.

மக்காவின் பழைய மூலப்பெயர் டீயமமய வாகும். அல்குர் ஆன்
இதனை பக்கா (டீயமமய 3:96) எனக் கூறுகிறது. தவ்ராத்
(ஆதியாகமம்) தில் பக்கா என்று குறிப்பிட்டிருப்பது
மக்காவையேயாகும். பிரான்ஸ்நாட்டைச் சேர்ந்த
கீழைத்தேயவாதியும் சிறந்த ஆய்வாளருமான பேராசிரியர்
டோஸி (னுழணல) கிரேக்கப் புவியியலாளர் மெக்ரோபா என்று


கூறுவது பக்கா என்ற அதே இடத்தேயே எனக் கூறுகிறார். ரோம வரலாற்றாசிரியர் சவஸ்ட்டியஸ் (புரைள ளுயடடரளவரைள ஊசiளிரள ஊ . 86 – 36 டீ. ஊ) “ஏல்லா வணக்க வழிபாட்டிடங்களை விடவும் உயர் வணக்கத்துக்குரியதாக இருந்தது கஃபா’’ எனக்குறிப்பிடுகிறார். இது கிறிஸ்து பிறப்பதற்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டதாகும். தொன்மையானவர்களில் ஒருவரான தொலமி (Pவழடநஅல) தனது புவியியல் மக்காவைக் குறிப்பிட்டுள்ளார். இவற்றை விட மக்காவின் பழைமைக்கு வேறு என்ன ஆதாரங்கள் வேண்டும். (பார்க்க, 1979 : 135 – 5)

தென் அறேபிய மொழியில் “மக்பர்’’ என்றும் எத்தியோப்பிய மொழியில் “மெக்வராப்’’ என்றும் கூறப்படும் சொல்லின் வடிவமே மக்ரோபாவாகும். பாதுகாக்கப்பட்ட இடம் என்பது இதனபொருள் என்பர். “உயிர்த்தியாகம் செய்யுமிடம்’’ என்ற பொருளும் இதற்கு உண்டு (பார்க்க : 1969 : 89). ஹிஜாஸ் மாநிலத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் சேர்ந்தோர் நினைவுக்கெட்டிய நாள் முதலே மக்காவை ஒரு புண்ணிய தலமாகப் போற்றி வந்துள்ளனர்.

புண்ணிய தலமாக மட்டுமன்றி நீண்ட காலமாக மக்கள் ஒரு வர்த்தக மையமாகவும் இருந்து வந்துள்ளது. அன்று யெமனிலிருந்து பலஸ்தீனம் வரை தெற்கிலிருந்து வடக்காக நீண்டு கிடந்த பிரதான வர்த்தகப் பாதைகளில் மக்கா ஒரு முக்கிய தரிப்பிடமாக விளங்கியது. மக்காவில் காணப்பட்ட தூயநீரூற்றும் யுத்த பீதியற்ற அதன் புனிதத் தல அந்தஸ்தும் வர்த்தகங்களைப் பெரிதும் கவர்ந்தன. புனித மாதங்களில் அறேபியாவின் எல்லா மூலைகளிலிருந்தும் புனித யாத்திரை மேற் கொண்டு மக்காவில் ஒன்று கூடினர். மக்காவைச் சூழ வாழ்ந்து நாடோடிகளும் சிறு வியாபாரிகளும் புனித யாத்திரைக் காலத்தில் வர்த்தகத்திற்காக மக்காவை நாடிவந்தனர்.

கற்களும் மணலும் மக்காவின் வரண்ட நிலம் விவசாயத்திற்கோ மந்தை வளர்ப்பிற்கோ உகந்ததாயிருக்கவில்லை. எனினும் வர்த்தக வளத்திற்கான வாய்ப்பை மக்கா பெற்றிருந்தது. புனித யாத்திரைக் காலமும் வர்த்தகக் காரவன்கள் மக்கா பெற்றிருந்தது. புனித யாத்திரைக் காலமும் வர்த்தகக் காரவன்கள் தரித்துச் செல்வதும் மக்காவாசிகளுக்கு வர்த்தகத்தில் நாட்டத்தை ஏற்படுத்தின. சிறு வர்த்தகர்களாகவும் வாங்கிவிற்கும் தரகர்களாகவும் வர்த்தகத் தொழிலை அவர்கள் ஆரம்பித்தனர். படிப்படியாக காரவன்களை அனுப்பும் பாரிய வர்த்தகளாகவும் அவர்கள் வளர்ச்சி பெற்றனர். அல் குர் ஆன் இதனைப் பின்வருமாறு கூறுகிறது.

