Thursday, July 23, 2009

முரண்பாடும், முரண்பாடுகளும் 3


சமாதானம் பற்றிய ஆய்வாளர்கள், சமூக விஞ்ஞானிகள் ஆகியோரது முயற்சிகளுக்கு மத்தியிலும் முரண்பாடு என்ற எண்ணக்கரு நழுவிச் செல்லும் ஒன்றாகவே இருந்து வருகின்றது. 1950களிலும் 1960 களின் ஆரம்பங்களிலும் சமாதான ஆய்வுகளுக்கு முரண்பாட்டுக் கோட்பாடே மத்திய மயமானதாகவிருந்தது. ஆனால், 1960களின் இறுதியில் அது பலம் வாய்ந்த எதிர்ப்புகளை எதிர்நோக்கியது. பெரும்பாலான கோட்பாடுகள் கட்சிகளிடையே சமமான தன்மைகள் இருப்பதாக ஊகித்தனவே தவிர தேசிய அலகுகளிலும் சமூக குழுக்களிலும் நிலவிய அடிப்படைச் சமமின்மையைப் பாராமுகப்படுத்தின. 1970களில் மாக்சிய சிந்தனைகளின் செல்வாக்கு முரண்பாட்டுக் கோட்பாட்டை முன் கொண்டு செல்வதில் தோல்வி கண்டன. 1980களில் முரண்பாட்டுக் கோட்பாட்டை மறு சீரமைத்து புனர் நிர்மாணம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சமாதான ஆய்வில் முரண்பாட்டுக் கோட்பாடு முக்கியமான ஒற்றுமைப்படுத்தும் காரணியாகத் தொடர்ந்தும் இருந்து வருகின்றது. முரண்பாடு என்ற காட்சியிலேயே கவனம் செலுத்தும் பொதுமை வேறுபடும் பார்வைகள் அல்லது கண்ணோட்டங்கள் அல்லது அவதானிப்புகள் என்பவற்;;றை ஒன்றாகக் கொண்டு வரத்தக்க பகுப்பாய்வு, அடிப்படை எண்ணக் கருக்கள் பற்றிய கோட்பாட்டுத் தேவைகளை அவசியமாக்கின. இது தொடர்பாக பெருமளவு முயற்சிகள் இன்னும் செய்ய வேண்டியுள்ளன. ஆனால் ஆயுதப் போட்டி, போர் ஏற்படுத்திய ஆயுதப் போட்டிக்கான உள்@ர் உந்து விசைகள் போரை உருவாக்கும் முறைகளில் கூடியளவு வேறுபாடுகள் பற்றி வளர்ந்து வரும் புது விளக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இருந்தும் இன்னும் முரண்பாட்டுத் தீர்வு என்ற துறையில் மிகச் சிறிதளவு சாதனைகளே ஏற்பட்டுள்ளன. நாம் இன்னும் அவசரமாக முரண்பாடு, முரண்பாட்டுத் தீர்வு பற்றிய பொதுக் கோட்பாடினை கண்டுபிடிக்க வேண்டிய தேவையுண்டு.

முரண்பாட்டிற்கான தீர்வு பற்றிய செயற்பாடு, நுட்பங்கள் என்பவை மனித வர்க்கம் அளவு பழமையானதாயினும் இந்த விடயப் பரப்பு பற்றிய முறையான கற்கை ஒரு தசாப்தம் அளவுக்கு சற்று அதிகமானதாகும். ஐக்கிய அமெரிக்காவில் சமாதானம் சாத்வீக கற்கைகளின் எழுச்சி தான் முரண்பாட்டுத் தீர்வுக்கான புலமை சார் பயிற்சியின் ஒரு மூலமாகும். இத்தகைய பயிற்சித் திட்டங்கள் வியட்நாம் போரில் அமெரிக்கத் தலையீட்டை எதிர்த்து நடத்திய நடவடிக்கைகளால் தான் பெரும்பாலும் அதிகரித்தன.

1960களின் பிற்பகுதியிலும் 1970களின் ஆரம்பத்திலும் எதிர்ப்பு நடவடிக்கைகள் பெரும்பாலானவை அமெரிக்க கல்லு}ரி வளாகங்களிலும் நிர்வாகிகளாலும் சமாதான வழிகளில் போரை முடிவுக்குக் கொண்டு வருதல் பற்றிய கற்கை நெறித் திட்டங்களாக விரிவுரையாளர்கள் தொடக்கிய திட்டங்களை மையமாகக் கொண்டிருந்தன.

ஆரம்ப சமாதான கற்கை நெறித் திட்டங்கள் பெரும்பாலும் மூன்று விடயப் பரப்புகளுள் ஒன்றினைப் பற்றியதாகவிருந்தது. உதாரணமாக கிறாக்கூஸ் பல்கலைக்கழகமும் கென்ற் சம அரசும் சமூக மாற்றக் கோட்பாடும் வரலாறும் வழி முறைகளும் என்பவற்றை வற்புறுத்தின. கொள்கேற்றும் ஏழ்காமும் (நுயடாயஅ) சர்வதேச போர் சமாதானம் பற்றிய பிரச்சினைகள் என்பவற்றை முக்கியத்துவப்படுத்தின. மன்கற்றன், மன்செஸ்ரர் என்பன மாற்றத்தினை ஏற்படுத்துதல் அல்லது வன்முறைச் சாத்வீக ஒழுக்க மெய்யியல் பாடவிதானத்தை பெருமளவு வற்புறுத்தின. ஆனால் கற்கை நெறித் திட்டங்களது அபிவிருத்தியானது வரிவுரையாளர்களது புலமைக்கான தரவுகள் பயிற்சி பெறும் வாய்ப்புக்களில் ஈடுபடத் தொடங்கியமையும் முரண்பாட்டுத் தீர்வு நடவடிக்கைகள் விரிவடைந்தமையும் சமாதான கற்கை மென்மேலும் ஆராய்ச்சி பயிற்சி என உபதுறைகளாக வளர உதவின. இப்போக்கு தொடந்ததோடு 1980களில் வேகமடையத் தொடங்கின.

முரண்பாட்டுத் தீர்வுக் கோட்பாடு நுட்பங்கள் பற்றிய புலமைப் பயிற்சிக்கான இரண்டாவது மூலம் தமது பட்டதாரிகளுக்கு எழுச்சியடைந்து வரும் இத்துறை பற்றிய அறிவும் திறமையும் இருக்க வேண்டுமென அண்மையில் தொழல்சார் பயிற்சி வழங்கும் கல்லு}ரிகள் அங்கீகரித்தமையாகும். கடந்த சில வருடங்களுள் சட்டம் முகாமைத்துவம் மனித அபிவிருத்தி என்பவற்றோடு தொடர்புபடும் கல்லு}ரிகள் பல இத்தகைய திட்டங்களை ஆரம்பித்துள்ளன.

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...