கலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்
Thursday, July 23, 2009
பெண்ணியம் 3
13. ஆனால் நிச்சயமாக நாம் முன்னேற விரும்பினால் இத்தகைய சுரண்டல் வடிவங்களை சிறிது காலத்திற்குத் தானும் பொறுத்துக்கொள்ள வேண்டும். நாம் முன்னேறிய பின்னர் இந்த எதிர்மறையான அம்சங்கள் மறைந்து விடும்
இந்தவகையான வளர்ச்சி (முன்னேற்றம்) முதலாளித்துவ உற்பத்தி முறைமையை அடிப்படையாகக் கொண்டது. உதாரணமாக முன்னர் ஐரோப்பாவில் வீடு உற்பத்தி மையமாக இருந்து வந்துள்ளது. (உணவு, உடை, சவர்க்காரம், மெழுகுவர்த்தி போன்றவை) இந்த உற்பத்தியில் பெண்கள் முக்கியமான ஒரு பங்கினைப் பெற்றிருந்ததுடன் விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் கைத்தொழிற் புரட்சியுடன் பெண்களுடைய நிலை மாற்றமடைந்தது.
(அ) ஏழைப் பெண்கள் (பாட்டாளிவர்க்கப் பெண்கள்) தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் (குறைந்த கூலியில்) வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டதுடன் அடுத்த தலைமுறை உழைப்பாளர்களையும் உற்பத்தி (சந்ததி உற்பத்தி) செய்தனர்.
(ஆ) பூர்ஷவாப் பெண்கள் குடும்பப் பெண்களாகவே வைக்கப்பட்டிருந்ததுடன் உற்பத்தியில் எதுவித பங்குமற்றிருந்தனர். ஆனால் தமக்குப் பின்னர் சொத்துக்கு வாரிசாகக் கூடிய தலைமுறையை மீள உற்பத்தி செய்து கொண்டிருந்தனர்.
(இ) மாறாக, இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு உட்பட மறுத்த சுதந்திரமான பூர்ஷ்வாப் பெண்கள் சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதுடன் தண்டிக்கவும்பட்டனர்.
பாட்டாளி வர்க்கப் பெண்களைச் சுரண்டுவதும் செல்வந்தப் பெண்களை தனிமைப்படுத்தி வைத்தலும் தீவிரமாகின.
14. ஆனால் 18ம் நூற்றாண்டில்; ஐரோப்பாவில் ஏற்பட்ட வளர்ச்சிகளுக்கும் இலங்கைப் பெண்களுக்குமுள்ள தொடர்பு என்ன?
ஆசிய நாடுகள் காலனித்துவப்படுத்தப்பட்ட பொழுது பெண்களின் நிலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டமை தான் இணைக்கும் தொடர்பாக உள்ளது. உதாரணமாகக் காலனித்துவத்திற்கு முற்பட்ட சமுதாயத்தில் பெண்கள் விவசாய வேலைகளை மாத்திரமே செய்தனர். ஆனால் காலனித்துவத்துடன் பல மாற்றங்கள் ஏற்பட்டன.
• பெண்கள் கோப்பி, றப்பர், தேயிலை மற்றும் ஏனைய தோட்டங்களில் வேலை செய்வதற்கு சேர்க்கப்பட்டனர்.
• பெண்கள் தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் வேலை செய்வதற்கு நிர்பந்திக்கப்பட்டனர்.
• விவசாய வேலைகளிலும் பெண்கள் தொடர்ந்து ஈடுபட்டனர்.
இந்நிலைமைக்கு மாறாக இலங்கையின் பூர்ஷவா வர்க்கப் பெண்கள் ஐரோப்பியப் பெண்கள் போல வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த போதிலும் கல்வி புகட்டப்பட்டதுடன் சில அடிப்படை உரிமைகள் கொடுக்கப்பட்டுமிருந்தனர்.
இவ்வாறு தந்தை வழிச் சமூகத்தின் எல்லா அம்சங்களும் மிக உறுதியாகக் காலனித்துவ நாடுகளில் நிலை நிறுத்தப்பட்டன. முற்பட்ட தாய் வழிச் சமூக அமைப்பின் மிச்ச சொச்சங்களும் முற்றாக நீக்கப்பட்டன. பெண்கள் விடயத்தில் அன்னிய ஆட்சியாளரின் கொள்கைகள் பின்பற்றப்பட்டன.