அவன்தான் (அவர்கள் உழவடித்துப் பயிரிடாமலே இந்த வர்த்தக
யாத்திரையின் மூலம்) அவர்களுடைய பசிக்கு ஆகாரமளித்து
வருகிறான். (அத். 106 : 04)

வரலாற்று முக்கியத்துவமுடைய “பரிமளப் பதையில்’’ (ஐnஉநளெந சுழரவந) தென் பாகத்;து யெமனுக்கும் வடக்கைச் சேர்ந்த பெற்ராவுக்குமிடையில் மிக வாய்ப்பான வர்த்தக மையத்தில் மக்கா இருந்தும் அதன் வர்த்தக வளர்ச்சிக்கு முக்கிய தூண்டுதலாக அமைந்தது. மேலும் மக்காவில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த யுத்தம் தடைசெய்யப்பட்ட புனித பிரதேசம் என்ற சமயக் கொள்கையும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு வாய்ப்பளித்த மற்றொரு காரணியாகும். உண்மையில் புனித மாதங்களில் வர்த்தக நோக்கிலும் சமய நோக்கிலும் அறபு நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் அங்குவந்து மக்களிடையே ஐக்கிய உணர்வை ஏற்படுத்தவும் இச்சமயக் கொள்கை வழிவகுத்தது.

மானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்

அத்தியாயம் 5

சந்திரக் கடவுள்



மெஸெபொட்டேமியாவில் கலாசாரக் கலப்புக் காணப்பட்டதை சூரிய, சந்திர கடவுள்களுக்கிடையிலான குழப்பம் காணப்படுகிறது. சூரியன் அதிக சந்தர்ப்பங்களில் ஆண் கடவுளாகக் கொள்ளப்பட்டுள்ளது. அதே வேளை குறைந்த அளவில் பெண் கடவுளாகவும் கொள்ளப்பட்டுள்ளது. சூரியக் கடவுள் ஒரு தட்டு வடிவமாகவோ அல்லது பல முனைகள் கொண்ட நட்சத்திர வடிவமாகவோ குறியீடாக்கப்பட்டிருந்தது. சந்திரன் வழமையாகப் பெண் கடவுளாகக் கொள்ளப்பட்டத அதே வேளை குறைந்த அளவில் ஆணாகவும் கொள்ளப்பட்டுள்ளது. சந்திரனின் பொதுவான அடையாளம் “இளம்பிறை’’ யாகும் சில சந்தர்ப்பங்களில் அது முழு வட்டமாகவும் குறியீடாக்கப்பட்டிருந்தது. இவ்விரு விண்பொருட்களைப் பற்றிய வேறுபட்ட கருத்துகளுக்கு புதிய கற்கால உழவனின் கருத்தும் செமித்திய மந்தை மேய்ப்போரின் கருத்தும் இவற்றில் கலந்திருந்தமையே காரணமென்பது கெரோல் குவிக்லேயின் கொள்கையாகும்.

