Thursday, July 23, 2009

மார்க்ஸியமும் இலக்கியமும் 5


லெனினுடைய கட்டுரையின் தாற்பரியத்தை உணர்வதற்கு 1905இல் பொல்செவிக் கட்சியின் சுட்டிப்பான வரலாற்று நிலையோடு அதனைத் தொடர்புபடுத்தல் வேண்டும். அவ்வாண்டிலே நடைபெற்ற புரட்சியைத் தொடர்ந்து சார் அரசாங்கம் சில சமூக, அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டது. இவற்றில் ஒன்று எதிர்க் கட்சிகளுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டமை. இந்தச் சூழ்நிலையில் பொல்செவிக் கட்சி தன்னைப் பகிரங்கமாக வெளிப்படுத்த முடிந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் கட்சியில் சேர்ந்த புதிய உறுப்பினர்களை நோக்கித்தான் லெனினுடைய கட்டுரை வரையப்பட்டது; கட்சிக்கு எதிரான இலக்கியமோ, கருத்துக்களோ எச்சந்தர்ப்பத்திலும் பொல்செவிக் கட்சிக்குள் அனுமதிக்கப்பட மாட்டா. கட்சி இலக்கியம்பற்றி மட்டும்தான் - அதாவது பொல்செவிக் கட்சி உறுப்பினர்களால் படைக்கப்பட்டு, கட்சி அச்சகத்தால் வெளியிடப்பட்டு, கட்சிப் பத்திரிகைகளிலும் புத்தகக் கடைகளாலும் விநியோகிக்கப்படும் இலக்கியத்தைத் தான் - லெனின் குறிப்பிட்டார் என்பது நன்கு மனங் கொள்ளத்தக்கது. கட்சியின் தொழிற்பாடுகள் கண்டிப் பான கட்சிக் கட்டுப்பாட்டிற்கு உட்பட வேண்டும் என லெனின் வாதிட்டார்; அதுபோல எல்லாவகையான இலக்கியம்மீதும், அழகியல், விமர்சன, மெய்யியல் துறைகள் மீதும் இத்தகைய கட்டுப்பாடு இருக்கவேண்டும் என்றும் லெனின் கூறாமல் கூறினாரா? அவரே தொடர்ந்து எழுதினார்: ‘அமைதியுறுங்கள் கனவான்களே, ஏனெனில் நாம் இப்பொழுது கட்சி இலக்கியம் பற்றியும், கட்சிக் கட்டுப்பாட்டிற்கு அது கீழ்படிவது பற்றியுந்தான் பேசுகின்றோம். தான் விரும்பியவற்றை, எதுவித தடையுமின்றி, எவரும் எழுதுவதற்கும் பேசுவதற்கும் சுதந்திரம் உண்டு. என்றாலும் கட்சியுட்பட தன்விருப்பார்ந்த அடிப்படையில் அமைந்த நிறுவனம் ஒவ்வொன்றிற்கும் கட்சிக்கு எதிரான கருத்துக்களை கட்சியின் பெயரிலே வெளியிடும் உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கும் உரிமை உண்டு’ எல்லாவகையான இலக்கிய முயற்சிகள்மீதும் கட்சி கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என லெனின் வாதிடவில்லையென்பதே இங்கு முக்கியமாகக் குறிக்கப்பட வேண்டியது; பொல்செவிக் கட்சியுடன் நேரடி ஈடுபாடுகொண்டிருந்த எழுத்தாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சார்பு நிலையைத்தான் அவர் இங்கு சுட்டினார். இந்த விளக்கமே சரியானது என்பதை இக்கட்டுரைக்கு லெனின் எழுதிய குறிப்புகள் சான்று பகருகின்றன. அவை தெட்டத் தெளிவாக அக்சல்ரொட், மார்டொவ், பார்வஸ், ரொட்ஸ்கி பிளெக்கனொவ் ஆகிய இலக்கியவாணர்களையே சுட்டுகின்றன. 1905 இல் பெரும்பாலான நாவலாசிரியர்களோ, கவிஞர்களோ, கலைஞர்களோ கட்சி வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபடாத சூழ்நிலையில் அவர்களை விளித்துத்தான் லெனின் மேற்குறிப்பிட்டவற்றைக் கூறினார் என்பது பொருந்தாது. 1920இல்நிலவிய முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் லெனின் பின்வருமாறு எழுதினார்: ‘தன்னுடைய எண்ணப்படி சுதந்திரமாக புறநிர்ப்பந்தம் எதுவுமின்றிப் படைப்பதற்கு ஒவ்வொரு கலைஞனுக்கும் உரிமையுள்ள போதிலும் பெரும் குழப்பநிலை ஏற்படுவதற்கும் நாம் வாழாவெட்டியாகக் கைகட்டிநின்று அனுமதிக்க முடியாது’. இவ்வாறு கூறிய போதிலும் இலக்கியம்மீது சர்வாதிபத்திய கட்டுப்பாடு இருத்தல் வேண்டுமென்ற பொருளில் அவர் குறிப்பிடவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் 1921ல் கட்சி எடுத்தமுடிவு இதனை லெனினே அங்கீகரித்தார் - முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. அவ்வாண்டிலே ‘கன்னிச் செம்பூமி’ என்ற பெயரில் இலக்கிய அம்சங்களைப் பெரும்பாலும் உள்ளடக்கிய சஞ்சிகை ஒன்றினை வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன் ஆசிரியர் அலெக்சாண்டர் வொறன்ஸ்கி என்பவராகும். அச்சஞ்சிகைக்கு விடயதானம் வழங்கியவர்கள் பாட்டாளிவர்க்க எழுத்தாளர்கள் மட்டுமன்றி மொடனிச, தாய்நாட்டை விட்டு வெளியேறிய எழுத்தாளர்களுமாவர். ‘சரியான’ அரசியலை அறுதியிட்டுக் கூற எத்தகைய முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. பொல்செவிக்குகள் மீது அதிக அனுதாபம் கொண்டிருக்காத எழுத்தாளர்களின் விடயதானங்கள் வெளியிடப்பட்டன. இவற்றைப் போல் முக்கியமான இன்னொரு அம்சம் என்ன வெனில் இன் கொள்கையைத்தான் வொறன்ஸ்கி கடைப்பிடிக்க வேண்டுமெனக் கட்டுப்பெட்டித்தனமாகக் கட்டளையிடுவதற்கு எவரும் விழையாமையே. பில்னியாக், சாம்யாட்டின் போன்றோரின் படைப்புக்கள் அடிக்கடி இச்சஞ்சிகையில் வெளியிடப்பட்டன. சஞ்சிகையின் வளர்ச்சிப் போக்கை லெனின் மிகக் கூர்மையாக அவதானித்து வந்தார். வளர்ந்துவரும் புதிய சோவியத் கலைஞர் தலைமுறையிலிருந்து யதார்த்தவாதத்தின் மறுமலர்ச்சி ஏற்படுமென பொல்செவிக்குகள் எதிர்பார்த்தது உண்மையே. இலக்கியத்திலும், நாடகத்துறையிலும், ஒவியத்திலும், இசையிலும் யதார்த்தவாதம் ஊடுருவியிருக்க வேண்டுமென லூனசாஸ்கி எழுதினார். ஆனாலும், அரசியல் ஆஐணமூலம் பண்டப் பொருள்களை உற்பத்தி செய்வதுபோல் கலை, இலக்கியத்தைப் படைக்க முடியாதென்பதை லெனினும், ரொட்ஸ்கியும் லூனசாஸ்கியும் பூரணமாக உணர்ந்திருந்தனர். மொடனிசத்தை லெனின் எதிர்த்துநின்ற போதிலும் இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்குமிடையே உள்ள உறவு இயக்கவியற் பாங்கானதே அன்றி இயந்திரப் பாங்கானது அல்ல என்பதை லெனின் புரந்து வைத்திருந்தார். எடுத்துக்காட்டாக புரட்சிக்கு முன்னர் டால்ஸ்டாயைப்பற்றி அவர் எழுதிய நான்கு குறுங்கட்டுரைகள் பிளெக்னெவ்வின் இயந்திரப் பாங்கான கோட்பாட்டிற்கு எதிரிடையாக அமைந்தன. பிளெக்னொவ் இலக்கியப் படைப்பை வர்க்கப் பின்னணியின் வெறும் பரதிவிம்பமாக குறுக்கினார். இவருடைய கருத்துப்படி டால்ஸ்டாலிருந்து - டால்ஸ்டாயின் நிலப் பிரபுத்துவ சமூக நிலையிலிருந்து - நேரடியாகத் தோன்றிய ஒன்றே லெனின் டால்ஸ்டாயின் இலக்கியத்தை அவர் காலத்தின் ஆவணமாக நோக்கிய போதிலும் இயக்கவியல் கண்டுகொண்டு படைப்பை அணுகுவதால் டால்ஸ்டாயின் கலையில் உள்ளடங்கியிருக்கும் முரண்பாடுகளை - டால்ஸ்டரியனுடைய கோட்பாட்டிற்கும், அவரது சமூக வர்க்க நிலைக்குமிடையே உள்ள முரண்பாடுகளை -அழுத்திக் கூறமுடிந்தது. நிலமானிய முதலாளித்துவ கூறுகளின் கலப்பினை உள்ளடக்கிய 19-ம் நூற்றாண்டு ரஷ்ய சமுதாயத்தின் முரண்பட்ட வளர்ச்சிப்போக்கை டால்ஸ்டாயின் படைப்புக்கள் பரதிபலிக்கின்றன என்பதே லெனினுடைய அடிப்படைக் கருத்தாகும். டால்ஸ்டாயினுடைய நிலைப்பாடு தொழிலாளவர்க்க, சோஷலிச நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை என்றும் விவசாயி, பூர்சுவா புரட்சியின் குரலாகவே அது ஒலித்ததென லெனின் சுட்டிக்காட்டினார். படைப்பாளி தனது சொந்த வர்க்கப் பின்னணியையே பிரதிவிம்பம் செய்கின்றான் என்ற கோட்பாட்டை லெனின் இதனால் நிராகரித்தார் எனலாம்.

உன்னத இலக்கியத்தை டால்ஸ்டாய் படைப்பதற்கு ரஷ்யாவின் எதிர்காலம் நகரத்துப் பாட்டாளி வர்க்கத்தினதும் புரட்சிகர சோசலிசத்தினதும் கைகளிலேயே தங்கியிருக்கின்றதே அன்றி விவசாயிகளிலும் அகிம்சைக் கோட்பாட்டிலும் அல்ல என்ற உண்மையை டால்ஸ்டாய் உணந்திருக்க வேண்டிய அவசியமில்லை என லெனின் சுட்டிக்காட்டி வாதாடியது மிக முக்கியமானதொன்றாகும். தவறான வரலாற்றுக் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த டால்ஸ்டாய் பால்சாக்கைப் போன்று கலையினூடாக ‘யதார்த்தவாதத்தின் வெற்றி’ மூலம் ரஷ்ய சமுதாயத்தை நேர்மையோடும் வாய்மையோடும் படம்பிடித்ததின் விளைவாகத் தனது கற்பனாவாத தத்துவத்தையும் அரசியலையும் மேவிநின்றார். அவரது கருத்து முதல்வாதத் தத்துவமும், பிற்போக்குத் தனமான கற்பனாவாதம் உயரிய இலக்கியத்தைப் படைப்பதற்கு முட்டுக்கட்டைகளாக இருக்கவில்லை.

எனவே லெனினுடைய இச்சிறு கட்டுரைகளோ அவரது அரசியல் நடவடிக்கைகளோ பின்னைய ஸ்ராலினிச நடைமுறைகளுக்கு ஊற்றாகவும் தூண்டுதலாகவும் அமைந்தன என வாதிட முடியவே முடியாது; சோசலிச யதார்த்தவாதமும் அரசின் கோட்பாட்டிற்குள் எழுத்தாளர்களைச் சிறைப்படுத்துவதும் மார்க்சியவாதத்தின் இயல்பான தன்மைகள் எனக்கூறுவதும் அறவே பொருந்தாது. சோசலிசத்தை எய்துவதற்கு சோவியத் ஒன்றியத்திலே நடைபெற்ற போராட்டத்தைப் பற்றியும் 1920களில் பொல் செவிக் கட்சியின் இடது வலது குழுக்கள் பொருதிக் கொண்டதுபற்றியும் செம்மையான, ஆழ்ந்த வரலாற்று நோக்கு இல்லாததாலேயே இத்தகைய கருத்துத் திரிபுகள் சாத்தியமாகின்றன. இந்தக் கருத்து மோதல்களின்போது இலக்கியம் அரசியல் அதிகாரத்துக்கு உட்படாத ஒரு செயற்பாடு என்ற வாதத்திற்கு எதிராக இலக்கியம் சமூகப் பொறுப்பு வாய்ந்தது என்ற அதிகாரிமயவாதம் முன்வைக்கப்பட்டது. இத்தகைய பிரச்சினைகள் குறித்து 1920களில் கடும் போராட்டம் நிகழ்ந்தது; ஒருபுறம் இலக்கிய வெளிப்பாட்டின் எல்லைகள் பரந்து அகலித்திருக்க வேண்டும் எனக் கருதியவர்கள் (வொரொன்ஸ்கி, ரொட்ஸ்கி) மறு அணியில் பழைய ‘புரொலிட்கல்ட்’டுடன் தொடர்புற்றிருந்த வறண்ட ‘ஏட்டுத்தனம்’ மிக்க அதிகாரிமயப் போக்குகள் திரண்டன ஜனநாயகத்திற்கு விரோதமாக நிருவாகக் கட்டளைகள் மூலம் ஆட்சிசெய்த சக்திகளின் ஒங்கிவரும் அதிகாரத்தின் இலக்கிய வெளிப்பாடுகளாக இப்போக்குகள் விளங்கின. சோவியத் சமுதாயம் அதிகாரிமயப்படுத்தப்படுவதையும், புரட்சி கர எழுச்சியில்லாத தேசியவாத சோசலிசம் தோன்றிவருவதையும் ஸ்ராலினும் ‘ஒரு நாட்டில் சோசலிசம்’ என அவர் முன்வைத்த சுலோகமும் பறைசாற்றின.

மார்க்ஸியமும் இலக்கியமும் 4


ஸ்டாலினிசத்தின் வளர்ச்சி மொடனிசத்தின் எல்லா எச்ச சொச்சங்களையும் அழித்தது. பல எழுத்தாளர்கள் அனாமதேயங்களாக தொழில் முகாம்களில் இறந்தனர். வேறு சிலர் தாய்நாட்டை விட்டுச் செல்வதற்கும் மௌனவிரதம் அனுட்டிப்பதற்கும் நிர்ப்பந்திக்கப்பட்டனர். (சாம்யாட்டின், ஒலெஷா, புல்ககொவ்) சிலர் தற்கொலை செய்தனர் (மாயா கொவ்ஸ்கி); அல்லது அதிர்ஷ்டத்தாலோ, நேர்மையீனத்தாலோ தம்மை விற்கத் தயாராகவிருந்ததாலோ உயிர் பிழைத்தனர் (ஷொலொக்கோவ், அலெக்சயி டொல்ஸ்ராய், பெடின், லியோனோவ்) புரட்சி மீது பொதுப்படையான பற்றீடுபாடு என்ற கொள்கை உருமாறி ஸ்ராலினுடைய வரலாற்றுத்திரிபு மீதான விடாப்பிடி பற்றாகிற்று. ஸ்ராலினுடைய சொற்களில் கூறுவதானால், எழுத்தாளன் - குறிப்பாக நாவலாசிரியர் - மனித ஆன்மாவின் பொறியியலாளனாக மாறவேண்டும்: பொது இலட்சியத்திற்காகவே தனது கலையை அவன் உருவாக்க வேண்டும். எனவே பற்றுறுதி மிக்க சோசலிச யதார்த்த இலக்கியம் ‘மொடனிச’த்தை மறுத்ததோடு சமூகஉலகை நேர்மையாக உள்ளவாறே வர்ணிப்பதையும் நிராகரித்தது. சமூக நம்பிக்கை, ஆர்வம், நம்பிக்கை மிக்க இலட்சிய கதாநாயகன், வீரம்மிக்க தொழிலாளர், நேர்மையான கட்சித் தொண்டர் - 1934ம் ஆண்டு நடைபெற்ற எழுத்தாளர் மகாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்ட ‘செயலூக்கமிக்க’ இலக்கியம் இவ்வாறே வடிவெடுத்தது.

இவ்வாறு இலக்கியத்திற்கு அதிகாரிகளினால் தலையிடப் பட்டமை, எழுத்தாளர் அணிவகுக்கப்பட்டு அரசியல் நிருவாகத்திற்கு உட்படுத்தபட்டமை, இவற்றின் விளைவாக அவர்கள் சௌலூக்க இலக்கியக் கோலம் பூண்டமை எல்லாம் பொல்சவிக் கோட்பாட்டினது - குறிப்பாக கட்சி, இலக்கியம், அரசியல் ஆகியவற்றுக்கிடையிலே நிலவவேண்டிய தொடர்புகள் பற்றி லெனின் கொண்டிருந்த எண்ணங்களினது - தர்க்கரீதியான வரலாற்றுத் தொடரின் கூட்டுமொத்தம் எனச் சில சமயங்களிலே சுட்டிக் காட்டப்படுகின்றது. ஒரு கட்சியே அனுமதிக்கப்பட்ட அரசியல் பற்றீடுபாடு அற்ற எழுத்தாளனுக்கு இடமேயில்லை எனப்படுகிறது. எனவே தான் 1920 களில் எழுத்தாளர்களுக்கும் இலக்கியக் குழுக்களுக்கும் ஒரளவு சுதந்திரம் வழங்கப்பட்டமை, கம்யூனிஸ்ட் கட்சி கலைத்துறையிலே ஆதிக்கஞ் செலுத்துவதற்கான முழு அதிகாரத்தையும் வல்லமையையும் பெறமுன்பு செய்யப்பட்ட இடைக்கால ஒழுங்காக - உறுதியற்ற நிலையில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக உத்தியாக - சிலரால் கணிக்கப்படுகின்றது. ஆனால் இத்தகைய வாதம் அக்கால கட்டத்தின் மிக முக்கிய அம்சம் ஒன்றைப் புறக்கணிக்கிறது. அக்கட்டத்திலே இரு குழுக்கள் ஒன்றை ஒன்று எதிர்த்து அரசியல் போராட்டம் நடாத்தின. ஒரு சாரார் இலக்கியம் சமூகப் பொறுப்பும், பயனும் வாய்ந்ததென வாதிட்டனர். மறுசாரார் நிருவாக ஆணைகளாலோ ‘கூட்டத்தோடு கோவிந்தா போட்டு, ஒத்தோடும் மனப் பான்மையாலோ கலை படைக்கப்பட முடியாதென்றும், கலை அரசியல் நெருக்குவாரங்களுக்கு உட்படுத்தப்படலாகாதென்றும் இயம்பினர். 1930 கள் அளவில் பின்னைய போக்கு ஏறக்குறைய நசுக்கப்பட்டு விட்டது. இதனால் 1928ல் தாயகம் மீண்ட மாக்சிம் கார்க்கி ‘விமர்சன யதார்த்தவாதத்’திற்கும், ‘சோசலிச யதார்த்தவாதத்’ திற்குமிடையே உள்ள அடிப்படை வேறுபாடு முன்னையது மனிதன் தனது அடிமை நிலையிலிருந்து விடுதலையை நாடுவதற்கான வழியைக் காட்டமுடியாமையே எனக் கூறமுடிந்தது. சோசலிச யதார்த்தவாதம் வெறுமனே சமூகத்தின் சீர்கேடுகளை அம்பலப்படுத்துவதோடு மட்டும் நில்லாது, சோசலிசத்தின் படைப்பாற் றலையும் அதன் சாதனைகளையும் ஆக்க பூர்வமாக பிரதிவிம்பம் செய்ய வேண்டும் என கார்க்கி வாதிட்டார். ‘விமர்சன யதார்த்த’ வாதத்தைத் தாண்டி - சமூக வாழ்வின் எதிர்மறையான, நம்பிக்கையை இழக்கச் செய்யும் இருண்ட பகுதிகளுக்கு அது கொடுக்கும் அழுத்தத்திற்கு அப்பாலே - அனைத்துலக தொழிலாள வர்க்கத்தைத் தட்டி யெழுப்பி அதன் உரிமைகள் பற்றிய புரட்சிகர அறிவுணர்வை ‘சோசலிச யதார்த்தவாத’ எழுத்தாளர்கள் தூண்ட வேண்டும் என கார்க்கி வற்புறுத்தினார். ‘மனித ஆன்மாவின் பொறியியலாளன்’ என்ற முறையில் வர்க்க உணர்வை உருவாக்குவதே எழுத்தாளனின் பணி; ‘பல இனங்கள் வாழும் சோவியத் ஒன்றியத்திலே எவ்வாறு நோக்க ஒருமைப்பாடு பற்றிய உணர்வு தோன்றியதென அவன் காட்ட வேண்டும்’ இக் கூற்றின்படி, இலக்கியம் எதிர்காலத்தைச் சார்ந்து நிற்கிறது: சமூகத்தின் தவிர்க்க முடியாத, முற்போக்கான உருமாற்றத்தில் அது பற்றுறுதி கொண்டிருக்கிறது. எழுத்தாளனின் கடமை, வாய்மை போன்ற அகமயமான கலை ஆணைகளுக்கல்ல, வரலாற்றின் உள்ளார்ந்த நோக்கத்திற்கே அவன் பொறுப்புடையவன். வரலாற்றின் நோக்கத்தை அரசும் அதன் அதிகாரிகளும் அதிகார பூர்வமாக வெளிப்படுத்தி மிகப் பெரிய பொலிஸ் அடக்குமுறை இயந்திரம் மூலம் நிறைவேற்றுகின்றது. கார்க்கியின் அதிகாரப் பாங்கான திட்டத்தில், சமூக ரீதியாகவும், கலை ரீதியாகவும் இலக்கியம் ஒரு சித்தாந்தமாகப் பணியாற்றுகின்றது; வர்க்கத் தொழிற்பாடு, அரசியல் அமைப்புக்கள் ஆகியவற்றின் வெறும் துணை உறுப்பாகத்தான் எழுத்தாளன் இருக்கிறான்; முதலாளித்துவத்தை அகற்றி சோசலிசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் அவன் ஓர் உறுப்பு.

