கலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்
Tuesday, February 10, 2009
பின்னை தலித்தியம்:
அர்சால்களின் எழுச்சி
தலித்தியம் இந்தியாவில் தோன்றி அரை நூற்றாண்டைத் தொடப்போகும் தருணத்தில்,தமிழ்ச் சூழலில் தோன்றிய தலித்தியத்துடன் வேகம் பெற்று இப்போது அடுத்த கட்ட நகர்வுக்கு தலித்தியம் போக வேண்டிய சூழல் எழுந்துள்ளது.தலித்தியத்தின் புதிய நோக்கினை பின்னை தலித்தியம் என்று வரையறுத்துக்கொள்வோம்.மகாராஷ்டிரா,கர்நாடகம்,குஜராத் என்று விரிவான தளத்தைப் பெற்றிருந்த தலித்தியம் புதிய பாய்ச்சலை தற்போது சந்திக்கிறது.பின் நவீனத்துவம் தமிழில் ஏற்படுத்திய அதிர்வுகளும்,பெண்நிலைவாத உத்வேகமும் தலித்தியத்திற்கு அதிக உத்வேகம் அளித்தன.தலித்தியம் மரபார்ந்த கலை இலக்கிய அணுகுமுறையை பின்பற்றியதால் தலித் இலக்கியம் வெறுமனே கலக இலக்கியமாக மட்டுமே பார்க்கப்பட்டது.தலித்துகள் தான் தலித இலக்கியம் படைக்க முடியும் என்ற அணுகுமுறை ஆரோக்கியமான விஷயமாக இருந்த போதும் படைப்பனுபவம் பெற்ற கலைஞர்கள் தலித்துக்களில் குறைவாகவே இருந்ததன் காரணமாக தலித் இலக்கியத்தின் பாய்ச்சல் சரிய துவங்கியது.மேலும் தமிழ் சூழலில் தலித்தியம் ஜாதிரீதியாக பிளவுப்பட்ட போது தலித்திய சிந்தனை முறை விரிவடையாமல் போனது.
தலித்தியம் பேரடையாளமாக பயன்படுத்தப்படும் நிலை மாற துவங்கிய இடம் தான் தலித்திய பன்முகம் தோன்றவும் காரணமாக திகழ்ந்தது.கடந்த கால தலித்தியத்தை மறுவாசிப்பு செய்யும் போது எவ்வளவு பலமான அம்சங்கள் மேலெழுந்தனவோ அவ்வளவு பலகீன அம்சங்களும் இருந்தன.தமிழில் பெரியாரியத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையும் மறுதலிக்கும் நிலையும் தலித்திய விவாதங்களாக திரண்டன.இந்திய சூழலில் அம்பேத்காரியத்தை இந்துத்துவம் விழுங்கி ஏப்பம் விட்டது.இதனால் இச்சூழ்லை அனுசரித்துக்கொண்டு தலித்தியத்தின் நகர்வை இன்னும் அதிகம் கொண்டு செல்லும் பொருட்டு பின்னைதலித்தியம் என்ற சொல்லாடல் உருவாகியுள்ளது.கடந்த காலங்களில் தலித்தியத்தின் மேல் பல விமர்சனங்கள் எழுந்தன.”தலித் அரசியலை முற்றான அரசியலாக கருதும் போது தான் தவிர்க்க இயலாமல் அதிகார போக்கு உருவாகிறது.அதிகாரத்தை உள்வாங்கிக்கொண்ட மார்சியமும் இதைத் தான் செய்தது.இதன் காரணமாக தான் முதலாளிய அதிகார போக்கில் இருந்து மார்சியம் தன்னை விடுவித்துக்கொள்ளவில்லை. தலித் அரசியலையும் முற்றான அரசியலாக கருதும் போது தலித் மக்களுக்கு சில சாதகங்கள் ஏற்படும் என்பதில் ஜய்யமில்லை.ஆனால் முதலாளித்துவ எல்லைக்குள் இருந்து தொடர்ந்து உற்பத்தியாகும் அடிமைத்தனத்திலிருந்து இவர்கள் தம்மை விடுவித்த கொள்ள இயலாது.எனவே தலித் அரசியல் என்பதை கடந்து செல்வது பற்றி இவர்கள் சிந்திக்க வேண்டும்.” மிக கறாரான இந்தவிமர்சனம் நிதர்சனமானதை கண்டோம்.