Friday, July 03, 2009

நட்சத்ரவாசியின் கவிதைகள்


உடைந்த நாற்காலி
*******

-- நட்சத்ரவாசி


ஒரு பழைய நாற்காலியின்
உடைந்த காலொன்று
மிகவும் கவனத்துடன்
பொருத்தப்பட்டிருக்கிறது
உடைந்த நாற்காலி என்று
சொல்லிக் கொள்ளவில்லை
ஆயினும்
உடைந்து விடும் என்பது
நிச்சயமே
உன் இருப்புக்கும்
அதன் இருப்புக்கும்
இடையில்
இருப்பின் தவிப்பாய்
என்னொரு மனம்.

No comments:

இலக்கியம் என்ன செய்யும்?

தக்கலை கலை இலக்கியப் பெருமன்றம் (த.க.இ.பெ) மற்றும் நாகர்கோவில் மாவட்ட அலுவலகத்தில் 1990 முதல் 1995, 2001 முதல் 2006, மற்றும் 201...