Saturday, February 07, 2009

மெட்டாரியலிசம் : பின்நவீன கலையிலக்கிய போக்கு



மெட்டாரியலிசம் : பின்நவீன கலையிலக்கிய போக்கு

மெட்டாரியலிசம் என்ற உடனே பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரஷ்யாவில் இயங்கிய நடப்பியல் மரபில் உருவானது என்று பொதுவான விளக்கம் இருந்த போதிலும் எண்பதுகளுக்கு பிறகான மெட்டாரியலிசம் என்பது பின்நவீன கலைஇலக்கிய கோட்பாடாகவே உருவாகி இருக்கிறது என்று VLADIMIR TIKHVINSKY தனது THE THESES ON METAREALISM AND CONCEPTUALISM நூலில் குறிப்பிட்டுள்ளார். பின் நவீன கலைகோட்பாடாக விளங்கும் இதனை மேற்கில் மஸ்ஸர்ரியலிசம் என்றும் அழைக்கிறார்கள்.ரஷ்யாவை பொறுத்தவரையில் மெட்டாரியலிஸ்டுகளுக்கும், கான்சப்ட்டுகளிஸ்டுகளுக்கும் இடையில் பெரும் போராட்டமே நடந்த வண்ணம் உள்ளது.ஒவ்வொரு சகாப்தத்திலும் கவிதையே போர்களமாக பழக்கம்,சுதந்திரம், விளையாட்டுதனம்,கறார்தன்மை,ஆய்வு,ஒருகிணைப்பு ஆகியவைகளுக்கு தளமாக இருக்கிறது.60 களிலும்,70 களிலும் நடப்பியல்(ரியலிசம்) உருமாற்றத்துக்கு(Metaphorism) எதிராக விளையாட்டாக எதிர்பாராத சம்பவமாக நடந்திருக்கிறது.உதாரணமாக Alexander Tvardovsky க்கும் Andrei Voznesensky க்கும் இடையிலான கவிதை செயல் பாடுகளை குறிக்கலாம்.இதை ஏற்கனவே நாம் சொன்னது போல மெட்டாரியலிசத்துக்கும் கருத்தியலுக்கும்(Conceptualism) இடையிலான போராட்டமாகவே இருக்கிறது. கருத்தியல்வாதிகள் என்று இங்கு அழைக்கப்படுபவர் சோசலிச எதார்த்தவாதத்தை கலையிலக்கிய மரபாக கொண்டவராவார்.மெட்டாரியலிசம் புது கவிதைவடிவமாக வாழ்க்கையை படிமமாக மெட்டபரை புதுஅர்த்தமாக உருவாக்கியது.மெட்டா எனும் பதம் மெட்டபர்,மெட்டாமோர்போசிஸ்,மெட்டாபிசிக்ஸ் என்பன போல எதார்த்தம் கடந்த என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டது.உருமாற்றம் செய்வதன் வாயிலாக நடப்பியலை மாற்று நடப்பியலாக மெட்டாரியலிசம் செய்தது.மெட்டாரியலிசம் நடப்பியலை ஒரு மெட்டபராக பார்ப்பதன் நிமித்தம் அது ஒரு கட்டுகதையாக மாறிப்போனது.இந்த நிலை கவிதைகளில் அதிகம் காணப்பட்டது. metarealist poetry as a way of understanding metarealism's place in the context of (Russian) postmodernism.
கருத்தியல் வாதம் மெட்டாரியலிஸ்டுபடைப்புகள் புது வடிவமாக வெளிப்படுவதால் அது புனைவை நம்பகதன்மையற்றதாக அராஜகமாக பார்த்தது.கருத்தும்,கருத்துருவமும் எதார்த்தத்துடன் தொடர்புடையதாக இருப்பதால் முரண்நகைக்கு அங்கு இடம் கிடையாது. கருத்தியல்வாதத்தைப் பொறுத்தவரையில் எதார்த்த வாழ்வின் உள்ளடக்கம் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்திருக்கிறது.கருத்து என்பது பருண்மையான சிந்தனை மட்டுமே.அதை பொருளுடன் இணைக்கும் போது மட்டுமே பொருளாக மாறுகிறது.பலசமயங்களில் கருத்துக்கும்,பொருளுக்குமான முரண்பாடுகளும் முன்னின்றுவிடுகிறது.கருத்தியல்வாதம் என்பது கவிதாபூர்வமாக கருத்துகளுடன் தன்னிறைவான குறிகளுடன் இருந்தபோதும் எதார்த்தத்தை சரிவர சொல்லமுடிவதில்லை.அது தட்டையான திட்டங்களாக சராம்சம், அர்த்தம் ஆகியவற்றில் சறுக்கிவிடுகிறது.எனவே பொருளுக்கும் அர்த்தத்துக்குமான உறவு சரிவர அமைவது இல்லை.