இலக்கியம் உலகை அறிவுபூர்வமாக உருமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை சோசலிச யதார்த்தவாதம் சாராம்சத்தில் தன்னுள் அடக்கியுள்ளது. இந்நிலைப்பாட்டிற்கு கம்யூனிஸ்ட் கட்சிக்கே விஞ்ஞான பூர்வமான வரலாற்றுணர்வும், இன்றைய வருங்காலப் பணிகள் பற்றிய தெளிவான விளக்கமும் இருப்பதால் இலக்கியத்தில் உள்ளடக்கத்தையும் தன்மையையும் வரையறுப்பதற்கு அதற்கே உரிமையும் அதனிடமே வழிவகைகளும் உண்டு என்ற கருத்து நிலைக்கும் அதிக இடைவெளி இல்லை. கட்சியின் ஆற்றுப் படுத்தலில் எழுத்தாளன் ‘சீருடை அணிந்த கலைஞனாகின்றான். ‘நட்பு ரீதியான ஆலோசனை’ வழங்கப்படுவதன் மூலம் படைப்புத் தொழிற்பாட்டில் உள்ளடங்கி யிருக்கும் ‘அராஜகப் போக்குகளை’ எழுத்தாளன் களைந்து கம்யூனிச இலட்சியங்களை உறுதிப்படுத்துகின்றான்.

இத்தகைய சர்வாதிபத்திய நிலைப்பாட்டிற்கு அரண் செய்யும் பொருட்டு லெனினுடைய எழுத்துக்கள் வரவழைக்கப்படுகின்றன. சோசலிச யதார்த்வாத பற்றீடுபாட்டிற்கு மூலமாகவும், அடிப்படையாகவும் அவையே மேற்கோள் காட்டப்படுகின்றன. மறுபுறம் மார்க்சீயத்தைக் கண்டிப்பவர்களின் கண்களுக்கு லெனினுடைய எழுத்துக்களிலே இலக்கியம்பற்றி சோவியத் மார்க்சீசம் உள்ளார்ந்து கொண்டிருக்கும் இழிவான கண்ணோட்டம் தென்படுகின்றது. இரு சாராரின் நிலைப்பாடுகளையும் சமரசப்படுத்த முடியாது. ஆயினும் இரு சாரார்க்கும் அதிமுக்கியமாக விளங்குவது ‘கட்சி ஒழுங்கமைப்பும் கட்சி இலக்கியமும்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையே. 1905ல் லெனின் எழுதிய இச் சிறுகட்டுரை 1920 களின் முற்பகுதியில் சோவியத் இலக்கியம் பற்றி நடைபெற்ற விவாதங்களிலே பெரும்பாலும் பொருட்படுத்தப்படவில்லை. எனினும், 1932ல் இருந்து இக்கட்டுரை மாசில்லாத புனிதத்துவம் பெற்றதுடன் நேர்மையான சோசலிச இலக்கியத்தின் கோட்பாட்டு அளவு கோலாகவும் கருதப்பட்டு வரத் தொடங்கியது. இக்கட்டுரையிலே, இலக்கியத்தின் வர்க்க அடிப்படையை லெனின் தெட்டத் தெளிவாக விளக்கினார். முற்போக்கான கண்ணோட்டத்தை எழுத்தாளன் கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தினை எடுத்துக்கூறி, இலக்கியம் கட்சி இலக்கியம் ஆகவேண்டும் என லெனின் உரைத்தார்.

மார்க்ஸியமும் இலக்கியமும் 3


பெப்ரவரி 1917-இல் நடைபெற்ற புரட்சியில் அலெக்சான்டர் கெரன்ஸ்கியின் தலைமையில் பூர்சுவா ஜனநாயக அரசாங்கம் பதவிக்கு வந்தது. சார்மன்னன் முடியைத் துறந்தார். ஆயினும் நேசநாடுகளின் யுத்த நோக்கங்களுக்கு ஆதரவளித்துவந்த கெரன்ஸ்கியின் அரசாங்கம் விரைவிலே மக்கள் ஆதரவையும்தனது அதிகாரத்தையும் இழந்தது. ஒக்டோபரில் கைத்தொழில் துறையைச் சார்ந்த தொழிலாள வர்க்கம் பொல்ஷெவிக்குகளுக்குப் பின் அணிதிரண்டு துரதிர்ஷ்ட சாலியான கெரன்ஸ்கியை ‘வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள்’ வீசியது. முற்றிலும் எதிர் பார்க்காதவர் களிடமிருந்து புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு கிடைத்தது. பியூச்சரிச குறியீட்டுவாதக் கவிஞர்களான அலெக்சான்டர் புளொக்கும், ஆன்ரே பெலியும் ஆனந்தப் பரவசத்தோடு புரட்சியை ரஷ்யாவின் ஊழிக் கூத்தாக வரவேற்றனர். புளொக் வருமாறு எழுதினார். ‘பயங்கரச் சூறாவளியையோ பனிப்புயலையோ போன்று ஒரு புரட்சி எப்பொழுதுமே புதியனவற்றை, எதிர் பாராதவற்றைக் கொணர்ந்து பலபேரை இரக்கமற்று ஏமாற்றுகிறது. அதன் சுழிகள் நல்லவர்களை விழுங்கி தகுதியற்றவர்களைக் காப்பாற்றுகின்றன. ஆனால் அதுவே புரட்சிகளின் இயல்பு. அதனால் நீரோட்டத்தின் முழுமொத்த திசை மார்க்கம் மாறுவதுமில்லை. அதனுடன் பிறந்த செவிடுபடுத்தும் பயங்கர ஆராவரமும் ஓய்வதில்லை. அதன் பேரிரைச்சல் அதன் உன்னதத்தின் வெளிப்பாடு”.

ஏனைய ரஷ்ய எழுத்தாளர்கள் இத்துணை ஆர்வம் காட்டவில்லை. 1922 அளவில் பெருமளவில் ரஷ்ய எழுத்தாளர்கள் மேற்கு ஐரோப்பாவிற்குப் படையெடுத்துச் சென்றமை பொல்ஷெவிசம் மீது கற்றறிந்தோர் வர்க்கம் பரவலாகப் பகைமை கொண்டிருந்ததைக் குறிக்கின்றது. ஜவன்பவனின், லியோனிட், அன்ரேயேவ், அலெக்சயி ரெமிசொவ் ஆகியோர் நிரந்தரமாகவே தாய்நாட்டை விட்டு வெளியேறினர். அலெக்சயி ரொல்ஸ்டாய், கோர்க்கி, ஏரன்பேர்க் ஆகியோர் தற்காலிக நாடோடிகளாயினர். ரஷ்யாவில் தொடர்ந்தும் வாழ்ந்த புரட்சிக்கு முற்பட்ட ஏனைய எழுத்தாளர்கள் புதிய நிலைமைக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்வதில் சங்கடப்பட்டதால் முக்கியத்துவம் வாய்ந்த அதிக படைப்புக்களை உருவாக்கவில்லை, யதார்த்த இலக்கியத்திற்கு புரட்சி புத்துயிரளித்து சோசலிச இலக்கியத்தை உருவாக்கும் என்ற எதிர் பார்ப்புகள் விரைவிலே கலைந்தன; புரட்சிக்கு உடன் பின் வந்த ஆண்டுகளிலே முன்னணிக்கு வந்த புதிய எழுத்தாளர் தலைமுறை 19ம் நூற்றாண்டு இலக்கிய ஆசான்களால் அல்ல குறியீட்டு வாதம், பியூச்சரிசம் ஆகியவற்றால் பாதிப்புற்றிருந்தனர். மொடனிசம் நசுங்குண்டிருப்பதற்குப் பதிலாக வலுவாக உயிர்ப்புப் பெற்றது. புரட்சியை விமர்சனக் கண்ணோட்டத்தோடு ஏற்றுக்கொண்ட அதேவேளை அதை ஒதுக்கி நின்று ஐயுறவாக நோக்கிய எழுத்தாளர்களினூடாகத்தான் - ‘இலக்கிய உடன் பிரயாணிகள்’ என ரொட்ஸ்கி இவர்களை அழைத்தார் - புரட்சி தனது உச்ச கலை வெளிப்பாட்டைப் பெற்றது: பில்னியாக், சாம்யாட்டின், பெடின், ஓலெசா, லியேனோவ் புரிவதற்கு கடினமாயிருப்பதாக லெனின் குறிப்பிட்ட மொடனிசத்திற்கு ஒரு புதிய, பற்றுறுதி வாய்ந்த யதார்த்தவாதம் சரியான சவால் விடவில்லை. 1920 களில் ஏறக்குறைய ஒருவகை ‘தற்போக்குக்’ கொள்கையே ரஷ்ய பண்பாட்டுத் துறையில் பரவியிருந்தது. ஆனால் 1930 கள் அளவில் மிகக்கட்டுப்பெட்டித் தளமான, நெகிழ்ந்தே கொடுக்க மறுத்த வைதீகப்போக்கு பல்வகைத் தன்மையையும் பரிசோதனையையும் அகற்றிவிட்டது. 1934ல் நடைபெற்ற சோவியத் எழுத்தாளர் மகாநாட்டில் முதன் முதலாக எடுத்துரைக்கப்பட்ட சோசலிச யதார்த்தவாதக் கோட்பாடு இலக்கியத் துறையிலே செல்லுபடியாகக் கூடியவற்றின் அரசியல் உரைகல் ஆகிற்று. ஸ்டாலினுடைய கலாசார ‘சீர்திருத்தங்கள்’ சோவியத் இலக்கியத்தை சிறைப்படுத்தத் தொடங்கிய காலகட்டத்திலேதான். மேற்கத்தைய எழுத்தாளர்கள் புரட்சியின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அரசியல் - இலக்கிய விவாதம் ஒன்றில் ‘சிக்கிக்’ கொண்டனர். இந்த விதாதமே நவீன சோசலிச நாவலின் தலை விதியை நிர்ணயித்தது எனலாம். யதார்த்த வாதம் குறித்து எழுந்த விவாதத்தில், நேரடியாகவோ மறைமுகமாகவோ மால்றோ, டொஸ் பஸ்சொஸ், ஹெமிங்வே, கேஸ்லர், ரொமெயின் ரோலண்ட், கீற், பார்புசே, மாட்டரின் நெக்சோ (டானிஷ் எழுத்தாளர்) இஷவுர்ட், லியோன் பியுட்வங்கர், ஹைன்ரிக் மான் ஆகியோர் சம்பந்தப்பட்டனர். சோவியத் யூனியன் மீதும், சோசலிசம், மரர்க்சியம் எனத் தாங்கள் விளங்கிக் கொண்டதன் மீதும் பலர் உறுதியற்ற நம்பிக்கை விசுவாசம் கொண்டனர். புரட்சிகரக் கட்டத்தை கம்யூனிசம் தாண்டிவிட்ட பின்னர்தான் மேற்கு ஐரோப்பாவின் முக்கிய எழுத்தாளர் சிலர் அக்கோட்பாட்டினால் ஈடுக்கப்பட்டு பாதிப்புற்றனர். 1917ஆம் ஆண்டு இலட்சியங்களான சர்வதேசீயத்திற்கும் ஜனநாயக சோசலிசத்திற்கும் பதிலாக தேசீயவாதமும் அதிகாரி வர்க்கத்தின் மேலாதிக்கமும் அப்பொழுது நிலவின. தவிர்க்கமுடியாதவாறு - குறிப்பாக 1939இல் உருவாகிய நாசி - சோவியத் ஒப்பந்தத்திற்குப் பின் - மாயை கலையத் தொடங்கியதும், வெறுமனே ஸ்டாலினிசம் மட்டுமல்ல, சோசலிசமும், மார்க்சியமும் சில சமயங்களிலே ஜனநாயகமும் கூட நிராகரிக்கபட்டன. இந்தப்போக்கு ஓர்வெல், கோஸ்லர், கெமு, சாத்ரே, டொரிஸ் லெசிங் ஆகியோருடைய அரசியல் நாவல்களிலே காணப்படுகின்றது. 1920களின் துன்பகரமான நிகழ்ச்சிகள் பாஸ்ரனாக்கினது படைப்புகளிலே ஆவிகள் போல் உலாவுகின்றன.

மார்க்ஸியமும் இலக்கியமும் 2


மார்க்சியத்தில் பொருள்முதல் வாதத்தையும், கலையில் யதார்த்த வாதத்தையும் சற்று இயந்திரப் பாங்காக சமன் படுத்தி அவற்றையும் அடித்தளத்தால் மேற்கட்டுமானம் முழுக்க முழுக்க நிர்ணயிக்கப்படுகின்றதென்ற கோட்பாட்டையும் ‘மொடனிச’த்தை நிராகரித்தலோடு தொடர்புபடுத்துவது தெட்டத் தெளிவாகின்றது. எடுத்துக்காட்டாக, பிளெக்கனொவ் - மார்க்ஸ்சிற்குப் பின்னர் மிகப் புலமையும் தகுதியும் வாய்ந்த இலக்கிய மார்க்சியவாதி இவரே - யதார்த்தவாதத்தை நடுத்தர வர்க்கத்தின் பொருளாதார ரீதியாக முற்போக்கான அம்சங்களுடனும் ‘மொடனிச’த்தை அவ்வர்க்கத்தின் வீழ்ச்சியுடனும் தொடர்பு படுத்தினார். 19-ம் நூற்றாண்டு பிரஞ்சு இலக்கியத்தை அளவுக் கணிப்பெடுத்த அவர், 1848-ம் ஆண்டுப்புரட்சிப் பின்னர். பிரஞ்சு இலக்கியம் பால்சாக்கின் புறநிலையான, வலுமிக்க யதார்த்தத்திலிருந்து ஒதுங்கி, அகத்திற்குள் புகும்போக்காக தேய்ந்து குன்றியதென்ற முடிவிற்கு வந்தார். ‘கலை கலைக்காக’ என்ற இயக்கமும் குறிப்பாக புளபெயர், பொத்தலயர், ஹயஸ்மன்ஸ் ஆகியோரது படைப்புக்களும் இதற்கு உதாரணங்களாகக் காட்டப்பட்டன. இந்த இயந்திரப்பாங்கான வரட்டு, கட்டுப் பெட்டித்தனமான கோட்பாடு மார்க்சிய இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படையாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1934-இல் நடைபெற்ற சோவியத் எழுத்தாளர் மகாநாட்டில் ‘சோசலிச யதார்த்தவாத’மே பாட்டாளி வர்க்க எதிர்காலத்தின் கலைப்பாணி என உத்தியோக பூர்வமாக பிரகடனம் செய்யப்பட்டதும், அது அடிப்படை மார்க்சிய கொள்கைகளின் தர்க்க ரீதியான விளைவாகப் பலருக்குத் தோன்றியது. ஆனால் இத்தகைய கருத்து மிகவும் தவறானது. ஏனெனில் லெனின் தனிப்பட்ட முறையில் கலைத்துறை நவீனத்துவத்தை ஆட்சேபித்த போதிலும், 1917-ம் ஆண்டுப் புரட்சிக்கு வெளிப்படையாக எதிர்ப்புக் காட்டாத எல்லா வகையான கலை வெளிப்பாட்டு முறைகளுக்கும், பாணிகளுக்கும் லூனாசார்ஸ்கி ஊக்கமளிப்பதை அது தடுக்கவில்லை. மேலும் சோவித் இலக்கியத்தினதும் கலையினதும் படைப்பாற்றல் மிக்க காலகட்டம் மலர்வதற்கு அது தடையாக இருக்கவுமில்லை. ‘இப்பொழுது போல் முன்பு எப்போழுதுமே நாடகக் கொட்டகைகள் இருந்ததில்லை (இக்கட்டத்தில் நுழைவுக் கட்டணங்கள் அறவிடப்படவில்லை) ‘இப்பொழுது போல் இத்துணை நூல்கள் - குறிப்பாகக் கவிதைத் தொகுதிகள் - வெளிவந்ததில்லை. நாடகத் துறையிலும், ஓவியத்திலும் இவ்வளவு பரிசோதனைகள் நடைபெற்றதில்லை’

பொல்ஷவிக் புரட்சி கலைத்துறையில் நவீனத்துவத்திற்கும் சர்வதேசீயத்திற்கும் வழிகோலியது. 1930க்குப் பின்னர் தோன்றிய வெளிப்படையான தேசியவாத, பழமைபேண்கலைக்கும் இந்தப் பண்பாட்டு இயக்கத்திற்கும் கூரிய வேறுபாடு காணப்படுகின்றது. திரைப்படத்தைப் பொறுத்தவரை ஜசன்ஸ்ரைனினதும், புடொவ்கினதும், டொவ்ஷென்கோவினதும், குலேசொவினதும், வேர்ரொவினதும் பங்களிப்புகள் உலக சினிமாவின் போக்கையே மாற்றின. ரட்லின், மலேவிச், லிசிட்ஸ்கி, கன்டின்ஸ்கி, றொட்சென்கோ ஆகியோர் நவீன ஒவியத்தினதும், கட்டிடக் கலைத்துறையினதும் முன்னோடிகளாக விளங்கினர். புனைகதை, கவிதை ஆகியவற்றைப் பொறுத்தவரை, பாஸ்ரனக், பேபல், ஒலேஷா, பெடின், சாம்யாட்டின், மன்டல்ஷ்டாம், மாயாகோவ்ஸ்கி, லியோனொவ், சொலோகொவ் ஆகியோர் 1920-களை சோவியத் இலக்கியத்தின் பொற்காலமாக ஆக்கினார். ஆனால் 1930-கள் அளவில் சோவியத் பண்பாட்டுத் துறையின் ஒவ்வொரு கூறிலும்மிகக் கட்டுப்பெட்டித்தனமான வறட்டு வைதீகம் ஊடுருவி பரவியிருந்தது; இதன் விளைவாக கலைப் பரிசோதனைகளுக்குப் பரிசாகக் கிடைத்தது ஒன்றில் தனிமைப்படுத்தப்படல் அல்லது மரணம். இக்கலைஞர்களால் முன்னோட்டமாகத் தொடங்கி வைக்கப்பட்ட புதிய பாணிகளுக்கும் சோசலிச யதார்த்தவாதத்தின் அதி பழமைபேண் கருதுகோள்களுக்குமிடையே இப்பொழுது நேரடி மோதல் ஏற்பட்டது. சோசலிச யதார்த்தவாதிகள் வெற்றி வெறுபனே மார்க்சிய அழகியலின் உள்ளார்ந்த தர்க்க நியதியின் விளைவல்ல: நவீனத்துவ கலைஇலக்கியத்திற்கும் மார்க்சியத்திற்குமிடையே எப்பொழுதும் ‘இழுபறி’ நிலையே இருந்து வந்தது குறிப்பாக 1920-களில்

இலக்கியத்திலும் அரசியலிலும் இடதுசாரிகளுக்கும், வலதுசாரிகளுக்குமிடையே நடைபெற்ற காரசாரமான விவாதங்களின்போது இந்த ‘இழுபறி’கள் எவ்வாறு இறுகிக் கெட்டியாகின என்பதை இனிப் பார்ப்போம். கலை இயக்கியத்துறை முற்றும் முழுதாக அதிகாரிமயப் படுத்தப்பட்ட தன் மூலம் இந்த மோதல்கள் இறுதியில் தீர்த்து வைக்கப்பட்டன.

மார்க்சியமும் இலக்கியமும் 1


தனது நினைவுகளை எழுத்தில் வடித்த ஜெர்மனிய சோசலிசவாதி கிளாரா செட்கின் லெனினைப் பற்றிக் குறிப்பிடுகையில் புதிய பரிசோதனைக் கலைஞர்கள் மீது அவர் அதிக உணர்வீடுபாடு கொண்டிருக்கவில்லை யென்றும், மார்க்ஸ், எங்கெல்ஸ், பிளேக்கனொவ், ரொட்ஸ்கி ஆகியோரைப் போன்று அவரும் கலையிலும், இலக்கியத்திலும் யதார்த்தத்தையே விரும்பினார் என்றும் கூறினார். லெனினைப் பொறுத்தவரை அவருக்கு இலக்கிய கோபுரக் கொடுமுடிகளாகத் திகழ்ந்தவை டான்ரே, சேக்ஸ்பியர், புஷ்கின், பால்சாக், டிக்கன்ஸ், டொல்ஸ்டோய் ஆகியோரின் படைப்புக்களே. புதிய பரிசோதனைக் கைலையைப் பொறுத்தவரை தான் ஒரு ‘காட்டுமிராண்டி’ என லெனின் கூறினார்: எக்ஸ்பிரஷனிசம், பியூச்சரிசம், கியூபிசம் ஆகியவற்றினதும் வேறு ‘இசம்’களினதும் ஆக்கங்களைக் கலை மேதாவிலாசத்தின் உச்ச வெளிப்பாடுகளாக என்னால் கருதமுடியவில்லை. அவை எனக்குப் புரியவில்லை. அவை எனக்கு மகிழ்வூட்டவே யில்லை.