கடந்த நூற்றாண்டில் தலித் மக்களிடையே படித்த மத்தியதர வர்க்கம் தோன்றிவிட்டது.எனவே தான் தலித்தியம் சரியத் துவங்கியது.இச்சூழலை பற்றி தயாபவார் என்ற தலித் படைப்பாளி கூறும் போது “ ஒரே விஷயம் முப்பது தடவைகளுக்கு மேல் திரும்ப திரும்ப எழுதப்படும் போது சலிப்பு ஏற்படுகிறது.அதே ஒடுக்குமுறை,அதே அவமானம்,அதே கொடுமைகள் என்று வரும் போது அதை அடுத்த கட்டத்தை தாண்டிச் செல்லமுடுயவில்லை.அந்த தலித்துக்கள் இன்று மத்தியதர வகுப்பினரின் வாழ்க்கை நிலையை அடைந்திருக்கிறார்கள்.அவர்கள் இந்த சமூகத்தில் சில முரண்பாடுகளுடன் ஒத்து போக முனைந்துவிட்டனர்.”இந்த நிலை தலித் இலக்கியத்தை சாதிய இலக்கியமாக நோக்கும் நிலைக்கு துணை புரிந்தது.அயோத்திதாச பண்டிதரின் சிந்தனைகள் சாதி ரீதியாக அணுகப்பட்டது.இன்று இடைநிலை சாதிகளின் ஆதிக்கம் மேலெழும்பி வருவதும்,பெரியாரியத்தின் போதாமையும் இந்துத்துவத்தின் பாய்ச்சலையும் கணக்கிலெடுத்துக்கொண்டால் தலித்தியம் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டியதை கவனிக்கலாம்.ஒடுக்கப்பட்ட எல்லா சமூகங்களின் இணைவை வலியுறுத்தி விளிம்பு நிலை சமூகங்களை போராட தூண்டுவதே பின்னை தலித்தியத்தின் முதல் படியாக இருக்கிறது.
இது காலம் வரை தலித் எனும் சொல் விரிவான அர்த்ததை கொண்டிருந்த போதும் குறுகிய அர்த்திலேயே பயன்படுத்த பட்டது.ஆனால் ஒடுக்க பட்டோரின் ஒருங்கிணைவே தலித்தியம் என்பதாகும்.கர்நாடக தலித் இலக்கிய முன்னோடி சித்தலிங்கையா குறிப்பிடும் போது “ஒரு சாதியை குறிக்கின்ற ஒன்றாக தலித் என்ற சொல்லை சுருக்கிவிடக்கூடாது.தலித் என்பது வேதனையின் குறியீடாக இருக்க வேண்டுமே தவிர சுரண்டலின் குறியீடாக மாறிவிடக்கூடாது.சுரண்டல்,மற்றும் கொடுமை,அக்கிரங்களை எதிர்க்கின்ற சொல்லாக மலர வேண்டும்.அவமானம்,பாதுகாப்பின்மை,எதிர்ப்பு ஆகிய அர்த்தங்களை தலித் என்ற சொல் தர வேண்டும்.இந்த உண்மையான நோக்கினை பின்னை தலித்தியம் தனது இலக்காக கொண்டுள்ளது. ஒடுக்கப்பட்டவர்களிடையே உள்ள வேறுபாடுகளை தாண்டி அவர்களுக்காக குரல் கொடுக்கின்றவர்களையும் இணைத்து கொண்டு போராடவேண்டியிருக்கிறது.மார்சியத்துக்கு பின்னான உலக நாடுகளில் தோன்றியுள்ள நெருக்கடிகள் அனைத்தையும் அவதானித்துக்கொண்டு பின்நவீனத்துவம்,பின் மார்சியம்,பின் காலனித்துவம்,பெண்ணியம் போன்ற அனைத்து விஷயí¸¨ÇÔõ Ţš¾â÷ÅÁ¡¸×õ,Å¢Á÷ºனத்துடனும் பின்னை தலித்தியம் விசாரணை செய்கிறது.உலக நாடுகளில் தோன்றியுள்ள பயí¸ÃÅ¡¾õ,ÀÂí¸ÃÅ¡¾ ±¾¢÷ôÒ ¿¼ÅÊ쨸,«¾¢ ±¾¡÷ò¾ ¦ºÂøÀ¡Î¸û,¯Ä¸ÁÂÁ¡ì¸ø,«¾¢ ±¾¡÷ò¾ ӾġǢÂõ ¯ûÇ¢ð¼ Å¢„Âí¸¨Ç ¸Åனத்தில் கொண்டு பின்னை தலித்தியம் ஒரு தீவிர கோட்பாட்டுருவாக்கத்தை மேற்கொள்கிறது.