இவ்வாறு முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் ஐரோப்பாவிலும், காலனித்துவ நாடுகளிலும் தந்தை வழிச் சமூக அமைப்பு முறைகள் வலுவாக்கப்பட்டன. வீட்டிற்குரிய உற்பத்திகளில் முன்பு தமக்கிருந்த உரிமைகளைப் பெண்கள் இழந்ததுடன் வீடுகளில் இவர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர் அல்லது விளைநிலங்களிலும் தொழிற்சாலைகளிலும் சுரண்டப்பட்டனர். பூர்ஷ்வா வர்க்கப் பெண்களுக்கு குறிப்பிட்ட சில உரிமைகள் வழங்கப்பட்ட அதே வேளையில் அடிப்படைச் சட்டங்கள் ஆணைக் குடும்பக் தலைவனாகக் கொள்கின்ற தந்தை வழிச் சமூகத்திற்குரியதாகவே இருந்தன.
முதலாளித்துவ கலாசாரமும் தந்தை வழிச் சமூக அமைப்பினை மீளவும் வலுப்படுத்தியதுடன் ஏகாதிபத்திய வாதிகளும், மூன்றாம் உலக முதலாளித்;துவ வர்க்க ஆண்களும் தந்தை வழிச் சமூகப் பெறுமானங்களை அடிப்படையி;ல் ஏற்றுக் கொண்டிருந்தனர்.
15. பெண்கள் வீட்டு வாழ்க்கையில் அதிகளவு அக்கறையுள்ளவர்களாக இருப்பதால்; ஆண்களை விடக் குறைந்த அளவிலேயே அவர்கள் உற்பத்தி செய்வதானது வேலைத்தலங்களிற் காணப்படும் சமத்;துவமின்மைக்கு உண்மையான காரணம் என்று கூறலாமா?
முதலாளித்துவம் இந்த வாதத்தை ஆதாரமாகப் பயன்படுத்துவதோடு, ஆண்களையே குடும்பத்தின் தலைவனாகக் கருதி ~குடும்ப வேதனம்| என்ற முறையைப் பின்பற்றுகின்றது. அதாவது ஒரு குடும்பத்தலைவனும் அவனது மனைவி மக்களும் வாழ்க்கையை நடத்;துவதற்குப் போதுமான அளவு வேதனத்தைக் கொடுப்பதாகும். இந்தக் கருத்தின்படி பெண்கள் உற்பத்தியில் ஈடுபடும் போது, குடும்பத்தின் மேலதிக வருமானத்திற்காகவே அவள் உழைப்பதாகக் கருதி, சமனான வேலைகளின்; போதும் குறைந்தளவு வேதனத்தையே வழங்குகின்றனர்.
ஆனால் உண்மைநிலை வேறானதாகும். பல நாடுகளில் (இலங்கை உட்பட) மேற்கொள்ளபட்ட ஆய்வுகள் 25மூ-40மூ வரையிலான குடும்பங்கள் பெண்களின் உழைப்பிலேயே தங்கியிருப்பவையாகவோ, தனியே பெண்களின் தலைமையைக் கொண்ட குடும்பங்களாகவோ உள்ளன எனக் காட்டுகின்றன. இவர்களுட் பெரும்பாலான பெண்கள் வறுமையின் எல்லைக்கோட்டில் வாழ்கின்றனர் அல்லது குறைவாக கூலி தரும் தொழில்களில் தங்கி வாழ்கின்றனர். இவர்கள் முதலாளித்துவ ஆண்வழித் தீர்மானங்களைக் கொண்;ட வேலைத்தலங்களில் சமனற்ற கூலி பெறுதலுக்கும், ஏனைய பாரபட்சமான நடை முறைகட்கும் உட்படுகின்றனர்.
அது மட்டுமன்றி தொழிற்சாலை, வயல் அல்லது பெருந்தோட்டம் ஆகிய எவற்றிலாவது தொழில் செய்யும் பெண்கள் கூடுதலான நேரங்களை விட்டு வேலைகளிலும் செலவிடவேண்டியதாக உள்ளது. சமையல், துப்பரவு செய்தல், துணி கழுவுதல், நீர் எடுத்தல், விறகு சேகரித்தல், குழந்தை பராமரித்தல் போன்றவை அத்;தகைய வேலைகளாகும். இதனால் பெண்கள் இரண்டு வேலைச்சுமைகளை அநுபவிக்க வேண்டியதாக உள்ளது. ஒரு புறத்தில் கூலி பெறும் உற்பத்தியில் ஈடுபடும் பெண்ணானவள் கூலியற்ற வீட்டு வேலைக்காரியாகவும் உழைக்க வேண்டியுள்ளது.