1918-இல் நடைபெற்ற புரட்சி விழாக்களின் போது மாஸ்கோவை அலங்கரிப்பதற்கு பியூச்சரிச, கியூபிச கலைஞர்களை லூனாசார்ஸ்கி - முதலாவது பொல்செவிக் கல்விக் கமிசார் அனுமதித்திருந்தார். அப்பொழுது இக் கலைஞர்களின் முயற்சிகளை லெனின் கடும் குத்தலான ஏளனத்தோடு “வெளிப்படையான அவமதிப்பு, சிதைவு” என வர்ணித்தார். மாயோ கொவ்ஸ்கியின் கவிதையைப் பற்றி (150,000,000) குறிப்பிடுகையில் ‘இது கவர்ச்சிமிக்க இலக்கியம், பாருங்கோ. ஒரு சிறப்புவகை கம்யூனிசம், கடைப்புளி கம்யூனிசம்’ என்றார் லெனின். லெனினைப் போலன்றி, ரொட்ஸ்கியின் சுவைப்புணர்வு ‘நாகரிக’ மெருகு உற்றிருந்ததால், பியூச்சரிசம், போர்மலிசம், கொன்ஸ்ரக்டிவிசம் ஆகியவை அத்துணை எளிதாகத் தட்டிக்கழிக்கப்படவில்லை; ஆனால் அவருடைய இலக்கிய விமர்சனம் முழுவதிலும் அவர்கூட ‘மொடனிசம்’ குறித்து இரட்டை நிலையைக் கடைப்பிடித்தார். அவருடைய சார்புகள் ‘விமர்சன யதார்த்தத்தைத்’ தழுவியிருந்தன. லூகாக்ஸ்சைப் பொறுத்தவரை, எல்லாவகையான ‘மொடனிச’மும் சீர்குலைவாகவும், மனநோயாகவும், கோளாறு நிரம்பிய விசித்திரப் போக்காகவும், குழம்பிய கலையாகவும் கருதப்பட்டன. உண்மை வாழ்க்கையில் மனிதர் தமக்கிடையேயும், சமூகத்தோடும், இயற்கையோடும் கொண்டிருக்கும் தொடர்புகளின் இன்றியமையாத அமைப்பை கவித்துவ ரீதியாக யதார்த்த நாவல் பிரதி பிம்பம் செய்கின்றதென லூகாக்ஸ் கடும் வைதிக பிடிவாதப் பாங்கிலே எழுதுகையில் வாதிடுகின்றார். மேலெழுந்தவாரியான தோற்றப்பாடுகளையும் ‘அன்றாட’ உலகையும் அது நிராகரிக்கின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அவர் கருத்துப்படி, ‘சராசரியானது’ சிறப்பற்றது, கலப்பானது, உயிர்ப்பற்றது, கவித்துவமற்றது; இலக்கியத்தின் உருவத்தையும், உள்ளடக்கத்தையும் வரையறுக்கும் பரிமாணம் அதற்கில்லை. இப்பரிமாணந்தான் கதைப் பின்னலின் இழைகளை ஒன்றிணைப்பதால் மேலோட்டமானதிற்கும், முக்கியமானதிற்கும், மையத்திற்கும், ஓரத்திற்கும் இடையே தேர்ந்தெடுப்பதற்கு கலைஞனுக்கு அது உதவுகின்றது. லூகாக்சுடைய நோக்கில் ‘மொடனிச’த்தின் கோட்பாடு இயற்பண்புப் பாங்கானது; அதற்கு படிநிலை அமைப்புத் தன்மை இல்லை; ‘புறநிலை யதார்த்தத்தைத் துண்டாடி சிதறவைக்கும்’ பியூச்சரிசமும், கொன்ஸ்ரக் டிவிசமும் முதலாளித்துவ பண்பாட்டின் நெருக்கடியை பிரதி விம்பம் செய்கின்றன; சோசலிச கண்ணோட்டத்தையுடைய எழுத்தாளர்கள் தான் அல்லது ஆகக் குறைந்தது அவர்கள் சமதர்மம் மீது பகைமை பாராட்டாதவர்களாக இருத்தல் வேண்டும் - நிலைத்து நிற்கக்கூடிய யதார்த்த இலக்கியத்தைப் படைக்க முடியும். எனவே மொத்தத்தில், பூர்சுவா வர்க்கத்தின் கலைவடிவமான 19-ம் நூற்றாண்டு யதார்த்தத்தைப் பேணிப் பாதுகாக்கும் பொருட்டு, நவீன எழுத்தாளர்கள் அரசியல் ரீதியாக பக்கஞ் சாரவேண்டியதன் அவசியத்தை லூகாக்ஸ் வலியுறுத்தினார் எனலாம். இவ்வாறு ‘மொடனிசத்’தை அவர் நிராகரித்தமை உண்மையான புரட்சிகர யதார்த்தவாதத்தை வளர்ச்சியுறச் செய்வதற்குப் பதில் மிகப் பழமைபேண் அழகியலை அவர் வரித்துக்கொண்டதையே குறிக்கின்றது.

முரண்பாடும், முரண்பாடுகளும் 4


எii) விளையாட்டுக் கோட்பாடு

விளையாட்டுக் கோட்பாடு என்பது - குறைந்தது இரண்டு சுதந்திரமான கட்சிகளினது முரண்பாடுகளின் பிரச்சினைத் தீர்வுகளின் முறைப்படியான ஆய்வாகும். அடிப்படையில் இது பொருளியலாளர்களால் மனிதர்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் நடத்தையில் இது பயன்படுத்தப்பட்டது. (Pழரளெவழநெ) பவுண்ஸ்ரோன் இதனை இறுக்கமான து}யகணித படிப்பு என விபரித்து இது முரண்பாட்டை நியாயமான வழியில் பார்ப்பது என்பதிலிருந்து வளர்ந்து 20ம் நு}ற்றாண்டின் மத்திய பகுதியில் இது தோற்றம் பெற்றுள்ளதோடு து}யகணிதவியலாளரான துழாn ஏழn நேடனஅயn பொருளியலாளரான ழுளஉயச ஆழசபநளவநசn என்பவர்களது வழிகாட்டல் கரங்களினால் அபிவிருத்தியடைந்தது. அவர்களது நு}லான “வுhநழசல ழக புயஅநள யனெ நுஉழழெஅiஉ டீநாயஎழைரச” “முரண்பாட்டுத் திர்வு” என்ற சஞ்சிகையின் இணை ஆரம்பகர்த்தாவான அனரலட் றப்போபோட் முரண்பாட்டுத் தீர்வுக்கு நேரடியாகப் பிரயோகித்தார். விளையாட்டு கோட்பாடு முரண்பாட்டில் மக்கள் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பது பற்றி ஒரு மாதிரியை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. ளுiஅஅயட ஊழளளநச என்பவர்களைப் போல் சுற்றி அல்லது டுவெட்சைப் போலன்றி விளையாட்டுக் கோட்பாடு முரண்பாட்டினை அதன்படியே பரிசீலனை செய்ய முயற்சிக்கிறது.

விளையாட்டுக் கோட்பாட்டை பயன்படுத்துவதினு}டாக மனித நடத்தையைக் கற்பது பல முக்கியமான தத்துவங்களைப் பற்றி கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

1. மக்கள் பகுத்தறிவு ரீதியாகத் தமது தெரிவுசெய்வார்களென கொள்கிறது.
2. விளையாட்டுக் கோட்பாட்டாளர்கள் முழுமையான அறிவு என்பதை ஈடுகோள்களாகக் கொள்கிறார்கள்.

(எiii) கைதியாளர்களின் திரிசங்கு சுவர்க்கநிலைக் கோட்பாடு.

முரண்பாட்டின் விளைவு சம்பந்தப்பட்ட இரு கட்சிகளுள் ஒன்று மற்றையது எதைச் செய்கிறது என்பதில் தங்கியிருக்கும். பல முரண்பாட்டு சு10ழ்நிலைகளுக்கு கைதிகளின் திரிசங்கு சுவர்க்க நிலை என்பது பயன்படுத்தப்பட்டது. இச்சு10ழ்நிலையில் மற்றைய கட்சி என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பதற்கான காப்புறுதி குறைவாக இருப்பதை ஈடுகட்டுவதற்கான உபாயங்களை கட்சிகள் அபிவிருத்தி செய்கின்றன. அத்தகைய உபாயங்கள் கட்சிகளின் முரண்பாட்டை வளர்ச்சியடையச் செய்யும் என்பதே பிரச்சினையாகும். றோபேர்ட் அக்ஸ்லோட் என்ற அரசியல் விஞ்ஞானி கட்சிகள் எவ்வாறு கூட்டுறவான பரஸ்பரம் தங்கியிருக்கும் உபாயத்தை உருவாக்குகின்றன என்பதை படிக்க விரும்பினால் அதாவது கைதிகளின் திரிசங்கு சுவர்க்க நிலையைப் பயன்படுத்தி கட்சிகளிடையே அவநம்பிக்கை நிலவும் போது எவ்வாறு கூட்டுறவை உருவாக்க முடியும் என்பதைக் கண்டுபிடிக்க விரும்பினார்.

(iஒ) ஜோன் பேர்ட்டன்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கல்விமானான திரு ஜோன் பேர்டன் அவர்கள் ஆஸ்திரேலியாவின் வெளிவிவகார காரியாலயத்தில் காரியதரிசியாக இருந்த இவர் முரண்பாட்டுத் தீர்வு பற்றி விரிவாக எழுதி உள்ளனர். பேர்டன் முரண்பாட்டுத் தீர்வு பற்றிய கல்வி அதன் இருதயத்தைப் பொறுத்து மனித நடத்தையையும் தொடர்பையும் பற்றியதாகும் என்றார். தனியே உளவியல் மனிதன் அல்லது பொருளாதார நடத்தை பற்றி மட்டும் கற்;றால் போதாது. பேர்ட்டன் ஒரு முழுமையான அணுகுமுறைக்காகவே வாதிட்டார். மனித, தினிப்பட்ட, சமூக முழுமையையும் படிக்க முடியும் என்றார். மேலும் அவர்முரண்பாட்டுத் தீர்வு கற்கை நெறியில் ஒரு கோட்பாடு அசைவு இடம்பெற்றுள்ளது என நம்பினார். அதன் கீழ் சமூக கட்டுப்பாட்டினை சமநிலை அடைதல் என்பதாகும். என்பதோடு அதிகாரம் அடைதல் என்பதாகவும் விளக்குகிறார். மனித நடத்தை பரந்த வேறுபடும் சக்திகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது. இவற்றுள் பல சமூகமயப்படுத்தலின் செல்வாக்குக்கு உட்பட்டுள்ளன. அது என்னவெனில் மனிதர்கள் சில மாதிரியான ஒரு நடத்தைக்குள் சமூகமயப்படுத்தப்படுகிறார்கள். ஆனால், தனிப்பட்டவர் களுக்காக கட்டாயமாக எதையும் செய்ய வேண்டியதில்லை என்றார்.

எமது அடிப்படைத் தேவைகளைத் திருப்திப்படுத்த முற்படும்போது நாம் முரண்பாட்டை உருவாக்குகின்றோம் என்பது ஒன்றுக்கொன்று எதிரானதாகும். முரண்பாட்டைத் தீர்ப்பதில் எது தேவை எனில் முரண்பாட்டுக்கான காரணங்களை பகுப்பாய்வு ரீதியில் விளங்கிக் கொள்வதற்கான வழியே என்பதோடு அந்த வழியில் மரபுரீதியான அதிகார பேரம் பேசுதல் இடம்பெறக் கூடாது என வாதிட்டார். ஸ்தாபனங்கள் அடிக்கடி முரண்பாட்டுத் தீர்வினை கடினமாக்குகின்றன. ஏனெனில், அவை சமகால அதிகார பேரம் பேசும் அந்தஸ்தினை பாதுகாத்து ஆதரவளிக்கின்றன. முரண்பாடுகளுக்கான தீர்வு நேரடியாக மனித சமூகத் தொடர்புகளை விளங்கிக் கொள்வதிலிருந்தே வளர்ச்சியடைகின்றது. இது அடிப்படை எடுகோளான முரண்பாடுகள் நிர்ப்பந்தப்படுதல், அதிகாரம் என்பதினாலேயே என்ற அடிப்படை எடுகோளை நிராகரிக்கின்றது. தேவைகள் என்பது மனித வாழ்க்கையின் தொடர்ச்சிக்கும் வளர்ச்சிக்குமான அடிப்படை மனிதக் கோரிக்கைகளாகும். முரண்பாட்டுத் தீர்வில் மனித தேவைகள் பற்றிய பெரும்பாலான ஆய்வுகள் மெஸ்லோ (ஆயளடழற)இ சைற்ஸ் (ளுவைநள), போட்டன் (டீநசவழn) என்பவர்களை அடிப்படையாகக் கொண்டே இந்த அவதானிப்பின் மூலமே மனித தேவைகள் அணுகுமுறை வளர்ச்சி பெற்றது. பேட்டன் மனித தேவைகளைத் திருப்தி செய்தல் என்பதே மனித நடத்தையின் அடிப்படை மூலம் என்றார். மேலும் அவர் தேவைகளைத் திருப்திப்படுத்தல் என்பதை சமூகத் தொடர்புகளுக்கு வெளியே விளங்கிக் கொள்ள முடியாது என்றார். ஆகவே, மனித தேவைகளைப் பற்றிய கற்கை தனிப்பட்டவர்களின் கூட்டுத்தேவை பற்றிய ஆய்வாக இருப்பதுடன் அது சமூகத் தொடர்பு என்பதிலேயே கற்கப்பட வேண்டும். முரண்பாட்டில் மனிதர்கள் என்ன பிரச்சினை உள்ளது என்பதை அறிக்கை விடுவார்கள். இத்தகைய அறிவித்தல்கள் அவர்களது நலன்களை பிரதிபலிக்கும். ஆனால் அவர்களது அடிப்படையான தேவைகளை அல்ல. மனிதர்கள் முரண்பாட்டில் ஈடுபடும் போது அவர்களது பிரச்சினைகளாலேயே பிரதிநிதித்துவப்படுத்தப்படுவர். அந்த தேவைகளைத் திருப்;;திப்படுத்துவதற்கான அவர்கள் அதிகாரத்தையும் நிர்ப்பந்தப்படுத்தலையும் பயன்படுத்துவார்கள். இவ்வாறு தமது அதிகாரத் தொடர்புகளை மற்றவர்கள் மீது திணிப்பதற்கான தேவைகளைத் திருப்திப்படுத்துவதென்பது முரண்பாட்டைக் குறைப்பதற்கான மூலமாக ஆகாது முரண்பாட்டுக்கான காரணமாக ஆகின்றது.

மனித தேவைகள் இருப்பதே முரண்பாட்டுத் தீர்வில் அதிகமான பிரச்சினை நிறைந்த இடமாக இருக்கின்றது. மெஸ்லோ மனிதத் தேவைகள் பற்றியதோர் கோட்பாட்டினை உருவாக்கியவர் என்ற பெருமைக்குரியவர். அதன்படி தேவைகளுக்குத் தீர்வு காண்பதென்பது ஆரோக்கியமானதும் கூடியளவு இயலளவு மனிதர்களுக்கு வழிவகுக்கின்றது. அவர் உளவியல் தேவைகள் (உணவு), பாதுகாப்புத் தேவைகள் (கட்டமைவு, ஒழுங்கும் சட்டமும்), ஒரு பகுதியாக இருத்தல் (சினேகிதம்), மதிப்புக்கான தேவைகள், சுய ஆதிக்கத்துக்கான தேவைகள் எனவும் பிரித்தார். மெஸ்லோ, இத்தகைய தேவைகளின் திருப்திகளோடு முரண்பாட்டினைத் தொடர்புபடுத்தினார்.

தனிப்பட்டவர்களின் முக்கியமான தேவைகள் மறுக்கப்படும்போது அந்த தனிப்பட்டவர்களை தமது தேவைகளைப் பூர்த்தியாக்க வழிவகுக்கின்றது. தமது தேவைகளை திருப்திப்படுத்த எடுக்கும் முறை கேள்விக்குரியதாகும். அவர்கள் எந்த வழியையும் பின்பற்றலாம். அவை அவர்களையே அபாயத்துக்குள்ளாக்கலாம்: உடல் ரீதியாக கேடுவிளைவிக்கலாம்.

மெஸ்லோவின் கோட்பாட்டிற்கு தேவைகள் பற்றிய கோட்பாடு மேலதிகமாக போல்சைற்ஸ் (1973), தனது நு}லான ஊழஅகடiஉவ : வுhந டியளளை ழக ளுழஉயைட ழுசனநச என்பதில் - அடிப்படைத் தேவைகள் என்பன உள்ளன. அவை சர்வ உலக ரீதியானவை. இவ்வாறு குறைந்த குறிப்பாக கலாசார ரீதியானவை (எம்மை நம்ப வைக்க முயற்சிக்கும் நடத்தை விஞ்ஞானிகளின் கருத்துக்களைவிட)

சைற்ஸ்அடிப்படை மனிதத் தேவைகள் மெஸ்லோ குறிப்பிட்டவற்றை விட வேறுபடுத்துகின்றன என்றார். அவர் பலவற்றை முன்வைத்தார். அவற்றுள் அடையாளத்துக்கான தேவை, உற்சாக மடைவதற்கான தேவை, கட்டாயப் படுத்துவதற்கான தேவை என்பனவும் அடங்கும். கட்டுப்படுத்துவதற்கான தேவையே சைற்சுக்கு எல்லாத் தேவைகளிலும் பலமானது. ஒருவரது சு10ழ்நிலையைக் கட்டுப்படுத்துவதினு}டாக ஒருவர் திருப்தி மற்றும் தேவைகளையும் கட்டுப்படுத்தலாம் என்றார்.

மிகவும் ஆழமான சர்வதேச மட்டத்தில் தேவைகளை வைப்பதன் மூலம் சைற்ஸ் - பரம்பரை ரீதியான மனித நடத்தைக்கு எதிராக கலாசாரத்தை அவர் முன் வைத்தார்.

சைற்ஸ் கருத்துக்களிலிருந்து பேட்;டன் பின்வருவதை எடுத்துக் கொண்டார்.

மனித தேவைகள் பற்றிய திட்டவட்டமான ஒருதொகுதியை கண்டுபிடிக்க வேண்டுமாயின் அதன் அடிப்படையில் சமுதாயங்கள் சமாதானமாக இருக்கக் கூடியதாயின் நடத்தை விஞ்ஞானம் கொள்கைகளை தீர்மானித்தல் என்பவற்றின் பிரதான அணுகுமுறை பிரச்சினையைத் தவிர்க்கலாம். மனித தேவைகள் பற்றி உடன்பாடு இருக்குமானால் நடத்தை பகுப்பாய்வுக்கு ஆரம்பம் நிலை இருக்கும். ஏனெனில் இலக்குகளைத் தீர்மானிப்பதற்கான விஞ்ஞான அடிப்படைகள் இருக்கும். ஆகவே, பேட்டனின் கருத்து என்னவெனில் மனித அடிப்படைத் தேவைகள் பற்றிய ஒரு தொகுதியான அறிவாகும். அது மனித நடத்தையை விளங்கிக் கொள்வதற்கான வழிகாட்டியாகச் சேவை செய்வதோடு முரண்பாட்டுத் தொடர்புகளுக்கு வழிவகுக்காத கொள்கைத் தீர்மானங்கள் எடுப்பதை ஏற்படுத்தும். இத்தகைய தேவைகள்:

1. எதிர் தாக்கத்தில் தொடர்ச்சி.
2. உற்சாகம்
3. பாதுகாப்பு
4. அங்கீகாரம்
5. பங்கிடும் நிதி
6. பகுத்தறிவு பற்றிய தோற்றம்
7. பொருள் ஃ அர்த்தம்
8. கட்டுப்பாடு
9. பாதுகாப்பின் பங்கு

இதற்கு ஒரு மூன்றாம் தரப்பு அவசியமாகலாம். ஒரு குறிப்பிட்ட முரண்பாட்டினை தீர்க்கும் முயற்சியில் ஒரு மூன்றாம் தரப்பின் பங்கு ஒரு ஆலோசனையாளராக இருக்கலாம்.

(ஒ) முரண்பாட்டுத் தீர்வு என்;றால் என்ன?

சில சமூகச் சு10ழ்நிலைகள் எவ்வாறு ஓழுங்குபடுத்தப்பட வேண்டும் என்பது பற்றி இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கட்சிகள் எதிர் எதிரான கருத்துக்கள் கொண்டிருக்கும் போதே முரண்பாடு தோற்றம்பெறுகிறது. (உதாரணம்) தொழிலாளர் தம் உயர்ந்த வேதனம் வேண்டுமென்று கோருகின்றனர். முகாமைத்துவம் அவர்கள் குறைந்த வேதனத்தைக் கொண்டிக்க வேண்டுமென விரும்புகிறார்கள். எதிர் எதிரான நலன்களை கொண்டிருக்கும் கட்சிகள் பொருத்தமானது எனக் கருதும்போது அது ஒரு முரண்பாடாகிறது. பேச்சுவார்த்தைகளினு}டாக முரண்பாட்டுக்குத் தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். இருந்தபோதும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மனத்தாங்கல் உள்ள ஒரு கட்சி சமநிலையை குழப்ப விரும்பும் போது பேச்சுவார்த்தை முடியும் வரைக்கும் முரண்பாட்டுக்கான செலவுகளின் தொகையை வழங்க வேண்டிவரும். அல்லது அந்த செலவுகளை பகிர்ந்து கொள்வது சமமற்றதாக இருக்கும். அதனால் பேச்சுவார்த்தைக் காலம் நீடித்துச் செல்கிறது. அவ்வாறு நீடிக்கையில் சிலவகையான முரண்பாட்டு நடிவடிக்கைகளில் இறங்க வேண்டி ஏற்படும். அது எல்லாக் கட்சிகளுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும். இது வேலை நிறுத்தம். போர் என்பவற்றைக் கொண்டதாக வரலாம்.

முரண்பாட்டுத் தீர்வு என்பது ஒரு தீர்வினை ஏற்படுத்துகின்ற ஒரு விதிமுறையாகும். அதில் முரண்பாட்டில் சம்பந்தப்பட்ட நடிகர்கள் தொடந்தும் முரண்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட அவசியமில்லை என்ற உணர்வினைப் பெறுவர். அத்தோடு, நன்மைகளைப் பகிர்ந்தளிக்கக் கூடிய முறையில் சமூக முறையுள்ள தென்பதை ஏற்றுக்கொள்வர். இதற்கு மூன்றாம் கட்சி அவசியம். இது நிபுணத்துவ ஆலோசனையாக இருக்கும். அது குறிப்பிட்ட ஆலோசனையைத் தீர்க்க முயற்சிக்கும் மாறாக மூன்றாம் கட்சி முரண்பாடுகளை எவ்வாறு தீர்க்கப்படலாம் என்பதற்கு ஆலோசனை வழங்குவதாகவும் இருக்கும்.