பின்னை தலித்தியம் இந்திய சூழலில் ஆழவேரூன்றியிருக்கிற அபௌதிகம்,இயí¸¡¿¢¨ÄÅ¡¾ò¨¾ ¿¢÷ãÄõ செய்கின்ற வேலையை செய்ய எத்தனிக்கிறது.இந்திய பொது புத்தியில் அசைக்க முடியாமல் இருக்கிற ஜாதியத்தின் மூலவேரே இயஞ்காநிலைவாதமாகும்.இயஞ்காநிலைவாதத்தின் மரணத்தை பின்னை தலித்தியம் ஏற்றுக்கொள்கிறது. பின்னை ¾Ä¢ò¾¢Âõ ±ன்பது தலித்தியத்தின் தொடர்ச்சியே அன்றி வேறில்லை.இந்திய வகைப்பட்ட ஜாதீய சமூகஞ்கள் கருத்தியல் தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.இந்த கருத்தியல் காலம் காலமாக இருந்து கொண்டிருக்கிறது.இந்திய தத்துவ மரபில் லோகயதவாதமும்,ஆன்மீகமும் நிரந்தர இடம் பெற்று இருந்தாலும் காலப்போக்கில் ஆன்மீகமே மையமாக மாறியது.கருத்தியல் ரீதியிலான ஆன்மீகமாக அது மாறியது.இதனால் ஜாதியம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட அது வழிவகுத்தது.ஜாதியத்தை அசைக்கிற விதமாக சமணம்,பவுத்தம்,ஆசிவகம் விளxகினாலும் அவையும் நாளடைவில் ஜாதியத்துக்கு இரையாகியது.இதற்கு முக்கிய காரணமாக தத்துவ அடிபடையிலான விவாதஞ்களே காரணமாக மாறியது.ஏற்கனவே இருக்கிற தத்துவ அடிப்படையிலேயே இவை தொடர்ச்சியாக விதாஞ்கள் மேற்கொண்டமையால் அவையும் ஜாதியத்தை மறுதலிக்க முடியாமல் ஆனது.இந்திய சிந்தனை மரபில் படித்தரம் என்பது அசைக்கமுடியாத அளவில் வேரூன்றி தூய்மை,புனிதம்,ஒழுக்கம் போன்றவற்றை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறது.இந்தியாவில் கடவுள்களும்,ஜாதியமும் இன்னும் உயிருடன் இருப்பதாலும்,எல்லாவற்றையும் இயக்க மறுப்பு சிந்தனையினூடே பார்த்தும் விவாதித்தும் வருகிறோம்.இந்தியாவில் ஆன்மீக தளத்தை அசைக்க முடியாமல் இருக்க காரணம் ஆன்மீகமும்,வாழ்வும் இரண்டற கலந்து இருப்பதாகும்.ஆன்மாதான் பொருளை உற்பத்தி செய்கிறது என்ற ஆன்மீகவாதம் நிலைபெற்று விட்டது. ஆக அக உலகமும்,புற உலகமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது.அகம் இல்லையென்றால் புறம் இருக்க முடியாது என்ற நிலைபாடு அகத்தை உயர்வாகவும்,புறத்தை தாழ்வாகவும் கருதியது.இந்த சிந்தனை முறைதான் தொடர்ந்து இந்திய தத்துவ மரபாக முன்வைக்கப்படுகிறது.இருப்பவை என்பது பொருளாகவும்,சிந்தனை என்பது ஆன்மாவாகவும் கருதப்படுகிறது.எனவே வாழ்நிலைக்கும்,சிந்தனைக்கும் இடையே நிலவும் உறவு பற்றியோ ஆன்மாவுக்கும் பொருளுக்கும் இடையிலான உறவு பற்றியோ,மூளைக்கும்,உணர்வுக்கும் இடையேயுள்ள உறவு பற்றி பேசும் போது எல்லாவற்றுக்கும் ஆன்மாவே அல்லது அகமே காரணம் என்ற தத்துவ நிலைபாடு இதுகாலம் வரை இருந்து வந்தமையால் முரண்பாடுகள் அல்லது பேதஞ்கள் மலிந்து காணப்படுகிறது.