கருத்தியல்வாதத்தைப் பொறுத்தவரையில் பொதுஜன பிரக்ஞை பொருளை தற்சுட்டு மிக்கதாக பிரதிபலிக்கிறது. மெட்டாரியலிசமும்,கருத்தியல்வாதமும் இரண்டுவிதமான முக்கியத்துவம் கொண்ட செயல்பாடுகளை செய்கிறது என்பதில் ஜயமில்லை.பொருளையும் அர்த்தத்தையும் இணைப்பதை மெட்டாரியலிசம் என்று நாம் வரையறுத்துக் கொள்ளலாம். பொருளையும் அர்த்தத்தையும் பிரிப்பதை கருத்தியல்வாதம் செய்கிறது.எதார்த்தத்தை புனைவாக,கட்டுகதையாக உருமாற்றுவது தான் மெட்டாரியலிசம் என்றும் சொல்லப் படுகிறது,ரஷ்யாவை பொறுத்தவரை மெட்டாரியலிச கவிதைகளில் இயற்க்கை பற்றிய பதிவுகள் நிறைய இருந்துவருகிறது.பின்னை சோசலிசத்துக்கு மெட்டாரியலிசம் அதிகப்படியான பங்களிப்பை செய்துவருகிறது.
art critic Olga Sviblova, the leading Conceptualist poet and sculptor Dmitry Prigov, the Metarealist poet Aleksei Parshchikov, the Conceptualist poet and theoretician Andrei Monastyrsrkii, the art scholar and sociologist Iosif Bakstein, the Conceptualist artist Sven Gundlakh, the Metarealist poet Olga Sedakova, the poet and critic Aleksandr Aronov, the literary critics and scholars Samarii Velikovskii and Viktor Kamianov போன்றோர்களுக்கு இடையில் தான் அனல் பறக்கும் விவாதங்கள் நடைப்பெற்றவண்ணம் வருகிறது. குறிபிட தகுந்தவகையில் ரஷ்ய இலக்கிய பின்நவீனத்துவம் மெட்டாரியலிசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது கலைவடிவங்களில் நுழைந்து வருகிறது Metarealism is the individual painting style of Warron Prentice.It is an ever-changing metamorphosis of Realism, Surrealism, Abstract and the Imaginative..
தமிழில் மெட்டாரியலிச கவிதைகள் என்று பிரக்ஞாபூர்வமாக முயற்சிகள் மேற்கொள்ளபடவில்லை என்றாலும் மெட்டாரியலிச கவிதைகளை நிச்சயமாக அடையாளம் காணமுடிகிறது.அந்த வகையில் செல்செவிஸ்,நட.சிவகுமார்,ஜி,எஸ்.தயாளன்,ச.கண்ணன் உட்பட்ட பல தமிழ்கவிஞர்களிடம் ஒருசில மெட்டாரியலிச கவிதைகளை காணமுடிகிறது.அண்மையில் காலச்சுவடு இதழில் வெளிவந்த ராணிதிலக்கின் கவிதைகளை மெட்டாரியலிச கவிதைகளாக பார்க்கமுடியும்.அதில் சனி என்ற கவிதையை பார்ப்போம்.
சனி
என் உச்சந்தலையில் சிலந்தி எதுவும் வசிக்கவில்லை.சமீப காலமாக,என் தலையை நோக்கிவரும் காக்கை,சடாரென்று கொத்திப் பறப்பது வழக்கமாக நிகழ்ந்து வருகிறது.இக்காகங்களைப் பிதிர்கள் என்பார்கள்.எந்தப் பிதிருக்கு நான் என்ன செய்தேன் என்றும் தெரியவில்லை.மேலும் பிதிரைக் கல்லால் அடிப்பது கூடப் பாவம் என்பதால் காகம் தப்பிப் பிழைத்து வருகிறது.மேலும் காகம் கொத்துவது என்பது சனி பிடிப்பதது என்கிறார்கள்.சனி பிடிக்கிறதோ இல்லையோ ,என்னிடம் சிலந்தி இல்லை என்றாவது காகத்திடம் சொல்லவேண்டும்.என்னால் முடியாத பட்சத்தில்,என் தலையை அறுத்தாவது அதனிடம் தந்துவிடவேண்டும்.எனக்கிருப்பது ஒரேஒரு தலைதான் என்பதால் அதற்கும் சாத்தியம் இல்லை.மேலும் காகம் கொத்துவது குறித்த சந்தேகங்கள், மனதில் பலப்பல வலைகளை விரித்தப்படி இருக்கிறது.எதிலும் காக்கை சிக்குவதாக இல்லை.ஒருவேளை சிலந்தி கிடைத்தால் காகத்திடம் கொடுத்திடத்தான் வேண்டும். இப்போதைக்கு காகத்தை விரட்டியபடி இருக்கிறேன்.அது கொத்திய படியே இருக்கிறது.அந்தி சாய்ந்த பிறகு காகம் மறைந்து விடுகிறது.என்றாலும் இந்த இரவு காகத்தின் நிறத்தில் ஒளிரும் போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.அவ்வப்போது தலையைத் தொட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டித்தான் இருக்கிறது.
Books:
Mikhail Epstein, Paradoksy novizny. O literaturnom razvitii XIX-XX vekov (The Paradoxes of Innovation: On the Development of Literature in the l9th and 20th Centuries). Moscow: Sovetskii Pisatel', l988, pp. 151-175.
