Thursday, July 23, 2009

முரண்பாடும், முரண்பாடுகளும் 1


சமாதானம் பற்றி ஆய்வு செய்பவர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகள் பலரது ஆய்வுகளுக்கு மத்தியிலும் கூட முரண்பாடு என்ற எண்ணக்கரு தொடர்ந்தும் விளக்க முடியாத தொன்றாகவே இருந்து வருகின்றது. 1950களிலும் 1960 களின் ஆரம்பத்திலும் சமாதானம் பற்றிய ஆய்வுகளுக்கு முரண்பாட்டுக் கோட்பாடே மத்திய மயமானதாக விருந்தது. 1980களில் முரண்பாட்டுக் கோட்பாட்டினைப் புதுப்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆரம்பத்தில் “மக்கியாவலி” என்ற கூற்றுபோர், வன்முறை, அதிகாரம் பற்றிய மேற்கு நாட்டுச் சிந்தனையைச் சுருக்கித் தருவதாக அமைந்தது. எனினும், அது சமாதான ஆய்விற்கான ஒரு வேரினையும் சுட்டிக் காட்டுகிறது. போர் சமாதானம் பற்றிய படிப்பில் மக்கியாவலியினது கருத்துக்களோடு பலர் தொடர்ச்சியாக வாதிட்டு வந்துள்ளனர். வன்முறை பற்றிய மரபு ரீதியான அதியுயர் தானத்தின் அம்சங்களை விமர்சன ரீதியாகவும் ஆக்க பூர்வமாகவும் நேர்க் கணியமாகவும் பகுப்பாய்வு செய்ய முற்பட்டதிலிருந்தே சமாதானம பற்றிய ஆய்வு வளர்ச்சியடைந்தது. அவற்றில் பெரும்பாலானவை புளோரன்ஸ் நகரத்து அரசியல்வாதியும் இராஜதந்திரியுமான நிக்கலோ மக்கியாவலியின் ஆலோசனையின் பேரில் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தன. இவ்வாலோசனைகள் 16ஆம் நு}ற்றாண்டு ஐரோப்பாவின் அறிவுப்புரட்சிக்கே வழங்கப்பட்டவையாகும். உதாரணமாக கிரேக்க உரோமன் எழுத்துக்கள் அவை ஒன்பதாம், பத்தாம், பன்னிரண்டாம் நு}ற்றாண்டுகளின் உபாயக் கற்கைகளிலும் இடம் பெற்றவை. குறி;ப்பாக யதார்த்த குழுவினரிடையே சமாதான ஆய்வு மேற்கொள்ள சிந்தனைகளின் விமர்சனமாகவே எழுச்சியடைந்தது. ஆனால் அதன் பங்களிப்பு விமர்சனம் மாத்திரம் அல்ல. மக்கியாவலியின் சிந்தனைகள் யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டவையா என்பதை அனுபவரீதியாக பரிசோதனை செய்தமையே அதன் பலனாகும். மக்கியாவலியோடு புத்தி ஜீவி ரீதியில் ஆரம்பித்த போராட்டம் வன்முறை பற்றிய புதிய அணுகுமுறைகளாக அபிவிருத்தியடைந்தன. மக்கியாவலியின் கருத்துக்களுடனான போராட்டம் சமாதான ஆய்வுக்கான ஒரு முக்கியமான து}ண்டு சக்தியே. வேறொன்றும் உண்டு@ அது கற்பனாவாதம் என்பதிலிருந்து பெற்ற ஆய்வாகும். வரலாறு முழுவதும் கணிசமானளவு சமாதான சிந்தனை என்பது இடம்பெற்று வந்துள்ளது. இவற்றுள் சில மதச், சார்பற்றதும் மெய்யியல் மரபுகளிலிருந்தும் பெறப்பட்டவையுமாகும் வேறு சில மதச், சித்தாந்த சிந்தனைகளிலிருந்து பெறப்பட்டவை. ஆனால் இவையெல்லாம் சிந்தனைகளை அபிவிருத்தி செய்யத்தக்க செழிப்பான சேர்க்கைகளை முன் வைத்தன. கற்பனாவாதம் சமாதான ஆய்வுக்கான இன்னொரு வேறுபட்ட உள்ளீடாகும். இத்தகைய சமாதான ஆய்வு சமாதான மெய்யிலாளர்கள், சமாதான தேவாலாயங்கள், போரை எதிர்த்தவர்கள் என்ற மரபிலிருந்து தோன்றியது@ சமாதான ஆய்வு வன்முறை என்ற பிரச்சினைகள் மீது கவனங் கொள்கிறது. குறிப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட வன்முறை சமூக முரண்பாடுகள் என்பவற்றை மையப்படுத்துகின்றது. இக்கவனம் சமாதான ஆய்வினை தனித்துவம் வாய்ந்ததாக்குகிறது.