பின்னை தலித்தியத்தின் முக்கிய கருபொருளாக உருக்கொண்டிருக்கிறமுக்கிய விஷயமே அர்சால்களின் சமூக நிலை பற்றியதாகும்.இந்திய சூழலில் முஸ்லிம்கள் குறித்த ஒற்றை அடையாள நிலை மாதிரியை அதிகம் முன்னிறுத்தபடுவதால் முஸ்லிம்கள் குறித்த முறையான ஆய்வுகள் அதிகம் இல்லை என்றே சொல்லலாம்.இஸ்லாமிய சமூகxகளுக்குள்ளும் இந்து சமூகஞ்களை போன்ற படித்தர சமூக கட்டமைப்பு காணப்படுகிறது.அஷ்ரப் என்கிற உயர்ஜாதிமுஸ்லிம்களும்,அஜ்லப் என்கிற இடைநிலை ஜாதி முஸ்லிம்களும்,அர்சால்கள் என்கிற இஸ்லாமிய தலித்துகளும் படித்தரமான சமூக அமைப்பில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.இந்திய இஸ்லாத்தின் தோற்றமும்,வளர்ச்சியையும் மறுவாசிப்பு செய்து பார்கிற போது இந்தியாவில் இஸ்லாம் பரவிய காலத்தில் இருந்தே மரபுசார்ந்து இந்திய சமூக,பண்பாட்டு மாதிரிகளை உள்வாஞ்கிக்கொண்டு தான் இஸ்லாம் பரிணமித்தது.இதனால் சமூக நிலை பெரும்பாலும் மாறாமலும்,அடையாள உருவாக்கம் புதிதாய் முஸ்லிகள் என்ற பெயரில் உருவாகியது.முஸ்லிம்களாக மதம் மாறிய பலரும் சமூக தளத்தில் ஜாதியத்தை மறைமுகமாகவோ,நேரடியாகவோ கடைப்பிடித்து வந்தனர் என்பதை பல ஆய்வுகளும் தெளிவுபடுத்தியுள்ளது.பிறப்பின் அடிப்படையிலும்,செய்யும் தொழில் அடிப்படையிலும் ஜாதி அந்தஸ்துகள் தொடர்ந்து நீடித்தன.அகமணமுரையும்,கலப்பின மண எச்சரிகை உணர்வுகளும் உயர்ஜாதினருக்கு சேவகம் செய்யும் தாழ்த்தப்பட்ட அர்சால்களும்,அர்சால்களை ,அஜ்லபுகளை ஆதிக்கம் செய்யும் போக்கும் என வரலாற்றில் நீண்டு நெடுகே முஸ்லிம் சமூக வரலாறு இருந்து வருகிறது.அடிப்படையில் இஸ்லாமிய சட்டஞ்கள் கூட ஜாதிமயமாக்கப்பட்டது எப்படி என்பதையெல்லாம் விரிவாக அலசுவோம்.
தலித்திய முன்னோடியான டாக்டர் அம்பேத்கார் தமது ஆய்வுகளில் இஸ்லாமிய ஜாதிகள் குறித்து அதிகமாக ஆய்வு செய்துள்ளார்.அடிமைத்தத்தை இஸ்லாம் ஒழிக்க பாடுபட்டபோதிலும் இஸ்லாமும் தன்னளவில் அடிமைத்தனத்தை ஆதரித்தது.பல இஸ்லாமிய நாடுகளின் வரலாறுகளில் அடிமைதனம் நீஞ்கா இடம் பெற்றிருந்தது.அதன் வேறோரு மாதிரியாக இந்தியாவில் இஸ்லாம் ஜாதியத்தை ஏற்றுக்கொண்டது.1901 ஆம் ஆண்டின் வஞ்காள பிராந்தியத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியல் படி அதிகபடியான ஜாதிகள் முஸ்லிம்களிடையே நிலவி வந்துள்ளது.குறிப்பாக சேக்,செய்யது,பதான்,மொகல் என்கிற உயர்ஜாதி பிரிவுகளும் இருந்துள்ளது.பிரதானமாக அஷ்ரப்,அஜ்லப் என்கிற சமூக படிநிலை முக்கியமானதாகும்.அஷ்ரப் அல்லது ஷரப் என்பது மேன்மையான உயர்வான மனிதர்களை குறிப்பதாகும்,அவர்கள் இஸ்லாமிய நாடுகளிலிருந்து இந்தியா வந்தோரும்,மதம் மாறிய உயர்ஜாதியினரும் ஆவார்கள்.அதற்கடுத்தாற்போல் அஜ்லபுகள் என்கிற சாதாரண,அல்லது தாழ்ந்த மனிதர்களை குறிக்கும் அந்த சொல் தரம்தாழ்ந்தரவரை குறிப்பதாக அமைகிறது.அதற்கடுத்தாற்போல அர்சால்கள் என்கிற இழிவான,விலக்கப்பட்ட மக்களை கடைசிபடிதரமாக கொண்டுள்ளது முஸ்லிம் சமூகம்.அவர்கள் பள்ளிகளில் நுழையவோ,பொது மையவாடியில் அடக்கப்படவோ தகுதியற்றவர்கள் ஆவார்கள்.சுருxக சொன்னால் இந்து சமூக அமைப்புக்கு கிஞ்சித்தும் குறைவானதல்ல என்ற ரீதியில் முஸ்லிகள் உள்ளனர்.
