Thursday, July 23, 2009

முரண்பாடும், முரண்பாடுகளும் 2


வன்முறை பற்றிய மேற்சொன்ன ஆறு எடுகோள்களும் மேற்கு நாட்டுச் சிந்தனையிலும் அரசியல் நடைமுறைகளிலும் முதலாம் உலகப் போர் வரை ஆக்கிரமிப்புச் செலுத்தின. முதலாம் உலகப் போர் மரபு ரீதியான சிந்தனைகளின் உணர்வுகளாலேயே ஆரம்பித்தது. உதாரணம்: “வன்முறை தவிர்க்க முடியாதது”. இது போர் பற்றிய மரபு ரீதியான சிந்தனையின் தேவையினை ஏற்படுத்தியது. இந்தப் புத்தி ஜீவ தேவையிலிருந்தே இன்றைய சமாதான ஆய்வு ஆரம்பித்தது. முதலாம் உலகப் போருக்கு பிற்பட்ட காலப் பகுதி பல சமாதான முயற்சிகளைக் கண்டது. இது தாக்கமான ஒரு சர்வதேச ஒழுங்கமைப்புக்கான நம்பிக்கையை உருவாக்கியது. பத்தொன்பதாம் நு}ற்றாண்டின் அரசியல் கனவான்கள் மீதும் அவர்களது நடவடிக்கைகள் மீதும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. சர்வதேச கழகமும், சர்வதேச சட்டமும் சமாதானத்திற்கு ஏற்ற பாதைகளாகக் கொள்ளப்பட்டன. முழுமையாக விசாரண செய்யும் முறையும் அவற்றை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளும் எடுக்கப்பட்டன. முன்னர் உள்ள சமாதா ஆராய்ச்சியாளர்களுள் றயிற் (றுசiபாவ) மேற்சொன்ன செல்வாக்குக்கு உட்பட்டவர். அவர் சர்வதேச கழகத்தினை தாக்கமான தொரு அமைப்பாக ஆக்கபல ஆலோசனைகளை முன்வைத்தார். இச் சிந்தனைகள் முன்னரே இருந்தவை. ஆனால் அவை போருக்கான இறுதிக் காரணம் அரசுகளின் இறைமை என்பதையே மையப் படுத்தின.

1920களிலும் 1930களிலும் நடந்த போர்களுக்கான காரணங்கள் பற்றிய ஆய்வுகள் இன்றும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இன்று மிச்சிக்கன் பல்கலைக் கழகத்தில் டேவிட் சிங்கர் (னுயஎனை ளுiபெநச) நடத்தும் போர் பற்றிய ஆய்வுத்திட்டம் இத்துறை பற்றிய விசாரணைகளின் தீர்க்கமான வெளிப்பாடாக உள்ளது.
முதலாம் உலகப்போரை விட இரண்டாம் உலகப் போர் அதிகாரத்தை கொண்டிருந்தவர்கள் தமது நடவடிக்கைகள் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்களை எதிர்வுகூறும் திறனற்றவர்கள் என்பதைக் காட்டியது. அதனை ஆரம்பித்தவர்கள் எல்லோரும் தோற்கடிக்கப்பட்டனர். பழி வாங்கப்பட்டவர்கள் வெற்றி பெற்றனர். போருக்கான காரணங்களை விளங்கிக் கொள்வதற்கான தேவை தொடர்ந்தும் முக்கியமானதாக விருந்தது. ஆனால் இரண்டாம் உலகப் போர் இரு புதிய அபாயங்களை முன் கொண்டு வந்தது.

1. அணு ஆயுதங்கள்
2. வெற்றி பெற்றவர்களுக்கிடையிலான முரண்பாடுகள்.

இப்பிரச்சினைகளிலிருந்தே ஆயுதப் பரிகரணமும் முரண்பாட்டுக் கோட்பாடும் அபிவிருத்தியடைந்தன. ஹிறோ சீமா (ர்சைழளாiஅய)இ நாகசாக்கி என்பவற்றின் மீதான அணு ஆயுதத் தாக்குதல்கள் ஆய்வு நடத்தும் சமூகத்திற்கு அடிப்படைச் சவால்களை ஏற்படுத்தின@ குறிப்பாக இயற்கை பௌதீக விஞ்ஞானிகளிடையே விஞ்ஞானத்தின் அடிப்படை மனதத்துவ, சிவில் சமூக நலன்கள் என்பது திடீரென முரண்பாட்டிற்குட்பட்டது. மிகவும் அழிவை ஏற்படுத்தும் வழியில் விஞ்ஞானத்தை நடைமுறைப்படுத்துபவர்களால் கோட்பாடு ரீதியானதும், நடைமுறைக்கு ஒவ்வாதனவாயும் இருந்தவை தீடீரென்று நடைமுறைப்படுத்தக் கூடியவையாகின. அணு ஆயுத சக்தியினை அரசியல் ரீதியில் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட தோல்வியும் ஆயுதப் போட்டியும் விஞ்ஞானிகளிடையே அணு ஆயுதக் கட்டுப்பாட்டுக்கும் ஆயுதப் பரிகரணத்துக்கும் பங்களிக்கும் இயக்கத்துக்கு வழிவகுத்தது. சமாதானத்திற்கான ஆய்வின் அபிவிருத்தி ஆயுதப் பரிகரண, ஆயுதக் கட்டுப்பாட்டு ஆய்வுக்கும் வழி வகுத்தது.

சமாதானத்துக்கான ஆராய்ச்சி மரபு 1966இல் ஸ்தாபன மயமாக்கப்பட்டது. உதாரணம்: ஸ்ரோக்கோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி ஸ்தாபனம் (ளுவழஉமாழடஅ ஐவெநசயெவழையெட Pநயஉந சுநளநயசஉh). இரண்டாம் உலகப் போரின் இரண்டாவது விளைவு வெற்றி பெற்ற நேச சக்திகளுக்கிடையில் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்த துருவப் போக்காகும். ஒரு குறுகிய காலத்தினுள் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள் கிழக்கு, மேற்கு எனப் பிளவுபட்டன. முரண்பாடு பொதுவான கருத்தில் வரைவிலக்கணப் படுத்தப்பட்டது. கெடுபிடி யுத்தமும் எதிரிக்கு சமமாக ஆகுதல் என்ற கொள்கையும் 1950 களில் அணுஆயுதம் சம்பந்தமான ஆய்வுகளாக மாறியதோடு போருக்கான வரலாற்றுக் காரணங்களையும் ஆராய்ச்சி செய்யவைத்தது. மேலும், பல தரப்பினர்களாலும் முன் வைக்கப்பட்ட பொதுமைப்படுத்தல்கள் முரண்பாடு எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை விளக்கும் தேவையை ஏற்படுத்தியது. இவ்வாறு முரண்பாடு பற்றிய கோட்பாடுகள் எழுச்சியடைந்தன.

No comments:

கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான பார்வை

கிஷ்கிந்தா காண்டம் ஒரு விரிவான  பார்வை அர்ப்பணிப்புள்ள வன அதிகாரியான அஜய் மற்றும் அபர்ணா ஆகியோரின் திருமணத்துடன் திரைப்படம் தொடங்குக...