தொண்மை வேட்டைக்கார மக்கள் தந்தைத் தலைமையைப் போற்றினர். சூரியனை விடச் சந்திரனை அவர்கள் பிரதானமாகக் கருதினர். வேட்டையாடுபவன் தனது வாழ்வுக்குச் சந்திரன் மிகுந்த பயனை அளிப்பதாகக் கருதினான். அநேக வேட்டையாடும் மக்கள் சந்திரனை ஆணாகவோ, தெய்வமாகவோ கருதினர். இது சூரியனைப் பெண்ணாக்கியதோடு சந்திரனின் மனைவியுமாக்கியது. செமித்திய மந்தை மேய்ப்போர் சந்திரனை ஆண்கடவுளாகக் கொண்டனர். மெஸெபொட்டேமியா இக் கருத்தை செமித்தியரிடமிருந்தே பெற்றது (1979 : 215) விவசாய வாழ்க்கையிலிருந்த மக்களிடையே ஆண்களைவிடப் பெண்கள் முதன்மை இடத்திலிருந்தனர். சூரியனைவிடப் ப+மி அதிக கௌரவத்தைப் பெற்றுக் கொண்டது. புதிய கற்கால உழவர்கள் மழைச் செழுமைமிக்க மெஸெபொட்டேமிய ஆற்றங்கரைச் சமவெளிகளில் நாகரிக அபிவிருத்தியில் பங்கு கொண்டிருந்தபோது சமூக பொருளாதார வாழ்வில் ஆண்கள் பிரதான இடத்தைப் பெற்றனர். இது ப+மித்தாய்க் கடவுளை இரண்டாம் நிலைக்குக் கொண்டு வந்தது. செமித்தியச் செல்வாக்கு அங்கு அதிகரித்தபோது சந்திரன் ஆணாகக் கருதப்பட்டதுடன் சந்திரனின் முக்கியத்துவமும் அதிகரித்தது.

தென் அறேபியா

தேசிய மரபுகள், நாகரிகம், மொழியியல், வாழ்நிலை, புவியியல் வேறுபாடு என்பவற்றின் அடிப்படையில் அறேபியாவை தென் அறேபியா, வட அறேபியாவென இரு பெரு நிலப்பாகங்களாகப் பிரிக்கலாம். அறபுத் தீபகற்பத்தின் முதற் பெரும் நாகரிகத்தை தென் அறேபியாவே பெற்றிருந்தது. தென் அறேபியா போதிய மழைவீழ்ச்சியும் நீர்வளமும் மேய்ச்சல் நிலங்களும் கொண்ட செழிப்பான பிரதேசமாகும். அறேபியாவின் வடபாகமும், வடமேற்குப் பாகமும் பாலை நிலமாகும். மலைப்பாங்கான இவ்வரண்ட நிலப்பரப்பு விவசாயத்திற்கு ஏற்றதன்று. இஸ்லாம் தோன்றிய ஹிஜாஸ் மாநிலமும் பிறந்தகமான மக்கா, மற்றும் யத்ரிப் என்பனவும் இந் நிலப்பரப்பிலேயே அடங்குகின்றன.

தென் அறேபியாவின் யெமன், ஹழறமவுத் போன்ற மாநிலங்கள் செழிப்பான பகுதிகளாகும். செமித்திய இனத்தவர் தமது வாழிடமான தென் ய+ப்ரடீஸ் நதியிலிருந்து குடிபெயர்ந்து குடியமர்ந்த பிரதேசங்களில் அறேபியாவின் இவ்வளமுள்ள பகுதியும் ஒன்றாகும். தென் அறேரியாவைப் பற்றிய வரலாற்று உண்மைகள் 19ஆம் நூற்றாண்டிலிருந்;து தான் வெளி உலகை எட்டத் தொடங்கின. இங்கு நடைபெற்ற அகழ்வாய்வுகள் தென் அறேபியா முன்னேற்றமான நாகரிகத்தைப் பெற்றிருந்ததை உறுதி செய்தன. தென் அறேபியா பற்றிய அறிவு முற்றுப் பெறுவதற்கு இன்னும் வெகுதூரத்தில் உள்ள போதிலும், இஸ்லாம் உதயமாவதற்கு ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே அறேபியாவில் இருந்த பழைமையான நாகரிகத்தை பற்றிய தகவல்கள் இன்று கிடைக்கின்றன.

சபாயின்கள்

தென் அறேபிய நாகரிகம் எவ்வளவு பழைமையானதென்பதைக் காலரீதியில் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. கி. பி. 15 ஆம் நூற்றாண்;டுகளில் தென் ஆறேபியாவை ஆண்ட மன்னர்களைப் பற்றிச் சில வரலாற்றாசிரியர் குறிப்பிட்டுள்ளனர். இக் கருத்து போதுமான நிரூபத்தைப் பெறவில்லை. எனினும், கி.மு. 10ம் நூற்றாண்டளவில் தென் அறேபியாவில் காணப்பட்டன. அரசுகள் பற்றிய உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளன.

