Friday, February 06, 2009

மாஜிகல் ரியலிசம் : கற்பனைகளின் எல்லைகளை கடந்து



மாஜிகல் ரியலிசம் : கற்பனைகளின் எல்லைகளை கடந்து

இவ்வுலகத்தை புது கண்களால் பார்க்கும் விதத்தை சொல்லும் மாஜிகல் ரியலிசம் சர்வநிச்சயமாக ரியலிசத்திலிருந்து வேறுபட்டது என்பதை யாவரும் அறிவோம்.உலகம் பொருள்களால் மாத்திரமல்லாது அர்த்தங்களாலும் சூழப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு பொருளும் புறவயமான அர்த்தங்களையும்,ஆழமான அர்த்தங்களில் புதிரும்,மாயமும் கலந்திருக்கிறது.ஒவ்வொன்றையும் சொல்லுவதற்கு ஒரு முறையல்ல பல முறைகள் இருக்கிறது.மாஜிகல் ரியலிசமென்ற இந்த முறை பழைய பார்வைகளையும்,உண்மை பற்றிய அகவயமான மற்றும் புறவயமான அத்தனை சாத்தியங்களையும் சொல்லி தருகிறது.
(Franz Roh, Magic Realism: Post-Expressionism (1925).Magical Realism. Ed. L. P. Zamora and W. B. Faris. Durham: Duke UP, 1995. p. 15-32.) அற்புதம் என்பது எதார்த்தத்துக்கு எதிரான தளத்தில் வைத்து பார்க்கபட்டதினால் எதார்த்தம் எப்போதும் சிறப்புரிமையுடையதாக இருக்கிறது.ஆனால் அற்புதமான நம்பிக்கை சமூக நிகழ்வாக இருந்து வந்து கொண்டிருக்கிறது.ஆன்ம நம்பிக்கை சார்ந்த அற்புதங்களை எதார்த்தத்திலிருந்து பிரித்து பார்க்கிற மனநிலை பல அளவுகளையும்,வகைமைகளையும் ஏற்கனவே அளித்திருக்கிறது என்பது புலனாகிறது. (Alejo Carpentier, On the Marvelous Real in America. Magical Realism. Ed. Zamora and Faris, p. 85-86)
சர்லியலிசத்துக்கும் மார்வலஸ் ரியல் என்பதற்குமான வேறுபாடுகளை வரையறுக்க இயலுமா ?நிச்சயமாக.மாஜிகல் ரியலிசம் என்னும் பதத்தை 1924ல் ஜெர்மானிய கலை விமர்சகரான பிரான்ஸ் ராஹ் அன்றாட எதார்த்தத்துக்கு மாற்றாக பயன்படுத்தினார்.
பெயிண்டர்கள் அன்றாட உலகை அற்புதகண்களினால் பிரதிபலிக்கவேண்டும் என்று சொல்லும் இவர் எஸ்பிரசனிச ஒவியங்களுக்காக மாஜிகல் ரியலிசத்தை பயன்படுத்த வேண்டும் என்று ஓவியர்களை கேட்டுக்கொண்டார்.சர்ரியலிசம் கூட எதார்த்தத்தை வேறு கண்ணோட்டங்களில் பயன்படுத்திய போதும் மார்வலஸ் ரியல் என்பது சற்று மாறுபாடு கொண்டது தான்.இந்த மார்வலஸ் ரியல் தான் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மாஜிகல் ரியலிசம் என்றழைக்கப்படுகிறது. (Alejo Carpentier, The Baroque and the Marvelous Real. Magical Realism. Ed. Zamora and Faris, p. 102-104)மாஜிகல் ரியலிசம் என்பது பொதுவாக அன்றாடஎதார்த்தங்களையும்,உண்மையற்றவற்றையும் உருமாற்றம் செய்வது என்பதாகும்.
(Angel Flores, Magical Realism in Spanish American Fiction. Magical Realism. Ed. Zamora and Faris, p. 113-116).
மாஜிகல் ரியலிசம் எதனையும் விட எதார்த்தத்தை வெகுஜன அல்லது மரபுசார்ந்த வடிவங்களில் திறந்த/மூடிய அமைப்பில் விரிவாகவோ/சுருங்கிய நிலையில் பதிவு செய்ய விரும்புகிறது.வாழ்வில் புதிரானது எது என்றும்,மனித நடவடிக்கைகளில் வேறுப்பாடானது எது என்பதை கண்டுபிடித்து மாஜிகல் ரியலிசத்தை எழுத வேண்டிய சூழலி எழுத்தாளான் உள்ளான்.மனிதர்களுக்கும் சுற்றுசூழல்களுக்குமான புதிர்களை கண்டுபிடித்து கற்பனைகளுடன் எழுதுவதும் மாஜிகல் ரியலிசத்தில் உள்ளவைதான்.மாஜிகல் ரியலிசத்தில் உள்ள முக்கிய சம்பவம் தர்க்கரீதியானதாகவோ,உளவியல் அடிப்படையில் உள்ளதோ அன்று.ஒரு மாஜிகல் ரியலிஸ்டு தன்னைசுற்றி என்ன நடக்கிறது என்று காப்பி அடிக்க தேவையில்லை.அதேசமயம் எதார்த்தத்தை புதிர்வெளிகளூடே கட்டமைத்துக்கொடுக்கிறான்.