(ஒi) முரண்பாட்டு மாதிரிகள்

பகுத்தறிவு மாதிரிக் குழுவினைச் சேர்ந்தவர்கள் முன்வைத்துள்ள பயன்பாடுடைய ஒரு விளக்கம் பகுப்புச் செய்தமையால் அவர்கள் இந்தப் பகுப்பினை விளையாட்டு என அழைப்பதையே விரும்புகி;ன்றனர். இது முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு முரண்பாட்டின் அளவினையும் அது எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் பார்க்க உதவுகிறது. விளையாட்டுக்கள் மரபு ரீதியாக இரண்டு தொகுதிகளையும் பூஜ்ஜியக் கூட்டுத்தொகை விளையாட்டுக்கள் அவை முழுமையான முரண்பாடு பற்றிய கோட்பாடாக இருப்பதோடு அது பங்குபற்றும் ஒருவரின் வெற்றியானது இன்னொருவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்த உதவுகிறது. பூஜ்ஜியக் கூட்டுத்தொகை விளையாட்டு அல்லாதவைகளைப் பொறுத்தவரையில் அது சம்பந்தப்பட்ட எல்லா நடிகர்களுக்கும் கூட்டுறவை ஏற்படுத்த வாய்ப்புண்டு. பூஜ்ஜிய விளையாட்டினைப் பொறுத்தவரையில் இரண்டு தரப்பினருக்கும் நன்மைதரக்கூடிய ஒரு தீர்வினை ஏற்படுத்தும் வாய்ப்பில்லை. இது ஒரு கேக்கைப் பார்க்கும்போது ஒருவருக்கு தானாகவே சிறியதுண்டும் ஒருவருக்கு பெரிய துண்டும் கிடைக்கும்போது முரண்பாடுகள் தோன்றவாய்ப்பு சமமாக இல்லை. இத்தகைய சு10ழ்நிலையில் முரண்பாட்டு பகுப்பாய்வாளர்களுக்கு நீதியான எண்ணக்கரு பொருத்தமானது என்ற நிலை வரும்போது தான் அவர்களும் ஒரு பங்கிடும் முரண்பாட்டுக்கு நீதியான தீர்வு காண்பது பற்றி கணிசமான அளவிற்கு எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவற்றுள் பெரும்பாலான யதார்த்த தன்மை இவை து}யகணிதம் பற்றிய எண்ணக்கருக்களுக்கே கவர்ச்சியானதாகவுள்ளன. உண்மையான உலகப் பிரச்சினைக்கு இவை பொருத்தமானதாகவில்லை. ஆனால் ஒரு புறநடை எதுவெனில் 50 : 50 என்ற தீர்வு பொருத்தமாகும் போதுதான் சமூக நடவடிக்கையில் இறுக்கமான பூஜ்ஜியக் கூட்டுத்தொகை விளையாட்டு என்பது மிகவும் அருமையாகத்தான் காணப்படுகின்றது. பிரதேசம் பற்றிய தகராறுகளை எடுத்தல் கூட அவை பூஜ்ஜிய கூட்டுத்தொகை போன்று தோன்றினாலும் தொடர்ந்து அவற்றை விசாரணை செய்யும்போது அதுவல்ல என்ற முடிவுக்கே வரும். பல கட்சிகள் ஆய்வுகளை முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக போர்கள், பொருளாதாரத் தடை என்பனவற்றை வழியாக கொள்ளலாம். இது பூஜ்ஜியக் கூட்டுத்தொகையில்லாத வழியை உடனடியாகத் தோற்றுவிக்கும். இரண்டு நடிகர்கள் பகையுணர்வு நஷ்டம் பெரிதாக மாறி உடன்பாடு காண எந்த வாய்ப்பும் இல்லாத சு10ழ்நிலையில் தான் பூஜ்ஜியக் கூட்டுத்தொகை நுட்பங்கள் பொருத்தமாகின்றது. ஒரு எதிராளி ஒரு நடவடிக்கை எடுத்தல் அது மற்றைய கட்சிக்கு கெடுதல் விளைவிப்பதாக அமையும். ஒருவர் இந்த குறிப்பிட்ட விளையாட்டினை ஏற்றுக்கொண்டால் ஒரு முரண்பாட்டு பகுப்பாய்வுக்கு எதுவும் செய்ய முடியாத நிலையேற்படும். பூஜ்ஜிய கூட்டுத்தொகை அல்லாத விளையாட்டுக்களைப் பார்க்கும்போது பல்வேறு விளையாட்டுக்களினதும் கட்டமைப்பிலிருந்து பல சுவாரஸ்யமான பிரச்சினைகள் எழுவதைக் காட்டுகிறது.

(ஒii) மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம்

எண்ணக்கரு

மூன்றாம் தரப்பு என்பதை “எதிராளிகளுக்கு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து தகராறுகளுக்கு பரஸ்பரம் திருப்திகரமான ஒப்பாசாரத்துக்கு வர உதவுபவர்கள்” என வரைவிலக்கணப்படுத்தலாம். இத்தகைய மூன்றாம் தரப்பினர் அல்லது கட்சிகள் ஒரு அரசாக ஃ ஒரு உத்தியோகத்தராக நிர்வாகியாக ஃ அல்லது உத்தியோகப் பற்றற்ற ஒழுங்கமைப்பாக அரசாங்க அல்லது சர்வதேச ஒழுங்கமைப்பு, ஒருதனிப்பட்டவர் என்பவையாக இருக்கலாம். மேலே சொல்லப்பட்ட எந்த மாதிரியினதும் பயன்பாடு பற்றி விளக்குதல் சிரமமாகும். ஏனெனில் அது முரண்பாட்டுக்கு முரண்பாடு வித்தியாசப்படும் போக்குடையது. முரண்பாட்டினைத் தீர்க்க ஒரு மூன்றாம் தரப்பு தழுவிக் கொள்ளும் வழிமுறை பற்றி ளுஉழவவ தொம்சன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “இரண்டு பேர் அல்லது மேற்பட்டவர்களிடையேயான தகராற்றில் சம்பந்தப்படாத ஒரு தனிப்பட்டவரோ அல்லது குழுவோ தகராற்றில் சம்பந்தப்பட்டவர்கள் ஒரு உடன்பாட்டுக்கு வர உதவ முயற்சிப்பது சில சந்தர்ப்பங்களில் தன்னளவில் ஒரு உடன்பாட்டிற்கு வர அதிகாரமளிக்கப்படுவதாகும்”

மத்தியஸ்த நடவடிக்கைகளில் மூன்றாம் தரப்பின் பங்குபல பரிமாணங்களைக் கொண்டதாகும். துயஉழடி டீனசஉழசவைஉh மூன்றாம் தரப்பு முரண்பாட்டு முகாமைத்துவத்தினை இரண்டு தொகுதிகளாக அல்லது வழிமுறைகள் கொத்தணிகளாக பிரித்துள்ளார்.

சட்டசபை பெறுமதி வழிமுறைகள் :

(உதாரணம்: தீர்ப்பு வழங்குதலும், தீர்த்து வைத்தலும் மூன்றாம் தரப்பு வழங்கும் தீர்ப்பு - ஆணை கட்சிகள் ஒழுகி நடத்தல் வேண்டும்)

தன்னிச்சையான வழிமுறைகள் :

(மத்தியஸ்தம், தணித்தல், நீதித்துறைக்கு பாரப்படுத்தலுக்கு சற்றுக் குறைவான பல்வேறு மாதிரியான உதவிகளும் இணக்கப்படுத்தலும்)

இது சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு ஏற்கத்தக்க வெளிப்பாட்டினை ஏற்படுத்தும்.

முரண்பாட்டிற்கு முரண்பாடு மூன்றாம் தரப்பின் பங்கு மாறும் போக்கினை கொள்ளும் சில தொகுதிகளில் செயற்படும் மூன்றாம் தரப்பு பின்வருவனவற்றில் விபரிக்கப்படும் இன்னொரு உபாயத்தினை தழுவிக் கொள்ளலாம். இவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்தவையாக காணப்படுவதால், கோட்பாட்டு ரீதியில் ஒரு மூன்றாம் தரப்பு முரண்பாட்டுத் தீர்வு வழங்குவதில் பின்வரும் சேவைகளை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1. நல்லநிர்வாகம் (புழழன யுனஅinளைவசயவழைn) சமாதான வழிமுறைகளை ஆரம்பிப்பதற்கு ஒரு தபால்காரன் மாதிரி அல்லது தொடர்பு கொள்வதற்கான ஒரு கருவியாக செயற்படுதல், வேறு வார்த்தையில், தகராற்றில் சம்பந்தப்பட்டவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடவைப்பது பெறுமதியானதாகுமா என்பதைக் கண்டறிவது.
2. மத்தியஸ்தம் (ஆநனயைவழைn) சம்பந்தப்படும் எதிராளிகளுக்கிடையில் அமைதியான தொடர்புகளை மீண்டும் ஆரம்பித்து தொடர்புபடும் முரண்பாடுகளில் தீர்வு காண பேச்சு வார்த்தைகளில் பங்குபெற வைப்பது.
3. சமரசம் செய்தல் (ஊழnஉடையைவழைn) சம்பந்தப்பட்ட எதிராளிகளுக்கு ஏற்கத்தக்க நடைமுறைச் சாத்தியமான தீர்வு பிரேரணைகளோடு முன்வருதல்.
4. நடுநிலை வகித்தல் ஃ நடுவராக செயற்படுதல் (யுசடிவைசயவழைn) முரண்பாட்டினைத் தீர்ப்பதில் ஒரு மூன்றாம் தரப்பின் பங்கினை மற்றைய கட்சிகளை ஏற்கச் செய்து சில தீர்மானங்களை செயற்படுத்தல்.
5. தீர்ப்புக்காக கையளித்தல் (யு னலரனiஉயவழைn) அவர்களது முரண்பாட்டினை ஒரு மூன்றாம் தரப்புக்கு தீர்ப்புக்காக கையளித்தலை மற்றக் கட்சிகளை ஏற்கச் செய்தல். இதனால் சட்டம், நிர்ப்பந்தப்படுத்தல் இரண்டாலும் மேற்கொள்ளலாம்.

ஒரு தலையீட்டில் ஒரு மூன்றாம் தரப்புகொண்டிருக்கும் ஈடுபாட்டினை அளவிடுதல் எப்போதும் சிரமமானது.

பேச்சுவார்த்தை, உடன்பாடும் முரண்பாட்டுத் தீர்வும்

பகுத்தறிவு அணுகுமுறையின் பங்கு :

மக்கள் பொதுவாக பகுத்தறிவு ஜீவிகள். அவர்கள் பகுத்தறிவுடன் தான் தெரிவுகளைச் செய்வர் என எடுகோளாகக் கொள்ளும் கருத்தின்; மீது கட்டியெழுப்பப்பட்ட தீர்மான பகுத்தறிவு சிந்தனையாளர் குழு ஒன்றுள்ளது. இக்கோட்;பாட்டின் நோக்கம் என்னவெனில், அடிக்கடி பகுத்தறிவுத் தெரிவு கோட்பாடு என அழைக்கப்படுவது பல்வேறு வித்தியாசமான சு10ழ்நிலைகளில் இத்தகைய தெரிவுகளின் விளைவுகளை பரிசீலனை செய்கின்றது. சில சந்தர்ப்பங்களில் தீர்மானங்களை எவ்வாறு சீர்ப்படுத்தலாம் என்ற விதப்புரைகளைச் செய்து இக்கோட்பாட்டின் அடிப்படையில் மிகவுயர்ந்த பயன்பாட்டுத் தெரிவுகளை எவ்வாறு செய்யலாம் என்பதைக் காட்டுகின்றது. இத்தகைய உச்ச பயன்பாடு வழமையாக ஒரு தனி நடிகரின் கருத்தின்படிதான் தீர்மானிக்கப்படுகிறது. அந்த நடிகர் ஒரு குழுவாகவும் இருக்கலாம். ஒரு தனிப்பட்டவரல்ல. ஆகவே, ஒரு முரண்பாட்டில் பல நடிகர்கள் இருந்தால், அது குழப்பத்தை விளைவிக்கும். அத்தகைய அணுகுமுறை முதல் பார்வையில் விலக்கத்தக்கதாகவிருக்கும். தற்போது உள்ளதைவிட மக்கள் பகுத்தறிவு முறையில் மக்கள் தெரிவு செய்வார்கள் பெருமளவு முன்னேற்றமானது என்பதை ஒருவரும் மறுக்க மாட்டார்கள்.

பகுத்தறிவுத் தெரிவு மாதிரி முரண்பாட்டின் இயல்பு பற்றி உள்ளார்ந்த தன்மைகளைக் காட்டியுள்ளது. அதன் பலவீனங்கள் பற்றி தெரிந்திருப்பது அது பற்றிய மேலும் விசாரணைகளை செய்ய ஊக்கம் அளித்துள்ளது. இவை, ஒரு முரண்பாடு முரண்பாட்டுத் தீர்வு பற்றிய அடிப்படை விளக்கத்துக்கு அடிப்படையானவை.

பகுத்தறிவுத் தெரிவுக் கோட்பாட்டின் அடிப்படைகள் :

முரண்பாட்டுச் சூழ்நிலைகளுடன் மாத்திரம் பகுத்தறிவுக் கோட்பாடு சம்பந்தப் படுவதில்லை. ஆனால் பெரும்பாலும் அதனிலேயே கவனங் கொள்கிறது.

பகுத்தறிவுத் தன்மையின் அடிப்படைத் தத்துவம் நடிகர் தனக்கு என்ன தேவை என்பது பற்றிய தெளிவான சிந்தனை உள்ளவர். இயலுமானவரை அதனை அடைய மிகவும் திறமையான வழியைப் பின்பற்றுவார் என்பதை எடுகோளாகக் கொள்கிறது. இதனால் பகுத்தறிவுத் தன்மை என்பது திறமை என வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது. பொருளாதாரத்தில் இவ்வாறுதான் இதனை அடிக்கடி வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது. சுலபமான சு10ழ்நிலைகளில் தோடம்பழங்களும், அப்பிள் பழங்களும் இருக்கும் போது ஒருவர் அப்பிளைவிட தோடம்பழங்களையே விரும்புவார். ஆயின் அவர் தோடம்பழத்தை தெரிவு செய்வார் என வாதிடுகிறது. ஒரு புகையிரத சேவையை எவ்வாறு திறமையாக இயங்கச் செய்வது? புகையிரத சேவையைப்பொறுத்து பல இலக்குகள் இருக்கலாம்: பாதுகாப்பு, நேரத்துக்கு சேவை வழங்குதல், வசதி, செலவுக் குறைவு. சமூக முறைகளில் எதிர்காலம் எப்போதும் நிச்சயமற்றதாகும். விருப்பங்களை மாத்திரமல்ல, சில நடவடிக்கைகளின் விளைவுகள் எவை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இருந்த போதிலும் தீர்மானங்களை எடுப்பவர் அவருக்கு என்னதேவையோ அதனை உருவமைக்கும் வாய்ப்புண்டு என்ற அடிப்படை எடுகோள் உள்ளது. வேறு வார்த்தைகளில் குறிப்பிடுவதனால் மாற்று வழங்கல்களுள் விருப்பத் தெரிவுகளை தெரிவாக தெரியப்படுத்தலாம். இது நீண்ட காலத்தில் ஓப்பீட்டளவில் ஒரே தன்மையானதாக விருக்கும்.

இவ்வாறு போட்டியிடும் இலக்குகளின் மிகுதிகளை தீர்மானித்ததன் பின்னர் அவற்றை எவ்வாறு அடையலாம் என்பது இன்னும் மிகவும் சிக்கலான பிரச்சினையாகவே உள்ளது. எதிராளிகள் இல்லாத முரண்பாடற்ற முறைகளுக்கு என வழிமுறைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நடிகர்கள் ஒரு முரண்பாட்டில் சம்பந்தப்படும்போது பிரச்சினைகள் மிகவும் சிக்கலானவை. முரண்பாட்டுக்கான வரைவிலக்கணத்தையே நடிகர்களுக்கு வேறுபடும் அந்த முரண்பாடு எவ்வாறு தீர வேண்டும் என்பது பற்றி வேறுபடும் விருப்பத் தெரிவுகள் உள என்பது புலனாகின்றது. (ஆகவே எவ்வாறு பகுத்தறிவுள்ள நடிகர்கள் ஒருவருக்கொருவர் எதிராளிகளாகின்றனர்)

இக்கோட்பாட்டின் படி முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருதல் ஒரு குறிப்பிட்ட முரண்பாட்டில் சம்பந்தப்படும் நடிகர்கள் தமது நோக்கங்களை அடைவதற்கு வன்முறையினை வழியாக கொள்ளுதலைக் கைவிடுதல் ஆகும். அவ்வழிமுறை நடிகர்கள் பேச்சுவார்த்தையினு}டாக தீர்வுக்கான வாய்ப்பினை கவனத்தில் எடுக்கும்போது ஆரம்பிக்கின்றது. அதாவது வன்முறை மோதலை தொடர்வதிலும் பார்க்க தீர்வு காண்பது சிறந்தது என இவ்வழிமுறையில் அபிவிருத்தி ஏற்படுத்துகின்றது.

எந்த சந்தர்ப்பத்தில் கட்சிகள் ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வதிலும் பார்க்க ஒரு உடன்பாட்டினை அடைதல் சிறந்தது எனக் கொள்கின்றன. இதற்கான விடை தமது நோக்கங்களை வன்முறைகளினால் அடையமுடியாது என்பது தெளிவாகும்போதும் பேச்சுவார்த்தைகளின் மூலம் அவற்றில் சிலவற்றையாவது அடையலாம் என்பது தெளிவாகும் போது.

ஒரு வன்முறை முரண்பாட்டில் சம்பந்தப்படும் நடிகர் ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதா என்ற திரிசங்கு சுவர்க்க நிலைக்கு முகங் கொடுக்கும் போது அவர் வன்முறையைத் தொடர்வதனால் ஏற்படக்கூடிய நன்மைகள், செலவு என்பவற்றை பேச்சு வார்த்தைகளினு}டாக வரும் உடன்பாட்டோடு ஒப்பிட்டுப் பார்ப்பார். னுழயெடன றுவைவஅயn தனதுநு}லான “எவ்வாறு போர்கள் முடிவடைகின்றன” என்;;பதில் ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாடு அவ்வுடன்பாடு இரண்டு பக்கத்திற்கும் நன்மையைத் தருவதாக இல்லாவிட்டால் ஏற்படாது என்றார். ஒவ்வொரு பக்கமும் போரைத் தொடர்வதனால் ஏற்படக்கூடிய பயன்பாட்டை பகுப்பாய்வு செய்ததின் பின்பு பேச்சுவார்த்தைகளினு}டாக ஏற்படும் உடன்பாட்டால் ஏற்படும் பயன்பாட்டின் மீது கவனம் கொண்டார்.

ஓ என்ற பக்கம் லு நிபந்தனையற்ற முறையில் சரணடைவதையே விரும்பும், தான் சரணடைவதைவிட இதனை அவர் ஒரு கணித அடையாளங்களில் விளக்கினார். வருடம் வயில் செய்து கொண்ட ஒப்பந்தத்தால் ஓ பெற்ற பயன்பாடு ருவஒ (ள) எனக் கொள்வோம். லு அதே வருடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தால் பெற்ற பயன்பாடு ருவஒ (ள) எனக் கொள்வோம். இதில் ஒப்பந்தத்தை ளுழூ எனக் கொண்டால் ரு(ளழூ) ஸ்ரீ ரு(ற) யனெ ரு(ற) ட.ந. ஆகவே ஒப்பந்தம் ஃ உடன்பாடு இரண்டு பகுதிகளையும் பேணித் தொடர்வதை விட நன்மையாக இருத்தல் வேண்டும்.

(ஒiii) சர்வதேச முரண்பாடுகளுக்குத் தீர்வு காணல்

நவீனகால சமூக விஞ்ஞானிகள் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முடியாதிருக்கும் மிகவும் முக்கியமானதாகவிருக்கும் சர்வதேச முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பதே பிரதானமாகவுள்ளது. 1988ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் அறிக்கை முரண்பாடுகளையும் தகராறுகளையும் தீர்ப்பது பற்றி இடம்பெற்று வரும் முயற்சிகளைப் பற்றி ஒரு பெரும் சாதனை எனவும் அரசுகளுக்கிடையிலான தொடர்புகளைப் பொறுத்தும் ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பித்து வைத்தது என்றும் கொள்ளப்படுகின்றது. 1988ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி கோர்பச்சோவின் ஐக்கியநாடுகள் சபைக்கான விஜயமும் அங்கு பொதுச் சபையில் அவரது பேச்சும் சர்வதேச தொடர்புகளைப் பற்றிய ஒரு ஞானத்தினையும் ஏற்படுத்துவதாக அமைந்தது. அது 20ம் நு}ற்றாண்டின் முடிவின் போது அரசுகளுக்கிடையிலான நடத்தையில் ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பித்து வைத்ததாக பல அவதானிகள் கருதுகின்றனர். சர்வதேச முரண்பாடுகளுக்குத் தீர்வுகாணும் அணுகுமுறைகள் பற்றிய பரிசீலனை பெரும்பாலான இருபக்கத் தொடர்புகள் பற்றிய கற்கை, அல்லது ஆய்வு பல கற்கை நெறிகளை உள்ளடக்கியுள்ளதென விபரிக்கப்படுகி;ன்றது.