தென் அறேபிய மாநிலங்களில் காணப்படும் தூர்ந்து போன நிலையில் உள்ள மாளிகைகளும் அரன்மனைகளும் பாரிய கற்றூண்களைக் கொண்ட கட்டிடத் தொகுதிகளும் அழிபாட்டிலிருந்து தப்பி நிற்கும் பல்வேறு கட்டிடங்களும் இந் நாகரிகத்தின் சான்றுகளாக உள்ளன. இதைத் தவிர நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்களும் வரலாற்று ஆவணங்களும், நாணயங்களும், உலோக உருவங்களும் இங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. மறைந்துபோன இந்நாகரிகத்தைப் பற்றி எங்கெல்ஸ் பின்வருமாறு கூறுகிறார்.

எகிப்தியர்கள், அஸீரியர்கள், ஏனையோர்கள் வரிசையில், ஓரிடத்தில்
நிலையான வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த தென்மேற்கு அறேரியர் ஒரு
நாகரிகத்தைப் பெற்றிருந்தனர் என்பதற்கு அவர்களது
கட்டிடக்கலைச் சாதனைகள் சான்றாக உள்ளன. (எங்கெல்ஸ், 1976 : 105)

கிடைத்துள்ள பழைமையான பதிவுகளின் படி தென் அறேபியாவின் புராதன அரசாக “சபா (ளுயடிய) குறிப்பிடப்படுகிறது. கி. மு. முதல் ஆயிரமாண்டுகளில் தென் மேற்கு அறேபியாவில் பல அரசுகள் தோன்றின. அவற்றுள் மைனியன் (ஆiயெநயளெ) சபாயின் (ளுயடியநயளெ) கத்தாபான் (முயவயடியn) ஹழறவுத் (ர்யனயசயஅயரவ) ஆகியவை தலைசிறந்த ராஜ்யங்களாகும். (ளு. ஆழளஉயவi 1957 : 184) “சபா’’ பைபிள் குறிப்பிடும் ஷீபா இராணியுடன் (அறபியில் பல்கீஸ்) தொடர்புபடுத்தப்படுகிறது. சபஃ (சபா) சமுதாயம் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

மெய்யாகவே அத்தேசங்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான்
கண்டேன். சகல சம்பத்தும் அவள் பெற்றிருக்கிறாள் மகத்தானதொரு
சிம்மாசனமும் அவளுக்கு இருக்கிறது. (அத். 27 : 24)

வரலாற்றுக் கால ஒழுங்கு பற்றிய பிரச்சினையில் மைனியன் அரசே அதிகம் பேசப்பட்டு வந்துள்ளது. மைனியன் அரசு சபாயின் அரசிற்கும் முந்தியதாக அல்லது சமகாலத்து அரசாகக் கருதப்படுகிறது. கி. மு. 400 ம் நூற்றாண்டில் மைனியன் ஆட்சி நிலவியதைக் காட்டும் சான்றுகள் உள. எனினும் கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவில் இவ்வரசு சபாயின் அரசின் அதிகாரத்திற்குள் வந்து விட்டது. கத்தாபீன் உட்பட ஏனைய அரசுகளும் படிப்படியாக சபாயின் அதிகாரத்திற்குள் வந்து சேர்ந்தன.

அனைத்துத் தென் அறேபிய சமுதாயங்களிலும் சாபாயின் சாயின்களே செல்வாக்கும் அதிகாரமுமிக்க சமுதாயமாக வந்துள்ளனர். இவர்களின் ராஜ்யம் தென் யெமனில் அமைந்திருந்தது. இங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் கி. மு 8 ம் நூற்றாண்டிற்கு முன்னரே இவ்வரசு நிலைபெற்றிருந்தமையை உறுதி செய்கின்றன. மேலும் பல கல்வெட்டுக்கள் சபாயின்களின் தொன்மையை நாகரிகச் சிறப்பையும் வளர்ச்சியையும் எடுத்துகக்காட்டுகின்றன. (1957 :185)

சாயிகள் நிர்பணித்த நகரங்களையும் அவர்களின் செல்வவளத்தையும் அல்குர்ஆனின் சபஃ என்ற அத்தியாயம் குறிப்பிடுகிறது. சபாவை மட்டுமன்றி பாரிய வர்த்தகப் பாதையில் அமைந்திருந்த வேறு பல நகரங்களையும் குர்ஆன் குறிப்பிடுகிறது. சபாயின் பொருளாதார நடவடிக்கைகளையும் செல்வாக்கையும் பற்றிக் குர்ஆன் கூறுகையில் இவ்வுலகின் வளமிக்க நகர் என அதை வர்ணிக்கிறது.

