Thursday, July 23, 2009

பெண்ணியம் 1


. பெண்நிலைவாதம் (Feminism) என்றால் என்ன? இதனை ஓர் அண்மைக்காலக் கிறுக்குத்தனம் எனக் குறிப்பிடலாமா?

பெண்நிலைவாதம் என்ற சொல் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் முதன்முதலாக உபயோகிக்கப்பட்டது. அப்போது பெண்களின் ஜனநாயக் உரிமைகளுக்கான போராட்டத்தையே அது குறித்தது.
அவை,

• கல்வி, வேலைவாய்ப்பு, உரிமைகள்
• சொத்துடமைக்கான உரிமை
• வாக்களிக்கும் உரிமை
• பாராளுமன்றத்திற்குச் செல்லும் உரிமை
• பிறப்புக்கட்டுப்பாடு செய்யும் உரிமை
• விவாகரத்து செய்யும் உரிமை போன்ற ஏனைய உரிமைகள் ஆகும்.

2. மேற்குறிப்பிட்ட உரிமைகள் யாவும் இப்போது எமக்குக் கிடைத்துள்ளன, எனவே இன்று பெண் விடுதலை எனக் கருதப்படுவது யாது?

இன்று பெண்நிலைவாதம் பாரபட்சமான தன்மைகளுக்கெதிரான சட்டாPதியான சீர்திருத்தங்கள், கட்டுப்பாடுகளை அகற்றுதல் ஆகிய எல்லைகளைக் கடந்து விட்டது.

• பெண்கள் வீட்டில் ஆண்களுக்குக் கீழ்படிதல்
• குடும்ப அமைப்பினால் பெண்கள் சுரண்டப்படுதல்
• தொழிலிலும், சமூகத்திலும், நாட்டின் கலாசாரத்திலும் பெண்கள் தொடர்ந்து குறைவான அந்தஸ்து உடையவராய் இருத்தல்
• பெண்கள் உற்பத்தியிலும் சந்ததி உற்பத்தியிலும் ஈடுபடுவதால் ஏற்படும் இரட்டைச்சுமை

ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களையும் உள்ளடக்கியதாக இன்று பெண்நிலைவாதம் அமைந்துள்ளது. இதனால் பெண்கள் கட்டுப்பாடு;களில் இருந்து விடுபடுவதற்காக மட்டுமன்றி, அரசினாலும், சமூகத்தினாலும் ஆண்களாலும் விதிக்கப்படுகின்ற சகல அடக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடி விடுதலை பெற வேண்டியவர்களாக உள்ளனர்.

பெண்கள்,

சுரண்டல் (உ10ம் சமனற்ற சம்பளம், குறைந்த சம்பளம்)
கீழ்;படிதல் (உ10ம் ஆண் ஆதிக்கத்திற்கு உட்படுதல்)
அடக்குமுறை (உ10ம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்)

ஆகியவற்றிற்கு இரையாவதுடன் அவர்கள் இவ்வாறான பிரச்சனைகளை ஏனைய பெண்களும் எதிர்நோக்குகின்றார்கள் என்பதனை உணர்ந்துள்ளனர். அத்துடன் தமது இந்த நிலைமை மாறுவதற்கும் சமுதாயத்தை மாற்றுவதற்கும் தாமே ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என்பதனையும் உணர்ந்துள்ளனர்.

3. ஆனால் அனேகமானோர் பெண்நிலைவாதமானது ஒரு மேற்கத்தைய கோட்பாடு எனவும், அது எந்தவிதமான விமர்சனநோக்குமின்றி ஆசியப் பெண்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றது எனவும் கூறுகின்றனர். இது உண்மையா?

அவ்வாறில்லை பெண்நிலைவாதமானது ‘அன்னியக் கருத்தமைவின்’ ஒரு பகுதியென்றோ, செயற்கையான முறையில் ஆசியப் பெண்களில் திணிக்கப்பட்டது என்றோ கூற முடியாது. ஆசியாவில் ஜனநாயக உரிமைகள் பற்றியும், அரைவாசி மக்கட் தொகையினருக்கு அடிப்படை உரிமைகளே வழங்கப்படவில்லை என்ற நியாயமற்ற நிலை பற்றியும் ஒரு விழிப்புணர்வு தோன்றி வளர்ந்து போதே பெண்நிலைவாதமும், பெண்நிலைவாதப் போராட்டங்களும் எழுச்சியடைந்தன. ஆசியாவில் அரசியல் விழிப்புணர்வு உச்சக்கட்டத்தை அடைந்த குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டங்;;;;;;;;;;;;;களில் பெண்;நிலைவாத விழிப்புணர்வும் ஏற்பட்டது. குறிப்பாக 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலும் அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகவும், உள்@ர் சர்வாதிகார, நிலப்பிரபுத்துவ ஆட்சியாளருக்கு எதிராகவும் போராட்டங்கள் ஏற்பட்ட போதே பெண்நிலைவாத உணர்வும் ஏற்பட்டது.

4. காலனித்துவ ஆட்சிக்காலத்திற்கு முன்பே ஆசியாவில் பெண்களின் சமூக அந்தஸ்து பற்றிய வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றனவா?