தேசிய சர்வதேச முரண்பாடுகளுக்குத் தீர்வு காணல் பற்றிய அபிப்பிராயங்கள் :

வன்முறை முரண்பாடுகளுக்கு தீர்வு காணுதல் வழமையாக அரசியல் ரீதியில் விரும்பத்தக்க இலக்காகும். அது மனித உயிர்களைக் காப்பாற்றுகின்றது. அத்தோடு அது தேசங்களில் உள்ளார்ந்த ஒழுங்கின்மைகளைத் தடுப்பதோடு அவற்றின் வெளிநாட்டுத் தொடர்புகளின் உறுதிப்பாட்டினையும் ஏற்படுத்துகின்றது. முரண்பாட்டுத் தீர்வு சமாதானத்திற்கான ஒரு வழியாகும். குறைந்தது ஒரு எதிர்க்கணிய சமாதானத்துக்கான வழியாகும். மற்றைய பெறுமதிக்கான ஒரு ஒழுங்கு, பொருளாதார அபிவிருத்தி என்பதற்கும் சேவையாற்றுகின்றது. இந்தஅணுகுமுறையில் முரண்பாட்டுத்தீர்வு அரசியல் வன்முறையின் எதி.... அது வன்முறைக்கான காரணங்களை தனிமைப்படுத்தி பொருத்தமான முறையில் அவற்றை இல்லாதொழிக்கின்றன. அந்தவகையில் வன்முறைக்கான காரணங்களுக்கும் அதில் ஈடுபடும் நடிகர்களின் தீர்மானங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பினை இல்லாதொழிக்கின்றது. அத்தகைய பன்மைத் தன்மை கொண்ட அணுகுமுறை தேசிய சர்வதேச தொடர்புகளில் அரசியல் வன்முறையின் தொழிற்பாடுகளை பாராமுகப்படுத்துகின்றனர். இது தெளிவான பகுப்பாய்வு என்பதனை நியாயப்படுத்துவதோடு காரணத்தினை விளங்கிக் கொள்வதற்கான திறவுகோளை வழங்குகின்றது. முரண்பாடுகளின் தொழிற்பாடுகள் அதிகாரத்தினை கையேற்றல் என்பவற்றையும் உள்ளடக்குகின்றது. அத்தோடு உள்நாட்டு ஒற்றுமையினைப் பராமரித்தல் வெளிநாட்டில் விரிவாக்கலையும் பராமரிக்கின்றது. வன்முறை பேரம் பேசுவதற்கான உள்ளீடாவதோடு அதிகாரத்தைப் பெற்றிருப்பவர்கள் தாங்கமுடியாத சு10ழ்நிலையும் பிரச்சினையும் உள்ளதென்பதை அறிவிக்கும் வழியுமாகும். (ளுயவஅநn - 1990 - 98) அரசியல் வன்முறையின் தொழிற்பாடுகளை வலியுறுத்துதல் முரண்பாட்டுத் தீர்வினை ஒரு பிரச்சினை தீர்க்கும் கோட்பாடு என்ற கருத்தில் இருந்து விலகிச் செல்கின்றது. அத்தகைய அணுகுமுறை பிரச்சினைகளை இல்லாதொழிப்பதற்கான நுட்பங்களை அபிவிருத்தி செய்வதை ஊக்கப்படுத்துகின்றது. குறிப்பாக இப்பகுபாய்வின் பிரபல்யமான நோக்கங்கள் திட்டவட்டமான தீர்வுகளை அடைவதற்கான பல்வேறுவிதமான தந்திரங்களையும் கொண்டுள்ளது. பேரம் பேசும் நடத்தை அடிக்கடி நிர்ப்பந்தப்படுத்தும் பயமுறுத்தும் நடவடிக்கைகளை உள்ளடக்குவதனால் அவை பிரச்சினைக்கு பங்களிக்குமே தவிர தீர்வுக்கு பங்களிப்பதி;ல்லை. வன்முறை முரண்பாடுகளுக்கு ஆக்கபூர்வமான பல்வேறு திர்வுகளைக் காண்பதற்கு அபிவிருத்தி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவை பொது நன்மைகளை உயர்த்துவதற்கு வலியுறுத்தகின்றன. மூன்றாம் கட்சிகளைப் பயன்படுத்துதல் மேன்மையுடைய பின்வாங்கல் நடைமுறையிலுள்ள அதிகாரத் தொடர்புகளையும் தாபனங்களையும் தீர்வுகாணும் அணுகுமுறைகள் அடிக்கடி கவனத்திற் கொள்கின்றன. இவ்வாறு அவற்றின் அடிப்படை இயல்பு மாறுவதை இந்த அணுகுமுறை இல்லாதொழிக்கிறது இந்தக் கருத்தில் மேற்சொன்ன அணுகுமுறைக் கட்டமைப்பு அற்றதும் வரலாற்றுத் தன்மையற்றதுமாகும். ஆகவே, அது உபாயத்தைவிட தந்திரங்களிலேயே கவனம் கொள்கிறது. இந்த விதமான முரண்பாட்டு வழிமுறைக்கான காரணங்களில் அடியிலுள்ள காரணங்களின் வேறுபாடுகளைக் கண்டறிய முயற்சிக்கின்றது. ஆகவே அங்கு அதிகாரிகளுக்கு கிடைக்கின்ற வழிகளைப் பயன்படுத்தி அரசியல் வன்முறைக்கான காரணங்களை கட்டுப்படுத்தும் தலையிடும் முயற்சியுமாகும். இல்லாது செய்ய முயற்சிக்கப்படுகிறது. மறுபுறம் வன்முறைகளின் தொழிற்பாடுகள் மீதான கவனம் அது எந்த சமூக ஒழுங்கில் இடம்பெறுகின்றதோ அதன் இயல்பின் கேள்விகளை கேட்க வழிவகுக்கின்றது. ஆகவே, வன்முறை பற்றிய கற்கை பரந்த சமூக, பொருளாதார, அரசியல் கண்ணோட்டத்தைப் பெறுகின்றது. சமூக, ஒழுங்குகளைக் கவனத்திற் கொண்டு அவை எவ்வாறு வன்முறைக்கு இடம் தரவல்லன என்பதைக் கவனத்திற் கொள்ளுதலும் மாற்று வழிகள் உள்ளன என்பதையும் உணர வைக்கின்றது. வன்முறையின் தொழிற்பாடுகளை கவனத்திற் கொள்ளுதல், பிரச்சினை தீர்க்கும் கோட்பாடும் முரண்பாட்டு முகாமைத்துவம் என்பவற்றை வேறுபடுத்துவதை சுலபமாக்குகின்றது. ஒரு பண்பாக இருந்த காரணியை முரண்பாடுகளைத் தீர்க்கும் முயற்சியாக மாற்றுகின்றது. (ஊழஉம - 1975) இவ்வாறு செய்யும்போது முரண்பாட்டுத் தீர்வு அரசியல் எந்திரவியலினதும் வன்முறையின் கட்டுமானப் பின்னணியில் பாராமுகப்படுத்தல் குறைபாடுகளை நீக்குகின்றது.

அரசியல் வன்முறை ஒரு சித்தாந்தமாக மாறலாம். அதாவது தெளிவான நோக்கங்கள் மந்த வாழ்வு போல் மாறினால் அதுவொரு சடங்குமுறை போன்று நடைமுறைப்படுத்தப்படும். பல சந்தர்ப்பங்களில் வன்முறை விரும்புகின்ற அரசியல் நோக்கங்களை உருவாக்கும் ஒரு கருவியாகவே கொள்ளப்படுகின்றது. அத்தகைய கருவியாகும் கருத்து ஒன்றில் வன்முறையினை தொடர்புபடுத்தும் வழியாகவோ அல்லது அழிவை ஏற்படுத்தும் வழியாகவோ வரைவிலக்கணப்படுத்த உதவும். வன்முறை தனிப்பட்ட ரீதியில் (ஒருபக்கமாக) நடிகர்களின் தனிமைப்படுத்தலையும் உடைப்பதற்கான செய்தியாகவும் அனுப்புகின்றது. சாத்வீகமான வழிமுறைகளினு}டாக அடைய முடியாத சமூக மாற்றங்களை உருவாக்குவதற்காகவே உயிர்களும் சொத்துக்களும் அழிக்கப்படுகின்றன.

உசாத்துணை நு}ல்கள்

1. Peter wallensteen, ed: Peace Research Achievements and Challenges (Voulder & London : Westview Press, 1988)
2. Raimo Vayrymen, ed: New Directions in Conflict Theory (New Delhi: sage Publications, 1991)
3. Alarn C. Tidwell, Conflict Resolved A Critical Assesment of Conflict Resolution (Newyork : Ointer 1998)
4. J. E. T. Elderge, ed: Max Weder : The Interpretation of Social Reality (London : Michae Hoseph 1971)

முரண்பாடும், முரண்பாடுகளும் 4


முரண்பாடு பற்றிய கோட்பாடுகள்

(i) முரண்பாடுகள் பற்றிய கால்மார்க்சின் கருத்துக்கள்

மார்க்சிசம் என்பது மார்க்சின் கருத்துக்களது முறையும் அவரது போதனைகளுமாகும். அவரது போதனைகளில் முரண்பாடு பற்றிய கருத்துக்களிலேயே நாம் இங்கு கவனம் கொள்வதால் அதனை முதலில் கவனத்துள் கொள்ளலாம்.

லெனின் குறிப்பிட்டதுபோல் ஒன்றைப் பரித்தலும் அதன் முரண்படும் பாகங்கள் பற்றிய அறிவுமே முரணறுவாதத்தி;ன் உட்பொருளாகும். து}ய கணிதத்தில் அது10உம் 2ம் ஆகும். வித்தியாசமும் ஒன்று இணைப்பதுமாகும். இயந்திரவியலில் அது நடத்தையும் எதிர் நடத்தையுமாகும்.

பௌதிகவியலில் அது மின்னியலின் நேர்க்கணியமும் எதிர்க்கணியமுமாகும்.

இரசாயனவியலில் அது அணுக்களின் இணைவும் இணைவற்றுப் போதலுமாகும்.

சமூக விஞ்ஞானங்களில் அது வர்க்கப் போராட்டம்.

இயற்கையின் வழிமுறையும் காட்சியும் பரஸ்பரம் முரண்படும் தனியானதும் எதிர்ப்பானதுமான போக்குகளின் அடையாளத்தினையும் எதிர்ப்புக்களை அடையாளம் காணுதல் வேண்டும்.

உலகின் வழிமுறைகளினது சுய இயக்கத்தினது அறிவின் வரையறை: தமது தன்னிச்சையான அபிவிருத்தியில் அவற்றின் வாழ்க்கை முறையே அறிவாகும். அது எதிர் எதிரானவற்றின் ஒற்றுமையாகும். அபிவிருத்தி என்பது எதிர் எதிரானவற்றின் போராட்டமாகும். அபிவிருத்தியின் இரண்டு அடிப்படை எண்ணக் கருக்கள்: அபிவிருத்தி குறைகளும் அதிகரித்தலும்@ திருப்பவும் ஏற்படுதலும்@ அபிவிருத்தியுமாகும். இதுவே எதிர் எதிரானவற்றின் ஒற்றுமையாகும்.

(ii) முரண்பாடு பற்றிய மக்ஸ் வெபரின் கருத்துக்கள்.

சமூகத் தொடர்பு நிலை என்பது பல தன்மை வாய்ந்த நடிகர்களின் நடத்தை ஒரு பொருள் பொதிந்த முறையில் இடம்பெறுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொருவரினதும் நடவடிக்கையும் மற்றவர்களது நடவடிக்கையினை கவனத்திற் கொண்டே இடம்பெறுகின்றது.

இத்தகைய தொடர்புமுறை ஒன்று “முரண்பாடு” என விபரிக்கப்படுகிறது. அதனுள் மற்றையதொரு கட்சி அல்லது கட்சிகளுக்குள் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வேண்டுமென்றே ஒருநபரின் தனது விருப்பத்தின் பிரகாரம் எடுப்பவையே முரண்பாடு எனலாம். சமாதான முரண்பாடு என்பது உண்மையான உடல் ரீதியான வன்முறை பயன்படுத்தாத உதாரணங்களுக்கும் பயன்படுத்தலாம். சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் முன் வாய்ப்புகளையும் கட்டுப்படுத்த சமாதான முறையில் முயற்சிக்கும் போட்டியே ஒரு சமாதான முரண்பாடு எனலாம்.

ஒருபோட்டி வழிமுறை ஒழுங்குகளுக்குட்பட்ட போட்டியாகும். அதன் வழியும் முடிவும் ஒரு ஒழுங்கில் அமையுமெனில் வாய்ப்புகளுக்கும் தப்பியிருத்தலுக்குமாக தனிப்பட்ட மனிதர்களுக்கும் அல்லது சமூக அந்தஸ்துக்குமாக இடம்பெறும் போராட்டம் உள்ளார்ந்தவையாகும். இவை முரண்பாடு என்ற வகையில் பரஸ்பரம் இடம்பெறாவிட்டால் அதனை “தெரிவு” என அழைக்கலாம்.

சமூகத்தெரிவின் ஒவ்வொரு வழிமுறையும் ஒரு முரண்பாடாகவிருக்க முடியாது. மாறாக சமூகத் தெரிவு முதற்படியில் சில வகைகளான நடத்தையாக அதனால் அதற்கு ஒப்பான தனிப்பட்ட இயல்புகள் சில வகையான சமூக உறவுகளை பெற வாய்ப்பாக இருக்கின்றன. அன்புக்குரியவர், கணவர், பாராளுமன்ற அங்கத்தவர், உத்தியோகத்தர், ஒப்பந்தகாரர், முகாமைத்துவப் பணிப்பாளர், வெற்றிகரமான வர்த்தகர் ஆனால் இந்த எண்ணக்கரு இத்தகைய வேறுபடும் சமூக வெற்றிக்கான வாய்ப்புகளுக்கான தெரிவு முரண்பாட்டினு}டாக கொண்டுவரப்பட்டதா என்பதை குறிப்பிடவில்லை. எங்கு உண்மையான போட்டி வழிமுறை உள்ளதோ அங்கு மட்டுமே முரண்பாடு என்பது பயன்படுத்தப்படும்.

எமது அனுபவத்தின் படி தெரிவு செய்தல் என்ற மனப்பான்மையில் மட்டுமே முரண்பாடு என்பது அனுபவரீதியில் தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. அத்தோடு உடல் ரீதியிலான, தெரிவு செய்தல் என்ற பொருளிலேயே தத்துவ ரீதியில் தவிர்க்க முடியாததாகின்றது. தெரிதல் தவிர்க்க முடியாதது. ஏனெனில் அதனை முழுமையாக இல்லாது செய்ய எந்த வழியையும் உருவாக்க முடியாது எனத் தெரிகின்றது.

தனிப்பட்டவர்களது ஒவ்வொரு மாதிரியோடும் ஈடுபடும்போது தான் முரண்பாட்டின் வழிகளை நீக்கலாம் என்பது சாத்வீக இயலுமானதாகலாம். ஆனால் அது வெளிவாரியான போட்டி வழிமுறையில் மற்றைய மாதிரியான முரண்பாடுகள் முன்வரும் என்றும் இது பொருள்படும். ஆனால் கற்பனாவாத எடுகோளின் படியும் எல்லாப் போட்டிகளும் முழுமையாக நீக்கப்பட்டாலும் சு10ழ்நிலை, சுற்றாடல் ஒரு உள்ளார்ந்த தெரிவுக்கு உடல் ரீதியிலோ சமூக ரீதியிலோ அதன் சு10ழ்நிலைக்குச் சிறப்பாக தழுவிக் கொண்டதாக அமையலாம். அவற்றின் பெறுமதிகள் பிரதானமாக பரம்பரையினாலோ அல்லது சு10ழ்நிலையினாலோ தீர்மானிக்கப்பட்டதாயினும் அனுபவமட்டத்தில் முரண்பாட்டினை இல்லாததாக்குதல் ஒருகட்டத்துக்கு மேற்செல்ல முடியாது. அதுசில சமூக தெரிவுக்கு இடமளிக்கின்றது. தத்துவரீதியில் ஒரு உடல்களுக்காக தொடர்ந்து உயிர்வாழ்வதற்காக தனிப்பட்டவர்களிடையிலான போராட்டம்.

இயல்பாகவும் கட்டாயமாகவும் முரண்பாட்டிற்கும் உறவு நிலைகளுக்கிடையிலும் வேறுபாடுகளைக் காட்ட வேண்டும். வெளிக் கொணரப்படாத பொருளிலேயே இந்த எண்ணக்கருக்கான இரண்டாவதிற்கு உபயோகிக்கலாம் ஃ பயன்படுத்தலாம். உறவுநிலைகள் மனித நடத்தையின் முறைகளாக அமைவதோடு கற்பனை அர்த்தங்களில் மட்டுமே இயக்கத்திலிருக்கும். ஆகவே அவர்களுக்கிடையிலான தெரிவுசெய்யும் வழிமுறை அல்லது முரண்பாடு ஒரு மாதிரி நடத்தை காலக் கிரமத்தில் இன்னொன்றினால் அதன் இடத்தைப் பெறுகிறது. இந்த நடத்தைகள் அதே ஆட்களாலோ மற்றவர்களாலோ இடம்பெற்றாலும் இது பல வழிகளில் இடம்பெறலாம். முதலாவது படியில் மனித நடத்தை சில வகையான சமூக தொடர்பு நிலையை மாற்றுவதையே இலக்காகக் கொண்டவை. அவை அபிவிருத்தியடைவதை தடுக்கவோ தொடர்வதைத் தடுக்கவோ வழிப்படுத்தப் படலாம்.

(iii) ஜோர்ஜ் சிமெல்

முரண்பாட்டுத் தீர்வு கோட்பாட்டாளர்களை பற்றி ஆரம்பிப்பதற்கான பயன்பாடான இடம் ஜோர்ஜ் சிமல் (புநழசபந ளுiஅஅநட) சிறிய குழுக்களில் தனிப்பட்டவர்களின் பங்கினையும் பரந்த சமூக தொடர்பில் சிறிய குழுக்களின் பங்கினையும் ஆராய முனைந்தார். அவரது ஆய்வுகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது முரண்பாடு பற்றிய வரிவான கட்டுரையாகும். (1955). இதில் சிமெல் முரண்பாட்டு ஒழுங்கிணைக்கும் ஃ ஒருமைப்படுத்தும் இயல்பைக் கொண்டுள்ளது என்றும் - திருப்தியற்ற போட்டியிடும் செல்வாக்குகளை ஒன்றாக கொண்டு வரும். இவ்வாறு சிமெலின் - வார்த்தைகளில் ஒரு குழுவின் திருப்தியற்ற அங்கத்தவர்கள் குழுவினுள் கொண்டு வருகிறது. அதாவது முரண்பாடு அங்கத்தவர்களிடையே காணப்படும் நெருக்கடி நிலையைக் சமூகச் சக்தியினு}டாக குறைக்கிறது.

இந்தவழியில் முரண்பாடு சமூகமயப்படுத்தும் வழிமுறையாகும். குழு அங்கத்தவர் களிடையே காணப்படும் நெருக்கடிகளை குறைக்கிறது. எல்லா முரண்பாட்டிற்கும் அடிப்படை போட்டியிடும் இரட்டைச் சக்திகளாகும். உதாரணமாக சிமெல் - உள்ளார்ந்த மனித து}ண்டுதலான அனுதாபப்படுவதற்கான தேவையும் இதற்கெதிரானது பகைமையுணர்வு சிமெல் மனிதர்கள் அனுதாபப்படுவதற்கும் பகைமையுணர்வு பெறுவதற்கும் தேவையைக் கொண்டுள்ளனர் என வாதிடுகிறார்.

உதாரணமாக ஒரு குடும்பத்தினுள்ளே மகள் மகன் இடையேயான முரண்பாடுகள் - ஒருவித ஒற்றுமையை ஏற்படுத்த உதவலாம். பரம்பரை பிள்ளைகள் அனுபவம் - அவர்களது மோதல்கள் - நடிகர்களிடையேயான ஒற்றுமையினை ஏற்படுத்தும். இவ்வாறு பரம்பரை குடும்பக் குழுவில் என்ற தொடர்பில் சமூகமயப்படுகின்றனர். அவர்கள் தமது மோதல்களைத் தணிக்கக் கூடிய இல்லாமல் செய்யும் ஒரு தொகுதியான நடத்தையினை அறிந்து கொள்கிறார்கள். தாய் தந்தை பிள்ளைகளுக்கிடையிலான முரண்பாட்டினை இல்லாது செய்வதற்காக (முடிவுக்குக் கொண்டுவர) அல்லது இறுதியாக முரண்பாட்டினை முடிவுக்குக் கொண்டுவருதற்காக விட்டுக் கொடுத்தலை பயன்படுத்தலாம்.

முரண்பாட்டுத் தீர்வில் சிமெல் இன் ஆய்வுகள் முக்கியமானவை. ஏனெனில் அவர் முரண்பாட்டிற்கான நேர்க்கணிய சமூக நடத்தையை தெளிவாக வற்புறுத்தினார்.

முரண்பாடு பெரும்பாலும் வழக்கமாக எதிர்க்கணிய சமூக விளைவுகளை ஏற்படுத்தும் எனக்காட்டினாலும் அது நேர்க்கணிய வாய்ப்புக்களையும் கொண்டிருக்கிறது என்பதை அடையாளம் காட்டினார். இருந்தாலும், சிமெல் முரண்பாட்டினை திட்டவட்டமாகத் தீர்க்கலாம் என்பதை உரையாடவில்லை. அத்தகைய விதந்துரைகளை பிற்காலத்து எழுத்தாளர்களுக்கே விட்டுவிட்டார்.

(iஎ) கோசர்

ஜோர்ஜ் சிமெலின் ஆய்வுகளை அடுத்து லு}யிஸ் கோஸ் - ஒரு அமெரிக்க சமூகவியலாளர் தனது து}ரப்பாவையில் சமூக முரண்பாடு பற்றிய தனது கருத்துக்களை முன்வைத்தார். கோசர் - முரண்பாடு குறிப்பிட்ட பயன்பாடான சமூக நடத்தைகளுக்கு சேவை செய்கிறது என்றார் அவர் தனது பிரபல்யமான நு}லான வுhந குரnஉவழைn ழக ளுழஉயைட ஊழகெடiஉவ (1956)இல் முரண்பாடு பல பயன்பாடான பல்வேறான தேவைகளுக்கு சேவை செய்கிறது என்றார்.