மெய்யாகவே “ஸபா’’ (எனும் ஊர்) வாசிகள் வசித்திருந்த இடத்தில்
அவர்களுக்கு ஒரு (நல்ல) அத்தாட்சி இருந்தது. (அதன் வழியாக செல்வோருக்கு) வலப்புறமாகவும் இடப்புறமாகவும் இரு சோலைகளிருந்தன. (இவைகளின் மூலம்) உங்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரிந்தனவைகளைப் புசித்துக் கொண்டு அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள் (இம்மையில்) வளமாள நகரமும் மிக்க மன்னிப்புடைய இறைவனும்
(உங்களுக்கு) உண்டு (அத், 34 : 15)

பொருளாதாரம்

தென் அறேபியா நீர்வளமுள்ள பகுதி, விவசாயம் இதன் பிரதான தொழிலாக விளங்கியது. தென் அறேபியர் அணைக் கட்டுக்களையும் கால்வாய்களையும் உருவாக்கி விவசாயத்தில் உயர்ந்த அபிவிருத்தி ஏற்படுத்தினர். கடமை நோக்கிச் செல்லும் நீரைத் தேக்கி வைப்பதிலும் நீர்ப்பாசனத் திட்டங்களின் மூலம் நீரைப் பயிர்ச் செய்கைக்;கு பயன்படுத்துவதிலும் சபாயின்கள் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தனர். நீர்வள இயலில் அவர்களின் திறமை சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது.

சபாயின் மன்னர்களில் ஒருவர் கி. மு. 750ல் மஆரிபில் நிர்மாணித்த அரிம் அணை தென் அறேபியாவின் பரந்த நிலப்பரப்பிற்கு நீர் வழங்கிய பாரிய அணையாக விளங்கியது. எமன் தேசத்தின் செல்வச் செழிப்பிற்கு இவ்வணையே ஒரு முக்கிய ஆதாரமாக இருந்தது. இதனை அல்குர் ஆன் “மகத்தான அணை’’ என்று வர்ணித்துள்ளது.

நறுமணப் பொருட்களின் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் தென் அறேபியாவே முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. தென் அறேபியச் செடிவகைளில் சாம்பிராணி உற்பத்திக்;குப் பயன்பட்ட மரம் தென் அறேபியாவிற்குச் செல்வத்தையும் கீர்த்தியையும் பெற்றுத் தந்தது. கஸ்தூரி முதலிய ஆடம்பர வாசனைத் திரவியங்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. “சபாயின் மஆரிப் நகர் பண்டைக்காலத்துப் பாரிஸ்’’ என அழைக்கத் தகுதிவாய்ந்தது என்று வரலாற்றாசிரியர் வர்ணித்தனர். இதனை “நறுமண அறேபியா’’ (யுசயடியை ழுனழசகைநசய) எனவும் குறிப்பிட்டனர். (1970 : 10)

விவசாயத்தோடு வர்த்தக நடவடிக்கையிலும் தென் அறேபியர் ஈடுபட்டனர். நறுமண ஏற்றுமதியோடு பாரசீகக் குடாவிலிருந்து முத்துக்களையும் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் பட்டையும் எதியோப்பியாவிலிருந்தும் அடிமைகளையும் மற்றும், யானைத் தந்தம், தங்கம், தீக்கோழி இறகு முதலியவற்றையும் கொள்வனவு செய்து மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். விலைமதிப்புள்ள கற்களுக்கும், தங்கத்திற்கும், வேறு கனிப் பொருள் வகைகளுக்கும் அன்று தென் அறேபியா மிகப் பிரசித்தி பெற்ற நாடாக விளங்கியது.