(Luis Leal, Magical Realism in Spanish American Literature. Magical Realism. Ed. Zamora and Faris, p. 119-123).
மாஜிகல் ரியலிசம் பன்முகத்தளத்தில் இயங்கும் புனைவாக பண்பாடுகளின் குறிப்பிட தகுந்த மரபுகளை எடுத்துக்கொண்டு சிலவற்றை ஒதுக்கித்தள்ளிவிடுகிறது.
(Amaryll Chanady, The Territorialization of the Imaginary in Latin America: Self-Affirmation and Resistance to Metropolitan Paradigms. Magical Realism. Ed. Zamora and Faris, 125-144).
கார்சியா மார்குவேசை பொறுத்தவரையில் எதார்த்தத்துக்கே(நடப்பியல் அல்ல) முக்கியத்துவம் கொடுக்கிறார்.ஏனெனில் ஒவ்வொருபேரும் விரும்பியோ விரும்பாமலோ நல்லதையோ அல்லது கெட்டதையோ பார்த்துதான் தீரவேண்டியிருக்கிறது.விகிதாசாரமின்மையே எதார்த்தம் என்பதாகும்.மார்குவேஸ் சொல்லும்போது நடப்பியல் பிரதிகளை விட மாஜிகல் ரியலிச பிரதிகளே அதிக எதார்த்தமுடையது.
(Scott Simpkins, Sources of Magic Realism/Supplements to Realism in Contemporary Latin American Literature. Magical Realism. Ed. Zamora and Faris, p. 148)
மாஜிகல் ரியலிசம் என்பது நடப்பியலை போன்றதல்ல.அது மாயமந்திர கூறுகளையுடைய எதார்த்தத்தை காட்டிதருவதாகும்.
(Frederic Jameson, as quoted in Simpkins, Sources of Magic Realism. p. 149).
மாஜிகல் ரியலிசம் பாண்டசியை போலவோ சர்ரியலிசத்தை போன்றதோ அல்லாமல் ஒரு சமூகத்தின் மரபுகளை வரலாற்றின் தொடர்புடன் அமைத்து தருதலே ஆகும்.
(P. Gabrielle Foreman. Past on Stories: History and the Magically Real, Morrison and Allende on Call. Magical Realism. Ed. Zamora and Faris, p. 286).
சல்மான் ருஸ்டியை பொறுத்தவரை மாஜிகல் ரியலிசம் என்பது மூன்றாம் உலக நாடுகளின் பிரக்ஞையாகும்.அது எதார்த்தத்தை உருவகப்படுத்தி அற்புதமாக தருகிறது.காபிரியல் கார்சியாவைப் பொறுத்த வரையில் மாஜிகல் என்பது சர்ரியலிசத்தை நிராகரித்து உருவானதாகும்.
(Patricia Merivale, Saleem Fathered by Oskar: Midnight 's Children, Magic Realism and The Tin Drum. Magical Realism. Ed. Zamora and Faris, p. 331, 336).
மாஜிகல் ரியசமென்பது இருபதாம் நூற்றாண்டின் உலக காரணங்களை மரபுசார்ந்த தர்க்கங்கள் மூலம் விழிப்புணர்வூட்டியதனால் முக்கிய இடத்தை வகித்தது.நவீனத்துவாதிகளிடமிருந்து வித்தியாசப்பட்டு நடப்பியலையும்,ஃபாண்டசியையும் இணைத்து புது மாதிரியான திட்டமாக அது உருவாகியது.பொருட்களின் பங்கெடுப்பை அர்த்தங்களுக்குரியதாக அல்லாமல் உருமாற்றம் செய்வதாக அது அமைந்தது.மேலும் சாதாரண வாழ்க்கையனுபவங்களை அதீதகுணமாக மாற்றியதால் நிச்சயமற்ற தன்மையை வேறு வடிவில் சொல்லியது.வாழ்வின் நிச்சயமற்ற தன்மையைச் சொல்லுதலே நவீனத்துவ எதார்த்தமாக இருந்தது.
(David Mikics. Derek Walcott and Alejo Carpentier: Nature, History, and the Caribbean Writer. Magical Realism. Ed. Zamora and Faris. p. 372).
மனித நடவடிக்கைகளை இயற்க்கைக்கு அப்பாற்ப்பட்ட விசயங்களுடன் பொருத்திப்பார்பது மாஜிகல் ரியலிசம் என்ற வரையறையுடன் ஜப்பானில் நிகழ்ந்தது.
(Susan J. Napier. The Magic of Identity: Magic Realism in Modern Japanese Fiction. Magical Realism. Ed. Zamora and Faris, p. 451).