இவ்வாறு கோசர் முரண்பாடு அத்தியாவசியமான சமூக செயற்பாட்டை சேவை செய்கிறது என்று கண்டார். அதாவது நிலை நிறுத்தப்பட்ட சமூக உறவுகளை நிலைநிறுத்த உதவும் அவை சமூகத்தின் செயற்பாட்டிற்கு - சில வகைகளில் முக்கியமானவை எனவும் கொண்டார். மேலும், பகை, தாக்கும் உணர்வுகள் - இல்லாமல் செய்வதற்கு ஸ்தாபனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் சில ஸ்தாபனங்கள் எவ்வாறு பகை, தாக்குமுணர்வு என்பனவற்றை கையாள்வதில் செயலற்றுப் போகின்றனவா என்பதனையும் குறிப்பிட்டார். கோசர் முரண்பாடு பகைமையினை இல்லாது செய்வதற்கு மேலாகவும் செயற்படுகின்றது என வாதிட்டுள்ளார்.

கோசர் முரண்பாடுகளைத் தீர்த்தல் உதாரணமாக கைத்தொழில்களில் செயலற்ற விழைவுகளை எதிர்பார்த்திருக்க முடியாது. அதாவது கைத்தொழில் முரண்பாட்டினைத் தீர்ப்பது சமத்துவமற்ற - சரியற்ற வேலை நடைமுறைகளை ஏற்படுத்தலாம். வேலைத்தள முரண்பாடுகள் தீர்க்கப்படாதே விடப்படலாம். இதனால் புதியதும் சிறப்பானதுமான கைத்தொழில் வழிமுறைகள் அபிவிருத்தி செய்யப்படலாம்.

(எ) கேர்ட் லெவின் (முரசவ டுநறin)

கோசருடையதோ அல்லது சிமெலினுடையதோ கருத்துக்கள் ஒரு கோட்பாட்டு மாற்றத்தினை உள்ளடக்கியதாக இருக்கவில்லை. சமூக முரண்பாட்டினை நேர்க்கணிய அம்சம் பற்றிய விளக்கங்கள் சமூக முரண்பாட்டின் இயல்புகளது நேர்க்கணிய வாய்ப்புகளை முக்கியத்துவப்படுத்தும் சிந்தனையை வற்புறுத்தினார்.

ஜேர்மனியில் பிறந்த அமெரிக்க கல்விமானான கேர்ட் லெவின் 20ம் நு}ற்றாண்டின் முதல் அரைவாசிப் பகுதியில் முரண்பாடு என்ற விடயம் பற்றி மிகவும் அதிகமாக எழுதினார். பல்வேறு காரணங்களினால் முரண்பாட்டுக் கல்விக்கான இவரது பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. முரண்பாட்டுக் கல்விக்கான இவரது பங்களிப்புகளுள் மிகவும் முக்கியமானது வெளிக்கள கோட்பாடாகும். வெளிக்கள கோட்பாடு என்பதை - காரண காரிய தொடர்பு - களையும் விஞ்ஞான கட்டுமானத்தையும் பகுப்பாய்வு செய்யும் ஒரு அணுகுமுறையின் இயல்பைக் கொண்டது எனக் கூறலாம். லெவினின் கோட்பாட்டின் அடிப்படைக் காரணிகள் ஃ அம்சங்கள்.

1. நடத்தை பற்றிய உளவியல் விளக்கம்;
2. சமூக நிலையை முழுமையாகக் கவனத்துள் கொள்ளல்
3. வரலாறுகளுக்குப் பதிலாக முறையியல் காரணிகள்.
4. மாறுகின்ற தன்மையினை இயல்பாகக் கொண்ட அணுகுமுறை.

குறிப்பிட்ட சமூக தொடர்பினுள் தனிப்பட்ட நடத்தியினை விளக்கங்களை ஒருங்கிணைத்தலிலேயே லெவினின் ஆய்வுகள் பிரத்தியட்சமானவையாகும். லெவினுக்கு சமூகத்துக்கப்பால் தனிப்பட்டவர் என்ற ஒருவர் இருக்கவில்லை. சமூகமும் தனிப்பட்ட ஒருவனுக்கு மேலாக இயங்கவில்லை. ஆனால் அவை ஒருங்கிணைக்கப்பட்டன. 1997ல் லெவினை அறிமுகப்படுத்தி கோடனும் ஒல்போர்டும் எழுதிய போது சில வகையான புதிய எண்ணக் கருக்களைப் பயன்படுத்தினால் தனிப்பட்டதும் குழுவும் பரஸ்பரம் தங்கியிருத்தலை காட்டக் கூடிய பங்களிப்பினை தருகின்றமையே லெவினின் பிரத்தியட்சமான பங்களிப்பு என வாதிட்டனர்.

லெவினின் எண்ணக் கருக்களில் மிகவும் முக்கியமானது வாழ்க்கைக் காலம் ஃ இடம் என்ற சிந்தனைகளாகும். வாழ்க்கைக் காலம் ஃ இடம் என்பது இரண்டு பிரதான உளவியல், சு10ழ்நிலையும் - ஆட்களும் என்பன வாழும் தனிப்பட்டவரானாலும் உளவியல் சு10ழ்நிலையிலும் ஊடாட்டத்தை விளங்கிக் கொள்வதன் மூலம் ஒருவர் ஒருவருடைய நடத்தை பற்றி எதிர்வு கூறலாம்.

லெவின் ஆய்வின் இன்னொரு மத்தியமான கருத்து முரண்பாட்டின் வெளிப்பாடான தேவையினை சொல்வதற்கான தேவையின் பங்காகும். ஒரு குழுவின் சமூகச் சு10ழ்நிலை அல்லது நெருக்கடி மட்டத்திலேயே ஒரு குறிப்பிட்ட நிகழ்வு ஒரு முரண்பாடாக வளருமா என்பது தங்கியிருக்கும். சமூக மனிதர்களுக்கும் அவர்களது தேவைகளைத் திருப்தி செய்தல் என்பதற்கும் இடையிலான வெளிவாரியான தொடர்பினை முன்வைத்த முரண்பாட்டுக் கோட்பாட்டாளர்களுள் லெவின் முதற் கோட்பாட்டாளராவர். ஒரு தனிப்பட்டவர் அசைந்து செல்வதற்கான திறமை தேவைகளைத் திருப்தி செய்வதற்கு - மிகவும் அத்தியாவசியமாகும். இடம் மாறுதல் என்பது இடத்தைக் கருத்தில் கொள்ளவில்லை. ஒரு தனிப்பட்டவரின் உளவியல் இடத்தினைத்தான் குறைக்கிறது.

லெனின் ஆய்வுகளில் இருந்து வளர்ச்சியடைந்ததே முரண்பாடு பற்றிய முத்தரப்பு பாகுபாடாகும். முதலாவது அணுகுமுறை சு10ழ்நிலைகள் இச்சு10ழ்நிலைகளில் தனிப்பட்டவர்கள் இரண்டு சக்திகளை எதிர்நோக்குகின்றனர். இரண்டுமே கவர்ச்சிகரமானவை. தனிப்பட்டவர் இரண்டினுள் ஒன்றைத் தெரிவு செய்வதில் இடர்படுகின்றான். முரண்பாட்டாளன் இரண்டாவது மாதிரியில் தவிர்ப்பது ஆகும். அதில் இரண்டு சக்திகளும் விருப்பத்தக்கவை அல்ல. தனிப்பட்டவர் இரண்டினுள் ஒன்றாகத் தெரிவு செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றான். அல்லது சு10ழ்நிலையால் விட்டு வெளியேறக் கூடியதாகும்.

மூன்றாவது மாதிரி அணுகுமுறை - தவிர்த்தல் என்று பெயரிடப்பட்டுள்ளது. அங்கு நேர்க்கணிய எதிர்க்கணிய இயல்புகள் இரண்டும் கொண்ட ஒரு தெரிவினை எதிர்நோக்குகின்றன.

மேற்சொன்ன பாகுபாடு பெரும் விளக்கமாயிருக்கும் - சக்தியைக் கொண்டிராவிட்டாலும்; அது பயன்பாடானதொரு பகுப்பாய்வு விவரண தேவையை நிறைவு செய்கிறது. லெவினின் ஆய்வுகள் இறுதியில் பெருமளவு நடைமுறை இயல்புடையதாகவும் உண்மையான சு10ழ்நிலைகளுக்கும் பயன்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. ஆகவே, லெவின் செயற்பாட்டு ஆராய்ச்சி ஆய்வினை பயிற்சி நடத்தை என்பன இணைக்கின்றது. இது சமூக மாற்றத்துக்கு வழிவகுக்கின்றது.

(எi) மோட்டான் டுவெச்

அமெரிக்க சமூக உளவியலாளரான டுவெச் முரண்பாட்டுத் தீர்வுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்;;;;;;பிiசை; செய்துள்ளார். இவரது கருத்தின் மையப்பொருள் எவ்வாறு முரண்பாட்டினை இல்லாதொழிப்பது அல்லது தடுப்பதல்ல பிரச்சினை. அதனை எவ்வாறு ஆக்கபூர்வமானதாக ஆக்குவது என்பதே டுவெச் சரியாக ஆக்கபூர்வமான அழிவை ஏற்படுத்தும் முரண்பாடுகளை வேறுபடுத்துகிறார். தீவிரமான முரண்பாடுகளிலேயே இது சுலபமாக பிரித்தறியக் கூடியதாகவுள்ளது. ஆனால் மிகப் பெரும்பான்மையான முரண்பாடுகள் இத்தகையனவே என்று குறிப்பிட்டார்.

அழிவை ஏற்படுத்தும் முரண்பாட்டின் ஒரு இயல்பு அதுவிரிவடைந்து செல்வதாகும். அழிவை ஏற்படுத்தும் முரண்பாடுகள் அழிவில் பெரியனவாகும். ஆக்கபூர்வமான முரண்பாடுகள் தமது வெளிப்பாட்டில் கூடியளவு கட்டுப்பாட்டுக்குட்பட்டவை என்பதோடு சிறியனவாகும். தனது ஆய்வினை நடத்தும்; போது டுவெச் ஐந்து எடுகோள்களினால் வழிப்படுத்தப்பட்டார்.

(i) ஒரு சமூக ஊடாட்டத்தில் ஒவ்வொரு பங்குபற்றுனரும் மற்றவர் பற்றிய பார்வையின் தாக்கத்துக்குட்படுகிறார்.
(ii) ஒரு சமூக ஊடாட்டத்தில் மற்றவர்களின் உணரக்கூடிய இயலளவை ஒவ்வொரு பங்குபற்றுனரும் அங்கீகரிக்கிறார்.
(iii) சமூக ஊடாட்டம் தனியே தனியே உள்நோக்கங்களினால் மாத்திரம் ஆரம்பிக்கப்படுவதில்லை. புதிய நோக்கங்களை உற்பத்தி செய்வதோடு பழையனவற்றை மாற்றுகின்றது.
(iஎ) சமூக ஊடாட்டம் ஒரு சமூகச் சு10ழ்நிலையில் - குடும்பத்தில் - குழுவில் சமுதாயத்திலேயே ஏற்படுகின்றது.
(எ) ஒரு சமூக ஊடாட்டத்தில் ஒவ்வொரு பங்குபற்றுனரும் அது தனிப்பட்டவர்களால் என்ன அல்லது குழுவானாலென்ன பல ஊடாட்ட உபமுறைகளைக் கொண்ட குழப்பமான அலகுகளாக இருந்தாலும் அச்சு10ழ்நிலையில் சில அம்சங்களை நோக்கி ஒற்றுமையாக செயற்படலாம்.

டுவெச்சே முரண்பாட்டின் கருத்துநிலை இயல்பினை வற்புறுத்தியவர்களுள் முன்னோடியாவார்.

முரண்பாடு பற்றிய டுவெச்சின் கருத்தின்படி முரண்பாடுகள் தோன்றுவதற்கான வாய்ப்புக்கள் மீது மூன்று காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. அக்காரணிகள் மீது மூன்று காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. அக்காரணிகள்: வேறுபாடுகள் தொடர்படுதலும், தெரிவதும் (புலனாவதும்) எதிர்பார்க்கும் ஒத்தியங்காமையும் முரண்பாட்டின் எதிர்பார்க்கும் பயன்படும் கட்டுகள் ஒன்றுடன் ஒன்றுதொடர்புபடும் போது தெளிவாக முரண்பாடு அதிகரிக்கும். கட்டுக்களுக்கிடையே தொடர்புகள் இல்லாவிடின் முரண்பாடு இடம்பெறுவது கஷ்டமாகும். புலனாகின்ற வேறுபாடுகள் பற்றி அபிப்பிராயம் குழு அங்கத்தவர்களின் ஏளைளரயட ஞாபகமூட்டுதற்கு சேவை செய்யும். நாசி ஜேர்மனியில் யூதர்கள் கையில் பட்டி அணிய வேண்டுமென கேட்கப்பட்டமை - ஜேர்மனியர்களை துவேசம் கொள்ளவைத்தது.

ஒத்தியங்காமை பற்றி பார்வைகளில் பிரளயம் முரண்பாட்டு நடத்தலை தெளிவாக செல்வாக்குச் செலுத்துகிறது. உடன்பாடு காண்பதற்கு வாய்ப்புகளில்லை என்பது தெரிய வரும்போது முரண்பாட்டில் பெருமளவு ஈடுபட காரணமாகின்றது.

இறுதியாக டுவெச் முரண்பாட்டில் எதிர்பார்க்கப்படும் பயன்பாடு வெளியிடுதலுக்கான முக்கியமான பங்களிப்பு என அடையாளம் காட்டினார். உதாரணமாக கலாசார பெறுமதிகள் எதிர்பார்க்கப்பட்ட ஒத்தியங்காமைக்கான முக்கியமான கையாளும் வழியாகக் கொண்டால் - முரண்பாட்டு நடத்தை பயன்படுத்தப்படலாம். இவ்வாறு ஆகவே முரண்பாட்டின் பயன்பாடு அதன் பயன்பாட்டின் மீது செல்வாக்குச் செலுத்தும் அதேபோன்று, எதிர்பார்க்கும் ஒத்தியங்காமை, தொடர்பு, பார்வையில் காணப்படும் வேறுபாடுகளும் செல்வாக்கும் செலுத்தும்.

முரண்பாட்டுத் தீர்வு அடிப்படையில் நுட்பங்கள் அபிவிருத்தி செய்வதினாலேயே வழிநடத்தப்படும் என டுவெச் நம்பினார். கட்சி எவ்வளவுக்;கு நுட்பமாக நடக்கிறதோ முரண்பாடு தாக்கமானதும் திறமையான முறையிலும் தீர்க்கப்படும்.

முரண்பாட்டு தீர்வு தொடர்பான ஆக்கபூர்வமான தீர்வு முறைகள், நுட்பங்கள் இயல்பையே தேசங்களுக்கிடையிலான. குழுக்களுக்கிடையிலான, தனிப்பட்டவர்களுக் கிடையிலான பல அழிவை ஏற்படுத்தும் பல முரண்பாடுகள் ஏற்படுகின்றன. இவ்வாறு அவர் முரண்பாட்டைக் கோட்பாடு அதன் தீர்வு என்பவற்றுக்கிடையில் தெளிவான தொடர்பை ஏற்படுத்துகிறார். டுவெச்சின் பார்வையில் முரண்பாட்டுத் தீர்வு - நுட்பப்பயிற்சி களிலேயே ஏற்படுகின்றன.

முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான திறவுகோல் - அபிப்பிராயத்தினை திருத்துதலும். அதுவே எல்லா முரண்பாட்டுக்கும் மத்திய பங்காயுள்ளது என வாதிட்டார்.

முரண்பாடும், முரண்பாடுகளும் 3


சமாதானம் பற்றிய ஆய்வாளர்கள், சமூக விஞ்ஞானிகள் ஆகியோரது முயற்சிகளுக்கு மத்தியிலும் முரண்பாடு என்ற எண்ணக்கரு நழுவிச் செல்லும் ஒன்றாகவே இருந்து வருகின்றது. 1950களிலும் 1960 களின் ஆரம்பங்களிலும் சமாதான ஆய்வுகளுக்கு முரண்பாட்டுக் கோட்பாடே மத்திய மயமானதாகவிருந்தது. ஆனால், 1960களின் இறுதியில் அது பலம் வாய்ந்த எதிர்ப்புகளை எதிர்நோக்கியது. பெரும்பாலான கோட்பாடுகள் கட்சிகளிடையே சமமான தன்மைகள் இருப்பதாக ஊகித்தனவே தவிர தேசிய அலகுகளிலும் சமூக குழுக்களிலும் நிலவிய அடிப்படைச் சமமின்மையைப் பாராமுகப்படுத்தின. 1970களில் மாக்சிய சிந்தனைகளின் செல்வாக்கு முரண்பாட்டுக் கோட்பாட்டை முன் கொண்டு செல்வதில் தோல்வி கண்டன. 1980களில் முரண்பாட்டுக் கோட்பாட்டை மறு சீரமைத்து புனர் நிர்மாணம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சமாதான ஆய்வில் முரண்பாட்டுக் கோட்பாடு முக்கியமான ஒற்றுமைப்படுத்தும் காரணியாகத் தொடர்ந்தும் இருந்து வருகின்றது. முரண்பாடு என்ற காட்சியிலேயே கவனம் செலுத்தும் பொதுமை வேறுபடும் பார்வைகள் அல்லது கண்ணோட்டங்கள் அல்லது அவதானிப்புகள் என்பவற்;;றை ஒன்றாகக் கொண்டு வரத்தக்க பகுப்பாய்வு, அடிப்படை எண்ணக் கருக்கள் பற்றிய கோட்பாட்டுத் தேவைகளை அவசியமாக்கின. இது தொடர்பாக பெருமளவு முயற்சிகள் இன்னும் செய்ய வேண்டியுள்ளன. ஆனால் ஆயுதப் போட்டி, போர் ஏற்படுத்திய ஆயுதப் போட்டிக்கான உள்@ர் உந்து விசைகள் போரை உருவாக்கும் முறைகளில் கூடியளவு வேறுபாடுகள் பற்றி வளர்ந்து வரும் புது விளக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இருந்தும் இன்னும் முரண்பாட்டுத் தீர்வு என்ற துறையில் மிகச் சிறிதளவு சாதனைகளே ஏற்பட்டுள்ளன. நாம் இன்னும் அவசரமாக முரண்பாடு, முரண்பாட்டுத் தீர்வு பற்றிய பொதுக் கோட்பாடினை கண்டுபிடிக்க வேண்டிய தேவையுண்டு.

முரண்பாட்டிற்கான தீர்வு பற்றிய செயற்பாடு, நுட்பங்கள் என்பவை மனித வர்க்கம் அளவு பழமையானதாயினும் இந்த விடயப் பரப்பு பற்றிய முறையான கற்கை ஒரு தசாப்தம் அளவுக்கு சற்று அதிகமானதாகும். ஐக்கிய அமெரிக்காவில் சமாதானம் சாத்வீக கற்கைகளின் எழுச்சி தான் முரண்பாட்டுத் தீர்வுக்கான புலமை சார் பயிற்சியின் ஒரு மூலமாகும். இத்தகைய பயிற்சித் திட்டங்கள் வியட்நாம் போரில் அமெரிக்கத் தலையீட்டை எதிர்த்து நடத்திய நடவடிக்கைகளால் தான் பெரும்பாலும் அதிகரித்தன.

1960களின் பிற்பகுதியிலும் 1970களின் ஆரம்பத்திலும் எதிர்ப்பு நடவடிக்கைகள் பெரும்பாலானவை அமெரிக்க கல்லு}ரி வளாகங்களிலும் நிர்வாகிகளாலும் சமாதான வழிகளில் போரை முடிவுக்குக் கொண்டு வருதல் பற்றிய கற்கை நெறித் திட்டங்களாக விரிவுரையாளர்கள் தொடக்கிய திட்டங்களை மையமாகக் கொண்டிருந்தன.

ஆரம்ப சமாதான கற்கை நெறித் திட்டங்கள் பெரும்பாலும் மூன்று விடயப் பரப்புகளுள் ஒன்றினைப் பற்றியதாகவிருந்தது. உதாரணமாக கிறாக்கூஸ் பல்கலைக்கழகமும் கென்ற் சம அரசும் சமூக மாற்றக் கோட்பாடும் வரலாறும் வழி முறைகளும் என்பவற்றை வற்புறுத்தின. கொள்கேற்றும் ஏழ்காமும் (நுயடாயஅ) சர்வதேச போர் சமாதானம் பற்றிய பிரச்சினைகள் என்பவற்றை முக்கியத்துவப்படுத்தின. மன்கற்றன், மன்செஸ்ரர் என்பன மாற்றத்தினை ஏற்படுத்துதல் அல்லது வன்முறைச் சாத்வீக ஒழுக்க மெய்யியல் பாடவிதானத்தை பெருமளவு வற்புறுத்தின. ஆனால் கற்கை நெறித் திட்டங்களது அபிவிருத்தியானது வரிவுரையாளர்களது புலமைக்கான தரவுகள் பயிற்சி பெறும் வாய்ப்புக்களில் ஈடுபடத் தொடங்கியமையும் முரண்பாட்டுத் தீர்வு நடவடிக்கைகள் விரிவடைந்தமையும் சமாதான கற்கை மென்மேலும் ஆராய்ச்சி பயிற்சி என உபதுறைகளாக வளர உதவின. இப்போக்கு தொடந்ததோடு 1980களில் வேகமடையத் தொடங்கின.

முரண்பாட்டுத் தீர்வுக் கோட்பாடு நுட்பங்கள் பற்றிய புலமைப் பயிற்சிக்கான இரண்டாவது மூலம் தமது பட்டதாரிகளுக்கு எழுச்சியடைந்து வரும் இத்துறை பற்றிய அறிவும் திறமையும் இருக்க வேண்டுமென அண்மையில் தொழல்சார் பயிற்சி வழங்கும் கல்லு}ரிகள் அங்கீகரித்தமையாகும். கடந்த சில வருடங்களுள் சட்டம் முகாமைத்துவம் மனித அபிவிருத்தி என்பவற்றோடு தொடர்புபடும் கல்லு}ரிகள் பல இத்தகைய திட்டங்களை ஆரம்பித்துள்ளன.