1 அஷ்ரப் அல்லது மேன்மக்கள்
அ) செய்ய்துகள்
ஆ) சேக்குகள்
இ) பதான்கள்
ஈ) மொகல்
உ) மாலிக்
ஊ) மிர்சா
2 அஜ்லப் அல்லது தாழ்ந்த மக்கள்
அ) பிராலி,தாக்ரே
ஆ) தர்சி,ஜோலகா,பக்கீர்,ரxரீஷ்
இ) பர்கி,பல்கியரா,சிக்,சுரிகர்,டாய்,தாவா,டுனியா,காடி,கலால்,கசாய்,குலா,
குஞ்சிரா,லகேரி,மகிபரோஸ்,மலா,நலியா,நிகாரி
ஈ) ஹஜாம்,மூசோ,நகர்சி,நால்,பன்வாரியா,மடாரியா,டுன்லியா,
அப்தல்,பாகோ,பேடியா,பால்,சாம்பா,டபாலி,டோபி,
3 அர்சால் அல்லது இழிந்த மக்கள்
பனார்,ஹலால்கர்,கிஜரா,கச்பி,லால் பெக்கி,மவுக்தா,மெக்தார் இவ்வாறு இஸ்லாமிய சமூகஞ்களில் ஜாதிகளும்,படித்தரஞ்களும் இயஞ்குகிறது (http://www.columbia.edu/itc/mealac/pritchett/00ambedkar_partition/410.html) . அம்பேத்கார் இஸ்லாம் குறித்த நல்லவிப்பிராயத்தை கொண்டிருந்தார் என்றாலும் முஸ்லிகள் குறித்த அதிருப்தியையும் கொண்டிருந்தார்.அவர் மதம் மாற உத்தேசித்துக்கொண்டு இஸ்லாம் குறித்த பல ஆய்வுகளையும் செய்து கடைசியில் இஸ்லாமும் ஜாதியதில் திளைத்திருக்கிறது என்று கூறி புத்தமதத்தை தேர்வு செய்தார் என்ற வரலாறு நமக்கு இப்போது தெரியவருகிறது.ஆக தலித்தியத்தின் பார்வையே பின்னை தலித்தியம் என்று சொன்னால் அதில் மிகையொன்றுமில்லை. இஸ்லாம் ஜாதியத்துக்கு எவ்வாறு உதவி புரிந்துள்ளது? இஸ்லாமிய வர்லாறுகளிலிருந்தும்,இஸ்லாமிய சட்ட ஆதாரஞ்களிலிருந்தும் ஜாதிக்கு ஆதரவான பல விஷயஞ்கள் என்ன?
Subscribe to:
Post Comments (Atom)
பின்நவீனத்துவ நிலை தமிழில்
பின்நவீனத்துவ நிலை: அறிவு குறித்த அறிக்கை(The Postmodern Condition: A Report on Knowledge) என்பது தத்துவஞானி ழீன் பிராங்கைஸ் லிய...
-
தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பின்கா...
-
தமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...
-
கவிஞர் அனார் : தமிழின் நவீன கவிதைகளுக்கு மிக வலுவான பங்களிப்பை தருகின்றவர். "ஓவியம் வரையாத தூரிகை(2004)", "எனக்குக் கவிதை முக...
No comments:
Post a Comment