தென் அறேபியர் வர்த்தகத்திற்கான கடல் மார்க்கத்தையும் தரைமார்க்கத்தையும் பயன்படுத்தினர். செங்கடலைக் கடந்து உலகின் பல பாகங்களுக்கும் நாவாய்கள் சென்றன. இந்து சமுத்திரத்திலும் அவர்களது நாவாய்கள் பிரவேசித்தன. மிகத் தொன்மைக் காலந்தொட்டே யெமன் நாட்டவர் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கடற்பாதைகளை நன்கறிந்திருந்தனர். இந்தியாவின் மலபார் பகுதியிலும், இலங்கையின் குதிரைமலை போன்ற கரையோரத் துறைமுகங்களிலும் அவர்களின் நாவாய்கள் தரித்து நின்றன. கடற் பயணம் ஆபத்து நிறைந்ததாக இருந்தமையால் கடலைவிடக் குறைந்த ஆபத்துள்ள தரைமார்க்கங்களை அபிவிருத்தி செய்வதிலும் இவர்கள் முன்னோடிகளாக விளங்கினர்.

தென் அறேபிய, வட மேற்கு அறேபிய நாகரிகங்களை உருவாக்கியதில் சர்வதேச வர்த்தக நடவடிக்கையும் பாலைவன தரைவர்த்தகப் பாதையும் பிரதான இடத்தை வகித்தன. அறேபியப் பாலைவனம் முழுக்கப் பரந்து கிடந்த வர்த்தகப் பாதைகளில் தைகிரிஸ் ஊடாகப் பலஸ்தீனத்தை நோக்கிச் சென்ற பாதையும் யெமனிலிருந்து செங்கடலோரமாக மத்திய தரைக் கடற் துறைமுகங்;கள் வரை சென்ற பாதையும் இரு முக்கிய பாதைகளாகும். இப்பாரிய வர்த்தகப் பாதைகளிற் பல மக்காவையும் ஏனைய பல நகரங்களையும் ஊடறுத்துச் சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வீழ்ச்சி

கி. பி. 5ம் நூற்றாண்டில் இந்நாகரிகம் முற்றாக வீழ்ச்சியுற்றது. இந்நாகரிகத்தின் வீழ்ச்சிக்;கு எத்தியோப்பியாவினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியாக படையெடுப்புக்கள் ஒரு முக்கிய காரணமாகும். யுத்தத்தினால் வர்த்தகமும் விவசாயமும் பாதிப்படைந்தன. யெமன் வாசிகள் நிர்மாணித்திருந்த பாரிய செயற்கை நீர்ப்பாசனத் திட்டங்கள் யுத்தத்தினால் சீரழிந்தன. யெமன் மட்டுமன்றி முன்னேறிய நாகரிகங்களைப் பெற்றிருந்த வேறு நாடுகளும் யுத்தத்தினால் நிர்மூலமாக்கியுள்ளன. எங்கெல்சின் வார்த்தைகள் இதனைப் பின்வருமாறு கூறுகின்றன.

ஒரு காலத்தில் அற்புதமாகப் பண்படுத்தப்பட்டிருந்த இப்போது வெறும்
நிலமாகவும் தரிசாகவும் கிடக்கும் பல்மைரா, பெட்ரா, எமன் முதலிய
நகங்களிலுள்ள இடிபாடுகள் படுநாசமான யுத்தத்தினால் எவ்வளவு
பெரிய நாகரிகத்தையும் முடியும் என்பதற்கு சான்றாக உள்ளன.
(1926 :126)

முக்கியமாக கி.பி. 200 – கி. பி. 600 நூற்றாண்டுகளுக்கிடையே நடைபெற்ற எத்தியோப்பியாவின் தொடர்ச்சியான யுத்தங்கள் யெமனின் பெருவீழ்ச்சியை நிர்ணயித்தன. ஆயிரமாண்டுகளாகச் செல்வாக்குடன் விளங்கிய இந்நாகரிய நகரம் இஸ்லாத்தின் தோற்றத்தின் போது முற்றாகக் கைவிடப்பட்ட பாழடைந்த வெறும் சின்னமாகக் கிடந்தது. “ரோமானியர் காலத்திலிருந்து செழிப்புற்று விளங்;;கிய தென் அறேபிய நாகரிக நகரங்கள் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் கைவிடப்பட்டுப் போன துர்ந்த இடிபாடுகளாகக் கிடந்தன’ என்ற எங்கெல்சின் கூற்:று இதனை நன்கு பிரதிபலிப்பதாகக் கருதலாம்.