முரண்பாடும், முரண்பாடுகளும் 2


வன்முறை பற்றிய மேற்சொன்ன ஆறு எடுகோள்களும் மேற்கு நாட்டுச் சிந்தனையிலும் அரசியல் நடைமுறைகளிலும் முதலாம் உலகப் போர் வரை ஆக்கிரமிப்புச் செலுத்தின. முதலாம் உலகப் போர் மரபு ரீதியான சிந்தனைகளின் உணர்வுகளாலேயே ஆரம்பித்தது. உதாரணம்: “வன்முறை தவிர்க்க முடியாதது”. இது போர் பற்றிய மரபு ரீதியான சிந்தனையின் தேவையினை ஏற்படுத்தியது. இந்தப் புத்தி ஜீவ தேவையிலிருந்தே இன்றைய சமாதான ஆய்வு ஆரம்பித்தது. முதலாம் உலகப் போருக்கு பிற்பட்ட காலப் பகுதி பல சமாதான முயற்சிகளைக் கண்டது. இது தாக்கமான ஒரு சர்வதேச ஒழுங்கமைப்புக்கான நம்பிக்கையை உருவாக்கியது. பத்தொன்பதாம் நு}ற்றாண்டின் அரசியல் கனவான்கள் மீதும் அவர்களது நடவடிக்கைகள் மீதும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. சர்வதேச கழகமும், சர்வதேச சட்டமும் சமாதானத்திற்கு ஏற்ற பாதைகளாகக் கொள்ளப்பட்டன. முழுமையாக விசாரண செய்யும் முறையும் அவற்றை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளும் எடுக்கப்பட்டன. முன்னர் உள்ள சமாதா ஆராய்ச்சியாளர்களுள் றயிற் (றுசiபாவ) மேற்சொன்ன செல்வாக்குக்கு உட்பட்டவர். அவர் சர்வதேச கழகத்தினை தாக்கமான தொரு அமைப்பாக ஆக்கபல ஆலோசனைகளை முன்வைத்தார். இச் சிந்தனைகள் முன்னரே இருந்தவை. ஆனால் அவை போருக்கான இறுதிக் காரணம் அரசுகளின் இறைமை என்பதையே மையப் படுத்தின.

1920களிலும் 1930களிலும் நடந்த போர்களுக்கான காரணங்கள் பற்றிய ஆய்வுகள் இன்றும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இன்று மிச்சிக்கன் பல்கலைக் கழகத்தில் டேவிட் சிங்கர் (னுயஎனை ளுiபெநச) நடத்தும் போர் பற்றிய ஆய்வுத்திட்டம் இத்துறை பற்றிய விசாரணைகளின் தீர்க்கமான வெளிப்பாடாக உள்ளது.
முதலாம் உலகப்போரை விட இரண்டாம் உலகப் போர் அதிகாரத்தை கொண்டிருந்தவர்கள் தமது நடவடிக்கைகள் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்களை எதிர்வுகூறும் திறனற்றவர்கள் என்பதைக் காட்டியது. அதனை ஆரம்பித்தவர்கள் எல்லோரும் தோற்கடிக்கப்பட்டனர். பழி வாங்கப்பட்டவர்கள் வெற்றி பெற்றனர். போருக்கான காரணங்களை விளங்கிக் கொள்வதற்கான தேவை தொடர்ந்தும் முக்கியமானதாக விருந்தது. ஆனால் இரண்டாம் உலகப் போர் இரு புதிய அபாயங்களை முன் கொண்டு வந்தது.

1. அணு ஆயுதங்கள்
2. வெற்றி பெற்றவர்களுக்கிடையிலான முரண்பாடுகள்.

இப்பிரச்சினைகளிலிருந்தே ஆயுதப் பரிகரணமும் முரண்பாட்டுக் கோட்பாடும் அபிவிருத்தியடைந்தன. ஹிறோ சீமா (ர்சைழளாiஅய)இ நாகசாக்கி என்பவற்றின் மீதான அணு ஆயுதத் தாக்குதல்கள் ஆய்வு நடத்தும் சமூகத்திற்கு அடிப்படைச் சவால்களை ஏற்படுத்தின@ குறிப்பாக இயற்கை பௌதீக விஞ்ஞானிகளிடையே விஞ்ஞானத்தின் அடிப்படை மனதத்துவ, சிவில் சமூக நலன்கள் என்பது திடீரென முரண்பாட்டிற்குட்பட்டது. மிகவும் அழிவை ஏற்படுத்தும் வழியில் விஞ்ஞானத்தை நடைமுறைப்படுத்துபவர்களால் கோட்பாடு ரீதியானதும், நடைமுறைக்கு ஒவ்வாதனவாயும் இருந்தவை தீடீரென்று நடைமுறைப்படுத்தக் கூடியவையாகின. அணு ஆயுத சக்தியினை அரசியல் ரீதியில் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட தோல்வியும் ஆயுதப் போட்டியும் விஞ்ஞானிகளிடையே அணு ஆயுதக் கட்டுப்பாட்டுக்கும் ஆயுதப் பரிகரணத்துக்கும் பங்களிக்கும் இயக்கத்துக்கு வழிவகுத்தது. சமாதானத்திற்கான ஆய்வின் அபிவிருத்தி ஆயுதப் பரிகரண, ஆயுதக் கட்டுப்பாட்டு ஆய்வுக்கும் வழி வகுத்தது.

சமாதானத்துக்கான ஆராய்ச்சி மரபு 1966இல் ஸ்தாபன மயமாக்கப்பட்டது. உதாரணம்: ஸ்ரோக்கோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி ஸ்தாபனம் (ளுவழஉமாழடஅ ஐவெநசயெவழையெட Pநயஉந சுநளநயசஉh). இரண்டாம் உலகப் போரின் இரண்டாவது விளைவு வெற்றி பெற்ற நேச சக்திகளுக்கிடையில் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்த துருவப் போக்காகும். ஒரு குறுகிய காலத்தினுள் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள் கிழக்கு, மேற்கு எனப் பிளவுபட்டன. முரண்பாடு பொதுவான கருத்தில் வரைவிலக்கணப் படுத்தப்பட்டது. கெடுபிடி யுத்தமும் எதிரிக்கு சமமாக ஆகுதல் என்ற கொள்கையும் 1950 களில் அணுஆயுதம் சம்பந்தமான ஆய்வுகளாக மாறியதோடு போருக்கான வரலாற்றுக் காரணங்களையும் ஆராய்ச்சி செய்யவைத்தது. மேலும், பல தரப்பினர்களாலும் முன் வைக்கப்பட்ட பொதுமைப்படுத்தல்கள் முரண்பாடு எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை விளக்கும் தேவையை ஏற்படுத்தியது. இவ்வாறு முரண்பாடு பற்றிய கோட்பாடுகள் எழுச்சியடைந்தன.

முரண்பாடும், முரண்பாடுகளும் 1


சமாதானம் பற்றி ஆய்வு செய்பவர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகள் பலரது ஆய்வுகளுக்கு மத்தியிலும் கூட முரண்பாடு என்ற எண்ணக்கரு தொடர்ந்தும் விளக்க முடியாத தொன்றாகவே இருந்து வருகின்றது. 1950களிலும் 1960 களின் ஆரம்பத்திலும் சமாதானம் பற்றிய ஆய்வுகளுக்கு முரண்பாட்டுக் கோட்பாடே மத்திய மயமானதாக விருந்தது. 1980களில் முரண்பாட்டுக் கோட்பாட்டினைப் புதுப்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆரம்பத்தில் “மக்கியாவலி” என்ற கூற்றுபோர், வன்முறை, அதிகாரம் பற்றிய மேற்கு நாட்டுச் சிந்தனையைச் சுருக்கித் தருவதாக அமைந்தது. எனினும், அது சமாதான ஆய்விற்கான ஒரு வேரினையும் சுட்டிக் காட்டுகிறது. போர் சமாதானம் பற்றிய படிப்பில் மக்கியாவலியினது கருத்துக்களோடு பலர் தொடர்ச்சியாக வாதிட்டு வந்துள்ளனர். வன்முறை பற்றிய மரபு ரீதியான அதியுயர் தானத்தின் அம்சங்களை விமர்சன ரீதியாகவும் ஆக்க பூர்வமாகவும் நேர்க் கணியமாகவும் பகுப்பாய்வு செய்ய முற்பட்டதிலிருந்தே சமாதானம பற்றிய ஆய்வு வளர்ச்சியடைந்தது. அவற்றில் பெரும்பாலானவை புளோரன்ஸ் நகரத்து அரசியல்வாதியும் இராஜதந்திரியுமான நிக்கலோ மக்கியாவலியின் ஆலோசனையின் பேரில் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தன. இவ்வாலோசனைகள் 16ஆம் நு}ற்றாண்டு ஐரோப்பாவின் அறிவுப்புரட்சிக்கே வழங்கப்பட்டவையாகும். உதாரணமாக கிரேக்க உரோமன் எழுத்துக்கள் அவை ஒன்பதாம், பத்தாம், பன்னிரண்டாம் நு}ற்றாண்டுகளின் உபாயக் கற்கைகளிலும் இடம் பெற்றவை. குறி;ப்பாக யதார்த்த குழுவினரிடையே சமாதான ஆய்வு மேற்கொள்ள சிந்தனைகளின் விமர்சனமாகவே எழுச்சியடைந்தது. ஆனால் அதன் பங்களிப்பு விமர்சனம் மாத்திரம் அல்ல. மக்கியாவலியின் சிந்தனைகள் யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டவையா என்பதை அனுபவரீதியாக பரிசோதனை செய்தமையே அதன் பலனாகும். மக்கியாவலியோடு புத்தி ஜீவி ரீதியில் ஆரம்பித்த போராட்டம் வன்முறை பற்றிய புதிய அணுகுமுறைகளாக அபிவிருத்தியடைந்தன. மக்கியாவலியின் கருத்துக்களுடனான போராட்டம் சமாதான ஆய்வுக்கான ஒரு முக்கியமான து}ண்டு சக்தியே. வேறொன்றும் உண்டு@ அது கற்பனாவாதம் என்பதிலிருந்து பெற்ற ஆய்வாகும். வரலாறு முழுவதும் கணிசமானளவு சமாதான சிந்தனை என்பது இடம்பெற்று வந்துள்ளது. இவற்றுள் சில மதச், சார்பற்றதும் மெய்யியல் மரபுகளிலிருந்தும் பெறப்பட்டவையுமாகும் வேறு சில மதச், சித்தாந்த சிந்தனைகளிலிருந்து பெறப்பட்டவை. ஆனால் இவையெல்லாம் சிந்தனைகளை அபிவிருத்தி செய்யத்தக்க செழிப்பான சேர்க்கைகளை முன் வைத்தன. கற்பனாவாதம் சமாதான ஆய்வுக்கான இன்னொரு வேறுபட்ட உள்ளீடாகும். இத்தகைய சமாதான ஆய்வு சமாதான மெய்யிலாளர்கள், சமாதான தேவாலாயங்கள், போரை எதிர்த்தவர்கள் என்ற மரபிலிருந்து தோன்றியது@ சமாதான ஆய்வு வன்முறை என்ற பிரச்சினைகள் மீது கவனங் கொள்கிறது. குறிப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட வன்முறை சமூக முரண்பாடுகள் என்பவற்றை மையப்படுத்துகின்றது. இக்கவனம் சமாதான ஆய்வினை தனித்துவம் வாய்ந்ததாக்குகிறது.

சமாதான ஆய்வில் வன்முறையினை மத்திய மயப்படுத்துவதற்கும் மேலாக அனுபவரீதியான விசாரணைகளை வற்புறுத்தும் விருப்பமும் இருந்தது. முக்கியமான கோட்பாட்டுப் பங்களிப்புகள் அனுபவ ரீதியான உறுதியை வரவேற்றன. இந்த விருப்பம் சமாதான ஆய்வின் இரு மரபுகளையும் ஒன்றிணைத்தது.

மக்கியோவலியே முதன்முதலில் வன்முறையினை மன்னிப்புக் கேட்காமலும் அதனை ஒரு இலட்சியம் ஆக்காமலும் விபரித்தார். “இளவரசன்” என்ற நு}லில் வன்முறை மறைவில்லாமல் தோற்றமளிக்கின்றது. ஆனால், அது அதிகாரத்தினை அடைவதற்கான ஒரு கருவியாகவே விபரிக்கின்றது. அதனைப் பகுத்தறிவுடன் பகுப்பாய்வு செய்யக் கூடியதாகவிருந்தது. மக்கியாவலியின் சிந்தனைகள் புதிதானவையல்ல. ஆனால் அவற்றுக்குக் கல்வி புகட்டும் சாராம்சங்கள் இருந்தன. வன்முறை பற்றிய பிரச்சினைகள் பகுப்பாய்வுக்குத் திறந்து விடப்பட்டன. அவரது “இளவரசன்” ஒரு தலைவன் எவ்வாறு அதிகாரத்தைப் பெற்று அதைப் பராமரிக்கலாம் என்பதற்குப் பல உதாரணங்களைக் கொண்டிருந்தது. மக்கியாவிலியின் இளவரசன் என்ற நு}ல் இத்தாலியை ஒற்றுமைப்படுத்தவல்ல பலமான இளவரசனை முன்னுக்குக் கொண்டு வந்தது. ஆகவே, மக்கியாவலி சமாதான ஆய்வின் தோற்றத்துக்கு ஆரம்ப கர்த்தா என்பதற்குப் பொருத்தமானவராகின்றார். மக்கியாவலியின் கருத்துப்படி,

(i) வன்முறை எங்கும் இருக்கின்றது.
(ii) ஆதிகாலத்தில் ஆட்சி செலுத்துவதற்கான கருவியாக வன்முறை விளங்கியது.
(iii) அரசியல் அதிகாரத்துக்கான இறுதி மூலம் வன்முறையாகும்.
(iஎ) முரண்பாடுகள் அதிகாரத்தினாலும் வன்முறையாலும் தீர்க்கப்படுகின்றன.
(எ) அரசும் அரசாங்கமுமே அடிப்படையில் முக்கியமான நடிகர்கள்.
(எi) அரசு மற்றைய அரசுகளைப் பொறுத்து சுதந்திரமானது.

மேற்சொன்ன ஆறு எடுகோள்களாலும் உலகம் விபரிக்கப்பட்டது. “இளவரசன்” பல நவீன சக பாடிகளைக் கொண்டுள்ளது

பெண்ணியம் 4


18. நீங்கள் ஒரு புறத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிக் கூறுகிறீர்கள். ஆனால் மறுபுறத்தில் பெண்தீவிரவாதிகள் கருச்சிதைவு செய்வதனை இந் நாட்டில் சட்டபூர்வமானதாக்க முயல்கிறார்கள். நாம் இதனைத் தடுக்க முயலவேண்டும். ஒவ்வொரு முதிர் கருவிற்கும் வாழ உரிமையுண்டு நாம் குழந்தைகளின் கொலையைச் சட்டபூர்வமானதாக்கக் கூடாது.

1833 ஆண்டின் பீனல் சட்டக்கோர்வையின் 30 ஆம் பிரிவின்படி இன்று வரையும் கருச்சிதைவு இலங்கையில் சட்டபூர்வமற்றதாகவே உள்ளது. சனத்தொகை அளவுக்கு மீறி அதிகரிப்பது, பிறப்பு வீதத்தினைக் குறைப்பதற்கு பெரும் முயற்சி எடுக்கப்படுவது ஆகியன காணப்படினும் கூட கருச்சிதைவானது சட்டபூர்வமற்றதாகவே அமைகிறது. ஏனெனில் கருக்கொண்ட நேரத்தில் இருந்து கருவிற்கு உயிரும், வாழ்வும் உண்டு எனவும் பெண்ணினது உடல் அதன் பிறப்பிற்கான ஒரு சாதனம் எனவும் கருதப்படுவதால் ஆகும். வேறு வகையிற் கூறுவதனால் கருக்கொள்ளும் கணத்திலிருந்து பெண்ணின் கருப்பையானது சமுதாய உற்பத்தியாக மாறுகிறது. அவள் தன்னுடைய உடலில் தனக்கிருக்கும் உரிமையை இழந்து விடுகிறாள். அரசு பெண்ணினது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் உரிமையைப் பெறுகிறது.

இக்கருத்தானது விஞ்ஞான நோக்கிலும் நடைமுறை நோக்கிலும் எதிர்த்துரைக்கக் கூடியதொன்றாகும். அமெரிக்க உயர்நீதிமன்றத்துக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள், உதாரணங்கள் மூலம் கருவானது மூன்றாம் மாதம் வரை உயிரற்றது என்பதனை எடுத்;துக் காட்டியுள்ளார்கள். இக் காரணத்தால் அமெரிக்க உயர்நீதிமன்றம் மூன்றாம் மாதம் வரை கருவானது பெண்ணின் கருப்பையின் ஒரு பகுதியாக அமைகிறதாகையால் பெண் தனது உடல் மீதான உரிமையைப் பேணலாம் என்று கூறி மூன்றாம் மாதம் வரை கருச்சிதைவு செய்து கொள்வதனை அனுமதிக்கிறது. நடைமுறை நோக்கில் கூட இலங்கையில் கருச்சிதைவானது அதிகரிக்கிறது என்;பதைச் சமீபகாலப் பத்திரிகைக் கட்டுரைகள் மூலமாக அறிய முடிகிறது. பணக்காரப் பெண்கள் வைத்தியர்களின் சேவையைப் பெறுவதன் மூலமாகவோ கருச்சிதைவு சட்டபூர்வமாக்கப்பட்ட நாடுகளுக்குச் செல்வதன் மூலமாகவோ கருச்சிதைவு செய்கிறார்கள். மறுபுறத்;;;தில் ஏழைப்பெண்கள் தேர்ச்சியற்ற வைத்தியரிடம் செல்கின்றனர் அல்லது தமக்கத்தாமே கருச்சிதைவு செய்ய முனைகின்றனர். இவ்வாறு செய்யும் போது பல பெண்கள் இறக்கிறார்கள். அல்லது தமது உறுப்பைச் சிதைத்துக்கொள்கிறார்கள்.

நடைமுறை ரீதியில் நோக்குகையில் சமுதாயத்தை உண்மையில் இரு தெரிவுகள் எதிர்நோக்குகின்றன. ஒன்று பெண்ணினது உயிரையும் உறுப்பையும் பாதுகாத்தல், மற்றது, பிறவாத, பெண்ணின் கருப்பையுடன் இணைக்கப்பட்ட, தேவையற்ற கருவை - சிதைவினால் அல்;லது ஆயுள்வேத முறைகளினால் அல்லது பெண்ணால் ஏற்படுத்தப்பட்ட காயங்களால் இறக்கக்கூடிய கருவைக் காப்பாற்றுதல் ஆகும். இப்படிப்பட்ட பழமையான நடைமுறையில் இருந்து தப்பிக்கொள்ள நாம் கருச்சிதைவை சட்டபூர்வமானதாக மாற்றுவதுடன் அதனை மருத்துவ சுகாதார நடைமுறைகளுக்கு உட்படுத்த வேண்டும்.

19. எனினும் வன்முறை பற்றிய பிரச்சனை வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்;துவது என்றே நான் கருதுகிறேன். நீங்கள் உண்மையாகப் பேசுவது எதைப்பற்றி?

பெண்கள் மீதான சமூகக்கட்டுப்பாட்டைப் பேணுவதற்கு தந்தை வழிச் சமூக அமைப்பு வன்முறைகளை ஒரு சாதனமாக அனுமதிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை பலவகைகளில் நிகழ்கிறது. மூன்றாம் உலகநாடுகளில் பாலுறுப்புச் சிதைத்தல், பெண்களை அடித்தல், பாலாத்காரம் ஆகியவை பொதுவான வன்முறை வடிவங்களாகும். இளம் பெண்பிள்ளைகளின் பாலுறுப்புக்களைச் சிதைத்தல் சில மத்தியகிழக்கு, ஆபிரிக்க நாடுகளில் மிகப் பொதுவான அம்சமாக உள்ளது. பெண்களது பாலியலைக் கட்டுப்படுத்துவதும், ஒடுக்குவதும் ஒரு ஆணின் சொத்துக்கு உரிமையைப் பெறக்கூடிய சந்ததி அவனுடையதே என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுதலுடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளது. இவ்வாறு ஒரு ஆணின் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்கு ஒரு பெண்ணின் உடல் சிதைக்கப்படுகிறது.

வடஇந்தியாவில் இன்று அதிகளவில் பொதுமக்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் சீதனச்சாவுகள்; மூலம் பெண்களது வாழ்வின் இரங்கத்தக்க நிலையை அறிந்து கொள்ளலாம். திருமணமான இளம் பெண்கள் தற்கொலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். திருமணத்தின் போது பெண் கொண்டு வந்த சீதனம் குறைவானது அல்லது தரமற்றது என்பதற்காக அதிருப்தியடைந்த கணவன், மாமன்-மாமி ஆகியோர் அவளைக் கொலை செய்கின்றனர். ஒரு மட்டத்தில் திருமண நிறுவனத்துக்கு அவள் கொண்டு வரும் சீதனப் பொருட்களின் அந்தஸ்தை அவளும் பங்கிட்டுக்; கொள்கிறாள். இன்னோர் மட்டத்தில்; இப்பொருட்களைப் பாதுகாத்து புதிய தலைமுறைக்குக் கையளிக்கும் கருவியாகவும் பயன்படுகிறாள்.

20. ஆனால் இது உலகின் மற்;றைய பாகங்களில் அல்லவா? இலங்கையின் நிலைமை எவ்வாறானது?