ஆம், பெண்கள் பற்றிய தர்க்கம் மிகவும் பழமையானது. உதாரணமாகப் பெண்கள் பௌத்த சங்கத்தில் சேர்ந்து துறவிகளாகலாமா என்பது பற்றி கி.மு 6ஆம் நூற்றாண்டிலேயே புத்தர் பெருமானும் அவரது சீடர்களும் விவாதித்தனர். ‘பெண்கள் கல்வி’ பற்றி ஆசியாவிலும் ஜரோப்பாவிலும் தொடர்ச்சியான கருத்து மோதல்கள் இடம் பெற்றன. 18ஆம் நூற்றாண்டில் சென் - ஹி;ங் மௌ (Chen - Huno Mou - 1696-1711) என்;ற சீன மேதை, மேரி வேர்ல்ஸ்ரென்கிராவ்ட் (Mary Wollstonecraft) க்கு முன்பாகவே பெண்கல்வி பற்றி ஒரே விதமான கருத்துக்களைக் கூறினார்.

இந்த உலகில் கல்வி கற்றுக்கொள்ள முடியாதவர் என்று யாருமில்லை; அத்துடன் எங்களால் கற்பிக்க முடியாதவர்கள் என்றும் யாருமில்லை. இவ்வாறிருக்க நாம் ஏன் பெண்பிள்ளைகளுக்கு கல்வி போதிப்பதில் மட்டும் கவனமின்றி இருக்கின்றோம்? குழந்தைப்பருவத்தைக்; கடந்தும் பெண்களின் வாசஸ்தலங்களிலேயே அவர்கள் வளர்க்கப்பட்டதோடு கவனமாகப் பாதுகாக்கவும்பட்டனர். அவர்கள் ஆண்பிள்ளைகள் போன்று வெளியே சென்று ஆசிரியரிடம் கல்விகற்பதனால் பெறும் நன்மைகளைப் பெற முடியாதுள்ளனர். ஆசிரியர், நண்பர் ஆகியோருடன் பழகுவதால் ஏற்படும் தூண்டுதல்கள் இவர்களுக்குக் கிடைப்பதில்லை…. பெண் பிள்ளைகள் வளர்ச்சி அடைகின்ற போது, அவர்களுக்குக் கற்பிக்கபடுவதெல்லாம் எவ்வாறு தமக்குத் தேவையான சீதனங்களைச் சேர்த்துக் கொள்வது, எவ்வாறு பூவேலைப்பாடு செய்வது என்பது மட்டுமேயாகும்.

5. இவையெல்லாம் ஆண்களின் உணர்வுகளுக்கு எடுத்துக்காட்டுக்களாக உள்ளன. ஆண்களே பெண்நிலை வாதிகளாக இருக்க முடியுமா?

ஆம், கிழக்கு நாடுகளில் ஆண் சீர்திருத்தவாதிகளே ஆரம்பகாலங்களில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டனர். சீனாவில் உதாரணமாக காங் யு-வெய் (Kanq Yu - We 1859 - 1927) என்பவர் பெண்களின் பாதக்கட்டுகளை எதிர்த்ததோடு, ஆண்களுக்கு கீழ்ப்படிந்து பெண்கள் நடக்க வேண்டும் என்ற நடைமுறையையும் எதிர்த்தார்.

‘எனக்கு இப்போது ஒரு கடமை உள்ளது. அதாவது கடந்த காலத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கணக்கிடப்படாததுன்பங்களுக்காக் குரல் கொடுப்பது. எனக்கு இப்போது ஒரு பேரார்வம் உள்ளது; அதாவது என்னுடைய காலத்தில் துன்பக்கடலில் மூழ்கி இருக்கும் 800 கோடி பெண்களையும் காப்பாற்றிக் கொள்வது எனக்கு எதிர்காலம் பற்றியும் ஓர் கனவுள்ளது; அதாவது எண்ணிடலங்காத பெண்களுக்கு எதிர்காலத்தில் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் சந்தோஷமாக அனுபவிக்கும் நிலையினை ஏற்படுத்திக் கொடுப்பது.

எகிப்தில் அகமட்ஃபெயார் எல் சிட்யாக் (Ahmed Fares El Shid vak) என்பவர் பெண்கள் அடக்கு முறைக்கு எதிரான போராட்டங்களை ஆதரித்து ‘ஒருகால் மற்றக் காலுக்கு மேலாக உள்ளது” (One Leq Crossed Over the Other) என்ற நூலின் 1885 ஆம் ஆண்டில் எழுதினார். காசிம் அமின் (Kasim Amin 1865 - 1908) என்பவர், புதுமைப்பெண் (The New Woman) என்ற நூலினை எழுதியதன் மூலம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஈரானில் பெண்களை ஒதுக்கி வைத்தல், பல மனைவியர் மணம் ஆகியவற்றை, பல ஆண் புத்திஜீவிகள் 1880 களிலும் 1890 களிலும்; எதிர்த்ததோடு, பெண்கள் உரிமைக்காகப் போராடினர்.

இந்தியாவில் ராஜாராம் மோகன் ராயின் காலத்தில் (1772 - 1883) இருந்து, சமூக, அரசியல் சீர்திருத்தவாதிகள் பலர் சதி, பெண்ணடிமை ஆகியவற்றிற்கு எதிராகப் போராடியதைக் காணலாம். வித்தியாசாகர், ராமகிருஷ்ணர், ரவீந்திர நாத தாகூர், காந்தி, நேரு போன்றோர் இவர்களில சிலராவார்.

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...