மாஜிகல் ரியலிசம் குறிப்பாக மனித அறிவின் எல்லைக்கு அப்பாற்ப்பட்ட இயல்புகளை சுட்டிக்காட்டுகிறது.இது பின்நவீனத்துவம் எதிர்க்கும் இருமைஎதிர்வுகள்,பகுத்தறிவுவாதம்,மேற்கத்திய பொருள்முதல்வாத சிந்தனை ஆகியவற்றை தெளிவாக காட்டுகிறது.
(Lois Parkinson Zamora, Magical Romance/Magical Realism: Ghosts in U.S. And Latin American Fiction. Magical Realism. Ed. Zamora and Faris, 498).
மாஜிகல் ரியலிச புனைகதை என்பது நவீன எதார்தத கதைக்கு மாறுபட்டதாக எதார்த்தம் குறைவுபடாமல் எல்லைகளையும்,பல உலகங்களையும் கடப்பதாகவும்,ஊடாட்ட,வித்தியாச வெளிகளை கொண்டிருப்பதாகவும்,ஒரு சர்வதேச நிகழ்வாகவும் இருக்கிறது
(Lois Parkinson Zamora and Wendy B. Faris. Introduction: Daiquiri Birds and Flaubertian Parrot(ie)s. Magical Realism. Ed. L. P. Zamora and W. B. Faris).
முதலாவதாக ஃபாண்டசியையும்,எதார்த்தத்தையும் கலந்திருக்கிறது.இரண்டாவதாக உண்மையிலிருந்து உண்மையற்றதாக தளமாற்றம் அடைகிறது.மூன்றாவது ஆச்சரிியமான கலையாக கால,வெளிகளை கலைத்துப் போடுகிறது.நான்காவது சிறுபான்மை அறிவிஜிவிகளின் இலக்கியமாக இருந்து வெகுஜன ரசனைக்கு அப்பாற்பட்டு அழகியலுடன் புதுமையை தருகிறது. (Erwin Dale Carter. Magical Realism in Contemporary Argentine Fiction. Ann Arbor: U Microfilms, 1969. p. 3-4)
அதீதத்தின் கவித்துவம் என்பதே வகைமாதிரியாக மாஜிகல் ரியலிச பிரதிகளில் விரிவான அளவில் விவரிக்கப் பட்டிருக்கிறது.அதீத கற்பனையை நம்பமுடியாத அளவுக்கு உச்சபட்சமாக பயன்படுத்துவதும் இதில் உள்ளதாகும்.மாஜிகல் ரியலிசம் வாழ்வை ஒரு நோக்காக மகிழ்ச்சியை மட்டுமல்லாது துன்பத்தையையும் காண்பிக்கிறது.இதன் விளைவாக வாசகன் இதுவரை காணாத உலகை பார்ப்பதன் வாயிலாக ஏதோ ஒன்றை இழந்த மனநிலையை அடைகிறான்.உண்மையை உருமாற்றி கலைநயமிக்க கற்பனைகளுடன் புத்திசாலித்தனமாக ஆனால் இதுவரை அறியாத விதத்தில் சொல்லுவது முக்கியமாகும்.மாஜிகல் ரியலிச விவரணைகளில் கலவையான எதார்த்தங்களை விவரித்து புராதன தொன்மங்களை நினைவூட்டுகிறது.
(David K. Danow. The Spirit of Carnival Magical Realism and the Grotesque. Lexington: U of KY P, 1995, p. 65 ff).
மாஜிகல் ரியலிசம் என்பது இயல்புபிறழ்ந்த நிகழ்வாக நமது எதார்த்தை சொல்லும் விருப்பமான வழிகளுக்கு எதிரடையாக புராதன அல்லது இந்திய மனநிலையுடன் ஜரோப்பிய பகுத்தறிவை கொண்டிருக்கிறது.பிளாய்டு மெரல் விளக்கும் போது மாஜிகல் ரியலிசம் இந்த உலகம் பற்றிய இரண்டுவிதமான சித்திரங்களுக்கு இடையிலான சர்சைகளுக்கு இடையில் உள்ள கணுக்களாக இருக்கிறது.இதனால் மாஜிகல் ரியலிசம் எதார்த்தத்தை அல்லது இவ்வுலகை பற்றிய புனைவுகளும்,செவ்விந்தியர்களின் மூடநம்பிக்கைகளும் புதுமாதிரியாக எதார்த்தத்தை சொல்ல கற்றுத்தந்திருக்கிறது.
(Amaryll Beatrice Chanady. Magical Realism and the Fantastic Resolved versus Unresolved Antinomy. New York: Garland Publishing, 1985. 16-31).
மாஜிகல் ரியலிச நாவல்கள் மற்றும் கதைகள் வித்தியாசமான எடுத்துரைப்பாக எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு எதிர்பாராத புரிய இயலாத கூறுகளுடைய கனவுகள்,கட்டுகதைகள்,தொன்மங்கள் ஆகியவற்றுடன் அன்றாட நிகழ்வுகளை கலைடஸ்க்கோப் தன்மையாக்கி தருகிறது.
(Oxford Companion to English Literature)
----

No comments:

பின்நவீனத்துவ நிலை தமிழில்

பின்நவீனத்துவ நிலை: அறிவு குறித்த அறிக்கை(The Postmodern Condition: A Report on Knowledge) என்பது தத்துவஞானி ழீன் பிராங்கைஸ் லிய...