இலங்கையின் முஸ்லிம் பலர் விருத்த சேதனம் செய்யப்பட்டு பாலுறுப்புச் சிதைவினால் துன்புறுகின்றனர். பெண்களை அடிப்பதும் பரவலாகக் காணப்படுகிறது. பெண்களை அடிப்பது சமுதாயத்தில் அனுமதிக்கப்படுவதோடு அல்லாமல் ஏற்றுக் கொள்ளவும்படுகிறது. பெண்களுக்கெதிராகக் காட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளின் வகைகளிலே இதனைப்பற்றி எவரும் சர்ச்சை செய்யாதிருப்பதற்குக் காரணம் அது தந்தைவழிச் சமூகத்தின் அதிகார அமைப்புக்குள் அடங்கிய புனிதத்தன்மை வாய்ந்த குடும்ப எல்லைக்குள் நடைபெறுவதாலாகும். ஒரு ‘தவறிய’ பெண்ணை,-அவள் எவ்வித காரணங்கள் வைத்திருந்தாலும்,-அவளது கணவன் அல்லது காதலன் அல்லது பாதுகாவலன் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் நன்கு அடிக்கலாம். சமுதாய யதார்த்தம் அவளுக்கெதிராக இருப்பதாலும் தப்பமுடியாத ஒரு பொறியில் அகப்பட்டிருப்பதாக அவள் உணர்வதாலும் அவள் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாதவளாக்கப்பட்டுள்ளாள். தான் அடி வாங்குவது அடிப்பவனின் கையாலாகாத்தனத்தாலும் அவனது பயங்களாலும் அல்;லாது தான் செய்;த குற்றத்திற்காக என்றும் நம்புகிறாள். பெண்களை அடிப்பதை, வர்க்க, சாதி, இன எல்லைகளைக் கடந்து மூன்றாவது உலக நாட்டுப் பெண்கள் குழுக்கள் எடுத்துக் கூறி வருகின்றன. சில கலாசாரங்களிலும் சமூக அமைப்புக்களிலும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒழுக்கங்களான திருமணத்திற்கு முன் பால் உறவு கொள்ளுவதும். கணவனல்லாதவனோடு உறவு கொள்ளலும் அவளைக் கொலைத்தண்டனைக்கு உட்படுத்தும்.

21. வேறு எந்தவகை வன்முறைக்குப் பெண்கள் பயப்படுகின்றனர்?

அநேகமாக வன்முறைகளின் இயல்பே பாலியல் சம்பந்தமானது. ஆண் பாதுகாவலன், அவளைத் தாக்குபவன் என்ற பரஸ்பரம், மாறக் கூடிய பாத்திரங்களை ஏற்பது பெண்களின் பாலியலுடன் நேரடித் தொடர்புள்ளது. மூத்தவர்களிடமிருந்து ஒருவன் பெறும் புகழும், கௌரவமும் அவன் தனது பெண்களை மற்றைய ஆண்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு விடாமல் எவ்வாறு பாதுகாக்கிறான் என்பதில் தங்கியுள்ளது.

கடந்தகாலத்தில் ஆண்கள் வரலாற்றாசிரியர்கள் சமூக வரலாற்றில் பெண்களைப் பாலாத்காரம் செய்வது ஒரு முக்கிய அம்சமாக இருந்தது என்பதை ஏற்றுக்கொண்டதில்லை. பெருமளவில் பெண்களைப் பலாத்காரம் செய்தல் எதிர்ப்புணர்ச்சியுடைய பெண்களை மட்டுமன்றி அவர்கள் மூலம் ஆண்களையும் பயமுறுத்தப் பயன்பட்டது. பங்களாதேஷில் பாகிஸ்தானிய படையெடுப்பு, வியட்நாமில் அமெரிக்கப் படையெடுப்பு, லெபனானின் உள்;நாட்டுயுத்தம், இப்பொழுது இங்கு இடம் பெறும் இனப்பிரச்சினை என்பன உள்நாட்டிலும் உலக அரங்கிலும் தெளிவான உதாரணங்கள் ஆகும்;. சாதி, வர்க்கப் பிரச்சினைகளிலும் பாலியல் வன்முறைகள் பெண்களுக்கெதிராகப் பயன்படுகின்றன. உதாரணமாக விவசாயிகள் காணியற்ற கூலியாட்களிடமிருந்து நிலங்களை அபகரிக்கும் பொழுது காணிச் சொந்தக்காரர்கள் கூலிக்கமர்த்தப்பட்ட குண்டர்களை உபயோகித்து தீவிர எதிர்ப்புத் தெரிவிக்கும் பெண்களையும், பார்வையாளர்களையும் பெருந்தொகையாக பாலாத்காரம் செய்வர். இச் செயல்கள் பெண்களைப் பயப்படுத்துவதுடன் ஆண்களுக்கு அவர்களது பெண்களைக் காப்பாற்ற முடியாமையையும் உணர்த்துகிறது. தாழ்ந்த வர்க்க, சாதியைச் சேர்ந்த பெண்களுக்கெதிரான வலுவுள்ள ஆயுதமாகப் பலாத்காரம் செய்தலை அதிகாரத்தில் உள்ளோர் பயன்படுத்துகின்றனர். தந்தைவழிச் சமூகமானது ஆண்கள் மற்றவர்களில் அதிகாரம் செலுத்துவதையும், அவர்களைக் கட்டுப்படுத்துவதையும் எதிர்பார்க்கிறது. ஆனால் ஒரு ஏழை மனிதனுக்கோ தனது பெண்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்கு மட்டுமே சமூக அங்கீகாரம் உள்ளது. அதனால் அத்தகைய ஆண்கள் தமது பெண்கள் மீது மற்றவர்கள் பாலியல் வன்செயல்களைக் கட்டவிழ்த்து விடும் பொழுது தம்மை முற்றிலும் ஆண்மையற்றவராக உணர்கின்றனர்.

பெண்ணியம் 3


13. ஆனால் நிச்சயமாக நாம் முன்னேற விரும்பினால் இத்தகைய சுரண்டல் வடிவங்களை சிறிது காலத்திற்குத் தானும் பொறுத்துக்கொள்ள வேண்டும். நாம் முன்னேறிய பின்னர் இந்த எதிர்மறையான அம்சங்கள் மறைந்து விடும்

இந்தவகையான வளர்ச்சி (முன்னேற்றம்) முதலாளித்துவ உற்பத்தி முறைமையை அடிப்படையாகக் கொண்டது. உதாரணமாக முன்னர் ஐரோப்பாவில் வீடு உற்பத்தி மையமாக இருந்து வந்துள்ளது. (உணவு, உடை, சவர்க்காரம், மெழுகுவர்த்தி போன்றவை) இந்த உற்பத்தியில் பெண்கள் முக்கியமான ஒரு பங்கினைப் பெற்றிருந்ததுடன் விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் கைத்தொழிற் புரட்சியுடன் பெண்களுடைய நிலை மாற்றமடைந்தது.

(அ) ஏழைப் பெண்கள் (பாட்டாளிவர்க்கப் பெண்கள்) தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் (குறைந்த கூலியில்) வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டதுடன் அடுத்த தலைமுறை உழைப்பாளர்களையும் உற்பத்தி (சந்ததி உற்பத்தி) செய்தனர்.

(ஆ) பூர்ஷவாப் பெண்கள் குடும்பப் பெண்களாகவே வைக்கப்பட்டிருந்ததுடன் உற்பத்தியில் எதுவித பங்குமற்றிருந்தனர். ஆனால் தமக்குப் பின்னர் சொத்துக்கு வாரிசாகக் கூடிய தலைமுறையை மீள உற்பத்தி செய்து கொண்டிருந்தனர்.

(இ) மாறாக, இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு உட்பட மறுத்த சுதந்திரமான பூர்ஷ்வாப் பெண்கள் சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதுடன் தண்டிக்கவும்பட்டனர்.

பாட்டாளி வர்க்கப் பெண்களைச் சுரண்டுவதும் செல்வந்தப் பெண்களை தனிமைப்படுத்தி வைத்தலும் தீவிரமாகின.

14. ஆனால் 18ம் நூற்றாண்டில்; ஐரோப்பாவில் ஏற்பட்ட வளர்ச்சிகளுக்கும் இலங்கைப் பெண்களுக்குமுள்ள தொடர்பு என்ன?

ஆசிய நாடுகள் காலனித்துவப்படுத்தப்பட்ட பொழுது பெண்களின் நிலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டமை தான் இணைக்கும் தொடர்பாக உள்ளது. உதாரணமாகக் காலனித்துவத்திற்கு முற்பட்ட சமுதாயத்தில் பெண்கள் விவசாய வேலைகளை மாத்திரமே செய்தனர். ஆனால் காலனித்துவத்துடன் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

• பெண்கள் கோப்பி, றப்பர், தேயிலை மற்றும் ஏனைய தோட்டங்களில் வேலை செய்வதற்கு சேர்க்கப்பட்டனர்.
• பெண்கள் தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் வேலை செய்வதற்கு நிர்பந்திக்கப்பட்டனர்.
• விவசாய வேலைகளிலும் பெண்கள் தொடர்ந்து ஈடுபட்டனர்.

இந்நிலைமைக்கு மாறாக இலங்கையின் பூர்ஷவா வர்க்கப் பெண்கள் ஐரோப்பியப் பெண்கள் போல வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த போதிலும் கல்வி புகட்டப்பட்டதுடன் சில அடிப்படை உரிமைகள் கொடுக்கப்பட்டுமிருந்தனர்.

இவ்வாறு தந்தை வழிச் சமூகத்தின் எல்லா அம்சங்களும் மிக உறுதியாகக் காலனித்துவ நாடுகளில் நிலை நிறுத்தப்பட்டன. முற்பட்ட தாய் வழிச் சமூக அமைப்பின் மிச்ச சொச்சங்களும் முற்றாக நீக்கப்பட்டன. பெண்கள் விடயத்தில் அன்னிய ஆட்சியாளரின் கொள்கைகள் பின்பற்றப்பட்டன.

இவ்வாறு முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் ஐரோப்பாவிலும், காலனித்துவ நாடுகளிலும் தந்தை வழிச் சமூக அமைப்பு முறைகள் வலுவாக்கப்பட்டன. வீட்டிற்குரிய உற்பத்திகளில் முன்பு தமக்கிருந்த உரிமைகளைப் பெண்கள் இழந்ததுடன் வீடுகளில் இவர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர் அல்லது விளைநிலங்களிலும் தொழிற்சாலைகளிலும் சுரண்டப்பட்டனர். பூர்ஷ்வா வர்க்கப் பெண்களுக்கு குறிப்பிட்ட சில உரிமைகள் வழங்கப்பட்ட அதே வேளையில் அடிப்படைச் சட்டங்கள் ஆணைக் குடும்பக் தலைவனாகக் கொள்கின்ற தந்தை வழிச் சமூகத்திற்குரியதாகவே இருந்தன.

முதலாளித்துவ கலாசாரமும் தந்தை வழிச் சமூக அமைப்பினை மீளவும் வலுப்படுத்தியதுடன் ஏகாதிபத்திய வாதிகளும், மூன்றாம் உலக முதலாளித்;துவ வர்க்க ஆண்களும் தந்தை வழிச் சமூகப் பெறுமானங்களை அடிப்படையி;ல் ஏற்றுக் கொண்டிருந்தனர்.

15. பெண்கள் வீட்டு வாழ்க்கையில் அதிகளவு அக்கறையுள்ளவர்களாக இருப்பதால்; ஆண்களை விடக் குறைந்த அளவிலேயே அவர்கள் உற்பத்தி செய்வதானது வேலைத்தலங்களிற் காணப்படும் சமத்;துவமின்மைக்கு உண்மையான காரணம் என்று கூறலாமா?

முதலாளித்துவம் இந்த வாதத்தை ஆதாரமாகப் பயன்படுத்துவதோடு, ஆண்களையே குடும்பத்தின் தலைவனாகக் கருதி ~குடும்ப வேதனம்| என்ற முறையைப் பின்பற்றுகின்றது. அதாவது ஒரு குடும்பத்தலைவனும் அவனது மனைவி மக்களும் வாழ்க்கையை நடத்;துவதற்குப் போதுமான அளவு வேதனத்தைக் கொடுப்பதாகும். இந்தக் கருத்தின்படி பெண்கள் உற்பத்தியில் ஈடுபடும் போது, குடும்பத்தின் மேலதிக வருமானத்திற்காகவே அவள் உழைப்பதாகக் கருதி, சமனான வேலைகளின்; போதும் குறைந்தளவு வேதனத்தையே வழங்குகின்றனர்.

ஆனால் உண்மைநிலை வேறானதாகும். பல நாடுகளில் (இலங்கை உட்பட) மேற்கொள்ளபட்ட ஆய்வுகள் 25மூ-40மூ வரையிலான குடும்பங்கள் பெண்களின் உழைப்பிலேயே தங்கியிருப்பவையாகவோ, தனியே பெண்களின் தலைமையைக் கொண்ட குடும்பங்களாகவோ உள்ளன எனக் காட்டுகின்றன. இவர்களுட் பெரும்பாலான பெண்கள் வறுமையின் எல்லைக்கோட்டில் வாழ்கின்றனர் அல்லது குறைவாக கூலி தரும் தொழில்களில் தங்கி வாழ்கின்றனர். இவர்கள் முதலாளித்துவ ஆண்வழித் தீர்மானங்களைக் கொண்;ட வேலைத்தலங்களில் சமனற்ற கூலி பெறுதலுக்கும், ஏனைய பாரபட்சமான நடை முறைகட்கும் உட்படுகின்றனர்.

அது மட்டுமன்றி தொழிற்சாலை, வயல் அல்லது பெருந்தோட்டம் ஆகிய எவற்றிலாவது தொழில் செய்யும் பெண்கள் கூடுதலான நேரங்களை விட்டு வேலைகளிலும் செலவிடவேண்டியதாக உள்ளது. சமையல், துப்பரவு செய்தல், துணி கழுவுதல், நீர் எடுத்தல், விறகு சேகரித்தல், குழந்தை பராமரித்தல் போன்றவை அத்;தகைய வேலைகளாகும். இதனால் பெண்கள் இரண்டு வேலைச்சுமைகளை அநுபவிக்க வேண்டியதாக உள்ளது. ஒரு புறத்தில் கூலி பெறும் உற்பத்தியில் ஈடுபடும் பெண்ணானவள் கூலியற்ற வீட்டு வேலைக்காரியாகவும் உழைக்க வேண்டியுள்ளது.

16. எனினும் கூட நவீன மயமாக்கத்தின் மூலம் பெண்கள் தமக்குரிய இடத்தைச் சமுதாயத்தில் பெறுவார்கள். வீட்டில் உள்ள அவர்களது வேலைப்பளு குறைந்து போகும். வெளியே சென்று உழைப்பதன் மூலம் பொருளாதார ரீதியில் சுதந்திரம் பெறுவர்.

நவீனமயமாக்கத் திட்டங்களில் ~ஆண்சார்பு| இயல்பாகவே காணப்படுவதால் கருத்து ரீதியாகவும், நடைமுறை ரீதியாவும் பெண்களைப் பொறுத்து பாரபட்சமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பதற்கு ஆதாரங்கள் உண்டு. சில வேளைகளில் பெண்கள் உற்பத்தியில் ஈடுபடாதவாறு புறக்கணிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக பஞ்சாப்பில் பசுமைப்புரட்சியின் போது இடம் பெற்ற கூடுதலான இயந்திரமயமாக்கமானது, பெண்கள் பாரம்பரிய விவசாயத் தொழில்களில் ஈடுபடும் வாய்ப்பை இல்லாமற் செய்தது. தொழில் நுட்ப வேலைகள், பிரதானமாக ஆண்களுக்கென்றே ஒதுக்கப்பட்டதால் பெண்கள் வேலையில்லாப் பிரச்சினையை எதிர் நோக்க வேண்டியதாயிற்று. மேலும் இத்தகைய முயற்சிகளால் செல்வச் செழிப்புப்; பெற்ற விவசாயிகள் தமது பெண்களை வெளியே உழைக்கவிடாது வீட்டில் வைத்திருத்தல் அந்தஸ்தின் சின்னமாகவும் கருதப்பட்டது. இலங்கையில் மகாவலித்திட்டத்தினால் இதே போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. மிகவும் குறைந்த அளவு நிலமே சுதந்திரமான பெண்; விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அவர்களுக்கு கடன், தொழில் நுட்பம் என்பனவற்றைப் பெறுவதிலும் சிரமங்கள் இருந்தன. இதனால் அவர்கள் குறைந்த அளவு கூலி கிடைக்கும் தொழில்களைச் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர் அல்லது மீண்டும் வீட்;டு உழைப்பில் ஈடுபடவேண்டி இருந்தது. இதனால் அவர்கள் பொருளாதார சுதந்திரம் பெறுவதற்கான எத்தகைய முயற்சிகளையும் செய்யாமல் தடுக்கவும் பட்டனர்.

17. பெண்கள் மீதான வன்முறைக்கெதிரான இப்போராட்டங்கள் எத்தகையன? பெண்ணுரிமைத் தீவிரவாதிகள் பலாத்காரம் தொடர்பான சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டுமென வாதிடுகின்றனர். இலங்கைச் சட்டமோ பலாத்காரம் செய்யப்பட்டவரினதும், செய்தவர் எனக் குற்றம் சாட்டப்படுபவரினதும் நலன்களைச் சமமாகப் பேணுவதாகும்.

1833 ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட பெண்களைப் பலாத்காரம் செய்தல் பற்றிய சட்டம் இன்னமும் மாற்றப்படவில்லை. அதனால் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்டமாற்றங்கள் எதையும் அது கருத்தில் கொள்ளவில்லை. இலங்கைச் சட்டத்தரணிகள் மட்டும்; இப்;பொழுதும் அந்தச்சட்டத்தை சரியென வாதிடுகின்றனர். பிரித்தானியர்கள் அந்தச் சட்டங்களைத் தம் நாட்டில் மாற்;றியிருந்த போதிலும், இலங்கைச் சட்டத்தரணிகள் 100 வருடங்களுக்கு முன்பே செய்து வைத்த சட்டங்கள் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கப் போதுமானவை என வாதிடுகின்றனர்.

இன்று இலங்கையில் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்குத்தாக்கல் செய்தால் அதற்குச் சாட்சிகளைத் தருதல் வேண்டும். சட்டங்கள் இதனைத் தெளிவாகக் கூறாவிடினும் நடைமுறையில் இது கடைப்பிடிக்கப்படுகிறது. பலாத்காரம் தனிப்பட்ட குற்றமாகும். இது பொது இடத்தில் செய்யப்படுவதில்லை. கொலை, களவு போலன்றி இது ஒரு பெண்மீது மேற்கொள்ளப்படுவது. உடலுறவு அடையாளங்கள் மட்டுமே சான்றுகளாக உள்ளன. சாட்சிகள் கேட்பதானது ஏற்கனவே அச்சமடைந்த பெண்ணை மேலும் பலவீனப்படுத்துகிறது. இலங்கை போலன்றி ஏனைய நாடுகளில் சாட்சிகளின்மை வழக்கைத் தள்ளுபடி செய்யாது. தமக்கு முன்னுள்ள உண்மைகளை வைத்து ஜூரர்கள் அல்லது நீதிபதி தமது முடிவுகளை எடுக்கலாம்

இரண்டாவது, இலங்கைப் பெண்கள் பலாத்கார வழக்கில்; தமது சம்மதமின்;மையை நிரூபிக்கும்படி கேட்கப்படுகின்றனர். இது மேலும் பெண்களைத் துன்புறுத்துவதாகும். பொலிசாரும் வைத்தியரும் பலாத்காரத்தை எதிர்க்க வேண்டாம். அது கொலைக்கு வழி வகுக்கும் எனக் கூறுகின்றனர். ஆனால் நீதிமன்றங்களே ஒரு பெண் இதனை எதிர்க்காவிட்டால் அதனை அவளது சம்மதத்திற்கு அத்தாட்சியாகக் கொள்கின்றன. பலாத்காரத்திற்காக ஆண்கள் தண்டனை பெற வேண்டுமெனப் பெண்கள் விரும்பினால் இறப்புக்கும் இடமளிக்கும் நிலையை இலங்கைச் சட்டங்கள் ஏற்படுத்துகின்றன. ஏனைய நாடுகளில் இவ்வாறில்லை.

இலங்கையில் ஒரு பெண்ணின் கடந்தகால பாலியல் வாழ்வும்; வழக்கின் போது எடுத்து அலசப்படலாம். (அவள் திருமணமாகாத கன்னியா. அல்லது முறைதகா உறவுடையவளா? ஆகிய வினாக்கள்) அவள் ஒழுக்கரீதியாக தவறிய பெண் என்பதைக் காட்டுவதற்கு அவளது தனிப்பட்ட வாழ்க்கை எடுத்;துக்காட்டப்படுவதுடன், பலாத்காரத்தை அவளே தூண்டினாள் எனவும் நிரூபிக்கப்படலாம். ஏனைய நாடுகளில் சட்டங்கள் இத்தகைய நிலையை அனுமதிப்பதில்லை. அத்துடன் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்;ணை அவமதிப்பதையும் வன்மையாகத் தடுக்கின்றன.

சில பகுதிகளில் பலாத்காரம் அதிக அளவில் அதிகரித்து வருவதாக சமூக விஞ்ஞானிகள் கூறியபோதும் ஒரு சில பலாத்கார வழக்குகளே நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகின்றன. பெரும்பாலான பெண்கள் பாரம்பரியக் குடும்பங்களைச் சார்ந்தவர்களாக இருப்பதாலும், பெண்களுக்கு நீதி வழங்கப்படுவதை சட்டங்கள் தடுப்பதாலும் இந் நிலைமை ஏற்படுகிறது. மிகச் சுதந்திரமான நிலைமைகளிலும் கூட பெண், பலாத்கார வழக்குத் தாக்கல் செய்வதை இவை தடை செய்யலாம்.

எழுத்தாளர் ரஹ்மத் ராஜகுமாரனின் எழுத்தியல் அற்புதங்கள்

எழுத்தாளர் ரஹ்மத் ராஜகுமாரனின் எழுத்தியல் அற்புதங்கள் பேரா.எச்.முஜீப் ரஹ்மான் ரஹ்மத் ராஜகுமாரன், இவரின் இயற்பெயர் ஏ.பி.எம். அப்த...