16. எனினும் கூட நவீன மயமாக்கத்தின் மூலம் பெண்கள் தமக்குரிய இடத்தைச் சமுதாயத்தில் பெறுவார்கள். வீட்டில் உள்ள அவர்களது வேலைப்பளு குறைந்து போகும். வெளியே சென்று உழைப்பதன் மூலம் பொருளாதார ரீதியில் சுதந்திரம் பெறுவர்.
நவீனமயமாக்கத் திட்டங்களில் ~ஆண்சார்பு| இயல்பாகவே காணப்படுவதால் கருத்து ரீதியாகவும், நடைமுறை ரீதியாவும் பெண்களைப் பொறுத்து பாரபட்சமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பதற்கு ஆதாரங்கள் உண்டு. சில வேளைகளில் பெண்கள் உற்பத்தியில் ஈடுபடாதவாறு புறக்கணிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக பஞ்சாப்பில் பசுமைப்புரட்சியின் போது இடம் பெற்ற கூடுதலான இயந்திரமயமாக்கமானது, பெண்கள் பாரம்பரிய விவசாயத் தொழில்களில் ஈடுபடும் வாய்ப்பை இல்லாமற் செய்தது. தொழில் நுட்ப வேலைகள், பிரதானமாக ஆண்களுக்கென்றே ஒதுக்கப்பட்டதால் பெண்கள் வேலையில்லாப் பிரச்சினையை எதிர் நோக்க வேண்டியதாயிற்று. மேலும் இத்தகைய முயற்சிகளால் செல்வச் செழிப்புப்; பெற்ற விவசாயிகள் தமது பெண்களை வெளியே உழைக்கவிடாது வீட்டில் வைத்திருத்தல் அந்தஸ்தின் சின்னமாகவும் கருதப்பட்டது. இலங்கையில் மகாவலித்திட்டத்தினால் இதே போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. மிகவும் குறைந்த அளவு நிலமே சுதந்திரமான பெண்; விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அவர்களுக்கு கடன், தொழில் நுட்பம் என்பனவற்றைப் பெறுவதிலும் சிரமங்கள் இருந்தன. இதனால் அவர்கள் குறைந்த அளவு கூலி கிடைக்கும் தொழில்களைச் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர் அல்லது மீண்டும் வீட்;டு உழைப்பில் ஈடுபடவேண்டி இருந்தது. இதனால் அவர்கள் பொருளாதார சுதந்திரம் பெறுவதற்கான எத்தகைய முயற்சிகளையும் செய்யாமல் தடுக்கவும் பட்டனர்.
17. பெண்கள் மீதான வன்முறைக்கெதிரான இப்போராட்டங்கள் எத்தகையன? பெண்ணுரிமைத் தீவிரவாதிகள் பலாத்காரம் தொடர்பான சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டுமென வாதிடுகின்றனர். இலங்கைச் சட்டமோ பலாத்காரம் செய்யப்பட்டவரினதும், செய்தவர் எனக் குற்றம் சாட்டப்படுபவரினதும் நலன்களைச் சமமாகப் பேணுவதாகும்.
1833 ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட பெண்களைப் பலாத்காரம் செய்தல் பற்றிய சட்டம் இன்னமும் மாற்றப்படவில்லை. அதனால் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்டமாற்றங்கள் எதையும் அது கருத்தில் கொள்ளவில்லை. இலங்கைச் சட்டத்தரணிகள் மட்டும்; இப்;பொழுதும் அந்தச்சட்டத்தை சரியென வாதிடுகின்றனர். பிரித்தானியர்கள் அந்தச் சட்டங்களைத் தம் நாட்டில் மாற்;றியிருந்த போதிலும், இலங்கைச் சட்டத்தரணிகள் 100 வருடங்களுக்கு முன்பே செய்து வைத்த சட்டங்கள் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கப் போதுமானவை என வாதிடுகின்றனர்.