சமாதான ஆய்வில் வன்முறையினை மத்திய மயப்படுத்துவதற்கும் மேலாக அனுபவரீதியான விசாரணைகளை வற்புறுத்தும் விருப்பமும் இருந்தது. முக்கியமான கோட்பாட்டுப் பங்களிப்புகள் அனுபவ ரீதியான உறுதியை வரவேற்றன. இந்த விருப்பம் சமாதான ஆய்வின் இரு மரபுகளையும் ஒன்றிணைத்தது.

மக்கியோவலியே முதன்முதலில் வன்முறையினை மன்னிப்புக் கேட்காமலும் அதனை ஒரு இலட்சியம் ஆக்காமலும் விபரித்தார். “இளவரசன்” என்ற நு}லில் வன்முறை மறைவில்லாமல் தோற்றமளிக்கின்றது. ஆனால், அது அதிகாரத்தினை அடைவதற்கான ஒரு கருவியாகவே விபரிக்கின்றது. அதனைப் பகுத்தறிவுடன் பகுப்பாய்வு செய்யக் கூடியதாகவிருந்தது. மக்கியாவலியின் சிந்தனைகள் புதிதானவையல்ல. ஆனால் அவற்றுக்குக் கல்வி புகட்டும் சாராம்சங்கள் இருந்தன. வன்முறை பற்றிய பிரச்சினைகள் பகுப்பாய்வுக்குத் திறந்து விடப்பட்டன. அவரது “இளவரசன்” ஒரு தலைவன் எவ்வாறு அதிகாரத்தைப் பெற்று அதைப் பராமரிக்கலாம் என்பதற்குப் பல உதாரணங்களைக் கொண்டிருந்தது. மக்கியாவிலியின் இளவரசன் என்ற நு}ல் இத்தாலியை ஒற்றுமைப்படுத்தவல்ல பலமான இளவரசனை முன்னுக்குக் கொண்டு வந்தது. ஆகவே, மக்கியாவலி சமாதான ஆய்வின் தோற்றத்துக்கு ஆரம்ப கர்த்தா என்பதற்குப் பொருத்தமானவராகின்றார். மக்கியாவலியின் கருத்துப்படி,

(i) வன்முறை எங்கும் இருக்கின்றது.
(ii) ஆதிகாலத்தில் ஆட்சி செலுத்துவதற்கான கருவியாக வன்முறை விளங்கியது.
(iii) அரசியல் அதிகாரத்துக்கான இறுதி மூலம் வன்முறையாகும்.
(iஎ) முரண்பாடுகள் அதிகாரத்தினாலும் வன்முறையாலும் தீர்க்கப்படுகின்றன.
(எ) அரசும் அரசாங்கமுமே அடிப்படையில் முக்கியமான நடிகர்கள்.
(எi) அரசு மற்றைய அரசுகளைப் பொறுத்து சுதந்திரமானது.

மேற்சொன்ன ஆறு எடுகோள்களாலும் உலகம் விபரிக்கப்பட்டது. “இளவரசன்” பல நவீன சக பாடிகளைக் கொண்டுள்ளது

No comments:

மக்களிய கலாசாரத்தின் தார்மீக உணர்வு

திரு.மாணிக்கம், நந்தா பெரியசாமி இயக்கிய 2024 ஆம் ஆண்டு தமிழ் மொழி நாடகம், பேராசை மற்றும் சந்தர்ப்பவாதத்தால் அடிக்கடி பீடிக்கப்பட்ட ஒரு சமூகத...