--------------Vera i obraz. Religioznoe bessoznatel'noe v russkoi kul'ture XX veka (Faith and Image: The Religious Unconscious in Twentieth Century Russian Culture), Tenafly (New Jersey): Hermitage Publishers, 1994, pp. 56-85, 90-95, 143-146.
------------------After the Future: The Paradoxes of Postmodernism and Contemporary Russian Culture, tr. with an intr. by Anesa Miller-Pogacar, Amherst: Massachusetts University Press, 1995 pp. 30-43, 46-49, 60-70, 76-78, 193-195, 200-203.
Articles and essays: "Kliuchevoe slovo - kul'tura. O novoi moskovskoi poezii (The key word - 'culture'. On the new Moscow poetry). Moskovskii komsomolets, 1984, August 3, p. 4;
"Pokolenie, nashedshee sebia. O novoi poezii vos'midesiatykh godov" ("The Generation Who Found Itself. On the New Poetry of the l980s"). Voprosy Literatury, l986, No. 5, pp. 40-72;
"Kontsepty. . . Metaboly. . . O novykh techeniiakh v poezii" ("Concepts. . . Metaboles. . . On New Trends in Poetry"). Oktiabr' (Moscow), l988, No. 4, pp. l94-203, [also in Vzgliad. Kritika, polemika, publikatsii. Moscow: Sovetskii pisatel', 1988, pp. 171-196;
"Exposing the Quagmire," Times Literary Supplement, London, 1989, April 7-13;
"Iskusstvo avangarda i religioznoe soznanie" ("Art of the Avant-Garde and Religious Consciousness"). Novyi Mir (Moscow), l989, No. l2, pp. 222-235;
"Chto takoe metabola? O tret'em trope" ("What is Metabole? On the Third Trope"). Stilistika i poetika: Tezisy vsesoiuznoi nauchnoi konferentsii, vypusk 2. Moscow: Institut russkogo iazyka AN SSSR, 1989, pp. 75-80;
"Zerkalo-shchit" ("The Mirror-Shield"), Poeziia, almanac , 52, Moscow: Molodaia gvardiia, 1989, pp. 86-88;
"Like a Corpse I Lay In the Desert. . .," Mapping Codes: A Collection of New Writing from Moscow to San Francisco (special issue of Five Fingers Review), San Francisco, 1990, No. 8/9, pp. 162-167;
"Katalog novykh poezii/Ein Katalog neuer Lyriken" (in Russian and German), in Moderne russische Poesie seit 1966. Eine Anthologie. Herausgegeben von Walter Thற்mler. Berlin: Oberbaum Verlag, 1990, S. 359-369;
"Posle budushchego. O novom soznanii v literature.("After the Future. About the New Consciousness in Poetry") Znamia (Moscow), 1991, No.1, pp. 217-230;
"After the Future: On the New Consciousness in Literature." The South Atlantic Quarterly, Spring 1991, vol. 90, No. 2, pp. 409-444;
"Avant-Garde Art and Religious Consciousness." Vanishing Points: Spirituality and the Avant-Garde (special issue of Five Fingers Review). San Francisco, 1991, No. 10, pp. 165-180;
"Afterword: Metamorphosis," in Third Wave: The New Russian Poetry. Ed. by Kent Johnson and Stephen M. Ashby. Ann Arbor: University of Michigan Press, 1992, pp. 271-286.
------------------

No comments:

பின்நவீனத்துவ நிலை தமிழில்

பின்நவீனத்துவ நிலை: அறிவு குறித்த அறிக்கை(The Postmodern Condition: A Report on Knowledge) என்பது தத்துவஞானி ழீன் பிராங்கைஸ் லிய...