யுத்த அழிவுகள் ஒரு புறம் நிகழ, மறுபுறம் இந்நாகரிகத்தின் வீழ்ச்சியை உள்ளார்ந்த காரணிகளும் நிர்ணயித்தன. இங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள், பயிர்ச் செய்கை நடைபெற்ற மலைச் சரிவுகளிலும் சமவெளிகளிலும் காணப்படும் அடையாளங்கள் என்பன சில உண்மைகளை உணர்த்துகின்றன. மக்கள் தொகை பெருகி வந்ததோடு உணவுப் பற்றாக்குறை எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளும் உருவாகின. உற்பத்தி ஒரே நிலத்தில் நடைபெற்று வந்தாலும் மாற்றீடின்றி ஒரே நிலப்பகுதி மேய்ச்சலுக்காகத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதாலும் உற்பத்தியிலும் விவசாய நடவடிக்கைகளிலும் பெரும் பின்னடைவு ஏற்படலாயிற்று. (1986 : 28)

இவற்றோடு, யுத்தங்களும் மஆரிப் அணை உடைப்பும் யெமன் தேசத்தை மக்கள் வாழ முடியாத நிலப்பலப்பாக்கின. பெரு வெள்ளத்தினால் மஆரிப் அணை இருமுறை உடைந்ததாக வரலாறு கூறுகிறது. இரண்டாவதாக ஏற்பட்ட அணை உடைப்பினால் எஞ்சியிருந்த வளங்களும் நிர்மூலமாகின. நபிகள் பிறப்பதற்கு முப்பது வருடங்களுக்கு முன்னர் இரண்டாவது அணை உடைப்பு நிகழ்ந்தது. இது யெமனின் முழுப் பொருளாதாரத்தையும் சீர் குலைத்தது. மஆரிப் அணை உடைப்பை குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது.

ஆகவே அவர்கள் மஆரிபில் கட்டியிருந்த மகத்தான அரிம்
அணையை உடைக்கக் கூடிய பெரும் வெள்ளத்தை அவர்கள் மீது
அனுப்பி வைத்தோம். (அத், 34 : 16)

யெமன் தேசத்தவர் செய்த பாவத்தின் காரணமாக அவர்கள் இவ்வாறு
அழிக்கப்பட்டதாகவும் சிதறடிக்கப்பட்டதாகவும் மற்றொரு திரு வசனம்
கூறுகிறது. (பார்க்க, குறிப்பு : 2)

ஆகவே (அவர்களையும் அவர்களுடைய நகரங்களையும் அழித்து)
அவர்களைப் பல இடங்களுக்குச் சிதறடித்து (ப் பலரும் இழிவாகப்
பேசக்கூடிய) கதைகளாக்கி விட்;டோம். (அத், 34 : 16)

தென் அறேபிய ராஜ்யங்களில் அரசியல் அமைப்பும் பற்றி ஓரளவு தகவல்களே கிடைத்துள்ளன. அங்கு மன்னராட்சி நடைபெற்றது. மன்னனும் அவனுடன் உயர்குடிகளின் சபையும் இருந்தது. மன்னன் தனக்குப் பின்னர் தனது மைந்தனிடமே ஆட்சியை ஒப்படைத்தான். உயர்குடிகளின் சபை அரசின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தியது. பெரும்பாலும் அரசு நில வடிவத்தைப் பிரதிபலித்தது.

எழுத்தாளர் ரஹ்மத் ராஜகுமாரனின் எழுத்தியல் அற்புதங்கள்

எழுத்தாளர் ரஹ்மத் ராஜகுமாரனின் எழுத்தியல் அற்புதங்கள் பேரா.எச்.முஜீப் ரஹ்மான் ரஹ்மத் ராஜகுமாரன், இவரின் இயற்பெயர் ஏ.பி.எம். அப்த...