இன்று இலங்கையில் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்குத்தாக்கல் செய்தால் அதற்குச் சாட்சிகளைத் தருதல் வேண்டும். சட்டங்கள் இதனைத் தெளிவாகக் கூறாவிடினும் நடைமுறையில் இது கடைப்பிடிக்கப்படுகிறது. பலாத்காரம் தனிப்பட்ட குற்றமாகும். இது பொது இடத்தில் செய்யப்படுவதில்லை. கொலை, களவு போலன்றி இது ஒரு பெண்மீது மேற்கொள்ளப்படுவது. உடலுறவு அடையாளங்கள் மட்டுமே சான்றுகளாக உள்ளன. சாட்சிகள் கேட்பதானது ஏற்கனவே அச்சமடைந்த பெண்ணை மேலும் பலவீனப்படுத்துகிறது. இலங்கை போலன்றி ஏனைய நாடுகளில் சாட்சிகளின்மை வழக்கைத் தள்ளுபடி செய்யாது. தமக்கு முன்னுள்ள உண்மைகளை வைத்து ஜூரர்கள் அல்லது நீதிபதி தமது முடிவுகளை எடுக்கலாம்
இரண்டாவது, இலங்கைப் பெண்கள் பலாத்கார வழக்கில்; தமது சம்மதமின்;மையை நிரூபிக்கும்படி கேட்கப்படுகின்றனர். இது மேலும் பெண்களைத் துன்புறுத்துவதாகும். பொலிசாரும் வைத்தியரும் பலாத்காரத்தை எதிர்க்க வேண்டாம். அது கொலைக்கு வழி வகுக்கும் எனக் கூறுகின்றனர். ஆனால் நீதிமன்றங்களே ஒரு பெண் இதனை எதிர்க்காவிட்டால் அதனை அவளது சம்மதத்திற்கு அத்தாட்சியாகக் கொள்கின்றன. பலாத்காரத்திற்காக ஆண்கள் தண்டனை பெற வேண்டுமெனப் பெண்கள் விரும்பினால் இறப்புக்கும் இடமளிக்கும் நிலையை இலங்கைச் சட்டங்கள் ஏற்படுத்துகின்றன. ஏனைய நாடுகளில் இவ்வாறில்லை.
இலங்கையில் ஒரு பெண்ணின் கடந்தகால பாலியல் வாழ்வும்; வழக்கின் போது எடுத்து அலசப்படலாம். (அவள் திருமணமாகாத கன்னியா. அல்லது முறைதகா உறவுடையவளா? ஆகிய வினாக்கள்) அவள் ஒழுக்கரீதியாக தவறிய பெண் என்பதைக் காட்டுவதற்கு அவளது தனிப்பட்ட வாழ்க்கை எடுத்;துக்காட்டப்படுவதுடன், பலாத்காரத்தை அவளே தூண்டினாள் எனவும் நிரூபிக்கப்படலாம். ஏனைய நாடுகளில் சட்டங்கள் இத்தகைய நிலையை அனுமதிப்பதில்லை. அத்துடன் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்;ணை அவமதிப்பதையும் வன்மையாகத் தடுக்கின்றன.
சில பகுதிகளில் பலாத்காரம் அதிக அளவில் அதிகரித்து வருவதாக சமூக விஞ்ஞானிகள் கூறியபோதும் ஒரு சில பலாத்கார வழக்குகளே நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகின்றன. பெரும்பாலான பெண்கள் பாரம்பரியக் குடும்பங்களைச் சார்ந்தவர்களாக இருப்பதாலும், பெண்களுக்கு நீதி வழங்கப்படுவதை சட்டங்கள் தடுப்பதாலும் இந் நிலைமை ஏற்படுகிறது. மிகச் சுதந்திரமான நிலைமைகளிலும் கூட பெண், பலாத்கார வழக்குத் தாக்கல் செய்வதை இவை தடை செய்யலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
மக்களிய கலாசாரத்தின் தார்மீக உணர்வு
திரு.மாணிக்கம், நந்தா பெரியசாமி இயக்கிய 2024 ஆம் ஆண்டு தமிழ் மொழி நாடகம், பேராசை மற்றும் சந்தர்ப்பவாதத்தால் அடிக்கடி பீடிக்கப்பட்ட ஒரு சமூகத...
-
தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பின்கா...
-
தமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...
-
கவிஞர் அனார் : தமிழின் நவீன கவிதைகளுக்கு மிக வலுவான பங்களிப்பை தருகின்றவர். "ஓவியம் வரையாத தூரிகை(2004)", "எனக்குக் கவிதை முக...
No comments:
Post a Comment